மூன்று படுக்கை கொண்ட அறையில் அந்த மூன்றாவது நபருக்காகக் கீதா வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“கீதா!ஏன் வாசலைப் பார்க்கிறாய்?”
“இல்லைடி நம்ம கூட இருக்க போற அந்த மூணாவது அரை லூசு யாருன்னு பார்த்துட்டு இருக்கேன்.”
“அதென்ன அரை லூசு?”
“அதுவா! இப்போ நீ காதலில் விழுந்து விட்டாய் அப்போ நீ முழு லூசு. எனக்கு அதெல்லாம் செட் ஆகாது நான் முக்கா லூசு.நம்ம கூடக் குப்பை கொட்ட போறவ கண்டிப்பா அரை லுசா தான் இருப்பா.”
அவள் கூறிய விளக்கத்திற்கு தரங்கிணி எரித்து விடுவது போல் முறைத்தாள்.
“இப்போ! நான் என்ன சொன்ன இப்படி முறைக்கற?”
“உன்னை எல்லாம் முறைக்க கூடாது. வச்சி நாலு அடி இழுக்கனும்.” தரங்கிணி அவளை அடித்தாள்.கீதா தப்பிக்கும் விதமாக வெளியே ஓட. பெட்டியோடு எதிரே வந்தவளை பார்க்காமல் இடித்து இருவரும் கீழே விழுந்தனர்.
“எம்மா! இடுப்பு போச்சு” கீதா கூற
“பொண்ணே! நீ இப்போ எழுந்திரிக்கவில்லை நானே போய்டுவேன்”
“ஓ… ஐ யம் ஸாரி.”
அவளுக்கு எழுந்திரிக்க கையைக் கொடுத்தாள்.
“நன்றி! இது 420 தானே.” தூசியை தட்டி கொண்டே கேட்க
“யாரை பார்த்து 420 சொன்ன?” கீதா திரும்பவும் அவள்மீது பாய்ந்து விட்டாள்.
“ஏய்! பொண்ணே உன்னைச் சொல்லவில்லை. இந்த ரூம் நம்பர் 420 தானே.”
அவளை விட்டு அகன்றவள். “இப்படி தெளிவா கேட்க வேண்டும். ஆமாம்!நீ தேடி வந்த ரூம் இது தான்.”
அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்த தரங்கிணி
“நீங்க யாரு?”
“நானும் இந்தக் காலேஜ் ஸ்டூடன்ட் தான் உங்களோட தங்க போற.”
“அப்போ அரை லூசா” கீதா மறுபடியும் அவளைக் கட்டி பிடித்துக் கொண்டாள்.
“என்னது லூசா! ஏய் பொண்ணே “
“ஆமாம்! இவள் முழு லூசு நான் முக்கா லூசு, அப்போ நீ அரை லூசு தானே!”
“கடவுளே!இது என்ன இப்படியொரு சோதனை?” அவள் கொஞ்ச நேரத்தில் குழப்பி விட்டாள்.
“ஏய்! கீதா உன் வாயை வச்சிட்டு சும்மா இரு. நீங்க உள்ளே வாங்க”
தரங்கிணி அவள் பெட்டியை எடுக்க உதவி செய்தாள்.
“என்னோட பெயர் கீதா. உன்னோட பெயர் என்ன?” அவள் கை நீட்ட
“என்னோட பெயர் தன்ஷிகா.”
“அப்போ… இனி நீ தன்ஷி தான்.”
“என்னது?”
“ஆமாம். நான் உனக்கு வச்ச பெயர் தன்ஷி. அதான் கொஞ்சம் கூப்பிட சுலமனா இருக்கும்.”
“தன்ஷிகா அவள் அப்படி தான் விடு. நான் தரங்கிணி… நீங்க என்ன டிபார்ட்மெண்ட்?”
“விஸ்காம்”
“ஒரே டிபார்ட்மெண்ட். இன்னும் வசதியாகி விட்டது.”
“என்ன வசதியாகி விட்டது?”
“காலேஜ் கட் அடிக்கத் தான்.”
“கீதா…. நீ அமைதியா இருக்க மாட்டியா. தன்ஷிகா அவள் இப்படி தான் பேசிட்டே இருப்பா. நீ ரெஸ்ட் எடு நாம சாப்பிட போலாம்.”
“ஓகே” அவள் கீதாவை ஒரு பார்வை பார்த்து விட்டுக் குளியல் அறைக்குள் புகுந்து விட்டாள்.
மிகப்பெரிய டைனிங் ஹால். வெளியே பீச்சில் இருக்கும் இருக்கையைப் போல் ஆங்காங்கே போடப்பட்டிருந்தது. கார்டன் வேறு இதற்கு நடுவில் ரோஜா மலர்கள் எனப் பல மலர்களின் செடிகள். நடக்க விருப்பம் கொள்பவர்களுக்கு என்றே அந்த அழகிய நடை பாதை அமைந்து இருந்தது. ஆயிரத்திற்கும் மேற் பட்ட இளைஞர் படிக்க அங்கே அனைத்தும் கலை உணர்வுடன் கட்டப்பட்ட கட்டிடம். முழு நிலவின் பிரகாசம் அங்கே இருப்பவர்களின் முகத்தில் பட்டு ஒலி வீசியது. மூன்று தோழிகளும் அந்த நடை பாதையில் நடந்து கொண்டிருந்தனர்.
“தன்ஷி உன்னைப் பத்தி சொல்லு”
“என்னைப் பத்தியா”
“என்ன ரொம்ப யோசிக்கற?”
“அதெல்லாம் எதுவும் இல்லையே. நான் என் அப்பா, அம்மா மட்டும் தான்.”
“அப்போ… ஒரே பொண்ணா”
“ஆமாம்”
“அப்போ இனி என்னோட டார்சரை அனுபவைக்க பழகிக்கொள். நான் இரவு நேரத்து பூதம் மாதிரி உங்க இரண்டு பேரையும் எப்படி பயமுடுத்துவேன் தெரியுமா!
கை விரல்களை நீட்டி வைத்துக் கொள்வேன். கண்ணை இப்படி விரிப்ப அப்பறம் முகம் முழுக்க கருப்பு கலர் பூசி உங்களை நடு ராத்தியில் வாயில் இரத்தம் வழிய பயமுடுத்துவேன்.” அவள் செய்கையில் செய்ய. இருவரும் அவளைத் தள்ளி விட்டு ஓடி விட்டனர்.
“ஏய்! சும்மா சொன்னேன் போகாதீங்க.” அவளும் பின்னே சென்றாள். இருவரும் உள்ளே நுழைய மூச்சு வாங்கி கொண்டு ஓடி வந்த கீதா கதவை அடைத்தாள்.
“ஏன்டி இப்படி தனியா விட்டு வந்தீங்க?”
“நீ தான் பேயாச்சே! உனக்கு என்ன பயம் வேண்டி இருக்கு?”
“பயம் எனக்கு இல்லை. உனக்குத் தான் தன்ஷி” அருகே சென்றவள் கண்ணை விரித்துக் காட்டினாள்.
அதற்குள் கதவு பயங்கரமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது.
“யாருடி இப்படி கதவைத் தட்டறது.”
“எங்களுக்கு மட்டும் என்ன தெரியும். போய்ப் பாரு.”
“அதுவும் சரி தான்.”கீதா கதவைத் திறக்க.
ஏதோ பிட்டு படத்திற்கு போகும் ஹீரோயின் மாதிரி இரண்டு துண்டு ஆடையோடு அவள் முன் நின்றிருந்தாள்.
“என்ன கருமம்டா இது”
“ஏய்! தீப்பெட்டி இருக்கா?” அவள் சொடக்கிட்டு கேட்க
அவளது உடையும் பிடிக்கவில்லை, அவள் சொடக்கிட்டு கேட்டதும் பிடிக்காமல் முகத்தைச் சுருக்கி கொண்டு
அதெல்லாம் இல்லை கதவை அடைத்தாள்.
“மூஞ்ச பாரு நல்லா சப்பி போட்ட மாங்கொட்ட மாதிரி”
“என்னாச்சுடி?”தன்ஷிகா கேட்க
“ஒரு பொண்ணு வெக்கமே இல்லாமல் டிரஸ் போட்டுத் திரியறா. என்கிட்டயே சொடக்கு போட்டுப் பேசறா”
“அவ்வளோ பெரிய அப்பாடக்கர் யாருன்னு பார்க்கலாம்.”கதவைத் திற தரங்கிணியும் வந்து விட்டாள். கீதா ஒரு கதவை மட்டும் திறந்து பார்க்க அதிர்ந்து விட்டனர் மூவரும். முதலில் தரங்கிணி அதிர்ச்சியிலே கட்டிலில் அமர்ந்தாள் தன்ஷிகா அடுத்தது வந்து விட்டாள். கீதா கதவைத் தாழிட்டு வந்து அமர்ந்தாள்.
“ஏய்!அவ பொண்ணா இல்லை பையனா.” மூவரும் கோரசாகக் கூறினர். ஆம் அவர்கள் திறந்து பார்க்கும்போது அந்த நவநாகரீக பெண் புகைத்துக்கொண்டிருந்தாள்.
“இதுக்கு தான் தீப்பெட்டி கேட்டாலா!”
“ஆமாம் போல. தரங்கிணி படுக்கையில் சாய.”மூவரும் உறங்கிப் போனர்.
கிராமத்தில் காலையிலே எழுந்திரிக்கும் பழக்கம் உள்ளதால் தரங்கிணி காலையிலே எழுந்து விட்டாள். தன்ஷிகா, கீதா இருவரும் ஒரே பெட்டில் படுத்து இருந்தனர்.
அவள் கபோர்டில் இருந்த பிள்ளையார் படத்தைத் தொட்டு வணங்கினாள்.
அவளது அலைபேசி சினுங்கியது அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“ஹலோ!அப்பா”
“என் செல்லப் பொண்ணு எப்படி இருக்க அங்கே வசதி எல்லாம் நல்லா இருக்கா. உனக்குச் செலவுக்கு ஏதாவது பணம் வேண்டுமா.”
“அப்பா! உங்க செல்லப் பொண்ணு நல்லா இருக்க. எனக்கு இங்க எந்தக் குறையும் இல்லை. நீங்க என்ன பண்றீங்க வயலுக்கு அதுக்குள்ள கிளம்பிட்டிங்களா”
“ஆமாம்! வயலில் வேலை இருக்கு. எங்கே என் தங்கம்.”
“அவளா. இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா. நீங்களே எழுப்புங்க”
தரங்கிணி அலைபேசியை அவள் காதில் வைக்க.
“தங்க பொண்ணு!இன்னுமா தூங்கற எழுந்திரி” அவ்வளவு தான் கீதா எழுந்து விட்டாள். எழுந்தவள் மேலே படுத்து இருந்த தன்ஷிகாவை மறந்து விட்டாள் பாவம் பிள்ளை கீழே விழுந்து விட்டாள்.
“லூசு!” தலையனையை அவளை நோக்கி வீசினாள்.
“போடி எருமை!”முதுகை தடவி கொண்டே.
“சொல்லுங்க மாமா”
“என்ன தங்கம். எப்படி இருக்க?”
“நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க?”
“ம்ம்!நல்லா இருக்கேன். காலேஜ்க்கு நேரமாகப் போகுது சீக்கிரம் போய்ட்டு கிளம்பு.”
“ம்ம்” என்று அலைபேசியை தரங்கிணியிடம் கொடுத்து விட்டுத் தன்ஷிகாவை தேடினாள். அவள் எங்கே அங்கே இருந்தால். குளியல் அறைக்குள் புகுந்து விட்டாள்.
“அப்பா!நீங்க உடம்பை பார்த்துக்கோங்க. நான் இங்கே நல்லாவே இருக்கேன்.”
“சரிம்மா! அடிக்கடி போண் பண்ணு.”
“சரி” என்று சொன்னவள் அழைப்பைத் துண்டித்து விட்டு. அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
மூவரும் அறையிலிருந்து வெளியே வர. அவர்களின் பக்கத்து அறை ஒரே சத்தமாகக் கேட்டது. கீதா ஆர்வம் தாங்காமல் ஜன்னல் வழியே பார்த்து விட்டு இருவரையும் கைப்பிடித்து அழைத்து வந்தாள்.
“என்னாச்சுடி ஏன் இப்படி பண்ற?”
“ஏய்! அந்த ஆம்பளை யாருகிட்டயோ கத்தி கத்தி பேசுது. நமக்கு எதுக்கு வம்பு அதான் உங்களை அழைச்சிட்டு வந்துட்டேன்.”
“கீதா அப்படி எல்லாம் ஒருத்தரை சொல்லக் கூடாது. அந்தப் பெண் காதில் நீ சொன்னது விழுந்தால் பாவம் தெரியுமா.”
“யாரு… அவளா!”
“கீதா… வாயை மூடிட்டு வா.” தரங்கிணி சொல்ல
“சரிங்க மேடம்”கீதா அதன் பிறகு வாயைத் திறக்கவே இல்லை.
மூவரும் வகுப்பறை வந்து அவர்களின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
“ஏய்! முதல் நாளே கிளாஸ் எடுப்பாங்களாடி.” கீதா கவலையா கேட்க
“படிக்கத் தானே வந்திருக்க”
“அதெல்லாம் நீ பண்ணு நான் படிக்க வரவில்லை ஏதோ நீ சொன்னாய் என்று வந்தேன்.”
“ஏய்! கீதா. நான் கேள்வி பட்டிருக்கிறேன். காலேஜ் வந்தவுடனே கிளாஸ் நடக்காது. நமக்குப் பார்ட்டி வைப்பாங்க”
“என்னது பார்ட்டியா?”
“அய்யோ! நீ நினைக்கிற பார்ட்டி இல்லை. இது வேற freshers day party நமக்கு நிறைய கலை நிகழ்ச்சி இருக்கும்.”
“அப்படின்னு சொல்ற!”
“ஆமாம்” மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே. அவர்களின் எச்சோடி மது மேம் உள்ளே வந்தார்கள்.
“குட் மார்னிங் மேம்.”
“குட் மார்னிங் ஸ்டூடன்ட் டுடே யூவர் பார்ட்டி டைம். சோ எல்லாரும் ஆடிடோரியம் வந்துடுங்க.”
“ஓகே மேம்.” கீதா சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாகத் தன்ஷிகாவை அணைத்து கொண்டாள். மூவரும் ஆடிடோரியம் செல்ல
“தன்ஷிகா! தன்ஷிகா!” யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது. அவள் பின்னே திரும்பிப் பார்த்தாள்.
“ஹாய் வாசு நீ இங்கே எப்படி?”
“அதை நான் கேட்க வேண்டும். நீ இங்கே எப்படி?”
“நான் இங்க தான் விஸ்காம் சேர்ந்து இருக்கேன்.”
“குட்…. சொல்லவே இல்லை.”
“இப்போ சொல்லிட்டேனே.”கீதா அவள் காதருகே “ஏய்! நேத்து நைட் டார்லிங் சொல்லிப் புலம்பினியே அது இவர் தானா!”
“வாயை மூடுடி”
“உன் ப்ரண்டா”
“இல்லை. லவ்வர்” கீதா கூற
வாசு அவளை முறைத்தான். “ஸாரி சீனியர் ஏன் இவ்வளவு டென்ஷன்.”
“இட்ஸ் ஓகே! வாங்க போலாம்.” அவர்களுடன் ஆடிடோரியத்தின் உள்ளே வர.
🧡🧡🧡🧡🧡 waiting for next ud…..