அழைப்பை ஏற்றவன் காதில் விழுந்த அழைப்பே டேய் மாப்ள என்றது தான்….
சொல்லு மாமா என்ன பண்றீங்க , எல்லாம் சாப்பிட்டிங்களா...
இங்கனா தாண்டா எல்லாம் இருக்கோம் சின்னவனே , நாங்க சாப்பிட்டோம், நீ சாப்பிட்டியா அங்கனா சரத் அப்புறம் அவங்க அப்பா, அம்மா என் நல்ல இருக்காங்களா...
நான் சாப்பிட்டேன் அக்கா , இப்போ தான் அங்க இருந்து இங்க வரேன் , இங்க நாங்க நாலு பேரும் நல்லா இருக்கோம் அங்க நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க கா .....
நாங்க எல்லாம் நல்ல இருக்கோம் டா சின்னவனே உனக்கு அங்க ஒன்னும் சிரமமில்லையே .....
எனக்கு ஒன்னும் இல்ல கா நான் நல்ல இருக்கேன் அதான் பக்கத்தில சரத் ஃபேமிலி இருக்காங்க இல்ல அப்புறம் என்ன கா....
சாமி அங்க அவிங்க இருக்கக் காட்டியும் தான் சாமி நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கேன் இல்லைனா நீ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ கிடந்து அடிச்சுட்டு இருந்து இருக்கும்.....
மா எனக்கு என்ன சும்மா ராஜா வாட்டம் இருக்கேன் என்ன நினைச்சு கவலைப்படாத உனக்கு உடம்பு முடியாம போயிட போகுது....
சரி சாமி சரி நான் கவனமான இருக்கேன் எனக்கு என்ன வந்ததுடப் போகுது....
சரி மா ஐயா இல்லையா என்ன பண்றாங்க , சாப்பிட்டாங்களா , மாத்திரை எல்லாம் நேரம் நேரத்துக்கு சரியா எடுத்துக்குறாங்களா....
இங்கே தான் இருக்காங்க சாமி , ஆன் அது எல்லாம் சரியா சாப்பிடுறாங்க சாமி இரு தாரேன் கைப்பேசி இடம் மாற....
சொல்லுங்க தம்பி நல்ல இருக்கீங்களா , வேலையொல்லாம் நல்ல போகுதுங்களா அங்க உங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லையே.....
அதெல்லாம் நல்ல போகுதுங்க ஐயா , எனக்கு என்ன , நான் நல்ல இருக்கேன் எனக்கு ஒரு சிரமம் இல்ல .....
சரிங்க தம்பி இதோ மருமகன் கிட்ட தரேன் சீக்கிரம் பேசிட்டு போய் ஓய்வு எடுக்க அப்போ தான் காலைல நேரமா எழுந்துக்க முடியும்....
சரிங்க ஐயா என்றவனுக்கு சிறிது அமைதியாக பதிலாக கிடைக்க அதிலே தெரிந்தது தனியாக வருகிறான் என்று....
என்னடா மாப்ளே ஜாலியா இருக்க போல .....
ஏன் மாமா நான் இங்க தனியா இருக்குறது உனக்கு ஜாலியா இருக்க மாதிரி தெரியுதா.......
பின்ன இல்லையா நான் மட்டும் உங்க அக்காக்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன் நீ நல்ல ஜாலியா இருக்க வாழ்க்கை தான்டா உனக்கு.....
. யோவ் மாமா ஏன்யா அவ்வளவு வயித்தெரிச்சல் உனக்கு அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க…
ஏன்டா பிள்ளையா பெத்துவச்சு இருக்கீங்க .....
ஏன் ஏன் எங்க அக்காக்கு என்ன கொறச்சல் எகிறிக் கொண்டு வர....
எது கொறச்சலா டேய் அடிக்கிறடா என அழுதுவிடுபவனைப் போல் சொல்ல .....
ஹாஆஆ..ஹாஆஆஆ... அவ்வளவு தான் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான்....
டேய் டேய் இப்போ எதுக்கு டா இப்புடி சிரிக்கிற , அடச்சி நிறுத்து இப்போ எதுக்கு பல்லக் காட்டுற நாயே....
பின் நாங்களா கட்டி வச்சோம் நீங்க தானா கட்டுனா எங்க அக்கா தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னீங்க இன்னும் சிரித்து வெறுப்பேத்த .....
அங்க தான்டா தப்பு பண்ணிட்டேன் மாமா புள்ளையாச்சே எங்க அக்கா மாதிரி கொஞ்சமா இருக்கும்,மாமா மாதிரி தான் இருக்கும் நெனைச்சேன் எங்க அப்படியே உங்க அம்மா அதான் எங்க அக்கா மாதிரி இல்ல இருக்கா....
யோவ் மாமா கிரைம் ரேட் ஏறிட்டே போகுதுயா முதல்ல எங்க அக்கா, இப்போ எங்க அம்மாவா ரொம்ப தான்யா பண்ற , அவங்க பாவம் ரொம்ப பாசக்காரங்கயா....
அடேயப்பா எங்களுக்கு தெரியும் இருந்தாலும் நீ அவ்வளவு பாசமா , சொல்ற இல்ல அப்ப சரி உம்பேச்சுக்கே வரேன் , உனக்கு உங்க அம்மா, அக்கா மாதிரி பொண்ணை பாக்க சொல்றேன் மாமாக்கிட்ட அப்போ தான் தங்கச்சிமா சும்மா பறந்து அடிக்கும் போது நீ அடி வாங்குவ இல்ல எங்க நிலை அப்போ தெரியும் டா தம்பி கூற்றில் எதிர்ப்புறம் அமைதி நிலவ என்ன சத்தத்தையே காணோம் கட்பண்ணிட்டானா கைபேசியை காதிலிருந்து எடுத்து பார்க்க அது இன்னும் அவன் இருப்பைக் காட்ட .....
இதயா லைன்ல இருக்கியா இல்லையாடா என கத்த .....
ஆன் இருக்கேன் மாமா சொல்லுங்க.....
என்னடா கல்யாணம்னு சொன்னா மட்டும் பேச்சு வராதே என் தான்டா பிரச்சினை உனக்கு என கத்த....
. இல்ல மாமா இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே இழுக்க.,.
ம்ம்ம் பேசமா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிறியா நக்கலா கேட்க.....
மாமா என சிணுங்க ...
அய்யோ சிணுங்கறானே என்னடா உன் பிரச்சனை....
இல்ல மாமா உனக்கு தான் தெரியுமே என் வேலையப் பத்தி நேரம் காலம் எல்லாம் கிடையாது எப்போ கூப்பிட்டாலும் எமர்ஜென்சினா போய் தான் ஆகனும் அதான் வர பொண்ணு எப்படி எடுத்துபா என்னன்னு யோசிக்குறேன் அப்புறம் நம்ம குடும்பம் எனக்கு ரொம்ப முக்கியம் வர்றவங்க எப்படி இருப்பாங்க என்னன்னு அவங்களால ஏதும் பிரச்சனை வரக் கூடாது அதான் யோசனை இருக்கு மாமா.....
அடேய் பெரிய மனுஷா அதெல்லாம் எங்களுக்கு தெரியும் டா நாங்க பாத்துக்குறோம் , இதை நினைச்சு தான் இவ்வளவு நாள் கவலைப்பட்டுட்டு இருந்தியா இதை முதல்லையே சொல்றதுக்கு என்னடா எருமை.....
இல்ல மாமா அது கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு....
என்ன நொல்ல மாமா அப்படியே உன் குழப்பத்துல தீயை வைக்க ....
திட்டாத மாமா எனக்கு எப்படி சொல்றதுன்னு புரியலை....
சரிடா இனி நான் பாத்துக்குறேன் நீ போய் தூங்கு கைப்பேசி அனைத்தவன் உள்ளே வர அவனிற்காக காத்திருந்தான் இதயனின் தந்தை பாலகிருஷ்ணன்.....
பாலகிருஷ்ணன் - தேவகியின் தவ புதல்வர்கள் தான் ரேணுகா மற்றும் இதயன் ....
பாலகிருஷ்ணன் தாய்மாமா புதல்வர்கள் தான் தேவகி , சாரதி இருவரும்.......
கிருஷ்ணனின் சிறு வயதே அவர் பெற்றோர் இறந்த விட அவரை தன் மகன் போல் வளர்ந்தனர் தேவி (தேவிகி )யின் பெற்றோர்.....
பள்ளி படிப்பை முடித்தவன் , மேல்நிலைப் படிப்பாக விவசாய சம்மத்தமான படிப்பை தேர்வு செய்தான், அவன் வீட்டில் இருந்ததை விட தன் தாய் மாமன் உடன் வாயிலில் இருந்ததே அதிகம் அதினாலே என்னவோ அதையே தேர்ந்தெடுத்தான்....
படிப்பு முடித்தவுடன் தன் மாமனை பின்பற்றி விவசாயத்தை கையில் எடுக்க அதற்கு பெரும் உதவியது தேவியின் தந்தையே.....
ஒரு பக்கம் தேவியின் படிப்பும் முடிய இருவரையும் வைத்தே திருமண சம்மதம் கேட்க இருவருக்கும் சம்மதமே சிறுவயதில் இருந்தே முளைத்த ஆசை அல்லவா அதை ஏற்காமல் போவார்களா என்ன , பெரும் மகிழ்ச்சி அவர்களுக்கு.....
சாரதி தேவகியின் தம்பி , தேவகியின் திருமண முடிந்த சில வருடங்களில் அவர்களின் பெற்றோர்கள் இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட அதில் பெரிதும் வருந்தியது கிருஷ்ணன் தான் அதிலிருந்து சிறிது சிறிதாக தன்னை மீட்டவன் தன்னை வளர்த்தைப் போல் அவரின் புதல்வன் ஆனா சாரதியை வளர்த்தார் கிருஷ்ணன்.....
சாரதிக்கு கிருஷ்ணன் தான் குரு கிருஷ்ணன் சாரதியின் தந்தை பின்பற்றியது போல் சாரதியும் கிருஷ்ணனை பின்தொடர்ந்தது தான் வளர்ந்தான் .....
சாரதிக்கு தன் பெற்றோர்க்கு பின் கிருஷ்ணன் தான் முதலிடம் ஏன் அவன் அக்கா தேவி கூட கிருஷ்ணனுக்கு அடுத்தது தான் .......
சாரதியை பெரிய படிப்பு படிக்க வைக்க கிருஷ்ணன் எவ்வளவோ முயற்சிக்க அவனோ அவரைப் போலவே விவசாயம் தான் செய்வேன் என்று உறுதியாக நின்றான்.....
சாரதியின் திருமணத்திற்கு பெண் பார்க்க அவனோ ரேணுகாவை பிடித்திருப்பாதாக கூற அவளின் சம்மதம் கேட்டு இருவரும் திருமணம் முடித்து வைத்தனர்.....
ரேணுகா அவள் அன்பு கணவன் சாரதி திருமண முடிந்து ஐந்து வயதில் சாருமதி என்ற பெண் குழந்தை உள்ளது....
ரேணுகாவிற்கு பிறகு தேவி மூன்று முறை கர்ப்பம் தரித்தும் எதிர்பாராத வேளையில் அது தங்காமல் போக அதற்கு மேல் அடுத்த பிள்ளைக்கு வாய்ப்பு இல்லை என நினைத்தவர்கள் என்னத்தை பொய்யாக்கவே எட்டு வருடங்கள் கழித்து பிறந்தவன் தான் இதயன்....
அதனாலேயே என்னவோ இதயன் அனைவருக்கும் செல்லம் அதுவும் சாரதிக்கு அவன் உயிர் மாமா.. மாமா .. என்று தன் பின்னே சுற்றும் இதயன் அவனுக்கு என்றும் மூத்த பிள்ளையே ......
மாமா என்ற உறவை தாண்டி சாரதி அவனுக்கு குரு , ஃபிரண்ட் . வழிகாட்டி எல்லாம் ஏன் இதயன் டாக்டர் படித்தது கூட சாரதியின் வழிகாட்டுதலில் தான் ......
இதயனுக்கு அவன் குடும்பம் தான் எல்லாம் அவர்களின் மகிழ்ச்சியே அவனின் மகிழ்ச்சி.....
சரிபா கதைக்குள்ள போலாம் ரொம்ப போகுது ……..
சாரதியின் வரவை எதிர்நோக்கி காத்திருந்த கிருஷ்ணன் மட்டுமே கூடத்தில் அமர்ந்திருக்க மற்றவர்கள் எல்லாம் அவரவர் அறைக்கு சென்று விட்டனர் ........
என்ன மாப்ள என்ன சொல்றான் உங்க மாப்ள உள்ளே வந்த சாரதியைப் பார்த்து கேட்க ....
மாமா அது என இதயன் சொன்ன அனைத்தையும் கூற பெரிய மனிஷன் இவ்வளவு எல்லாம் யோசிக்குறாங்களா .........
அவன் சொல்றதும் சரியா தான் இருக்கு மாமா ......
என்ன பண்ணலாம்னு சொல்லு மாப்ள இதுக்கு அதற்கு சாரதி கூறிய யோசனை சரி என்றே தோன்றியது அவருக்கு......
ம்ம்ம் எனக்கும் இது தான் சரியா இருக்கும்னு தோணுது மாப்ள சரிங்க நீ போய் உறங்குங்க மத்ததெல்லாம் காலைல பேசிக்கலாம்....
சரி மாமா நீங்களும் போய் ஓய்வெடுங்க நாளைக்கு பேசலாம் இருவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.....
சரி வாங்க பா நம்ம போய் ஹீரோயின் பாத்துட்டு வரலாம்.....
கே . எஸ் ஹாஸ்பிடலுக்கு வந்தவள் தன் ஸ்கூட்டியை பார்கிங்கில் விட்டவள் தன் கைப்பையை எடுத்து கொண்டு உள்ளே சென்றவளைப் பார்த்த அனைவரும் புடவையில் இருப்பதை பார்த்து குறு குறு வென்று பார்க்க ......
அதை பார்த்து வேகமாக பார்மசி அறை நோக்கி செல்ல அங்கு ஏற்கனவே இருந்த அனிதாவைப் பார்த்தவள் கடுப்புடன் அவளின் முதுகில் அடிப்போட ........
எம்மா..கத்தியவாறே முதுகைத் தேய்த்திக் கொண்டே திரும்பியவள் பார்த்தது தன்னை முறைத்து கொண்டிருக்கும் தன் உயிர் தோழியைத் தான்....
எருமை மாடே எதுக்கு டி அடுச்ச வலிக்குது.....
குரங்கே இந்த புடவைய நீ கட்டினதும் இல்லாம என்ன வேற கட்டவச்சுட்ட என்னமோ நான் வேற்றுகிரக வாசி மாதிரி எல்லாம் பாக்குதுங்க குரங்கே...குரங்கே...என் கையில் வைத்திருந்த பையிலே அவளை அடிக்க....
அடியே இரு டி அவள் கைபிடித்து அவள் அடியிலிருந்து தப்பித்தவள் ஒரு நிமிஷம் அவளை விட்டு தள்ளி வந்தவள் அறையின் வாசலை பார்த்தவாரு நின்று நல்ல அம்சம்மா இருந்தா எல்லாம் பாக்க தான் செய்வாங்க , உன்ன யாரு டி நல்லா ஜீரோ ஊற வச்ச இரசகுல்லா மாதிரி இருக்க சொன்னவள் அவள் அடிக்கும் முன்னே ஓடி விட்டாள்.....
அடிங்க நானே கடுப்பில இருக்கேன் இதுல அம்சா சம்சாட்டு கொப்பத்தா அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க அதுக்குள் அனிதா அங்கிருந்து ஓடி விட .....
மவளே வராமலே போவ கையிலை மட்டும் சிக்கு டி இருக்கு உனக்கு அவளை வறுத்தெடுத்தவள் அன்றைய நாளுக்கான வேலையைத் தொடங்கினால் ......
Interesting😍😍😍😍😍
nice
Nice