Skip to content
Home » இதயனின் ஹூரூதயம் அவள்-1

இதயனின் ஹூரூதயம் அவள்-1

இதயனின் ஹூரூதயம் அவள்…♥️

            பார்க்கும் திசைகள் எங்கும் ஆட்கள் பரப்பரபாக வருவதும் போவதுமாக இருக்க அதில் சிலர் மகிழ்ச்சியுடன், சிலர் கவலையுடன் காட்சியளித்தனர் அது  ....

         சென்னை விமான மையம்....

        அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருத்தம் இல்லாது கனத்த இதயத்துடன் , நிலை கொள்ளாமல் தவிக்கும் மனதினை அடக்க வலி அறியாது நின்றது அவளின் உள்ளம் ....

        ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தவளின் தலையை ஆறுதலாய் கோதியது ஒரு கரம் நிமிர்ந்து பாராமலே  தன்னருகில் நிற்பது  யாரென்று அறிந்தவள் அந்நபரை இடையோடு  கட்டிக் கொள்ள ....

           என்னடா என்ன ஆச்சு...

            ப்பா என்ற மகளின் குரலில் உள்ள தவிப்பை அறிந்தது போல் வெகுவாய் காயம் கண்டது அந்த அன்பு தந்தை மனம் அவர் சற்குணம்.....

            சாரி டா என்றவரின் கலங்கிய குரலைக் கேட்டு தன்னை கட்டுப்படுத்துக் கொண்டு எழுந்தவள் ம்ப்ச் என்ன பா எங்கிட்ட போய் ......


            இல்லடா நீ சொன்னத நான் அப்பவே கேட்டு இருந்த இப்போ நீ இப்படி தவிக்க வேண்டி இருந்து  இருந்திருக்காது இல்லையா .....


               உம்மேல ஒரு தப்பும் இல்லபா நான் வேணாம் சொல்லி இருந்த நிறுத்தி இருப்பியே எனக்கும் பிடிச்சு தானே நடந்தது.....

           அம்மு நான் வேணா மறுபடியும் சம் என்று ஆரம்பித்தவரின் வார்த்தை பாதியிலேயே நின்றது தன்னை வெற்றுப் பார்வை பார்த்த மகளின் கண்களைக் கண்டதும்.....

                அம்மு....

                நீ போய் யார்கிட்டையும் பேச கூடாது , அதையும் மீறி நீ போனது எனக்கு தெரிய வந்துனா நீ என்ன பாக்கறது அதான் கடைசியா இருக்கும் உனக்கு சொல்லாம வேற இடத்துக்கு போயிடுவேன் பா புரியுதா........

                சரிடா நான் போகல , நீ ஜாக்கிரதையா இரு ,உடம்ப பத்திரமா  பாத்துக்கோ நீ மட்டும் தான்டா எனக்குன்னு இருக்க புரியாத பாசத்துடன் ஆரம்பித்து கண்டிப்புடன் முடிக்க ......

                  சரிப்பா அதே மாதிரி நீயும் உன்ன பத்திரமா பாத்துக்கணும் எனக்கும் கூட நீ தான்  மட்டும் தான்பா இருக்கீங்க என்று கூறியவளின் மனக் கண்ணில் வந்து சிரித்தது ஒரு உருவம் அதை புறம் தள்ளியவள் தன் தந்தை பார்க்க .....

            அவர் ஏதோ கூற வருவதும் பின் வாங்குவதுமாக இருக்க அதை பார்த்தவள் எதுவும் எதுவும் கேட்கவில்லை அதற்குள் அவள் போக வேண்டிய பிலைட் அன்னவுன்ஸ்மென்ட் வர தன் தந்தையை இறுக அணைத்து விடுவித்தவள் போயிட்டு வரேன் பா ....

               அம்மு மா.........

              வேணாம் பா நம்மல முக்கியம் இல்லைன்னு நினைக்குற யாரும் நமக்கு வேண்டாம்.....

               மீண்டும் ஒருமுறை அவரை அணைத்து விடு‌ வித்தவள் டேக் கேர் பா என உள்ளே செல்ல அவள் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்தவர் அங்கிருந்து வெளியேற உள்ளே வந்த உருவத்தோடு மோதியவர் யார் என்று பார்க்காமலே சாரி பா என்று கூறி விட்டு வெளியேற விட்டவர்.....

             மோதிய உருவமோ அவர் போன திசையை பார்த்து படி அப்படியே நிற்க உடன் வந்த நபரின் உழுக்களில் சுயநினைக்கு வந்து அவரைத் தேட அதைப் புரிந்து கொண்ட உடன் வந்த நபரோ சற்குணம் சென்ற திசை நோக்கி அந்த உருவத்தையும் இழுத்து கொண்டு சற்குணம் முன்பு நின்றது...

            அவர்கள் இருவருரையும் பார்த்தவரின் கண்கள் ஒரு நொடி மின்னியது ஆனால் அடுத்த நொடி அது பொய்யோ என்னும் வகையில் அவர்களை ஒரு பார்வை பார்த்து 

விட்டு விலகி நடக்க……

              அவரிடமிருந்து இதை எதிர் பார்க்காத இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு மீண்டும் அவரிடம் வந்தனர்......

               அப்பா உடன் வந்தவன் அழைப்பில் அவரின் கால் அப்படியே நின்று விட்டது அவன் மேல் கொண்ட அன்பினால்......

             சொல்லுங்க தம்பி.....

            அப்பா தங்கச்சி மா எங்க.....

             எதுக்கு தம்பி ...

             இந்த கேள்வியை எதிர் பார்க்காதவன் அப்பா என்று அதிர....

             வேணாம் தம்பி பேசுன வரைக்கும் போதும் ரொம்ப கேட்டாச்சு , ஒரு தகப்பனா ரொம்ப நொந்து போய் இருக்கேன் வேணாம் விட்டுடுங்க தம்பி என்றவர் திரும்பி நடக்க தொடங்க .....

                இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த உருவமோ இப்பொழுது அவரைத் தடுத்தது மாமா ப்ளீஸ் மாமா ஒரே ஒரு தடவ அவ கூட பேசிக்கிறேன் ......

              அவனுக்கு பதில் சொல்லாமல் தங்களை தாண்டி மேலே செல்லும் பிலைட்டை காண்பித்தவர் அங்கிருந்து தன் காரையெடுத்துக் கொண்டு சென்று விட்டார்.......

                  அவரின் செயலைப் புரிந்து கொள்ளவே சற்று நேரம் எடுக்க அதன் அர்த்தம் புரியவே உயிர் கொள்ளும் வேதனையோடு தன் கண்ணை விட்டு புள்ளியா போன அந்த விமானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனை இழுத்து காரில் தள்ளிய உருவமோ தானும்  அமர்ந்தது காரை எடுத்தது .....

         வெளியே வெறித்து படியே அப்போ அவ்வளவு தானா மாமா அவளுக்கு நான் வேணாமா என கார் ஓட்டிக் கொண்டிருந்தவனிடம் கேட்க....

             அவனைப் பார்த்தானே தவிர வேறு எதுவும் பதில் கூறாமல் காரை ஓட்ட....

              சொல்லு மாமா நான் வேணாமா அவளுக்கு இவங்க தான் என்ன புரிஞ்சுக்காம எல்லாம் பண்றாங்கண்ணா அவளும் என்ன புரிஞ்சுகாம போய்ட்டா தானா என புலம்பியவனைப் பார்த்து காரை ஓரமாக நிப்பாட்டி விட்டார் ஒரு அறை .....

              கன்னத்தில் கைவைத்து தன்னை அடித்தவரை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் பார்த்தான் அவன் இதயன்....

-தொடரும்.

2 thoughts on “இதயனின் ஹூரூதயம் அவள்-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *