சித்தாரா………செல்வ செழிப்புடன் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பதற்கேற்ப மிகச் சிறந்த தொழிலதிபரின் பேத்தி மற்றும் அதே தொழிலில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவரின் மகள் என்ற அடைமொழியில் பிறந்தவள்.
ஆனால் விதியின் வசத்தால், பெற்றோர்கள் தங்களின் சொத்தை இழக்க, நான்கு வயதிலியே இவள் பெற்றோர்களை இழக்க, தந்தையின் நண்பரான கணியனிடம் வந்து அடைக்கலமானாள்.கணியனின் குடும்பம் மிகப்பெரியது. மூன்று சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழும் இல்லத்தில் குழந்தைகளுக்கு பஞ்சம் இல்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் தன் மகளை போன்று தான் வளர்த்து கொள்வதில் தனக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை என்று மரண நேரத்தில் நண்பனுக்கு வாக்குறுதி அளித்து விட்டு தான் அழைத்து வந்தார்.ஆனால் கணியனின் வீட்டிலோ முன் பின் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையை சேர்த்து கொள்ள எவரும் அனுமதிக்க வில்லை இருவரை தவிர…
ஒன்று துளசி, கணியனின் அன்பு மனைவி மற்றும் அவரது இளைய சகோதரர் சந்தான பாரதி. இவர் தனியார் வக்கீலாக பணியாற்றி வந்த நேரம் சித்தாரவின் தந்தை உதவியுடன் அரசாங்க வக்கீலாக மாறினார்.அதனால் தந்தையின் மீதான மரியாதையில் சித்தாராவை ஒதுக்கி வைக்க அவருக்கு விருப்பமில்லை.
ஆனால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு அதிலும் குறிப்பாக கணியனின் தாயான மல்லிகாவிற்கு சித்தாராவை சிறிதும் பிடிக்கவில்லை. ஏனெனில் இவள் பெண் பிள்ளை என்றும் எதிர்காலத்தில் தன் மகனுக்கு சுமையாக வந்துவிட வாய்ப்பிருக்கின்றது என்றும் கூறியவர்இதுவே ஆண் குழந்தையாக இருந்திருந்தால் திருமண செலவுகளும் இருக்காது, அதே நேரத்தில் தன் மகனுக்கு உதவியாக இருக்கும். ஆனால் பெண் குழந்தை…..”வேண்டாம் கனி ஏதாவது ஒரு நல்ல ஆசிரமத்தில பாத்து சேர்த்து விட்டுடு.இப்ப தான் நீ கைய ஊண்டிட்டு வர்ற. இதுல இத வேற தலையில இழுத்து போட்டுக்காத”என்று அழகான அறிவுரையை பகன்றிடவே,கணியன், “என்னமா பேசுறீங்க? செலவு பாக்குற நேரமா இது?எனக்காக அவ்ளோ உதவி பண்ணுன என் நண்பன் சாகுற நிலைமையில யாரையும் நம்பி விடமுடியாதுன்னு என்கிட்ட ஒப்படச்சிருக்கான்.
அவனுக்கு நான் வாக்கு குடுத்துட்டேன். என் பசங்கள பாத்துக்குற மாதிரி பாத்துப்பேன்னு…..நம்ம குடும்பம் கூட்டு குடும்பம் ஆச்சே. பசங்களோட பசங்களா வளர்ந்தா அவ அம்மா அப்பாவ மறப்பான்னு நினைச்சு கூப்டு வந்தா…..ஓ காட்….ப்ளீஸ் ம்மா தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாதீங்க…
இல்ல இப்படி தான் பேசுவேன் அந்த பொண்ண வெளிய அனுப்பனும்னு நினைச்சா என்னையும் சேர்த்து வெளிய அனுப்புங்க….என்று அவர் கூறியதும் கணியனின் மூத்த சகோதரர் பாபு,தங்க முட்டையிடும் வாத்து போன்று குடும்பத்தின் முக்கால் வாசி பொறுப்பை பார்த்து கொண்டு இருக்கும் தம்பியை தன் தாயார் எங்கு விரட்டி விட்டு விடுவாரோ என்று நினைத்து, “அம்மா விடுங்க ம்மா. அவன் தான் இவ்ளோ சொல்றான்ல. பாக்க சின்ன பொண்ணா வேற தெரியுது.இப்ப தான் அம்மா அப்பாவ வேற இழந்துருக்கு…கொஞ்சம் நாள் போகட்டும்…..”என்று தன் தாயை பார்த்து கண் சாடை காட்ட, ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த துளசி தோளில் தூங்கி கொண்டு இருந்த சித்தாரவை, “நீ போம்மா நீ பாப்பாவ உள்ள கூப்டு போ!”என்று அனுப்பி வைத்தார்.
ஆனால் மல்லிகா அம்மையாரோ, “ஏய் துளசி நில்லு… அவள உன் ரூம்க்கு கூப்டு போறியே அறிவிருக்கா?…..”என்றதும் பால முருகன் மறுபடியும் ஆரம்பிக்குதே என்ற ரீதியில் தன் தாயை திரும்பி பார்த்தார். இந்த அம்மாவ என்று முனுமுனுத்துக் கொண்டேகணியன், “அங்க கூப்டு போகாம வேற எங்க கூப்டு போவா?”என்று முந்தி கொண்டு கேட்டார்.அதற்கு அவரோ, “ஏன் என்னோட ரூம் இருக்குல….அங்க போய் போடு. கீழ விரிப்பு விரிச்சு போடு….”என்று அழுத்தமாக கூற,கணியன், “ஏன்ம்மா அக்கப்போர் கொட்டுற….உன் ரூம்ல ஏசி இல்லம்மா.
தாரா ஏசி இல்லாம தூங்கவே மாட்டாம்மா”என்று கவலை தோய்ந்த குரலுடன் கூறவே, “ஏன் ஏசில பிறந்தா ஏசில தான் தூங்கனுமா?இப்ப தான் ஒன்னுமில்லாம போச்சுல.
வெறும் பய மகளுக்கு என் ரூமே ஜாஸ்தி. அதுவும் இல்லாம உன் ரூம்ல உனக்கும் உன் பசங்களுக்குமே இடம் பத்தாதப்போ இத போய் எங்க தூங்க வெப்ப?….அதுவும் ஒன்னுக்கு ரெண்டு ஆம்பள பிள்ளைங்க வேற பெத்து வச்சுருக்க….அம்மா எது சொன்னாலும் நல்லதுக்கு தான் சொல்லுவேன்..போ போய் என் ரூம்ல போடு….”என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விடவே, அம்மா என்று அழைத்த கணியனின் அழைப்பு காற்றில் பறந்து சென்றது…
தன் தாய் சென்ற பிறகு தன் சகோதரனின் அருகில் வந்த பாலமுருகன், “டேய் விடுடா அம்மா இவ்ளோ தூரம் ஒத்துக்கிட்டதே பெருசு…நீ இப்ப எல்லாத்துலையும் சரிக்கு சரியா நின்னா நாம எல்லோரும் பிரிய வேண்டியது வரும்.
அதுக்காகவாடா இவ்ளோவும் கஷ்டப்பட்டோம். அம்மாக்கு அப்புறமும் நாம எல்லாம் ஒன்னா இருக்கும்னும்னு தானேடா நம்ம சக்திக்கு மீறி இவ்ளோ பெரிய வீட்ட கடன் வாங்கி கட்டி இருக்கோம். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்ட போடுறது குடும்பத்துக்கு அழகு இல்லடா கனி….”என்று கூறவே பாரதியும் கனியனுக்கு ஆதரவாக அவன் தோளில் கை வைத்து, “விடுண்ணே பாத்துக்கலாம்.
இங்க தான பாப்பா இருக்க போகுது”என்று கூறவும், கணியன் வேறு வழியின்றி துளசியை நோக்கி கண் காட்டிட, மல்லிகாவின் அறைக்குள் கொண்டு செல்லவும் கணியனும் பின்னே நுழைந்தார்.கர்ப்பிணி பெண்ணால் குனிந்து நிமிர்ந்து எழ முடியாது என்று தாயின் மெத்தையில் இருக்கும் போர்வையை எடுத்து இரண்டாக மெத்தை போல விரித்தார். மெல்லியதிலும் மெல்லிய ஒரு தலையணையை எடுத்து படுக்கையில் சரியாக வைத்து விட்டு துளசியிடம் இருந்து தாராவை பெற்றவர் அழுங்காமல் குழுங்காமல் படுக்க வைத்து சிறிது நேரம் அதே நிலையில் அமர்ந்தவாறு, “தலையெழுத்த பாத்தியா?…..இந்த வீட்டு ஃபினிசிங்க்கு பணம் பத்தலைன்னதும் இவ அப்பன் தான் பணம் குடுத்து உதவி பண்ணான். ஆனா அவன் புள்ளைக்கு இப்படி ஒரு நிலைம”என்றவர் அவளின் தலைமுடியை சரி செய்து விட்டு தன் மனைவியை நோக்கி”உன் மேல இருக்குற நம்பிக்கையில தான் கூப்டு வந்துருக்கேன். நம்ம பசங்கள பாக்குற மாதிரி பத்திரமா பாத்துக்கோ”என்றவருக்கு கண்டிப்பா என்று புன்னகையுடன் ஆதரவாக தனது கரங்களை நீட்டிவே, தனது துக்கத்தை தன் மனைவியின் அணைப்பில் போக்கி கொண்டார்.
“எதுக்குடா என்ன வாய மூடச் சொல்லி வெளிய அனுப்புன”என்ற மல்லிகாவின் கேள்விக்கு,”உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லையாம்மா.செத்து போன அந்த மனிசன் தான் கணியனுக்கு அம்புட்டு உதவி பண்ணவரு.வாங்குன கடன் எல்லாம் பத்தாம வீட்டுல டைல்ஸ் போடுறதுக்கும், ஃபினிசிங்கும் எங்கெங்கேகேயோ நாயா பேயா அலஞ்சோம்.ஒரு வார்த்த தான் கணியன் கேட்டான்.
கண்ண மூடிக்கிட்டு பத்து லட்சத்த இனாமா கொடுத்தவன் புள்ள இங்க இருக்கக்கூடாதுன்னு சொல்றியே….மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்ல வித்துட்டியா…..சரி மனசாட்சி தான் இல்ல. நா வாங்குற சம்பளமும், பாரதி வாங்குற சம்பளமும் பாதி பாதியா லோன்க்கு போய்டுது.
மிச்ச வர்ற பணத்துல நம்ம எல்லாம் ஒரு நேர சோறு தான் சாப்பிட முடியும்.ஆனா அவனும் சேர்ந்து கொடுத்தாதான் மூனு வேள சாப்பாடு, கரண்டு பில்லு, மாசத்துக்கு ரெண்டு கேஸ், பசங்க படிப்பு இப்படி எல்லாத்துக்கும் உபயோகமாகுது…..இப்ப நீ பாட்டுக்கு அந்த புள்ளைய இருக்க வேண்டாம்னு சொல்லி அனுப்பினா அவன் நல்லா இருப்பான்.
ஆனா நாம தான் கஷ்டப்படுவோம்….அதனால ஒழுங்கு மரியாதையா அவன வெளியே போறேன்னு சொல்ற மாதிரி எதுவும் பேச விடாத…போனா உனக்கும் எனக்கும் தான் பிரச்சன…. பாத்துக்கோ”என்று எச்சரிக்கை விடுத்து விட்டு செல்லவே மல்லிகா யோசனையில் ஆழ்ந்தார்.
ஆனால் பிறவி குணம் என்று ஒன்று உள்ளதே…. அது இப்படிப்பட்ட அறிவுரைகளுக்கெல்லாம் அடங்குமா என்ன?…..”அப்பா எப்ப வருவாரு? வேண்டாம்”என்று அழகான தன் கொஞ்சல் மொழியில் உணவை மறுத்து கொண்டு இருந்த தாராவிடம், “அப்பாவுக்கு உடம்பு முடியலடா தாரா….ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காரு….நீ கரெக்டா சாப்பிட்டீனா அப்பாகிட்ட போலாம்”என்று வழக்கமான பொய்யாக இருந்தாலும் உபயோகித்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் துளசி உணவை வாயருகே கொண்டு செல்ல, தாரா, “அப்பாவும் இப்படி தான் அம்மா ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காங்கன்னு சொன்னாரு.ஆனா அம்மா வரவே இல்ல. இப்ப அப்பாவும் போய்ட்டா எப்ப வருவாங்க…”என்று அழவும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த தென்றலுக்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது.ஆனால் குழந்தையின் முன்னால் அழுது விடக்கூடாது என்று திரும்பி கொள்ள, துளசி, “அம்மாவ கூப்ட தான்டா அப்பா போயிருக்காரு. ரெண்டு பேரும் சீக்கிரம் வந்துடுவாங்க”என்று கூறி கொண்டு இருக்கும் போதே அம்மா என்று தென்றலை நோக்கி ஓடி வந்தான் எட்டு வயதான திரு என்று அனைவராலும் அழைக்கப்படும் திருவேந்திரன்.
முதுகில் பள்ளி பை மற்றும் கையில் உணவு பையுடன் வந்தவனை கண்ட தாரா,யார் இது என்று துளசியிடம் வினவ,”யார் மா இது பாக்க டால் மாதிரி இருக்கா?”என்று தன் தாயிடம் கேட்டு வைத்தான் திரு…..
வருவான் ❣️
கதை எப்படி போகுதுன்னு தயவு செஞ்சு விமர்சனங்களை அனுப்புங்க நண்பர்களே…
Super epi👍