“யார் மா இது பாக்க டால் மாதிரி இருக்கா?”என்று திருவின் கேள்வியில் திகைப்படைந்த அவனின் தாய் தென்றல் துளசியை ஒருதரம் பார்த்து விட்டு, “கணி பெரியப்பா கூப்டு வந்த புது பாப்பா.
இனிமே இங்க தான் உங்களோட இருப்பா”என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே பின்னே வந்த பிரபா,தர்சினி, ரித்தேஷ், மாதவன் என மற்ற மீதி நான்கு குழந்தைகளும் வந்து நின்றனர்.
பிரபா, தர்சினி இவர்கள் இருவரும் பாலமுருகனுக்கும் உள்ளே குழந்தைகளுக்கான சுண்டலை வேகவைத்து கொண்டிருக்கும் ரம்யா எனப்படும் மூத்தமருகளுக்கும் பிறந்தவர்கள். பிரபா எட்டாம் வகுப்பும், தர்சினி ஆறாம் வகுப்பும் படித்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் அடுத்ததாக பிறந்தவன் தான் திரு….வீட்டின் முதல் ஆண் வாரிசு. அதனால் மல்லிகாவின் செல்ல பேராண்டி….இவன் தென்றலுக்கும் சந்தான பாரதிக்கும் பிறந்த ஒரே ஒரு தவப்புதல்வன் ஆவான். அடுத்ததாக பிறந்தவர்கள் தான் ரித்தேஷும், மாதவனும்….ஏனெனில் கணியனும் துளசியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். வீட்டின் சம்மதம் வாங்க சில கால தாமதம் ஆனதால் சந்தான பாரதிக்கு தான் முதலில் திருமணம் நடந்தது. எனவே கணியன் துளசி தம்பதியினர் குழந்தைகள் திருவை விட இரண்டு வயது சிறியவர்கள் இருவரும் இரட்டை பிறவிகள்….
ரித்தேஷ், நித்தின் எனப்படுபவர்.
ரித்தேஷூம், நித்தினும் ஒன்றாம் வகுப்பில் ஒரே வகுப்பில் படிக்க, திரு மூன்றாம் வகுப்பு படிக்கின்றான். குழந்தைகள் அனைவரும் ஒரே பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் பயின்று வருகின்றனர்.ஐவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரபாவின் தலைமையில் மற்ற நான்கு குழந்தைகளும் பள்ளி பேருந்தில் பத்திரமாக சென்று வருகின்றனர்.
இப்போது அந்த மிகப்பெரிய வாசல் படிக்கட்டில் அமர்ந்து உணவை வாங்க மறுத்த தாராவை கண்ட ஐவரும் சுற்றி வளைத்து நின்று கொள்ள, தாராவும் அவர்களை கண்ட மகழ்வில் தற்காலிகமாக தனது தந்தையை கேட்பதை விடுத்து விட்டு அவர்களை விசாரிக்க ஆரம்பித்தாள். சிறு குழந்தையாக புஸ் புஸ் என்று பூனைக்குட்டி போன்று இருந்த தாரவை திருவிற்கு மிகவும் பிடித்து விட்டது. இது சிறு வயதில் ஏற்ப்படும் ஒரு விதமான இனக்கவர்ச்சி தான்.(ஆனால் இதனால் வரும் விளைவு….கதையின் நடப்பில் காண்போம்….)அதுவும் செல்வ செழிப்புடன் குளிர் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட காஷ்மீர் ஆப்பிளை போன்று இருப்பவளை கண்டால் யாருக்கு தான் பிடிக்காது.
பிரபா சிறிது பெரிய பெண்ணாக இருக்கவும் தாராவை மடியில் ஏற்ற தன் சித்தியிடம் அனுமதி வாங்க, துளசியும் படியில் இருந்து கையை ஊன்றி கொண்டு உணவுடன் எழுந்தவர் அவளை பிரபாவிடம் நீட்ட முதலில் மறுத்த தாரா பிரபாவின் நெற்றியில் அழகுக்காக வெட்டப்பட்டு இருந்த முடியை பார்த்து சென்று விட்டாள். ஏனெனில் அவளின் அன்னையின் நெற்றியிலும் இப்படி தான் அரைகுறையாக சீரத்திருப்பட்ட முடி இருக்கும். அவளை கண்டதும் தாராவிற்கு தன் தாயின் நினைவு வரவே பிரபாவிடம் தயக்கம் இன்றி சென்று விட்டாள். இதுவே சாக்கு என்று பிரபாவிடம் இருக்கும் போதே துளசி வேக வேகமாக தாராவை ஏமாற்றி உணவை ஊட்டி கொண்டு இருக்க, குழந்தைகளின் சப்தம் வந்து நீண்ட நேரமான பின்னரும் இன்னும் வீட்டிற்குள் வராமல் இருக்கவே தன் பேரப்பிள்ளைகளை கானும் ஆவலில் மல்லிகா எழுந்து வெளியே வந்தவர்,”ஏய் துளசி”என்று ஒரு அதட்டல் தான்.தாரா இதுவரை இப்படி பட்ட சப்தங்களை கேட்டு பழகாததால் பயந்து வீறிட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
ஆனால் அவளின் அழுகையை சிறிதும் பொருட்ப்படுத்தாமல் பிரபாவின் மடியில் இருந்த தாராவை இழுத்து கீழே விட்டவர், “புள்ளைங்களே இப்ப தான் ஸ்கூல்க்கு போய்ட்டு கலச்சு போய் வந்துருக்காங்க. கொஞ்சம் கூட அறிவில்லாம வந்த புள்ளைங்கள கவனிக்கிறத விட்டுட்டு இந்த வெறும் பய மகளுக்கு ஊட்டிட்டு நிக்குறா”என்று அதட்டியவர் அத்தோடு நில்லாமல் குழந்தைகள் அனைவரையும் உள்ளே அனுப்பி வைத்தவர் துளசியிடமிருந்து தட்டை வலுக்கட்டாயமாக பெற்று,”போ போய் புள்ளைங்கள கவனி”என்று அவர்களை விரட்டவே,”அத்த அவ எழுந்ததிலிருந்து சாப்பிடவே இல்ல அத்த. ரித்தேஷூக்கும், நித்தினுக்கும் டிரஸ் எடுத்து வச்சுட்டு தான் வந்துருக்கேன். அவங்க டிரஸ் மாத்துறதுக்குள்ள நான் தாராவுக்கு ஊட்டி விட்டுடுறேன்”என்று துளசி கெஞ்சினார்.
“என்ன வாய் நீளுது. நா ஒரு சொல் சொன்னா என் பசங்களே என்ன எதிர்த்து கேள்வி கேட்க மாட்டானுங்க. புதுசா இருக்கே”என்று துளசியும் ஒரு மார்க்கமாக பார்க்க, தென்றல் மற்ற குழந்தைகள் அனைவரையும் கண் காட்ட அனைவரும் உள்ளே நுழைந்து விட்டனர்.
“எதுவும் பேசாம மரியாதையா உள்ள போ. இவள நா பாத்துக்குறேன்”என்று கூறவும் இதற்கு மேல் இவரிடம் தர்க்கம் செய்தால் பழையதை அதாவது அவர்களின் காதல் திருமணத்தை தவறாக விமர்சிக்க தொடங்கி விடுவார் என்று பயந்த துளசி கீழே விழுந்து அமர்ந்து அழுது கொண்டு இருப்பவளை கவலையாக பார்த்து கொண்டே உள்ளே சென்று விட்டார்.அவர் சென்றதும் ஒற்றை கையால் தட்டை பற்றியிருந்தவர் மற்றொரு கையால் அவளை தூக்கி நிறுத்தி வாசலில் அமர வைத்தவர், “ஏய் புள்ள அழறத நிறுத்து. இல்லன்னா தப்பக்குச்சில அடி விழும்”என்று கூறியவராக அங்கே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குச்சியை எடுக்க, கோலுக்கு பயப்படாத குழந்தை உண்டா?….ஆனால் தாரா தான் குச்சியை இதுவரை கண்டதே இல்லையே.
எனவே விதி விலக்காக அந்த குச்சியை தட்டி விட்டவள் அப்பா என்று மீண்டும் அழ ஆரம்பித்து விடவே, உடையை மாற்றாமல் வெளியே வந்தான் திரு.”என்ன பாட்டிமா பண்ணீங்க? எதுக்கு இப்படி இவ அழுதுட்டே இருக்கா?”என்றவன் தன் கால் சட்டையில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
இல்லை இல்லை பிரித்து வாயில் திணித்தவன் அவளின் கைகளை பற்றியவனாக,”பாவம் பாட்டிமா குட்டி பொண்ணு. திட்டாதீங்க”என்று வசனத்தை கூற, மல்லிகா தன் செல்ல பேராண்டி முன் வில்லியாக விரும்பாமல், “இல்ல திரு அவ சாப்பிட மாட்டிங்குறா”என்றதும் அவளை இழுத்து கொண்டு உள்ளே சென்று விட்டான்.அவளை தன் பேரன் அழைத்து செல்வதை கண்டவர் சரி சிறு குழந்தைகள் அதுவும் இவளுக்காக நம் வீட்டு குழந்தைகளை திட்டக்கூடாது இவளுக்கு நாளை முதல் நம் பாடத்தை நடத்தி கொள்ளலாம் என்று நினைத்தவராக வெளியே அமர்ந்து விட, உள்ளே நுழைந்த திரு நேராக அவளை துளசியின் அறையில் விட்டு விட்டு அவன் கூறிய வசனங்களுக்கும், அவளை அழைத்து வந்ததிற்கும் துளசியிடம் இருந்து ஒரு இனிப்பு கட்டியை பெற்றவன் அவளின் புசு புசு கன்னத்தை கிள்ளி மேலும் அழவைத்து விட்டு சென்று விட்டான்.
லூசு என்று அவன் சென்றதும் கூறிய ரித்தேஷ், “ஏம்மா நா கூப்டு வந்துருப்பேன்ல. எதுக்கு மா அவன கூப்டு வரச்சொன்னீங்க. நா போய் கூப்டு வந்துருப்பேன்ல. போங்க இப்ப எனக்கு ஃபை ஸ்டார் வேணும்”என்று அழவே…. அவன் கவலை அவனுக்கு…..”அவன தான் உன் பாட்டி திட்டவே மாட்டாங்க.
அதுக்காக தான் அவன கூப்டு வரச்சொன்னேன்.நீ போனா உன்ன மட்டும் இல்ல என்னையும் சேர்த்து உன் பாட்டி திட்டும்”என்று கூறியவர்,”அப்பா வரும் போது உங்களுக்கு வாங்கிட்டு வரசொல்றேன். இருந்த ரெண்டு சாக்லேட்டும் முடிஞ்சருச்சு”என்று அழும் தன் மகனை ஒரு வழியாக சமாதானப்படுத்தியவர் தாராவை சமாதானப்படுத்தும் முயற்சி இறங்கினார்.தன் தாய் எவ்வளவு சமாதானம் கூறியும் அழுது கொண்டே இருக்கும் தாராவை கண்ட நித்தின் சற்று எரிச்சலுடன்,”இவளுக்கு என்னதாம்மா பிரச்சனை. ஏம்மா அழுதட்டே இருக்கா?”என்று கேட்டான்.”அவ அவளோட அப்பாவ தேடி அழற நித்தின்”என்றார் துளசி.
“அப்ப அவ அப்பா கிட்ட போய் விட வேண்டியது தானே. அழாம இருப்பால”என்று சிறு குழந்தையாக மீண்டும் கேட்டான்.அதற்கு துளசியோ, சிறிது சத்தமின்றி அவர்களுக்கு மட்டும் கேட்கும் படியாக, “அவ அம்மாவும் அப்பாவும் சாமி கிட்ட போய்ட்டாங்க தம்பி”என்று கூறிடவே, இருவரும் ஒரு சேர அவளை கவலையுடன் நோக்கினர். ஏனெனில் தனது அத்தையின் கணவர் சாமியிடம் சென்றதால் ஏற்ப்பட்ட மனக்கவலையை கண் கூடாக சமீபத்தில் தான் அச்சிறுவர்கள் சந்தித்தனர். எனவே அந்த வார்த்தைக்கு அவர்களுக்கு சிறிது அல்ல நிறையவே அர்த்தம் புரிந்திருந்ததால் தன் தாயுடன் சேர்ந்து அவர்களும் சமாதான பணியில் இறங்க, தங்களது பொம்மைகளை எடுத்து கொடுக்க துவங்கினர்.அப்போது உள்ளே சுண்டல் தட்டுடன் வந்த ரம்யா, “என்ன இங்க சத்தம்?”என்று நுழைந்தார்.
உள்ளே நுழைந்தவர் பள்ளி முடித்து வந்த குழந்தைகளிடம் தட்டை நீட்டி விட்டு,”இவ இன்னுமா துளசி அழுதுட்டே இருக்கா… அச்சச்சோ பொம்பள பிள்ளைக்கு இவ்ளோ வீம்பு ஆகக்கூடாதே. அதுவும் மல்லிகா மேடம் அவ்வளவுதான் துலச்சுப்புடுவாங்களே”என்று தன் சொந்த அத்தையும், மாமியாரும் ஆகிய மல்லிகாவை பற்றி பெருமையாக கூற,துளசி, “அதானக்கா பயமா இருக்கு. அத்த இவள பார்த்தாலே எரிஞ்சு விழுறாங்க.
அவர் என்னவோ இனிமே இவ நமக்கு பிறக்காத குழந்தை அப்படிங்கிறத மாதிரி சொல்லிட்டாரு. எல்லாத்துக்கும் மேல இவ அம்மா அப்பாவ தேடுறது…முடியலக்கா……சுத்தமா முடியல….”என்று அவள் தன் உடலின் இயலாமையினால் நொந்து கொள்ள,ரம்யா, “இது உன் புருஷனுக்கு தேவ இல்லாத வேல. போனோம்மா உடம்பு முடியாத ஆள பாத்தோமா வந்தோமான்னு இல்லாம அத்தைய பத்தி தெரிஞ்சும் அவன் கூப்டு வந்தது தப்பு. அதுவும் அத்த சொல்ற மாதிரி இவ பொம்பள பிள்ள வேற….இப்ப இருக்குற காலத்துல பெத்த பிள்ளைங்களுக்கே செய்ய முடியாம, சேக்க முடியாம நாக்கு தள்ளுது.
இதுல அடுத்தவன் புள்ளைய கூப்டு வந்து….என்னவோ போங்க”என்று அவள் இன்னும் அழுவதை கண்டவர், “சரியான பேட் கேர்ளா இருக்கா. இன்னும் அழறா பாரு ரித்தேஷ்”என்று கூற, தாரா விசுக்கென்று திரும்பி முறைத்தாள். ஏனெனில் அவளுக்கு பேட் கேர்ள் என்ற வார்த்தை சுத்தமாக பிடிக்காது. அவளின் மழலையர் பள்ளி ஆசிரியர் ஒருவர் பேட் கேர்ள் என்று தன்னை அடித்த சிறுவனை இவள் அடித்ததற்காக அவளின் தந்தையிடம் புகார் அளிக்க, அன்று முழுவதும் அவளுடைய தந்தை அவளிடம் பேச வில்லை.
அதனால் அந்த ஆசிரியரையும் அவளுக்கு பிடிக்க வில்லை. அந்த வார்த்தையையும் அவளுக்கு பிடிக்க வில்லை.அதனால் அப்போது தொடங்கியது ரம்யாவின் மீதான வெறுப்பு.
வ ருவான் ❣️
மறக்காம விமர்சனங்களை அனுப்புங்க நண்பர்களே…
Nice epi