மதியழகனை தன் மடியில் ஏந்தி வான்மகள் தனதழகை பூவுலகிற்கு காட்டி கொண்டிருக்க, நட்சத்திரங்கள் அதற்கு துணையாக தன் அணிவகுப்பால் அவளை மேலும் அழகேற்ற தொடங்கியிருந்தது.
உடலை துளைத்த ஊதக்காற்றின் மகிமையால் பிச்சியின் வாசம் அந்த பால்கனியை மேலும் இரம்மியமாக்கி வைத்திருந்தது.ஆனால் இதை எதையும் அனுபவிக்க முடியாமல் தனிமையையும் கண்ணீரையும் துணைக்கு வைத்திருந்தவள் நேற்று இந்நேரம் வரை தன்னுடன் இருந்தவனின் இனிமையான நினவுகளில் உலன்று கொண்டிருந்தாள்.
இனி அந்த இனிமையான நாட்கள் அனைத்தும் மீண்டும் கிடைக்குமா என்றால்….அது கேள்வி குறியான பட்சத்தில் நினைவாக மட்டுமே தான் இருக்குமே தவிர அந்நாட்கள் தனக்கு மீண்டும் கிடைக்காது என்று நினைத்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.பொருட்களை தராசில் ஏற்ற ஏற்ற கணம் கூடி கொண்டே போவது போலஅவனின் நினைவு பெண்ணவளின் வலியை குறைக்கும் கண்ணீரை மிகைத்து வலியை அதிகமாக ஏற்ப்படுத்தி கொண்டிருந்தது.
ஆனால் இவை அனைத்திற்கும் காரணம் தான் தான் என்று அவளுக்கு நினைவு வரவே ஒரு வார்த்தை அவனிடம் கூறியிருந்தால் ஒரு வேளை நம்மை விட்டு விலகி சென்று இருக்க மாட்டானோ என்று ஒரு எண்ணம் கூறினாலும், இல்லை நீ சொல்லியிருந்தாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி உன் நிலையில் உள்ளவளை அவனால் எப்படி ஏற்று கொள்ள முடியும் என்று மற்றொரு எண்ணம் கூற, இரண்டிற்கும் இடையில் சிக்கியவள் மீடேற வலி இல்லாமல் தன் தந்தையின் கையேடுகளை எடுத்து படிக்க துவங்கினாள்.
இருக்கும் போது கற்று கொடுக்காமல் இறந்த பிறகு கற்றுக் கொடுக்கும் ஆசான் தான் தந்தை.
பொறுமையில்லாதவனால் கூட ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும்.
ஆனால் பொறுப்புள்ள ஒருவனால் மட்டுமே ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும் என்று கருத்திற்கு உதாரணமாக இருந்தவர் என்று அவளுக்கு விவரம் தெரிந்த பின்னரே தெரிந்து கொண்டாள்.
ஏனெனில் மூன்று வயதில் தாயையும் நான்கு வயதில் தந்தையையும் இழந்தவளுக்கு உன் தந்தை அப்படி உன் தந்தை இப்படி என்று தந்தையின் குணநலன்களை பிறரின் வாயிலாக தான் கேட்டறிந்தாள்.தந்தையின் முகத்தை கண்ட நியாபகம் இருக்கிறதா என்று கேட்டால் மங்கலாக கூட நினைவில்லாமல் புகைப்படத்திலே கண்ட நியாபகம் மட்டும் தான் இப்போது இருக்கிறது.அப்படி இருக்கையில் அவரை பற்றி அவள் விவரம் அறிந்த பிறகு தானே தெரிந்த கொள்ள முடியும் என்று நினைத்து கொண்டு இருந்தவளின் உள்ளத்தில் விவரம் இந்த வார்த்தையை அறியாமல் சிறு வயதிலேயே தான் இருந்திருக்கலாமே என்று நினைத்தாள்.
ஆனால் அடுத்த நொடியே சிறு வயதில் மட்டும் என்ன இன்பமாகவா வாழ்ந்தேன். உணவிற்கும், உடைக்கும், படிப்பிற்கும் இன்னும் சொல்லப்போனால் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கும் கூட வழியில்லாமல்வேலைக்காரியாக வளர்க்கப்பட்டு வந்தவளுக்கு ஏது சிறு வயது இன்பம்…
இருந்தது….
அவனை பார்த்த நாட்களுக்கு பின்…..என்று அவனை மறக்க நினைத்து தந்தையின் கையேட்டை எடுத்தவள் மீண்டும் அவனின் நினைவுகளிலேயே மூழ்க ஆரம்பித்தாள் நம் நாயகி சித்தாரா……
வானவில்லை கண்களுக்கு மேல் பொருத்தியதை போன்று இருக்கும் புருவங்களுக்கு நடுவில் பூனைக்குட்டி போன்ற துருதுரு கண்களையும், அவள் உயிரோடு தான் இருக்கிறாள் என்பதற்கு சான்றாக மூச்சுக்காற்றை வெளியேற்றும் சிறிய நாசியையும், சிவப்பும் அல்லாத பழுப்பும் அல்லாத பன்னீர் ரோஜாவின் இதழ்கள் என இவை அனைத்தையும் சற்று கூடுதலாக எடுத்து காட்டும் சந்தன நிற மேனியாள் தன் பக்கத்து தளத்தில் வீட்டின் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி கொண்ருந்த பாடலை கேட்டவள்,
இதயம் உன்னை தேடுதே உயிரும் உன்னை தேடுதே உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே நினைவும் உன்னை தேடுதே நிழலும் உன்னை தேடுதே உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼மீண்டும் அவனின் நினைவுகளில் மூழ்கி விட்டாள்.
மறக்க நினைத்தாலும் மறக்க கூடிய உறவா அவன்….தேடித்தேடி வருவான். விரட்டியடித்தாலும் செல்ல மாட்டான்.
கெஞ்சி கும்பிட்டாலும் இறங்கி போக மாட்டான்.ஆனால் இனி நானே அழைத்தாலும் திரும்பி வராத தூரத்திற்கு அல்லவா சென்று விட்டான் என்று நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தவள் திடீரென மூர்ச்சை அடைந்து தான் அமர்ந்திருந்த ஷோஃபாவில் இருந்து பொத்தென்று தரையில் விழுந்தாள்.
பாவம் காலையில் இருந்து உணவருந்தாமல் அவனின் நினைவுகளிலேயே அழுது கொண்டு மயங்கி விழுந்து கிடப்பவளை தண்ணீர் தெளித்து எழுப்பி விட ஆளில்லாமல் அன்று போல் இன்றும் அனாதையாகி விட்டாள்.
நான்கு வயதில் வீட்டின் முதலாளி அம்மாவின் இரண்டாம் பிரசவத்தன்று இப்படித்தான் சாப்பிட்டாயா என்று கேட்க ஆளில்லாமல் எடுத்து கொடுக்க மனமில்லாத மனிதர்களுடன் இருந்தவள் காய வைக்கப்பட்ட மல்லி மிளகாயின் பாத்திரங்களை எடுக்க சென்ற போது பசியின் காரணமாக மயங்கி விழுந்தவளை ஒரு நாள் முழுவதும் சென்ற பிறகே தேடினார்கள்.ஆனால் அப்போதாவது தன் தந்தையின் நண்பர் தேடினார் ஆனால் இன்று……
வருவான் ❣️
Nice start