Skip to content
Home » இரசவாதி வித்தகன்-3

இரசவாதி வித்தகன்-3

இரசவாதி வித்தகன்-3

    சட்டென வார்த்தை விட்டப்பின்னே வித்தகன் இருப்பதை அறிந்து அமைதியானார் சேதுபதி.
 
   மஞ்சரியோ, “மயூரன் அத்தான் எங்க அத்தைக்காக போகலை மாமா.  இவருக்காக நெட் வசதி வேண்டும்னு போயிருக்கார். மத்தபடி இங்க ஒருத்தருக்காக ஒருத்தர் அன்பை உதாசீனப்படுத்தற மாதிரி, எங்க மயூரன் அத்தான் பண்ண மாட்டார்.” என்று வெடுக்கென கூறினாள். வார்த்தைக்கு வார்த்தை அத்தான் என்றது வித்தகனுக்கு புதிதாய் தெரிந்தது.

    வித்தகனோ கண்ணில் அணிந்திருத்த கூலிங்கிளாஸை கழற்றி மெதுவாய் அவளை ஏறயிறங்க பார்த்தான்.
   
   வேண்டுமென்றே தன்னை சாடுவது அவள் பேச்சில் தெரிய, பெண் என்பதாலும், அதுவும் முதல் முறை அத்தை மகளென்று அவளிடம் விளையாட விட்டுபிடித்தான்.

     சேதுபதியோ “வீடு கழுவி விட்டு சுத்தம் பண்ணினியா டா.” என்றதும் மஞ்சரியோ, “ஆமா மாமா. நீங்க சொந்தவூர், சொந்த நாடு வேண்டாம்னு போயிட்டிங்க. எங்கப்பா அம்மா இருக்கற ஒரு வீட்டை பராமரிக்கறதே கஷ்டம். இந்த வீடு மூன்று அறை நான்கறை இருக்கு. யாராவது ராஜா கணக்கா வர்றவங்களுக்கு கட்டி வச்சியிருக்கலாம். ஆனா யார் வந்து தங்கறாங்க? அதான் பூட்டி வச்சிட்டோம்.

    இப்ப ஏதோ லண்டன்ல இருந்து ஒரு ராஜாவும், மந்திரியும் வர்றாங்கனு மயூரன் அத்தான் பார்த்து பார்த்து சுத்தம் பண்ண சொல்லுச்சு.” என்று நக்கலாக வித்தகனை ராஜாவாக்கி, மந்திரியாக சேதுபதியையும் கூறி இருவரையும் சேர்த்தே குத்தி காட்டி பேசினாள்.

   “மஞ்சு… மயூரன் பார்த்து பார்த்து செய்து வச்சிட்டு பயந்துகிடக்கான். நீ வேற எடுக்குமடக்கா பேசற, போ… போய் காபியோ டீயோ போடு. மன்னிசிடு வித்தகன் அவ அப்படிதான். மாமா என்ன சாப்பிடறிங்க?” என்று ராஜாராமன் கேட்டான்.

     “ராமன்… கொஞ்சம் போல இஞ்சிடீ” என்று கூறவும் மஞ்சரி இஞ்சி இடிப்பதை வித்தகன் கவனித்தான்.
 
    ‘பார்டா… இங்க வாய்ல வர்றதுக்குள்ள அங்க செயல்ல காட்டறா.’ என்று வியந்தான்.

    மயூரன் வேர்க்க விறுவிறுக்க வந்தவன், “வித்தகன்… எப்படி டா இருந்தது ஜெர்னரி” என்று தம்பியை கண்டு ஆனந்தமாய் வந்தான்.

   “ரொம்ப மோசமான ஜர்னி. அதுவும் பிளைட்ல இருந்து இங்க கார்ல வர்றதுக்குள்ள எரிச்சலா போயிடுச்சு.

     ஏன் வேறயிடமே கிடைக்கலையா? நீ சென்னையில தானே ஓர்க் பண்ணற? அங்கயே கல்யாணம் பண்ண வேண்டியது தானே. இங்க எதுக்கு வந்த?” என்று எரிந்து விழவும், மயூரனோ தம்பியை சாந்தப்படுத்த வாய் திறக்கவும், “சே ஏன் இப்படி இருக்கிங்க. பார்மாலிடிஸா ஒருத்தங்க ஜர்னி எப்படின்னு கேட்டாலும், நல்லாவேயில்லைனாலும் பரவாயில்லை. உன் கல்யாணத்துக்கு வந்தேன். நம்ம வீட்டுக்கு பதினாறு வருஷம் கழித்து வர்றேன். நம்ம ஊரு நம்ம நாடுனு பெருமை பேசுவாங்க.

   நீங்க என்ன… எரிந்து விழறிங்க. கொஞ்சமாவது அண்ணன் கல்யாணத்துக்கு வந்தோம்னு நினைப்பிருக்கா?

    துரைக்கு வெத்தலை பாக்கு வச்சி கூப்பிடணுமோ, நீ என்ன அத்தான் கெஞ்சிட்டு இருக்க.” என்று மஞ்சரி  கூறவும் மயூரன் பயந்து போனான்.

  மயூரன் இயற்கையாகவே பொறுமைசாலி, எதிர்த்து பேசாமல் முடிந்தளவு சமாளிக்க முனையும் பண்பாளன். இப்படி மஞ்சரி பேசினால் எங்கே வித்தகன் சென்றிடுவானோ என்று சங்கடமானான். 
   
    “நீ வேற சும்மாயிரு மா.” என்று மஞ்சரியை அதட்டினான்.

  இந்நேரம் சினத்தை காட்டி கிளம்ப வேண்டிய வித்தகனோ, ஆறமர, அவளை ஆராய ஆரம்பித்தான்.

    ‘ஏன் இவ நம்மளையே டார்க்கெட் பண்ணறா?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

    ‘அத்தை பொண்ணு தானே… இருடி அடுத்து நானும் அதகளம் பண்ணறேன்’ என்று அமைதியாக மாறினான்.

  சேதுபதியோ, “பார்வதி மக தானே… என் தங்கை இந்தளவு வாயாடி இல்லை… என்ன மச்சானோட இரத்தம் உனக்குள்ள இருந்து சூடா பேசுதோ?” என்று கேட்டார்.

   “சேசே… இல்லை மாமா.. உங்க அண்ணி… அதாவது இதோ இங்க நிற்கறாரே அவங்க அம்மா அமலா எனக்கு அத்தையில்லையா.. அத்தை புத்தியும் பேச்சும் தனா வருது.” என்று கூறவும் வித்தகனுக்கு கோபமேற, அவ்விடம் விட்டு உடை மாற்ற சென்றான்.

    ஒரு வழியாய் நலன் விசாரிப்பை முடித்து, மயூரன் தம்பியிடம் வீடு ஓகே வாடா?” என்றான்.

   “ஓகே ஓகே.” என்றவன் டீயை பருகிமுடித்தான்.

  சேதுபதியும் தன் பிறந்து வளர்ந்த இடமென்பதால் ஒவ்வொரு இடமாய் ரசித்து பார்க்க ராமன் மஞ்சரி வித்தகன், மயூரன் என்று இளைஞர் வட்டம் தனித்து வந்தனர்.

   மயூரன் தான் வித்தகனிடம் குளிச்சிட்டு வா, பார்வதி அத்தை புட்டு செய்து இருக்காங்க” என்றதும் “அவள் எங்க?” என்று கேட்டார் சேதுபதி.

     “இன்னிக்கு தானே அவங்களும் வர்றாங்க. அதனால அத்தையை தோட்டத்து வீட்டை சுத்தம் பண்ண மாமா அனுப்பியிருப்பார்.” என்றதும் சேதுபதி நிசப்தம் கொண்டார்.

  மனதில் தங்கை இன்னமும் மச்சானின் வார்த்தைக்கு அடிமையாகவே காலம் தள்ளுகின்றாளே என்று சோகமானார்.

   அண்ணன் மகனையோ, உடன்பிறப்பையோ விடுத்து தங்கையை மட்டும் நாடுகின்றாரே என்ற கவலை வாட்டவும், “ராமன் நீ எப்படி இங்க வந்த? ஐயப்பன் விட்டுட்டானே?” என்றதும், “அடப்போங்க மாமா.. அப்பாவுக்கு யார் மேலையும் கோபமில்லை. நான் எப்டி என் தங்கச்சி மேல பாசம் வைக்கிறேனோ அப்படி தான் அவருக்கும்.” என்று மஞ்சரியை பார்த்து பேசினான்.

   வித்தகனோ குளித்து முடித்து ஷார்ட்ஸ் டீஷர்ட்யென தலையை துவட்டிக்கொண்டு வந்தவன், பாசமலர்களை கண்டு நெற்றி சுருக்கி தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டான்.
  
     ஒவ்வொரு ஜன்னலருகேயும் காற்று இதமாய் வீசியது. இயற்கை அழகை பருகியவனுக்கு மஞ்சரி தட்டில் புட்டு கொண்டு வந்து சத்தமாய் மேஜையில் வைக்கவும் திரும்பினான்.

    “நான் ஒன்னும் டாக்(dog) இல்லை. அப்படி வச்சிட்டு போற” என்று அதட்டவும், “டேய்… சும்மா சும்மா சண்டை போடணும்னு கத்தாதடா. அவளே வேலை பார்த்து முடிச்சி டயர்ட்ல இருப்பா.” என்று மயூரன் இடையில் வந்தான்.

   “மஞ்சு… நீயும் அவனிடம் முகம் தூக்காத” என்று அவளிடமும் பணிவாய் பேச, இரண்டும் இருதுருவமாய் திரும்பி கொண்டனர்.

     வித்தகன் போனால் போகுதென்று சாப்பிட ஆரம்பித்தான் 
   மஞ்சரியோ “ராமண்ணா நீ வா நம்ம வீட்டுக்கு போவோம். இங்க கெஸ்டுங்க தூங்கட்டும். வர்றேன் மாமா” என்று அண்ணனை இழுத்து சென்றாள்.

   “என்னடா கோபமா..” என்று சேதுபதி வருத்தமாய் நிறுத்தி கேட்க, “வேலையிருக்கு மாமா. மயூரன் அத்தான் இங்க தான் குரூவாயூரப்பன் கோவில்ல கல்யாணம் பண்ணறதா சொன்னதும், அம்மா அப்பா சட்டுனு கூப்பிட்டாங்க. எங்க வேலை விட்டுட்டு அப்படியே வந்தது.” என்று கூறி சென்றாள்.

   வித்தகனோ சாப்பிட்டபடி அண்ணனும் தங்கையும் செல்வதை வேடிக்கை பார்த்தான்.

    ஐயப்பன் பார்வதி இருவரை தவிர மற்றவர்கள் படிப்பு எல்லாம் சென்னையை ஓட்டியே. அதனால் மலையாளம் கலந்த தமிழில் கொஞ்சி பேசும் நிலை யாருக்கும் அமையவில்லை. ஐயப்பனும் யாரிடமும் பழகுபவர் கிடையாது.

    பார்வதி மட்டும் இங்கிருக்கும் சிலரோட பழகுவார். அதுவும். ஐயப்பன் இல்லாத சமயம் மட்டும் பேசுவார்.

   சேதுபதியிடம் கூட திருட்டு தனமாய் பேசுவார். மயூரனின் விரும்பிய பெண் நீண்ட காலமாய் அவனை தவிர்த்து வந்தாள்.
தற்போது தான் திருமணத்திற்கு சரியென்றாள். அதனால் தான் திடுதிப்பென மயூரன் வித்தகனுக்கு போன் போட ஆரம்பித்தது. போனை தவிர்க்கவும் மெயில் அனுப்பினான்.

    வித்தகனுக்கு இங்கு வந்ததும் ‘அத்தை மகளையும் மகனையும் சந்தித்தாயிற்று. ஆனால் எங்களை பெற்ற புண்ணியவதி வரவில்லை. பதினாறு வருஷம் கழிச்சி வந்திருக்கேன். ஆரத்தி தட்டு எடுத்து வரவேற்க வேண்டாம். ஒரு எதிர்பார்ப்போட கூட வரலையே’ என்று  சிந்தித்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “இரசவாதி வித்தகன்-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *