Skip to content
Home » இரசவாதி வித்தகன்-5

இரசவாதி வித்தகன்-5

இரசவாதி வித்தகன்-5

    மஞ்சரி சொடக்கிடவும் திரும்பியவன் முன் வந்தாள்.

     “ஊர்ல இருந்து வந்திங்களே… ஆசையா அம்மாவை பார்க்கணும்னு உங்களுக்குத் தோணுச்சா?
   சரி அம்மா வேண்டாம். ஏதோ ஜாதகம் பார்த்து தள்ளி வச்சதா உங்க மனசுல பதிஞ்சுப்போச்சு..

    உங்கண்ணா கல்யாணத்துக்கு வந்திங்களே. அவர் நலத்தை விசாரிச்சிங்களா. வந்ததும் தாம்தூம்னு குதிச்சிங்க.

    அப்பவே துளி பாசம் கண்ணுல இல்லையே. ஏதோ உங்க சித்தப்பாவுக்காக வந்த லுக்கை தானே கொடுத்திங்க.” என்றதும் மயூரன் இடைப்புகுந்து, “மஞ்சரி.. ப்ளிஸ்… அவன் திரும்ப ஊருக்கே போயிடப் போறான். எதுவும் ஆர்கியூமெண்ட் பண்ணாத” என்று அடக்கினான்.

    “இங்க பாருங்க அத்தான். நீங்க சாந்தமானவரு. அதுக்காக என்னைக் கேள்விக் கேட்க வேண்டாம்னு சொல்லாதிங்க.
    நின்று நிதானமா பேசி தீர்த்துப் போகத் தெரியாதவரை, இழுத்துப் பிடிச்சி கட்டி நீங்க ஒன்னும் உங்க கல்யாணத்துக்கு ஆள் சேர்க்க வேண்டாம்.

    என்னவோ மிரட்டறாரு.. எங்க போறதா இருந்தா போகச்சொல்லுங்க. பாஸ்போர்ட், விசா இல்லாம எவன் பிளைன்ல ஏத்தறான்னு நானும் பார்க்கறேன்.” என்று கையைக் கட்டி நின்றாள்.
 
       சேதுபதியோ “மஞ்சும்மா.” என்றதும் “நீங்க சும்மாயிருங்க மாமா.
    நீங்க இவரிடம் ஒன்னும் சொல்லாம, தடிமாடு மாதிரி வளர்த்துட்டு, அவரும் இதான் காரணம்னு பிடிச்சிட்டு தொங்கறார்.” என்று புசுபுசுவெனக் கோபமாய்ப் பேசினாள்.

    வித்தகனோ ‘இவளை மறந்து போகப் பார்த்தாயடா?’ என்று மனம் சிந்தித்தது. ஆனாலும் வீம்பு போவதாய் இல்லை.

    “நானும் பார்த்துட்டு இருக்கேன். ஓவரா பேசற. உரிமையா தடிமாடுனு திட்டற. யாரு கொடுத்தா இந்த உரிமை? இந்த மயூரன் அத்தான் மட்டும் தான் உனக்கு அத்தான் முறை. நான் இல்லை. எனக்கு எந்தச் சொந்தப்பந்தமும் வேண்டாம்.” என்று வேகமாக நடந்தான்.
  
   “சித்தப்பா வாங்க போகலாம்” என்று அழைத்தான்.

    “மாமா போகாதிங்க. என் மேல பாசம் இருந்தா இங்கயே இருங்க.  வழிதெரிந்தா அவரே போகட்டும்” என்று மஞ்சரி தீர்க்கமாய்ச் சேதுபதி கையைப் பிடித்து அவளருகே அமர்த்திக் கொண்டாள்.

      அமலாவோ மெதுவாய் முன் வந்து, “மஞ்சரி எதிர்த்து பேசாதே. அவனுக்கு எதுவும் தெரியாது தானே. அவன் கோபப்படுறதுல நியாயமிருக்கே” என்று கூறவும், மஞ்சரி அமைதியானாள்.

    “இங்க பாரு அண்ணா. உன் மேல இருக்கற கொஞ்சுண்டு பாசத்துல இருக்கேன். கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பறேன். நான் என்ன இங்கயேயா இருக்கப் போறேன்” என்று கையைக் கட்டி கோபத்தைத் தணித்தான் வித்தகன்.

மயூரனோ “இன்னிக்கே எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். வந்ததும் வராததுமா அவனைக் கஷ்டப்படுத்தறது எனக்குப் பிடிக்கலை. ராஜாராம் நீ என் ரூமுக்கு இவனைக் கூட்டிட்டு போ. மதியம் லஞ்ச் அங்க தான்.
 
    யாரு வரமாட்டேன் பேசமாட்டேனு முரண்டு பிடிக்காதிங்க. எங்கப்பா இருந்தா நான் யாரிடமும் கெஞ்ச அவசியமில்லை.” என்றதும் வீட்டுக்குள் வர மறுக்க அமலா வாயெடுக்கவும் மயூரன் வார்த்தையில் அமைதியானார்.

     வித்தகனுக்கும் ‘இந்த வாயாடி அதிகம் பேசறா. நானும் அங்க போய் புலம்பற ஆளில்லை. இங்கயே இருந்து மதியம் சாப்பிட்டு இவ வாயை அடைச்சிட்டு போறேன்’ என்று சட்டமாய் ராஜாராம் கூடவே சென்றான்.

   மயூரன் அறையில் அழைத்து வந்தான்.

    “அண்ணா இங்க தான் ஸ்டே பண்ணுவானா?” என்று கேட்டான் வித்தகன்.
  மனசாட்சியோ ‘அண்ணா’ என்ற வார்த்தை கேட்டு நகைத்தது.

     “நாங்களே இங்க தங்கறது இல்லை வித்தகன். மயூரன் சின்ன வயசுல இங்க தான் இருந்தான். பிறகு காலேஜ் என்றதும் ஹாஸ்டல்ல போயிட்டார். வேலை முழுக்க அங்க தான். நான் கோவையில வேலை பார்க்கறான். சனி ஞாயிறு ஆனா வந்துடுவேன். மயூரன் முழுக்கச் சென்னையில இருந்தார். இங்க அம்மா அப்பா மட்டும் தான்.

    மயூரன் லவ் பண்ணற பொண்ணு உங்க விருப்பபடி கல்யாணம் வச்சிகோங்கனு சொன்னது. குருவாயூரப்பன் கோவில்ல கல்யாணம் என்றதும் தான் மயூரன் இங்க நம்ம வீட்டை ரெடிபண்ணினான்.

சிம்பிளா குருவாயூரப்பன் சன்னிதில கல்யாணம் பண்ணிட்டுச் சென்னை போறான்.” என்று தகவல் அளித்தான்.

“அதுவும் இல்லாம அத்தையும் இப்ப தானே வந்தாங்க. நீயும் இப்ப தான் வந்த.” என்று கூறவும் மஞ்சரி கொலுசொலி கேட்டதும் ராஜாராம் தங்கையைக் கண்டு முறுவலித்தான்.

மஞ்சரியோ “பாலாடை பாயாசம்… இந்தவூர் ஸ்பெஷலு. பாரின் பார்ட்டிக்காக அம்மா கஷ்டப்பட்டுச் செய்துச்சு.” என்று அண்ணனிடம் கூறிவிட்டு அவனை ஒழுங்குகாட்டி கொட்டிவிட்டு சென்றாள்.

“உன் தங்கைக்கு ஏன் என் மேல கோபம்.” என்று கேட்டான் வித்தகன்.

“அவளுக்கு மயூரன் அத்தான்னா பிடிக்கும். அவர் கல்யாணத்துக்குப் போன் போட்டப்ப நீங்க எடுக்கலை.
மயூரன் அத்தான் போனை கையில வச்சிட்டு உனக்குக் கால் போட்டு, நீ எடுக்கலைன்னதும் ரொம்பப் பீல் பண்ணினார்.

மஞ்சரி அதைப் பார்த்து கோபப்பட்டா. அந்தக் கோபத்தை நீங்க வந்ததும் காட்டறா. அவளுக்கு உள்ள ஒன்னு வச்சி வெளியே ஒன்னு பேச தெரியாது.

மனசுல உறுத்திட்டே இருக்கக் கேட்டுடுவா.” என்று தங்கையின் கோபத்தை எடுத்துரைத்தான்.

‘ஆஹ்ஆஹா… இந்தக் ‘கொலுசொலி’க்கு நான் வர்றதுக்கு முன்னயே என்னைப் பத்தி பேட் ஓபீனியன் வரவழைச்சிட்டேனா’ என்று வித்தகன் கவலைக்கொண்டான்.

‘இங்க வர்றதா இருந்தா அம்மா அண்ணா பத்தி திங்க் பண்ணேன்.. மாமா அத்தையைப் பத்தி கூட லைட்டா… ஆனா மாமாவுக்கு அத்தை பொண்ணு இருந்ததை திங்க் பண்ணலையே டா மேகவித்தகா நீ’ என்று அவனையே திட்டிக்கொண்டான்.

பக்கத்து அறையில் “என்ன அண்ணா சொல்லற.. அப்ப மயூரனுக்கும் மஞ்சரிக்கும் கல்யாணமில்லையா? நான் அவங்களுக்குனு தானே நினைச்சேன். ஏன்னா… ஏன் இப்படி.?

மஞ்சரி தானே என் மருமகனு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவ.” என்று அமலா குரல் கேட்டதும் வித்தகன் வெளியே வராமல் அங்கிருந்தபடி கேட்டான்.

“அய்யோ அத்த அத்தான் ரிப்போர்டர். அவரோட வேலைப் பார்த்தவங்களைக் காதலிச்சிடுச்சு.

நீயும் அப்பாவும் பேசிக்கிட்டதுக்காக இப்பவும் கட்டிக்க முடியுமா.? நாங்க மூன்று பேரும் ஒன்னா வளர்ந்தவங்க அத்த.” என்று கூறவும் அமலாவோ கண்ணீர் வெளியேற்றி நின்றார்.

வித்தகனோ குழப்பமாய் அமர்ந்து வாசலை கண்டு மனமோ யோசனைக்குள் சென்றது. அவனது அகத்தின் அழகு முகத்தில் தெரியவும், “வீட்ல மயூரன் அத்தான் வந்து லவ் பண்ணறேன் கல்யாணம் கட்டி வையுங்கனு சொல்லறவரை மஞ்சரியை தான் அவருக்குக் கல்யாணம் பண்ணணும் கருத்து இருந்தது.

அவர் காதலிக்கறேன்னு நின்றதும் அம்மா அப்பா மனசை கல்லாக்கிட்டு தான் இந்தக் கல்யாணத்தை நடத்தறாங்க.” என்று ராஜாராம் பதில் தந்தான்.

“உன் தங்கை மயூரனை விரும்பினாளா?” என்று அவனுக்கு இங்கு வருமுன் தேவையற்றதென நினைத்ததை, தற்போது தேவையானதாகப் பாவித்திட வைத்ததவளால் கேட்டான்.

“விரும்பினாளா இல்லையானு அவளைத் தான் கேட்கணும்? இந்த வீட்ல கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுலயிருந்து வேலையை இழுத்து போட்டு செய்யறா. அத்தானை மறக்க வேலை செய்யறாளா? இல்லை ஒன்னா வளர்ந்த பாசத்துல செய்யறாளா எனக்குச் சொல்ல தெரியலை.

நீ இங்கயிரு இதோ வந்திடறேன். சாப்பிடற நேரமாகிடுச்சு தோட்டத்துல வாழையிலை பறிச்சிட்டு வந்துடறேன்.” என்று சென்றான் ராஜாராம்.

மேகவித்தகனுக்கோ, இங்கே தனக்கு நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியுள்ளதை உணர்ந்தான்.

*அன்னை இத்தனை நாள் எங்கே சென்றார்?

*அவர் தன்னைக் காணாதது போல மயூரனையும் ஏன் பார்க்கவில்லை?

*அப்பா இறந்தது தன் ராசி தான் காரணம் என்று மாமா கூற, சித்தப்பா ஏன் தன்னை அழைத்துச் சென்றார். அம்மா இருக்கும் போதே எப்படி விட்டார்?

*அம்மாவை ஏன் சித்தப்பா வெறுத்தார்?

“பார்வதி அத்தையும் சித்தப்பாவும் ஏன் இத்தனை நாள் நேர்ல பார்க்காம இருந்தாங்க.

*இதெல்லாம் விட மஞ்சரி அண்ணனுக்குக் கட்டி வைக்கப் பேசி வச்சிருக்காங்கன்னா.. அவ மனசுல என்னயிருக்கு? அவயெங்க இருக்கா? சென்னையா கோவையா?’ என்று சிந்தித்தவனை, சம்மந்தப்பட்ட மகராசியோ இடுப்பில் தாவாணியைச் சொருகிவிட்டு மின்விசிறியில் இருந்த தூசியைத் துடைத்தாள்.

மேகவித்தகன் மனமோ தறிக்கெட்டு போக, தனது உணர்வுக்குப் பெயரை தேடி அதிர்ந்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “இரசவாதி வித்தகன்-5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *