Skip to content
Home » இருளில் ஒளியானவன்-23

இருளில் ஒளியானவன்-23

இருளில் ஒளியானவன் 23

சாரங்கனின் தம்பி இவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று எல்லோரையும் “அவரவர் வீட்டிற்கு செல்லுங்கள். இவர்களுக்கும் ஓய்வு வேண்டும். காலையில் வந்து பாருங்கள்” என்று கிளம்ப சொன்னார்.

ஒரு வழியாக இரவு உணவிற்கு பிறகு இவர்கள் குடும்பம் மட்டும் தனித்து இருந்தது. “ரொம்ப நேரமா இரண்டு பேரும் உட்கார்ந்து கொண்டே இருக்கீங்க. போய் தூங்குங்க” என்று சங்கீதா சென்னதும்,
“சரி மா” என்று சொன்ன விஷ்ணு “வா வைஷு” என்று அவள் கை பற்ற,

“அவளை எங்கே கூப்பிடுற, நீ போய் தூங்கு. அவள் என்னுடன் தூங்குவா” என்றார்.

தாயை முறைத்த விஷ்ணு, “மாம், உங்க கூட படுத்தா, அவளால் நிம்மதியாக தூங்க முடியாது. அதனால் அவள் என் கூடவே படுக்கட்டும்” என்றான்.

“என்னமோ இவ்வளவு நாள், நீதான் தூங்க வைத்தது போல் பேசுற. இனிமேல் சென்னை சென்ற பிறகு நல்ல நாள் பார்த்து தான் உன் கூட வருவா. சும்மா தொல்லை பண்ணாமல் போய் ஓய்வெடு” என்று விஷ்ணுவிடம் சொல்லி விட்டு, “நீ வா வைஷுமா” என்று வைஷ்ணவியின் கை பிடித்து தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார் சங்கீதா.

சங்கீதா அவ்வாறு பேசி சென்றதும், “பாருங்க அத்தை, நான் என்ன இப்பொழுது ஃபர்ஸ்ட் நைட் நடக்க வேண்டும் என்றா சொல்கிறேன். அவள் என்னிடம் இருந்து விலகியே இருக்கிறாள், அவளை கொஞ்சம் கொஞ்சமாக என்னை பிடிக்க வைக்க வேண்டும் என்று தானே இப்படி பேசுகிறேன். இதை கூட இந்த அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க” என்று சோகமாக லட்சுமியிடம் கூறி வருத்தப்பட்டான்.

சங்கீதாவும் சரி, விஷ்ணுவும் சரி வைஷ்ணவியின் நலனுக்காகவும் சந்தோஷத்திற்காக தான் பேசுகிறார்கள். அதை கண்டு உள்ளம் மகிழ்ந்தார் லட்சுமி, அது அவரது கண்களில் ஆனந்த கண்ணீராக வெளியே வர,
“அதற்கு ஏன் நீங்கள் அழுகிறீர்கள் அத்தை?” என்று லட்சுமியின் கண்ணை துடைத்தான் விஷ்ணு.

“இது கண்ணீர் இல்லை மாப்பிள்ளை. அது வந்து.. உங்களுடைய அன்பை நினைத்து வரும் ஆனந்த கண்ணீர்” என்றார்.

அவரை அதிர்ந்து பார்த்த விஷ்ணு, என்ன அத்தை? வாங்க, போங்க என்றெல்லாம் பேசுறீங்க!” என்று அதிர்ச்சியாக கேட்டான்.

“பின்னர் நீ.. நீங்கள் எங்களது மருமகன் அல்லவா?” என்று கூற,

“இன்று தான் உங்கள் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி மருமகனாகி உள்ளேன். ‘ஆனால் என்னை பொருத்தவரை, என்றைக்கு நான் உங்களை அத்தை என்று கூப்பிட்டேனோ! அன்றே நான் உங்கள் மருமகனாகி விட்டேன்’ என்று மனதினுள் நினைத்துக் கொன்டு’ ஆகையால் நீங்கள் என்னை எப்பொழுதும் போல விஷ்ணு என்றே கூப்பிடுங்கள். உறவு முறையில் நான் மருமகனாக இருந்தாலும், நான் உங்களுக்கு பெறாத ஒரு மகன்தான். உங்கள் மகனை இப்படித்தான் நீங்கள் மரியாதையுடன் கூப்பிடுவீர்களா?”என்று கோபப்பட்டு கொண்டான்.

அவனது கூற்றில் மிகவும் மகிழ்ந்தார் லட்சுமி. அவனை லேசாக அணைத்து “ரொம்ப சந்தோஷம் விஷ்ணு. எனக்கு என் மகள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச கவலையும் முற்றிலும் போய்விட்டது. இனிமேல் அவள் உங்கள் வீட்டு பிள்ளை. அவளை நீங்கள் நலமுடன் பார்த்துக் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும்” என்று கூறி,
“சரி காலையிலிருந்து உனக்கும் ஓய்வே இல்லையே! நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு. மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம்” என்றார்.

அவனும் யாரையும் தொந்தரவு செய்யாமல் அவனது அறைக்கு சென்று விட்டான். அன்பரசுவிற்கும் லட்சுமிக்கும் மிகவும் நிம்மதியாகியது.
அவர்களும் நிம்மதியாக உறங்க சென்றனர்.
மறுநாள் நல்ல நேரம் பார்த்து அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தனர் அனைவரும்.

அன்று நண்பனின் மகளாக விளக்கேற்றியவள், இன்று அவ்வீட்டின் மருமகளாக நுழைந்தாள் வைஷ்ணவி. சங்கீதா. அவர் ஆசைப்படி, வைஷ்ணவியை விளக்கேற்ற வைத்தார். பிறகு இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தார்.

“அம்மா, இன்னும் நீங்க இதை எல்லாம் விடவில்லையா?” என்று கிண்டல் செய்தாலும், அவனுக்கும் அவர் செய்தது பிடிக்கத் தான் செய்தது.
மகனை முறைத்த சங்கீதா, “இதெல்லாம் சம்பிரதாயம், கண்டிப்பா செய்துதான் ஆக வேண்டும்” என்று விஷ்ணுவிடம் செல்லிவிட்டு
“நீதான் என் பேச்சை கேட்க மாட்ட, ஆனா என் மருமகள் நான் சொல்வதை கேட்பாள், இல்லைம்மா?” என்று அவளையும் சம்மதிக்க வைத்தார்.

பின்னர் இரண்டு நாட்கள் ஓய்விற்கு பிறகு, புதன்கிழமை அன்று கேசவன் ஏற்பாடு செய்திருந்த கெட் டுகெதர் பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
அதன் மூலம் வர்த்தக ரீதியான நண்பர்கள் அனைவருமே அங்கு வரவழைக்கப்பட்டு விஷ்ணு வைஷ்ணவி திருமணம் அறிவிக்கப்பட்டது.

தனது நலனுக்காக தனது பெற்றோர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யலாம். ஆனால் நண்பனின் மகளுக்காக ஒவ்வொன்றையும் கவனமாக செய்யும் அப்பாவின் நண்பர்களை கண்டு வியந்தாள் வைஷ்ணவி.

அவர்களுக்காகவாவது தன்னுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் தோன்றியது. அன்றைய நாளுக்குப் பிறகு வைஷ்ணவி, சாரங்கன் சங்கீதாவின் செல்ல மருமகளாகி போனாள். நாட்கள் கடக்க அங்கிருந்து அலுவலகத்திற்கும் செல்ல ஆரம்பித்தாள்.

சென்னை வந்த முதல் நாளே, எங்களுக்கு பிடித்தமான நாளில் எங்கள் வாழ்க்கையை தொடங்கிக் கொள்கிறோம். நல்ல நாள், நேரம் என்று எதுவும் பார்க்க தேவை இல்லை என்று கூறி, பிடிவாதமாக அவள் தன் அறையில் தான் படுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டன் விஷ்ணு.

அதனால் அவளது படுக்கை மாடியில் விஷ்ணுவின் அறையானது. இருவரும் ஒரே அறையில் இருந்தாலும், ஏனோ தனித்தனியாக தான் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.

விஷ்ணுவிற்கு அவளை வற்புறுத்தி வாழ்க்கையை தொடங்கும் வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வைஷ்ணவிக்கு தன்னால் விஷ்ணுவுடன் வாழ முடியுமா என்ற குழப்பம். திருமணத்திற்கு பிறகும் இப்படியே இருப்பது சரியில்லை என்று வைஷ்ணவிக்கு தெரிந்தாலும், அவளால் அவனுடன் நெருங்கவே முடியவில்லை.

முதல் நாள் இரவு விஷ்ணுவுடன் அறையில் தங்கிய வைஷ்ணவி, காலை எழுந்ததும் அவன் இருக்கும் பொழுது உள்ளே இருந்த குளியல் அறையில் குளிப்பதற்கு தயங்கி, தன் உடைகளை எடுத்துக்கொண்டு மாடியில் இருந்த மற்றொரு அறைக்கு வந்து குளித்தாள்.

அதை கவனித்த விஷ்ணு “நீ இனிமேல் இந்த குளியலறையை பயன்படுத்திக் கொள். நான் வெளியே சென்று விடுகிறேன்” என்று கூறி அன்றிலிருந்து பக்கத்து அறையில் உள்ள குளியலறையை பயன்படுத்திக் கொண்டான் விஷ்ணு.

முதல் மாடிக்கு பெரியவர்கள் யாரும் வரக்கூடாது என்று முன்பே சொல்லி இருந்தான். மாடியை சுத்தப்படுத்துவதில் இருந்து அனைத்தும் வைஷ்ணவி தான் செய்வாள். ஆகையால் பெரியவர்களுக்கு மேலே நடக்கும் விஷயம் எதுவும் தெரியாது.

விஷ்ணு வைஷ்ணவிடம் எவ்வளவு தான் நெருக்கமாக பேசினாலும், அவள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி அகன்று விடுவாள். அவர்கள் அறையில் இருந்த பீரோவில் கூட அவர்கள் துணி ஒன்றாக கலந்து இருந்தது. ஆனால் அவர்களது வாழ்க்கை தாமரை இலையின் தண்ணீர் போல் பட்டும் படாமலும் தொடர்ந்தது.

இருவருக்குள்ளும் குடும்ப வாழ்க்கை தொடங்கவில்லையே தவிர மற்றபடி இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசமாகவும் அனுசரணையாகவும் இருந்தார்கள். தனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வைஷ்ணவியை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வருவதை பழக்கமாக்கிக் கொண்டான். அதுபோல இரவு உணவு இருகுடும்பமும் ஒன்றாக தான் சாப்பிடுவார்கள். சில நேரங்களில் கேசவனும் மாலாவும் அவர்களுடன் கலந்து கொள்வார்கள்.

விஷ்ணுவிற்கு ஏதாவது எமர்ஜென்சி ஆபரேஷன் இருந்தால், வைஷ்ணவி அவன் வரவிற்காக சாப்பிடாமல் காத்திருப்பாள். விஷ்ணு சாப்பிட்டு உறங்கும்படி கூறினாலும், அவள் அதை காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டாள்.

சங்கீதாவும் வைஷ்ணவியிடம் சாப்பிடும் படி கூறினாலும், “அவர் வந்து விடட்டும் அத்தை” என்று சொல்லிவிடுவாள். இப்படியாக ஒருவித பாசம் அவர் அவர்களுக்குள் நிறைந்து இருந்தது.

இப்படியே நாட்கள் கடக்க வைஷ்ணவியின் பிறந்த நாளும் வந்தது. சங்கீதா அவளுக்கு வாங்கிக் கொடுத்த புடவையைத் தான் கட்ட வேண்டும் என்று முந்தைய நாளே அவளுக்கு புடவையை பரிசளித்து விட்டார்.

திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் அல்லவா? தன் மனைவிக்காக தேடித்தேடி பரிசுகளை வாங்கி மறைத்து வைத்திருந்தான் விஷ்ணு.

  • தொடரும்..

5 thoughts on “இருளில் ஒளியானவன்-23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *