இருளில் ஒளியானவன் 8
இத்தனை நாள் படிப்பில் கவனமாக இருந்த விஷ்ணு, நீண்ட நாள் கழித்து வைஷ்ணவியை பார்த்து அதிர்ந்து விட்டான். குண்டு குண்டு கன்னங்கள் ஒட்டி மெலிந்திருந்த வைஷ்ணவியை பார்த்து “ஏய் பூசணி, ஏன் இப்படி மெலிஞ்சுட்ட?” என்று கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான்.
“நீ என்னை பூசணி என்று கூப்பிட்டு கூப்பிட்டுதான், நான் மெலிஞ்சுட்டேன்” என்று புத்தகத்தை விட்டு கண்களை எடுத்துக்காமல் பதில் கூறினாள் வைஷ்ணவி.
அவள் தன்னை பார்க்காமல் பேசுவது அவனுக்கு கவலையாக இருந்தது. அது ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை. அப்பொழுது அங்கு வந்த லட்சுமியிடம் “ஆன்ட்டி வைஷு ஒழுங்கா சாப்பிட மாட்டேங்கிறாளா? ரொம்ப ஒல்லியாக இருக்கிறாள்” என்று கவலையாக கேட்டான்.
அவரும் புன்னகைத்துக் கொண்டு “அவள் வளர்கிறாள் அல்லவா? அதான் அப்படி தெரிகிறது” என்று கூறி அவனுக்கு குடிப்பதற்கு சூடாக ஹார்லிக்ஸ் கொடுத்தார்.
அன்பரசு வந்ததும் சிறிது நேரம் பேசிவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். அவன் செல்லும் வரை வைஷ்ணவி படிக்கும் இடத்தைவிட்டு நகரவும் இல்லை, அவனை பார்க்கவும் இல்லை.
நாட்கள் கடக்க எட்டாவது முழு வருட பரீட்சை விடுமுறையில் வைஷ்ணவி பெரிய மனுஷியாகினாள். அன்று அவளுக்கு கடந்த சடங்குகளிலும் அதன் பிறகு அவன் இருந்த அலங்காரத்தையும் கண்டு “நீ ரொம்ப அழகா இருக்கடி!” என்றான் விஷ்ணு.
உடனே கோவமாக முறைத்த வைஷ்ணவி “இந்த டீ போட்டு பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத” என்று விரல் நீட்டி மிரட்டினாள்.
அவளின் விரலை மடக்கிய விஷ்ணு “அப்படித்தான் பேசுவேண்டி, என்னடி பண்ணுவடி” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.
வீட்டுக்கு கிளம்ப போவதை சொல்வதற்கு அந்நேரம் அங்கு வந்த மகேஷ், கையை உதறிக் கொண்டிருந்த வைஷ்ணவி பார்த்து “என்ன குட்டிமா? என்ன ஆச்சு?” என்றான்.
“இந்த விஷ்ணு என் கையை உடைத்து விட்டுட்டான் ண்ணா” என்று கூறி உதடு பிதுங்கி அழும் தங்கையை கண்டு புன்னகைத்து, அவளின் கையை ஆராய்ந்து பார்த்து தடவி விட்டுவிட்டு “ஒன்றும் இல்லை குட்டிமா” என்று சொல்லி, “நீங்க ரெண்டு பேரும் எப்ப தான் சண்டை போடுவதை நிறுத்துவீங்கன்னே தெரியலை” என்று சொல்லி சென்றான்.
அதுபோல விஷ்ணுவை பார்த்து வைஷ்ணவியிடம் இப்படி முரட்டுத்தனமாக விளையாடக் கூடாது என்றும் அறிவுரை கூறிச் சென்றான்.
நாட்கள் கடக்க அவரவர் படிப்பில் தன் கவனத்தை செலுத்தினர். விஷ்ணு மருத்துவராக வேண்டும் என்பதால் முதல் வகுப்பு பாடப்பிரிவை எடுத்திருக்க, படிப்பில் கவனத்தை செலுத்த முயன்றான்.
இருந்தும் அவனால் கவனமாக படிக்க முடியவில்லை. குழந்தைத்தனத்தை இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குமரியாக மாறிக் கொண்டிருந்த வைஷ்ணவியை பார்க்கும் பொழுதெல்லாம் பேரழகியாக தெரிந்தாள். அவளை பார்க்கும் போது அவனுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல இருப்பதை ரசித்தான்.
ஆனால் தன்னையும் மீறி தனது மனது அவளை ரசிப்பதில் எரிச்சல் அடைந்தான் விஷ்ணு. அதை கோபமாக அவளிடத்தில் பேசும் பொழுதெல்லாம் காண்பித்தான்.
தன்னிடம் பேசும் பொழுதெல்லாம் சண்டை பிடிக்கும் விஷ்ணுவை அறவே வெறுத்தாள் வைஷ்ணவி.
அதை அவனிடம் எதிர்த்து பேசி காண்பிக்க, அது அவனுக்கு இன்னும் கோபத்தை தூண்டியது. இருவரது பெற்றோருக்கும், அவர்கள் இருவரின் சண்டையைப் பிரித்து சமாதானம் செய்து வைப்பது பெரிய வேலையாக இருந்தது.
சாரங்கனும் சங்கீதாவும் வைஷ்ணவிக்கு ஆதரவாக பேசி விஷ்ணுவை கண்டித்தாலும், அன்பரசுவும் லட்சுமியும் வைஷ்ணவியிடம், “குட்டிமா, கொஞ்சம் பொறுமையா இருடா” என்று அவளைத்தான் அடக்கினர்.
அதுவும் அவளுக்கு கோவத்தை தர விஷ்ணுவை கண்டாலே அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள். அவள் அப்படி சொல்வதும் விஷ்ணுவிற்கு ஏதோ போல் இருக்க, வேண்டுமென்றே அவளிடம் சென்று வம்பு வளர்க்க ஆரம்பித்தான். இப்படியே நாட்கள் கடக்க, தன் பள்ளி படிப்பை முடித்து மகேஷ் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டான்.
அடுத்த வருடம் இறுதியில் சாரங்கன் தன் குடும்பத்துடன் மும்பை செல்வதாக முடிவு எடுத்து நண்பர்களிடம் கூறினார். பள்ளி பரீட்சை முடிந்ததும் மும்பை மருத்துவக் கல்லூரியில் அவனை சேர்ப்பதாக கூறினார். நண்பர்களுக்கு அவர்கள் குடும்பம் பிரிந்து செல்வது வருத்தமாக இருந்தாலும், அடுத்தடுத்து வாழ்வில் முன்னேற்றம் வர சில விஷயங்களை விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று இரு நண்பர்களும் அவனது மும்பை பயணத்திற்கு சம்மதித்தனர்.
நண்பர்களின் அனுமதியும் ஆலோசனையும் கிடைத்த பிறகு முழுமூச்சாக தனது ஜாகையை மும்பைக்கு மாற்றிவிட்டார் சாரங்கன். பத்தாவது படித்து முடித்து இருந்த வைஷ்ணவிக்கு சங்கீதாவும் சாரங்கனும் அவர்களை விட்டு செல்வது வருத்தமாக இருந்தது. விடுமுறைக்கு மும்பை வரும்படியும் அடிக்கடி ஃபோனில் பேசிக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி கிளம்பினார்கள்.
இது ஒரு விதத்தில் விஷ்ணுவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனுக்கு தன் மருத்துவ படிப்பை தொடர்வதற்கு தன் கவனத்தை முழுமையாக செலுத்த முடிந்தது.
இங்கு இருக்கும் வரை அவனுக்கு வைஷ்ணவியை பார்க்க வேண்டும், அவளுடன் பேச வேண்டும் என்று எண்ணம் தான் ஓடிக்கொண்டே இருக்கும்.
பருவ வயதில் இருக்கும் அவனுக்கு அதை சமாளிக்க தெரியாமல் அவளிடம் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பான்.
ஒரு வழியாக அவளைப் பார்க்காமல் இருப்பது மனதிற்கு சந்தோஷமாக இருப்பது போல் இருந்தாலும், ஒரு விதம் வருத்தமாக இருப்பதையும் உணர்ந்தான்.
அதற்கு காரணம் என்ன என்று தான் அவனுக்கு தெரியவில்லை.
அவளை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி அவனுக்கு தோன்றும் எண்ணத்தை தடுத்து, மருத்துவராகிய பிறகு தான் பார்க்க வேண்டும் என்று தனக்குள் விதைத்துக் கொண்டான்.
அதன்படியே படிப்பில் கவனத்தை செலுத்தி, சிறந்த மாணவனாக திகழ்ந்தான். வைஷ்ணவி பன்னிரண்டாவது முடித்ததும் தந்தையின் தொழிலை பார்ப்பதற்கு வசதியான கல்லூரி படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலானாள். சாரங்கனின் குடும்பம் சென்னை வருவது முற்றிலும் குறைந்துவிட்டது. பெண்கள் மூவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.
மகேஷ் தனது மருத்துவ படிப்பை சென்னை கல்லூரியில் முடித்த பிறகு, மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படியே சென்று விட்டான்.
விஷ்ணு தனது மருத்துவ படிப்பு முடிந்ததும் மேல்படிப்பை மும்பையிலேயே தொடர்ந்தான்.
அரசாங்க மருத்துவ கல்லூரியிலேயே விஷ்ணுவிற்கு இடம் கிடைத்ததில் காரணங்கள் மிகவும் மகிழ்ந்தார் சாரங்கன், தன் மகனின் படிப்பை நினைத்து.
கேசவன் தனது கனவான பெரிய மருத்துவமனையை சென்னையில் கட்டினார், கே எம் மருத்துவமனை என்ற பெயரில்.
மகேஷ் தன் படிப்பை முடித்து சிறுது நாட்கள் அமெரிக்காவிலேயே வேலை செய்வதாக கூறிவிட, முழு பொறுப்பும் கேசவன் எடுத்து திறம்பட நிறுவகித்தார்.
நாட்கள் கடக்க வைஷ்ணவி கல்லூரி படிப்பு முடிந்ததும் தந்தையுடன் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தாள்.
விஷ்ணுவிற்கு வைஷ்ணவியின் மீது இருந்த ஈர்ப்பு, காதல் என்பதை புரிந்து கொள்ள தொடங்கினான். இருந்தும் தன் மேல் படிப்பு முடிந்த பிறகு தங்கள் குடும்பத்தில் இதைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்து கொண்டான்.
ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டது.
சொந்தக்காரர் ஒருவரின் திருமணம் வடபழனி கோயிலில் வைத்து நடைபெற, தன் மனைவி மகளை அழைத்துக் கொண்டு திருமணத்திற்கு சென்றார் அன்பரசு. திருமணம் முடிந்ததும் முருகப்பெருமானையும் வழிபட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பினார்கள். அன்றுதான் வெங்கட்டின் தாயார் வைஷ்ணவியை கோவிலில் வைத்து பார்த்திருக்கிறார்.
பெண்ணும் பார்க்க லட்சணமாக இருக்க, அவர்கள் குடும்பத்திற்கு ஓரளவுக்கு இணையானவர்கள் என்பதையும் தெரிந்து கொண்டார். அதேசமயம் ஒரே பெண் என்பதால், தங்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதையும் நன்கு புரிந்து கொண்டார். ஆகையால் தன் மகனிற்கு பெண் கேட்டு அனுப்பினார்.
வைஷ்ணவிக்கு திருமண வயது வந்து விட்டதை உணர்ந்து, அவர்கள் விசாரித்ததே தன் நண்பர்களிடத்து கூறினார் அன்பரசு.
- தொடரும்..
Vishnu oda love ah avan sollurathu ku munnadi yae vaishu ku marriage mudinchiduthu pola
💛💛💛💛
Nice👍
விஷ்ணு ஒரு ஹிண்ட்டாவது கொடுத்திருக்கலாம்!!…
எழுத்து பிழை இருக்கு… கொஞ்சம் சரி பார்த்துக்கோங்க!!..
Konjam avan love ah appa amma kitta solli irukalam illa athuku ethathu pani irukalam ipo ava life vera mari aeiduchi aana ipovum avala love panranga thirupi mrg panipana