💟13
பவானி முதல் முறையாக நேரில் பிருத்வி பார்ப்பதால் இனிப்பு கொடுத்து விட்டு புன்னகைக்க, பவானி லத்திகா அருகே அழைத்து , ” லத்திகா ஸ்கர்ட்ல சின்ன பொண்ணு மாதிரி இருக்க, ஷாப்பிங் போகணும் அதுக்கு ஏத்த மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு வா ம்மா” என்று இதமாக கூற அவளோ தந்தை ஜீவனந்தத்தை பார்த்தாள்.
”போ கிளம்பு செல்லம்மா” என்றார் . வந்ததிலிருந்து ஹாலில் இருக்கும் பொம்மையை எடுத்து பார்த்து திரும்ப வைப்பதில் தீவிரமாக இருந்தான் பிருத்வி. எல்லாமே லத்திகா கை வண்ணத்திதில் தைத்த ஆடைகள் கொண்டு இருந்தன.
”அந்த பொம்மைகளுக்கு எல்லாம் லத்திகா தான் டிரஸ் தைத்து போடுவா . லீவு டேஸ் என்றாலே எதாவது தைக்க இன்ட்ரெஸ்ட் காட்டுவா … அப்படி இல்லை என்றால் அக்கம் பக்கத்துல இருக்கற வாண்டுகளுடன் விளையாடுவா” என்றார் தலையை சொரிந்தபடி ஜீவா கூற, பிருத்விக்கு என்ன சொல்வது என்று புரியாமல் புன்னகை உதிர்த்து நின்றான்.
” உங்களை ஹாஸ்பிடலில் பார்த்து இருக்கேன் என்ன அறிமுகம் இல்லை அப்பா அறிமுகம் தான் கிடைச்சது” என்றார் ஜீவா.
”நீங்க என்னை ஹாஸ்பிடலில் பார்த்து இருக்கீங்களா ?” என்றான் பிருத்வி.
”ஆமா நீங்க பிளட் டொனேட் கூட கொடுக்க முன் வந்திங்களே அப்ப” என சொல்லி முடிக்க சட்டென முகத்தை திருப்பி கொண்டு சுவற்றை அலசினான்.
போச்சு மாட்டினேன்…அப்பா அம்மா கேட்டாங்களா தெரிலையே.. என பிருத்வி முழித்தான்.
”வீடு சின்னது தான் ஆனா எங்களுக்கு இதுவே அதிகம்” என சொல்ல, அப்பொழுது தான் பிருத்வி உணர்ந்தான். அவர் அவரை தாழ்த்தி கொண்டு இருப்பதை. மேலும் அவர் தன்னை நீங்க என்று மரியாதையாய் விளிக்க தானோ மொட்டையாக பேசி கொண்டு இருப்பதும் உரைத்தது. மேலும் தான் பேசாமல் திரும்பியதை அவர் வீட்டின் சுற்றம் பார்ப்பதாய் தவறாய் கணித்ததை அறிந்து,
‘அய்யோ அங்கிள்… சாரி… சாரி மாமா நான் வீட்டை பற்றி எல்லாம் யோசிக்கலை. நான் பிளட் டொனேட் பண்ணியது அம்மா அப்பாவுக்கு தெரியாது. நீங்க சொல்லியதும் அவங்க கேட்பாங்களே என்று நழுவ பார்த்தேன் நீங்க தப்பா புரிச்சுட்டீங்க” என உண்மையை கூறினான்.
”மறந்தே போச்சு நாங்களே கேட்கணும் என்று இருந்தோம் . என்ன டா அது உடலை கெடுத்துகிட்டு ”
” ம்மா ஜஸ்ட் வருஷத்துக்கு ரெண்டு முறை அவளோ தான். என் பர்த்டே அப்ப அப்பறம் உங்க பர்த்டே அப்ப கூல்” என்றான்.
”பார்த்தியா டி என் பர்த்டே மட்டும் அவனுக்கு இளக்காரமா?” என்றார் ராஜன்.
”கொஞ்சம் சும்மா இருக்கீங்களா நானே வருஷத்துக்கு ரெண்டு முறையா என்று திகைச்சு இருக்கேன் நீங்க வேற” என அதட்டினார்.
”நான் ஏதாவது தப்பா கேட்டுடேனா … ” என ஜீவானந்தம் முழித்தார்.
”அதெல்லாம் இல்லை மாமா . நான் பிளட் டோனேட் பண்ற விஷயம் இவர்களுக்கு இப்ப தான் தெரியும். அதுவும் இல்லாம இது மாதிரி டாம் அண்ட் ஜெர்ரி ஷோ அடிக்கடி எங்க வீட்ல நடக்கும்” என்று கூற , சகுந்தலாவிற்கும் ஜீவாவிற்கு சிரிப்பே வந்தது பின்னரே பிருத்விக்கு சற்றே நிம்மதி கிடைத்தது .
உடை மாற்றிவிட்டு கதவை திறந்த கணம் பிருத்வி பேசி முடிக்க எல்லோரும் சிரிக்க லத்திகாவிற்கு வியப்பாக இருந்தது .
‘அடப்பாவி எல்லோரும் சிரிக்க வைக்கற மாதிரி உன்னால பேச கூட முடியுமா ‘ என்றாள் மனதிற்குள் .
எங்கே போக போகிறோம் என்று தெரியாவிட்டாலும் மிதமான ஒப்பனையில் வந்து நின்றாள். பிருத்வி கண் கொட்டாமல் பார்ப்பதை பவானி உணர்ந்து விட , ராஜனிடம் காதில் கிசுகிசுத்தார்
”பிருத்வி அம்மாவுக்கு கொஞ்சம் டையர்ட்டா இருக்காம் . நீயும் லத்திகாவும் போய் நகை வாங்கிட்டு வந்துடுறியா ? நானும் அம்மாவும் இங்கயே இருக்கோம் நீ திரும்பி வந்து எங்களை அழைச்சுக்கோ ” என்றதும் தலையை ஆட்டினான் .
‘ ஆஹ் இவனோடவா போச்சு ‘ என திரு திரு முழித்து நிற்க , ”போயிட்டு வா லத்திகா” என கூற எல்லோரிடமும் சொல்லிவிட்டு காரில் கிளம்பினார்கள்.
பதினைந்து நிமிட பயணத்தில் ஏதும் பேசாது வந்தார்கள் . பிருத்வியே நீ எப்பவும் எங்க நகை வாங்குவ சொல்லு அங்கயே போய் வாங்கலாம்”
”ஹ்ம்ம் பாண்டி பஜார்ல ” என கூலாக கூறி ரோட்டை பார்த்து வந்தாள்.
”ஏய் என்ன கொழுப்பா? நக்கலா பதில் சொல்ற, ஏதோ அம்மா நகை வாங்க சொன்னாங்க என்றதால கூப்பிட்டு வந்தா ரொம்ப பண்ற” என சினத்தோடு ஆரம்பித்தது/.
”நிஜமாவே நான் மெட்டல் செட், சில்க் த்ரெட் செட் அது மாதிரி தான் அசஸ்சரீஸ் வாங்குவேன் . அதான் பாண்டி பஜார் என்று சொன்னேன்.” என்று விழித்தாள்.
”ஓகே அம்மா போக சொன்ன கடைக்கே போறேன்” என முடித்து வண்டியை ஒட்டினான்.
லத்திகா மனதிற்குள் ‘ஏதோ பார்மாலிட்டீஸ்காக வாங்க வந்து இருக்கான் போல என்று நினைத்ததும் நகை வாங்க ஆர்வம் வரவில்லை.
கார் பார்க் பண்ணிவிட்ட போதிலும் லத்திகா இறங்காமல் இருக்க, லத்திகா இறங்கு… ஏய் லத்திகா… ” என்றான்.
” ம்” என யோசனை கலைந்து இறங்கினாள். அந்த கடையின் கால் பதித்ததும் தானாக திறந்து உள்ளே வந்ததும் மீண்டும் தானாக மூடிக்கொண்டது அக்கதவு.
உள்ளே சில்லென்ற குளிர் காற்று உடலை தாக்கியது. பார்க்கும் திசை எல்லாம் கண்கள் பறிக்கும் நகைகள் தென்பட்டன.
”என்ன டைப் நகை பார்க்கலாம்”
”என்ன டைப்னா?” என்று கேட்டவளை முறைத்தான்.
”சாரி நிஜமா என்ன சொல்ல தெரியல. எனக்கு எல்லாம் அம்மா தான் வாங்குவாங்க. பிடிச்சதை செலக்ட் பண்றதோட சரி. நீங்க என்ன டைப் நகை என்று கேட்டா என்ன சொல்ல… நிம்மதியா விளையாடிட்டு இருந்த என்னை கூட்டிட்டு வந்து கேள்வியை பாரு” என முனங்கினாள்.
”ஓ காட், கோல்ட், சில்வர், பிளாட்டினம், ரூபி, ஆன்ட்டிக் ஜெல்லரி, பியர்ல், டைமண்ட் … ” என்று சொல்லி கொண்டு போனவனை,
”ஸ்டாப் ஸ்டாப் , எனக்கு வாங்க போறது நீங்க சோ நீங்களே செலக்ட் பண்ணிடுங்க ப்ளீஸ்” என சொல்லிட அதே நேரத்தில் கடை பணிப்பெண் ,
”வாட் கேன் டூ சார்” என்றதும்,
”டைமண்ட் செக்ஷன் …”
”பஸ்ட் பிளோர் சார் .”
”இல்லை கோல்டே போதும் .” என்று லத்திகா இடை புகுந்திட , பிருத்வி அவளையும் கடை பணிப்பெண்ணையும் பார்த்து விட்டு ,
”ஓகே கோல்ட் செக்ஷ்ன்” என்றான்.
”செலக்ட் பண்ணு”
”பார்மாலிட்டீஸ் காக வாங்க வந்தது. நீங்களே வாங்குங்க” என முத்து நகை வைத்து இருக்கும் பிரிவுக்கு சென்று பார்வையிட, பிருத்விக்கு தான் வாய் தவறி பார்மாலிட்டீஸ்காக என சொல்லியதால் அவள் வாங்க விருப்பம் இன்றி இருப்பது புரிந்தது. பரவாயில்லை நாமளே செலக்ட் பண்ணுவோம் என்று நகைகளை ஆராய்ந்தான் .
அடுக்கடுக்கான இதழ்கள் கொண்ட ரோஜா பூ போல் ஒரு நெக்லஸ் இருக்க அதை எடுத்து லத்திகாவை அழைத்தான். அவளும் அருகே வந்து நிற்க, அவள் எதிர்பாராத நேரத்தில் கழுத்தில் வைத்து நல்லா இருக்கா என பார்வையை கண்ணாடியில் பதித்தபடி கேட்டான். அவளோ அவனை பார்த்துக்கொண்டே இருக்க, ”பார்த்து சொல்லு ஓகே வா” என்றான். மந்திரம் செய்தது போல ”ம்” என்றாள்.
பில் பேப்பர் வாங்கிட்டு வா இப்போ வந்துடறேன் என சொல்லி நகர்ந்ததும் லத்திகாவிற்கு மந்திரம் மாயமானது . ‘ அவன் அம்மா வாங்க சொன்னாங்க ஓகே பட் எதுக்கு எனக்கு போட்டு பார்த்து வாங்கறான் . அப்போ அவன் ஆர்வத்தோட தான் வாங்கி தருகின்றானா ‘ என யோசிக்க மனம் துள்ளியது .
பிருத்வியோ முத்து செட் இருக்கும் பிரிவில் அவள் கைகளில் வாங்கி பார்த்த ஒரு முத்து நெக்லஸ் பார்த்தான் . இரு இதயம் கொண்ட அந்த வடிவம் அவனுக்கும் பிடித்து போக அதையும் பில் போடா சொல்லி சென்றான் .
பில் பே செய்து விட்டு அவள் அருகே வந்தவன். போகலாமா என உதிர்க்க ”ம்” என்று ஒற்றை பதில் சொன்னாள் . பத்து நிமிட பயணம் அமைதியாக கழிய , முத்து நகை எடுத்து அவளிடம் நீட்டினான்.
”பிரிச்சு போட்டு பாரு ” என்றான்.
”நான் தான் கடையிலே போட்டு பார்த்து விட்டேனே”
”சொல்றதை உடனே கேட்க மாட்டியா?” என முறைக்க, வாங்கி பிரித்து பார்த்தாள். அவள் பார்த்து ரசித்த முத்து செட்.
உடனே அவனின் அருகே இருந்த கவரில் பார்க்க அதில் இன்னும் ஒரு பாக்ஸ் இருக்க பார்த்தாள். ஆக தனக்கு பிடித்த மாதிரி ஒன்றை வாங்க தன்னை அவன் கவனித்து இருக்கின்றான். தான் மட்டும் அவனை கவனிக்கவில்லை அவன் நகையை பார்த்து பில் போடும் வரை தான் அவனை பற்றி சிந்தித்து இருந்து இருக்கின்றேன்.
”கழுத்தில் போட்டு பார்க்கலாமே?” என்றான் . அவளும் முறுவலித்து அதை கழுத்தில் அணிந்து , ” நல்லா இருக்கா ” என்றாள் .
‘ உனக்கு என்னடி எது போட்டாலும் அழகா இருக்க ராட்சஸி. நான் தான் உன்னை பார்க்க தடுமாறுகின்றேன்’ என புலம்பினான் மனதினுள் வெளியே புன்னைகை உதிர்த்தான். லத்திகாவோ , நல்லா இருக்கு என்று வாயை திறந்து சொன்னா தான் என்னவாம் இருக்குற முத்து உதிர்ந்துடும்…. சிரிப்பை பாரு புன்னகை மன்னன் என்று நினைப்பு ‘ என்று மனதினுள் திட்டியபடி கழட்ட போனாள்.
”எதுக்கு கழட்டுற போட்டுக்கோ”
”எதுக்கு இதுவேற… ஒன்னு வாங்கி இருக்கலாமே” என்றாள் . அவனோ அவளை பார்த்து முறைத்து விட்டு காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தான்.
மூஞ்சியா பாரு பஸ்ட் டைம் வந்து இருக்கோம் வாங்கி கொடுத்தேன் லத்திகா என்று சொன்னா என்னவாம் ‘ என மீண்டும் திட்டிமுடிக்க , அவனோ ஆசையா நான் வாங்கி தந்தா பேசுற பேச்சை பாரு , டேய் பிருத்வி ராட்சஸிகிட்ட இப்படி மாட்டிகிட்டீயே?’ என்றது மனசாட்சி.
வீட்டிற்கு வந்து நிறுத்தும் வரை ஒருவர் மாற்றி ஒருவரை மனதில் திட்டி கொண்டு வந்தனர் . உள்ளே நுழைந்ததும் ,
” ம்மா இவளை கூப்பிட்டு போனதே வேஸ்ட் , எனக்கு ஏதும் தெரியாது என்று என்னையே செலக்ட் பண்ண வச்சிட்டா” என குற்றப்பத்திரிகை வாசிக்க லத்திகா முறைக்க, பவானி-ராஜன் சிரித்தனர்.
”நீங்க கிளம்பின பிறகு அண்ணி இதை தான் சொன்னாங்க. அவளுக்கு எல்லாம் அவங்க அப்பா அம்மா சேர்ந்து தான் எடுத்து தருவாங்கலாம் . நகை பற்றி ஒன்னும் தெரியாது என்று, சரி சரி நகை காட்டு உன் செலக்ட் எப்படி என்று பார்க்கறேன்” என்ற போது லத்திகா கழுத்தில் முத்து செட் இருப்பதை பார்த்து விட்டு கையில் பிருத்வி கொடுத்த பெட்டியை திறக்க,
”டேய் ரொம்ப அழகா இருக்கு” என கூறியதும் பெட்டியை சகுந்தலாவிடமும் காட்டிட , ”நல்ல தேர்வு” என்றனர்.
”லத்திகா உன் கழுத்துல… என சகுந்தலா ஆரம்பிக்க,
”இதுவும் ப்ரஜன் தான் வாங்கி கொடுத்தார்” என்றாள். அவளது ப்ரஜன் அங்கிருந்த எல்லோருக்கும் வியப்பு தந்தது என்றால் பிருத்விக்கு அதை விட அதிக வியப்பே. இவள் தன் பெயரை அப்படி அழைப்பாள் என அவன் நினைத்து பார்க்கவில்லை .
எல்லோருக்கும் பின்னர் சாப்பிட்டு இருக்க , சகுந்தலா தான் பயந்து பயந்து பரிமாறினார். பிருத்வியோ அவனது பெற்றோரோ தயக்கமின்றி தான் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
அவர்கள் புறப்பட்டு அரை மணிநேரம் போனது . ஜீவனந்தமும் சகுந்தலாவும் அவர்களை பற்றி தான் பேசி கொண்டு இருந்தார்கள். பாகுபாடு இல்லாத மனிதர்கள் என்றும் பிருத்வி மகன் போலவும் நினைக்க துவங்கினார்கள்.
பவானியோ கார் ஓட்டும் பிருத்வியிடம், ”பிருத்வி நான் ஒரு நெக்லஸ் வாங்க அனுப்பினேன் . நீ என்னடா என்றால் முத்து செட் வேற வாங்கி இருக்க என்னடா ட்ராக் மாறிடுச்சா” என்றதும் காரில் பின் பக்கம் தாயை காணாது கண்களை ஒரு வினாடிக்குள் இறுக்க மூடி சப்தம் வராது சிரித்தவன்,
”ம்மா, அவ நகை வாங்க போனதும் அவளா போய் பார்த்தது முத்து செட் தான். கோல்ட் டைமன்ட் பக்கமே வரலை. அதான் இரண்டு வாங்கிட்டேன்” என்றான். அவனது பதில் உண்மையா இல்லை மழுப்பல என்று இனம் கண்டு கொள்ள முடியாது தவித்தனர் அத்தம்பதி.
அடுத்த நாள் அலுவலகம் வந்து நிற்க சிறிது சங்கோஜமாக தான் இருந்தன, இருந்தும் அவள் பழைய அதே லத்திகா போலவே வந்து நின்றாள். முதல் காரணம் பிருத்வி அவளை தனக்கு மனைவி ஆக போகின்றவள் என அலுவலகத்தில் கூறிடவில்லை அவளிடத்தில் குழைவதும் இல்லை என்பதால்.
இப்பொழுது எல்லாம் அவன் வருகையின் போது அவள் கால்கள் தானாக எழுந்து விடுகின்றது. அது அவனுக்கே ஆச்சர்யம் தான்.
புவனா மறுபடியும் தயங்கி தயங்கியே பிருத்வி அறைக்கு வந்து நின்றாள்.
”சொல்லுங்க புவனா என்ன விஷயம்”
”சார் மறுபடியும் கேக்கறேன்னு கோவிச்சுக்காதீங்க, நாளைக்கு ஒரு நாள் லீவு வேண்டும் எனக்கு வளைகாப்பு. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் கழிச்சு ப்ரகனன்சி லீவ் எடுத்துக்கறேன் சார்”. என்றாள் தயக்கத்துடன் அவன் முகம் பார்த்து ,
” ஓகே ” என கூறியவன் சிஸ்டத்தில், மூழ்க ”தேங்க்ஸ் சார் தேங்க் யூ வெரி மச்” என்றே சொல்லி , ”சார் நாளைக்கு நீங்களும் வரணும் இந்தாங்க சார் இன்விடேஷன்” என நீட்ட , ஆஹ் என முழித்தவன் பெற்றுக் கொண்டான் .
அடுத்து லத்திகாவிடம் வந்தாள்.
”என் மாமியாருக்கு கூட இப்படி பயந்ததில்லை டி, இந்த மனுஷன்கிட்ட நெருங்கினாலே இப்படி பயம் வருது. லத்திகா நாளைக்கு நேரத்துக்கு வா”
”ஹ்ம்” என கூறியவள் மனதிலோ , ‘ ஏன் ப்ரஜன் இப்படி எல்லார்கிட்டயும் முசுடுனு பெயர் எடுக்கற, என்ற எண்ணமே வந்து நின்றது.
இருவருமே தங்கள் திருமண ஏற்பாடை யாரிடமும் கூறவில்லை. லத்திகாவோ பிருத்வி இந்த அலுவலகத்தின் முதலாளி அவன் சொல்லி தெரிவது தான் அவளுக்கு சரி என பட்டது. தான் சொன்னால் அது அதிங்கபிரசங்கி தனமாக தெரியும் என்றே நினைத்தாள். பிருத்வியோ திருமணத்திற்கு ஒரு வாரம் முன் சொல்லி விடலாம் என நினைத்து இருந்தான். ஆனால் அடுத்த நாள் மாலையே கூற வேண்டிய கட்டாயத்திற்கு பிருத்வி ஆளானான்.
இன்று புவனா வளைகாப்பிற்காக பாதி பேர் லீவு கேட்டு நிற்க , பிருத்வியோ எல்லோருக்கும் சரி என தலை ஆட்டிவிட்டான். காரணம் லத்திகா மேஜையில் இருந்த ஒரு ஆடை வடிவமைப்பு புத்தகத்தின் உள்ளே இருந்த கடிதமே காரணம்.
அக்கடிதம் ரவியால் லத்திகாவிற்கு எழுதப்பட்டது. அதில் ரவி லத்திகாவை விரும்புவதாகவும், எல்லோர் எதிரில் பிருத்வி சாரையே காரசாரமாக திட்டி தீர்த்ததால், அவனையும் திட்டி விடுவாளோ என அவன் காதலை நேரிடையாக சொல்ல பயந்து லெட்டரில் எழுதி அவள் அருகே இருக்கும் ஒரு புத்தகத்தில் வைத்து விட்டு இருந்தான் எல்லோர் எதிரில் தன்னை காட்டி கொடுக்கதே என்ற நிபந்தனையோடு பதிலுக்காக பணிவோடு காத்திருப்பதாக எழுதி இருந்தான்.
‘ பச் இதை அவள் படித்து இருப்பாளா ? இல்லையா என பிருத்வி மனதில் கேள்வி எழுந்தது. தான் கேட்க போய் இதனால் புது பூகம்பம் வந்து விட்டால் என குழம்பி வெளியே வந்து அவளை பார்த்தான். அவளோ கணினியில் தீவிரமாக ஆடை வடிவமைத்து கொண்டு இருந்தாள்.
👌👌👌👌👌
🧡🧡🧡🧡🧡
🌟🌟🌟🌟🌟🌟