💟15
அதிகாலை எழுந்து போனினை எடுக்க அது சிரித்தபடி இருக்கும் ப்ரஜன் முகத்தையே காட்டியது. நேற்று என்கிட்ட உரிமையா பழகினான். இன்னிக்கு எப்படி நடந்துப்பான். நோ லத்திகா மேரேஜ் ஆகுற வரை நீ அட்வான்டேஜ் எடுத்துக்காதே’ என்றது மனம். ஆபிஸ்ல வேற இன்னிக்கு மற்றவர்கள் எப்படி பார்ப்பார்களோ, கடவுளே என சாப்பிட அமர உப்புமா அவளை வரவேற்றது.
”அய்யோ உப்புமா வா உவ்வே நான் கேன்டீனில் சாப்பிட்டுக்கறேன் அப்பா.”
”அம்மா வந்தா உன்னை..”
”அதுக்கு தான் எஸ்கேப் …” என ஸ்கூட்டி இல்லாததால் பஸ்ஸை தேடி ஓட்டம் பிடித்தாள்.
சகுந்தலா வந்து பார்க்க தட்டில் உப்புமா மட்டும் இருக்க லத்திகா இல்லாததை கண்டு ஜீவாவை முறைத்தார்.
”என்ன எதுக்கு முறைக்கற , உன் மக தப்பிச்சுட்டா , நான் மாட்டிகிட்டேன் .” என உப்புமாவை பார்த்து கொண்டே மெல்லிய முனங்களோடு ”டெய்லி டெய்லி உப்புமாவா வேற ஏதும் கிடைக்கலையா, இட்லி சுடும் வாசம் வந்ததே அது பக்கத்து வீட்டுலயா?” என்று வாட்சப் பதிவு ஒன்றை பாடிட சகுந்தலா எட்டி பார்க்க கப் சிப் என ஆனார்.
அங்கே அலுவலகத்தில் அவள் நுழையும் போதே வாட்ச்மேன் வணக்கம் வைக்க, அவளுக்கு அப்பொழுதே புரிந்தது நியூஸ் லீக் ஆகிவிட்டது என்று.
அதே போல அவள் வந்து அமர சிறு சலசலப்பு வந்து சென்றன.
”ஹாய் லத்திகா … உங்கிட்ட .” என ஆரம்பித்து பின்னர் புவனா தடுமாற,
”புவனா அக்கா வளைக்காப்பு முடிஞ்சு வீட்ல ரெஸ்ட் எடுப்பீங்க பார்த்தா அடுத்த நாளே வந்து நிக்கறீங்க?” என்றாள் உரிமையாய்.
”என்னை விடு நேற்று சார் சொன்னது எல்லாம் நிஜமா இல்லை பொய்யா?”
”அக்கா செம பசி, வாங்க கேன்டீன் போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” என அழைக்க அவளும் கூட போனாள்.
ஒரு சப்பாத்தி செட் டீயும் ஆர்டர் கொடுத்துவிட்டு முதல் ஆரம்பித்து முடிவு வரை சொல்லி முடித்தாள் லத்திகா.
”இவ்ளோ நடந்து இருக்கு ஒரு வார்த்தை சொன்னியா”
”அக்கா அவர் சொல்லாம நான் சொல்றது நல்லா இருக்காது”
”ம் கரெக்ட் தான், நீ ரொம்ப லக்கி லத்திகா”
”போங்க அக்கா”
”மோதலில் ஆரம்பித்த காதலா? இனி உன்கிட்ட டிஸ்டன்ஸ் பண்ணனுமா”
”பச் போங்க. ஆமா நீங்க என்ன வந்துடீங்க”
”ம் அம்மா வீட்ல இருந்து வர்றேன்”
”நிறைமாதமா இருந்துக்கிட்டு வரணுமா?”
”வீட்ல போர் அடிக்கு லத்திகா இங்க இன்னும் கொஞ்ச நாள் அப்பறம் ஆறு மாதம் லீவு தான் .
பிருத்வி கார் ஓசை கேட்க ”ஓகே அக்கா கிளம்பலாம் அப்பறம் வேலை நேரத்துல அரட்டை என்று திட்டுவார் ” என நடக்க கூடவே புவனாவும் நடந்தபடி
”ஏய் இரு இன்னும் திட்டுவாரா என்ன?”
”நான் இப்ப ஒர்க்கர், எல்லாரையும் மாதிரி தான். நான் அட்வான்டேஜ் எடுத்துக்க விரும்பலை அக்கா. பை லஞ்ச்ல பார்ப்போம்” என அவள் இருக்கையில் அமர, பிருத்வி உள்ளே வரவும் சரியாக இருந்தன. அவள் அவனை பார்க்கவில்லை அவனும் அவளை பார்க்கவில்லை. ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் பாதி பேர் அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு இருந்தனர்.
லஞ்ச் முடிந்து பிருத்வி அவளை அழைக்க, அவளும் வந்து நின்றாள்.
”சாரி லத்திகா நேற்று உன்கிட்ட ஒருவார்த்தை கூட கேட்காம உன்னை காரில் ஏற சொல்லி , அங்க புவனா பங்க்ஷன்ல என் உட்பினு வேற இண்ட்ரோப் கொடுத்துட்டேன்.” என்று நேற்று நடந்ததற்கு விளக்கம் அளித்தான்.
”பரவாயில்லை எப்படியும் தெரியவரும் அதனால ஓகே” என இவள் சொல்ல நேற்று இதனால் தானே திட்டினா இப்ப பரவாயில்லையா என மனச்சாட்சி கேள்வி கேட்க அதை அடக்கினாள்.
”நானும் சாரி கேட்டுக்கறேன் உங்களை வீட்டுக்குள்ள கூப்பிட மறந்துட்டேன்”
”ம் ” என சிரித்தவன் என் நம்பர் எப்படி கிடைச்சது?” என்றான்
”அப்பாகிட்ட என் போன் சுவிட்ச் ஆப் என்று சொல்லி வாங்கி ஸ்டோர் பண்ணினேன்…. ஆமா என்கிட்ட உங்க நம்பர் இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்”
”என் நம்பர் தெரிச்சு இருந்தா ஸ்டோர் பண்ணி இருப்ப, சோ எனக்கு உன் டிஸ்பிளே பிக்சர் காட்டும். நேம் ஸ்டோர் பண்ணலைனா டிஸ்பிளே பிக்சர் காட்டாது சிம்பிள்” என்றான்.
”எஸ் … ” என அசடு வழிய நிற்க,
”நேற்று நீ கால் பண்ணி பேசி வைத்த பிறகு தான் உன் டிஸ்பிளே பிக்சர் பார்த்தேன். யாரது உன்னை கட்டி புடிச்சு கன்னத்துல கிஸ் பண்ணிட்டு இருக்கறது” என்றான்.அவன் பேச்சில் ஒரு ஏக்கம்.
லத்திகா மொபைல் போனில் பக்கத்து வீட்டு சிறுவன் ரோஷன் தான் அப்படி அணைத்து கிஸ் பண்ணி இருந்தது .
”என்னோட லிட்டில் பாய் பிரென்ட் என்ன இப்போ?” என அவள் சிரிக்க ,
”ஹ்ம் … ” தெரியுது என அவனும் சிரிக்க போன் மணி அடிக்க
”சரி நான் கிளம்பறேன்” என லத்திகா வெளியேற தலையை ஆட்டி விடை கொடுத்தான்.
வெளியே வந்து இருக்கையில் அமர்த்தவளுக்கு பணியில் கவனம் செல்லவில்லை. தான் தானா அது அவனிடம் இலகுவாக பேசியது. அவனும் தான் சிரித்துப் பேசினான். சிரிக்கும் போது அவன் மேலும் அழகாக இருந்தான். நாள் முழுக்க பார்க்கும் அழகு.
நாட்கள் மேலும் ஒரு வாரத்தை கூட்டியது . லத்திகாவிற்கு அலுவலகத்தில் மரியாதை கூடி தான் போனது.
புவனாவிடம் ஒரு ஆடை வடிவமைப்பு டிசைன் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில், லத்திகா கதவு தட்டி உள்ளே வர அனுமதி வாங்கி கொண்டு இருந்தாள் .
பிருத்வியும் உள்ளே வர சொல்ல, என்ன என்பது போல பார்வையால் கேள்வி கேட்டான்.
”சார் மாலையில் ரெண்டு மணி நேரம் பர்மிஸ்ஷன் வேணும்”
”நோ பர்மிஸ்ஷன் வேலையை பாரு” என விரட்ட முயன்றான்.
”சார், என்னை கல்யாணம் பண்ணிக்கற மாப்பிள்ளை வீட்ல இருந்து எனக்கு பூ வைக்க வர்றாங்க” என்று அவனுக்காக தான் என உணர்த்தினாள்.
”லுக் அடிக்கடி என்னது 2மணி நேரம் ஒரு மணி நேரம் என்று ரூல்ஸ் எல்லோருக்கும் பொது” என ஆணித்தரமாக சொல்லிட அவனை பார்த்து மனதிற்குள் திட்டி கொண்டே வெளியேறினாள். அவள் உதட்டசைவில் அவள் தன்னை திட்டுகின்றாள் என அறிந்தே இருந்தான்.
வெளியே வந்தவள் தனது தாய் சகுந்தலாவிற்கு போன் செய்து,
”ம்மா எங்க பாஸ் எனக்கு பர்மிஸ்ஷன் தரலை. அதனால மாப்பிள்ளை வீட்ல 7 மணிக்கு வர சொல்லிடு” என்றாள்.
”என்ன இது பாஸ் அப்படி இப்படி பேசற லத்திகா ஒன்னும் புரியல . மாப்பிள்ளை என்ன சொன்னார்” என்றார் அவர்.
”கடுப்பேத்ததா மாப்பிள்ளை மண்ணாங்கட்டி போம்மா சொன்னதை செய். வைக்கறேன்” என கட் செய்தாள்.
மதிய உணவு ருசித்து கொண்டு இருக்கும் போதே பிருத்விக்கு போன் வந்தது.
”டேய் பிருத்வி லத்திகாகிட்ட என்னடா சொன்ன?” என்றார் பவானி.
”ம்மா பர்மிஸ்ஷன் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்” என்றான்.
”பச்… ஏன் டா இப்படி பண்ற …” என்று பவானி அழுத்துக்கொண்டார்.
”ம்மா கவலைப்படாதீங்க உங்க மருமகளை நானே ட்ராப் பண்ணி கூட கூப்பிட்டு வர்றேன். ஆனா இந்த ரெண்டு மணி ஒரு மணி என்று கேட்க சொல்லாதீங்க” என கட்டளையிட்டான்.
”ஹ்ம் நடத்து நடத்து” என பவானி சிரித்தபடி போனை வைத்தாள்.
பிருத்வியோ நாம அவளை நம்ம கூடவே வைச்சுக்க நினைச்சது அம்மா கண்டு பிடிச்சு இருப்பாங்களோ? என்று எண்ணி இருக்க பவானி அதையே தான் நினைத்து சிரித்து விட்டார் தாய் அறியாத சூல் உண்டோ….?!
உணவு நேரத்தில் பிருத்வியை திட்டியபடி உண்ண ஆரம்பிக்க , புவனாவோ ”லத்திகா சார் ரியலி கிரேட் தெரியுமா. ஒரு முறை நான் லீவ் கேட்கும் போது கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அப்ப தோனிச்சு இதே அவர் சொந்தம் என்றால் லீவ் கேட்டதும் கொடுத்து இருப்பார் என்று ஆனா இன்னிக்கு கட்டிக்க போற மனைவி ஆனாலும் லீவ் கொடுக்கலை. சார் அன்னிக்கு நடந்துக்கிட்டதும் இப்ப நடந்துக்கிட்டதும் ஒரே முறை தான். அவர் சரிசமமா நடத்தறார்” என புகழ லத்திகாவிற்கு அவன் அப்படி நடந்தது சரி தானோ என்று நினைத்தாலும் மற்றவர்களும் நானும் ஒன்றா? என கேள்வி உள்ளே புகுந்தது.
மாலையில் அவள் வண்டி அருகே நின்று ‘நானே ட்ராப் பண்றேன் ஏறு” என்றான்.
”தேங்க்ஸ் ஆனா எனக்கு நாளை காலையில் பஸ்ல வர பிடிக்கலை . அதனால என் ஆடி காரில் நானே வந்துடறேன் ” என சிறிது உன் மீது கோவத்தில் இருக்கின்றேன் என்பது போல காட்டி போன முறை தனது ஸ்கூட்டி ஆடி கார என்றதற்கும் சேர்த்தே பதில் கூறி ஸ்கூட்டி எடுத்து விரைந்தாள் .
அவனோ ராட்ஸசி நான் சொன்னதை எப்ப கேட்ப? என காரில் பின் தொடர்ந்தான் .
வீட்டில் நுழையும் போதே , ”உங்க அருமை மாப்பிள்ளை வர்றா..” என அப்படியே நிறுத்திவிட்டாள் பவானி அங்கே இருப்பதை அறிந்து
”வாங்க மாமா வாங்க அத்தை.” என்றாள் .
”என்ன லத்திகா உங்க பாஸ் ரொம்ப திமிர் பிடிச்சவனோ ஒரு ரெண்டு மணி நேரம் கூட பர்மிஸ்ஷன் தர மாற்றான் .” என ராஜன் சிரிக்க ,
”ப்பா போதும் என்னை கிண்டல் பண்ணியது. அவளே கோவத்துல இருக்கா இதுல நீங்க வேற … ” என கார் சாவியை சுழற்றியபடி வந்து சோபாவில் அமர , அவனுக்கு தயாராக எடுத்து வந்து பருக ஆரஞ்சு பழச்சாறை கொடுத்தார் சகுந்தலா.
லத்திகா அறைக்கு செல்ல பின்னாலே சென்று சேலை எல்லாம் கட்ட வேண்டாம் லத்திகா. நீயே அலுவலகத்துல இருந்து சோர்வா வந்து இருப்ப. அதனால முகம் அலம்பி வா நான் தலை வாரி பூ வச்சி விடறேன்” என்றார் பவானி.
” ம் ” என முகம் அலம்பி வந்து நிற்க கட்டிலில் அமர வைத்து லத்திகாவிற்கு தலை பின்னி விட்டார் .
அப்படியே , ”பிருத்வி இப்படி பண்றான்னு கோவிச்சுக்காத லத்திகா அவன் உன்னை ரெண்டு மணி நேரம் கூட பார்க்க முடியாம தவிக்கிறான். கிடைச்ச நேரத்தை அவன் இழக்க விரும்பலை அதான்” என சொல்ல மனதினுள் ஐயோ சிடுமூஞ்சிக்கு என்னை பார்க்க தான் இப்படி பண்றானா , இது உலக மகா நடிப்பு. பாவம் அத்தை மாமா இப்படி எடுத்துகிட்டாங்க அதுவரைக்கும் பரவாயில்லை’ என சிரித்து மழுப்ப அவள் தலையில் நெருக்கமாக கட்டிய ஜாதி மல்லி சரம் வைத்து விட்டு,
”உனக்கு ஜாதி மல்லி இஷ்டம் என்று சகு அண்ணி சொன்னாங்க அதான் அதே வாங்கிட்டேன்”
அதற்கும் சிரித்து பதிலை தந்தாள் லத்திகா.
”என்கேஜ்மென்ட் வேண்டாம் நேரிடையா கல்யாணம் என்று பேசிக்கிட்டாலும் உன்னை பார்த்து பூ வைச்சு கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம் என்று தான் வந்தோம். இவன் என்னடா என்றால் உன்னை ஆபிஸில் இருக்க வச்சிட்டான்” என அலுத்து கொள்ள,
”அதுக்கு என்ன அத்தை பரவாயில்லை . நீங்க எப்ப வேண்டுமென்றாலும் வந்து பார்க்கலாம்” என புன்னகையோடு பதில் சொன்னாள் லத்திகா . மேலும் பேசி விட்டு மாலை உணவு உண்டு முடித்தே சென்றனர்.
திருமணத்திற்கு தேவையான ஆடைகள் எல்லாம் ராஜன் டிரஸ் வேர்ல்ட்’ லே எடுத்திட அதற்கு என்று நேரம் ஒதுக்கவில்லை. அழைப்பிதழ் அடித்து இருவீட்டாரும் கொடுக்க செல்வதால் பெரும்பாலும் நாட்கள் அதற்கே போதுமானதாக இருந்தது .
👌👌👌👌💕💕💕💕💕💕💕
🌟🌟🌟🌟🌟