Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-16

உன்னில் தொலைந்தேன்-16

💟16
                               அன்று சந்தீப் போன் செய்து இருந்தான் லத்திகாவிற்கு , புவனா ஆண் குழந்தை பெற்று எடுத்திருக்கின்றாள் என்று, அலுவலகத்தில் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிவித்தாள் .
                             புவனாவின் அலுவலக பணி பாதி லத்திகா பொறுப்பானது . பிருத்வியை அடிக்கடி பார்க்க நேர்ந்தது.


      ”சார் வேலை முடிச்சுதுன்னா நான் கிளம்பலாமா?” என கிளம்ப ஆர்வமாக இருப்பவளிடம் பிருத்வி அதை கேட்டே விட்டான் .


       ”என்ன இன்னிக்கு வீட்டுக்கு போக ரொம்ப அவசரமா?” என்றான். 
       ”பச் அப்படி இல்லை. புவனாக்கா பேபி பார்க்க போகலாம் என்று இருந்தேன் அதான். பிறந்த அன்னிக்கே குழந்தை எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையா இருக்கு” என்றாள்.
                               சிறிது நேரம் யோசித்தவன் ”ஓகே நீ போ பட் ஒன் கண்டிஷன் என்னையும் கூப்பிட்டு போ” என்று கோரிக்கை வைத்தான். 


       ”நிஜமா?”என்று ஆச்சரியமாக கேட்டாள். 
       ”எனக்கும் பிறந்தவுடன் குழந்தை எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலை இருக்கு” என்றான்.
        ”அப்ப கிளம்பலாம்” என உத்தரவு கொடுத்ததும் கிளம்பினார்கள்.
                                           அவன் காரை திறந்து வைத்து அவளை பார்க்க, அவளோ ஸ்கூட்டி அருகே சென்று அவனை பார்த்து, பின்னர் அவன் அழைக்காமலே காரில் ஏறினாள்.


               காரினுள் ஏதும் பேசாமல் இருக்க பிருத்வி பேசினான்.
      ”லத்திகா ஹாஸ்பிடலில் அதிக நேரம் இருக்க வேண்டாம். சோ … ” என்று விரைவாக கிளம்ப கூறினான்.
      ”ஹ்ம் சரி.  குழந்தைக்கு ஏதாவது வாங்கணும் ஜஸ்ட் பார்ன்ல கிட்ஸ் ஐட்டம் வாங்கிட்டு போகலாம்” என்று அவனை அங்கேயும் அழைத்து சென்றாள் .
                             கண்ணில் படும் சோப்பு ஷாம்பு முதல் டவல் ஷாக்ஸ் என பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டாள். அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.


      ”உனக்கு நம்ம ஆபிஸ்ல புவனா தான் டியரெஸ்ட் பிரெண்டா?”
     ”ஆமா எப்படி தெரியும்”
      ”நீ கிப்ட் வாங்கும் வேகத்துலயே தெரியுது”
      ”ஹலோ பிடிச்ச நபருக்கு கிப்ட் கொடுக்க கூடாதா”
      ”ஹ்ம் கொடு கொடு… என்ன எனக்கு எல்லாம் அப்படி யாரும் இல்லை.” என்று போலியாக வருத்தப்பட, லத்திகா அவனை பார்த்துவிட்டு வருத்தத்துடன் பில் போட்டு விட்டு வாங்கி வந்து காரில் அமர்ந்தாள். அவனும் அமைதியாக காரை ஒட்டி வர,
        ”எதுக்கு அப்படி சொன்னிங்க ப்ரஜன்?” என்றாள்


       ”எப்படி …”
       ”கிப்ட் கொடுக்கற மாதிரி யாரும் இல்லைனு சொன்னிங்க” என வருத்தத்துடன் தலை கவிழ,
      ”நிஜமாவே இல்லை தான். ஏன் நீயே எனக்கு ஏதாவது கிப்ட் வாங்கி கொடுத்தியா?” என்று காரினை சிக்னல் பார்த்து ஒட்டியபடி கூறினான்.


      ”கொடுக்கலை… ஆனா வாங்கலை என்று யார் சொன்னா” என்றாள். உள்ளுக்குள் சென்ற குரலில் காரினை வேகமாக ஒரு ஒரத்தில் நிறுத்தியவன்
     ”கம் அகைன். இப்ப என்ன சொன்ன?”
    ”ஒண்ணுமில்லை”
    ”ஏய்… ஏதோ கிப்ட் எனக்கு வாங்கி இருக்கற மாதிரி.. ஆனா கொடுக்காத மாதிரி ”
     ” அதெல்லாம் ஒண்ணுமில்லை”
     ”ஹ்ம் அப்ப நான் சொல்றது தான் ரைட் . எனக்கு யார் கிப்ட் கொடுப்பா” என்றான் முகத்தை தூக்கியபடி
     ”ப்ளீஸ் ப்ரஜன். எதுக்கு அப்படி சொல்றிங்க எனக்கு ஒரு மாதிரி வருத்தமா இருக்கு”
       ”நீ ஏதோ வாங்கலை என்று யார் சொன்னா என்று தானே சொன்ன அப்ப என்ன வாங்கின ? அதை சொல்லு” என்று ஆர்வமாக அவளிடம் பேச்சினை துவங்கினான். அவளது ப்ரஜன் அழைப்பு வேறு அவனை அப்படி பேச வைத்தது.


       ”பச் வேண்டாம்”
       ”நீ சொல்ற வரை இங்கயே இருக்கலாம். நோ ப்ராப்ளம்” என சீட்டில் சாய்வாக அமர்ந்து அவளை பார்க்க,
       ”ப்ளீஸ் , வண்டிய எடுங்க ப்ரஜன்” என்றதற்கு தலையை இடம் வலமாக ஆட்டினான். அவளின் ப்ரஜன் என்று ஒவ்வொரு அழைப்பும் அவனுக்குள் பித்து பிடிக்க வைத்தது. அவனை ஒரு பெண் இப்படி செல்லமாய் அழைத்து பேசுவது ரசித்தான். 
      ”சரி நான் அந்த கிப்ட் காட்டுவேன் நீங்க சிரிக்க கூடாது. இது தானா என்று கேலி செய்ய கூடாது. பிராமிஸ்” என கையை நீட்டி கேட்க,
       ”நிஜமாவே எனக்கு கிப்ட் வாங்கி வைச்சிருக்கியா?”
       ”ஹ்ம் …. ”
       ”ரியலி காட்டு” என ஆர்வமாக கேட்க, தனது கைப்பையில் துழாவி சிறிய பெட்டி ஒன்றை எடுத்து நீட்டியபடி ,
         ”இப்பவே சொல்லிட்டேன் சிரிக்க கூடாது , கேலி செய்ய கூடாது ” என்றதும் அந்த பெட்டியை பார்த்து அவளையும் பார்த்துவிட்டு வாங்கினான்.


            ‘ இதுல என்ன இருக்கும் மோதிரமா? இல்லை வாட்ச்சா? அந்த சைஸ் தான் இருக்கு ‘ என யோசித்தபடி பிரிக்க, அதில் இன்னும் ஒரு பேக் செய்து முடித்து இருந்தது. அதையும் பிரிக்க பிருத்விக்கு ஆர்வமாக திறந்தான்.
                              கார் கண்ணாடி கதவு வழியாக தனது முகத்தை திருப்பி கொண்டாள் லத்திகா. அவன் பிரித்து முடித்து அப்பெட்டியினை திறக்க அதில் இருந்த கிப்ட் பார்த்து பேச்சற்று இருந்தான். ஏன் எனில் அதில் இருந்தது மூணு சிகரெட் லைட்டர் . அதுவும் தங்க முலாம் பூசிய லைட்டர் .
       ”சாரி உங்களுக்கு இது பிடிக்காது. அதுவுமில்லாம இது எல்லாம் போய் கிஃப்டா கொடுக்க மாட்டாங்க எனக்கு தெரியும். பட் பார்த்ததும் உங்களுக்கு வாங்கணும் என்று தோணுச்சு. வாங்கிட்டேன் ஆனா கொடுக்க முடியலை” என்றாள்.


       ”நான் ஸ்மோக் பண்ணுவேன்னு யார் சொன்னா?” என்றான். அம்மா அப்பாவுக்கு தெரியாதே? 
      ”அ… அது அன்னிக்கு ஒரு நாள் பார்த்தேன். நீங்க ரயில் வண்டி மா.. மாதிரி… ஸ்மோக் பண்ணியதை” என்றாள். 
       ”சோ… அதை விடணும் அதுக்கு தான் இந்த கிப்ட் ரைட்” என்றான் கோவத்தோடு. தன் பழக்கத்தை சுட்டி காட்டா கோபமானான் 
      ”நான் அப்படி சொல்லலை . ஆனா விட்டுட்டா ந.. நல்..” என முடிக்க முடியாமல் திணற ,
       ”சொல்லவருவதை ஒழுங்கா சொல்லு , கேட்பதும் கேட்காமல் போறதும் என் இஷ்டம் ” என்றான் பிருத்வி.


       ”சரி சொல்லிடறேன் . எனக்கு நீங்க ஸ்மோக் பண்றது விடணும், உடனே இல்லை என்றாலும் இந்த மூணு லைட்டர் காலி ஆகுவதற்குள். அப்படி நினைச்சு தான் உங்களுக்கு வாங்கி கொடுக்க நினைச்சேன். அப்பறம் கொடுக்க தோணலை. இத போய் கொடுக்க வேண்டாமே என்று என் பேக்லயே வச்சிக்கிட்டேன் போதுமா… அதோட நான் சொல்வதை கேட்பிங்களா? வண்டியை எடுங்க கொடுங்க லைட்டர்” பிடிவாதத்துடன் பிடுங்க போனாள். 

அவனோ ”தேங்க்ஸ் ரொம்ப நல்லா இருக்கு கிப்ட் ” என்றான் அப்படியே அவனே வைத்து கொண்டான். அதன் பிறகு ஏதும் பேசாமல் வண்டியை ஹாஸ்பிடலில் பார்க் செய்துவிட்டு இறங்கினான்.
        லத்திகாவிற்கோ என்ன இது ஏதும் சொல்லவில்லை நல்லா இருக்கு என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக வருகின்றான்.


     ஸ்மோக் பண்றதை விடறேன் லத்திகா உனக்காக ஸ்மோக் பண்றதை விட்டுடறேன் என்று சொல்வான் என எதிர்பார்த்து இருக்க அவனோ ஏதும் சொல்லவில்லை.
           ஆனால் சொல்வதை விட செயலில் காட்டுவதே சிறந்தது என்று அவன் அக்கணமே ஸ்மோக் செய்வதை மனதினுள் நிறுத்த முடிவு செய்தான்.
                             மருத்துவமனை வந்ததும் கீழே விசாரித்து புவனா இருக்கும் இடத்திற்கு லிப்டில் ஏற அங்கும் அமைதியாக வந்தான்.


                   கதவை தட்டி விட்டு புவனா அக்கா என்று குரல் கொடுத்துவிட்டு உள்ளே நுழைய , சந்தீப் தான் வரவேற்றான்.
      ”வா லத்திகா , வாங்க பிருத்வி’ என்றான்.
     ”கங்கிராஸ் சந்தீப் என்று பிருத்வியும் கங்கிராஸ் அண்ணா என்று லத்திகாவும் வாழ்த்தை தெரிவித்தனர் .
                 புவனா பேச முடியாமல் கஷ்டபட லத்திகாவே ”புவனா அக்கா ஸ்ட்ரைன் பண்ணாதீங்க” என புவனாவின் தாயார் கையில் இருக்கும் குழந்தையை பார்த்து மகிழ்ந்து ரசிக்க செய்தாள்.
      ”வாவ் செம அழகு. அப்படியே குட்டி பொம்மை மாதிரி இருக்கு” என அள்ளி அணைத்து தூக்க அவளிடம் அக்குழந்தை அப்படியே உறக்கத்தில் இருந்தது .


       ”நீங்க தூக்கறிங்களா ப்ரஜன்” என்றாள் .
       ”நோ நோ, எனக்கு அதெல்லாம் தெரியாது. பார்க்க ரசிக்க பிடிக்கும். தூக்கலாம் வராது ” என சொல்லிட ,
      ”பிருத்வி எனக்கும் பயம்… இன்னும் தூக்கலை” என சந்தீப் தன் பங்கிற்கு சொல்லிட , புவனாவின் அம்மாவிடம் மீண்டும் லத்திகா அக்குழந்தையை ஒப்படைத்தாள்.
        ”உங்களுக்கு எப்ப கல்யாணம் என்று புவனாவின் அம்மா கேட்டதும் யோசிக்காமல் சட்டென இன்னும் பதினாரு நாள் இருக்கு ஆண்ட்டி என்றாள்.


                                         பிருத்விக்கு அப்பொழுது தான் அவளும் திருமண நாட்களை எண்ணுகின்றாள் என அறிந்தான். அவனுக்கு இன்று எல்லாம் சந்தோஷமாக இருப்பதாகப்பட்டது.
        லத்திகா அவனுக்கு கிப்ட் கொடுத்தது, பிருத்வி என்று எல்லோரையும் போல அழைக்காமல் ப்ரஜன் என்று தனித்து அழைப்பது, திருமண நாட்களை அவனை போலவே அவளும் எண்ணி வைத்து இருப்பது என எல்லாம் அவனின் மனதிற்கு இதமாக இருந்தது.


                                                  குழந்தைக்கு வாங்கி வந்த பொருட்களை கொடுத்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மனமகிழ்ச்சியோடு விடை பெற்று கிளம்பிடவும் செய்தனர்.

2 thoughts on “உன்னில் தொலைந்தேன்-16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *