Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-17

உன்னில் தொலைந்தேன்-17

                                                                   💟17
                                                                    அடுத்த இரு தினத்தில் சனி ஞாயிறு வந்தமையால் பிருத்வி லத்திகாவிடம் பேச நினைத்து இருந்தது எல்லாம் திங்களில் அவளை பார்த்ததும் பேச்சிழந்து இருந்தான். அலுவலகத்தில் பிருத்வி நோட்டீஸ் போர்டில் ஒட்டி விட்டு மட்டும் இருந்தான். லத்திகா மட்டும் ஒவ்வொருத்தரை நேரிடையாக அழைப்பிதழ் கொடுத்து அழைத்தாள்.
                        பிருத்வியிடமும் போய் நின்று அப்படியே இன்றில் இருந்து லீவ் சொல்லி விடலாம் என நினைக்க, அவனோ சினத்தை தான் மூட்டினான்.


        ”கல்யாணத்துக்கு லீவ் எத்தனை நாள் என்று சொல்லிட்டீங்கனா இப்பவே டைப் பண்ணி எடுத்துக்கொண்டு வந்துடுவேன்” என லத்திகா சொல்ல ,
        ”ஹ்ம் ஒரு ஒருவாரம் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி எடுத்துக்கோ ” என்றான்.
                                                  லத்திகாவிற்கு அவன் சட்டையை பிடித்து உலுக்கி டேய் கல்யாணத்துக்கு ஒரு வாரம் போதுமா டா’ என டோஸ் விட வேண்டும் போல இருக்க பொறுமையாக வெளியேறினாள்.
                       ப்ரஜனும் ‘ஏன் டி என் சட்டையை பிடித்து உரிமையா கேட்க என்ன தயக்கம்?’

என்றெண்ணினான். அப்பொழுது தானே உன்னை பார்க்காம இருக்க முடியலை அதான் லீவு கொடுக்க முடியலை என்று சொல்ல நினைத்தான்.


                                        இருவருமே மௌனமாக ஒருவருக்கொருவரிடம் மனதில் பேசி கொண்டு இருந்தனர்.
                                நாட்கள் மட்டும் காலில் சக்கரம் கட்டி கொண்டு அலைந்ததோ?! வேகமாக தான் போயின.
            இருதினம் முன்பே லத்திகா அலுவலகம் வரவில்லை. பிருத்விக்கு தான் ஏதோ சக்தி இழந்து இருப்பதாகபட்டது. அங்கு அவளுக்கு அப்படி ஏதும் கவலை கொண்டதாக தெரியவில்லை. அவள் தான் ரோஷனிடம் வீட்டில் கேக் செய்து கொண்டும், மொபைலில் செல்ஃபி எடுத்து கொண்டு பொழுது விரட்டி  கொண்டு இருந்தாளே.


                                             எதிர்பார்த்த திருமண நாளும் வந்து நின்றன. மாலையில் வரவேற்பும் காலையில் திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
                                         வரவேற்பில் லேஹங்கா அணிந்து கொண்டு வந்தவளை பார்த்து அசந்து நின்றான். அவன் கோட் சூட் அடிக்கடி அணிவதால் அவளுக்கு அதில் பெரிதாக எண்ணவில்லை.
                 தனியாக அவனிடம் நிற்பது ஒரு அவஸ்தையாக தான் இருந்தது. அக்கா தங்கை என்று கூட இருந்தால் அப்படி தோன்றி இருக்காதோ என்னவோ. அப்பொழுது தான் அவ்வெண்ணம் தோன்றியது அவளுக்கு, சே இப்படி தனியா நிக்க வச்சிட்டு அம்மா அப்பா வந்தவர்களை வரவேற்க போயிட்டாங்க. எனக்கு ஒரு அக்கா தங்கை பெற்று கொடுத்து இருந்தா என் கூடவே இருந்து சப்போர்ட்டா இருந்து இருக்கும். ஒரே குழந்தையா ஏன் என்னை இருக்க விட்டாங்களோ நான் எல்லாம் கண்டிப்பா ரெண்டு இல்லை இல்லை மூணு குழந்தை பெற்று கொள்வேன் ‘ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.


              பாதிக்கு மேலாக அலுவலகம் சார்ந்த நபர்களே இருந்தனர். அதனால் அவன் கைகுலுக்குவதும், சிரிப்பதும் இருக்க அவளுக்கு மலைப்பாக இருந்தன. அவளின் தனிமை உணர்ந்தவன் அதை நிவர்த்தி செய்ய அக்கணமே யோசிக்க செய்தான். அதற்கு ஏற்றாற்போல் அவளின் கல்லூரி தோழிகள் வந்து சேர,
புன்னகை செய்தவளை கண்டு நிம்மதி அடைந்தவன். அவன் அருகே புகைப்படம் எடுக்க நின்ற பெண்னிடம்,
      ”சிஸ்டர் அவ லோன்லியா பீல் பண்றா இப் யூ டோன்ட் மைண்ட் உங்களில் யார் நீயர் லோகேஷன்ல இருந்து வந்து இருக்கீங்களோ அவகூடவே இருக்க முடியுமா? பங்ஷன் முடிஞ்சதும் நாங்களே டிரைவர் கிட்ட சொல்லி ட்ராப் பண்ண சொல்லிடறோம் ” என மென்மையாக கேட்டிட ,
       ” நோ ப்ராப்ளம் அண்ணா . எனக்கு மூணு ஸ்டாப் தான் வீடு அப்பாகிட்ட சொல்லிட்டு நானே அவ கூட இருக்கேன் ” என சொல்லியதும் தான் பிருத்வி புன்னகையோடு ,
       ”தேங்க்ஸ் சிஸ்டர் … உங்க நேம்… ”


       ”ரெஜினா  அண்ணா ” என்றதும் போட்டோ எடுத்து கீழே இறங்கியது நட்பு வட்டத்தில் கூறிவிட்டு லத்திகாவிடம் வந்து அருகே ,
       ”ஏய் லத்திகா உனக்கு லோன்லியா இருக்கு என்று என்கிட்ட சொல்ல என்னடி .அண்ணா கேட்கற மாதிரி பண்ணிட்டியே”
       ” இல்லைப்பா உன் விழாவுக்கு வந்து இன்னும் கொஞ்சம் நேரம் இருங்க என்று சொன்ன, நாங்க உன்னை விட்டுட்டு வந்துட்டோம் இப்ப எப்படி கேட்க என்று இருந்தேன். ப்ரஜன் கேட்டுட்டார்”
     ”ஏய் எனக்கு கூட என் அத்தை பொண்ணு இருந்தா அப்பறம் ஒன்னு விட்ட தங்கச்சி இருந்தா , உனக்கு கூட யாருமில்லாம இருக்கறப்ப அப்படியா நினைப்போம். சரி சரி போட்டோவுக்கு போஸ் கொடு , மற்றதை அப்பறம் பேசலாம்” என சொல்லிட,
       ”தேங்க்ஸ் டி ரெஜி … ” என்றாள்.


      ”தேங்க்ஸ் ஆஹ் உன் உட்பி க்கு சொல்லு” என்றாள் ரெஜினா.
                                    புன்னகையோடு ப்ரஜனை காண அவனோ அருகே இருக்கும் நபரிடம் கைகுலுக்கி புன்னகை புரிந்து வாழ்த்தை ஏற்று கொண்டு இருந்தான்.
                                 ஒரு வழியாக நேரம் செல்ல செல்ல கூட்டம் குறைவது போலானதும் மணமக்களை சாப்பிட சென்றனர். ரெஜி நீ நாளைக்கும் என்கூடவே வந்து கம்பெனி தர்றியா?”
       ”நீ சொல்லனுமா கண்டிப்பா வர்றேன்”
       ”ஹ்ம்ம்.. வீட்டுக்கு போனதும் போன் பண்ணு ரெஜி ”
       ”சூர் லத்திகா, நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு பை” என ரெஜினா கிளம்பிட பின்னர், லத்திகாவையும் சகுந்தலா அழைத்து போய் அறையில் விட்டுவிட்டு பவானியிடம் நாளை ஏற்பாட்டிற்கு சில பொருட்கள் வேண்டி சகுந்தலா கீழே இறங்கி சென்றிட லத்திகா தனித்து இருந்தாள்.
                                           நகைகளை மாற்றி விட்டு உடைகளை மாற்றி விட்டு முகம் அலம்பி வெளியே வர ப்ரஜன் ஜாலியாக மெத்தையில் புரண்டபடி படுத்திருந்தான்.


                          இருவரும் ஒரே நேரத்தில் பார்த்து விட்டு ,
     ”ஏய் நீ எங்க இங்க?” என்று அவனும்
     ”நீங்க எங்க இங்க?” என்று அவளும் கேட்க, அவனோ சட்டென திரும்பி கொண்டு
     ”அம்மா தான் மாடியில் செகண்ட் ரூம் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க” என்றான் .
                            அப்படியே வெளியில் வந்து ரூமை எண்ணிக்கை செய்ய அது இரண்டு என்று வந்தது. அங்கே நான்கு அறை இருக்க, குழம்பியவன் அடுத்த நொடியே நீ எந்த பக்கம் இருந்து வந்த என்றபடி கேட்டு உள்ளே வர வலது பக்கம் கையை நீட்ட,


       ”ஒஹ் இது டூ வே போல, நான் இந்த பக்கம் இருந்து வந்தேன்” என்றான்.
                               அவன் முன் முகம் அலம்பிய ஈரத்துடன் நயிட்டி அணிந்து நிற்பதை கவனித்து,
       ”முதலில் வெளியே போங்க ” என்றாள் கோபத்துடன்.
      ”ஹலோ இப்ப எதுக்கு கோவப்படற, தெரியாம தானே வந்தேன் . ரொம்ப ஓவரா பண்ற ” என்றான்
       ”கொஞ்ச நேரத்துக்கு முன்ன உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்று நினைத்தேன் அது இப்ப கேன்சல். வெளியே போங்க ” என்று கதவை திறந்ததும் பட்டென்று சாற்ற பிருத்வி திரும்ப அவனின் மூக்கில் கதவு பட்டு விண்ணென்று வலி கொடுக்க ”ஸ்…ஆ….” என அலறினான். 

அவனின் அலறல் கேட்டு மீண்டும் கதவை திறந்த லத்திகாவை அவன் மூக்கை தேய்த்து கொண்டே முறைக்க லத்திகாவுக்கு தான் கதவை சாற்றியதால் அவனின் மூக்கில் பட்டு வலித்திருக்கின்றது என்றறிந்து அவன் முகம் கொஞ்சம் கோவத்தை காட்ட மெல்ல கதவை தாழிட்டாள். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அவன் திட்ட காத்திருக்க உடனே கதவை மூடியதும் அவனுக்கு கோவம் வந்தாலும் எதையும் பேச முடியாமல் விட்டுவிட்டான்.


                            ‘ ராட்சஷி ராட்சஷி… மூக்கை உடைச்சுட்டு சாரி கேட்குறாளா பாரு… சட்டுனு கதவை மட்டும் சாற்றி கொண்டா…  என்னைவேற  வெளியே போ என்று சொல்ற நாளைக்கு கவனிச்சுக்கறேன் டி…. என்று பக்கத்து அறையில் வந்து படுத்தவன் எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும் நினைச்சேன் என்றாள்…. என சிந்திக்க அது அவள் தோழியை அருகே இருக்க வைத்ததற்கு என்று புரிந்தது . ஹ்ம் நான் உனக்காக தானே பார்த்து பார்த்து செய்யறேன் அப்பவும் கோவிக்கறா ராட்சஷி ராட்சஷி , இதுல நைட்டி வேற ‘ என நினைத்தவன் உதட்டில் குறுநகை உதிர்க்க தலையணையில் தலைக்கு மேலும் கையை மடக்கி படுத்து ஓடும் மின்விசிறியை பார்த்த வண்ணம் மூக்கை தேய்த்த படி இமை மூடினான்.


                                      அங்கு அவளோ நான் ஏன் அவனை திட்டி அனுப்பினேன். நைட்டி போட்டு முன்னாடி நின்றது நான் அவன் திரும்பி தான் நின்றான். ப்ரஜன் குட் பாய் ஆனாலும் மூக்கு பாவம் வலிச்சுருக்குமோ…? வலிச்சா என்ன வலிக்கட்டும் பரவாயில்லை… அவனுக்கு வேணும்…. இனி லத்திகாகிட்ட வம்பு பண்ண கூடாது என்று புரியும்.. இருந்தாலும் ஒரு சாரி கேட்டு இருக்கலாம் ஆனா அவன் முறைச்சானே… என்னை திட்டிடுவாரோ பயந்து தான் டோர் லாக் பண்ணேன்’ என புலம்பியபடி உறக்கம் தழுவினாள்.

2 thoughts on “உன்னில் தொலைந்தேன்-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *