💟19
லத்திகா ப்ரஜன் திருமணம் இனிதாய் முடிய, முதலிரவை தள்ளி வைக்க திட்டம் திட்டினாள். பேசாம ப்ரஜன்கிட்டயே இப்ப நோ சொல்லிடலாமா?! என்று யோசிக்க. “ஏய் லத்திகா இன்னும் என்ன பண்ற?” என்ற அதட்டலில் ”வர்றேன்” நிம்மதியா யோசிக்க கூட விடமாட்டா இந்த சகு’ என்று கதவை திறக்க அங்கே ப்ரஜன் நின்றிருந்தான்.
”அ.. அத்தை… கூப்பிட்டாங்க….” என்றவனின் திணறலில் அவள் மூளை மொத்தமாக மழுங்கிவிட்டது.
ப்ரஜன் அவள் சென்றதும் அவ்வறைக்குள் நுழைந்தான். குறுக்கும் நெடுக்கும் நடந்தவன்…… இது வரை லத்திகா கிட்ட ஒரு வார்த்தை அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகறதை பற்றியோ பேசியதே இல்லை… இப்போ என்ன தான் பண்றது….
மிதமான ஒப்பானயில் பாலோடு வந்து நின்றவளை பார்த்தவன். அவளின் விழி நிமிராது நிலம் நோக்கும் பார்வைக்கு ஒரு மென்னகை உதிர்க்க, அந்த சிறு சப்தமும் அவள் அவனை பார்க்க போதுமானதாக இருக்க, சட்டென பார்வையை சுவரில் நிறுத்தினான்.
”உங்க வீடு மாதிரி பெரிய அறை இல்லை” என்ற குரல் கேட்டு, அவளை பார்த்து நெற்றி சுருங்க அவளது பேச்சின் அர்த்தம் உணர்ந்து, ‘அப்பா பொண்ணு ரெண்டு பேரும் சுவற்றை பார்த்தா இப்படியா அர்த்தம் எடுத்துப்பாங்க’ என பெருமூச்சை விடுத்தான்.
”இது சின்ன வீடு சின்ன அறை… நீங்க முதல் தடவை வந்த அப்பவே பார்த்து இருக்கனோம். இப்ப முதல் ராத்திரில…”அப்படியே பேச இயலாமல் வாயை முடியவளை பார்த்து மேலும் சிரிப்பு மட்டுமே வந்தது ப்ரஜனுக்கு.
”எஸ் எனக்கு இந்த பெட் கம்பர்டப்ளா இருக்குமா என்பதே டவுட் தான்” என்று விளையாட்டை ஆரம்பித்தான்,
”இதுக்கு தான் உங்க தரத்துக்கு பெண் பார்த்து இருக்கணும்” என்றவள் குரல் கிணற்றுக்கடியில் கேட்டது
”ம்…. கம் அகைன் என்ன சொன்ன” என்றான் கொஞ்சம் துளிர்த்த கோவத்தில்
”ஒன்னுமில்லை… எனக்கு தூக்கம் வருது போதுமா” என்றாள் முறைப்போடு
”ஓகே போய் தூங்கு… எனக்கு இடம் போதாது நீ கீழே தூங்கு” என்றான் அவனும் கோவத்தோடு.
”இது என் ரூம் என் பெட் நீங்க வேணுமென கீழே தூங்குங்க” என்ற வார்த்தை விட்ட பிறகே தனது பேச்சின் தோரணை சரியில்லை என உணர்ந்தாள். இந்த முதலிரவு பற்றி அவன் பேசாதபோது தானாக தனியாக படுத்து கொள்வதாக கூறியிருக்க அவள் வீம்பு பேசி இவளை ஆட்கொண்டால்….
”நோ வே, எனக்கு பெட்ல படுத்து தூங்கி தான் பழக்கம் நீ வேண்டும் என்றால் கீழே தூங்கு” அவனின் சாதாரண பேச்சில் தான் மீண்டும் உயிரே வந்தது.
வாதம் செய்ய விரும்பாமல் போர்வையை விரித்து தலையணை போட்டு படுத்து கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அனிச்சையாய் உறங்கியும் போனாள். இதோ இப்பொழுது கொஞ்ச நேரம் முன் குளித்த வெந்நீர் குளியலின் புண்ணியத்தில்……….
ஒரு தடவைக்கு பல தடவை அவளை பார்த்து பார்த்து இன்னிக்கு முதலிரவு தூங்கறாளா? என்று நிஜமாகவே அவள் உறங்குவதை கண்டதும் அவளின் அசதியை கருதி தானும் உறங்க முயன்று அவளை பார்த்து பார்த்து உட்கார்ந்து மீண்டும் படுத்து ஒரு வழியாக உறங்கியும் போனான்.
அதிகாலையில் சிறிது உறக்கம் தெளிய விழியை சிறிதாக திறந்தவனுக்கு அருகில் கட்டிலின் விளிம்பில் லத்திகா உறங்குவது கண்ணில்பட்டது.
‘இவ எப்ப மேல வந்து தூங்கினா’ என்று யோசித்து குளித்து வர அப்பொழுதும் உறங்கியே இருந்தாள். கும்பகர்ணன் தங்கச்சி என அவளை பார்த்து முடியை சிலுப்பிட அவனின் தலையில் இருந்து நீர் சொட்டுக்கள் அவளின் மீது பனியாய் தெளித்தது.
மெல்ல உறக்கம் செல்ல எழுந்து அமர்ந்தவள் அவனின் கேசம் அலைபாய்ந்து நெற்றியில் விழுவதை ரசித்து பார்க்க, கண்ணாடியில் அவளை பார்த்தவன் திரும்ப அவள் பார்வை திருப்பி கொண்டு குளியல் அறைக்கு சென்றாள்.
நள்ளிரவில் ப்ரஜன் உறங்கிய இடம் தவிர்த்து அவள் உறங்கும் அளவு இடம் இருக்க லத்திகா எழுந்து மெத்தையில் உறங்கினாள் அதிகாலையில் எழுந்து கீழே படுத்துக்கலாம் என்று தான் நினைத்து இருந்தாள். அவளுக்கு முன்பாகவே அவன் எழுந்து விடுவான் என நினைத்து பார்க்கவில்லை.
ஹாலில் சூடாக க்ரீன் டீ போட்டு சகுந்தலா நீட்ட,
” அத்தை மார்னிங் நான் க்ரீன் டீ குடிப்பேன் எப்படி தெரியும்”
”அண்ணி உங்களுக்கு க்ரீன் டீ தான் குடிப்பீங்க சொன்னதால முன்பே வாங்கி வைத்து விட்டோம் மாப்பிள்ளை”
”ஓ, அத்தை சமையல் வாசனை அசத்தலா வருது”
”பொங்கல் பூரி சாம்பார் சென்னா மசாலா சட்டினி , கேசரி பாயசம் தான் தம்பி”
”இதெல்லாம் நீங்க தனியாவா செய்திங்க வாவ் கிரேட் அத்தை” என்று பாராட்டினான். இவன் வீட்டில் எல்லாம் பணியாட்கள் தானே செய்வது.
லத்திகா குளித்து முடித்து இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்தாள். கண்ணாடியில் தலையினை துவட்டியபடி ‘டேய் கொஞ்சமா ஐஸ் வைடா அம்மாவுக்கு ஜுரம் வந்துட போகுது’ என்று மனதில் கவுண்டர் கொடுத்து கொண்டு இருந்தாள்.
”லத்திகா வந்துட்டியா வா சாப்பிட உட்கார்.”
”ம்மா எனக்கு ரெண்டு டிஷ் செய்ய சொன்னா செய்ய மாட்ட இப்ப என்ன…” என்றாள்
”எல்லாம் மாப்பிள்ளைக்கு ம்மா” என்ற படி பரிமாற, லத்திகா முறைக்க அதை ப்ரஜன் கவனித்து எப்பொழுதும் போல மென்னகை புரிந்தான். அவன் நேரம் லத்திகா அதை பார்க்க அவளுக்கு சினமே வந்தது.
தனித்து வளரும் குழந்தைகள் எதையும் பகிரவோ தீடிரென தனக்கு முன்னுரிமை விடுத்து தாய் தந்தையர் வேறு ஒருவருக்கு முன்னுரிமை அளிக்க ஏற்படும் உணர்வே லத்திகாவை வாட்டியது.
வாசலில் நிழல் ஒன்று மறைந்து மறைந்து வர ப்ரஜன் எட்டி பார்க்க, குட்டி உருவம் ஒன்று மறைந்தது.
லத்திகாவும் பார்க்க ”ஏய் ரோஷன் வா இங்க…” என்றாள்.
”என்ன டா எப்பவும் நேரா வந்து சோபால குதிப்ப இப்ப என்ன பதுங்கி பதுங்கி வர?” என்ற லத்திகா கேள்விக்கு ப்ரஜனை வில்லனை பார்ப்பது போல பார்த்து கொண்டே லத்திகாவின் கையை இறுக பற்றினான்.
ப்ரஜனோ மனதில் ‘கட்டின புருஷன் நான் அவள் கையை இப்படி இறுக்கமா பிடிக்க முடியலை… எங்க இருந்து டா எனக்குன்னு வருவீங்க..’. என்று அந்த குட்டி பையன் மீது பொறாமை வர அவனையே பார்த்தான்.
”ரோஷன் குட்டிக்கு பூரி சுடவா?” என்றதற்கு அவள் காதில் அஸ்கி வாய்ஸில்
”வேண்டாம் நெய் தோசை சாப்பிட்டேன்” என்றான்.
”நீ நேத்து ரொம்ப அழகா இருந்த” என்றான்.
”தேங்ஸ் நீ கூட கோட் சூட் ல அழகா இருந்த டா செல்லம்” என்றாள் கன்னத்தில் இதழ் ஒற்றினாள். ‘அடிப்பாவி எனக்கு…’ என்று அப்பொழுதும் ப்ரஜன் மனம் குழந்தையாய் அடம் பிடித்தது அவன் மனதில்.
மீண்டும் காதில் அஸ்கி வாய்ஸில் ஏதோ சொல்ல ”டேய் எப்பவும் போல ஒழுங்கா பேசு” என்றதும்,
”நீ இனி என்கூட விளையாட மாட்டியா லத்திகா” என்றான்.
”யார் சொன்னது. உன்கூட தான் விளையாடுவேன். நீ தான் என் பெஸ்ட் பிரென்ட்”
”அம்மா சொன்னாங்க இந்த அங்கிள் உன்னை கூப்பிட்டு போய்டுவாருனு”
”அது…நான் அடிக்கடி வந்து உன்கூட விளையாட வருவேன் டா”
”இங்கயே இருக்க மாட்டியா?” என்றான்.
”அ…அது” என வருத்தம் அடையும் நேரம்
”போ லத்திகா எனக்கு யாரு கிட்கேட் வாங்கி தருவா? கிண்டர் ஜாய் வாங்கி தருவா? ப்ளம்கேக் எல்லாம் யாரு வாங்கி தருவா? என்றதும் முதல் ஆளாக ப்ரஜன் சிரிக்க,
”அடேய் உனக்கு வாங்கி தர ஆள் இல்லை என்று தான் வருத்தமா? எனக்காக இல்லையா? என்ன ஒரு பாசம் டா”
”பின்ன நீ கொட்டினாலும் எதுக்கு வர்றேனாம்” என்றான் ரோஷன்.
இம்முறை வயிற்றை பிடித்து சிரிக்க துவங்கினான் ப்ரஜன். என் மானத்தை வாங்காத டா போ. உன் பேச்சு கா” என்றதுமே ப்ரஜன் முன் வந்தான்.
”ஹாய் ஐ அம் ப்ரஜன். நீ ரோஷன் தானே? நாம ரெண்டு பேரும் கிண்டர் ஜாய் வாங்க போகலாமா?” என்றதும் இதுவரை வில்லனை போல பார்த்தவன் நொடியில்,
”நிஜமா?” என்றான்.
”எஸ்” என்றதும் காரில் சிட்டாக பறக்க, ”இப்ப வந்தவனை பார்த்ததும் என்னை அம்போன்னு விட்டுட்டு போய்ட்டான் இந்த ரோஷன் வரட்டும்” என்று நினைக்க போன் மணி அடித்தது.
போனில் புவனா பேசினாள். கொஞ்சம் தோழமையோடும் கொஞ்சம் பயத்தோடும் பேசி முடிக்க, கை நிறைய பை நிறைய கேக் சாக்லட் என வாங்கி வந்து இருந்தான் ரோஷன்.
ரோஷனின் தாயார் கூட ரோஷனை கண்டு திட்ட துவங்க, ”ஹி இஸ் கிட்… எனக்கும் ரோஷனை ரொம்ப பிடிக்குது. அவனோட பழக இப்படி தான் போகணும்… என்று லத்திகா ஐடியா பின்பற்றியாச்சு.” என்றான் .
”இப்ப நானும் ரோஷனும் பிரென்ட்” என கட்டை விரலை காட்டிட அவனும் அவ்வாறே காட்டி ஒப்புக் கொண்டான்.
ரோஷன் கூடவே இருக்க லத்திகாவை விட்டு கொஞ்சமும் பிரியாமல் இருந்தான். அவனை அழைக்க அவன் அம்மா வந்தும் அவன் பிடிவாதமாக போக மறுத்து இருக்க ப்ரஜனுக்கும் வேறு வழியின்றி அவனோடு பேசி பொழுதை போக்கினான்.
இரவு நேற்றைய போலவே கீழே படுக்க செய்து நடு இரவில் மேலே வந்து படுக்க அதனை ப்ரஜன் பார்த்து சிரிக்க
”ஹலோ இது என் பெட் அதான் இவ்ளோ இடம் காலியா இருக்கு இங்கவே படுத்துகிறேன் உங்களுக்கு என்ன சிரிக்கறீங்க” என சொல்ல அவன் ‘நத்திங்’ என புரண்டு படுத்தான். அவன் திரும்பவும் நிம்மதியானாள். ஆனால் ப்ரஜன் தன்னை போலவே நேரம் எடுத்துக் கொள்வதாக புரிந்தது.
அடுத்த நாளும் ரோஷன் வந்து கிட்கேட் வாங்க கூப்பிட ப்ரஜன் கூடவே இருக்க ஜீவா சகுந்தலா என்ன செய்வதே புரியாமல் குழம்பினார்கள். சிறுவன் 3 வயது பிள்ளை அம்மா கூப்பிட்டும் போக மறுக்கிறான். எந்த நேரமும் இங்கயே இருந்து பழகியதால் மறுக்க ப்ரஜன் அதை பற்றி பெரிதாய் வருந்தவில்லை.
ஆனாலும் ப்ரஜன் ac இன்றி இருக்க முடியாமல் மாலையே ப்ரஜன் கிளம்ப எண்ணிட லத்திகாவிற்கு ஆயிரம் அறிவுரைகளை வழங்கியே அனுப்பி வைத்தனர்.
அதிகம் வாயட கூடாது எதிர்த்து பேசிட கூடாது. பிருத்வி எண்ணம் போல் செயல் படவேண்டும். அவர்களை மதிப்போடு என்ன வேண்டும் ஒரு பிழை என்று கூட சொல்வராது நடக்க வேண்டும்.
விரைவில் பிள்ளை பெற வேண்டும் என்று ஒரு பட்டியலே இருந்தது. எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டி விசும்பலோடு விடை பெற்று அமைதியாக அழுதவளை தேற்ற முடியாமல் நின்றான் ப்ரஜன்.
💕💕💕💕💕👌👌👌👌👌
🌟🌟🌟🌟🌟🌟🌟