Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-20

உன்னில் தொலைந்தேன்-20

 💟20   
                             இரு தினம் ப்ரஜன் கூட அவள் தாய் வீட்டில் இருந்தாலும் அவன் தன் போக்கில் விட்டுவிட்டான். அவள் வீடு என்பதாலும் அவளுக்கு தெம்பு இருந்தது. தற்போது வந்து இறங்கிய அடுத்த வினாடி நெஞ்சு கூடு அச்சத்தை தந்தது.


                                     சினிமா வில்லனை போல இனி மிரட்டுவனா? அப்படி ஏதும் செய்தாலும் தடுக்க இயலாது. பவானி அத்தை தன்னை பெண் போல பாதுகாப்பார்கள் என்று முழுமையாக நம்பினாள். அவர்களின் கரிசனம் அப்படி உணர்த்தியது.


             நேரம் செல்ல செல்ல உறங்க அவள் அறைக்கு செல்ல வேண்டும் என்று அறிந்த பின் தான் அச்சமும் வலுத்தது.
                           ‘இந்த ப்ரஜன் நல்லவனா? கெட்டவனா? என்றதற்கு அடி முட்டாள் பெண்ணே அவனை பிடித்து தானே திருமணம் புரிந்தாய் பின் ஏன் தேவையில்லாத அச்சம்.


         ஆமாம் பிடிச்சு தான்… அவன் நெருக்கம். ஐயோ இது என்ன அவஸ்தை.
      ”லத்திகா தூக்கம் வரலையா மணி 9 ஆகுது பார் நேரத்துக்கு போய் தூங்கு” என்று பவானி சொல்லிட ”சரி” என தலையை ஆட்டி மேல மெல்ல மெல்ல கதவு திறந்தாள்.
                           அவள் முகத்தை பார்த்தவன் நேற்று போல வம்பு இழுக்க எண்ணி,
    ”ஹலோ இது என் ரூம்… என் பெட்… எனக்கு ஷேர் பண்ண பிடிக்காது” என்று கூறிவிட்டு திரும்பி படுக்க லத்திகா முகம் வாடி விட்டது.


                     நேற்று தான் கூறியதை இன்று அவன் கூறுகின்றான். அதனால் லத்திகாவிற்கு கோவம் வரவில்லை. மாறாக வருத்தம் தான் வந்தது. தனித்து விடப்பட்ட தீவில் இருப்பதாக…
                          அவள் ஜம்பமாக என் பெட் என்று அன்று அருகே இருந்த இடத்தில படுத்து கொண்டது போல படுப்பாள் என காத்திருந்தான் ஆனால் அவளோ ஷேர் செய்ய பிடிக்காது என்று கூறிய பிறகு எப்படி? விழித்து கொண்டு நின்றவளின் அருகில் சோபா இருக்க அதில் காலை மடக்கி படுத்துக்கொண்டாள். ப்ரஜன் நடு இரவில் எப்படியும் வந்து தூங்குவாள் என அவனும் உறங்கி போனான்.


                     அதிகாலை எப்பொழுதும் போல எழுந்தவன் லத்திகா நினைவு வர திரும்பி படுக்கையை பார்க்க அது வெற்றிடமாக காட்சி அளித்தது. எங்கே போனாள் என எழுந்து பார்க்க சோபாவில் காலை மடக்கி முடங்கி படுத்து இருந்த லத்திகாவை பார்க்க மனம் வருத்தம் கொண்டான்.


       ‘தானா வந்து பெட்ல தூங்க என்னவாம் இவளுக்கு ரெண்டு நாளா அப்படி தானே இருந்தா இங்க வந்து நான் கெஞ்சணுமா எல்லாம் திமிரு’ என வருத்தத்துடன் சினமும் கொண்டு குளிக்க சென்றான்.
                    குளித்து உடை மாற்றிய பின்னரும் லத்திகா அப்படியே உறங்க எழுப்பலாமா? என நினைத்தான். பிறகு வேண்டாம் கீழே டீ முடித்து வந்து பார்த்துக்கலாம் என படி இறங்கினான்.
       ”என்ன டா லத்திகா எழுந்துக்கலையா?”
       ”அவ தூங்கறா மா எழுப்பலை” என மென்று முழுங்கி உள்ளுக்குள் சென்ற குரலில் சொன்னான்.
                          இன்னும் லத்திகா எழுந்த அசைவு தெரியவில்லை. மேலே சென்று எழுப்பலாம் என்று முடிவுடன் அவளை அடைந்தான்.


                        சோபாவில் லத்திகா உறங்கிய அதே நிலையிருக்க,
     ”லத்திகா.. லத்திகா…” என மெல்ல தட்டி எழுப்ப அவள் அசைந்து கூட கொடுக்கவில்லை. சட்டென கழுத்திலும் நெற்றியையும் தொட்டு பார்க்க அது காய்ச்சல் என உறுதிப்படுத்தியது.
                      வேகமாக அவளை அள்ளி கட்டிலில் கிடத்தி AC ஆப் செய்தான். ‘அட கடவுளே பிவேர் போல நேற்றே ஈகோ பார்க்காம பெட்ல தூங்க சொல்லி இருக்கணும்’ என்று தவறை அப்பொழுது தான் உணர்ந்தான்.


 கீழே எட்டி ”அம்மா…. அப்பா… ”
      ”என்னடா ஏன் கத்தற…” என்று பவானி கேட்க,
     ”அம்மா லத்திகாவுக்கு காய்ச்சல்… வந்து பாருங்க” என்று கத்தினான். 
     ”நேற்று கூட நல்லா இருந்தாளே” என்று சொல்லியவாறே படிக்கட்டு ஏறி வந்து பார்க்க,
       ”முதலில் நம்ம பேமிலி டாக்டர் லீலாவதிக்கு போன் போட்டு வர சொல்லு”
 என்றதும் போன் செய்ய, மடமடவென டாக்டரும் வந்து பார்த்து ஊசி போட்டு மாத்திரை எழுதி தந்து விட்டு இரண்டு நாளில் சரி ஆகும் என்று கூறி சென்றனர். ப்ரஜன் அப்பொழுது தான் யோசித்தான் சோபா மேலே ஏசி இருக்க நேராக அவளுக்குள் குளிர் காற்று மோதி இருக்கின்றன.


      ”ம்மா அவளுக்கு AC ஒத்துக்கலை போல” என்று கண்டறிந்த புத்திசாலி போல. 
      ”ஏன் டா உங்கிட்ட சொல்லி இருப்பாள ஆப் செய்ய வேண்டியது தானே” என கடிந்தார் பவானி.
      ”அது” நிஜம் தான் ஆப் செய்ய சொல்லி இருந்தால் ஆப் செய்து இருப்பானே அவள் தான் ஏதும் பேசவில்லையே என நொந்து கொண்டான்.
      ”பிருத்வி அவள்கிட்டயே இருந்து பார்த்துக்கோ டா. நான் வேலைக்காரங்ககிட்ட சொல்லி அரிசி கஞ்சி செய்து எடுத்து வர்றேன்.”


       ”சரிம்மா” என்று கூறியதும் இல்லாமல் அவளின் சிறு சிறு அசைவுக்கும் எழுந்து நெருங்கி நின்றான். அவளுக்கு தான் ஏதும் தெரியவில்லை ஜுரம் மயக்கத்தில் இருந்தாள்.
           AC அணைத்து இருக்க பேன் காற்றில் சற்றே வேர்த்து கொட்டியது பிருத்விக்கு.
              அரிசி கஞ்சி எடுத்து வந்த பவானி ”பிருத்வி லத்திகாவை எழுப்பு டா” என்றாள் .
      ”ம்மா நானா” என்று ஒவ்வொன்றிக்கும் தினறினான். 


     ”பின்ன…”
       ”லத்திகா லத்திகா என்று கன்னம் தட்டி எழுப்ப மெல்ல விழிகள் அசைக்க எழும்ப பவானி கண்டு உட்கார முயன்றாள்.
            ப்ரஜன் உதவி செய்ய புரியாது விழித்து அவனை வினோதமாக பார்த்தாள். பவானி கொடுத்த கஞ்சி குடித்துவிட்டு மாத்திரை விழுங்கினாள்.
                 மீண்டும் அசதியில் உறங்கவே செய்தாள்.
     ”பிருத்வி அவள்கிட்டே இருந்து கவனிச்சுக்கோ” என நகர்ந்தார்.
             ரிமோட் மாற்றி மாற்றி சேனலை சப்தமின்றி பார்க்க அவளுக்கு ஜுரம் விட்டு விட்டு வருவதாக எண்ணினான்.


        சாப்பிட அமரும் போது ”அம்மா அவளுக்கு ஜுரம் விட்டு விட்டு வருது டாக்டர் மறுபடியும் வர சொல்லுங்க” என்றான். 
      ”டேய் ரெண்டு நாள் இருக்கும் என்று சொன்னாங்க மறந்துட்டியா காலையில் தானே மாத்திரை சாப்பிட்டு இருக்கா அதுக்குள்ள எப்படி ஜுரம் குறையும். சாப்பிட்டு ரசம் சாதம் பிசைந்து தர்றேன் போய் கொடு” என்று அதட்டினார்.


       ”ம்…”
                              ரசம் சாதம் ஸ்பூனில் ஊட்டி விட மறுக்காமல் உண்டாள். மாத்திரை விழுங்கினாள்.
    இரவும் அதே போல சாப்பிட்டு உறங்கி போனாள்.


                        அடுத்த நாள் எழுந்து முதல் வேலையாக அவளை தொட்டு பார்க்க மெல்ல குறைந்தது போல தான் இருந்தது. அப்பாடி என்று நிம்மதி அடைத்தான்.                          

         காலை பணி முடித்து கீழே வந்தவன் சூடாக க்ரீன் டீ குடித்த போதே பவானி மேலே சென்று லத்திகாவை பார்க்க, சற்று நிம்மதி அடைந்து பாலை இதமான சூட்டில் எடுத்து நீட்ட, வாங்கி பருகியவள் மெல்ல அசைந்தே கீழே வந்தாள்.


                               பவானி கூட இன்னும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்க சொன்ன போதிலும் கீழே வந்து நாளிதழில் படிக்க முனைய ப்ரஜன் மெல்ல அவளை காண அவளோ நெளிய துவங்கினாள்.
                அதிகம் அவளை அவஸ்தைக்குள் ஆக்காமல் மாடிக்கு அறைக்கு சென்று எப்பொழுதும் போல AC ஆன் செய்து சாவகாசமா கையை தலைக்கு கொடுத்து டிவி பார்த்து கொண்டு இருந்தான். லத்திகா மதியம் சாப்பிட்டு மாத்திரை விழுங்கி உறங்க நினைக்க அவனோ அறையில் இருப்பதால் கீழே நேரம் கடத்தினாள்.


                                 சகுந்தலா போனில் பவானியிடம் நலம் விசாரித்தனர்.
                                      மாலை பவானி கொடுத்த சூப் குடித்து தெளிவாக இருந்தாலும் சோர்வு கூட இரவு நேரத்திற்கு உறங்க சென்றாள். AC ஆன் செய்து  இருந்ததால் சற்று மீண்டும் குளிர் அறையில் இருந்தது.
                      ஜுரம் முழுதும் போகாமல் மிதமாக இருக்க அறை குளிர் சற்றே அதிகப்படுத்தியது.
      ”சாரி நீ கீழே இருந்ததால ஏசி ஆன் பண்ணிட்டேன். இப்ப ஆப் பண்ணிடறேன்” என்றான். அவனோட மல்லுக்கு செல்ல முடியாமல் உடல் அசதி அவளை வாட்டியது.


                                  போர்வை போர்த்தி இருந்தும் நடுக்கம் பரவ தனது பேட்ஷ்ட் அதனையும் சேர்த்தே போர்த்தி விட்டான்.
                                 நடுஇரவில் தன்னையும் அறியாமல் அவனது போர்வை இழுக்க அவளின் மென் உடலையும் சேர்த்தே இழுக்க அவன் மேலயே விழுந்தவளை இமைக்காது  பார்த்து இருந்த பொழுது அவனையும் அறியாது அவளின் இதழை சுவைத்தான். இதழின் சுவை நீண்டிட அவளை ஆக்கிரமித்தான். அவனுக்கு லத்திகாவை பார்த்ததிலிருந்து பிடித்து இருந்தது. அவளோடு சண்டையிட்டு விளையாடியதும் பிடித்திருக்க இந்த நெருக்கம் அவன் மனதில் புயலை கிளப்பி அவளை தழுவியிருந்தான்.  

                    அடுத்த நாள் கண்களில் சூரியன் கதிர் வீசி எழுப்ப, இமை திறந்தவனின் கை வளைவில் லத்திகா பூ போல உறங்க அவளின் உறக்கம் கலையாது தலையணையில் அவளை விடுத்து எழுந்தவனின் நேற்றைய நினைவில் சந்தோஷம் கொள்வதா? அல்லது வருத்தம் கொள்வதா? என கலங்கினான். லத்திகா சம்மதம் அதில் இல்லையே?!


                       முதலில் தான் ப்ரெஷ் ஆகி பின்னர் யோசிக்க சென்றான். அவனின் தற்போது நிலை அவளிடம் எதிர்நிற்க கூட திறணின்றி வெளியே எங்கயாவது செல்ல திட்டமிட்டான்.
                         ‘sorry’ என்று எழுதி அதை ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் வைத்து விட்டு பவானியிடம் நண்பனை பார்க்க செல்வதாக கூறி சென்று விட்டான்.


                        கல்யாணமாகி நாலு நாள் முழுதா முடியலை அதுக்குள்ள வெளிய கிளம்பிட்டான். லத்திகாவுக்கு வேற இப்ப தான் காய்ச்சல் குணமாகியிருக்கு, இவன் கூட இருந்தா என்னவாம் சொல்றதை கேட்கமாட்டான்.” என்ற புலம்பல் இருந்தாலும் லத்திகா எழுந்து வர காத்திருந்தார். 

2 thoughts on “உன்னில் தொலைந்தேன்-20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *