💟22
லத்திகா வந்து இருப்பதை அறிந்த அவளது குட்டி நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு படையெடுக்க வீடே கலகலப்பானது.
ரோஷனின் நினைவால் ஏற்கனவே கேக்ஸ், சாக்லட் அதிகம் வாங்கி வந்தது மற்ற குழந்தைக்கும் கொடுக்க போதுமானதாய் இருந்தது. ரோஷனின் நட்பால் மற்ற குட்டி நண்பர்களும் எளிதில் பிருத்வியிடம் நன்றாகவே பழகினார்கள். அதில் இருந்த சிறுவன் பரத்,
”அங்கிள் உங்களுக்கு பட்டம் விட தெரியுமா?”
”ஒ”
”அப்ப பட்டம் விடலாமா? என்று கேட்க,
”டேய் எப்பவும் என்கிட்ட தானே விளையாட கேட்பிங்க என்னடா இது இன்னிக்கு ஆளமாத்தறிங்க?” என்று கேட்டே விட்டாள் லத்திகா.
”அக்கா அப்ப ரெண்டு டீமா பட்டம் விடலாம். யார் பட்டம் ரொம்ப நேரம் விடறோமோ அவங்க தான் வின்னர்’. என்றான்.
”டேய்…” என லத்திகா ஆரம்பிக்க,
”உங்க அக்கா தோற்றுடுவா வேண்டாம்” என கேலியாக சிரித்து முடித்தான் பிருத்வி.
”ஹலோ நான் ஒன்னும் தோற்றிட மாட்டேன் உங்களுக்கு தான் அது மாதிரி விளையாடி பழக்கமே இருக்காது எல்லாம் முந்திரி, பாதாம், நெய் என்று சாப்பிட்டு கொழுப்பு தான் ஏறியிருக்கு” என்றாள் லத்திகா.
”அப்ப விளையாடி ஜெயிச்சு காட்டு யாருக்கு கொழுப்பு இருக்கு என்று தெரியும்” என்றபடி புருவங்களினை ஏற்றி இறக்கி பார்வையால் சீண்டினான்.
”ஓகே, யார் யார் என் பக்கம்” என்று கேட்டபடி நீலபட்டத்தினை எடுத்து ப்ரஜன் முன் நீட்டினாள். அவளிடம் சிவப்பு பட்டம் எடுத்து நூலினை எடுத்து புறப்பட்டாள்.
‘பெரிய பாகுபலி தேவசேனா அப்படியே வில்லை எடுத்து புறப்பட்டுட்டா..’. என மனதில் நினைத்து அவனும் பின் தொடர்ந்தான்.
எப்பவும் போல ரோஷன் வினித்தும் லத்திகா அணியில் இருக்க, பரத் மட்டும் பிருத்வி அணியில் சேர்ந்தான்.
”டேய் நீ எப்பவும் என் பக்கம் இருப்ப என்ன டா இன்னிக்கு அங்க நிற்கற?” என்றாள் லத்திகா
”போ லத்திகா உன்னை விட இந்த அண்ணா தான் உயரம் அதிகம் பார்க்கவும் கெத்து…. நீ பேச தான் லாயக்கு நீ வெத்து” என பரத் சொல்ல ப்ரஜன் விழுந்து விழுந்து சிரிக்க லத்திகா கோவத்தோடு
”ஆமா தண்ணீர் விட்டு வளர்ந்த மாதிரி ஒரேடியா நெட்ட கொக்கு மாதிரி வளர்ந்துடறது… அதுக்கு என்னை கிண்டல் செய்யறதா… நானும் உயரம் தான் என் கிளாஸ்ல நான் தான் உயரம் தெரியுமா?’ என சளித்து உரைத்தாள்.
”எங்க இந்த அண்ணா பக்கம் வந்து நில்லு” என்றதும் லத்திகா வந்து நிற்க ப்ரஜன் அவளின் அருகாமையில் தாபத்தில் பெருமூச்சை விட, அவனின் மூச்சு காற்றின் உஷ்ணம் அவளின் கன்னம் தீண்டி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கண்கள் கலக்கும் வேலையில் உயிரின் உயிரில் கலக்கும் பார்வையில் ”ஏய் லத்திகா நீ குள்ளம் தான் அண்ணா தான் உயரம் போய் பட்டம் விட வா” என பரத் சொல்ல லத்திகா விலகி அமைதியாக நடந்தாள்.
இவனின் அருகாமை எனக்குள் ஏதோ செய்கின்றது அது என்ன? என யோசிக்க ரோஷனோ
”டேய் வினித் அப்போ அக்கா தோற்றிடுமா? எதுக்கோ அந்த அண்ணா பக்கம் போயிடலாம்?” என்ரு கேட்க வினித் மெதுவாக ”நாம போன இந்த லத்திகா தலையிலே கொட்டுவாடா… வேண்டாம்” என்றதும் ப்ரஜன் சிரிப்பு அவளை நடப்பிற்கு கொண்டு வந்து சேர்த்தது.
ரெடி, ஸ்டார்ட், கோ என்று ரோஷன் சொல்லியதும் பறக்க விட்டனர். சற்று நேரம் வரை லத்திகா பறக்க விடும் உயரத்தை விட குறைவான அளவே விட்டவன் கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தை கூட்டினான். லத்திகா அவனை விட அதிகம் பறக்கின்ற தன் பட்டத்தை இன்னும் மேலே பறக்க விட்டாள்.
மாடியின் சுவர் விளிம்பில் ஒற்றை கால் மடித்து முழு கை சட்டையை பாதி மடித்து விட்டு வேர்வை சொட்ட சொட்ட, முகத்தில் பச்சரிசி சிரிப்பை உதிர்த்தி, காற்றில் நூலின் பட்டத்தை மேலும் உயர பறக்க, அவனின் பட்டத்தை விட லத்திகாவால் தனது பட்டத்தை உயர பறக்க விட முடியவில்லை.
‘இவனுக்கு ஆராய்ச்சி மட்டும் தான் தெரியும் என்று நினைச்சது தப்பு. இப்படி பட்டத்தை விடறானே என்ன பண்ண?’ என்று குழம்பி அவனை பார்க்க, குழந்தைகளின் ஆரவாரத்தில் அவனின் முகமலர்ச்சி கூடி போனதாய் தோன்றியது. நெற்றியில் வேர்வை சொட்ட, அவனின் கேசமோ காற்றோடு உறவாடி பறந்திட, அவனின் பாதி மடித்து விடப்பட்ட முழுக்கை வேறு அவளுக்கு அவனை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதலை தந்தது.
”அக்கா அக்கா உன் பட்டம் கீழே விழுது….” என்ற ரோஷனின் கத்தல் காதில் விழாமல் போக ரோஷன் ”லத்திகா… பட்டம் கீழே விழுது போ….” என சேலையை பிடித்து இழுக்க,
”டேய் என்னடா”
”பட்டம் போச்சு போ” என்று தலையில் அடித்து கொள்ள,
”என்னது” என்று பார்க்க அது கீழே ஒரு மரத்தில் நன்றாக சிக்கி கொண்டது.
‘போச்சு தோற்று போயிட்டேன். எல்லாம் அவனால’ என அவனை மீண்டும் பார்க்க அவனோ அவனது பட்டத்தை மெல்ல மெல்ல கீழே கொண்டு வந்து இறக்கினான்.
”ஒய், எனக்கு விளையாடி பழக்கம் இல்லை என்று சொன்ன, இப்ப தோற்றது யாரு?” என ஒற்றை புருவத்தை தூக்கி கேட்க, லத்திகா அவனை முறைத்து விட்டு திரும்ப,
”நான் சொன்னேன்லடா லத்திகா தோற்றுடும் என்று இவ்ளோ நாள் நாம சின்ன பிள்ளை அதான் ஏமாற்றி விளையாடி இருக்கா” என வினித் சொல்ல அவனின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தாள்.
”ஸ்… ஆ.. லத்திகா என்னை அடிச்சிட்டில உனக்கு நாடார் கடையிலே தேன்மிட்டாய் வாங்க அனுப்புவள அப்போ போக மாட்டேன்… அதே நேரம் ரோட்டில் போற பஞ்சு மிட்டாய் நிற்க வைக்க சொல்லுவல அதெல்லாம் இனி செய்ய மாட்டேன்” என வினித் சொல்லியபடி சிறுவர்கள் பட்டத்தை எடுத்து கொண்டு கீழே விழுந்த பட்டத்தை எடுக்கவும் ஓடினார்கள்.
”போ டா நானே எல்லாத்தையும் வாங்கிப்பேன்… உனக்கு ஒன்னயும் தர மாட்டேன்” என லத்திகா கத்தினாள்.
அவளின் அருகே வந்த ப்ரஜன, ”பட்டம் எல்லாம் என்ன மாதிரி பசங்க விளையாடறது, நீ என்ன தான் டெய்லி விளையாடினாலும் ஆண்களை ஜெயிக்க முடியாது. அதுவும் என்ன நோ வே” என்றான்.
”ஹலோ ஏதோ நான் அசந்த நேரம் ஜெயிச்சுட்டிங்க” என்ற வார்த்தை விட,
”உன்னை யாரு என்னையே பார்க்க சொன்னது ம்ம்… என்னையே பார்த்து பட்டத்தை கோட்டை விட்டியா” என்றான் பூடகமாக.
அவள் அவனை பார்த்ததை கண்டு தன்னை கேலி வேறு செய்கின்றானே என்ற கடுப்பில் ”நீ பெரிய மகாராஜா உன்னையே பார்த்துகிட்டு இருந்தேன… உனக்கு கல்லு மன்னு இலை தழை தானே தெரியும் அதான் பட்டம் விடறியே என்று பார்த்தேன்” என்று பேசிவிட்டு வேகமாக மாடியில் இருந்து கீழே இறங்க படிக்கட்டில் கால்கள் இடறின.
ப்ரஜன் அவளின் பின்னாலே வந்தவன் அவளின் இடையை பற்றி தூக்க மாய உலகம் சென்றது போல நின்றாள்.
”எனக்கு கொழுப்பு ஏறியிருக்கு என்று சொன்ன உனக்கு தான் இடுப்பில் கொழுப்பு ஏறி இருக்கு சேலை கொஞ்சம் இறங்கி இருக்கு” என்றான் கிறக்கமாக.
அவளின் இடையில் அவன் கைகள் இருக்க அவனை தள்ளிவிட்டு
”உன்னை யாரு இங்க கை வைக்க சொன்னது” என்றாள் மூச்சுவாங்க.
”ஹலோ நீ கால் இடறி விழுந்த, நான் கை நீட்டும் பொழுது இடை தான் பட்டுச்சுடி பிச்சு தூக்கினேன்… ஒழுங்கா நடக்கவே தெரிலை… இதுல என்னை குறை சொல்றியா… நீ இருக்கற குள்ளத்துக்கு நான் நெட்ட மரமா தான் தெரிவேன்… அது என்ன எனக்கு இஷ்டத்துக்கு பேர் வைக்கிற…? கடுகு டப்பா சிடுமூஞ்சி.. நெட்ட மரம்… அப்பறம் அன்னிக்கு மூக்கை உடைச்ச அதுக்கு சாரி கேட்டியா? ரொம்ப பண்ற… இருந்தாலும் என்…” பேச்சை நிறுத்து என லத்திகா செய்கையில் சொல்ல நிறுத்தினான்.
”உனக்கு எல்லா பேரும் கனகச்சிதம பொருந்தது.. சோ உனக்கு நிறைய பேர் வச்சதுக்கு தேங்க் பண்ணு…. அப்பறம் மூக்கை உடைச்சதுக்கு சாரி கேட்க முடியாது…. நீ எதுக்கு நைட்டி போட்ட என் முன்னால வந்த? அதனால நோ சாரி பை” என நொடித்து கொண்டு கீழே இறங்கினாள்.
‘அடிப்பாவி….. என்ன பேச விடறாளா? இருந்தாலும் என் மனசு உன்னை சீண்டி பார்க்க செய்ய துண்டுது ஏன்னு தெரிலை என்று சொல்ல வந்தேன்…. நீ என்ன டா என்றால் என்னையே சீண்டி பார்க்குற? நைட்டி போட்டு முன்ன நின்றது அவள்.
அவள் தான் ஈரத்தோட நின்றா நான் அப்பகூட திரும்பினேன்… இவள் என்ன டா என்றால் அது என் தப்பு என்று பேசிட்டு போறா? மவளே அன்னிக்கு அங்கயே நின்று இருக்கனும். அப்ப விட்டுட்டேன்….. இரு டி உனக்கு இருக்கு?” என்று கீழே இறங்கினான். நல்ல வேளை அந்த பையன் வினித் தலையில் கொட்டியது போல என் தலையில் கொட்டலை.’ என முனங்கி இறங்கினான்.
நேராக அறைக்கு சென்றவள் முகத்தில் நீரை நன்றாக அலம்பி கண்ணாடியில் பார்க்க, அவள் முகமே அவளை என்ன அப்பா அம்மா குட்டி பசங்க இப்ப நீ மொத்தமா அவன் வசம் மாத்திட்டு இருக்கான் என சொல்ல, ‘நோ நான் ஒன்னும் அவன் பக்கம் சாயலை.’ என்றதற்கு மனச்சாட்சியோ, ‘பொய் பொய் நல்லா அவனை சைட் அடிச்ச இப்ப இல்லை என்று மழுப்பற’ என்ற உண்மை சொன்னது.
எவ்வளவு நேரமோ யோசித்தவளுக்கு நேரம் சென்றது பதியவில்லை.
”லத்திகா லத்திகா… என்ற சகுந்தலா அழைப்பில் விழித்தவள் “என்னம்மா நிம்மதியா முகம் கழுவ கூட விட மாற்ற” என கதவை திறக்க,
”எவ்ளோ நேரம் டி மாப்பிள்ளை லத்திகா லத்திகானு கூப்பிட்டு நீ குரல் கொடுக்கலை அதான் நான் கத்தினேன்.” என்றார்.
”ம்மா உண்மையை ஒப்பு கொண்டாயே கத்தினேன்னு” என்றதற்கு அவள் மனமோ ‘நீயும் ஒப்பு கொள் லத்திகா ப்ரஜனிடம் உன் மனம் செல்கின்றது’ என்று வாதாடியது.
”அடி கழுதை..” என்ற சகுந்தலா வசவும் அடுத்து காதில் விழவில்லை.
இரவு சாப்பிட்டு முடித்து ஒருவழியாக உறங்க சென்றவளிடம் ப்ரஜன் நெருங்க அவனின் அருகாமையை தவிர்க்க முடியாமல் அடிபணிந்தே தன்னை அர்பணித்தாள்.
பிருத்வி மீண்டும் தனது அலுவலக பணியை மேற்கொள்ள துவங்கினான். ”நான் எப்போ அலுவலகம் வர” என்றாள் லத்திகா.
”நீ எதுக்கு ஒ… நீ ஜாப் போகணும் சேலரி பாதி உன் அப்பா அம்மாவுக்கு கொடுக்கணும் என்றெல்லாம் கண்டிஷன் போட்டயில்லை. ம்… ” என யோசித்து, ”எனக்கு நீ அங்க வருவது பிடிக்கலை சோ உன்னை வேலையை விட்டு தூக்கியாச்சு” என்றதும் வேகமாக தனது அறையில் போனவள் கதவை சாற்றி அழ துவங்கினாள்.
”ஏய் லத்திகா” என்றவன் ‘சும்மா சொன்னதற்கே ஓடிட்டாளே ம்… கொஞ்ச நேரம் போகட்டும் வந்து சொல்லிக்கலாம்’ என அலுவலகம் சென்றான்.
‘சே ஏன் ப்ரஜன் இப்படி பேசின நிஜமா அப்படி தானா? போச்சு இப்ப நான் என்ன பண்றது. இந்த வீட்டுக்கு மருமகளா மாறிவிட்ட பிறகு வேறு எங்கு வேலை தேடுவதும் நல்லதல்ல. ராஜன் மாமாவிடம் சொல்லி கேட்கலாமா? கேட்டால் நானும் ப்ரஜனும் சரளமாக பேசுவது இல்லை என தெரிந்து விடும். இப்ப என்ன பண்ண? என்று நினைத்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
Interesting
🌟🌟🌟🌟🌟