Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-23

உன்னில் தொலைந்தேன்-23

💟23


         ப்ரஜனை பண்ற டார்ச்சரில் அவனே ‘எனக்கு வேலைக்கு வா’ என சொல்ல வைக்கணும் யாரு லத்திகாகிட்டயேவா இருடா உனக்கு நான் யாருனு காட்டறேன் என ஐடியா தயாரித்தாள்.
               மாலையில் நேரத்திற்கு முன்பே வந்து நின்றவனுக்கு க்ரீன் டீ தயாரிக்க சென்றவள் நாலு ஸ்பூன் சர்க்கரை அள்ளி கொட்டி கொண்டு வந்து ப்ரஜன் முன் நீட்டினாள்.


                   ‘பரவாயில்லையே கோவமா இருப்பா என்று பார்த்தால் டீ எல்லாம் கொண்டு வந்து நீட்டறா ஓகே தான்’ என  பருகியவன் அப்படியே முழங்கவும் முடியாமல் நிமிர கையை கட்டி நின்றவாறு திமிராக பார்த்தாள் லத்திகா.
                 டீ விழுங்கியவன் ‘ராட்சஸி ஒரு கப் டீக்கு 50 கிராம் சக்கரை கொட்டி இருப்பா போலயே.’ என முறைத்தான். 


        ”இங்க பாருங்க வேலைக்கு வா லத்திகா என்று சொல்லிட்டிங்க  தப்பிச்சிங்க இல்லை டெய்லி இப்படி டார்ச்சர் பண்ணுவேன்” என மிரட்ட,
       ”என்கிட்டயே வா” என்று முழுவதும் குடித்து முடித்தவன்
     ”என்ன செய்வியோ செய்துக்கோ போடி” என ஒரு பார்வை வீசினான்.
                                  அவனுக்கு இப்படி உள்ளுக்குள்  சீண்டி பார்ப்பது மிகவும் பிடித்தும் இருந்தது. அவளின் கோவத்தை ரசித்து மகிழ்ந்தான். அவனுக்கு அவளிடம் மிகவும் பிடித்தது. 

 அவளிடம் முதலில் பிடித்தது இந்த கோவம் தானே…..!
               பகலில் ஆயிரம் சண்டை இருவருக்குள் நிகழ்ந்தாலும், இரவின் நிசப்தத்தில் அவனின் கைகளுக்குள் பனிப்போர் எல்லாம் மறந்தாள்.  
                                                                    அடுத்த நாளில் இவனுக்கு மட்டும் சாப்பிட வைத்த பொங்கலில் உப்பினை தூவி சாம்பார் ஊற்றி நீட்டினாள்.


                                 நேற்றைய இரவு சண்டை போட்ட நினைவின்றி உண்டவனுக்கு யாரோ மண்டையில் அடித்து சாப்பிட வைப்பதாகபட்டது. ‘ராட்சஸி இன்னிக்கு உப்பை கொட்டி வச்சி இருக்காளா? எனக்கு மட்டும் இப்படியா இல்லை அம்மா அப்பாவுக்கும்மா என்று யோசித்தவன்
        ”அம்மா எனக்கு உன் கைகளில் ஒரு வாய் ஊட்டி விடுங்க” என்று கேட்க பவானி அடுத்த நொடி ஊட்டியும் விட்டார். அது  தேவஅமிர்தமாக சுவைத்தது. ஆக எனக்கு மட்டும் இப்படி உப்பு என்று நினைத்தவன் அதை யோசிக்காமல் அவளின் கோவமான முகம் தோல்வியோடு வாடுவதை ரசித்து பொங்கலை விழுங்கினான். அவளுக்கு தான் கவலை வந்தது.


                     சே பேசாம அவனுக்கு இப்படி எல்லாம் செய்யாம மறுபடியும் கேட்போமா? என்று நினைத்தவள் நொடியில் ‘நோ நோ இரண்டே இரண்டு  முயற்சியில் லத்திகா விடுவதா? பார்க்கலாம்’ என மீண்டும் என்ன செய்ய என யோசித்தாள்.
                              பிருத்வி அலுவலகம் செல்ல ரெடியாகி கொண்டு இருக்கையில் நீரை கொண்டு வந்து வைப்பதாக வைத்தவள் அப்படியே அவன் மேலயே ஊற்றிவிட்டாள்.
          ‘ராட்சஸி’ என முறைத்தவன் அடுத்த நொடி அம்மா அப்பா பார்த்து விட்டார்களா என திரும்பி பார்க்க அவர்கள் இவனுக்கும் லத்திகாவிற்கும் தனிமை கொடுக்க எண்ணி ஹாலில் தீவிரமாக புத்தகமும் நாளிதழும் படித்திருந்தனர்.


           ‘ராட்சஸி இருடி உன்னை அப்பறம் கவனிக்கிறேன்’ என எழுந்தவன் மடமடவென ஆடை மாற்றி கிளம்பினான்.
               அடுத்த நாள் அவனுக்கு பிடித்த சாண்டல் ஷர்ட்டில் நெயில் பாலிஷ் கொட்டி விட்டு உச்சு கொட்டி நிற்க, அவனுக்கு கோவம் வர தான் செய்தது. உடனே அவள் ”இப்பவாது ஆபீஸ் வா என்று சொல்லுங்க இந்த சட்டை தான் லாஸ்ட் இனி இப்படி செய்ய மாட்டேன்” என்று பாவம் பார்ப்பதாய் கூற,


      ”அந்த கப்போர்ட முழுதும் என் ஷர்ட் தான் வேணுமின்னா அதுலயும் கொட்டு பட் நீ நினைப்பது நடக்காது. டிரஸ் தயாரிக்கற முதலாளி என்னிடமே வா” என்றதும் லத்திகா கடுப்பானாள்.
                                           ராட்சஷி இன்னிக்கு என்ன பண்ண போகின்றாளோ என்று பிருத்வி பயந்தாலும் அவள் முன் சற்று திமிராக செயல்பட்டான். அவள் விடாகண்டன் என்றால் இவன் கொடாகண்டனாக இருந்தான்.


                        இப்படியே ஒரு மாதம் உருண்டோடியது.


                நடுவில் ஷாக்ஸ் ஒளித்து வைத்தாள். டை மறைத்து வைத்தாள். ஒரு முறை குளிக்க சென்றவனின் சோப்பில் மிளகாய் தூளை தடவி வைத்தாள். எதற்கும் பிரஜன் அசைந்ததாக இல்லை…… அவளும் தொடர்ந்து ஏதேனும் செய்யாமல் நிறுத்தவும் இல்லை.
                                அன்று சனி கிழமை அவள் அப்பா வீட்டிற்கு செல்ல குதிப்பாள். லேட்டா வேற ஆகிட்டேன் என எண்ணியவன் மாடி செல்ல அங்கோ லத்திகா நயிட்டி அணிந்து டிவி பார்த்த படி இருந்தாள்.


     ”மாமா வீட்டுக்கு கிளம்பி இருப்ப என்று வந்தேன்”
     ”நான் போகலை” என்றாள்.
                      அவனும் ஏன் எதற்கு என்று துருவாமல் விட்டு விட்டான்.
    அடுத்த நாளும் லத்திகா வர மறுத்து விட இவனுக்கு அவளை பார்க்க பாவமாகப்பட்டது.
                       ‘ராட்சஸி அவளா வர வேண்டியது தானே ஏன் அப்படி யோசிக்க மாற்றா? இன்னும் அவள் வீடு என் வீடு என்று பேதம் பார்க்கின்றாளா? என எண்ணினான்.


               அவளோ சரியாக மாதம் இரெண்டாம் நாள் தனது சம்பள பணத்தை அப்பாவிடம் கொடுத்திடுவாள். இப்பொழுதோ ஆறு ஆகி விட்டது கொடுக்க வில்லை காரணம் அலுவலகம் சென்று பணம் வாங்க இயலவில்லை. கஷ்டமாக போனது. சே மேரேஜ் ஆனா என்ன ஒரு சிக்கல், என் பணம் கூட அப்பாவிற்கு கொடுக்க முடியவில்லையே… என்று வருந்தினாள்.
             அன்று காலையிலே வேறு வழியின்றி கிளம்பு என்றான். எங்கே என்றதற்கு “வா என்றால் வரணும் கேள்வி கேட்பது எனக்கு பிடிக்காது” என்றான்.


                      ‘பெரிய மைசூர் மகாராஜா சொன்னதும் கேட்கணும் என்று முனங்கினாலும் அவனோடு வந்தாள்.
                           நேராக தனது தாய் தந்தை வீட்டிற்கு அழைத்து வருவான் என எண்ணவில்லை.
      ”லத்திகா… ” என்று ஜீவானந்தம் அழைத்து ”ஏய் சகு யாரு வந்து இருக்கா பாரு ஓடியா” என கூச்சலிட்டார்.
      ”ப்பா…” என ஓடி வந்து கட்டி பிடித்து அழுதவளை ”ஏன்மா முந்தாநாள் வருவாய் என்று காத்திருந்தேன்” என்றார்.


      ”அது…”
       ”சரி சரி உள்ள வா வாங்க மாப்பிள்ளை” என்று அழைக்க, சகுந்தலா எதுக்கு இப்படி கத்தி…. ” அச்சோ மாப்பிள்ளையா?”
      ”ம்மா நான் உன் பொண்ணு வந்து இருக்கேன் உன் கண்ணனுக்கு தெரியலை மாப்பிள்ளை…”
      ”லத்திகா என்ன இது இன்னும் சின்ன பிள்ளை மாதிரி”                          
                பலகாரம் கொடுத்ததும் சுவைத்தவன், “லத்திகா நான் மதியம் வந்து பிக்அப் பண்ணிக்கறேன் நீ இரு” என கிளம்பிட ”ம்..” என ஒற்றை வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அமைதியாக இருந்திட பிருத்வியோ ‘ராட்சஸி வாய திறந்து பேசறாளா? பாத்துக்கறேன் போடி’ என  கிளம்பினான்.


                              சகுந்தலாவிடம் மணி கணக்கில் பேசி மகிழ்ந்தாள் இருந்தும் மனதின் ஓரத்தில் ஒரு குறையாக இருக்க ப்ரஜனை திட்டினாள்.
             தனது கையிருப்பில் கொண்டு வந்த பணத்தை நீட்டி தந்தையிடம் கொடுத்து சமாளிக்க முயன்றாள். 

 அவரோ, ”லத்திகா மாப்பிள்ளை பண்ணின காரியமே போதும் டா அவர் அரேன்ஜ் பண்ணி இருக்கற பணவரவே போதும் அதுவே என்ன செலவு செய்ய என்று தெரியலை இது எதுக்கு” என்று வாங்க மறுத்தார். 
      ”என்ன பணவரவு அப்பா” என்றாள். 
      ”உன்கிட்ட மாப்பிள்ளை தெரியப்படுத்தலயா?” என சகுந்தலா கேட்க,
இல்லை என தலை அசைத்தாள்.


       ”நம்மளிடம் ஒரு சின்ன இடம் இருந்ததே அதை விற்று மெயின் ரோட்டில் ஒரு கடை விலைக்கு வருதுன்னு மாப்பிள்ளை அதை வாங்க சொன்னார். மெயின் ரோடு ரேட் அதிகம் இருக்கும் என்று சொன்னேன். நீங்க சைன் போடுங்க நான் அதை வாங்கறேன் என்றார். அதே மாதிரி வாங்கி கொடுத்து விட்டார். அதுல வருகின்ற வாடகையே போதும் அப்பா உட்கார்ந்து சாப்பிட… ”
       ”அது எப்படிப்பா விலை அதிகமா இருக்குமே?” என்றாள்.


       ”எல்லாம் மாப்பிள்ளை வேலை தான் நாங்க உங்கிட்ட பணம் வாங்க மறுத்திடுவோம் என்று சரியா புரிஞ்சு கொண்டு இப்படி மாற்றி கொடுத்துட்டார்.” என்றார். 
     ”அப்ப என்கிட்ட வாங்க கூடாது என்று தான் இருந்திங்களா?” என்று கோபமானாள். 
      ”அது… குட்டிம்மா உனக்கு சொன்னா புரியாது டா ”
     ”போங்க பேசாதிங்க” என லத்திகா குறைபட்டு அழுது கொள்ள,
      ”அதான் மாப்பிள்ளை இப்படி ஐடியா பண்ணி கொடுத்துவிட்டார் மறுத்ததிற்கு உங்க பணம் உங்க இடம் என்று சாதிக்கறார்.” அந்த வாடகை பணம் கூற அதிகமாக இருந்தது .


      ”லத்திகா உனக்கு ஏதும் தெரியாதா?” என சகுந்தலா வினவ ”சொல்லலை ம்மா” என்றவள் பிரஜனின் செயலால் தன்னையே கடிந்தாள்.
                                    ‘சே இது தெரியாம ப்ரஜனை வேற ஒரு மாதம் பாடாய் படுத்திட்டேன்’ என உள்மனம் அவளை திட்டியது.


             லத்திகா இந்த கொஞ்ச நாளில் என்னவெல்லாம் செய்து விட்டாய்…. ப்ரஜன் சர்க்கரை அள்ளி கொட்டிய டீ, உப்பு அள்ளி சாம்பார், ஷிர்டில் தண்ணி ஊத்தி, நெயில் பாலிஷ் வேற… நல்ல வேளை நைட் அவன் அணைப்பை மட்டும் தவிர்க்கலை இல்லை என் ஆராய்ச்சியாளன் பாவம்’ என்று நினைத்தவளுக்கு காதலோடு சிரிப்பும் அரும்பியது.


                            தனக்காக பார்த்து பார்த்து செய்தவனை முதல் முதலாக சந்தித்ததில் இருந்து இப்பொழுது வரை அவன் நினைவை எண்ணி மகிழ்ந்தாள்.
                                                       ‘சிடுமூஞ்சி எப்படா வருவ’ என்று கேட்டவளின் குரல் அவனுக்கே எட்டியது போல காலிங்பெல் அழுத்தினான்.


      ஜீவனந்தமும் சகுந்தலாவும் விழுந்து விழுந்து பரிமாற இம்முறை அவள் அதை பொறாமையாக பார்க்கவில்லை. அவனை ரசிக்கவே செய்தாள். சகுந்தலா உள்ளே செல்ல ஜீவாவும் பின்னாடியே செல்லவும், அவள் பார்வை அவனையே தாக்க அவனுக்கு புரிந்து போனது. அவளை சீண்டும் விதமாக
       ”ஹலோ சாப்பாடு என்ன என் முகத்துலயா இருக்கு? தட்டை பார்த்து சாப்பிடு” என்று சொன்னதும் இயல்பான லத்திகா முகம் ‘ரொம்ப தான் பண்றான் இருக்கட்டும் பார்த்துக்கறேன்’ என உதட்டை சுழித்து பழிப்பு காட்டி சாப்பிட துவங்கினாள்.


               பிருத்விகோ அவளின் உதட்டு சுழிப்பில் மனதை தொலைத்தவனாக இருந்தான் ‘ராட்சஷி என்னையே அவஸ்தைபட வைக்கற இந்த பீல் நல்லா தான் இருக்கு’ என மென்னகையோடு சாப்பிட்டான்.
                       அன்றிரவே அவன் இல்லத்துக்கு வந்து விட்டான். அசதியில் உறங்கியும் போனார்கள்.

2 thoughts on “உன்னில் தொலைந்தேன்-23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *