Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-25

உன்னில் தொலைந்தேன்-25

💟25
       கதவை திறந்து மூடியபடி மெல்ல அவனின் அருகே சென்றவள் ”ப்ரஜன் உங்க எய்ம்… நீங்க ஆசைப்பட்ட வேலை அதனால…. ” என்று பேச ஆரம்பித்தாள். 


       ” அதுக்காக என்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம அனுப்புவியா?” என்றான் கோபமாக. 
      ”உங்களுக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கும் என்று தான்” என்று சமாளிக்க, 
       ”நான் கேட்டேனா? நான் கேட்டேனே டி உங்கிட்ட…” என்று பல்லை கடித்தான். 

       ”நீங்க மட்டும் எனக்கு, என் அப்பா அம்மாவுக்கு, நல்லது செய்விங்க. நான் உங்களுக்கு செய்ய கூடாதா?” என்றாள். 


       ”ஓ மேடம் எனக்கு நன்றி கடனா செய்து இருக்கிங்களோ?” என்றான் அதீத சினத்தோடு, லத்திகா இதுவரை அவனிடம் எப்பொழுதும் சண்டைக்கு மல்லுக்கு நிற்பவள் தான். ஆனால் இன்று போல் அவன் முகம் சிவந்து கோபத்தை காட்டியது இல்லை.


                         லத்திகா உள்ளுக்குள் சற்றே மிரண்டு கொண்டு, ”எனக்கு எப்படி தேங்க் பண்றதுனு தெரியலை ப்ரஜன். உன்னை சந்தோஷமா பார்த்துக்கணும் என்று தான் இப்படி” என்று தவிப்பாய் உரைத்தாள். 


      ”இங்க பார்த்தியா…” என்று பெரிய பூங்கொத்தினை காட்டியபடி, ”எவ்வளவு ஆசை ஆசையா உங்கிட்ட, என் லவ் சொல்ல வந்தேன் தெரியுமா? இங்க பாரு ஹனிமூன் டிக்கெட் சிம்லாக்கு…. நீ என்னடானா, என்னை பாரஸ்ட்க்கு பேக் பண்ணிட்டு இருக்க” என்று சலித்தான். 
      ”ப்ரஜன்….” என காதலோடு வார்த்தை வர, சந்தோசமாக ஆனந்த கண்ணீரும் அவள் கன்னத்தில் படர்ந்தது. 


     ”ம்… உன் ப்ரஜன் தான். நீ முதல் முதலா என்னை யாருனு தெரிஞ்சும் பதிலுக்கு பதில் கேள்வி கேட்டியே?! அப்பவே உன் மேல எனக்கு என்னமோ வந்துடுச்சு. அதுக்கு அப்போ என்ன பெயர் என்று தெரில… ஒரு நாள் லேட்டா வீட்டுக்கு கிளம்பினப்ப, என் மனசு உன்னை ஆபீஸ்ல இருக்க வச்சதுக்கு, என்னையே திட்டினேன் அப்பவும் எனக்கு அது என்ன உணர்வு என்று தெரியலை… உனக்கு லவ்வர் இருப்பாங்களோ என நினைச்சு எதுக்கு அப்படி பேசினேன் என்று கூட அப்ப தோணலை. உனக்கு யாரும் லவர் இல்லை என்று நீ சொன்னப்ப ஒரு ரிலீப் வந்தது பாரு… அப்பா வந்து உன்னை கல்யாணம் பண்ண என்னிடம் ஓகே வா என்று கேட்டப்ப, உனக்கு ஓகே வா என்று கேட்க சொன்னேன். நீ மேரேஜிக்கு ஓகே சொல்லுற வரை எனக்கு தூக்கமேயில்லை தெரியுமா?” என்று மனதை திறந்தான்.
      ”ப்ரஜன்….” என இடையில் கூற, கையை காட்டி நிறுத்து என்று மீண்டும் தொடர்ந்தான்.


      ”உனக்கும் எனக்கும் மேரேஜ் என்று முடிவான பிறகும் ரவி உனக்கு லவ் லெட்டர்…” என தொடர்ந்தவன் வார்த்தையை விட்டுவிட்டு ”நானே உன்னை எல்லோருக்கு என் உட்பி என்று சொல்லி சந்தோசப்பட்டேன் டி மேரேஜ் முடிஞ்சு உங்கிட்ட எல்லாம் சொல்லணும்,  உங்கிட்ட ஷேர் பண்ணனும் என்று இருந்தேன். நீ தான் இது என் பெட் அப்படி இப்படி என்று ஆரம்பிச்ச, எனக்கும் உன்னை டீஸ் பண்ண பிடிச்சுது. நீ கோவத்துல முறைக்கற அழகை எப்படி ரசிப்பேன் தெரியுமா?! உனக்கு பிவேர்ல உன்னை நான்…. நான் முழுசா எடுத்துக்கிட்ட பிறகு…. நீ இல்லாமல் என்னால தனியா தூங்க முடியலை டி. 

இன்னிக்கு உங்கிட்ட எவ்ளோ ஆசை ஆசையா… இங்க பாரு எனக்கு எங்கயும் போகிற ஐடியா இல்லை… ஐ நீட் யூ… ஐ லவ் யூ… இனி உன்னை விட்டு எங்கயும் போறதா இல்லை புரிதா டி” என்று முடித்தான்.


      ”ப்ரஜன் ஐ லவ் யூ டா எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் டா… எப்போ எப்படி என்று எல்லாம் சொல்லை தெரியலை பட் கொஞ்சம் கொஞ்சமா நீ என் மனசுல புகுந்துட்ட எனக்கு உன்னை மாதிரி சொல்ல தெரில டா ஆனா உன் ட்ரீம் என்னால பாதிக்குது” என்றான். 
      ”ஷட் அப் லத்திகா. மறுபடியும் மறுபடியும் ட்ரீம் என்று சொன்ன” என கத்த,
     ”ப்ரஜன் ப்ளீஸ் நம்ம மேரேஜ் லைப்ல நீ உன் ட்ரீம் மறந்துடுவேன்னு தான் நமக்கு கல்யாணம் சீக்கிரம் பண்ணியதே. நீயும் இப்ப அப்படியே மாறிட்ட…”
      ”ஏய் நான் என்ன சின்ன குழந்தையா எனக்கு தெரியாது” என்றான். 


      ”நீ என் மேல இருக்கற மயக்கத்துல இப்ப உன் ட்ரீம் கண்ணுக்கு தெரில பட்” என்று முடிக்கும் முன்,
      ”மயக்கமா? அது காதல் டி உன்னை…” பல்லை கடிக்கும் அவனது சத்தத்தில் அவள் அச்சம் கொண்டாள். 
     ”ஓகே ஓகே அந்த காதல் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, கொஞ்சம் குறையும் போது, உனக்கு என்னால உன் ட்ரீம் போச்சேன்னு தான் தோணும்… கிடைச்ச இந்த ஆப்பர் மிஸ் பண்ணிட்டோமே தான் நினைப்ப” என்றாள்.


     ”என் காதல் உனக்கு விளையாட்டா ? குறையும் அது இது உளறுற” என்றான் கோபம் குறையாமல்.. 
     ”ப்ளீஸ் ப்ரஜன். எப்படி உனக்கு புரியவைக்க தெரியலை…. அது.. வாழ்க்கைல ஒவ்வொரு சாப்டர் இருக்கும். இப்ப உனக்கு நான் தான் உலகம் அப்படினு தோணும் ஆனா கொஞ்ச வருஷம் கழிச்சு நீ நான் சின்ன சின்ன சண்டை போடுவோம். உனக்கு லைப்ல உன் எய்ம் மீண்டும் வரும். அப்போ இந்த ஆஃபர் இருக்காது அந்த நேரம் என் மேல ஒரு கோவம் வந்தா, நீ கண்டிப்பா சொல்லுவ உன்னால் தான் என் ட்ரீம் ஜாப் எல்லாம் போச்சுன்னு” என்று நிதர்சனத்தை உரைத்தாள். 


      ”பாட்டி மாதிரி பேசாத, எனக்கு உன்னை விட்டு எங்கயும் போக பிடிக்கலை”
      ”ப்ரஜன் உன் ட்ரீம் உன் ஜாப்…”
      ”ஏய் உனக்கு என்னை விட்டு பிரிஞ்சு இருக்க முடியுமா? சொல்லுடி” என அவளை உலுக்கினான். 
      ”நிச்சயமா முடியாது ஆனா உனக்காக என்று யோசிக்கும் போது என் வலியை மறைச்சுப்பேன்… எனக்கு என் ப்ரஜன் நினைச்சது எல்லாம் அவனுக்கு நடக்கணும்”
                                  கண்களை மூடி கட்டிலில் அமர்ந்தவன் பத்து நிமிடம் அமைதியாக இருந்தான். கோபங்கள் மெல்ல தணிய ஆரம்பித்தது. 


       ”ஓகே நான் கிளம்பறேன்…” என்றதும் அவனை முதல் முறையாக அவளாக கட்டி அணைத்து அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள். 
    ”ப்ரஜன் உனக்கு அங்க சாப்பிட கஷ்டமா இருக்கும், தங்க கஷ்டமா இருக்கும்” என்றதும் அவன் சினம் எல்லாம் எங்கோ போனது. 


     ”நான் என்ன பாப்பா வா எனக்கு அதெல்லாம் தெரியாமலா போக வேண்டும் என்று அப்பா அம்மாகிட்ட சண்டை போட்டு இருந்தேன். என்ன அப்போ அம்மாவுக்கு உடம்பு சரியில்லை… இப்ப சொன்னா எப்படியும் கேட்டுப்பாங்க அவங்களுக்கு என் பிடிவாதம் தெரியும். வில்லியம் ரிசர்ச் தற்சமயமா தள்ளி வைச்சதால தான் அந்த பேச்சை எடுக்கலை… இப்ப திரும்பவும்…” என அவளை பார்த்து யோசித்தான். 


     ”என்ன”
     ”அப்பவே போய் இருந்தா எனக்கு நீ யாருன்னே தெரியாம போய் இருக்கும் இப்போ ‘என் உயிரே நீ’ என்று புரியுது” என்றான். அவன் வார்த்தையில் உள்ள காதல் அவளை மற்றொன்றும் சொல்ல உந்தியது. 
      ”ப்ரஜன் உனக்கு இன்னொரு விஷயம் கூட சொல்லணும் நான் அத சொல்ல தான் வந்தேன் இந்த லெட்டர் முந்திகிடுச்சு…”
     ”அடிப்பாவி இன்னோரு விஷயமா நீ சொல்ல வருவதை பார்த்தா எனக்கு திகிலா இருக்கு” என்றான்.


     ”போ ப்ரஜன் இது சந்தோஷமான விஷயம்” என வெட்கப்பட்டாள். 
    ”என்ன…” என யோசிப்பது போல இருந்தவன் சட்டென ”ஏய் நீயும் என் கூட வருவியா… அப்ப ஹனிமூன் அங்கயா..?” என்று கண் சிமிட்டினான். 
     ”ஆ.. உன்னை… போடா அதெல்லாம் இல்லை… நான் நான் நான் இங்க வந்ததிலிருந்து குளிக்கவே இல்லை” என்று அவனுக்கு புரியாததை சொல்ல,
     ”ஏண்டி பொய் சொல்ற கடலை மாவு  போட்டு, தேய்ச்சு, சாண்டல் சோப்புல குளிச்சு, உன் மேல வாசனை வீசுமே! எனக்கு அப்பவே உன்னை வாசம் பிடிக்கணும் என்று தோணும்” என்றான் அதே கிறக்கத்துடன். 


      ”அய்யோ… அய்யோ… உன்கிட்ட நான் எப்படி சொல்ல… உன்னை மாதிரியே உன் பிள்ளையும் பிடிவாதம் பிடிச்சா நான் என்ன பண்ணுவேனோ” என்றவாறு அவன் கையை அவள் வயிற்றில் வைத்தாள். 

பிருத்விக்கு அவளையும் அவள் வயிற்றில் அவன் கையையும் இருப்பதையும் மாறி மாறி பார்த்தவன் முதலில் சந்தோஷத்தில் அவளை இறுகி அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன். பின்னரே நினைவு வந்தவனாக


     ”இந்த நிலையில் உன்னை எப்படி விட்டு விட்டு போவேன்? நோவே நான் எங்கயும் போக மாட்டேன்” என முதலில் இருந்து துவங்க ஆரம்பித்தான். 


     ”ப்ரஜன்…”  என இடுப்பில் கையை வைத்து போலி முறைப்போடு ”இதே நீ கிளம்பின பிறகு தெரிந்து இருந்தால் என்னடா பண்ணிருப்பா? ”
      ”அதான் முன்னாடியே தெரிஞ்சுடுச்சே…” என்றான் மேலும் அவளை இறுக்கி பிடித்து,
      ”ப்ளீஸ் ப்ரஜன் மறுபடியும் என்ன பேச வைக்காதே அப்பறம் எதுவும் என்னால் சாப்பிட முடியாது. ஏற்கனவே உன்கிட்ட இருந்து என்னை தள்ளி இருக்க சொல்லி இருக்காங்க டாக்டர்… தெரியுமா அதனால் நீ சமத்தா உன் ட்ரீம் வேலையில் போய் உனக்கு என்று ஒரு பெயரை உருவாக்கு அதான் உன் பிள்ளைக்கும் பிடிக்கும்.” என்றதும் சற்று நேரம் யோசித்தவன்


      ”அது எப்படியோடி டிசைன் டிசைனா என்னை கடுப்படிக்க வைக்கற… முன்ன எல்லாம் இந்த வீட்ல நான் தான் அடம் பிடிச்சு சாதிப்பேன். இப்ப நீ என்ன பாடாய் படுத்தி சாதிக்கற. அப்பா அம்மா எப்படி கஷ்டப்பட்டு இருப்பாங்க என்று இப்ப புரிது. உனக்கு தெரியுமா நான் ரொம்ப பிடிவாதகாரன், எதுக்கும் சென்டிமெண்ட் பார்க்க மாட்டேன்… ஆனா உன்கிட்ட எல்லாம் டொட்டலா சேஞ்ச் தெரியுமா… உனக்கு பயபடறேன் உனக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுனு தவிக்கறேன்”


      ”அய்யோ ப்ரஜன் போதும் என்கிட்ட பயந்தது. எல்லாம் நடிப்பு கீழே வா அத்தை மாமாகிட்ட சொல்லணும்”
      ”அடிப்பாவி என்னை பேக் பண்றதுலயே குறியா இருக்க” என்றான்.
     ”டேய் நான் கன்சீவ்வா இருக்கற விஷயத்தை சொல்லணும் என்று சொன்னேன்”
      ”ஓ” என்று சொன்னவன் அவளை மெல்ல விடுவித்து இருவருமாக படிகளில் மலர்ச்சியோடு இறங்கி வந்தார்கள்.

3 thoughts on “உன்னில் தொலைந்தேன்-25”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *