💟29
மெய் மறந்து பார்த்து இருந்தது லத்திகா மட்டும் அல்ல அங்கு வந்த ப்ரஜனையும் தான். ஆனால் ப்ரஜன் பார்த்து வியந்தது லத்திகாவை மட்டும் தான்.
ப்ரஜன் விழா முடிந்தே வருவான் என்பதால் வீட்டிலே விழா ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தாள் லத்திகா.
ஓரளவு வீட்டில் உறவு கொஞ்சமும், அலுவலக ஆட்களும் நண்பர்களும் என குழுமி இருந்தார்கள்.
”ஏய் பிருத்வி சார் வந்தாச்சு போல…” என்ற குரலும்
”அதனால தான் லத்திகா முகம் இப்படி பிரகாசமா இருக்கு” என்ற குரலும் கேட்க திரும்பி பார்த்தார்கள். அவனின் ஆபிஸ் ஸ்டாப் ஜானு மற்றும் புவனா இருக்க எல்லோரயும் முறுவலுடன் வரவேற்றான்.
”புவனா உங்க குழந்தை எங்க?” என்று விசாரித்தான்.
”வெளிய சந்தீப் வச்சி இருக்கார் சார்”
”ஓஹ் ஓகே” என திரும்பி அடுத்த ரெஜிய பார்க்க
‘வாங்க ரெ..ரெஜினா”
”ஆமா அண்ணா இது என் கணவர் தாமஸ்” என அறிமுகப்படுத்த கை குலுக்கினான்.
அடுத்து நின்ற சொந்தம் அவர்களையும் வரவேற்றான்.
”ஹாய் ரோஷன்… வெல்கம்” என அவனை தூக்க,
”அங்கிள் நீங்க வந்தாச்சா… ஐ ஜாலி… அம்மா சொன்னாங்க அக்கா இன்னிக்கு அங்க வரப்போறதா அப்போ நீங்களும் வருவிங்களா?”
”ஹ்ம் வருவேன்.. பட்டம் விடலாம் ஓகே ” என்று ஐ பை செய்து கொண்டார்கள்.
ஜெயராஜனுக்கும் பவானிக்கு மனம் நிறைந்தது.
முதலில் பவானி வளையல் அணிய, பின்னர் சகுந்தலா அடுத்து அடுத்து உறவுகள் நண்பர்கள் என வளையல் அணிவிக்க கடைசியில் ப்ரஜன் அணிவித்தான்.
வரும்பொழுதே வைர வளையல் வாங்கி வந்தவன் அவளின் கைகளில் அணிவித்தான். சந்தனம் அணிவித்து வளையல் போட்டு பூக்களை தனது தேவதைக்கு இல்லையே ராட்சஸிக்கு தூவினான்.
பின்னர் அங்கிருந்த சோபாவில் ப்ரஜன் அருகே ரோஷனும் கையில் புவனாவின் குழந்தை அகிலும் தூக்கி கொண்டு, ப்ரஜன் லத்திகாவை காதலோடு கண்களில் கண்டு ரசித்தான்.
பூக்களும் அரிசியும் தலையில் தூவி இருக்க, சடையில் பூக்கள் நகைகள் சூழ, முகமெங்கும் சந்தானம் இரு கன்னத்தில் பூசி, கைகள் இருபக்கமும் ‘கலிர்கலிர்’ என்று கண்ணாடி வளையல் ஒலி எழுப்பி, மேடிட்ட வயிற்றோடு லத்திகாவை காண அவனுக்கு தெவிட்டவில்லை.
பெற்றோர்களான ராஜன்-பவானி தம்பதியருக்கு, ஜீவா-சகுந்தலா தம்பதியருக்கு தங்கள் பிள்ளைகளின் மனம் களிப்பில் அவர்களும் மகிழ்ந்தார்கள்.
”என்னங்க நம்ம பிருத்வி ரோஷன் அப்பறம் கையில குழந்தை இப்போ லத்திகா மேடிட்ட வயிறு என்று பார்க்கும் போது பிருத்விக்கு மூனு குழந்தைகள் மாதிரி எனக்கு தோனுதுங்க… கண்டிப்பா லத்திகாவை மூனு குழந்தைகள் பெற்று கொள்ள சொல்லணும்” என்றாள் பவானி ஆசையோடு.
”நல்ல வேளை பவானி இன்னும் ஏதாவது குழந்தைகள் உன் பையன் பக்கம் போய் நின்று கொள்ள வேண்டாம் என்று சொல்லணும். இல்லை நீ கணக்கை ஏற்றி கொண்டே இருப்ப” என்றார் ராஜன் சிரித்தபடி.
”உங்களை…” என பவானி முறைத்து தள்ள ராஜன் சிரித்தாலும் அவருக்கும் அதே எண்ணம் என்று அறிந்து கொண்டார்.
ப்ரஜன் உள்ளம் எல்லாம் உவகையை தூவியது.
எல்லோரும் உணவருந்தி விடை பெற்று கிளம்பிட,
”மூனு மணிக்கு கிளம்பனும் என்றதும் லத்திகா முகம் வாட, “மணி ஒன்று தானே போய் பிருத்வி கூட பேசிட்டு இரு” என்று பவானி சொன்னதும் இருவருமே மேலே சென்றார்கள்.
பெட்டியில் இருந்து கையில் கொண்டு வந்த அந்த மஞ்சள் ஆரஞ்சு நிற பூக்களை எடுத்து நீட்டினான்.
”இந்த பூ ரொம்ப அழகா இருக்கு ப்ரஜன்” என வாங்கினாள்.
”இது ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா?”
”என்ன என்கிட்ட வந்தது என்று சினிமா வசனமா?” என்றாள்.
”இல்லை…” என நெற்றியில் முட்டி
”இந்த பூ வாடாது உதிராது… அதே சமயம் வாசனை தராது”
”அப்போ இதே மாதிரி தான் எப்பவும் இருக்குமா?” என்றாள் ஆச்சரியமாய்.
”நம்ம லவ் மாதிரி” என்றான் புன்னகையோடு
”ரொம்ப விலை கொடுத்து வாங்கி இருக்கீங்களா?” என்று அவள் கேட்க மெல்ல தலையை அசைத்து ஆம் என்றான்.அதில் ஏதோ அர்த்தம் பொதிந்து இருக்க கண்டு கேள்வி கேட்க வந்தவளை ”நாங்க என்ன கண்டு பிடிச்சோம் தெரியுமா?”
”என்னவாம்”
”இப்படியா கேட்பாங்க?” என்றான்.
” சொல்லுங்க” என்றாள்.
”நாங்க போன இடத்தில கம் மாதிரி இருக்கற ஒரு தாவர ஜெல் வச்சி தையல் இல்லாம அந்த தோலை சரி பண்ணிடற செடியை தேடி. ”(கற்பனை)
”எப்படி?”
”ஹ்ம்ம் இப்போ சீசரியன் மாதிரி இருக்கறவங்களுக்கு மேல தோலை தைக்க செய்யாம, ஜெல் அப்பளை செய்தாலே போதும். ஒரு நிமிஷம்” என தனது பாண்ட் காலில் இருக்கும் தழும்பை காட்டி இதுல அடிபட்டு இருக்கற மாதிரி தெரியுதா?” என்றான்.
”மேலோட்டமா பார்த்தா தெரியலை ஆனா நீங்க சொன்ன பிறகு பார்த்தா தெரியுது”
”எஸ் அதான்”
”அப்போ உங்களுக்கு அடிபட்டு இருக்கா? அதை அந்த ஜெல் தாவரத்தை யூஸ் பண்ணி இருக்கீங்களா?”
”ஆமா… ஏய் அப்பா அம்மாவுக்கு அடிபட்டு இருப்பதை சொல்லிடாதே. உனக்கே சொல்ல கூடாது என்று இருந்தேன் பட் உனக்கு எப்படியும் தெரிஞ்சுடும்” என சிரிக்க கண்கள் கலங்கினாள்.
”வேற ஏதாவது ஆபத்து இருந்ததா? வேற என்ன எல்லாம் நடந்துச்சு?” என்று கேட்டாள்.
”இந்தா இந்த டைரில எழுதி வச்சி இருக்கேன் இன்னிக்கு நைட் படி. ஒய் இன்னிக்கு தான் உன்னோட வர கூடாது பட் நாளைக்கு நான் காலையில் அங்க வந்துடுவேன்”
”ப்ரஜன் நீயும் படி” என அவளின் டைரி எடுத்து நீட்டினாள்.
கதவு தட்டும் சப்தம் கேட்க, மணியை பார்க்க அது மூன்றை தொட நெருங்கியது.
”ஆஹ் வர்றேன் அக்கா” என்றதும் அகிலா கதவை தட்டுவது நின்றது.
லத்திகாவை முகம் மெங்கும் முத்தமிட்டவன் மூச்சு வாங்கிய பின்னே நிறுத்த, அவளோ ஒரே முத்தம் அவனின் இதழில் தந்தாள் நீண்ட நொடி பின் விலகி நின்றாள்.
”ராட்ஸசி நல்லா முன்னேறிட்ட..” என காதில் கிசு கிசுக்க,
”நாளைக்கு மார்னிங் நான் உன் முகத்துல தான் விழிக்கணும் சோ குயிக்கா வந்துடு ப்ரஜூ” என்றாள்.
”கண்டிப்பா டி” என கதவை திறந்தான். எவ்ளோ நேரம் கொடுத்தாலும் எங்களுக்கு நேரம் போதவில்லை என இருவரின் முகமும் வருந்தினர்.
கண்கள் கலங்கி செல்லும் லத்திகாவை பார்க்க அவனுக்கு வலிக்கவே செய்தது. ஆனாலும் விடை கொடுத்தான்.
Super wonderful romance. Intresting
Nice
💕💕💕💕💕💕💕💕💕👌👌👌