உயிரில் உறைந்தவள் நீயடிஅத்தியாயம்-1பூந்தோட்டங்களால் சூழ்ந்த வீடு என்பது இயற்கையின் அழகைக் கொண்ட ஒரு ‘சிறிய சொர்க்கம்’ போன்றது. இங்குப் பலவிதமான செடிகள், கொடிகள், மலர்கள், மரங்கள் மற்றும் புல்வெளிகள் காணப்படும்.மாலை நேரத்தில், பறவைகளின் கீச்சு மற்றும் மலர்களின் மணம், வீடு முழுவதும் பரவியிருக்கும். குளிர்ந்தக் காற்று மற்றும் பசுமையான சூழல் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும்.இத்தகைய வீட்டில், காலை நேரத்தில் காபி அல்லது தேநீர் குடிப்பது ஒரு சிறந்த பரவசத்தைத் தரும். இந்த வீட்டிற்குப் பொருத்தமான பெயரை தான் இறந்துப் போன மகேந்திரன் வைத்திருந்தார். ‘நந்தவனம்’ என்று வாசல் முன் பெயரிட்ட பலகை மாட்டியிருந்தது.பளிங்கு போல அந்தக் காலத்து வீடு இன்னமும் மாறாத வண்ணத்தோடு, உறுதியாகக் காட்சியளித்தது.இந்தத் தெருவினைக் கடந்து செல்வோர் நின்று நிதானமாக, இந்த வீட்டினையும், அழகு மலர்களையும் காணாமல் செல்ல மாட்டார்கள். அத்தகைய வண்ண மலர்களும், கலை நயமிக்க ஜன்னல் கதவு, தூண் என்று பழமை மாறாமல், அதே நேரம் புதுமையான வண்ணங்கள் புகுத்தி, இப்படியொரு வீட்டை, தானும் வாங்க வேண்டுமென்றும் அல்லது கட்டி வசிக்க வேண்டுமென்றும், போவோர் வருவோரின் மனதில் எண்ணத்தை விதைத்துக் கவர்ந்திழுக்கும்.ஆனால் அத்தகைய வீட்டில் தலைக்குனிந்து சற்றும் ஏறெடுத்து பாராது, வாய் பொத்தி நடுக்கூடத்தில் தம்பதிகள் கதிரவன்-ரேகா வீற்றிருந்தார்.ரேகா இந்த வீட்டில் பிறந்து வளர்ந்த பெண். கதிரவனை அந்தக் காலத்திலேயே காதலித்து, பெற்றவரின் பேச்சை மீறி மணந்து கொண்டார். ரேகாவின் பெற்றோர் மகேந்திரன்-அம்பாள் அதனால் காலப்போக்கில் மனமுடைந்து வயதின் ஏற்றத்தில் இயற்கை எய்தினார்கள்.ரேகாவிற்கு ஒரே அண்ணன் தட்சிணாமூர்த்தி. அவரும் அவரது மனைவி உமாதேவி தான் இவ்வீட்டில் வசிப்பது. தட்சிணாமூர்த்தி-உமாதேவிக்கு ஒரே மகன் யுகேந்திரன் நம் நாயகன். இந்த வீட்டில் காதல் திருமணம் புரிந்து வீட்டை மீறி சென்றதால், ரேகாவிற்கும் பிறந்த வீட்டிற்கும், பேச்சும், உறவும், பல காலமாக மறித்துவிட்டது.தட்சிணாமூர்த்திக்கு தன் மகன் யுகேந்திரனுக்கு மணமுடிக்க எண்ணியதிலிருந்து, அவருக்குத் தங்கை ரேகாவின நினைப்பு உதித்தது.தங்கை ரேகாவிற்கு இரண்டு மகள்கள் வினிதா, ஜீவிதா.சொந்தத்தில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்க அசலில் எடுக்க மனம் உறுத்தியது.கோவில் திருவிழவில் தங்கை கணவர் கதிரவனை நிறுத்திக் கேட்கும் அளவிற்கு ஈகோ இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் விதியானது சில நேரம் தங்கள் எண்ணத்திற்கு நெருக்கமாய்ச் சூழ்நிலையை மாற்றும்.அப்படித் தான் கோவில் பூசாரி இரு துருவமாகச் சென்ற தட்சிணாமுர்த்தியையும் கதிரவனையும் நிறுத்தி, நலம் விசாரித்தபடி ”இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி இருக்கறது ஐயா. பக்கத்து பக்கத்து ஊரு, மாமனும் மச்சானும் இன்னமும் பேசி பழகாம இருப்பது நல்லாயில்லை.நம்ம யுகேந்திரனுக்கும் பொண்ணு பார்த்து, எல்லாத்திலும் நீங்களே நிராகரிப்பதா கேள்விப்பட்டேன். உங்க தங்கை வீட்ல இரண்டு பொண்ணு இருக்க, வெளியே ஏன் தேடணும். அப்படின்னு உங்க மனசுல நினைப்பது எனக்குத் தெரியாமயில்லை.பெரியவா மகேந்திரன் ஐயா இருந்தவரை காதல் என்றாலே கசப்புனு இருந்தது. இப்ப தான் தடுக்கி விழுந்தா காதல் திருமணம் நடைப்பெறுதே. பழைய கதையை மறந்துட்டு உங்க வீட்டு பையனுக்கும், அந்த வீட்டு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி சம்பந்தி ஆகலாம்” என்று பேச தட்சிணாமூர்த்தி மச்சான் கதிரவனை ஏறிட, கதிரவனோ தயக்கமாய்ப் பூசாரியை நன்றி கூறும் விதமாகப் பார்த்தார்.தட்சிணாமூர்த்திக் குரலை செருமி, “அரசல் புரசலா எல்லாரும் பேசறது தான் பூசாரிய்யா. இத்தனை வருஷம் வீட்டு வாசப்படில மிதிக்கவிடலை. இப்ப இப்படியாவது உறவுகள் ஒன்னு சேர வாய்ப்பு இருக்கு. ஆனா நாம போய்ப் பொண்ணு கேட்டு, பழசை மனசுல வச்சி, அவங்க முகத்திருப்பிட்டு போனாங்கன்னா.அப்பறம் எங்கப்பா சேர்த்து வச்ச பெயருக்கும், என் மகனுக்கும் அவமானம் இல்லையா?” என்று மாப்பிள்ளை கதிரவன் இருந்த திசைபக்க பொத்தம் பொதுவாய் பார்த்துக் கூறினார்.கதிரவனோ மனைவியின் இத்தனை நாள் பிறந்த வீட்டின் அன்பு, பாசம் அண்ணன் உறவுக்கெனத் தவிப்பாய்க் காத்திருக்க, “அதெப்படி பூசாரிய்யா மச்சான் கேட்டு மறுக்க மனசு வருமா? அதுவும் இத்தனை காலம் கழிச்சுச் சொந்தம் சேரணும்னு எங்களுக்கும் ஆசையிருக்கு. அதுக்கான வாய்ப்பு வீடு தேடி வந்தும் மறுக்கத் தோன்றுமா? மச்சானுக்கும் சம்மதம்னா இந்த அம்மன் சந்நிதி முன்ன இப்பவே வாக்கு தர்றேன். என் மக அவங்க வீட்டு மருமகள்” என்று ஆசையாக உதிர்த்து விட்டார்.மனைவி ரேகாவிடம் கூட விவாதிக்காமல் பதில் உரைத்தார்.தட்சிணாமூர்த்திக்கு அதன் பின் மூடி மறைத்து பேச பிடிக்காமல், “தங்கச்சியிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுங்க” என்றார்.கதிரவனோ “உங்க தங்கச்சி நீங்க எப்ப பேசுவிங்கனு தவம் கிடக்கு. வீட்டுக்கு போனா, நடந்ததைச் சொன்னேன், எங்க அண்ணாவுக்கு வாக்கு தராம ஏன் வந்திங்கன்னு என்னை ஏசுவா” என்றார்.அதன் பின் ஒரு சுமூகமான பேச்சுடன், நீண்ட வருடம் கழித்து மனைவியின் அண்ணனான, தன் மச்சான் பேசவும் மனமகிழ்ந்து நலம் விசாரித்துக் கொண்டார்கள். உறவை புதுப்பித்து விடைபெற்றனர் தட்சிணாமூர்த்தியும் கதிரவனும்.கதிரவன் வீட்டிற்கு வந்து ரேகாவிடம் கோவிலில் நடந்தவையைக் கூறவும், அகமகிழ்ந்தார்.கதிரவன் முழுதும் கூறியதும் ‘உண்மையில் வாக்கு தந்திங்களா? நம்ம மகளுக்கும் என் அண்ணன் மகனுக்கும் கல்யாணத்துக்கு நாள் குறிக்கணும். அவங்க வீட்டுக்கு எப்ப போகலாமென’ விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தார் ரேகா.”அவங்களே ஒரு நாள் வர்றேன்னு சொன்னாங்க ரேகா” என்றார் கதிரவன்.அதன் பின் இரண்டு நாள் கழித்து, யுகேந்திரனால் வரமுடியவில்லை என்றாலும் தட்சிணாமூர்த்தி உமாதேவி இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து வினிதாவை பெண் பார்த்து பூச்சூடினார்கள்.நிச்சயம் வைப்பதற்குப் பதிலாக, அன்றே அண்ணன் தட்சிணாமூர்த்தியையும் அண்ணி உமாதேவியையும் கை நனைக்க வைத்து அனுப்பினார் ரேகா.அதன் பின் திருமணநாள் மட்டும் யுகேந்திரனின் சௌவுகரியத்தைப் பொறுத்து நாள் கிழமையை இவ்வீட்டில் தான் பேசினார்கள்.தட்சிணாமூர்த்தியும் பழைய பேச்சை தவிர்த்து பேசவும், கதிரவன் கண்கலங்கி போனவராக நின்றார்.எல்லாம் சுபமாகச் செல்லும் தருணம் அந்நிகழ்ச்சி நடந்தேறியது.அதற்குத் தான் லேசான கலக்கம், தான் பேச வந்ததை, எப்படிச் சொல்வதென்ற தவிப்பும், ரேகா கதிரவன் இருவருக்குள் இருந்தது.தட்சிணாமூர்த்தி முன் நிற்கவோ, பேசவோ தயங்கி கூனிக்குறுகி இங்கே இப்பொழுது நிற்கின்றனர். இதற்கு முன் வினிதாவிற்கு யுகேந்திரனை மணக்க பேசி, இங்கு வந்த மூன்று நான்கு முறையும், சரிக்குச் சமமாக அமர்ந்து பேசி சிரித்துச் சென்றவரே.இன்று தன் குடும்பத்தைப் பற்றி ஊரார் சிரித்துப் பேசும் நிலையென்றதும், வந்த தயக்கம்.யாருக்குத்தான் இந்த வருத்தம் இல்லாமல் இருக்கும்.வினிதாவை தான் யுகேந்திரனுக்குக் கட்டி வைக்க, பத்திரிக்கை வரை வந்துவிட்டார்கள். இப்பொழுது பார்த்து வினிதா கல்லூரியில் படித்தவனோடு காதலித்ததாக லெட்டர் ஒன்றை எழுதி வைத்து, வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.முதலில் கல்லூரி தோழியின் வீட்டிற்குச் சென்றதாகச் சொல்லி சென்றவள், எப்படியும் வீடு திரும்புவாளெனக் காத்திருக்க, இரவு நெருங்க போனில் தொடர்பு கொண்டார் பெற்றவர்கள்.அவள் வீட்டிலேயே போன் சத்தம் கேட்க, அவளது அறைக்குச் சென்று பார்வையிட்ட போது, மூடியிருந்த கப்போர்டில் போன் இருந்தது.அதற்குக் கீழே ஒரு காகிதம்.அன்புள்ள அப்பா அம்மாவிற்கு,முதலில் என்னை மன்னிச்சிடுங்க. நீங்கள் என்னை நல்லா சீராட்டி பாராட்டி வளர்த்தீங்க. நல்ல வரனை தான் எனக்குத் தேர்ந்தெடுத்து இருப்பிங்க. ஆனா உங்கள் மனதை குளிர்விக்கும் விதமாக என்னால் நீங்கள் பார்த்த வரனை மணக்க முடியாது. காரணம் நான் படித்த கல்லூரியில் சந்திரன் என்பவரை காதலிக்கறேன்.நீங்களே காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள். அதனால் என் காதலுக்குத் தடையிருக்காதென்ற மெத்தனத்தில் இருந்தேன்.உங்களிடம் என் காதலை சொல்ல பலமுறை முயன்றேன். ஏதேதோ காரணங்கள் நிதானமாய்ச் சொல்ல முடியாமல் அலைக்கழித்துவிட்டது. நானும் திருமணம் என்ற பேச்சு வரும் போது கூறலாமெனத் தவிர்த்துட்டேன்.இப்போது அம்மாவின் அண்ணன், தட்சிணாமூர்த்தி மாமாவின் ஒரே பையன் யுகேந்திரன் மச்சானுக்கு என்னை மணக்க, என்னிடம் கேளாமல் வாக்கு தந்துட்டீங்க அவர்களும் சொல்லாமல் கொள்ளாமல் பெண் பார்த்துச் சென்றார்கள்.உங்களுக்கு அவர்களுக்குண்டான உறவை புதுப்பிக்க ஒரு காரணமாக நினைத்து வாக்கு தந்திருக்கலாம். ஆனா எனக்குன்னு ஒரு மனசு இருக்கு. என் காதலை இப்ப சொல்லியிருந்தா நீங்க சந்திரனை ஏத்துக்க மாட்டிங்க. உங்களுக்கு அம்மாவோட அண்ணன் மகனை தான் கட்டிக்கணும்னு முடிவு சொல்லியிருப்பிங்க. ஏன்னா அம்மா அவங்க வீட்டு உறவுகளுக்கு ஏங்கி உங்களை அப்படிப் பேச வைத்திடுவாங்க.எனக்கு உறவா? நான் காதலிச்ச சந்திரனா என்று யோசிக்கறப்ப, அம்மா உங்களைக் கைப்பிடிச்ச மாதிரி எனக்குச் சந்திரன் வேண்டும்னு முடிவு பண்ணிட்டேன். இந்த முடிவு உங்களுக்குக் கஷ்டத்தைத் தரலாம். ஆனா எனக்கு வேற வழி தெரியலை.நாங்க கோவிலில் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். எங்களை வாழ்த்துங்க. விரைவில் உங்களைத் தம்பதிகளா சந்திக்க வருவோம்.உங்கள் அன்பு மகள்,வினிதா.இப்படி எழுதியதை பார்த்துவிட்டு ரேகா-கதிரவன் இடிந்து போய் விட்டார்கள்.ரேகா கதிரவன் காதலித்து மணந்தவர்கள். ஆனால் இரண்டு மகளைப் பெற்று வளர்த்து ஆளானப்பின்னும் உறவுகள் எல்லாம் அறுபட்டு நின்றதில் காதல் திருமணத்தை மறந்து சொந்தத்தில் ஏற்க மாட்டார்களா என்று ஏங்க ஆரம்பித்தனர். தாய் தந்தை எல்லாம் இறந்தப்பொழுது கூட ஒரு சகமனுஷியாகத் தான் நடத்தப்பட்டார் ரேகா.தற்போது தட்சிணாமூர்த்திக்கு தன் ஒரே மகனுக்குத் திருமணத்திற்கு எத்தனையோ வரன் வந்தும், தங்கை மகள்கள் இருவர் வளர்ந்து இருக்க, பழைய சம்பவத்தை மறந்து, பூசாரியும் கோவிலில் வைத்து கேட்டதால், தங்கை மகள் வினிதாவை தன் மகனுக்கு மணக்க கதிரவனிடம் மனம் விட்டு கேட்டார்.ரேகாவிற்கு அண்ணனே வந்து சம்பந்தம் பேச, அண்ணன் மகன் யுகேந்திரனை நிறைய இடத்தில் பார்த்திருக்க, மகளிடம் கேளாமல் சம்மதித்து, சம்பந்தம் பேசி முடித்து விட்டார்.வீட்டில் பெண் பார்க்க வந்து சென்றதும், மகள் வினிதாவிடம் நிதானமாய்க் கூற, அவளோ காதலனை பற்றித் தெரிவிக்கவில்லை.அப்படி வாயெடுக்கும் நேரம், ரேகா வார்த்தைக்கு வார்த்தை உறவுகள் ஒன்று சேர்ந்துவிட்டதாக மகிழ்ந்து பேசினார்.அந்த நேரம் இடியை இறக்க மனமில்லை. சந்திரனும் அந்த நேரம் ஊரில் இல்லை. வினிதா சந்திரனிடம் கூறியதற்கு அவனோ நான் வரும் வரை காதலிப்பதை சொல்லாத, அப்படிச் சொன்னா யுகேந்திரனுக்கும் உனக்கும் அடுத்த முகூர்த்தத்தில் கட்டி கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க. அதனால் இரண்டு மாதம் வேலை விஷயமாக வெளியூர் சென்று திரும்பி வந்ததும் என்னோட வந்துடு” என்றான்.இதோ காத்திருந்து அவன் வந்ததும், நேற்று ஓட்டமெடுத்து விட்டாள்.நேற்றும் இன்றும் வினிதா இல்லாமல் அவள் ஓடிசென்ற விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாய் ஊரில் கசிய, தட்சிணாமூர்த்தியை காண வந்துவிட்டார்கள்.இதற்கு மேல் இங்கு வந்து உண்மை உரைக்காமல் இருப்பது அழகல்ல. ஊரில் இருப்பவர்கள் யாரோ ஒருத்தர் கூறி அண்ணனுக்குத் தெரிய வந்து கேட்பதை விடச் சொல்லி விட வந்தார்கள்.
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
உயிரில் உறைந்தவள் நீயடி
அத்தியாயம்-1
பூந்தோட்டங்களால் சூழ்ந்த வீடு என்பது இயற்கையின் அழகைக் கொண்ட ஒரு ‘சிறிய சொர்க்கம்’ போன்றது. இங்குப் பலவிதமான செடிகள், கொடிகள், மலர்கள், மரங்கள் மற்றும் புல்வெளிகள் காணப்படும்.
மாலை நேரத்தில், பறவைகளின் கீச்சு மற்றும் மலர்களின் மணம், வீடு முழுவதும் பரவியிருக்கும். குளிர்ந்தக் காற்று மற்றும் பசுமையான சூழல் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும்.
இத்தகைய வீட்டில், காலை நேரத்தில் காபி அல்லது தேநீர் குடிப்பது ஒரு சிறந்த பரவசத்தைத் தரும். இந்த வீட்டிற்குப் பொருத்தமான பெயரை தான் இறந்துப் போன மகேந்திரன் வைத்திருந்தார். ‘நந்தவனம்’ என்று வாசல் முன் பெயரிட்ட பலகை மாட்டியிருந்தது.
பளிங்கு போல அந்தக் காலத்து வீடு இன்னமும் மாறாத வண்ணத்தோடு, உறுதியாகக் காட்சியளித்தது.
இந்தத் தெருவினைக் கடந்து செல்வோர் நின்று நிதானமாக, இந்த வீட்டினையும், அழகு மலர்களையும் காணாமல் செல்ல மாட்டார்கள். அத்தகைய வண்ண மலர்களும், கலை நயமிக்க ஜன்னல் கதவு, தூண் என்று பழமை மாறாமல், அதே நேரம் புதுமையான வண்ணங்கள் புகுத்தி, இப்படியொரு வீட்டை, தானும் வாங்க வேண்டுமென்றும் அல்லது கட்டி வசிக்க வேண்டுமென்றும், போவோர் வருவோரின் மனதில் எண்ணத்தை விதைத்துக் கவர்ந்திழுக்கும்.
ஆனால் அத்தகைய வீட்டில் தலைக்குனிந்து சற்றும் ஏறெடுத்து பாராது, வாய் பொத்தி நடுக்கூடத்தில் தம்பதிகள் கதிரவன்-ரேகா வீற்றிருந்தார்.
ரேகா இந்த வீட்டில் பிறந்து வளர்ந்த பெண். கதிரவனை அந்தக் காலத்திலேயே காதலித்து, பெற்றவரின் பேச்சை மீறி மணந்து கொண்டார். ரேகாவின் பெற்றோர் மகேந்திரன்-அம்பாள் அதனால் காலப்போக்கில் மனமுடைந்து வயதின் ஏற்றத்தில் இயற்கை எய்தினார்கள்.
ரேகாவிற்கு ஒரே அண்ணன் தட்சிணாமூர்த்தி. அவரும் அவரது மனைவி உமாதேவி தான் இவ்வீட்டில் வசிப்பது. தட்சிணாமூர்த்தி-உமாதேவிக்கு ஒரே மகன் யுகேந்திரன் நம் நாயகன்.
இந்த வீட்டில் காதல் திருமணம் புரிந்து வீட்டை மீறி சென்றதால், ரேகாவிற்கும் பிறந்த வீட்டிற்கும், பேச்சும், உறவும், பல காலமாக மறித்துவிட்டது.
தட்சிணாமூர்த்திக்கு தன் மகன் யுகேந்திரனுக்கு மணமுடிக்க எண்ணியதிலிருந்து, அவருக்குத் தங்கை ரேகாவின நினைப்பு உதித்தது.
தங்கை ரேகாவிற்கு இரண்டு மகள்கள் வினிதா, ஜீவிதா.
சொந்தத்தில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்க அசலில் எடுக்க மனம் உறுத்தியது.
கோவில் திருவிழவில் தங்கை கணவர் கதிரவனை நிறுத்திக் கேட்கும் அளவிற்கு ஈகோ இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் விதியானது சில நேரம் தங்கள் எண்ணத்திற்கு நெருக்கமாய்ச் சூழ்நிலையை மாற்றும்.
அப்படித் தான் கோவில் பூசாரி இரு துருவமாகச் சென்ற தட்சிணாமுர்த்தியையும் கதிரவனையும் நிறுத்தி, நலம் விசாரித்தபடி ”இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி இருக்கறது ஐயா. பக்கத்து பக்கத்து ஊரு, மாமனும் மச்சானும் இன்னமும் பேசி பழகாம இருப்பது நல்லாயில்லை.
நம்ம யுகேந்திரனுக்கும் பொண்ணு பார்த்து, எல்லாத்திலும் நீங்களே நிராகரிப்பதா கேள்விப்பட்டேன். உங்க தங்கை வீட்ல இரண்டு பொண்ணு இருக்க, வெளியே ஏன் தேடணும். அப்படின்னு உங்க மனசுல நினைப்பது எனக்குத் தெரியாமயில்லை.
பெரியவா மகேந்திரன் ஐயா இருந்தவரை காதல் என்றாலே கசப்புனு இருந்தது. இப்ப தான் தடுக்கி விழுந்தா காதல் திருமணம் நடைப்பெறுதே. பழைய கதையை மறந்துட்டு உங்க வீட்டு பையனுக்கும், அந்த வீட்டு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி சம்பந்தி ஆகலாம்” என்று பேச தட்சிணாமூர்த்தி மச்சான் கதிரவனை ஏறிட, கதிரவனோ தயக்கமாய்ப் பூசாரியை நன்றி கூறும் விதமாகப் பார்த்தார்.
தட்சிணாமூர்த்திக் குரலை செருமி, “அரசல் புரசலா எல்லாரும் பேசறது தான் பூசாரிய்யா. இத்தனை வருஷம் வீட்டு வாசப்படில மிதிக்கவிடலை. இப்ப இப்படியாவது உறவுகள் ஒன்னு சேர வாய்ப்பு இருக்கு. ஆனா நாம போய்ப் பொண்ணு கேட்டு, பழசை மனசுல வச்சி, அவங்க முகத்திருப்பிட்டு போனாங்கன்னா.
அப்பறம் எங்கப்பா சேர்த்து வச்ச பெயருக்கும், என் மகனுக்கும் அவமானம் இல்லையா?” என்று மாப்பிள்ளை கதிரவன் இருந்த திசைபக்க பொத்தம் பொதுவாய் பார்த்துக் கூறினார்.
கதிரவனோ மனைவியின் இத்தனை நாள் பிறந்த வீட்டின் அன்பு, பாசம் அண்ணன் உறவுக்கெனத் தவிப்பாய்க் காத்திருக்க, “அதெப்படி பூசாரிய்யா மச்சான் கேட்டு மறுக்க மனசு வருமா? அதுவும் இத்தனை காலம் கழிச்சுச் சொந்தம் சேரணும்னு எங்களுக்கும் ஆசையிருக்கு. அதுக்கான வாய்ப்பு வீடு தேடி வந்தும் மறுக்கத் தோன்றுமா? மச்சானுக்கும் சம்மதம்னா இந்த அம்மன் சந்நிதி முன்ன இப்பவே வாக்கு தர்றேன். என் மக அவங்க வீட்டு மருமகள்” என்று ஆசையாக உதிர்த்து விட்டார்.
மனைவி ரேகாவிடம் கூட விவாதிக்காமல் பதில் உரைத்தார்.
தட்சிணாமூர்த்திக்கு அதன் பின் மூடி மறைத்து பேச பிடிக்காமல், “தங்கச்சியிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுங்க” என்றார்.
கதிரவனோ “உங்க தங்கச்சி நீங்க எப்ப பேசுவிங்கனு தவம் கிடக்கு. வீட்டுக்கு போனா, நடந்ததைச் சொன்னேன், எங்க அண்ணாவுக்கு வாக்கு தராம ஏன் வந்திங்கன்னு என்னை ஏசுவா” என்றார்.
அதன் பின் ஒரு சுமூகமான பேச்சுடன், நீண்ட வருடம் கழித்து மனைவியின் அண்ணனான, தன் மச்சான் பேசவும் மனமகிழ்ந்து நலம் விசாரித்துக் கொண்டார்கள். உறவை புதுப்பித்து விடைபெற்றனர் தட்சிணாமூர்த்தியும் கதிரவனும்.
கதிரவன் வீட்டிற்கு வந்து ரேகாவிடம் கோவிலில் நடந்தவையைக் கூறவும், அகமகிழ்ந்தார்.
கதிரவன் முழுதும் கூறியதும் ‘உண்மையில் வாக்கு தந்திங்களா? நம்ம மகளுக்கும் என் அண்ணன் மகனுக்கும் கல்யாணத்துக்கு நாள் குறிக்கணும். அவங்க வீட்டுக்கு எப்ப போகலாமென’ விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தார் ரேகா.
“அவங்களே ஒரு நாள் வர்றேன்னு சொன்னாங்க ரேகா” என்றார் கதிரவன்.
அதன் பின் இரண்டு நாள் கழித்து, யுகேந்திரனால் வரமுடியவில்லை என்றாலும் தட்சிணாமூர்த்தி உமாதேவி இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து வினிதாவை பெண் பார்த்து பூச்சூடினார்கள்.
நிச்சயம் வைப்பதற்குப் பதிலாக, அன்றே அண்ணன் தட்சிணாமூர்த்தியையும் அண்ணி உமாதேவியையும் கை நனைக்க வைத்து அனுப்பினார் ரேகா.
அதன் பின் திருமணநாள் மட்டும் யுகேந்திரனின் சௌவுகரியத்தைப் பொறுத்து நாள் கிழமையை இவ்வீட்டில் தான் பேசினார்கள்.
தட்சிணாமூர்த்தியும் பழைய பேச்சை தவிர்த்து பேசவும், கதிரவன் கண்கலங்கி போனவராக நின்றார்.
எல்லாம் சுபமாகச் செல்லும் தருணம் அந்நிகழ்ச்சி நடந்தேறியது.
அதற்குத் தான் லேசான கலக்கம், தான் பேச வந்ததை, எப்படிச் சொல்வதென்ற தவிப்பும், ரேகா கதிரவன் இருவருக்குள் இருந்தது.
தட்சிணாமூர்த்தி முன் நிற்கவோ, பேசவோ தயங்கி கூனிக்குறுகி இங்கே இப்பொழுது நிற்கின்றனர். இதற்கு முன் வினிதாவிற்கு யுகேந்திரனை மணக்க பேசி, இங்கு வந்த மூன்று நான்கு முறையும், சரிக்குச் சமமாக அமர்ந்து பேசி சிரித்துச் சென்றவரே.
இன்று தன் குடும்பத்தைப் பற்றி ஊரார் சிரித்துப் பேசும் நிலையென்றதும், வந்த தயக்கம்.
யாருக்குத்தான் இந்த வருத்தம் இல்லாமல் இருக்கும்.
வினிதாவை தான் யுகேந்திரனுக்குக் கட்டி வைக்க, பத்திரிக்கை வரை வந்துவிட்டார்கள். இப்பொழுது பார்த்து வினிதா கல்லூரியில் படித்தவனோடு காதலித்ததாக லெட்டர் ஒன்றை எழுதி வைத்து, வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.
முதலில் கல்லூரி தோழியின் வீட்டிற்குச் சென்றதாகச் சொல்லி சென்றவள், எப்படியும் வீடு திரும்புவாளெனக் காத்திருக்க, இரவு நெருங்க போனில் தொடர்பு கொண்டார் பெற்றவர்கள்.
அவள் வீட்டிலேயே போன் சத்தம் கேட்க, அவளது அறைக்குச் சென்று பார்வையிட்ட போது, மூடியிருந்த கப்போர்டில் போன் இருந்தது.
அதற்குக் கீழே ஒரு காகிதம்.
அன்புள்ள அப்பா அம்மாவிற்கு,
முதலில் என்னை மன்னிச்சிடுங்க. நீங்கள் என்னை நல்லா சீராட்டி பாராட்டி வளர்த்தீங்க. நல்ல வரனை தான் எனக்குத் தேர்ந்தெடுத்து இருப்பிங்க. ஆனா உங்கள் மனதை குளிர்விக்கும் விதமாக என்னால் நீங்கள் பார்த்த வரனை மணக்க முடியாது. காரணம் நான் படித்த கல்லூரியில் சந்திரன் என்பவரை காதலிக்கறேன்.
நீங்களே காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள். அதனால் என் காதலுக்குத் தடையிருக்காதென்ற மெத்தனத்தில் இருந்தேன்.
உங்களிடம் என் காதலை சொல்ல பலமுறை முயன்றேன். ஏதேதோ காரணங்கள் நிதானமாய்ச் சொல்ல முடியாமல் அலைக்கழித்துவிட்டது. நானும் திருமணம் என்ற பேச்சு வரும் போது கூறலாமெனத் தவிர்த்துட்டேன்.
இப்போது அம்மாவின் அண்ணன், தட்சிணாமூர்த்தி மாமாவின் ஒரே பையன் யுகேந்திரன் மச்சானுக்கு என்னை மணக்க, என்னிடம் கேளாமல் வாக்கு தந்துட்டீங்க அவர்களும் சொல்லாமல் கொள்ளாமல் பெண் பார்த்துச் சென்றார்கள்.
உங்களுக்கு அவர்களுக்குண்டான உறவை புதுப்பிக்க ஒரு காரணமாக நினைத்து வாக்கு தந்திருக்கலாம். ஆனா எனக்குன்னு ஒரு மனசு இருக்கு. என் காதலை இப்ப சொல்லியிருந்தா நீங்க சந்திரனை ஏத்துக்க மாட்டிங்க. உங்களுக்கு அம்மாவோட அண்ணன் மகனை தான் கட்டிக்கணும்னு முடிவு சொல்லியிருப்பிங்க. ஏன்னா அம்மா அவங்க வீட்டு உறவுகளுக்கு ஏங்கி உங்களை அப்படிப் பேச வைத்திடுவாங்க.
எனக்கு உறவா? நான் காதலிச்ச சந்திரனா என்று யோசிக்கறப்ப, அம்மா உங்களைக் கைப்பிடிச்ச மாதிரி எனக்குச் சந்திரன் வேண்டும்னு முடிவு பண்ணிட்டேன். இந்த முடிவு உங்களுக்குக் கஷ்டத்தைத் தரலாம். ஆனா எனக்கு வேற வழி தெரியலை.
நாங்க கோவிலில் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். எங்களை வாழ்த்துங்க. விரைவில் உங்களைத் தம்பதிகளா சந்திக்க வருவோம்.
உங்கள் அன்பு மகள்,
வினிதா.
இப்படி எழுதியதை பார்த்துவிட்டு ரேகா-கதிரவன் இடிந்து போய் விட்டார்கள்.
ரேகா கதிரவன் காதலித்து மணந்தவர்கள். ஆனால் இரண்டு மகளைப் பெற்று வளர்த்து ஆளானப்பின்னும் உறவுகள் எல்லாம் அறுபட்டு நின்றதில் காதல் திருமணத்தை மறந்து சொந்தத்தில் ஏற்க மாட்டார்களா என்று ஏங்க ஆரம்பித்தனர். தாய் தந்தை எல்லாம் இறந்தப்பொழுது கூட ஒரு சகமனுஷியாகத் தான் நடத்தப்பட்டார் ரேகா.
தற்போது தட்சிணாமூர்த்திக்கு தன் ஒரே மகனுக்குத் திருமணத்திற்கு எத்தனையோ வரன் வந்தும், தங்கை மகள்கள் இருவர் வளர்ந்து இருக்க, பழைய சம்பவத்தை மறந்து, பூசாரியும் கோவிலில் வைத்து கேட்டதால், தங்கை மகள் வினிதாவை தன் மகனுக்கு மணக்க கதிரவனிடம் மனம் விட்டு கேட்டார்.
ரேகாவிற்கு அண்ணனே வந்து சம்பந்தம் பேச, அண்ணன் மகன் யுகேந்திரனை நிறைய இடத்தில் பார்த்திருக்க, மகளிடம் கேளாமல் சம்மதித்து, சம்பந்தம் பேசி முடித்து விட்டார்.
வீட்டில் பெண் பார்க்க வந்து சென்றதும், மகள் வினிதாவிடம் நிதானமாய்க் கூற, அவளோ காதலனை பற்றித் தெரிவிக்கவில்லை.
அப்படி வாயெடுக்கும் நேரம், ரேகா வார்த்தைக்கு வார்த்தை உறவுகள் ஒன்று சேர்ந்துவிட்டதாக மகிழ்ந்து பேசினார்.
அந்த நேரம் இடியை இறக்க மனமில்லை. சந்திரனும் அந்த நேரம் ஊரில் இல்லை. வினிதா சந்திரனிடம் கூறியதற்கு அவனோ நான் வரும் வரை காதலிப்பதை சொல்லாத, அப்படிச் சொன்னா யுகேந்திரனுக்கும் உனக்கும் அடுத்த முகூர்த்தத்தில் கட்டி கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க. அதனால் இரண்டு மாதம் வேலை விஷயமாக வெளியூர் சென்று திரும்பி வந்ததும் என்னோட வந்துடு” என்றான்.
இதோ காத்திருந்து அவன் வந்ததும், நேற்று ஓட்டமெடுத்து விட்டாள்.
நேற்றும் இன்றும் வினிதா இல்லாமல் அவள் ஓடிசென்ற விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாய் ஊரில் கசிய, தட்சிணாமூர்த்தியை காண வந்துவிட்டார்கள்.
இதற்கு மேல் இங்கு வந்து உண்மை உரைக்காமல் இருப்பது அழகல்ல. ஊரில் இருப்பவர்கள் யாரோ ஒருத்தர் கூறி அண்ணனுக்குத் தெரிய வந்து கேட்பதை விடச் சொல்லி விட வந்தார்கள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.
வாசகர்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடி மகிழவும்.
Yenna than ernthalum ponnu kitta ketutu sollirukanum
Wow super start sis. Intresting