அத்தியாயம்-18
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
எப்பொழுதும் உறங்கும் போது சற்று தூக்கமின்றி மார்பில் புரண்டு புரண்டு படுத்து, நேரம் எடுத்தே துயில் கொள்ளும் தாரகை ஜீவிதா. இன்று யுகேந்திரன் அத்தை மாமாவின் சௌகரியம் கேட்டு பேசிவிட்டு வரும் முன் உறங்கியிருந்தாள்.
யுகேந்திரனோ அறைக்கதவை தாழிடும் நேரம் உறங்கத்திலிருந்த மனைவியைக் கண்டு, “திருஷ்டி கூடச் சுத்தி போடலை. அம்மாவும் எப்படி மறந்தாங்க. இவளும் தூங்கிட்டா” என்று வந்தான்.
அவள் காலையில் விரும்புவதாகக் கூறி நீட்டிய பரிசை கையில் எடுத்தான்.
‘என்னையே வரைஞ்சு வச்சிருக்கா.’ என்று ரசிக்க ஆரம்பித்தான்.
அவளையே பார்த்தவனுக்கு அவளது வயிறு பெரிதாக இருக்க, ‘இதென்ன உலகருண்டை கணக்காயிருக்கு. டேய் யுகேந்திரா கண்ணு வைக்காத.’ என்று தன்தலையில் தட்டி படுத்து கொண்டான்.
அடுத்த நாள் யுகேந்திரன் குளித்து முடித்துப் பேக்டரி கிளம்பும் போது கூட ஜீவிதா எழவில்லை.
இரண்டு மூன்று முறை அவள் பெயரை உச்சரித்து அழைத்துப் பார்த்துவிட்டு வெளியே வந்தான். “அம்மா அவயின்னமும் எழுத்துக்கலை.” என்று அவர்கள் அறையையே பார்த்து கேட்டான்.
”தினமும் நீ கிளம்பறப்ப எழுந்து வழியனுப்பனுமோ? அவளுக்குத் தூக்கம் கலைந்து அவளா எழுந்துக்கட்டும்” என்றார்.
“அவ எப்ப சாப்பிடுவா?” என்று ஐயத்தைக் கேட்டான்.
“ஏன்டா கல்யாணம் ஆனாப்ப எல்லாம் அவ எப்ப சாப்பிட்டா எப்ப தூங்கினா என்ன செய்தா? எல்லாம் பார்த்துக்கிட்டியோ? இப்ப வந்து நொய்யு நொய்யுன்னு. மணி ஏழு தானடா ஆகுது. எட்டுக்கு எழுப்பி விட்டு பாலும் டிபனும் கொடுப்பேன். நீ சாப்பிட்டியா பேக்டரிக்கு கிளம்பு.” என்று விரட்டினார்.
அரை மனதாக அன்னை சொல்வதைக் கேட்டு, சாப்பிட்டு மாமா அத்தையிடம் கூறிவிட்டு விடைப் பெற்றான். அறைக்கதவை எட்டி பார்த்து ஜீவிதா எழுந்துவிட்டாளா என்று நோட்டமிட்டு வாடியபடி சென்றான்.
“பார்த்திங்களா அண்ணி... தினமும் அவன் எழுந்து பார்க்கறப்ப ஜீவிதா எழுந்துக்கணும். இல்லைன்னா இப்படித் தான் முகம் தூக்கி வச்சிட்டு போவான்” என்று கூறியவர்,
முரட்டுத் தனமாய்த் திரிந்தவனை முயல் குட்டி போல மாற்றிய மகள் இன்னுமா உறங்குகின்றாள் என்று ரேகா எழுப்ப சென்றார்.
அதற்குள் பொன்னம்மாவின் மூலமாக, டம்ளரில் பாலும், தட்டில் பொங்கலும், பௌலில் சட்னி சாம்பார் என்று தனிதனியாகக் கொண்டு வந்து மருமகளை எழுப்ப வந்தார் உமாதேவி.
“அம்மாடி மெதுவா… மணி எட்டாகுது. சாப்பிட்டு மாத்திரையைப் போட்டு ரெஸ்ட்எடு” என்றார்.
“அவர் கிளம்பிட்டாரா அத்தை” என்று அவசரமாய் எழுந்தாள்.
அதெல்லாம் போன் போடுவான். பேசிக்கோ” என்று கூறியதும், பொன்னம்மா தட்டை அங்கிருந்த மேஜையில் வைத்தாள்.
“ஏங்கண்ணி வெளியே வந்து சாப்பிடட்டுமே.” என்று கூற, “அது கண்ணுபட்டுடும் இங்கேயே இருக்கட்டும்” என்று கூறியப்பின் என்ன சொல்வார்.
உமாதேவி தலை மறையவும், “ஏன்டி.. ஒரு பேச்சுக்குப் பெட்ரெஸ்ட் இருக்க வேண்டியது தான். அதுக்கு இப்படியா?” என்று திட்ட ஆரம்பிக்க, “அத்தை வெளியே வராதனு சொல்லிட்டாங்க. அதை மீறி போனா திட்டுவாங்க. போதாதுக்கு அவருக்குப் போனை போட்டுட்டா அவ்ளோ தான். அடுத்த நிமிஷம் இங்க வந்து நிற்பார். அதுக்கு இப்படி அமைதியா இருந்துடறதே நல்லது.” என்று நெய் ஊற்றி பொங்கலை ருசித்தாள்.
“உங்கக்காவுக்கு இப்படியொரு குடும்பத்துல வாழ கொடுப்பினை இல்லை.
உங்க அக்காவுக்கு மாமானார் மட்டும் தான். அவரும் பெருசா வீட்ல இருக்க மாட்டாராம். ஏதோ இப்ப இருக்கறது சொந்த வீடு. வாங்கற சம்பளம் சரியா இருக்குதாம்.
உனக்கு இங்க நல்ல வீடு சொந்தம்பந்தம் கிடைச்சிருக்கு. எப்பவும் கெட்ட பெயர் வாங்கிடாத. மாப்பிள்ளை ஏதாவது பேசினா விட்டுக்கொடு.
நான் ஒரு முட்டாள். முன்னேயே நீ அப்படித் தான். ஒரு வார்த்தை சொல்லி அழுவியா?” என்று பேசியவர், நினைவு வந்தவராக “நான் போய் உங்கப்பாவை பார்த்துட்டு வர்றேன்.” என்று புறப்பட்டார்.
ரேகா சென்றதும் வேக வேகமாய் உமாதேவி வந்தார். “என்ன பேசினிங்க அம்மாவும் பொண்ணும். ஏதாவது உலறி வச்சியா?” என்று அதட்டலாய் கேட்டார்.
“ஏன் அத்தை பதறுறிங்க. அதெல்லாம் அம்மாவிடம் மூச்சு விடலை. எனக்குத் தெரியாதா…?! அவங்ககிட்ட சொன்னா கத்தி கதற ஆரம்பிச்சிடும்.
நான் உங்க பையனிடமே மறைச்சிட்டு இருக்கேன். எங்கம்மாவிடம் சொல்வேனா?” என்று ஆதங்கமாய் முடித்தாள்.
“ஏங்கண்ணு… உங்க அம்மாவை விட என்பையன் முதலிடத்துல வந்துட்டானா?
நீ இப்படிப் பேசறது சந்தோஷமாயிருக்கு. எங்க அவன் வாயும் வயிறும் இருக்கறப்ப, அடிச்சதும் பெட்டியை தூக்கிட்டு போயிடுவியோனு பயந்தேன். நீ பொறுமைக்காரி” என்று மெச்சினார்.
“நான் பொறுமையா இருக்க முதல் காரணம் நீங்க தான். ஒர் ஆம்பள பையன், கட்டின பொண்டாட்டியை அடிச்சா, அதைக் கண்டுக்காம போகற அம்மாவை கேள்விப்பட்டு இருக்கேன், ஆனா நீங்க அவரை அறைந்து ஏன் பண்ணின? எதுக்குப் பண்ணின? என் வளர்ப்புத் தப்பா போச்சான்னு கேட்டிங்க.
மருமக தானே.. நேத்து வந்தவ, அப்படின்னு நினைக்காம எனக்காகப் பேசினிங்க.
அப்படியிருக்க அவரும் மாறும் போது, நான் ஏன் வீட்டை விட்டு போகணும்.” என்றவளின் வயிற்றைப் பார்த்து, “ஜாக்கிரதையா இரு.” என்று கூறிவிட்டு சென்றார்.
தன் வயிற்றைத் தடவி, கலக்கமாய் அமர்ந்தாள்.
அன்று யுகேந்திரன் தள்ளிவிட்டுச் சென்றதில், அடிவயிறு வலிக்க, மயங்கி சரிந்தாள்.
கண் விழித்த பொழுது தன் பிறப்புருப்பிலிருந்து இரத்தம் வெளியேற பயத்தில் மயங்கியதாக மாமியார் உமாதேவி டாக்டரிடம் பேசவும் மருத்துவர் பரிசோதிக்கக் கர்ப்பம் உறுதிச்செய்யப்பட்டது. அதுவும் ட்வின்ஸ் என்று கூறினார்கள்.
இனி அதிகமாக உடலை வருத்த கூடாதென்று கூறினார்கள். ஏனெனில் அப்படிக் கூடுதலாக உடலை வருந்தினால் கருப்பப்பை அடியிறங்கும். அது குழந்தைக்கு ஆபத்து, அதைச் சுமப்பவளுக்கும் ஆபத்து என்று கூறிவிட்டார்கள்.
உமாதேவியோ எப்படியாவது பெட்ரெஸ்ட் எடுக்க வைத்து குழந்தையைக் காப்பாற்றிட எண்ணினார்.
அப்பொழுது இருந்த வருத்தத்தில் டாக்டர் அவங்க இப்ப ஓருயிர் இல்லை இரண்டு உயிர் சுமக்கறாங்க. என்ற வார்த்தையை முழுமையாக யுகேந்திரன் கேளாமலே ஜீவிதாவை காண வந்துவிட்டான்.
‘உனக்கு ஒன்னுன்னா இந்தக் குழந்தையோ வேண்டாம் ஜீவிதா.’ என்ற அபத்த பேச்சில் வாரிசை எதிர்பார்த்த உமாதேவி இரண்டு உயிரை சுமப்பதை கூறவில்லை.
அதே போலத் தன்னைத் தள்ளிவிட்டுச் சென்றவனிடம் முகம் தூக்கி திரும்பியவளும் வார்த்தையை விடவில்லை.
இதில் யுகேந்திரன் மீண்டும் அவளை அடித்து அதனால் மயங்கியது அறிந்து கொதித்துவிட்டார். உமாதேவி “ஏன் உன் புருஷனிடம் சொல்லலை?” என்று ஜீவிதாவை கேட்க, அவருக்கு அவர் குழந்தை தான் முக்கியம். நான் இல்லை” என்று அழுதாள்.
அழுதவளை அடக்கி, “உனக்கா எப்ப என் மகன் குழந்தையைத் தாண்டி உன்னை விரும்பறதா நீ நினைக்கிறியோ, அப்ப உன் வயிற்று இருக்கறது, ஒர் உயிர் இல்லை. இரண்டு உயிர்னு நீயா சொல்லு. அதுவரை நானும் என் பையனிடம் சொல்ல மாட்டேன்.” என்று வீம்பு பிடித்தார்.
பெரும்பாலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உமாதேவி என்பதால் இந்த மூன்று மாதம் மூச்சுவிடவில்லை.
ஜீவிதாவுக்கு இரண்டு நாட்கள் முன் கணவன் விரும்புவதாகக் கூறவும், அவனிடம் கூறுவதற்கு வாய் வார்த்தை வந்துவிட்டது.
ஆனால் திருமண நாளில் கூறலாமென்று காத்திருந்தாள். நேற்றைய பொழுது தான் தனிமை கிடைக்காத பட்சமாக மாறியதே.
இன்று கூறியிருக்கலாம் ஆனால் அவர் சென்று விட்டார்.
இதையே யோசித்தவளை கண்டு உமாதேவி உலுக்கினார்.
“மாத்திரை சாப்பிட்டியானு இரண்டு முறை கேட்டாச்சு.” என்று வந்தார்.
”சாரி அத்தை. மறந்துட்டேன் இதோ சாப்பிடறேன்” என்று எடுத்தாள்.
உமாதேவி நினைவுப்படுத்தி விட்டுச் செல்லும் நேரம், ”அத்தை… எனக்கு அவரிடம் டிவின்ஸ்னு சொல்ல ஆசையாயிருக்கு. ஆனா இத்தனை நாள் மறைச்சிட்டேன்னு திட்டினா என்ன செய்ய?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாதும்மா. நீயாச்சு வீட்டுக்காரராச்சு” என்று கூறினார்.
ஜீவிதா கலக்கமாய்ப் பார்க்க, “அட இந்த முறை செக்கப்புக்கு அவனைக் கூட்டிட்டு போய் அப்படியே சொல்லிடு” என்று கூறவும், முகம் தெளிந்தாள்.
“நல்ல யோசனை அத்தை” என்றவளிடம் “ரெஸ்ட் எடுத்துக்கோ… என் பையனுக்குத் தெரியாம இத்தனை நாள் இரட்டை குழந்தைகள்னு மறைச்சிட்ட, அதுக்கு என்ன பேசுவானோ?” என்று திகிலை தந்துவிட்டே சென்றார். உமாதேவிக்கும் மகன் மீண்டும் மருமகளிடம் கையை ஓங்கியது கோபம் தந்தது. அதற்குத் தான் மருமகளே சொல்லி இவர்கள் பிரச்சனை இவர்களே பார்க்கட்டும் என்று காத்திருந்தார். அதோடு மருமகளைத் தாங்கினார்.
யுகேந்திரன் ஜீவிதாவுக்கு அலைப்பேசியில் அழைத்துப் பேச, “நீங்க சாப்பிட்டிங்களா? சாரிங்க நல்லா தூங்கிட்டேன். உங்களைச் சாப்பிட வச்சி அனுப்பிட்டுத் தூங்கியிருக்கலாம். ஆனா காலையில எழுந்துக்க முடியலை” என்று கூறினாள்.
“பரவாயில்லை… நான் மதியம் வரமுடியாது. அதைச் சொல்ல தான் நினைச்சேன் தூங்கிட்டு இருக்கவும் இப்ப போன் பண்ணினேன். என்னைத் தேடிட்டு இருக்காத. நான் இல்லாம தூங்கிடுவியா” என்று கேட்டான்.
”நான் உங்களிடம் நிறையப் பேசணும்னு நினைச்சேன்.” என்று கூறியதற்கு “நைட்டு பேசு.” என்று கூறினான்.
“ஜீவி… நான் அப்பறம் பேசறேன்.” என்று துண்டித்தான். அவனுக்குப் பேக்டரியில் அவனைப் பார்க்க ஆட்கள் வந்து நிற்க ஜெகன் எவ்வளவு நேரம் தான் சமாளிப்பான்.
போனை வைத்து விட்டு நகம் கடித்தபடி இரண்டு நாளை ஓட்டுவது சிரமமாக இருக்குமென நினைத்தாள்.
முன்பாவது அவனிடம் பேசாமல் தயக்கம் கொண்டு மௌனவிரதம் காப்பவள். இன்று அப்படியா? ஆயிரம் முறை விரும்புவதை முத்தத்திலும் கொஞ்சலிலும் அன்பை பரிமாறச் செய்ய, அவனிடம் இந்த விஷயத்தை மறைத்து பேசுவது கஷ்டமே.
இரண்டு நாள் தானே? என்று எதிர்பார்த்திருக்க, இம்முறை மருத்துவச் செக்கப்பிற்கு ரேகா அழைத்துச் செல்வதாகக் கூறினார்.
அவரை மறுத்து அனுப்ப ஜீவிதா படாதபாடுபட்டாள்.
“அம்மா.. அவரோட முதல் முறை செக்கப்புக்கு போறேன். நீங்க வேண்டாம்” என்று கூற, மகளை மேலிருந்து கீழாகப் பார்த்து, “அதெப்படி டி, தங்க தட்டுல தாங்குற புகுந்த வீடு கிடைச்சா அம்மா தேவைப்பட மாட்டேனா?” என்று அங்கலாய்த்தார்.
”இந்த ஒருமுறை அவரோட போறேன், அடுத்தச் செக்கப் நீங்க கூட்டிட்டு போங்க” என்று ஐஸ் மழையைத் தலையில் இறக்கி வைத்து அனுப்பினாள்.
அதற்குப் பின் ரேகா கதிரவன் மதியம் போலச் சாப்பிட்டுக் கிளம்பினார்கள். இருவரும் சென்றப்பின் யுகேந்திரனும் வரப்போவதில்லை என்பதால் தன் வயிற்றில் இருக்கும் இரண்டு சிசுவிடம் கதை அளக்க ஆரம்பித்தாள்.
-தொடரும்.

Adi paavi
Wow what a fantastic twist. Yogi wont get angry? He will receive any surprise for him. Intresting sis.
உயிரில் உறைந்தவள் நீயடி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 18)
ஓ.. ட்டூவீன்ஸா ? அதைத் தான் மறைச்சாளா ? ஆனா, நான் அவ கர்ப்பம் இல்லாமலே, கர்ப்பம்ன்னு பொய் சொல்லி, அவன் குழந்தையை சுமக்கிற சாக்குல அடித்தடியில இருந்து தப்பிக்க மாமியாரே ஐடியா கொடுத்திட்டாங்களோன்னு நினைச்சிட்டேன் போங்க கிறுக்குத்தனமா.
😀😀😀
CRVS (or) CRVS 2797
vayiru perusa irukunu sollum pothe ninachen nan twins ah irukum nu