அத்தியாயம்-19
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
வீட்டிலில் காரில் ஏறும் போது உமாதேவி சமிக்ஜையாக விழியை உருட்ட, ஜீவிதாவோ பாவமாய் முகத்தை வைத்து மாமியாரை பார்த்தாள்.
“அம்மா… நீங்களும் வாங்களேன். அவ உங்க கூடவே வந்ததால எதிர்பார்க்குற” என்றான்.
“பொண்டாட்டியை நீயா கூட்டிட்டுப் போய்க் கூட்டிட்டு வாடா. கல்யாணமாகி எங்கயாவது சேர்ந்து போயிருக்கியா? பக்கத்துல இருக்குற கோவிலுக்குக் கூடப் போனதில்லை” என்று வசைப்பாட, ‘வரலைடான்னு முடிஞ்சுது. எதுக்கு இவ்ளோ பேசணும்’ என்று முனங்கி காரில் ஏறினான்.
மனைவிக்குச் சீட்பெல்ட்டை அணிவித்து, காரை இயக்கினான்.
இரண்டு தெரு தாண்டவும், “நான் என்ன புள்ளை புடிக்கிறவனா? கார்ல ஏற அப்படி யோசிக்கற? முதல் முறை வெளியே வர்றோம். நீயென்னடான்னா அம்மாவை பார்த்து தவிக்குற” என்று ஆரம்பிக்கவும், சேலையை அழுத்தமாய்ப் பிடித்திருந்தாள். அவள் பயப்படுவதைக் கண்டதும், “ஜீவி…. ஹாஸ்பிடல் என்றதும் பயமாயிருக்கா?” என்றதும் தலையை ஆமென்றாள்.
“பயப்படாத… உனக்கும் நம்ம குழந்தைக்கும் ஒன்னும் ஆகாது.” என்று நெற்றியில் முத்தமிட்டான்.
ஏற்கனவே கவனமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருக்க, சாலையில் கண்ணைப் பதித்துப் பொறுப்பாய் ஓட்டினான்.
“ஏதாவது பேச ஆசைப்பட்டியா?” என்று கேட்டு திரும்பி பார்த்து வினாத்தொடுத்து சாலையை ஏறிட்டான்.
“ம்ம்ம்… ஹாஸ்பிடல் முடிஞ்சதும் நாம பேச வேண்டியிருக்கும்” என்று பீடிகை போடவும், “இன்னிக்கு எப்படியும் வெளியே போக ஜோடியா வந்தாச்சு. பேசிட்டே போகலாம். ஆமா… வீட்ல ரூம்ல நாம தானே இருக்கோம். அப்பல்லாம் பேச தோணலையா?” என்று கேட்க மௌவுனமானாள்.
”ஏய்.. ஏன் வேர்குது.” என்று ஏசியைக் கூட்டினான்.
சற்று சாய்ந்து அமர்ந்து தன்னைச் சமநிலையடைந்தாள்.
அவளது ஓய்ந்த தோற்றத்தில் ஹாஸ்பிடலுக்கு வேகமாக வந்தான்.
டோக்கன் போட்டு காத்திருந்தனர்.
“வந்தமா டாக்டரை பார்த்தமா போனமான்னு இருக்காதா? எவ்ளோ நேரம்? இங்க வந்து அரை மணி நேரத்துக்கு மேல ஆகுது.” என்று புலம்பினான்.
பேசும் சக்தி குறைந்தவளாக யுகேந்திரன் தோள் வளைவில் சாய்ந்தாள்.
கால் மணி நேரம் கழித்து டாக்டர் அறைக்குள் சென்றார்கள்.
ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு “ட்வின்ஸ் பேபிஸ்ல” என்று கேட்டு “மயக்கம் வாந்தி இப்பவும் இருக்கா? பீளிடிங் அதுக்குப் பிறகு வரலைல? என்றார் பெண்மருத்துவர் தாமரை.
முதல் பாதிக் கவனிக்காமல் மனைவியைச் சேரில் அமர வைத்தவன், “மயக்கம் வாந்தி இல்லை டாக்டர். எப்ப பாரு தூங்கறா. பீளிடிங் இல்லைன்னு தான் நினைக்கறேன். ஏதாவதுன்னா என்னிடம் சொல்லிருப்பா.” என்று யுகேந்திரனே பதில் கூறினான்.
டாக்டர் இருவரையும் பார்த்துவிட்டு, “ஒழுங்கா சாப்பிடறிங்களா? மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்கறிங்க தானே?” என்று விசாரித்துப் பீபி செக்கப் செய்தார்.
“அதெல்லாம் அம்மா… பெர்பெக்ட்டா கவனிப்பாங்க. மாத்திரை எல்லாம் கண் முன்ன போட வைப்பாங்க” என்று யுகேந்திரனே ஜீவிதா வாய் திறக்கும் முன் கூறினான்.
“ஏன் பீபி அதிகமாயிருக்கு?” என்று ஜீவிதாவை கேட்க, “தெரியலை டாக்டர் உங்களைப் பார்க்க வந்தாலே அவளுக்கு நெர்வஸா இருக்கு” என்று கூறியவனை, “நீங்க தான் ஜீவிதா வா?” என்று கேட்டதும், “இல்ல டாக்டர். அவ ரெஸ்ட் எடுக்கணும்ல. அதான் அவளுக்குப் பதில், நான் பதில் சொல்றேன்.” என்றான்.
“அப்படில்லாம் அவங்களுக்குப் பதில் நீங்க பதில் சொல்ல கூடாது. அவங்க உடல்நிலையை அவங்க தான் வாய் திறந்து சொல்லணும்.” என்று கண்டித்துவிட்டு, “பீபி ஏறக்கூடாது. அப்பறம் மயக்கம் வரும்.” என்றவர், ஸ்கேனை பார்க்க படுக்கக் கூறினார்.
பக்கத்தில் திரைச்சீலை தடுப்பு இருக்க, அங்கே ஒரு சிறு மெத்தை இருந்தது. லேசாகச் சேலையைத் தளர்த்தி, படுக்க ஆரம்பித்தாள்.
‘நான் போகவா? இருக்கவா? என்பது போல விழித்தான் யுகேந்திரன்.
அதற்குள் ஜெல் தடவி டாக்டர் தாமரை தயாராக, தன் குழந்தையின் அசைவை தடவியதால் உணர்ந்தவனுக்கு ஸ்கேன் மெஷினில் கருப்புத் திரையில் காண ஆவலுடன் ஜீவிதா கையைப் பற்றினான்.
“தண்ணீர் குறைவா இருக்கு. இங்க வர்றப்ப நிறையக் குடிங்கன்னு சொல்லறேன் இங்க வர்றவங்க யாருமே கேட்கறதுயில்லை.” என்று ஜீவிதா வயிற்றில் கருவிகளை அழுத்தமாய் வைத்து தேய்த்தார்கள்.
“கு..குழந்தைக்கு வலிக்கப் போகுதுங்க. இப்படித் தேய்ச்சா என்னாகும்” என்று கத்தினான்.
“சார் நான் டாக்டர் படிச்சிட்டு தான் வந்தேன். எனக்குத் தெரியும். நீங்க தானே ஓய்ஃப் கர்ப்பம் ஆனது கூடத் தெரியாம அடிச்சது.” என்றதும் அமைதியானான்.
“இரண்டு குழந்தையில் ஒர் குழந்தை வெயிட் கம்மியா இருக்கு ஜீவிதா. இன்னொரு குழந்தை பரவாயில்லை. நல்லா சாப்பிடறிங்களா இல்லையா? ஹீமோகுளோபின் கூடக் குறைவாயிருக்கு.” என்று கூற, “என்னது இரண்டு குழந்தையா?” என்று அலறினான்.
“சார் இப்படிக் கத்த கூடாது. வந்ததிலிருந்து பார்க்கறேன் பேசிட்டே இருக்கிங்க. ஏம்மா எப்பவும் கூட்டிட்டு வர்ற அம்மா வரலை?” என்று கேட்டார் டாக்டர்.
யுகேந்திரனோ “ஹலோ டாக்டர். இரண்டு குழந்தைன்னு செல்லறிங்க?” என்றதும், “ஆமா இரண்டு குழந்தை தான். அன்னிக்கு முதல் தடவை நீங்க வந்தப்ப கங்கிராட்ஸ் பண்ணிட்டு “இனி ஒர் உயிர் இல்லை இரண்டு உயிர் சுமக்கறாங்கன்னு சொன்னேனே.” என்று கூறவும், “இனி அவ ஒர் உயிர் இல்லை இரண்டு உயிர்னு சொன்னதா இல்லை நினைச்சேன்.” என்று ஜீவிதாவை அதிர்ச்சியாக நோக்கினான்.
டிசு பேப்பரை ஜீவிதாவிடம் நீட்டி, “என்னத்தை நினைச்சிங்க? ஏம்மா இவருக்கு எதுவும் தெரியாதா?” என்று கேட்டார்.
“இ..இல்லை டாக்டர்.. அன்னைக்கு நான் கோபமா இருந்தேன். உங்க பேச்சையும் அவர் சரியா கேட்கலை. அதனால டிவின்ஸ் என்பது அவருக்குத் தெரியாது.
இன்னிக்கு தான் அவரிடம் டிவின்ஸ் என்பதைச் சொல்ல கூட்டிட்டு வந்தேன்.” என்று கூறவும் தன் இருப்பிடம் வந்து அமர்ந்தார் டாக்டர்.
“என்னம்மா நீங்க இப்படி இருக்கிங்க?” என்றதும் யுகேந்திரனை திட்ட வாயெடுக்கும் நேரம் காயப்பட்ட வேதனையோடு அவன் அமைதியாக இருந்தான்.
இதுவரை முகமலர்ந்து பேசிக்கொண்டேயிருக்க, தற்போது மௌனத்தைப் பூசி வீற்றிருந்தவனிடம், திட்டவும் மனமில்லை.
“உங்க இரண்டு பேருக்கும் வேறயேதாவது கவுன்சீலிங் தேவைப்படுமா?” என்றதும் விடுக்கென நிமிர்ந்தான்.
ஜீவிதா பதற, யுகேந்திரனோ “எனக்கு எந்தக் கவுன்சீலிங்கும் தேவையில்லை. நான் இங்க எதையும் மறைச்சி பேசி வாழலை. அவங்களுக்குத் தேவையென்றால் சொல்லுங்க. அமைதியா கேட்டுக்கறேன்.” என்று பதில் தந்தான்.
“அய்யோ அதெல்லாம் வேண்டாம் டாக்டர். நான் இன்னிக்கு அவரிடம் பேசிடுவேன். டிவின்ஸ் என்றதை தான் சொல்லலை. மத்தபடி எங்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் இல்லை.” என்று நடுக்கமாய்ப் பேசினாள் ஜீவிதா.
“ஆர் யூ சூர்” என்று டாக்டர் கேட்க, ”கண்டிப்பா டாக்டர்.” என்று கூறினாள்.
பிறகு மருந்து மாத்திரையை அதையே கன்டினியூ செய்யச் செல்லி எழுதி முடித்து, “ஹீமோகுளோபின் எட்டு தான் இருக்கு. இரண்டு குழந்தைகளை வயிற்றுத் சுமக்கறிங்க. நடுவுல சிசேரியன் முடிவானா நிறையப் பிளட் லாஸ் ஆகும். அதுக்குத் தான் செல்லறேன். பீபி ஏறாம பார்த்துக்கோங்க.” என்று அறிவுரை கூறினார்.
யுகேந்திரன் கன்சல்டிங் பீஸை தந்துவிட்டு கதவை திறந்தான்.
ஜீவிதாவை முன்னே விட்டு கதவை மூடினான்.
அவளை வரும் பொழுது கைப்பிடித்து அழைத்து வந்தான். அதோடு இரண்டு குழந்தை என்றதில் அவள் மீதிருந்து கோபத்தைத் தள்ளி வைத்து, மீண்டும் கையைப் பிடித்தான்.
அவன் புஜத்தை மற்றொரு கையால் பிடித்துத் தலை சாய முற்பட்டவளிடம், லேசான விலகலை காட்டினான்.
அவனை விழி நிமிர்த்தி முனுக்கென்ற கண்ணீரை சிந்தினாள்.
“அழுத… கொன்றுவேன். இங்க நான் அழணும். கல்லு மாதிரி நடந்து வர்றேன்” என்று கடித்துத் துப்பிவிட்டு மாத்திரை வாங்கினான்.
மகப்பேறு மருத்துவமனை அமைதியாகக் காட்சியாளிக்க, நிசப்தமான இடத்தில் கத்தாமல் நாகரீகத்தைக் கடைப்பிடித்தனர்.
காரில் ஏறியதும் சீட்பெல்ட் போட்டுவிட்டான். அவள் வயிற்றில் ஒர் உயிர் அல்ல இரண்டு உயிர் என்றதும் கூடுதலாகப் பொறுப்பும் பயமும் வந்தது.
கத்தி பேசினால் சண்டை போட்டால் அவள் உடைந்து அழுதாலும் இந்த நிமிடம் யுகேந்திரனால் தாங்கயியலாது. அதே நேரம் தன்னிடம் மூன்று மாதம் டிவின்ஸ் என்பதைத் தெரியப்படுத்தாமல் கமுக்கமாக இருந்தவளை சும்மா விடவும் மனமில்லை.
காரை மெதுவாக ஓட்டினான். குரலை செருமி, “எங்கம்மாவுக்குத் தெரியுமா?” என்றான்.
“அத்தைக்கு அன்னைக்கே தெரியும்.” என்று கூறினாள்.
யுகேந்திரன் ‘அன்னையுமா தன்னிடம் மறைத்திருக்கின்றார்?’ என்று கோபம் வந்தது.
அவன் திண்ம தோளில் பச்சை நரம்பு புடைப்பதை ஜீவிதா கண்ணுற்றாள்.
“அன்னைக்கு டாக்டர் உங்களிடம் சொன்னாங்க. நீங்க தான் வாசல்ல சரியா காது கொடுத்து கேட்காம என்னைப் பார்க்க ஆசையா ரூமுக்கு வந்துட்டிங்க. நாம் அப்ப சண்டை போட்டிருந்தோம்” என்று ஆரம்பித்தாள்.
“தினமும் தானடி நமக்குள்ள சண்டை நடந்தது. ஏன் தினமும் தானே மத்ததும் நடந்துச்சு?” என்று கத்தவும், ஜீவிதா பின்னடைவும் விதமாகச் செல்ல, “உன்னைக் கல்யாணம் பண்ண கேட்டப்ப, தாலி கட்டினப்ப, பழிவாங்க நினைச்சேன். ஆனா உன் முகறகட்டையைப் பார்த்தா பழிவாங்க தோணலை.
உண்மையைச் சொல்லணும்னா ஒரு புருஷன் பொண்டாட்டிக்கிட்ட எப்படிப் பழகணுமோ அப்படி மட்டும் தான் உன்னிடம் நடந்துக்கத் தோணுச்சு.
நீயில்லாமா நான் இல்லைன்னு முடிவாகவும் தான் விரும்புவதை உணர்ந்தேன்.
விரும்பியதும் வெளிப்படுத்தினேனே டி. மூன்று நாள் பழி வாங்கியதுக்கு மூன்று மாசம் சொல்லாம இருந்திருக்க? என்று முறைத்தான். ஏற்கனவே இரண்டு மாதம் கருவுன்டானதை ஜீவிதா அறியாமல் இருந்தாள். இதில் மேலும் மூன்று மாதம் ட்வினஸ் என்பதை மறைத்ததால் ஓரு குழந்தை என்பது போல யுகேந்திரன் நினைத்திருந்தான்.
“அச்சோ… நான் சொல்ல கூடாதுன்னு நினைக்கலை. டாக்டர் சொன்னதைக் கேட்டு தான் வீட்ல ரெஸ்ட் எடுக்கச் சொன்னிங்கன்னு நினைச்சேன். ஆனா வீட்டுக்கு வந்த இரண்டு நாள்ல உங்களுக்கு அந்த விஷயம் தெரியலைனு உங்க பேச்சிலயே தெரிந்தது.
நீங்க என்னை அடிச்சி தள்ளிவிட்டதால அத்தையும் உங்க மேல கோபத்துல இருந்தாங்க. அவங்களும் சொல்லலை. நானும் உங்க மேல கோபமா இருந்தேன். நானும் சொல்லலை.
அத்தை தான் இரண்டு நாள்ல சாப்பாடு கொடுக்க வந்து கேட்டாங்க. ‘அவனுக்கு வயிற்றுல இரண்டு குழந்தையிருக்குன்னு தெரியாதா?’னு.
உங்களிடம் சொன்னதைத் தான் அன்னைக்கும் சொன்னேன். அவருக்கு என்னைப் பிடிக்கலை. அவருக்கு அவர் குழந்தை மட்டும் முக்கியம். நான் ஏன் சொல்லணும்னு அழுதேன்.
அத்தை அதுக்கு, ‘ஒரு பொண்ணு தாயானா அந்தச் சந்தோஷமான விஷயத்தைக் கட்டின புருஷனிடம் முதல்ல சொல்லுவா. ஆனா இங்க உனக்கே கர்ப்பம் தரிச்சது தெரியலை.
இரட்டை குழந்தை என்பதையும் அவன் சரியா காதுல வாங்காம உன்னைப் பார்க்க ரூமுக்கு வந்துட்டான்.
நீயும் சொல்ல மாட்டேங்குற. அப்ப நானும் சொல்ல மாட்டேன். உன் புருஷனிடம் உனக்கா எப்ப சொல்ல தோணுதோ அப்ப சொல்லு.’ அப்படின்னு முறுக்கிட்டு போனாங்க.
எப்படியும் பேச்சு வாக்குல உங்களிடம் சொல்லிடுவாங்கன்னு நினைச்சேன். ஆனா அத்தை வார்த்தையை விடலை.
நம்ம கல்யாண நாள்ல நீங்க என் மேல வச்ச பாசத்தை, நான் மனசார உணர்ந்தேன். உங்களோட உன்னதமான அன்பை அனுபவிக்கும் போது குழந்தை விவகாரம் சொல்லிட ஆசைப்பட்டேன். இரண்டு நாளா அத்தையை உதவிக்குக் கூப்பிட்டேன். அவங்க முடியவே முடியாது. இது புருஷன் பொண்டாட்டி சண்டை நீங்களே பேசி முடிவெடுங்கன்னு இன்னிக்கு உங்களோட தனியா அனுப்பிட்டாங்க.
எனக்கு உங்களிடம் சொல்ல பயம். எப்படியும் டாக்டர் ரிப்போர்ட் பார்த்து உங்களிடம் சொல்ல அதை வச்சி அப்படியே.. ” என்றதும், “அப்ப அந்த டாக்டர் ஜஸ்ட் மேலோட்டமா சொவ்லிருந்தா இன்னிக்கும் எனக்குத் தெரியப்படுத்தாம வந்திருப்ப? அப்படித் தானோ?” என்றான்.
“அய்யோ அப்படி இல்லைங்க” என்று கூறவும், “வேற ஏதாவது என்கிட்ட சொல்லணுமா? இன்னிக்கே சொல்லி தொலை. மனசுல வச்சிட்டு புழங்கிட்டு இருக்காத. எதுனாலும் எல்லாத்தையும் இப்பவே சொல்லு” என்றான்.
“ஐ லவ் யூ யுகி” என்றாள் ஜீவிதா.
-தொடரும்.

Etha ketu jerk aagiruppan.. sudden brake podalaya
nice!!!
உயிரில் உறைந்தவள் நீயடி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 19)
அச்சோ…! ஐ லவ் யு யூகி என்கிற நாலே வார்த்தையை சொல்லி இப்படி ஒரேயடியா கவுத்துப்பூட்டாளே. ஆனாலும் வயிறு காட்டி கொடுத்திடுமே…? அதுக்கூட தெரியாத குழந்தை பையனா இவன் ?
அட ராமா !
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wow super jeevi. Excellent narration sis. Now yugi what will do? Very intresting sis.
dei dei kovam varathu niyama irunthalum ipovum murachitu iruka irunthalum ava kitta therinjikanum tha kekura good ena konjam nalla kavanichi iruntha neeye kandu pidichi irupa yugan . ipo un kitta twins num sollita una love panra num sollita manasa veli paduthita
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 kovam varathan seium but konjam yugi avalaiyum purinjikkanum😕