அத்தியாயம்-12
Thank you for reading this post, don't forget to subscribe!விஷ்ணு தன் அருகே குத்துவிளக்காக சுடரிடும் பெண்ணவளை உடனே வாறி அணைத்திடும் ஆவல் பெறுக, கைகளை மெதுவாக அவளது வெற்றிடையில் கோலமிட்டான்.
கமலியின் மான்விழிகள் மிரண்டு “விச்சு சும்மாயிரு, எங்க அக்கா மாமியார், மாமானார் வீட்டு ஆளுங்க பார்த்தா ஏதாவது தப்பா பேசிடுவாங்க. ஏற்கனவே அவங்க பார்த்த மாப்பிள்ளை நான் கட்டிக்கலைன்னு கோபத்துல இருக்காங்க, நீங்க வேற” என்றாள்.
விஷ்ணு அதை காதிலே ஏற்றுக்கொள்ளாமல் “செத்துப் பிழைச்சு உன்னை தேடி வந்திருக்கேன் பேபி.
இந்த நாளுக்காக, கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி நாம சண்டை போட்டு இருக்கோம்.
நீ கோபத்தில போன, நான் கோமாக்கு போயிட்டேன்.
உயிரோட நினைவு திருப்பி வந்ததே உனக்காக மட்டும் தான். அவங்க பார்ப்பாங்க இவங்க பார்ப்பாங்கன்னு உயிரை வாங்காத.” என்றவன் முகம் லேசாய் அனலை கக்கியது.
விஷ்ணு தாய் வசுந்தரா அருகே வந்து “என்னடா பிரச்சனை ஏன் கோவமா இருக்க. ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் நடக்குது. இந்த நேரத்துலயும், முகத்தை தூக்கி வைக்கறியே. அங்க பாரு அந்த பெரிய ஸ்கீரினில உன் முகம் அஷ்டக்கோணலாக மாறுவது தெரியுது. இந்த டிரோன் கேமிரா வேற முகத்தை ஜும்ல எடுக்குது.
கொஞ்சம் சிரிச்சு சந்தோஷமா பேசு. உன்மேல அன்பா இருக்கா கமலி” என்றதும் அன்னையின் பேச்சால் அமைதியானான்.
தெய்வானை சிதம்பரம் அவர்கள் வழி சொந்தக்காரர்களோடு புகைப்படம் எடுக்க ஐஸ்வர்யாவை அழைத்து வர, வசுந்தரா வழிவிட்டு நகர்ந்தார்.
ஐஸூ குட்டியை கமலி தூக்கி, விஷ்ணுவுக்கும் அவளுக்கும் நடுவே நிற்க வைத்து புகைப்படம் எடுத்தாள்.
அவர்கள் கீழேயிறங்கி செல்லவும், விஷ்ணுவோ “லோட்டஸ் பேபி, மேரேஜ் முடிஞ்ச கொஞ்ச நாளிலேயே நாம குழந்தை பெற்றுக்கொள்ளலாம். தள்ளி எல்லாம் போடக்கூடாது” என்று அக்கா மகளை பார்த்து கூறியவனை கண்டு தலையாட்டினாள்.
அக்கணம் “டேய் மச்சான் கொஞ்சம் இங்க வர்ற கெஸ்டை கவனிடா. இன்னமும் பிருந்தாவனம் ‘பார்க்’ல உட்கார்ந்து ‘ஹைபிச்’ல பேசற நினைப்பு. இடத்தை பாருடா உனக்கு இன்னிக்கு ரிசப்ஷன்.” என்றதும் விஷ்ணு நண்பனை கண்டு முறுவலித்தான்.
“இவ என்னோட மனைவி லீலா. இவனுக்கு ஏற்கனவே தெரியும் என்னோட மாமா பொண்ணு.
ரீசண்டா மாமாக்கு நெஞ்சு வலி வந்ததும், சரியாகி திரும்பி வந்துட்டார். ஆனாலும் பயத்துல அவசரமா குலதெய்வ கோயில்ல வச்சி, சிம்பிளா எனக்கு கல்யாணம் பண்ணிவிட்டாங்க.” என்று கமலியிடம் அறிமுகப்படுத்த, பூங்கொத்தை வழங்கி வாழ்த்தினார்கள்.
“போதும்டா கமலிகிட்ட சொல்லியிருக்கேன்.” என்றவன் குரலுடைந்து “உயிர் காப்பான் தோழன்னு சொல்வாங்க. இவன் எனக்கு அப்படி தான்மா” என்று லீலாவிடம் நெகிழ்ந்து கூறினான் விஷ்ணு.
“டேய் மச்சான்” என்று அணைத்து கொண்டனர்.
“சரிடா சாப்பிட கிளம்பறோம். சிஸ்டரை இப்பவே தொல்லை பண்ணாத.” என்று புறப்பட்டனர்.
இவர்கள் சென்றதும் “ஏய் கார்த்திகா ஷாம்பு எங்க?” என்றான்.
“அவ பியான்ஸி கூட பேசிட்டு வர்றேன்னு போனா. அவளா வருவா.” என்றதும் விஷ்ணு பார்வை எதிரே இருந்தது.
அங்கே ஈஸ்வரன் வந்துக் கொண்டிருந்தான். மெதுவாக பூனை நடை நடந்து வந்து, குழந்தை நந்தினியின் கண்ணை பொத்தினான்.
பலூனை வைத்து ஐஸூவோடு விளையாடிய குழந்தை நந்தினிக்கு சித்தப்பாவின் பரிசம் உணர, “ஐ… சித்தப்பா” என்று குதுகலித்தாள்.
விஷ்ணு கமலி தோளில் இடித்து, “அங்க பாரு… மண்டப வாசல்லயிருந்து வந்தானே, குறுக்கே ஆப்பிள் மாதிரி எத்தனை பொண்ணுங்க வந்தாங்க. அவங்களை பார்த்தானா? குழந்தையை தேடி கொஞ்சறான். இவன் பக்கா 90’ஸ் பையன். என்னால இவன் லைப் குழப்பமாகலைப்பா. இவனுக்கு மிங்கிள் ஆக தெரியலை. சிங்கிளா சுத்த மட்டும் தெரியுது” என்று நொத்தான்.
“விச்சு… என்ன சொன்ன? ஆப்பிள் மாதிரி பொண்ணுங்களா? உன்னை இரு அப்பறம் கவனிக்கறேன்” என்று நெஞ்சில் இடித்தாள்.
ஈஸ்வரன் மேடையில் இருந்த ஜோடியை கண்டு கையசைத்தான். விஷ்ணு மேடைக்கு வாங்கள் என்பதாக பதிலுக்கு கையசைத்தான்.
திவ்யபாரதியோ “ஏதோ கிஃப்ட் நீயா வாங்கிட்டு வந்துடறதா சொன்னியே ஈஸ்வர். கிஃப்ட் கொடுத்துட்டு வந்துட்டா நந்தினி அழைச்சிட்டு சாப்பிட போகலாம்” என்றதும், ஈஸ்வரன் தன் பேண்ட் பேக்கெட்டை தொட்டு மேடைக்கு அடியெடுத்து வைத்தான்.
திவ்யபாரதியே பரிசு பொருள் வாங்குவதாக இருந்தார். ஆனால் ஈஸ்வரன் திருமணத்திற்கு வராமல் போனால் நன்றாக இருக்காதே. அவன் முகத்தை பார்த்தும் வெகுநாட்களாகவும், நீயே பரிசும் வாங்கிவிடு’ என்றுரைத்தார்.
மேடைக்கு வந்தவன் “ஹாப்பி மேரீட் லைப் விஷ்ணு.” என்று கூற, ‘தேங்க்யூ மேன்” என்று கட்டிப்பிடிக்க, இருவருக்கும் சேர்த்து கையில் நகைப்பெட்டி தந்தான்.
விஷ்ணு ஆர்வம் மிகுதியில் திறக்க அதில் தாமரை மலர் போன்ற டாலர் இருந்தது.
விஷ்ணு முகத்தில் மத்தாப்பூ சிரிப்பு. உடனடியாக தன் கழுத்திலிருந்த செயினில் அந்த டாலரை அணிந்தான்.
“நைஸ் டாலர்” என்று பாராட்டவும் மிகவும் பிடித்திருப்பதாகவும் உரைத்தான் விஷ்ணு.
ஈஸ்வரனும் ”விஷ்ணுவுக்கு தாமரையை பிடிக்கும் இல்லையா?” என்று கமலியை கண்டு சீண்ட, விஷ்ணு “கண்டிப்பா” என்றான்.
“மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் கமலி” என்று ஈஸ்வரன் கூறவும், “தேங்க்யூ ஈஸ்வர். நீங்க வரலையானு அத்தையிடம் அடிக்கடி கேட்டேன்.” என்றாள்.
சன்னமான சிரிப்பில் புகைப்படம் எடுத்து முடிக்க, ஈஸ்வரன் மேடை விட்டு இறங்கினான்.
நந்தினி ஐஸ்வர்யாவை தேடி ஓட, திவ்யபாரதி ஒரு முதிய தம்பதியரிடம் பேச சென்றார்.
ஈஸ்வரன் இயல்பாய் போனை நோண்டிக் கொண்டு நடக்க, அவனை வழிமறைக்கும் விதமாக வந்தாள் ஒரு பெண்.
ஈஸ்வரன் தான் போனை நோண்டிக் கொண்டு இந்த பெண்ணிற்கு வழியடைத்து விட்டோமென நகர, அவளும் அவன் பக்கமே நகர்ந்தாள். வலது திரும்ப வலதுபக்கமாகவும், இடது திரும்பினால் இடது பக்கமென அப்பெண் ஈஸ்வரன் செல்லும் வழியை மறைத்து கொண்டாள்.
“எக்ஸ்கியூஸ் மீ” என்று ஈஸ்வரன் கேட்டதும், “எஸ் தனியா பேசணுமா வாங்க” என்று அழைத்தாள்.
ஈஸ்வரனோ அன்னையை காண, “அவங்க எங்க அப்பா அம்மாவிடம் தான் பேசறாங்க” என்றதும் ஈஸ்வரனோ ‘ஓ’ என்று அவளை ஏறிட்டு இது அன்னையின் பெண் பார்க்கும் படலமென யூகித்து பல்லை கடித்து வந்தான்.
எதிரெதிரே இருக்கையில் அமர்ந்து தொண்டையை செருமி, “நான் சாம்பவி, பி.ஏ இங்கிலிஷ் படிச்சிருக்கேன்.
என்னோட பயோடெட்டா அண்ட் போட்டோ, உங்களுக்கு ஆன்ட்டி அனுப்பியிருந்தாங்க. ஆனா நீங்க அப்ப இருந்த கஷ்டத்துல பார்த்திருக்க மாட்டிங்க.” என்றதும் ஈஸ்வரன் இவளுக்கு நான் கமலியை விரும்பியது தெரியுமா? என்பது போல நெற்றி சுருக்கினான்.
அதுவே அவன் கேட்க வருவதை உரைத்திட, “ஆக்சுவலி நீங்க இங்கிருந்து போறதுக்கு முன்ன அம்மன் கோவிலுக்கு வந்திங்களே. அங்க தான் நான் மரத்துல மஞ்சகயிறு கட்டிட்டு இருந்தேன். கல்யாணமாகனும்னு அம்மா கட்ட சொன்னாங்க.
வேண்டா வெறுப்பா எரிச்சலா மரத்துல கட்டிட்டு இருந்தேன். அம்மா அப்ப தான் ஆன்ட்டியை பார்த்தாங்க.
ஆன்ட்டி அழுதுட்டே உங்க கூட வந்தாங்க. நீங்க ஒரு தட்டுல பட்டுச்சேலை, நகைப்பெட்டி எடுத்து வந்து உண்டியல்ல போட்டிங்க. நான் அதை பார்த்தேன்.
அம்மாவுக்கு அந்த நேரம் ஆன்ட்டியிடம் பேச தோணலை. ஆன்ட்டியும் எங்களை பார்க்கலை.
ஒரு வாரம் கழிச்சு உங்க வீட்டை தாண்டி போறப்ப அம்மா ‘வண்டியை நிறுத்து, என் பிரெண்ட் திவ்யபாரதி அன்னைக்கு அழுதா. என்னனு கேட்கறேன்னு சொன்னாங்க.
ஏன்மா உனக்கு இந்த ஊர் வம்பு. ஒழுங்கு மரியாதையா வாங்கன்னு சொல்ல, ‘அவ என் பிரெண்ட் டி. என்னனு கேட்கறேன் போன் இருந்தா போன்ல கேட்டுப்பேன். அவங்க வீட்ல பெரிய பையன், பெரிய மருமக இறந்ததுக்கு கூட போகலை. அந்த நேரம் ஊர்ல திருவிழாவுல இருந்தோம்னு, என்னையும் அம்மா உங்க வீட்டுக்கு இழுத்துட்டு போயிட்டாங்க.
அங்க போய் பேசறப்ப தான், உங்களுக்கு பார்த்த வரன், பிறகு கைமாறி போனதும், நீங்க விரும்பியதும் தெரிய வந்தது.
அப்பறம் என்னை பார்த்ததும் உங்கம்மா விசாரிக்க, கல்யாணமாக வேண்டுதலாக வந்ததை கூற, உங்களுக்கு என்னை கட்டி வைக்க கேட்டாங்க, அம்மா அப்பாவிடம் பேசி முடிச்சி என் போட்டோ இரண்டு வாரத்துல கொடுத்தேன். உங்களுக்கு கூட ஆன்ட்டி அனுப்பினாங்க. நீ……ங்க பார்க்கலை.
இப்ப நமக்குள் பேசி ஓகே….னா. சொல்ல சொன்னாங்க” என்று மென்று விழுங்கினாள்.
ஈஸ்வரனோ ‘ஏன் தான் இந்த அம்மா பார்க்கறவங்களிடப் எல்லாம் கல்யாணத்தை பத்தி பேசி தொலைக்கறாங்களோ என்று தலையுலுக்கினான்.
“இங்க பாருங்க இந்த அனுதாபத்தில யாரும் யாரையும் கல்யாணம் பண்ண தேவையில்லை. கல்யாணம்னா விளையாட்டு இல்லை.” என்றான்.
சாம்பவியோ “உண்மை… அதனால் தான் எனக்கு உங்க மேல அனுதாபமே வரலை.
கல்யாணம் விளையாட்டு இல்லைன்னு எனக்கும் தெரியும்.
நந்தினி பாப்பாவை நான் பார்த்தேன். அவ என்ன கை குழந்தையா? அவளா எழுந்து, குளிச்சி, சாப்பிட்டு ஸ்கூலுக்கு ரெடியாகறா. ஆன்ட்டியை கூட தொந்தரவு பண்ணாம சமத்தா ட்ரெயின் பண்ணிருக்காங்க கேர்டேக்கர் கமலி.
இப்ப உங்கண்ணா அண்ணி உயிரோட இருந்தா நம்ம கூட தானே நந்தினி பாப்பா இருப்பா. அதே போல இப்பவும் இருக்க போறா. இதுல எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை.
என்ன அவங்க இரண்டு பேர் கொடுக்க வேண்டிய, பெற்றவர் அன்பை நாம அந்த இடத்துல தரணும். அன்பை விதைக்கிறதுல என்ன குறைஞ்சிடப் போறோம்.” என்றதும் ஈஸ்வரன் குறுகுறுவென பார்த்தான்.
சட்டென சாம்பவியோ அதிகப்படியான பேச்சோயென, மேடை பக்கம் கவனத்தை திருப்பிக் கொண்டாள்.
விஷ்ணுவின் தலையில் இருந்த பூவிதழை கமலி தட்டி விட்டாள். அதில் விஷ்ணு டாலர் பளிச்சிட, “பிரசென்ட் எல்லாம் பலமா தந்துயிருக்கிங்க. ஆமா கோவில்ல ஏன் தங்கத்தை உண்டியல்ல போட்டிங்க? அதையே கடையில் விற்று வேற நகை வாங்கியிருக்கலாமே? பேங்க்ல நல்ல சம்பளமோ?” என்று கேட்டாள்.
அவளையே கூர்ந்து ஆராய்ந்தவன் சாம்பவி கேட்டதும் “அந்த நகையை உருக்கி மாத்தி வாங்கினாலும் எனக்கு அது கமலிக்கு வாங்கியதுன்னு தெரியாதா?
மனசுலயிருந்து மொத்தமா எடுக்கறேன். சின்ன சின்ன உறுத்தல் எதுக்குன்னு தான் முழுசா கோவிலில் போட்டுட்டேன்.
ஏன் அதையே உங்களுக்கு மோதிரமா போட்டா உங்களுக்கு பிடிக்குமா?” என்றான் ஈஸ்வரன்.
“போட்டுத்தான் பாருங்களேன்” என்றாள் சாம்பவி சிறு உரிமையான கோபத்தோடு.
லேசான சிரிப்போடு ஈஸ்வரன் நகைக்க, சாம்பவியும் சிரிப்பில் கலந்தாள்.
அதன் பின்னே இருவரின் பேச்சும் புரிந்திட, ஈஸ்வரன் மெதுவாக இடத்தை காலி செய்ய எழுந்தான்.
“ஈஸ்வரா… பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்.” என்று சத்தமாக முனங்கினாள்.
ஈஸ்வரன் நின்று திரும்ப, “நா..நான் எம்பெருமான் ஈஸ்வரனை கூப்பிட்டேன்.” என்றதும் “சாம்பவி கூப்பிட்டா ஈஸ்வரன் கைலாசத்துலயிருந்தும் இறங்கி வரலாம்” என்றவன் திவ்யபாரதியிடம் வந்து சேர, சாம்பவியும் கூடவே வந்தாள்.
திவ்யபாரதி கண்ணாலே மகனிடம் இறைச்சிட, “கல்யாணத்துக்கு தேதி குறியுங்க.” என்று பதில் தந்து போனான் ஈஸ்வரன்.
அதுவே திவ்யபாரதியின் மனதை குளிர்வித்தது.
—
அடுத்த நாள் திருமணத்திற்கு ஜோராக பட்டுயுடுத்தி, கமலி நாணி வர, விஷ்ணு மிடுக்காய் நடந்து வந்தான்.
இளங்கோ வசுந்தரா இருவரும் விஷ்ணு அருகே நிற்க, மணப்பெண் கமலி அருகே அவளது அக்கா சுதா நெத்தி சுட்டியை சரிசெய்து, மாமா ரங்கநாதன் தகப்பன் ஸ்தானத்தில் நின்றார்.
ஐயர் கொடுத்த பொன் தாலியை கமலியின் சங்கு கழுத்தில் காதலோடு ஆசையாய் அணிவித்தான்.
கமலியின் மொட்டு போன்ற விழியிலிருந்து ஆனந்தகண்ணீர் துளிகள் வழிந்தது.
சுதாவோ “ஏய் கமலி அழாதடி” என்று கூற, விஷ்ணுவோ அவளை தன் நெஞ்சில் முகத்தை சாய்த்து கொண்டான்.
அவனுமே ‘தான் இறந்திருந்தால் இவளது நிலைமை’ என்ற எண்ணத்தில், இந்த கோலத்தில் அவளை சடலமாய் யாரிடமோ நிற்க வைத்திருப்பேனோ என்று, அது நடவாமல் மாயங்கள் நிகழ்ந்திட அவனுக்கும் கண்கள் கலங்கியது.
கண்ணீர்கள் கஷ்டத்தில் மட்டும் வருவதல்ல, நடக்கவே நடக்காமல் வாழ்வில் சென்றிட வேண்டிய விஷயங்கள், அபூர்வமாய் நிகழ்ந்திடும் தருணத்திலும் எட்டிப்பார்த்து விடுகிறது.
அதன் பின் சடங்குகள் ஆரம்பிக்கப்பட ஒவ்வொன்றாய் செய்வதில் கமலி விஷ்ணுவிற்கு நேரம் சென்றது.
ஈஸ்வரன் தாயோடு அருகே முகமெல்லாம் விகாசித்திருந்தார்.
சாம்பவி வீட்டில் உடனடியாக திருமணத்தை வைத்து கொள்வோமா என்று கேட்டதற்கு ஈஸ்வரனும் தலையாட்டி விட்டானே.
வலது பக்கம் அன்னை என்றால் இடது பக்கம் சாம்பவி வீற்றிருந்தாள்.
ஈஸ்வரன் மடியில் அண்ணன் மகள் நந்தினி சாம்பவி சித்தி கொடுத்த சாக்லேட்டை சுவைத்திருந்தாள்.
After 2 Months …..
விஷ்ணு கமலி தாங்கள் எப்பொழுதும் சந்திக்கும் பிருந்தாவனத்தில் வீற்றிருந்தார்கள்.
“லோட்டஸ்… கிளம்பலாமா?” என்று கேட்டான் விஷ்ணு.
“விச்சு முன்ன எல்லாம் நான் தான் இங்கிருந்து கிளம்புறேன்னு சொல்வேன். நீ என்னை வலுகட்டாயமா உட்கார வச்சி ஊர்கதை, உலகக்கதை பேசிட்டு இருப்ப. இப்ப நான் ரிலாக்ஸா இங்க ரசிக்கறேன். வீட்டுக்கு போகலாம் வீட்டுக்கு போகலாம்னு டார்ச்சர் பண்ணற. ஆஹ்… என்னடா நினைச்சிட்டு இருக்க?” என்று கேட்டாள்.
கிசுகிசுப்பான குரலில் கமலியின் கண்ணை பார்த்து, “உன்னையே தான் நினைச்சிட்டு இருக்கேன். இந்த கழுத்து, கன்னம், கழுத்துக்கு கீழே, இடுப்புல நான் எப்ப சிவப்பு தடிப்பு வர்ற அளவுக்கு விளையாடி வச்சியிருக்கேன்னு தெரியாம யோசிச்சிட்டு இருக்கேன்.
முத்தத்துக்கு இந்தளவு பாதிப்பா? நீ நர்ஸ் தானே? நானா இதெல்லாம் பண்ணறப்ப நீ ஏன் தடுக்கலை” என்று வெட்கப்பூக்கள் வெடித்திட பேசினான்.
“விச்சு... வீட்டுக்கே வா. உன் பேச்சு சரியில்லை, உன் பார்வை சரியில்லை.
அந்த நேரம் எப்படிடா தடுக்கறது. தடுத்தாலும் நீ கேட்டுக்கற குழந்தை பாரு.” என்று செங்காந்தள் மலராக வெட்கம் கொண்டாள்.
காதலில்
பெண்மைக்கு
வெட்கம்,
அச்சம்
தடையென்பதால்
நீயென்னுள்
வெட்கத்தை
தொடக்கப் புள்ளி
மட்டுமே
வைத்து விடு…!
முற்றுப்புள்ளியாய்…
முடித்திடாது
தொடர்ப்புள்ளியாய்…
உன்னுள்
மையப்புள்ளியாய்….
காதல் கவியாய்
தொடருகின்றேன்
என்றும் என்றென்றும் …!
என்ற வரிகளுக்கு இணங்க இல்லத்திற்கு வந்ததும், முத்தங்களால் முடிவில்லாமல் தொடர் அத்தியாயமாக கவிதை இயற்ற, விஷ்ணு அவளை காதலால் ஆளும் கலையை நிகழ்த்திட மையலோடு மையலிட தயாரானான்.
❤️சுபம்❤️
-பிரவீணா தங்கராஜ்
Wow wonder narration sis. Awesome. True love never fails. Vichhu soon sweetener. That too while got memory his anger and love with lotus. Excellent sis.
Super super👍👍 sweet heroine with spicy hero😜
Super sis
Nice story.
Super super super super super super super super super super super super ❣️❣️❣️❣️
Again Rocked praveena madam,……🫰🫰🫰🫰🫰🫰👌👌👌👌
that is love . love na ippai irukanum than kadhala yarukum ethukagavum vida kudathu vitu kodukavum kudathu kamali vishnu mari epovum . enthan uyiramuthe heading ku etha mari kadhai amanchi iruku .
congratulations sisy
Super
அருமையான பதிவு
எந்தன் உயிரமுதே…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 12)
உண்மை தான், கமலி கோபமா போனாள், விஷ்ணு கோமாவுக்கே போயிட்டான். நல்ல வேளை, உயிரோட திரும்பி வந்ததும் இல்லாம பழைய நினைவுகளோடும் திரும்பி வந்ததாலத்தான் இந்த கல்யாணமே நடந்தது.
அதே மாதிரி, ஈஸ்வரனுக்கு ஏத்த சாம்பவியும் கிடைச்சிட்டா. ஆஹா.. ரெண்டு ஜோடிகளுக்கும் பெயர் பொருத்தமே அபூர்வம் போங்க. அதுவும் நந்தினியை வளர்க்கிறதை பத்தி சாம்பவி சொன்ன பதில் ரொம்பவே அழகா, புத்திச்சாலித்தனமா. ப்ராக்டிக்கலாவும் இருந்தது.
பெரியவங்க சொல்லுவாங்க
ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாதுன்னு…. அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியுது. சிறப்பு, மிக மிக
சிறப்பு.
😀😀😀
CRVS (or) CRVS 2797