Skip to content
Home » என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-6

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-6

. ராகம் 6

இன்று விடியலிலே, ஷாலினி எழுந்து விட்டால். ஒன்றா, இரண்டா, மொத்த டெஸ்டையும் எடுக்க கொடுத்துவிட்டார்கள் .

எட்டு மணிக்கு ஆரம்பித்தால் கூட, அங்கு, இங்கு, அங்கு, இங்கு என்று அலைந்து, மாலை 6 மணியாகிவிடும்.

ரிப்போர்ட் எல்லாம் உடனே வந்து விட்டால் அல்லது, நாளை என்று ஆகும் பட்சத்தில், நாளைதானே ரிப்போர்ட் பார்க்க வேண்டியிருக்கும் என கவலையோடு கிளம்பிக் கொண்டிருந்தாள். 

தூங்கிக் கொண்டிருக்கும் மனோவை எழுப்ப மனமில்லை. “அவன் எப்போதும் போல் வந்துவிடட்டும். நாம் ஆட்டோ பிடித்து போய்க் கொள்ளலாம்,” என முடிவு செய்து, கிளம்பியும் விட்டாள். 

பத்மாவின் கண்களில் மட்டும் பட்டுவிடக் கூடாது என வேண்டிக்கொண்டே சென்றாள். அதிசயம், ஆனால் உண்மை என்பது போல், அவள் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றி விட்டார். 

ஆனால், நடு ரோட்டில் நிற்க வைத்து விட்டார். 20 நிமிடமாக, எந்த ஆட்டோவையும் காணவில்லை. ஆட்டோ கிடைத்தாலும், பேசஞ்சர் உடன் தான்.  ஓலா ,ரேபிட்டோ,ஊபர் எதிலும் கிடைக்கவில்லை. விதி வேறு என்ன செய்ய.

மணி எட்டை கடந்து விட்டது. “பேசாமல், மனோவையாவது எழுப்பி விட்டிருக்கலாம்,” நான் ஒன்று நினைக்க, கடவுள் வேறு ஒன்றை நினைக்கிறார் என கடவுளை திட்டிக்கொண்டே காத்திருந்தாள். 

தூரத்தில், சஞ்சயின் கார் வருவது தெரிந்தது. “லிப்ட் கேட்டு போய்விடலாமா? முதல் நாள் போல் சென்று விடுவானோ?” 
“சே! நேத்து இட்லிலாம் பரிமாறினான், என்னை , சாம்பார்லாம் ஊத்த சொன்னான்.இப்போ தோஸ்த் ஆயாச்சுல! அவர் கூடவே போயிடலாம்!” 

என்ன எண்ணி, அவனுக்கு தெரியுமாறு முன்னால் வந்து நின்று, சஞ்சயை பார்த்து புன்னகைத்தாள். 

எதார்த்தமாக திரும்பிய சஞ்சய், அவளைப் பார்த்தும், பார்க்காதது போல் திரும்பி, அவளை கடந்து சென்றான். 

“முட்டாள்! முட்டாள்! அவன் கிட்ட லிப்ட் கேட்க ஈஈஈ ன்னு இளிச்சுட்டு போய் நிக்கிற… ஆனா அவன் உன்னை பார்த்ததும், பார்க்காத மாதிரி, கேர் பண்ணாம போயிட்டான்? யாருக்கு அசிங்கம்? உனக்கு தானே! ஏற்கனவே பட்டும் திருந்த மாட்டேங்கறியே, ஷாலு!”

என மனசாட்சி காரி துப்ப, 

“நான் என்ன பண்ணட்டும்? நேத்து நைட்டு எல்லாம் நல்லாத்தானே பிஹேவ் பண்ணினான்! அந்த நம்பிக்கையில் லிப்ட் கேட்கலாம்னு நினைச்சேன். கடைசில, கவுத்து விட்டுட்டு போயிட்டான்! இனி அவனே வந்து கெஞ்சினாலும், அவன் வண்டியில ஏறமாட்டேன். இது இந்த ஷாலினியோட சபதம்! ரொம்பதான் பண்றான்!”

என புலம்பிக் கொண்டிருக்கையில், அவள் அருகே ஆட்டோ வந்து நின்றது. 

“எங்கம்மா போனும்?”

“எஸ் எம் ஹாஸ்பிடல்.”

“ஏறுங்க.”

அப்பாடி, கடைசில ஆட்டோ கிடைச்சுதே! என கடவுளுக்கு நன்றியை கூறி, ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். 

30 நிமிட பயணத்திற்கு பிறகு, ஆட்டோ எஸ்.எம் மருத்துவமனை வளாகத்தில் நின்று, ஷாலினிக்கு விடை கொடுத்தது. 

வேக எட்டு எடுத்து வைத்து, பிரவீன் அறை கதவை திறக்க, உள்ளே சஞ்சயும், சிஸ்டர் மாலதியும் நின்றிருந்தனர். 

உள்ளே கோபம் இருந்தாலும், குரலை மென்மையாக்கி, 

“ஹலோ டாக்டர். ஹலோ சிஸ்டர். சாரி, வண்டி கிடைக்க லேட் ஆயிடுச்சு. இப்போ எல்லா டெஸ்டும் எடுத்திருவேன்.”

சஞ்சய் சிஸ்டர் மாலதியை ஒரு பார்வை பார்த்தான்.

“பேஷன்ட் பிரவீனுக்கு ஆல்ரெடி எல்லா பிளட் அண்ட் யூரினரி டெஸ்ட்டும் எடுத்தாச்சு.ஈவன் பாதி ரிப்போர்ட் வந்துடுச்சு. இன்னும் எம்ஆர்ஐ, சிடி, இசிஜி, எக்கோ எடுக்கணும்.”

சிஸ்டர் மாலதி பேசிக்கொண்டிருக்க, ஷாலினியின் கண்களோ குனிந்த தலை நிமிராமல் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சயின் மேல்நிலைத்தது. 

“பயபுள்ள, இங்க தானே வராரு! கூட்டிட்டு வந்தா என்ன? அட்லீஸ்ட் அவராவது சொல்லலாம் தானே! இவருக்கு ஒரு எடுப்பு வேற!”

என சஞ்சயை மனதில் வறுத்துக் கொண்டு இருந்தாள். 

ஷாலினியின் குறுகுறு பார்வை, சஞ்சயை குறுகுறுக்க செய்ய, மெதுவாக எழுந்தான். 

“சிஸ்டர், வார்டு பாய் கூப்பிட்டு, இவங்களுக்கு ஸ்கேன் பண்ண கூட்டிட்டு போக ஹெல்ப் பண்ண சொல்லுங்க. ரிப்போர்ட் வந்ததும் என் டேபிளுக்கு கொண்டு வர சொல்லுங்க,” என்றவன், நில்லாது வெளியேறினான். 

“ரொம்பத்தான்!” என உதட்டை சுழித்தவள், பிரவினை கவனிக்க சென்றுவிட்டாள். 

சிஸ்டர் மாலதியும், சஞ்சயின் பின்னால் சென்றுவிட்ட, இரண்டு நிமிடத்தில், வார்டு பாய் வந்து விட்டார்.

பிரவீனை அவர்கள் அழைத்து சென்று, பிரவீனை அவர்கள் கவனித்துக் கொள்ள, ஷாலினி பார்டிகார்ட் போல அவர்கள் பின்னே, அவர்கள் செல்லும் இடமெல்லாம் சென்றாள். 

ஷாலினி நினைத்தது போல், நீண்ட நேரம் எடுக்கவில்லை. அவள் ஒன்பது மணிக்கு மருத்துவமனைக்கு உள்ளே நுழையுமுன், பிளட் மட்டும் யூரினரி மூலம் எடுக்கப்பட வேண்டிய அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப்பட்டிருந்தன. அதில் பாதி ரிப்போர்ட்டும் வந்து விட்டிருந்தது. 

கோமா நோயாளி என்பதால், எங்கும் காக்க வைக்கப்படவில்லை. பத்து மணி போல் மனோவும் மருத்துவமனைக்கு வந்துவிட, ஷாலினி உடன் இருந்து கொண்டான். 

“நீ ஓபி செல்,” என கேட்டுக் கொண்டும் கூட, மனோ செல்லவில்லை. 11 மணிக்குள் எல்லா டெஸ்ட்களும் முடிந்து விட்டிருந்தது. 12 மணிக்கு, சஞ்சய் அறைக்கு வந்து விடுமாறு உத்தரவும் வந்துவிட்டது. 

மனோவும் உடன் வருவதாக சொன்னதால், அதுவரை ஓபி பார்த்துவிட்டு வா என அனுப்பி வைத்திருந்தாள். 

பயப்படும் படியாக எதுவும் இருக்கக் கூடாது என, கடவுளை வேண்டிக் கொண்டு காத்திருந்தாள். 

சரியாக 12 மணிக்கு, மனோ வந்துவிட்டான். 

இருவரும் சஞ்சயின் அறை கதவை தட்டி, உள்ளே சென்று அமர்ந்தனர். 

“டாக்டர், சஞ்சய், பயப்பட எதுவும் இல்லேல?” 

“மிஸ் ஷாலினி, பேசண்ட்க்கு இருக்கிற ஒரே கார்டியன் நீங்கதான். யூ ஹேவ் டு நீ ஸ்ட்ராங்க் . உங்க பிரதருக்கு வர்ற பிரீதிங் இஷ்யூ நார்மல் தான். 

பொதுவாக, கோமா பேஷண்டோட ஏர் பைப் எப்பவுமே ஓபன்லயே இருக்கிறதால, சின்ன சின்ன ப்ளாக் ஏற்படும். அது மட்டும் இல்லாம, அவங்களோட அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச இதயத் துடிப்போ இல்லனா, இர்ரெகுலர் பிளட் பிரஷரால இந்த மாதிரி பிரீதிங் இஷ்யூ ஏற்படும். 

இது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. இதுவரைக்கும் உங்க பிரதருக்கு வென்டிலேஷன் கொடுக்கலை. அவருக்கு தேவைப்படவும் இல்லை. But, பிரீதிங் இஷ்யூ ஆகும்போது, வென்டிலேஷன் அவரோட பாடி அக்செப்ட் பண்ண மாட்டேங்குது. அதனால, அவர் வென்டிலேஷனிலேயே இருக்கிறது பெட்டர்.” 

“அப்போ, வென்டிலேஷனிலேயே இருக்கட்டும், டாக்டர்? பிரச்சினை இல்லை” 

“இப்போ பிரச்சனை அது இல்ல. இப்ப எடுத்த எம் ஆர் ஐ & சிடி ஸ்கேன்ல, உங்க பிரதர்க்கு CSF Leakage இருக்கிறது தெரிய வந்திருக்கு.” 

“அப்படின்னா?” 

“CSF Leakage னா, செரிப்ரோஸ்பைனல் திரவ கசிவு. மூளை மற்றும் முதுகுத்தண்டை சுற்றியுள்ள திரவம்.இது தான் நம்ம நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். நம்ம மூளையை சுத்தி துரான்னு ஒரு லேசர் இருக்கும். அதுல சின்ன கிளிவு இருந்தாலோ அப்படி இல்லாட்டி ஓட்டை விழுந்தாலோ செரிப்ரோஸ்பைனல் திரவகசிவு ஏற்படும்

இது, உங்க அண்ணனோட தலையோட அழுத்தத்தால் ஏற்பட்டது.” 

“இது என்ன ஸ்டேஜ்ல இருக்கு, சஞ்சய்?” 

“மிஸ் ஷாலினி, CSF Leakage-க்கு நிறைய டிரீட்மென்ட் இருக்கு. மூக்கு வழியா சரி பண்றது, இடுப்பு பகுதியில் சின்ன கம்பி போட்டு அது வழியா சரி பண்றது, Finally, சர்ஜரி பண்ணுறதுன்னு நிறைய Options இருக்கு. 

உங்க பிரதர்க்கு, மைய நேரமும் மண்டலத்தை பாதிக்கிற மாதிரி இருக்கிறதால, Open Skull Surgery தான் பண்ணனும்.” 

“வாட்” 

“எஸ். யூ டோண்ட் ஹால் எனி அதர் சாய்ஸ்..” 

“இதுக்கு எவ்வளவு செலவாகும்?” 

“5 லேக்ஸ். பட் டோன்ட் வர்ரி நம்ம ஹாஸ்பிடல் மூலமாக நாம பண்ணிடலாம்.” 

“இல்ல, இருக்கட்டும் டாக்டர். அமௌன்ட் நான் ரெடி பண்ணிடுறேன். எப்போ ஆபரேஷன் பண்ணனும்?” 

“உங்க பிரதர் இந்த சர்ஜரிக்கு கொஞ்சம் நார்மலா இருக்கணும். ஏன்னா, ஆபரேஷன் டைம்ல திரும்ப பிரீதிங் இஷ்யூ வந்தா, கஷ்டம். ஒன் வீக் அப்சர்வேஷன்ல வச்சு, பிரீதிங் இஷ்யூ இல்லாத போது தான் பண்ண முடியும்.” 

“ஓகே டாக்டர். அதுக்குள்ள ரெடி பண்றேன்.” 

” நம்ம ஹாஸ்பிடல் டிரஸ்ட் மூலமா கூட நீங்க இந்த சர்ஜரி பண்ணிக்கலாம். நோ இஸ்யூஸ்” 

பத்மாவின் பேச்சுக்கள் ஞாபகம் வர… “இட்ஸ் ஓகே டாக்டர். 5 லேக்ஸ் தானே என்னால ரெடி பண்ண முடியும்.” என்றவள் வேறேதும் இல்லாததால் வெளியேறினாள். 

“மனோ, இந்த ஆபரேஷனுக்கு அப்புறம் பிரவீன் சரியா ஆகிடுவானா?”

” ஆப்பரேஷன் லீக்கேஜ் ஸ்டாப் பண்ண மட்டும்தான். பிரவீனின் கண்ணை முழிக்கிறது கடவுள் கையில தான் இருக்கு. நீ ஏன் ட்ரஸ்ட் அமௌன்ட் வேணான்னு சொன்னேன்?”

“பரவாயில்லை, மனோ. அது வேற யாருக்காவது பயன்படட்டும்.”

“இப்போ இந்த அமௌண்டுக்கு என்ன பண்ணுவ? ஆல்ரெடி ஊர்ல அப்பாக்கு, பிரவீன் ரெண்டு மூணு சர்ஜரி பண்ணுனதுல, உன்னோட அம்மாவோட ஜுவல்ஸ் வித்துட்டேன்னு சொன்னேன்ல?”

“ஆமாம், மனோ. ஆனா, என்னால மேனேஜ் பண்ண முடியும். அப்பாவோட பேங்க் பேலன்ஸ் இருக்கு. அவர் இறந்துட்டதால, எனக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்காங்க. ஐ கேன் மேனேஜ்.” 

“முடியலன்னா, என்கிட்ட வாங்கிக்கோ.”

“கண்டிப்பா , மனோ?”

என்றவள் மனதில் ‘அது எப்படி வாங்க முடியும்?

மனோவிடம் கைநீட்டி விட்டால், பத்மா சொல்வது போல் ஆகிவிடாதா? மனோவின் மனம் புண்படக்கூடாது என, அவனிடம் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். 

ஆனால், “எப்படி தயார் செய்வது?” என்ற குழப்பம் அவளுள் எழுந்தது. 

ஆக்சிடென்ட் நடந்த அன்று, ஒரு மணி நேரத்திலேயே அவளுடைய பேங்க் பேலன்ஸ் மொத்தமாக ஜீரோ ஆகி விட்டிருந்தது.

ஷாலினியின் அம்மா சம்பவ இடத்திலேயே உயிரை விட்டிருந்தார். அப்பாவும் அண்ணனும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

அவளுடைய மற்றும் அவள் அம்மாவுடைய நகைகளை விற்று வந்த பணத்தில்தான், ஷாலினியின் தந்தைக்கும் பிரவீனுக்கும் ஆபரேஷன் நடந்தது. மீதி இருந்த பணத்தை, அவளுடைய அக்கவுண்டில் போட்டு வைத்து, அதைத்தான் தற்போது செலவு செய்து வருகிறாள். 

அப்பாவின் அக்கவுண்ட் பணத்தை, அவளுடைய அக்கவுண்டிற்கு மாற்றலாம் என்றால் அவளுடைய அப்பா, பணத்திற்கு காட்டியனாக, அம்மாவை வைத்திருந்தார். அம்மாவும் தவறிய பட்சத்தில், இரண்டு பிள்ளைகளின் கையெழுத்தும் வேண்டும் என வங்கி சொல்லிவிட்டது. பிரவீன் கையெழுத்து இல்லாமல், அதை பயன்படுத்த முடியவில்லை. 

“கடவுள் அதற்கான வழியை கொடுப்பார்,” என்ற நம்பிக்கையில், ஏதாவது முயற்சி செய்யலாம், என இருந்துவிட்டாள் ஷாலினி. 

3 thoughts on “என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *