Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 10

என் சுவாசம் உன் வாசமாய் – 10

அத்தியாயம் – 10

 சட்டென அவனது இதழ் தீண்டவும் முதலில் அதிர்ந்தவள் அதில் கண்களை அகல விரிக்க அவளின் கண்களையே பார்த்தவன், அதில் தெரிந்த அதிர்ச்சியில் தன்னை மறந்தவனாய் பார்த்தவன், அவளது அதிர்ச்சி மாறாமலே இருக்க அவளை விடுவிக்க, அப்படியே மயங்கி அவன் கையிலேயே விழுந்தாள் கயல்.

“விழி… ஹேய் விழி” என்று தட்ட அவளது மயக்கம் தெளியாததால் அவளை அருகில் இருந்த சேரில் அமர வைத்தவன் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் அடிக்க, கண்ணைத் திறந்தவள் அவனைப் பார்த்து அதிர்ந்து பின்னால் நகரப்போக சேரில் இருந்து கீழே விழப் போனாள். அவளை விழாமல் பிடித்தவன் சின்னச் சிரிப்புடன்,

“இவ்ளோ நேரம் உன் ப்ரண்ட்ஸ் கிட்ட அப்படிக் கதை விட்ட. நீ கதையில சொன்ன மாதிரி தானே கிஸ் பண்ணேன்… பேச்சு மட்டும் அவ்ளோ தைரியமாப் பேசின, அதுவே நிஜமா நடந்தா மயக்கம் போட்டு விழுற. இவ்ளோ தானா உன் தைரியம்” என்று கிண்டலாய் கேட்க,

“அது… அதுவந்து… மன்னிச்சிடுங்க சா..சார், அவங்க… அவங்க என்கிட்ட, நான் உங்ககிட்ட டியூஷன் சேர்ந்ததுல இருந்து நீங்களும் நானும்…” என்று நிறுத்த அவளைப் புன்னகையுடன் பார்த்தவன்,

“நீயும் நானும்… ம் சொல்லு” என்று கேட்க,

“ல..லவ் பண்றோமானு கேட்டுக் கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்க. அ.அதான் அவங்க இம்சை தாங்காம ஆ..ஆமாம்னு சொல்லிட்டு ஏதோ ஒரு கனவு…”

“கனவா?”

“இ..இல்ல இல்ல… கதைய சொன்னேன்” என்று கூற, 

“ஓஹோ! கதை சொன்னியா?” 

“ஆ..ஆமா சார், கதைதான்” 

“நான்தான் அவசரப்பட்டுக் கதைய நிஜமா மாத்தலாம்னு இப்படி நடந்து கிட்டேனோ? அப்போ நீ நிஜமாகவே என்னை லவ் பண்ணலையா? நான்தான் தப்பாப் புரிஞ்சுகிட்டேனா?” என்று கேட்க, அவசரமாய் மறுத்தவள்,

“இ..இல்ல… நான் உண்மையதான் சொன்னேன்…” என்று முதலில் வேகமாக ஆரம்பித்தவள் கடைசியில் அமைதியாக இழுத்து அமைதி ஆகி தலையைக் குனிந்து கொள்ள அதில் லேசாகச் சிரித்தவன் ஒற்றை விரல் கொண்டு அவளது தாடையைத் தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,

“அப்போ நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்க, அவளது குண்டுக் கண்கள் ஆச்சரியத்தில் விரிய அவளது கண்களைப் பார்த்தவன் தன் புருவத்தை ஏற்றி இறக்கி என்ன என்பதுபோல் பார்க்க, அதில் வெட்கம் கொண்டவள் தலையை மீண்டும் குனியப்போக விடாமல் நிமிர்த்தியவன்,

“சொல்லு விழி” என்று கேட்க,

“எ..எங்க அப்பா ஏத்துக்குவாரானு தெரியல, என்னைக் கல்யாணம் பண்ண நீங்க கொஞ்சம் கஷ்டப்படணும். ஆனா படிச்சு முடிக்கணும் முதல்ல… அப்புறம் சொல்றேன், அதுக்கு அப்புறம் வீட்ல வந்து பேசுங்க…” என்று கூற அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன்,

“அம்மாகிட்டப் பேசிடுறேன்..” என்று கூற வெட்கித் தலை குனிந்தவள் சரியெனத் தலையசைக்க, 

“விழி…”

“ம்…”

“அதுவரைக்கும் லவ் பண்ணலாமா?” 

“ம்…” 

“ம்ம்..ம்ம் னா எப்படி லவ் பண்ணுவாங்களாம்?”

“வேற என்ன சொல்லணும்?” 

“ஐ லவ் யூ சொல்லு” என்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து நிமிர்ந்தவள், ‘மாட்டேன்’ என்பதைப் போலத் தலையசைக்க,

“ஏன் விழி” என்று கேட்க,

“அதுலாம் சொல்ல நேரம் வரும்போது சொல்றேன்… நான் கிளம்பறேன்” என்றவள் விட்டால் போதுமென்று கிளம்பி ஓடிவிட்டாள். புன்னகையோடு அவள் ஓடுவதையே பார்த்துக் கொண்டு நின்றவன்,

“காத்திட்டு இருப்பேன், அந்த டைம்க்கு” என்று வாய் விட்டுச் சொன்னவன் இந்தச் சந்தோஷத்தை தன் நண்பனிடம் முதலில் கூற வேண்டும் என்று ஃபோன் செய்தான். அந்த நேரம் வரவே வராது என்பதை இருவரும் முன்னமே அறிந்து இருந்தால் நடக்க இருக்கும் விபரீதங்கள் தடுக்கப்பட்டு இருக்குமோ?

“மச்சான்” 

“சொல்றா மச்சான்… என்ன இவ்ளோ ஹாப்பியாப் பேசுற? உன் ஆளுகிட்ட லவ்வச் சொல்லிட்டியா?” 

“எப்படிடா கண்டு பிடிச்ச?” என்று ஆச்சரியமாய் கேட்க,

“அதான் பல்ப் வெளிச்சம் இங்க வரைக்கும் வருதே” என்று கூற வெட்கமாய்,

“மச்சான்” என்று அழைக்க,

“கருமம், அதை ஏன்டா ஹஸ்கி வாய்ஸ்ல கூப்பிடுற? எவனாவது பார்த்தா என்னைத் தப்பா நினைப்பானுங்கடா” என்று திட்ட,

“ஈஈஈஈ “என்று இளித்தவன்,

“அது வந்து மச்சான்” என்று இழுக்க,

“டேய் டேய்… அந்தக் கருமத்தைலாம் செய்யாதடா சகிக்கல” என்று தண்டபாணி கூற,

“சரிடா, பேச விடுடா…” என்று இஷான் கூற,

“சரி சரி சொல்லு… எப்போ லவ்வைச் சொன்ன? அதுக்கு அந்தப் புள்ள எப்படி ஓகே சொன்னாங்க?” என்று கேட்க, நடந்ததை இஷான் கூற வாயில் கையை வைத்தவன்,

“அடப்பாவி! அந்தப் புள்ள ஏதோ பேச்சுக்குப் பொய் சொன்னதை நீ உண்மையாக்கி வெச்சு இருக்க… கூடவே தானடா இருக்கீங்க, எப்படிடா இப்படிலாம் லவ்வு, கிஸ்ஸிங்லாம் கத்துக்கறீங்க?” என்று அவன் கேட்க,

“அது தெரிஞ்சா நீ இந்நேரம் ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி இருப்பியே” என்று அவனை இஷான் வார…

“போதும்டா போதும். அப்புறம் சாபம் விட்டுடுவேன் பார்த்துக்க… கரிநாக்கு பளிச்சிடும்” என்று அவனை மிரட்ட,

“சரி சரி, டென்ஷன் ஆகாத மச்சி… விழி படிப்பு முடிஞ்சதும் வீட்டுல பேசச் சொல்லி இருக்கா. அதான் அம்மாகிட்ட நாளைக்கே பேசிடலாம்னு இருக்கேன்டா, நீ கூட வாடா” என்று கேட்க,

“சரிடா… சரிடா… வர்றேன். ஆனா, நீதான் உன் காதலுக்காகப் பேசணும். நான் கூட வந்து அமைதியா இருப்பேன், ஓகேவா? நல்லதோ, கெட்டதோ நீதான்டா ஹாண்டில் பண்ணனும். ஒரு ப்ரண்ட்டா நான் கூட நிப்பேன்டா” என்று கூறச் சிறிது நேரம் யோசித்தவன்,

“சரிடா நானே பேசுறேன், நீ கூட மட்டும் நில்லு” என்று கூறி மறுநாள் பெரிய போர்க்களத்திற்குத் தயாரானான்.

மறுநாள்…

தன் தாயிடம் பேசுவதற்காகப் போய் நின்றான். அன்று கோச்சிங் கிளாஸ் விடுமுறை என்பதால் இந்திரஜித்தும் வீட்டிலேயே இருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் டியூஷனுக்கு லீவ் விட்டு இருந்தான் இஷான். ஆனால் காலையிலேயே தண்டபாணி வர தன் ரூம் ஜன்னல் வழியே அவனைப் பார்த்த இந்திரா ஏதோ முக்கியமான விஷயம் போல என்று வெளியே வந்தான். தண்டபாணி ஞாயிறு அன்று வரமாட்டான் அதிமுக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே வருவான். அதனாலேயே எளிதில் யூகித்து இந்திராவும் வெளியே வர,

தண்டபாணியைப் பார்த்த மீரா, “என்னடா பையா, சண்டே அதுவுமா இங்கே… விஷயம் இல்லாம வரமாட்டியே, என்னடா விஷயம்?” என்று கேட்க,

“அது வந்து மா… இஷா தான் வரச் சொன்னான். அதான் வந்தேன்.” என்று கூற இந்திரஜித்தும் மீராவும் ஒருசேர இஷானைப் பார்க்க,

“அம்மா… அது வந்து… உ..உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், அதான்” என்று அவன் இழுக்க,

“என்னடா இஷா… சொல்லு” என்று அவர் கேட்க,

“அது… அதுவந்து… எனக்கு… நான்..நானும்” என்று திக்கித் திணற, 

“என்னடா ஒண்ணும் புரியல?” என்று அவர் மீண்டும் கேட்க,

“ம்மா, அது வந்து… நானும் கயல்விழியும் லவ் பண்றோம்மா… அதுதான் உங்க கிட்டச் சொல்ல வந்தேன்” என்று கோர்வையாகக் கூறி முடிக்கத் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்தான் இந்திரஜித். 

மீராவோ, “என்னடா இதைச் சொல்லத்தான் இவ்ளோ ஆக்க்ஷனா? இதான், எனக்கு முதல்லயே தெரியுமே?” என்று அவர் கூற அடுத்த அதிர்ச்சி இந்திரஜித்துக்கு…

‘தன் தாய்க்கும் தெரியுமா?’ என்றே அதிர்ந்தான்.

இஷானுக்கும் தண்டபாணிக்குமே அதிர்ச்சி.

“ம்மா… உங்களுக்கு எப்படி?” என்று தண்டபாணி ஆரம்பிக்க,

“உன் பிரண்டு அவளப் பார்க்கிற பார்வை மட்டும் தனியாத் தெரிஞ்சுது. அதனாலதான் அந்தப் பொண்ணைக் கிட்சன் வரைக்கும் வர்றதுக்குப் பர்மிஷன் கொடுத்தேன். பார்க்கப் பழகனு நல்ல பொண்ணா இருக்கா… தாத்தா, பாட்டினு அவங்களப் பத்தி தான் அதிகம் பேசுவா. நல்ல குணமான பொண்ணு… அவளப் போய் நான் வேணாம்னு சொல்லுவேனா? சரி, நாளைக்கே போலாமா, பொண்ணு கேட்டு?” என்று கூற இந்திரஜித்திற்கோ இதயத்தை ஏதோ பிழியும் உணர்வு. எதையும் முகத்தில் காட்டாது வீம்பாக நின்றிருந்தான்.

“அம்மா, அவ படிச்சு முடிக்கனும்மா… அப்புறம்தான் போய் கேட்க முடியும். இது அவளோட ஆசையும்தான்” என்று கூற அவரும் அதை ஆமோதித்தபடி திரும்பிப் பார்க்க தண்டபாணியும், இந்திரஜித்தும் நிற்க அவர்களிடம் சென்ற மீரா,

“டேய், எனக்குப் புடிச்ச பொண்ண உன் அண்ணனுக்கும் புடிச்சுப் போச்சுடா… அந்தப் பொண்ணு மட்டும் நம்ம குடும்பத்துக்கு மருமகளா வந்தா உங்களுக்குள்ள சண்டையே வரவிடமாட்டா… அவ்வளவு பொறுப்பானவடா… உனக்கு ப்ரண்ட் வேற… இதெல்லாம் யோசிச்சு தான்டா நான் அந்தப் பொண்ண செலக்ட் பண்ணேன். எப்படிடா அம்மாவோட செலக்க்ஷன்?” என்று கேட்க மனதைக் கல்லாக்கிக் கொண்டு,

“சூப்பர்மா… கயல் ரொம்ப நல்ல பொண்ணுதான். எல்லாம் பொ..பொறுப்பாச் செய்வா” என்று கூறினான். அவன் கூற்றில் அவனையே சிரித்தபடி பார்த்துக் கொண்டு இருந்த இஷானுக்கு தம்பியின் வாடிய முகம் ஏதோ யோசனையைக் கொடுத்தது. 

“டேய், அவ உனக்கு அண்ணியா வரப்போறா… மரியாதையாப் பேசிப் பழகு” என்று கூறினார் மீரா. அவரைப் பார்த்துப் புன்னகைத்தவன்,

சரி என்பது போல தலையசைத்து விட்டு அங்கு நிற்க முடியாமல் கிளம்பி விட்டான். போகும் அவனையே பார்த்திருந்தான் தண்டபாணி. அவனது முகமே அவனது காதலைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால், ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அந்தக் காதல் வெற்றி பெறாதே… 

அந்தப் பொண்ணுக்கு இஷான் மேல தானே காதல் இருக்கு. இந்தர் சீக்கிரம் மனசை மாத்திப்பான் என்று எண்ணிய  தண்டபாணி யாரிடமும் எதுவும் பேசிக் கொள்ளாமல் அவனும் கிளம்பினான்.

3 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *