Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 17

என் சுவாசம் உன் வாசமாய் – 17

அத்தியாயம் 17

இஷானின் பதினாறாம் நாள் காரியக் கிரியை நடந்து கொண்டு இருக்கிறது. அதற்காக மீராவின் சொந்தங்கள் வந்திருந்தனர். கயலும் இப்போது கொஞ்சம் நிதானத்திற்கு வந்திருந்தாள்.

இதில் பிள்ளையைச் சுமந்தபடி இருந்தவளை எதற்கும் யாரும் சீண்டவில்லை. பின்னே அவளுக்கு பாடிகார்ட் மாதிரி அவளைத் தன் கையில் பிடித்துக் கொண்டே சுத்துறானே இந்திரஜித். ஏதாவது பேசி அவன் துவைச்சு எடுத்துட்டா… அதான் எல்லாரும் அமைதியா அவங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டு இருந்தனர்.

எல்லோரும் அவர்களைப் பார்த்துப் பார்த்துப் பேசுவதைக் கவனித்த கயலுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவனை விட்டு விலகிச் சென்றாலும் அவன் விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான். அவளால் ரொம்ப நேரம் நிற்கவும் முடியவில்லை. அதைச் சொல்லவும் முடியவில்லை. இஷானின் இழப்பு அவளது மனதில் கவலையைக் கொடுத்தாலும் இந்தரின் அருகாமை அவளை மேலும் துன்பத்தில் ஆழ்த்தாமல் பாதுகாத்தது. ஆனால், அதை அறியும் நிலையில் தான் அவள் இல்லை.

ஒரு கட்டத்தில் கோபம் வர அவனிடம் சிடுசிடுவெனப் பேசினாள்.

“எதுக்குடா இப்படி கையைப் பிடிச்சுகிட்டே சுத்துற? நான் எங்கேயும் ஓடிட மாட்டேன். என்னால முடியல, கையை விடு. தள்ளி நிள்ளு. எல்லாரும் என்னையும் உன்னையும் தப்பாப் பேசுறாங்க” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற அவளது அருகில் குனிந்தவன்,

“என் பிள்ளையைச் சுமக்குறவள நான் சுமக்குறதுல என்ன தப்பு இருக்கு? எவன் தப்பாப் நினைச்சாலும் எனக்குக் கவலை இல்ல… உனக்கு தப்பாத் தோணுச்சுனா சொல்லு, நான் தூரப் போறேன்” என்று கூற,

“நான் ஏன் தப்பா நினைக்கப் போறேன்” என்றாள் உடனே அவளையறியாமல்.

அவளது உடனடியான பதிலில் அழகாகப் புன்னகைத்தவன் அவளது கையை மேலும் தன் கைக்குள் கொண்டு வந்து இறுக்கி அதில் அழுத்தம் கொடுக்க, அவனை நிமிர்ந்து பார்த்த கயல் அவனது புன்னகையில் ஏதோ ஒரு அமைதியை உணர்ந்தவள் அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டாள். ஆனால், அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்தவன் உடனே அவளை அங்கிருந்த சேரில் அமர வைத்துவிட்டு நிமிர ஐயர் கூப்பிடுவதாக ஒருவர் கூற அவளிடம், “இதோ வர்றேன்” என்று விட்டுச் செல்ல அடுத்த சில நொடிகளில் கையில் ஜுஸ்ஸுடன் அவள் முன் நின்றான் தன்விக்.

அவனை முறைத்தவள், “ரெண்டு பேரும் ஏன்டா இப்படிப் படுத்துறீங்க?” என்று கேட்டுக் கொண்டே ஜுஸைக் குடித்தாள். அதற்கும் வந்து திட்டுவானே.

அவள் பேச்சில் சிரித்த தன்விக், “என் ப்ரண்ட்ட நான் பார்த்துக்கக் கூடாதா?” என்று கேட்க,

“சத்தியமா முடியல, விட்டுடு” என்று கூறச் சிரித்து விட்டான் தன்விக். இந்த ஒரு வாரமாகத் தன்விக்கின் பேச்சில் அவள் பழையபடி கொஞ்சம் மாற ஆரம்பித்து இருந்தாள். அவளே நேரத்திற்கு உண்டு தனது ஆரோக்கியத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். அதனால்தான் இந்தரும் அவளைக் கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைப்பதில்லை. அவனும் அவளிடம் சகஜமாகப் பேச நினைத்தாலும் அவனது ஈஸ்வரன் மீதான கோபம் அவளிடம் சகஜமாகப் பேச வரவில்லை. ஆனால் அவள்மேல் வரும் கோபத்தைக் கட்டுப்படுத்த ஆரம்பித்து இருந்தான். எல்லாம் சகஜமானாலும் இஷானின் இழப்பு இந்தருக்குப் பெரும் மன உளைச்சலைஜ் கொடுத்தது. 

‘எப்போதும் எதிலும் கவனமாகச் செயல்படும் இஷான் எப்படி பஸ்ல போய் மோதி இருப்பான்? அப்படியே மோதினாலும் வண்டியை சைடுல திருப்பி இருக்கலாம். கார்ல ஏர்ஃபேக் இருக்கே. அது ஏன் ஓபன் ஆகல?’ என்று பலவிதமான யோசனையோடு இருந்தவனுக்கு ஃபோன் வர எடுத்துப் பார்த்தவனுக்கு இஷானின் கார் கம்பெனியிலிருந்து ஃபோன் எனப் புரிந்து அட்டென்ட் செய்தவன்,

“ஹலோ இந்திரஜித் ஹியர்” என்று கூற,

“ஹலோ சார், நாங்க **** மோட்டார்ஸ்ல இருந்து பேசுறோம் சார். இஷான் சாரோட காரைத் தரோவா செக் பண்ணிட்டோம் சார்…” என்று கூற,

“என்ன ஆச்சு?” என்று கவனமாகக் கேட்க,

“சார், ஏர்ஃபேக்ல யாரோ சிஸ்ஸர்ஸ் வச்சுக் கட் பண்ணின மார்க் இருக்கு சார்… அவரு ஆக்ஸிடென்ட் ஆகும் முன்ன அவரு எங்க சர்வீஸ் சென்டர்ல விடாம வேற எங்கேயோ சர்வீஸ் பண்ணி இருக்கார் சார்… அங்கதான் ஏதோ நடந்து இருக்கு சார்…” என்று எதிர்ப்புறம் கூற யோசனையுடன்,

“அது எப்படி அவ்வளவு ஷ்யூரா சொல்றீங்க? உங்க சர்வீஸ் சென்டர்ல தானே எப்பவும் அவங்க கார் விடுவாங்க?” என்று கேட்க,

“எங்க சர்வீஸ் சென்டர் எதுலயுமே கூலண்ட் ஆயில் இந்த ப்ராண்ட் விட்டு வேற ப்ராண்ட் யூஸ் பண்ண மாட்டோம் சார். அதும் இல்லாம அவரு ஃபேன் மோட்டார் லோக்கல் பீஸ் மாத்தி இருக்கார். நாங்க குவாலிட்டி அண்ட் கஸ்டமர் சேஃப்டி முக்கியமாப் பார்ப்போம். சோ லோக்கல் பீஸ் போட மாட்டோம் சார்… அண்ட் அவரு லாஸ்ட்டா இங்க சர்வீஸ்க்கு விட்டது நாலு மாசம் முன்ன சார். அப்போ இதெல்லாம் ப்ராப்ளம்னு மார்க் பண்ணிக் கொடுத்து இருக்காங்க எங்க சென்டர்ல… ஆனா, அவரு இப்போ சேஞ்சஸ் எதுவும் வேணாம்னு சொல்லி இருக்கார் சார்… அப்போகூட ஏர்ஃபேக் செக் பண்ணி இருக்காங்க, அது கரெக்டா இருந்து இருக்கு சார்… எங்க ஆளுங்க சர்வீஸ்க்கு கால் பண்ணப்போ அவரு சர்வீஸ் வெளியே பண்ணிட்டேன்னு சொல்லி இருக்காரு, ஆக்ஸிடென்ட்க்கு ஒருநாள் முன்ன… அதனாலதான் சொன்னேன் சார்” என்று கூற,

“ஓகே! அந்த டீடெய்ல்ஸ் எல்லாம் உடனே கொடுங்க எனக்கு… ஒரு காபி மெயில் பண்ணிடுங்க. தேங்க்ஸ் ஃபார் யுவர் இன்ஃபார்மேஷன்” என்றுவிட்டு வைத்தவனுக்கு இது நூறு சதவிகிதம் கொலை என்று உறுதியானது.

ஆனால், யாரு எதுக்காக அவனைக் கொல்லனும் என்று எண்ணியபடி நடக்க மீண்டும் அவனது ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க ப்ரைவேட் நம்பர் என்று வர யோசனையில் புருவம் சுருங்க எடுத்தவன் காதில் வைத்தான்.

“ஹ..” என்று வாயைத் திறக்கும் முன்பே,

“ஹலோ ஐ.பி.எஸ் இந்திரஜித் அவர்களே” என்ற குரல் கேட்க,

“யாரு?” என்று கேட்டான் இந்தர்.

“என்ன பையா, அதுக்குள்ள என்னை மறந்துட்டு சந்தோஷமா இருக்கியா? உன் அண்ணனைக் கொன்னதுக்குப் பதிலா உன்னைக் கொன்னு இருக்கலாம் போலவே? அவன்தான் என் பொண்ண லவ் பண்றான்னு தப்பா நினைச்சுட்டேனே… இப்பதானே தெரியுது, அவனவிட நீதான் என் பொண்ண ரொம்ப லவ் பண்ணி இருக்கனு…” என்ற குரல் கேட்க கோபத்தில் உதடு துடிக்கக் கத்தினான்.

“டேய் ஈஸ்வரா… ஏன்டா என் அண்ணனைக் கொன்ன? உன்னை ஜெயில்ல தூக்கிப் போட்டது நானும் உன் பொண்ணும். பழி வாங்கனும்னா எங்களைக் கொன்னு இருக்கனும். அதை விட்டுட்டு ஒரு தப்பும் பண்ணாத அவனைக் கொன்னு இருக்க? என்ன ஜென்மம்டா நீ?” என்று கத்த அதைக் கேட்டுச் சிரித்த ஈஸ்வரன்,

“அவளைத் தான்டா முதல்ல கொல்ல ஆள் அனுப்பினேன். ஆனா அந்த வீணாப் போனவனுங்க எங்க அப்பனையும், ஆத்தாவையும் கொன்னு அவளத் தப்பிக்க வெச்சுட்டானுங்க. உன் அண்ணனைக் கொல்றது என் எண்ணமே இல்ல… அவ எங்க இருக்கானு உன் அண்ணன் அன்னைக்கே சொல்லி இருந்தான்னா அநாவசியமா அவனைக் கொல்ல பஸ்ஸில இருக்குறவங்களை எல்லாம் சாகடிக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது. சாகும்போது கூடச் சொல்லாம செத்துட்டான்… ஆனா, அவ வருவானு நினைச்சேன். உன் நொண்ணன் சாவுக்கு. ஆனா, அப்பவும் வராம இருந்துட்டாளே…” என்று கூற,

“என்னை மீறி அவளை உன்னால ஒண்ணும் பண்ண முடியாதுடா… குறிச்சு வெச்சுக்க, உன் சாவு என் கையால தான்டா…” என்று இந்தர் ஆத்திரத்தில் கத்த,

“அதையும் பார்க்கிறேன்டா… எவ்ளோ நாளைக்கு அவள என் கண்ணுல இருந்து மறைச்சுக் காப்பாத்துவ? அவளைக் காப்பாத்துறேன்னு அண்ணனும் தம்பியும் உயிரை விட்டுடப் போறீங்க. இதுல இவன் என்னைக் கொல்லப் போறானாம்… அவளைக் காப்பாத்தப் போய் தான்டா உன் அண்ணனே செத்தான். அது ஏன்டா உனக்குப் புரியல? அவ்வளவு ஆசையோ ரெண்டு பேருக்கும் அவ மேல” என்று இளக்காரமாய் தன் மகளையே கேவலமாய் பேச,

“ஏய்ய்ய்… ச்சீ சாக்கடை… உன் பொண்ணப் பத்தி நீயே கேவலமா பேசுறியே, வெட்கமா இல்லையாடா உனக்கு? உனக்குப் போய் பொறந்து தொலைச்சா பாரு. அதுதான் அவ தப்பு… அவ என்ன உன்ன மாதிரி ஈனப்பிறவியா? அவ என் பொண்டாட்டிடா… அவளப்பத்தி தப்பாப் பேசுற உன்னை எப்படி சாகடிக்கப் போறேன்னு பாருடா… என் அண்ணன் சாவுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும்… உன்னால ஆனதைப் பாரு… முடிஞ்சா அவளைக் கொல்லுடா” என்று சவால் விட்டான் இந்தர்.

அதைக் கேட்டு இளக்காரமாகச் சிரித்த ஈஸ்வரன், “எது உன் பொண்டாட்டியா? காதலிக்குறது அவனை… கல்யாணம் பண்ணினது உன்னையா? நல்லா இருக்குடா உங்க நியாயம். ச்சை, என்ன கேவலமான வாழ்க்கையை வாழுறா அவ… இந்த அசிங்கத்துக்கு அவ செத்து இருக்கலாம்…” என்று கோபமாய் கூற,

“அவ ஏன்டா சாகனும்? இந்த உலகத்துலயே அசிங்கமான பிறவி நீயே உயிரோட இருக்கும் போது, ஒரு தப்பும் பண்ணாத அவ ஏன்டா சாகனும்? நல்லா வாழுவாடா… உன் கண்ணு முன்னாடியே அவ என்கூட சந்தோஷமா வாழுவா… அதைப் பார்த்துகிட்டு சாவு…” என்று கூற,

“ரெண்டு பேரையும் ஒண்ணாக் கொன்னு இந்த ஈஸ்வரன் யாருனு காட்டுறேன்டா” என்றுவிட்டு ஃபோனை வைத்து விட்டான். இந்தருக்குக் கோபம் கொஞ்சம் கூடக் குறையவில்லை. தன் அண்ணனை ப்ளான் செய்து ஈஸ்வரன்தான் கொன்றான் என்று தெரிந்ததும் அவன் மேல் கொலை வெறியே வந்தது. ஆனால், அதற்கான ஆதாரம் கையில் இல்லாததால் அவன்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையை எண்ணித் தன்னையே நொந்தவனுக்கு மேலும் அவனிடமிருந்து கயலையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயமும் இருக்கிறதென்பதை உணர்ந்தவன் தன்னை அமைதிப்படுத்த முயன்றான்.

ஆனால், அவனது கோபம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. எல்லாக் கோபமும் கயல்மேல் திரும்பி இருந்தது. இவளைக் காப்பாத்தப் போய் அவன் உயிரை விட்டானே என்ற கோபமும் அவளது தந்தையின் மேல் இருந்த கோபமும் அவள்மேல் திரும்பி இருந்தது. அதே கோபத்தோடு வீட்டுக்கு வந்தவன் நேரே அவளைப் பார்க்கத்தான் போனான்.

1 thought on “என் சுவாசம் உன் வாசமாய் – 17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *