Skip to content
Home » என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

முத்தையனும் , காஜாவும்  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்குவதற்காக ஹாஸ்பிடல் வந்திருந்தனர்.

ரிப்போர்ட் அளிக்க வேண்டிய டாக்டர்க்கு கொஞ்சம் பணி இருப்பதாக கூறி அவர்களை வெயிட்டிங்க்  ஹால் ல் அமரும்மாறு நர்ஸ் கூறவும் இருவரும் வெயிட்டிங் ஹாலில் அமரந்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு ,

ஒருத்தன் ஏன்டா காசு காசு னு அலையுறீங்க காசு இல்லாமல்தான் ப்ரைவேட் ஹாஸ்பிடல் போகாம இங்க வந்தோம் இங்கயும் காசு கேட்டா நாங்க எங்கடா போவோம் என புலம்பிகொண்டு சென்று கொண்டு இருந்தான்…

சென்று கொண்டிருந்த அந்த நபரிடம்   “என்னப்பா ஆச்சு கோபமா கத்திட்டே  போற காஜா கேட்க,

அட போங்க சார் வைஃப்க்கு உடம்பு சரியில்லை னு இங்க அட்மிட் பண்ணிருந்தேன்  பெட் காலி இல்ல அப்படி வேணும்னா 1500 குடு அரேஞ்ச் பண்ணித்தாரேன் னு சொல்றானுங்க சார், நீங்க சொல்லுங்க நா கூலி வேல பாக்குறேன்  டெய்லி வேலை பாத்தா தான் என் குடும்பம் ஓடும் , இப்படி இருக்கும் போது நா எங்க போவேன்..புலம்பிகொண்டே
இந்த போலிஸ் கார பண்ணாடைங்க வேற காசு காசு னு பிச்சையெடுத்து  கைல இருக்குற தையும் புடிங்கிட்டாங்க னு கூறிக்கொண்டே நகர்ந்து விட்டான்…

காஜா” டேய் டேய் என்னடா சொல்ற நில்லுடா போலீஸ் ஐ திட்ற

சார் பாருங்க அவன் நம்மள எப்படி திட்ரான் பாருங்க என முத்தையனிடம் வத்தி வைக்க

அந்த நபர் அதை அவன் அது காதில் வாங்கும் மனநிலையில் இல்லை புலம்பிக் கொண்டே சென்றான். .

சிறிது நேரத்தில்,

சார் உங்கள டாக்டர் கூப்பிடுறாங்க  என நர்ஸ் கூப்பிடவும்,

முத்தையனும்  காஜாவும்  சென்றனர்..

டாக்டர் “வாங்க சார் உங்கள ஒரு வழி பண்ணி டும் போல இந்த கேஸ் சும்மா கொதறி வச்சிருக்கு இந்த பாடி

எப்படி யும் வயசு ஒரு நாப்பதுக்கு  மேல இருக்கும் ..

சேம் தான்  ….. உறுப்ப உயிரோட பெட்ரோல் ஊத்தி பயர் பண்ணிருக்காங்க
அப்புறம் கண்ணுல ஒரு குச்ச வச்சி குத்திருக்கு வாயில சல்பரிக் ஆஸிட் ஊத்தி கொன்னுருக்காங்க…
இந்த அளவுக்கு கொல பண்ணனும்னா  ஒரு சைகோ வாதான் இருக்கணும் சீக்கிரம் கண்டுபிடிச்சு ருங்க…. என டாக்டர் கூறவும்

சரி டாக்டர் வரோம்  என வெளியே வரவும்

சார் இவ்ளோ கொடுறமா  பண்ணிருக்கானுங்க சார் கை யெல்லாம் வெட வெடங்குது சார்….

முத்தையன்”எதும் போன வாரத்தில எதும் மிஸ்ஸிங் கேஸ் இருக்குதானு பாரு என,கூற

எந்த பாயிண்ட்ல இருந்து ஸ்டார்ட் பண்ண என்ன பண்றது.

பழைய ரௌடிகள ஸ்டேசன் வரசொல்லிடு

காஜா  ஸ்டேஷனுக்கு போன் பண்ணி  லாஸ்ட் வீக் ல எதும் மிஸ்ஸிங் இருக்குதானு டீட்டெயிலா பாருங்க சக காவலர் டேவிட்டிடம் தெரிவித்தார்…

இந்த செய்தி மாவட்டம் முழுக்க உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்ப பட்டது…

சரி காஜா என்ன ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்கு போயி ஃப்ரஷப்  ஆகிட்டு  வா என இருவரும் ஜீப் ல் சென்றனர்….

………

“அண்ணா நீங்க ஆபிஸ் போங்க நா வந்திடுறேன்  என அலுவலக வாகனத்தில் இருந்து இறங்கினாள்”ப்ரியா

கார் புறப்பட்டவுடன்  கேப் புக் செய்து ஹாஸ்பிடலை அடைந்தாள்…

தன்னை யாரும் அடையாளம் கண்டுக்கொள்ளக்கூடாது என மாஸ்க் அணிந்திருந்தாள்  அதிகபட்சமாக யாருக்கும் எந்த தெரிய வாய்ப்பில்லை..

கேப் ற்கு பணம் செலுத்திவிட்டு அடுக்கு அடுக்காக கட்டப்பட்டிருந்த அந்த
மருத்துவமனையின் உள் சென்று அட்மின் ல் உட்கார்ந்திருந்த பெண்ணிடம்  மேம் இங்க குமாரசாமி னெ யாராச்சும் அட்மிட் பண்ணருந்தாங்களா என கேட்கவும் ,

கொஞ்சம் உட்காரு ங்க பார்த்து சொல்றேன் என கூறினார் அந்த பெண்.

அந்த நேரத்தில்  ஆபிஸிலிருந்து கால் வந்த வண்ணம் இருந்தது அனைத்து அழைப்புகளுக்கும் பதிலளித்து கொண்டிருந்து அரை மணி நேரமானது

மீண்டும் அந்த குறிப்பிட்ட ஊரைச் சொல்லி குமாரசாமி னு யாராச்சும் அட்மிட் பண்ணிருக்காங்க ளா என கேட்க,

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என அந்த பெண் அடுத்த வேலையை பார்க்க தொடங்கவும்

மனதில் கோபம் எரிமலையாக வெடிக்க தொடங்க  கட்டுபடுத்திக்கொண்டு

ஒரு பத்து நிமிஷம் கழித்து மீண்டும் கேட்க ,அந்த பெண் என்னமா நீ அதே கேள்விய எத்தனை தடவை கேட்ப  சும்மா நொய்யி  நொய்யினுட்டு  வார்டு பாயி போயிருக்கான் வந்ததும் சொல்றேன்.,கடுப்பில் கூற.

நமக்கே பொறுமை இல்லையே மக்கள் எல்லாரும் எப்படி த்தான் சமாளிக்கிறாங்களோ என மனதில் நினைத்து கொண்டிருக்க…..

ஏம்மா  ஊதா சேலை இரண்டாவது ப்ளோர்  104 வார்டு போமா என அந்த அட்மின் பொண்ணு கூறவும், அங்கிருந்து கிளம்பிறாள்  ப்ரியா

சரியாக வார்டை  கண்டுபிடித்து உள் நுழைந்தாள்  , அடையாளம் கண்டுகொண்டு அய்யா எப்படி இருக்கீங்க??உங்கள யாரு இப்படி அடிச்சது  போலிஸ் ல சொன்னீங்க லா??என கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள்

இல்லம்மா  அந்த சதாசிவம் தான் ஆள் வச்சு அடிச்சுட்டான் உங்கள பார்க்க வந்தது அவனுக்கு தெரிஞ்சிருக்கு  என அவர் கூறிக்கொண்டு மேலும் சிலவற்றையும் கூறினார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு “உங்களுக்கு எதாச்சும் உதவி தேவை படுதா ஐயா எதாயிருந்தாலும் சொல்லுங்க “என கேட்கவும்

அதெல்லாம் ஒன்னுமில்லமா என் பேத்தி இருக்கா பத்தாவது படிக்கிறா… அடிபட்டதில இருந்து ஒரு பக்கம் நகரல நல்லா பாத்துக்குறா ஸ்கூல் தான் இரண்டு நாள் லீவா  போச்சு என அவர் தெரிவித்தார்.

சரி ஐயா நா கிளம்புறேன்  சீக்கிரம் நடவடிக்கை எடுக்கிறேன் என கூறிக் கொண்டு அவள் கிளம்பினாள்.

இங்கு

சரோஜா தன் மகனுக்கு பிடிக்குமென்று ஆற்றிலிருந்து அயிரை மீன வாங்கி அத பால் ஊற்றி கழுவி  மல்லி ,வத்தல் வறுத்து எல்லாம் அம்மியில் அரைச்சு அளவோடு புளிசேர்த்து சும்மா  கம கம னு ஊருக்கே வாசனை வார மாதிரி குழம்பு வச்சு   சாலை மீன் பொறிச்சு  , கெண்டை மீன் துண்டும் பொறிச்சு  , கடைசியில குடிக்க மிளகு ரசம் வச்சு எல்லாம் தயாரா வச்சிட்டு பையன எண்ணெய் பேச்சு குளிப்பாட்டி விட்டாள்….

அந்த தரையில் பாய விரிச்சு  அந்த சாதங்களை பரிமாறி ஆதியும் ரவியும் சாப்பிட தாயானவள் கண்கள் சிறிது குளமாகின.

அம்மா”ஏன்மா அழற நாதான் வந்துட்டேன் ன இன்னும் ஒரு மாதம் அம்மா கூட தான் என ஒரு வாய் ஊட்டிவிட்டான்.

ரவி “என்னடா இது உலக நடிப்பால்ல  இருக்கு எங்க அண்ணன் ஜீ பி முத்து தோத்துருவார்ப்பா🤦‍♂️என வார

பேசாம சாப்பிடுடா இல்ல அந்த கிணத்த தூர் வார உன்னை தான் வைப்பேன்னு கூறவும் ,ஒரு வாய் சோத்துக்கு  வந்தது க்கு அடிமையாக்க பாக்குறீங்கள்ள ஆத்தாளும் புள்ளையும்😏ரவி கூற

பேசாம சாப்பிடுடா என சரோ கூற
இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிட்டு முடித்ததும் ஆதி “அம்மா நா டவுண் வர போறேன் சாயந்திரம்தான் வருவேன் “என கூறவும்,

சரி அப்பு பாத்து போடா இந்தா இவனையும் கூட கூட்டிட்டு பே சும்மாதான் இருக்கான் என கூற

ஆதி ஷூஸ் மாட்டிவிட்டு வெளியே நடந்து
செல்லவும்

அப்பு பைக் ல போகலையா  என கேட்க, “இல்லமா  பஸ்ல போயிட்டு வரேன் ரொம்ப நாளாச்சு பஸ்ல போறேன்” என கூறிவிட்டு ரவியும் ஆதியும் பஸ்ஸடாப்பிற்கு நடந்தனர்.

திருநெல்வேலி பஸ் ம் வந்தது . ஏறியவுடன் கூட்டமில்லாததால் சீட்டில் உட்காரந்தான் பஸ்ஸில் போடப்பட்ட  பாடலும்  பஸ் ன் அலுக்கல் குலுக்க லும் தூக்க த்தை வரவைத்தது  ….

சிறிது நேரத்தில் ஒரு பஞ்சு போன்ற ஒன்று தலையை வருடுவது போல இருக்க, தூக்கம் கலைந்து எட்டி பார்த்தான் ஒரு  மழலை இவனது தலை முடி பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது…

அகல்யா  இது என்ன சேட்டை மாமா க்கு வலிக்கும் என அந்த பெண் கூறவும்  இன்னும் எம்பி எம்பி குதித்தது..

இந்த சேஷ்டை ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க  …

அடுத்த ஸ்டாப் பில் இருவர் ஏறினர்.இருக்கை இடமிருந்து ம் உட்காரமல்  ஒருவன் மட்டும் இந்த பெண் இருக்கும் இருக்கை நோக்கி வந்தான்

வந்தவன் சும்மா இராமல் அந்த பெண்ணை சீண்டிக்கொண்டிருந்தான் அந்த பெண் நெளிந்துக்கொண்டே இருக்க நகரந்துக்கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் குழந்தை  தூக்கி இறங்க முற்பட அந்த நேரத்தில் தான் ஆதிக்கு உரைத்தது.

அண்ணே  “அங்க இடமிருக்கு  சீட்ல  போயி உட்காரு ங்க “என கூறவும்

அந்த தடியன் ” ஏன் அவ உன் பொண்டாட்டி யா வக்காலத்து க்கு வர நீ குழந்தை வச்சி ட்ரை பண்ண நா நேரா பண்ணுனேன்” எனக் கூறும் போது அந்த பெண் கூனிக்குறுகினாள்….

பளார் பளார் என சத்தம் பஸ்ஸை கிழிக்க தொடங்கியது…..

ஆதி அந்த இருவரையும் அடித்து துவைத்து துவம்சம் பண்ணினான்.. ..

இதை பார்த்துக்கொண்டிருந்த கண்டெக்டர்
“கணேசா  வண்டிய ஸ்டேசன் விடு என கண்டெக்டர் கூறவும் ” வண்டி ஸ்டேசன் விடப்பட்டது…

ஸ்டேஷன் உள்ளிருந்து இரு காவலர்கள் வந்து என்ன ரௌடிசமா பண்றீங்க என அந்த இரண்டு தடியர்களையும் அடித்துவிட்டு

ஆதியை அடிக்கும் விதமாக வரவும் ஆதி முன் ஒரு அழகான  யுவதி வந்து நின்றாள்….

ஏன் சார் தப்பு பண்ணவங்களை  விட்டுட்டு தட்டிக்கேக்குறவங்களை எப்பவும் தண்டிக்கிறீங்க என தாறுமாறாக சண்டையிடவும்

ஆதி மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்…

அந்த காவலர்களில் ஒருவர் ஏம்மா  நிறுத்த போறியா இல்ல  ப்ராத்தல் கேஸ் ல போடவா என கூறவும் ஆதி அந்த காவலர் சட்டையை பிடித்திருந்தான்.

வெளியே கைகலப்பு நடைபெறும் தருவாயில் வெளியே சப் இன்ஸ்பெக்டர்
தன்ராஜ் மற்றும்  சக காவலர்கள் ஆதி மற்றும் இருவரையும் பிரித்து விட்டனர்

ஏம்மா”  நீ இன்ஸ்பெக்டர் முத்தையன் பொண்ணுதான நீ இங்க என்ன பண்ற என” கேள்வி கேட்டார்

பஸ்ஸில் நடந்த சில்மிஷம் முதல் இப்போது நடந்த வரை ஒன்று விடாமல் ஒப்புவித்தாள்.

சரி நீ போமா நா பாத்துக்கிறேன். நீயும் போ பா என கூறவும் ஆதி வெளியே நடந்து வந்தான்…

யோவ் மிஸ்டர் நில்லுயா  யோவ்

ஒரு தேங்கஸ்  கூட கேக்காம போறான் இவ்ளோ ஸ்பீடா  நடக்குறான்

டேய் உன்னைத்தான்  டா வளந்து கெட்டவனே  கூறும்போது ஆதி திரும்பினான்.

அய்யோ போச்சு திட்டப்போறான் என மனதில் நினைத்துக் கொண்டு சாரி உங்களுக்கு கேக்காதுனு நினைச்சு னு காலில் கோலம் போட…

ஏங்க மக்கள் சொத்த ஏன் அழிக்கிறிங்க என ஆதி கூறவம்

ஹான் என்னது !

கோலம் போடுறீங்கல்ல அது இப்பதான் போட்ருங்காங்கபோல நீங்க பேத்துராதிங்க என கூற, அப்போதுதான் அவளுக்கு மண்டையில் உரைத்தது…

அப்புறம் நான் வளந்து கெட்டவன் இல்ல ஆதி ஆதித்ய பிரபாகரன் இந்தியன் ஆர்மி என கூறிவிட்டு பை  அர்ஜண்ட் வெர்க் என நடக்க தொடங்க

எம் பேரு ஹரிணி இங்க தான் சாரா டக்கர் காலேஜ் ல தான் படிக்கிறேன். நெக்ஸ்ட் மீட் பண்லாம்
என கூறிக்கொண்டே அவன் பின்னால் ஓட, ச்ச பேசாம அவன் நம்பர் வாங்கிருக்கலாம் என தலையில் அடித்துக் கொண்டாள்….

முன் சென்ற கள்வன் அத்தனையும் மனதில் பதித்துக் கொண்டான்.

இவ்வாறு ஆதி செல்ல நாளை என்ன செய்ய காத்திருக்கிறதோ?????

4 thoughts on “என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7”

  1. Avatar

    கலெக்டரம்மா பொறுமையா தான் இருக்காங்க……நல்லதா என்ன பண்ணுவாங்கனு பார்க்க வெயிட்டிங்😌😌😌😌😌😌ஊருக்கு வந்த மகனுக்கு நல்லா விருந்து தான்…..அவனுக்காகவே இதோ போலீஸ்காரர் வீட்டு பொண்ணு வேற…..அடுத்தது என்னவோ😊😊😊😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *