Skip to content
Home » என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-8

என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-8

அத்தியாயம் -8

என்ன இவர காணேமே  என அங்கும் இங்கும் நடைபோட்டுக்கொண்டு பொறுமை தாளாமல் போன் செய்யவும் சார் நா அரவிந்த் கண் மருத்துவமனை ஆப்போஸிட் சைட்ல நிக்குறேன் என கூறிவிட்டு ரஞ்சித் காக காத்திருந்தாள்….

சிறிது நேரத்தில்  ஒரு ஸ்கார்பியோ கார் இவளருகில் வந்து நின்றது…..

திரும்பி பார்க்க காலையில் துரத்திய ரௌடி…..

ஸ்கூட்டர் ஐ கீழே போட்டுவிட்டு ஒடினாள்

ஓடி போனவள் கயவர்களின்  கையில் சிக்கி சிதைந்தும்போனாள்.. தாயும் தந்தையும் இல்லாத அவள் அனாதையாக பிண வரைக்குள் கிடக்கிறாள்.இவளுக்கான நீதி கிடைக்க படுமா???

…….

ஒரு இளைஞன்  தாறுமாறாக தாக்க பட்டு அந்த  ஜன்னல் கம்பி யில் கட்டப்பட்டிருந்தான்

வந்திருந்த நால்வரும் ஏண்டா  இப்படி யே கொல்றோமே புதுசா ட்ரை பண்ணா என்ன நா புதுசா ஒன்ன கண்டு பிடிச்சிருக்கேன் என அர்ஜுன் கூறவும்

பாவம் டா! அவன் அப்படி லா பண்ணக் கூடாது னு கூறிக்கொண்டே கால் கிலோ வெயிட்டை  கழட்டிவிட்டு  அரைக் கிலோ வெயிட்டை கட்டினான் விவேக் அந்த இளைஞனின் …….பில்

வலிபொறுக்காமல் அலறத்தொடங்கினான் அந்த இளைஞன்….
ஒரு பாட்டிலில் முழுவதும் குண்டூசி குத்த பட்டிருக்க அந்த பாட்டிலை எடுத்து வந்தான் அர்ஜூன்…

சரி போ உன் ஆசையை நிறைவேத்திக்க என

எனக் கூறவும் அந்த பாட்டிலில் அந்த இளைஞன் …..ப்பை உள்ளே விட்டு வேகமாக முன்னும் பின்னும் மாக இழுக்க தொடங்க….

  சதை கிழிந்து தொங்கியது பார்க்கவே நாரசமாக இருக்க  வலி பொறுக்காமல் அலறினான்  அந்த இளைஞன் …

தெரியாம தப்பு பண்ணிட்டேன் என்ன கொன்னுருங்க என அந்த இளைஞன் கதற..

நாட்டு ல நடக்குற எல்லா செய்தியும் பாக்கு றீங்கல்லடா அப்புறம் செய்தா  அது எப்படி தெரியாம  தப்பு செஞ்சதா  அர்த்தம்
அந்த குட்டி பொண்ணும்  இப்படி தான  கதறிருக்கும்  எப்படி டா உங்க மனசாட்சி இத பண்ண இடம் கொடுக்குது என விவேக் மறுபடியும் அதே மாதிரி செய்ய  வலி தாங்காமல் மயக்கமடைந்தான் ..

டேய் அந்த நாய எழுப்பிவிடு ஆ ஊனா  தூங்கிடுறானுங்க…… என விவேக் கூறவும் அர்ஜூன் அவனை எழுப்பினான்…

சிறிது நேரத்தில்  கொன்று ஆளில்லாத ரோட்டில் போட்டுவிட்டு சென்றனர்.

……….

அப்பு  நம்ம  முருகன் மாமா பொண்ண பத்தி என்ன நினைக்கிற என ஆதி யிடம் கேட்கவும்,

அந்த புள்ளைக்கென்னமா கருவண்டு மாதிரி இருந்துச்சு காசு வந்தாலும் வந்துச்சு சும்மா பள பளனு மாறிடுச்சு, நல்ல புள்ளதான் வாயி கொஞ்சம் நீளம்
அதுக்கென்னமா இப்ப என்கிட்ட கேக்குற உனக்கு தெரியாத விஷயமா எனக்கு தெரியப் போகுது…

பசிக்குது ம்மா கஞ்சு எடுத்துட்டுவா  அப்படி யே  நேத்து வச்ச மீன் குழம்பு ப்பா வேற லெவல் அதையும் கொண்டு வா…

ஆதியின் ஆரோக்கியமான உடம்புக்கு அம்மாவின் கைப்பக்குவமே என கூறி கன்னத்தில் முத்தம் வைக்கவும்,

இருடா தங்கம் எடுத்து வரேன் என சமயலறை சென்றாள் சரோஜா. ..

சம்பா அரிசி கஞ்சும்  வீட்டு பசு மோரும்  அந்த நார்த்தை  ஊறுகாய் ம்  பழைய மீன் குழம்பும் நாக்கினில்  அருவியை வர செய்தது….

சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே அப்பு உனக்கு ஒரு கல்யாணம் செஞ்சு பாக்கலாம்னு நினைக்கிறேன் டா கண்ணு. எனக்கப்புறம் உன்ன பாத்துக்க ஒருத்தி வேணாமா  என கேட்கவும்

அம்மா உன் இஷ்டம் போல எது வேணா செய் நீ சொன்னா சரியா இருக்கும் என அன்னையின் மனதை அறிந்தவனாக கூறிவிட்டு ரசித்து ருசித்து சாப்பிட… மகன் சாப்பிடும் அழகினை அன்னை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்பு இன்னைக்கு சாயந்திரம்  போயி பொண்ணு பாத்துட்டு வந்துருவோம் டா என கூறவும்

ஏன் மா இத சொல்லவா இந்த தயக்கம் சரி போயிட்டு வந்துரலாம். என கூறினான்.

சாயங்கால வேலையில் ஒவ்வொரு வராக வீட்டிற்கு  வரத் தொடங்கினர்.

என்னப்பா புது மாப்பிள்ளை இன்னும் கிளம்பாம இருக்க  பொண்ண பாக்க வேணாம் இன்னைக்கு தான் பொண்ணு பாக்க அழகா தெரியும் என வந்திருந்த சாந்தி அக்கா கிண்டலடிக்க,

அதெல்லாம் ஆதி பாத்திருக்கும்  பாத்திருக்கும் பெரிம்மா சொன்னதுமே ஒடி போய் பாத்திருக்கும் என சுலோசனா  அக்காவும் பதிலுக்கு சீண்ட

ஏய் சும்மா இருக்க டி நானே கஷ்டபட்டு ஒத்துக்க வச்சிருக்கேன்.. என சரோஜா பேசிக்கொண்டே வர

என்னடி பூ கொண்டு வரவனைக் க்காணோம்  என சரோஜா வாசலுக்கு ம் உள்ளேயும் வெளியேயும்  நடக்க

இரு பெரியம்மா வந்துருவான் என ரவி பழவகைகள் சுவீட்  என அனைத்து பதார்த்தங்களையும் கொண்டு வந்தான்.

நேரமும் மாலை ஐந்தை  நெருங்க

என்ன மதனி கிளம்புவோமா என ஆதியின் அத்தை கூறவும்

சரியென அனைவரும் கிளம்பினர்

மாப்பிள்ளை ஆதி அடர் பச்சை நிற சட்டை  பட்டு வேஷ்டி அணிந்து விடைத்த மார்புடன் பார்ப்பவரை  வசீகரிக்கும் அழகோடு சொந்தங்கள் புடைசூழ மங்கையவளை  பரிசம் போட சென்று கொண்டிருந்தான்.

பெண் வீட்டில்….

வாங்க  வாங்க என வரவேற்பு  பலமாக இருந்தது

ஒத்த புள்ள பெத்தாலும்  முத்தா பெத்துருக்கா  ப்பா என கூட்டத்தில் ஒருவர் கூற… தாயுள்ளம் பூரிச்சு போச்சு

அட நிறுத்துப்பா  என்ன மிலிட்டரி ல சோறு கொண்டு போற வேலையாதான் இருக்கும் என் அக்கா மவன்  அதான் பாக்குறான் என ஒருத்தர் கூற

அடச்சி  நிறுத்துங்க  ப்பா என்ன வேலை பாத்தாலும் பொண்ண கடைசி வரை காப்பாத்துரானா அத பாருங்க ப்பா என பெரியவர் கூறவும் மொத்தஸகூட்டமும் கப்சிப் ஆனது.

வாங்க மாப்ள! என புவனா அத்தை வரவேற்கவும்  சிரித்த முகத்துடன் நல்லா இருக்கீங்களாத்தே ? என கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான்

சொந்தங்கள் அனைவரும் நிரம்பி இருக்க  இவனும் ஷோபா வில் அமர்ந்தான்..

அந்த அறை முழுவதும் மல்லி வாசம் துளைத்தெடுக்க  அதையும் தாண்டி சிக்கன் குழம்பு வாசனை அனைவரின் நாசியினை  சீண்டியது…

எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்து இருக்க பொண்ண வரசொல்லுங்க மாப்ள தவிச்சிட்டு இருக்கார் னு ஒரு  மதனி கூறவும் 

அந்த அறை முழுவதும் சிரிப்பலைகளை தத்தெடுத்தது.

(ஆதி மைண்ட் வாய்ஸ்”அடேய் நான் எங்கடா தவிச்சேன் .நீங்களா கிளப்பி விடுவீங்களாடா 🤦‍♂️இருந்தாலும் வரட்டும் நாம பாப்போம)

“அண்ணே மைன்ட் வாய்ஸ்னு வெளியே பேசிட்டு இருக்க “ரவி கூறவும் திரு திரு வென முழித்தான்..

எங்க மாலதி இன்னும் வரலையா?  தங்கச்சி விஷெசத்துத்கு இவளே வராம இருந்தா எப்படி ???என கூட்டத்தில் குரல் எழுப்பவும்….

ஆத்தா !வாயமூடு …வந்துட்டேன் ஒரே டிராபிக் அதான் லேட்,  நீ வேற பத்த வைக்காத என பட பட வென வார்த்தையால் வெட்டிவிட்டு உள்ளே நுழைந்தனர் குடும்பமாக…

ஆதி நிமிர்ந்து பார்க்க அந்த உருவம்
உள்ளே நுழைந்தது…..

யார் அந்த உருவம்?????

இங்கு

என்ன எல்லோரும் வந்துட்டானுங்களா என கேட்ட படியே உள் நுழைந்தார் முத்தையன்.

அங்கு ஒவ்வொரு வரையும் அடித்து துவைத்து வைக்கப்பட்டிருந்தது.

ஏன்டா இப்படி கூலிக்கு கொல பண்ணி உங்க லைப் கெடுத்துக்கிறிங்க.. ஒருத்தனுக்கும் வாழ விருப்பமில்லை யா அழகா ஒரு பொழப்ப பார்த்து குடும்பம் குட்டி னு செட்டில் ஆகுறத விட்டு ஏன்டா எங்க உசிர வாங்குறீங்க என கேட்கவும்

சார் ! நாங்க எந்த தப்பும் பண்ணல சார் நீங்க என்ன சொல்றீங்க னெ புரியல??பஞ்சர் கடை கூலி தொழில் னு பொழச்சிட்டு இருக்கோம் எங்கள விட்ருங்க  சார்னு  வந்தவர்களில்  ஒருவன் கூறினான்.

***பொய்யாடா சொல்றீங்க என கழுத்தில் ஓங்கி மிதித்தான்  ராபின்.

ராபின் விடு அவனுங்களுக்கு வாழ புடிக்கல பேசாம என் கவுண்டர்ல போட்ருவோம் என அவர்களுக்கு கேட்குற மாதிரி பேசி முத்தையனும்  ராபினும் வெளியே வந்தனர்..

இவனுங்க இல்ல போல டா எஸ் பி வேற டார்ச்சர் பண்றார் டா எப்படியாச்சும் கேஸ முடிக்கணும்… தலையில் சொறிந்தவாரே கூற

அந்த நேரத்தில் ஒரு தம்பதி இங்கு வந்திருந்தனர்..

சார் சார் என் மகனக்காணோம் இரண்டு நாளாச்சு என்ன ஆனான் னு தெரியல சார் கண்டுபுடிச்சுக்குடுங்க சார் என அந்த பெண்மணி அழுதுகொண்டே கூறவும்

முத்து அண்ணே இவங்க கிட்ட டீட்டெயில் எழுதிவாங்கிக்கோங்க என வெளியே போக முற்பட ஒரு கால் வந்தது

மறுமுனையில் சார் தூத்துக்குடி திருநெல்வேலி ஹைவேய்ஸ் ல ஒரு பாடி கிடக்குதாம் சார் நம்ம ஸ்டேஷன் தான் என காஜா தகவல் தெரிவிக்க!!

மொத்த ஸ்டேஷனும் முத்தையனை பார்க்க !!?

முத்து இவங்க கிட்ட டீடெய்லா விசாரிச்சு வை நா போயிட்டு என்ன ஏதுனு பாத்துட்டு வந்துடுறேன்.. என கூறிவிட்டு வெளியே சென்றார்

கதை எப்படி போகுது னு கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ… இனி தான் விறுவிறுப்பாக இருக்கும்…..

3 thoughts on “என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-8”

  1. Avatar

    ஒருவேளை, அது அந்த விவேக் கேங் கொன்ன பையனா இருக்குமோ..?
    😤😤😤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *