Skip to content
Home » என் தேடலில் தொலைந்தவன்(ள்)நீ -9

என் தேடலில் தொலைந்தவன்(ள்)நீ -9

அலுவலகத்திற்கு சென்றவள்  நா சொன்னத செய்றதா  இருந்தா இங்க பாக்கலாம் இல்ல வேற ஒருத்தர நா அப்பாயின்மென்ட்  பண்ணிக் கிறேன் என தனது பீ ஏ வை வறுத்தெடுத்தாள். 

ஏன் அந்த வி ஓ வரல இன்னும் சொல்லி இரண்டு நாளாச்சு. என சிடு சிடு வென நின்றாள்.

சாரி மேடம் இந்தா இப்ப வர சொல்லிடுறேன்  என  போன் எடுத்து வெளியே சென்றார்..

தனது மொபைல் எடுத்து துருவ் ற்கு கால் செய்தாள் மாமா நம்ம கன்ஸ்டரக்ஷன் மூலமா ஒரு ஊருக்கு ஸ்கூல் கட்டணும்  .. இப்ப ஃபிரியா  இருக்குமா  என கேட்கவும், எதிற்புரத்திலிருந்து  என் அம்மு சொன்னா ஃபிரியா வே கட்டித் தருவேன் என கூறினான்….

சரி மாமா நா அபிஷியலா மூவ் பண்றேன் இங்க ஒருத்தன் ஒரு ஊரையே அடிமையாக்கி வச்சிருக்கான் அவன ஒரு வழி பண்ணனும்…

சரி அம்மு ஒரு மீட்டிங் இருக்கு நா அப்புறமா பேசுறேன் டா கண்ணா என வைக்கவும்..

ஒரு மணி நேரத்தில் அந்த கிராமத்தின் வி ஏ ஓ வந்தார்..

வணக்கம் மேடம் நா முத்துக்குமார் வீ ஏ ஓ  கூப்பட்டீங்கனு சொன்னாங்க என்ன விஷயம் மேடம்  பஞ்சாயத்தில  நிறைய பிராப்ளம் ஸ் அதான் பார்த்து விட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சொல்லுங்க மேடம் என பவ்யமாக  கேட்க

அப்ப நா எதுக்கு வரசொன்னேன்னு தெரியாது அப்படித்தானே முத்துக்குமார்..

எஸ் மேடம் சொல்லுங்க அப்படியே செஞ்சுடுறேன்  என பதிலூரைக்கவும்,

நீங்க சொல்ற பஞ்சாயத்து தட்டாப்பாறை வில்லேஜ் வருதா என ப்ரியா கேட்க

திரு திரு வென முழித்தார்.
ஒன்னுமில்ல  நாளைக்கு விசிட் அங்க தான் நீங்க பைல்ஸ் எல்லாம் எடுத்து வந்துருங்க.நீங்க போகலாம் என கூறவும்

நெற்றியில் வடிந்த வேர்வையினை துடைத்தவாரு வெளியே வந்தார்’ முத்துக்குமார்.

யோவ் என்னய்யா இது இந்த பொம்பள நாளைக்கு அங்க விசிட் னு சொல்லுது இத்தனை வருஷமா நாம அந்த பெருசுக்கு எல்லா கான்ட்ராக்ட் குடுத்து அவர் குடுத்த கமிசன் வாங்கி சாப்டோம் இப்ப என்ன பண்றது னே தெரியலையே….

உள்ளே இருந்து பெல் சவுண்ட்  கேட்டதும்

இந்தா மேடம் வந்துட்டேன் என உள்ளே ஓடினார்…பீ ஏ

இந்த தட்டாப்பாறை வில்லேஜ்ல என்னென்ன வசதிகள் எல்லாம் சேங்ஷன் ஆகிருக்கு  ஐ மீன் ஸ்கூல்,  குடிநீர் , ரோட்ஸ் இதுக்கெல்லாம் ஃபண்ட்ஸ்  க்ளைம்  ஆகிருக்கானு பாக்கணும் எல்லாம் எடுத்து வைக்க சொல்லுங்க என கூறவும்,

சரி மேடம் எடுத்து வைக்க சொல்றேன் என வெளியே புறப்பட்டார்.

வெளியே வந்து சதா சிவத்துக்கு  அழைத்தார்  அய்யா நாளைக்கு அந்த ஊருக்கு கலெக்டர் வருது என்ன பண்ணனு தெரியல ஏதாச்சும் பண்ணுங்க நா வச்சுடுறேன் என அணைத்து விட்டு செல்லவும்

சொல்லியாச்சா சார் இனி வேலைய பாருங்க என ப்ரியா நிமிர்ந்து கூட பார்க்காமல் கூறவும் ,

மேடம் அது வந்து அது!

சார் பைல்ஸ் எடுத்து வைக்க சொல்லியாச்சுல்ல அதுக்கு ஏன் இப்படி பதருறீங்க,

நல்ல வேலை நம்ம பேசுனத கேட்கல,

ஷப்பா  என பெருமூச்சு விட்டு க் கொண்டார்…

எஸ் பி அலுவலகத்தில் …..

என்ன முத்து என்ன அப்டேட் இதுவரை எதும் துப்பு கிடைச்சுதா  இல்லையா? மேல இருந்து ப்ரஷர் மேல ப்ரஷர் ஒரு கமிஷனர் கொன்ருக்காங்க இன்னும் கண்டு பிடிக்க முடியலையா ? போலிஸ்க்கே பாதுகாப்பு இல்லை இழக்க எப்படி மக்கள பாதுகாக்க போறாங்க? நியூஸ் சேனல்ல  போட்டு கிழிக்குறாங்க…

இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்தில் அக்யூஸ்ட் புடிச்சு கோர்ட்ல  ப்ரோடியூஸ் பண்ணி இருக்கனும்..

சரி “அந்த இரண்டாவது பாடி யாருனு  தெரிஞ்சதா ” என கேட்க.

சார் அது டவுண் இல் க்ளீனிக் நடத்துற  டாக்டர்   நாராயணன் பையன் சார் என்ன மோட்டிவ்  தெரியல சார் சீக்கிரம் கண்டு பிடிச்சு ஒப்படைக்கிறேன்  என முத்தையன் கூறிவிட்டு வெளியேறினார்.

அந்த டீக்கடையில வண்டிய நிறுத்து காஜா டீ குடிச்சிட்டு போவோம் என கூறவும், வண்டியைய  அந்த மர நிழலில் நிறைத்தினார் காஜா.

அந்த தலைவலிக்கு மருந்தாக இஞ்சி போட்ட தேநீர் இதமாக இருந்தது..

காஜா நம்ம கமிஷனர் வீட்டுக்கு போய் ஸ்டார்ட் பண்ணுவோம் என கூறிக்கொண்டு விரைந்தனர்..

அரைமணி நேர பயணத்தில் வீட்டை அடைந்தனர். .

வீட்டின் காலிங் பெல்லை அழுத்த

ஒரு இருபது வயது இளைஞன்  கதவை திறந்து வெளியே வந்தான்..

“தம்பி அம்மா வ பாக்கணும்” என கேட்கவும்

வாங்க! அங்கில்  என உள்ளே அழைத்துச் சென்றான்..

சோஃபா வில் முத்தைய னும் காஜாவும்  அமர ,

அந்த அறையின் உள்ளிருந்து வந்தார்  ஹரிஹரன் மனைவி முகம் முழுவதும் சோகம் அழுது அழுது வடிந்த கண்ணீர் துளிகள் இன்னும் அந்த துயரத்திலிருந்து மீள வில்லை என்பதாக காட்டியது..

அம்மா உங்க கஷ்டம்  புரியுது  தொந்தரவு பண்ணுனதுக்கு மன்னிக்கவும்  நீங்க சொல்ற பதில் எங்களுக்கு அந்த கொலைகாரன புடிக்க யூஸ் ஆகும்…

சார்க்கும் உங்களுக்கும் அடிக்கடி சண்டை ஏதும் வருமா? தப்பா எடுத்துக்காதிங்க சார் க்கு வேற ஏதும் ரிலேஷன்சிப் இருந்துச்சா  ? அது உங்களுக்கு எதும் தெரியுமா? என கேள்விகளை அடுக்கவும்.

அங்கில்  அந்த கொலக்கார  புடிக்காம  எங்க கிட்ட வந்து தப்பா பேசிட்டு இருக்கீங்க என எகிறவும்.

“ஹரிஷ் ஷட் டப் என்ன வயசு வித்தியாசமில்லாம… நீ உள்ள போ பெரியவங்க சின்னவங்க  பாக்காம  பேசிட்டு இருக்க “என அதட்டி உள்ளே அனுப்பினார்..

சார் எனக்கும்  ஹரிக்கும்  மேரேஜ் ஆகி இருபத்தைஞ்சு  வருஷமாச்சு என்ன நல்லாதான் பாத்து கிட்டார்… சின்ன சின்ன சண்டைகள் வரும் தான் ஆனா எனக்கு துரோகம் பண்ணி இருக்க மாட்டார் ஹரி என அழுகவும்.

அந்த சோகம் தாங்க மாட்டாமல்
“சாரி மேம் சீக்கிரம் கண்டுபிடிச்சு தண்டனை வாங்கி குடுத்துருவோம்  மனச தளரவிடாதிங்க “என கூறி விடை பெற்றனர்…..

பாவம் யா அந்த குடும்பம்  சரி போலீஸ் காரன்னாலே  இப்படி ஒரு சூழ்நிலை வரும் தானே கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு நசுக்கி போடடுறேன் என சூழுரைத்துக்கொண்டு  கிளம்பினர்….

சென்னை சுற்று பயணம் முடித்து வீட்டுக்கு வந்திருந்த தன் மாமனாரிடம் 

மாமா உங்க புள்ள இரண்டு நாளா  வீட்டுக்கு வரல போன் வேற சுவிட்ச் ஆப் னு வருது  என கூற,

பசங்க சாப்டாங்களா மா இன்னைக்கு ஸ்கூல்  போகலையா என கேட்டுக்கொண்டே  படியேறவும்

மாமா அவர்..,…

பாக்குறேன்  டா நீ கவலைப்படாத  கண்டிச்சு  வைக்கிறேன் என கூறி தனது அறைக்கு சென்றார்.

குளித்து முடித்ததும்   கட்சிக்காரர்கள் சந்திக்கும் தோட்டத்தில் அமைக்க பட்ட நிழற் குடையின் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்  மினிஸ்டர்,

டேய் என கூப்பிட்டதும்

வந்து நின்றான் தடியர்களில் ஒருவன்

போன் போட்டு கேளு டா பேக்டரி க்கு போயிருக்கானா  இல்ல தோட்டத்துக்கு போயிருக்கானா இல்ல அந்த சிறு க்கி வீட்டுக்கு போயிருக்கானானு விசாரி என கூறினார்.

சரி ய்யா  என தடியர்களில் ஒருவன் போன் எடுத்துக்கொண்டு கிளம்பினான்…

டேய் ராமா ஒரு இளநீர் வெட்டு டா என கூறவும் தோட்டக்காரன்  ஒரு இளநீர் வெட்டி எடுத்து வந்தான்.. அதனால்  ஸ்பிளென்டர் ப்ரைடு  எனும் மதுபானத்தை குறைவாக ஊற்றி அருந்தினார் மினிஸ்டர்…இப்பதான் டா சும்மா நச்சினு இருக்கு  சரி என்னடா ஆச்சு போன் போட்டியா இல்லையா

அய்யா எங்கயும் வரலையாம்  என தடியன்  கூறினான்.

ஹலோ ரஞ்சித் நா பெரியப்பா பேசுறேன் தம்பி இரண்டு நாளா  ஆளக்காணோமாம் நீ எதும் பாத்தியா என விசாரிக்க

ப்பா நா நா பேசுனேன்  ப்பா ஒரு ரிப்போர்ட்டர் வீடியோ எடுத்தா அத பிடிக்க சொல்லி பேசுனேனே  என யோசித்தவனாக கூறவும்

சரி வீட்டுக்கு வா என போனை அணைத்தார்

தாத்தா !என இரண்டு பேரப்புள்ளைங்களும் வந்து கட்டியணைக்க 

தாத்தா டேடி  இன்னும் வீட்டுக்கு வரல என சோகமாக கூறவும்

அப்பா  ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக வெளியூர் அனுப்பிருக்கேன் என பசங்களை விளையாட கூறிவிட்டு வீட்டினுள் நூழைந்தார் …

யாரும் சின்ன புள்ளைங்க முன்னாடி சோகமா மூக்கு உறிஞ்சிங்க நா மனுஷனா இருக்கமாட்டேன் முகத்தில் அறைந்தார் போல் கூறவும்

சரி யென்பதாய் உள்ளே சென்றனர்…

சிறிது நேரத்தில் ரஞ்சித் ம் வந்து சேர்ந்தான். ப்பா நா அவன்கிட்ட  எது பண்ணாலும் யோசிச்சு பண்ணுனு  சொல்லிருக்கேன் . எங்கயும் போயிருக்க மாட்டான் செல்போன் ட்ராக் பண்ணி தேட சொல்லிருக்கேன்  வந்துருவான்  கொஞ்சம் கண்டிச்சு வைங்க பெரியப்பா என ரஞ்சித் கூறினான்…

சார் புதுக்கோட்டை எஸ் ஐ முத்தையா உங்க கிட்ட குடுக்க சொன்னார் என மொபைலை நீட்டவும்,

சொல்லுங்க முத்து என்ன எதும் அர்ஜண்ட் ஆ என கேட்கவும், சார் திருநெல்வேலி தூத்துக்குடி ரோட்ல   வாகைக்குளம் தாண்டி ஒரு ஆள கொன்னு  போட்ருக்காணங்க  இது நம்ம மினிஸ்டர் சன் மாதிரி இருக்கு அதான் கொஞ்சம் வாரிங்களா  என கூறவும் ” வரேன் என அணைத்துவிட்டு கிளம்பி சென்றான்.

கதை எப்படி போகுது ணு சொல்லிட்டு போங்கோ🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

3 thoughts on “என் தேடலில் தொலைந்தவன்(ள்)நீ -9”

  1. Avatar

    Intresting….போன எபிசோட் ஆதி பொண்ணு பார்க்கிறது என்னாச்சு🤔 பொண்ணை பார்க்க வெயிட்டிங்

  2. Avatar

    போச்சா…இந்த மாதிரி ஆளுங்களை, இப்படித்தான் காணா பொணமா ஆக்கிடனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *