Skip to content
Home » என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-1

என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-1

அத்தியாயம்-1

“ஏம்பா ஏய் மாலை  பூங்கொத்து எல்லாம் வாங்கியாச்சா?..  டீ, ஸ்நாக்ஸ் எலாம் வந்துருச்சா?.. என அந்த அலுவலகத்தில் அனைவரிடமும் கேட்டபடி பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார் சந்திரசேகரன்.. கலெக்டர் பி.எ.. நேர்மையான மனிதர் என்று எல்லோராலும் அறியப்படுபவர்..

என்றுமில்லாத நாளாக இன்று அந்த  ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.. ஆம் அந்த அலுவலகத்திற்கு புது கலெக்டர் வரப்போகிறார் எனச் செய்தி கேட்டு ஆங்காங்க ஆட்சியரை காண அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் வந்திருந்தனர்…

அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே  மக்கள் கூட்டம் கூட்டமாக குழுமி நின்றபடி, ஆமா இந்த புது கலெக்டராவது நமக்கு நல்லது பண்ணுமா?..  இல்ல அந்த டோரிக் கண்ணன் மாதரி  எம் எல் ஏ கூட ஜால்ரா அடிக்குமான்னு  தெரியலையே?.. ஒருவர் புது ஆட்சியரின் மீது நம்பிக்கை இல்லாமல் பேச

“பாப்போம் நம்ம தலையெழுத்த இந்த அம்மாவாச்சும்  மாத்துமானு பாப்போம் என  ஆர்வமும், ஏக்கமுமாக தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தனர்..
……….

அந்த ஊரில்  கட்டப்பஞ்சாயத்து நடத்தி வரும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் சதாசிவம்.. ஊரில் யாரையும் படிக்க விடாமல் தடுத்து தனது தீப்பெட்டி  தயாரிக்கும் ஆலைக்கு வேலைக்கு வைத்திருந்தான்.. நடை பழக தொடங்கும் குழந்தை கூட அவனின் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி ….மீறினால் மரணம்…

இங்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  இவர்களது செல்வாக்குகளேடுதான் ஆட்சி நடத்த முடியும்.. இந்த மாவட்டத்தின் கடை கோடியிலிருக்கும் இந்த சிறு கிராமத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  ஒரு தட் ரேட் கிரிமினல் தான்  இந்த சதாசிவம்   இவர் தங்கை கணவன் வைத்தியநாதன் எம் எல் ஏ.. அவரின் மகன் ரஞ்சித் போலிஸ் கமிஷனர்.. ஆட்சியும், அதிகாரமும் அவர்களிடம் இருப்பதால்   இவர்கள் நடத்திய நடத்தி கொண்டு இருக்கும் குற்றங்கள் ஏராளம்….

இதுவரை இங்கு பணிபுரிய யாரும் துணிந்து வந்ததில்லை… முதன் முதலில் பெண் கலெக்டர் வருகிறார் என தகவல் அறிந்து கொண்டு அந்த கலெக்டரிடம் மனு குடுக்க, அந்த ஊரின் வாத்தியார் குமாரசாமி தலைமையில் மக்கள் வந்துள்ளனர்.. இங்கு வந்த விஷயம் அறிந்தால் அங்கு கிராமத்தில் என்ன நடக்குமோ??????

இங்கு,

வந்த அன்றைக்கே  அந்த கலெக்டர் ஊரை விட்டு ஓடணும்   அவளை அசிங்க படுத்தி அனுப்புங்கடா யார் ஊரை யார் ஆட்சி செய்றது?.. என வைத்தியநாதன் வன்மத்தோடு கூற…. தன் முதலாளி ஆணைக்கு இணங்க ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினர் அவரின் அடியாட்கள்.. அவர்களை தடையில்லாமல் வரவேற்க தகுந்தாற்போல் பாதுகாப்பிற்கு ரஞ்சித் தலைமையில்தான் காவல்துறையும் இருக்கின்றனர்….

அந்த வளாகத்தின் உள்ளே கருப்புக் கலர்  மஹிந்திரா பொலிரோ  சைரன் வைத்த அந்த கார் உள்ளே நுழைய  …. அந்த வளாகத்தின் இருபுறமும் நட பட்டு இருந்த மரங்களை வேடிக்கை பார்த்த வாறே இளம் சந்தனநிற  சேலையில் தேவலோக மங்கை போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள்  பிரியவதனா ஐ ஏ எஸ் …

அந்நேரம் அவளின் கையடக்க தொலைபேசி சிணுங்க அதை உயிர்ப்பித்து காதில் வைத்தது ஒரு மென்கரம் “ஆமா வந்துட்டேன் அங்கிள்..  ஒன்னும் பிரச்சினை இல்லை.. பர்ஸ்ட் டே அதான் கொஞ்சம் நெர்வஸ் ஆ இருக்கு என மறுமுனையில் இருந்த நபருக்கு பதிலுரைக்க,

அந்த நேரத்தில் பத்து பதினைந்து  ரெளடிகள் இவர்களது காரினை நோக்கி  சீறிக்கொண்டு வந்தனர்.. அவர்களை எதிர்கொண்டு  சிம்ம அவதாரமாக அவர்களுக்கு எதிராக வந்து நின்றான் விஷ்ணுவர்தன்…

அக்கா நீ உள்ளே உட்கார் என  கூறிக்கொண்டே அந்த ரெளடிகளை தாக்க தொடங்கினான் ஒவ்வொருவராக வர விஷ்ணு பாய்ந்து பாய்ந்து அடிக்க.. இவனின் ஒவ்வொரு அடிக்கும் எட்டி எட்டி போய் விழ சளைக்காமல்  சண்டை  போட்டான் ..

இவள் அமர்ந்திருந்த காரை நோக்கி ஒருவன் ஒடி வந்து கார் கண்ணாடி யை நொறுக்க… அவள் பயந்து போய் அலறியவள் அடுத்த நொடி தன்னை திடப்படுத்தி காரில் இருந்து இறங்க போக அதற்குள் அவளை மறைத்தார் போல்

அந்த கணம் எல்லை கருப்பசாமி போல் ஆறடி உயர தேக்குமரத்தேகம் கொண்ட ஒரு உருவம்… அடிக்க வந்தவனின்  கழுத்தை பிடித்து அப்படி யே தூக்க… அடிக்க வந்தவனின் கால்கள் பூமிக்கும் வானத்திற்கும்  சம்பந்தமில்லாமல்  துடிக்க…. தூக்கி ஏறிந்ததில்  பதினைந்து அடி தூரம் போய் விழுந்தான்….

அதற்குள்ளாக அந்த உருவம் சற்று தள்ளி நின்றிருந்தால் தன் ஆட்களிடம் கைகாட்ட அவரது  ஆட்கள் அந்த ரெளடிகளை துவம்சம் செய்து ஒட விட்டனர்….

காரின்  அருகே விஷ்ணு வந்து “அக்கா வாங்க உள்ள போகலாம் னு கூட்டிக் கொண்டு போக அங்கு அவளுக்கு மாலை மரியாதை யெல்லாம் அணிவித்து  அறிமுகப்படலம் செய்து கொண்டிருந்தார்  சந்திரன்….

இந்த கலவரத்தில் மனுக்குடுக்க வந்த மக்கள் பயந்துக்கொண்டு ஊருக்கு திரும்பினர்..

……,……..

அந்த பெரிய வீட்டின் உள்ளே   …

“என்ன பேபி இன்னைக்கு பர்ஸ்ட் டே எப்படி போச்சு?.. “

“ஒரே கலவரமாக கலகலப்பாக சுப்பரா போச்சே..” உற்சாகமாக கூறிய வதனாவின் தலையை செல்லமாக ஆட்டிவிட்டு தன் சட்டை பையில் இருந்து ஒரு பரிசு பொருளை எடுத்து, “என் பேபிமாவிற்கு இந்த அங்கிளோட் ன் அன்பு பரிசு என தங்க பேனாவை பரிசளித்தார்  துருவ் கிருஷ்ணா… (அந்த உருவம்)

ஒரு டைமன்  நெக்லஸ் ஐ பரிசளித்தாள் அக்னிதா  துருவ் தங்களின் செல்ல பெண்ணுக்கு பரிசுகள் குவிந்த வண்ணம் இருந்தன.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை

ஆமாம் ப்ரியாவதனா  ,கார்த்திக்  சஞ்சனா 
அவர்களது மகள், தம்பி விஷ்ணுவர்தன்

அஸ்வின் மித்ரா அவர்களது மகள்  அமுதா என குடும்பம் சகிதம் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்…… அங்கு அதை கொண்டாடும் விதமாக நண்பர்களுக்கு பார்ட்டி ஒழுங்கு செய்யப்பட்டது….

பெண்கள் அனைவரும் தங்கள் சொந்த கதை சோகக் கதைகளை பகிர்ந்துக் கொள்ள ஒதுங்க….

பெருசுங்களும் ஆளாளுக்கு மதுக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு நகல….

அந்நேரம் அவளின் மொபைல் சிணுங்கி அவளின் முகத்தினை மலரச் செய்தது . .. வேறு யாருமல்ல அவளது டெடி என அழைக்கப்படும் ருக்கேஷ்வரன் தான்   அக்னி  துருவ் ன் புத்திரன்

துருவ்  அக்னி தம்பதியினருக்கு ருக்கேஷ்வரன் ம் கிஷாந்தினி னு ஒரு மகளும்…..

ஹாய்  “சோடாபுட்டி இன்னைக்கு எப்படி இருந்துச்சு  பர்ஸ்ட் டே…. ஆபிஸ் அந்த ஊர் மக்கள் எல்லாம் எப்படி என் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக. இடையில் மறித்து” டெடி இன்னைக்கு என்னை கொன்னுருப்பாங்கடா பத்து பதினைஞ்சு பேர் வெட்ட வந்துட்டாங்க என்று காலையில் நடந்த புராணத்தை வாசிக்க….

ஹா ஹா ஹா என எதிர்முனையில் யிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்க “”

போடா டெடி நா எவ்வளவு சீரியஸா பேசிட்ருக்கேன் நீ சிரிக்கிற னு மூக்கை உறிஞ்ச 

இரு டியர்” அந்த அளவுக்கு விட்ருவாரா உங்க அங்கில்  சும்மா வே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்  இப்ப விடுவாரா … சரி பாத்து பத்ரம் என இன்னும் சிலதை பேசிவிட்டு துண்டித்தான்…..

இங்கு  …… எப்படி டா இந்த அளவுக்கு தைரியம் வந்துச்சு யாருடா அவங்க…..
ஆஆஆஆஆ என கத்திக் கொண்டே அந்த டீ பாயை தூக்கி சரிக்க அதோடு மதுக்கிண்ணங்களும் கிழே விழுந்து நொறுங்கியது…….

டேய் இத்தனை பேர் வந்து ரெளடித்தனம் பண்ணிருக்காங்க  இதுக்குத்தான் கமிஷனர் னு உன்ன வச்சிருக்கேனா என்று தன்னோட மகனிடம் சீற….

பதிலுக்கு நீங்க சொல்லித்தான் பாதுகாப்புக்கு சும்மா இரண்டு பேர நிப்பாட்டிருந்தேன்…..

நாளைக்கு பாக்குறேன் னு சூளுரைக்க……

……………

இங்கு காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட வேண்டும்… உலக நாடுகளின் மத்தில்  காஷ்மீரில் மக்கள் வாழ முடியாது அமைதி சூழல் நிலவக் கூடாது என தீவிரவாத இயக்கங்கள்   பல திட்டங்கள் நீட்டிக்கொண்டிருக்கும்  நேரம்…..

காஷ்மீர் மலைகளில் பனி பூக்கள் பூக்கும் பகுதி அதில் ரத்தம் சிதற வேண்டும் என நோக்கத்தோடு தீவிரவாதிகள் உள்ளே நுழைய

……..
இந்திய ராணுவ ஹெட் கோர்ட்டர்ஸ் க்கு போன் வந்த வண்ணம் உள்ளன..

ஹலோ…… எஸ் சார்  இதோ நா கனெக்ட் பண்றேன்னு… போன் வந்துக்கொண்டே இருக்க அதை தனது மேலதிகாரி க்கு மாற்றியமைத்துக் கொண்டிருந்தார் ஒரு ஆபிஸ

இங்கு இராணுவத் தலைமையகம்….

இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல போட்டு கிழி கிழின்னு கிழிக்குறாங்க எந்த செய்தி எடுத்தாலும் இந்திய ராணுவம் என்ன செய்கிறது னு….அதுமட்டுமில்லாம பீ எம் ஆபிஸ்ல இருந்து கால் வந்து கேள்வி மேல கேள்வி … னு கர்னல் ஜெயின் வீர் எல்லாரையும் பார்த்து கத்த….

மேஜர் நித்தேஷ் தலைமையில் ஒரு குழு அந்த கிராமத்தை நோக்கி படையெடுக்க

அங்கு மக்களோடு மக்களாக கலந்து அந்த தீவிரவாத கும்பலை சுட்டு வீழ்த்தினர்…

கடைசியில் பிணையக்கைதியாக பிடித்து வைத்திருந்த குழந்தைய மீட்க  சென்ற அந்த இராணுவம் செய்வதன்றி நிற்க

ஒரு உருவம் பின்னால் இருந்து அந்த தீவிரவாதியின் கையில் சுட, தீவிரவாதியின் கையில் இருந்த துப்பாக்கி தூரம் போயி விழுந்தது.. அதில் தடுமாறிய நேரத்தில் அந்த தீவிரவாதியை கமேண்ட்டோ சுற்றி வளைத்து பிடிக்க

நித்தேஷ்” யாருடா அவன் பின்னாடி இருந்து தாக்கியது  என திரும்பி பார்க்க

அங்கு  ஆறடி உயரத்தில் கம்பீரமாக   போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான் .. மேஜர்  ஆதித்யா……

அடச்சீ  கீழ இறங்கு  என்ன பாலாபிஷேகமா பண்ணப்போறாங்க என அவனை நவின்” அர்ச்சனை பண்ண..

அவன் இறங்கி கிழே வந்ததும் இடியட்  எந்த எதிரியையும் முன்னாடி இருந்து தாக்குறவன் தான் வீரன்னு அவனுக்கு கிளாஸ் எடுக்க தொடங்க……

மற்றவர்கள் இன்னைக்கு செத்தான் டா ஆதி புல்லட் பட்ருந்தா கூட லேசா தான் வலிக்கும் இவர் இன்னைக்கு ஆதிய ஜூஸ் போடாம விடமாட்டார் னு நண்பர்கள் கிளம்பினர்….

இராணுவ தளத்தில் இந்த கமாண்டோ படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த  வண்ணம் இருந்தன…..

………….,…….

ஏன் அச்சு நம்ம பொண்ண தாக்க வர அளவுக்கு இந்த ஊர்ல யாரு எதிரி இருக்கா என துருவ் “ஏன் கார்த்தி நீ என்கிட்ட மட்டும் தான் பகை யா இல்ல னு அவனை பார்க்க..

அய்யோ சார்” அதான் போன கதையிலே  நா திருந்திட்டேனே னு கும்பிட….

டேய் அச்சு ”  அந்த ஜே டி க்கு பேசி யார் என்று பாக்க சொல்லு அப்புறம் நம்ம ப்ரியா க்கு பாதுகாப்புக்கு ஆள போடு” என்று உத்தரவு இட்டு கொண்டு இருக்க அவனை தேடி அங்கு வந்த அக்னி ” ஏங்க வாங்க போலாம் நேரம் ஆயிடுச்சுன்னு கூப்பிட

பாத்தியாடா என் ஹனி ய என்ன தேடிவந்துருக்கானு உளற….

“என்ன கிரிஷ்  இதென்ன பழக்கம் என்று தன் கணவனை இழுத்து அவர்களது அறைக்கு சென்றாள்….

“என்ன அங்க வேடிக்க பாத்துக்கிட்டு..” என்று ஒரு அதட்டல் குரல் வரவும் அமைதியாக அஷ்வின் நகர்ந்தான்..அந்த குரல் சாட்சாத் மித்ரா தான்… ஏம்மா  அப்பா கிட்ட கத்துர அப்பா பாவம் என்று அமுதா தந்தைக்கு பரிந்து பேச

இங்கு ஒருத்தி  தலையணையை கண்ணீரினால் நனைத்து கொண்டிருந்தாள்….

தொடரும்.

இதற்கு முன் டீஸர் எப்படியிருந்தது. இந்த அத்தியாயம் எப்படியுள்ளதென்று கருத்து தெரிவியுங்கள் ☺️

7 thoughts on “என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-1”

 1. CRVS2797

  ஓ மை காட்..! முதல் அத்தியாயத்துலேயே இத்தனை கேரக்டர்களா..?
  கொஞ்சம் குழப்புது.

 2. Avatar

  அருமையான ஆரம்பம்!!… நிறைய கதாபாத்திரம் இருக்குறதுனால கொஞ்சம் பெயர், உறவு தெளிவா சொல்லலாம்!!… காட்சிகள் மாறும் போது அதை வேறுபடுத்தி சொன்னிங்கன்னா புரிஞ்சுக்க எளிதா இருக்கும்!!!..

 3. Avatar

  டீசர்..சூப்பர் தான்… கலெக்டர்.. கமிஷனர்…காஷ்மிர் ருக்கேஷ் 😍ஆதி இன்னுமொருத்தன் இருக்கானே அவனையும் போடுங்க.. ஆல் பிரதர்ஸ் ஒரே இடத்துல..🥳🥳🥳🥳..

 4. Avatar

  வேற லெவல்👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼நிறைய கதாபாத்திரங்கள் இருக்காங்க🤩🤩🤩🤩வது தான் நம்ம கலெக்டரம்மாவோட பேரா😍😍😍😍😍அழகான குடும்பத்தோட செல்லப் பொண்ணு….அவளைப் பாதுகாக்க பறந்து வர்றவங்க😊😊😊😊எல்லையில் பாதுகாப்பு வீரனாக நிற்கும் வீரன்….அவனோட சாகசங்கள்….உயரதிகாரியோட செயல்கள்னு நிறைய விஷயங்களைச் சொல்லுது இந்த டீஸர்👏👏👏👏👏👏👏 அடுத்தடுத்த எபிக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *