Skip to content
Home » என் நேச அதிபதியே… அத்தியாயம்-1

என் நேச அதிபதியே… அத்தியாயம்-1

அத்தியாயம்-1

 ஆட்டோவிலிருந்து இறங்கிய நாற்பதை கடந்த பெண்மணி பதட்டத்தோடு "அய்யோ பனிக்குடம் உடைந்து என் மக பிரசவ வலில துடிக்கிறாளே. யாராவது உதவிக்கு வாங்களேன். டாக்டர்... நர்ஸ் பாப்பா" என்று கூவி அழைத்தார்.

ஆட்டோக்காரனோ உதவிக்கு வந்து “பதறாதம்மா அதான் ஹாஸ்பிடல் இட்டாந்துட்டேனே. டாக்டரு இருப்பாங்க” என்று நம்பிக்கையாக பேசினான். பணத்தை கொடுக்க, “பிரசவத்துக்கு இலவசம் அக்கா.” என்று தலையில் இரண்டு விரலை ஒற்றியெடுத்து பணத்தை புறக்கணித்து புறப்பட்டான்.

இனி இந்த மருத்துவமனையில் நின்று ஒத்தாசை செய்ய ஆட்டோக்காரனுக்கு மனிதாபிமானம் இருக்கலாம். ஆனால் பொருளாதாரம் இல்லை நேரமுமில்லை.

அந்த நடுவயோதிக பெண்மணி மகளை அழைத்து, உள்ளே வர மருத்துவனையில் அப்படியொன்றும் பிரசவம் என்றதும் ஓடிவந்திடவில்லை.

வயிற்றை பிடித்து வீல் சேரில் அமரவைத்து, செவிலியர்கள் தான் சிகிச்சையை ஆரம்பித்தனர்.

“ஏம்மா டாக்டர் இல்லையா… பனிக்குடம் உடைந்திடுச்சுனு சொல்லறேன்” என்று பதபதப்பு கொஞ்சமும் குறையாமல் கேட்டார்கள்.

பனிக்குடம் உடைந்த பெண்ணோ வலியில் விட்டு விட்டு அழுவதில் இருந்தார். பேசும் சக்தி சற்று பயத்தில் குறைந்திருந்தது.
அதோடு முதல் பிரசவம் என்பதால் நடுக்கமும் இருந்தது.

‘அம்மா வலிக்குது. தாங்கமுடியலை’ என்ற வலிக்குண்டான வார்த்தைகள் மட்டும் தான் பிள்ளைதாங்கியவளின் உதட்டிலிருந்து மாறிமாறி வந்தது.

 "என்னம்மா டாக்டரிடம் காட்டலையா? நீங்களே பார்க்கறிங்க? பனிக்குடம் உடைஞ்சிடுச்சுனு சொல்லறேன்" என்று நர்ஸே என்ன ஏதென ஆராயவும், சிறு கோபம் துளிர்த்து கேட்டுவிட்டார்.

ரிசப்ஷன் பெண்ணோ ஒரு காதில் போனை வைத்து, “இங்க பாருங்க அம்மா. டாக்டர் பொங்கல் என்பதால ஊருக்கு போயிருக்கார். இப்ப வர்ற கேஸை டியூட்டி டாக்டர் தான் பார்க்கறார். அவரிடம் போன் பண்ணி சொல்லிட்டேன். பேஷண்டை நார்மலா சில செக்கப் பண்ணி ரெடியா தயார்படுத்த சொன்னாங்க வந்துட்டேயிருக்கார். அவசரப்படாதிங்க உங்க பொண்ணு ராசி, டாக்டர் ஆர்யன் வந்துட்டு இருக்கார்.” என்று கூறியவளின் முகம் புது தேஜஸை பிரதிபலித்து.

பிள்ளையுண்டான பெண்மணியை சோதித்து பார்த்த பெண்ணோ இந்த பிபி பிரஸர் பார்த்து வார்டிற்கு அழைத்து செல்லும் நேரம், “பொங்கலுக்கு லீவு கூட போடமுடியலைனு பீல் பண்ணிட்டு இருந்திங்க. இப்ப டாக்டர் ஆர்யன் வர்றார் என்றதும் முகமெல்லாம் பல்லு.” என்று ரிசப்ஷன் பெண்ணையும் அங்கிருந்தவர்களையும் கேலி செய்தவாறு பேஷண்டை அறைக்கு கொண்டு செல்ல, பிரசவ வார்டிற்கு செல்லும் நேரம் இப்படி பேசி செல்பவரை கண்டு, அந்த நடுத்தர பெண்மணி முனங்கியபடி, தன் மகளை கொண்டு செல்லவும் பின்னாடியே சென்றார்.

கூடுதலாக கைப்பையில் இருந்த சிறு போனை எடுத்து “என்னங்க நம்ம பொண்ணை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. எப்பவும் வர்ற ஹாஸ்பிடல் தான். கொஞ்சம் சீக்கிரம் வாங்க. பனிக்குடம் உடைஞ்சிடுச்சு. புள்ளை துடிக்கிறா. லேபர் வார்டுக்கு கூட்டிட்டு போறாங்க.” என்னும் போது அதோடு அந்த அம்மாளை வரவேண்டாமென்று செவிலி தடுத்துவிட்டார்.

“வார்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போயிட்டாங்க. டாக்டரை காணோம். எப்பவும் பார்க்கற டாக்டரம்மா ஊருக்கு போயிட்டாங்க” என்று மூக்குறிந்தார். போன் துண்டிக்கப்பட்டதும் வார்டு பக்கமும் அதற்கு மேலே தொங்கிய வினாயகர் புகைப்படத்தை கண்டு மகளுக்காக மனதில் இறைவனை துதித்தார்.

இரண்டு செவிலியர்கள் லேபர்வார்டிற்குள் இருந்தார்கள்.

“டாக்டர் எப்ப வருவாங்க? பனிக்குடம் உடைந்துடுச்சே ஆப்ரேஷன் பண்ணப்போறிங்களா?” என்று கண்ணீர் ஒருபக்கம் கவலை மறுப்பக்கமென்று அந்த கர்ப்பவதி பெண் கேட்க, ”டியூட்டி டாக்டர் வந்துட்டு இருக்கார். அவர் வந்து பார்த்து சொன்னா தான் தெரியும். நீங்க கவலைப்படாதிங்க அவர் கைராசிக்காரர்” என்று புகழ்ந்தார்கள்.

“லேடி டாக்டர் இல்லையா?” என்று இதுவரை பெண் மருத்துவரிடம் மட்டும் தன் செக்கப்பை முடித்த கருசுமப்பவளோ கூடுதல் பயத்தில் கேட்டாள்.

“டியூட்டி டாக்டர்ல லேடிடாக்டர் இல்லைங்க. எல்லாரும் பொங்கல் முன்னிட்டு லீவுக்கு முன்னாடியே கிளம்பிட்டாங்க. இவர் தான் இப்ப இந்த லீவுல வர்ற பேஷண்டை எல்லாம் பார்க்கறார்.” என்று கூறினாள் செவிலி.

ஆண் மருத்துவர் வந்து தன் பிரசவத்தை காண வருவதே லேசான மயக்கத்தை தந்தது. இதில் பனிக்குடம் உடைந்திருக்க, அயர்ச்சியடைந்தார் பிள்ளைசுமப்பவள்.

 பெண்கள் தன்னை கண்டால் அவன் அலைப்பாயும் கேசத்தை போல, அவர்கள் இதயமும் அலைபாயும் என்றறியாதவன், ராஜநடையோடு, கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து லேபர் வார்டிற்குள் நுழைந்தான்.

"டாக்டர் ஆர்யன் வந்துட்டார்" என்று அவ்வறை அமைதியாக, "பேஷண்ட் டீடெய்ல் என்ன?" என்று ஸ்டெதஸ்கோப்பை ஓரமாய் வைத்து தன் மீது லேபர் வார்டில் அணியும் ஆப்ரேஷன் உடையை போர்த்தி கட்டிக் கொண்டிருந்தான்.

இரு செவிலியில் ஒருத்தி முந்திக்கொண்டு "வீட்லயே பனிக்குடம் உடைந்திடுச்சாம் டாக்டர். ஆல்ரெடி ரெகுலர் செக்கப் நம்ம டாக்டரிடம் தான் வருவாங்க. இந்த லேடிக்கு இப்ப டேட் இல்லை. டாக்டர் இரண்டு வாரம் கழித்து தான் டெலிவெரி டேட் கொடுத்திருந்தாங்க. அதுக்குள்ள இப்படி எமர்ஜென்சி கேஸா வந்துட்டாங்க" என்று பேஷண்ட் வரலாற்றை ரத்தின சுருக்கமாய் உரைத்தாள்.

“மனிதர்களோடு பிறப்பும் இறப்பும் யாரும் சொல்லி வச்சி முடிவாகறதுயில்லை ஸ்டெல்லா சிஸ்டர். அது ஆண்டவன் முடிவுபண்ணறது.” என்று தத்துவம் பேசியவன் கர்ப்பிணி பெண்ணவளை சிகிச்சை முறையில் ஆராயவும் செய்தான் ஆர்யன்.

இன்ஞெக்ஷன் போட நெருக்கமாய் வரவும், இமையை மெதுவாய் திறந்த கர்ப்பவதியோ, பயந்து போக, “ஒரு கவலையும் இல்லைங்க. பேனிக் ஆகாதிங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ் ரிலாக்ஸ். உங்க பையனையோ பொண்ணையோ வரவேற்க உற்சாகமா இருக்கணும். எதுக்கு பயப்படறிங்க. பஸ்ட் பிரகனன்ஸியா” என்று கேட்க ஆமென்று தலையாட்டினாள் கர்ப்பவதி.

அதான் திணறுறிங்க.” என்று ஊசியை செலுத்த முனுக்கென்று முகம் சுருங்கினாள்.

“லேசான நடுக்கமும் பயமும் ஒரு முன்பின் தெரியாத ஆண் தன் அந்தரங்க பாகத்தில் ஆராயவும் பதட்டமானாள்.

ஆர்யனோ “குழந்தை இப்பவோ அப்பவோ வெளிவந்திடலாம். நீங்க பயந்து குழந்தையையும் பயப்பட வைக்கறிங்க. கொஞ்சம் நிதானமா மூச்சு இழுத்து விடுங்க.” என்று வயிற்றில் கைவைத்து அங்கும் இங்கும் அழுத்தம் கொடுத்து பார்த்தான்.

கர்ப்பவதி மேலும் பயந்து பின்வாங்க, “என்னை ஒரு ஆம்பளையா பார்க்காதிங்க. டாக்டரா மட்டும் பாருங்க. பயம் வராது. பிரசவம் என்பது மறுபிறப்பு. இந்த நேரத்துல எதிர்ல இருக்கற என்னை நினைச்சி உங்களோட குழந்தை வரவை தடைப்பண்ணாதிங்க. நீங்க சாந்தமா எனக்கு கோஆப்ரேட் செய்து காலை அகட்டி புஸ் பண்ணினா குழந்தை தானா வந்துடும்.
ஏற்கனவே குழந்தை இருக்கற கர்ப்பபையில தண்ணீர் முக்கால்வாசி இல்லை. இருக்கற கால் வாசி தண்ணியும் வெளிவந்துட்டா ஆப்ரேஷன் தான் முடிவு. உங்களுக்கும் தான் கஷ்டம். பல்லைக்கடிச்சிட்டு பத்து நிமிஷம் நான் சொன்ன மாதிரி ரிலாக்ஸா இருந்து புஸ் பண்ணினா குழத்தைக்கு நல்லது. உங்களுக்கும் நல்லது.” என்று கூறவும் வலி வந்து வந்து உயிரை வாட்டியது.

கண்ணீரும் கதறலும் கூடுதலாக, “உங்ககணவரை இங்க வரச் சொல்லவா? உங்களுக்கு பலமா இருக்கும்” என்று கேட்டான் ஆர்யன்.

சட்டென மறுப்பாய் தலையசைத்து பல்லை கடித்தாள்.

“சரி சரி” என்று சின்னதாய் இருந்த மருத்துவ உபகரணம் கொண்டு குழந்தை வெளிவரும் பாதையில் சிறிதளவு கத்தரித்தான்.

 கர்ப்பவதியின் அலறலில், "அக்கா.. கொஞ்சம் புஸ் பண்ணுங்க வித் இன் ப்யூ மினிட்ஸ் உங்க குழந்தை வெளிவந்துடுவான்" என்று ஆதரமாய் பேச, ஏனோ இம்முறை மருத்துவன், ஆடவன், என்ற அன்னிய மாயங்கள் உடைந்தது.

அதோடு மருத்துவ ஊசியும் தன் வேலையை காட்ட, கர்ப்பவதிக்கு குழந்தை வெளிவரும் பாதை இலகுவாக ரத்தமும் சதையும் கலந்த ஆண் குழந்தை பிறந்தது.

சிறு குழந்தையின் வீறிட்ட அலறல் கர்ப்பவதியின் இதுவரை இருந்த வலியை மட்டுப்படுத்தியது.

“அவ்ளோ தான் அக்கா. இதுக்கு போய்..” என்று மாஸ்கை அகற்றி முறுவலிக்க பிரசவ பெண்ணவளோ தன் அசதியை புறம் தள்ளி கண்ணீரால் நன்றியுரைத்தாள்.

“சிஸ்டர் நீங்க பார்த்துக்கோங்க.” என்றவன் பிறந்த குழந்தையை எடுத்து பிரசவித்தவளின் முகம் அருகே கொண்டு சென்றான்.

“பையன் பிறந்திருக்கான். சேட்டைக்காரன் போல. அம்மா வயித்துல பனிக்குடத்தையே உதைத்து குயிக்கா உலகத்தை பார்க்க இரண்டு வாரத்துக்கு முன்னயே வந்துட்டார்.” என்று காட்டவும், ஆர்யன் அறைக்குள் நுழைந்த கணம் இருந்த வெட்கம், ஆண்மகன் என்ற பயம், தன் அந்தரத்தை ஒரு ஆண் காண நேருமே என்ற படபடப்பு தற்போது மாயமாய் களைந்திட புன்னகைத்தாள்.

நர்ஸ் இருவரும் குழந்தையை குளிப்பாட்ட பெண்ணவளை சுத்தப்படுத்த என்று பணியை கவனிக்க தலையசைத்து “தேவைப்பட்டா கூப்பிடுங்க சிஸ்டர்” என்று செவிலியர்களின் இதயத்தை உடைத்து சென்றான்.

அழகான டாக்டர் ‘சிஸ்டர் சிஸ்டர்’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை இவர்களை கூறினால் இதயம் உடைந்திடாதா?

உறவுமுறையை ஓட்டினார் போல தான் பணிக்கு பெயர் வைக்க வேண்டுமா? என்று ஆர்யனை காணும் நர்ஸில் இளம் பெண்களுக்கு தோன்றாமல் இருக்காது. அத்தகைய அழகனவன் தோற்றத்தை விட பழகுவதில் சட்டென ஈர்த்திடுவான்.

படிப்பும் சர்விஸும் என்று இத்தனை நாள் இங்கே இருந்தவன், இந்த பொங்கல் விடுமுறை முடியவும் தன் சொந்த ஊருக்கு மொத்தமாய் செல்லும் முடிவில் இருந்தான்.

வரும்பொழுது எடுத்துவந்த ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாற்றியபடி படியில் தடதடவென வேகத்தோடு மின்னலாய் புறப்பட்டு தனக்கான அறைக்குள் சென்று சாய்விருக்கையில் அமர்ந்து ‘Amma’ என்று பதிவு செய்த எண்ணிற்கு அழைத்தான்.

சில நொடியில் மறுபக்கம் தொடர்ப்பை ஏற்றதும், “ஆர்யன் நீ பொங்கலுக்கு ஊருக்கு வரலையா? ஒருவார்த்தை சொல்லறதுக்கு என்னடா? இங்க நானும் உன் தங்கச்சியும் நீ போகி பண்டிகைக்கு வந்துடுவனு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.” என்று பொறுமினார்.

“அம்மா… நான் ஆல்ரெடி ஐயாவிடம் இந்த முறை பொங்கலுக்கு வரமுடியாதுனு சொல்லிட்டேனே. ஏன் ஐயாவுக்கும் உங்களுக்கு சண்டையா?” என்று சரியாக யூகித்து ஆர்யன் கேட்டுவிட்டான்.

 ஆர்யனின் யூகிப்பு சரியென்று அன்னை ஆதிராவின் மௌவுனம் உரைத்தது.

“ஐயாவை வம்பிழுக்கலைனா உங்களுக்கு உறக்கம் வராதா?” என்று கேட்டதும் அன்னை ஆதிராவோ “அதெல்லாம் சண்டையில்லை. அவர் மறந்திருப்பார்.” என்று மறுத்திட முயன்றார்.

“கதைவிடாதிங்க. ஐயா ஒன்னும் விடாம உங்களிடம் ஒப்பிப்பார். நீங்க சண்டை போட்டா தான் கோபத்துல வாய் திறக்காம சுத்துவார். என்ன சண்டை போட்டிங்கன்னு சொன்னா மூச்சு விடமாட்டிங்க.” என்று பெற்றோரை அறிந்தவனாக பேசினான்.
ஆதிரா முகம் மலர்ந்து “சரி எப்ப வர்ற?” என்று கேட்டார்.

“இங்க பொங்கலுக்கு லீவு வேண்டும்னு நிறைய டாக்டர் போயிட்டாங்க. நான் தான் நம்மூருக்கு நிரந்தரமா வந்துடப்போறேனே. அதான் நானே இந்த பொங்கலுக்கு இங்க இருந்து” என்றதும், “மத்தவங்களுக்கு லீவை என்ஜாய் பண்ணட்டும்னு அனுப்பிட்ட?” என்று ஆதிரா கேட்டதும் “அதே தான், அவ்ளோ தான் அம்மா” என்று சாதாரணமாய் கூறினான்.

“அவ்ளோ தானா? இருக்கட்டும் இங்க உன் தங்கை துளிர் மூஞ்சியை தூக்கி உற்றுனு வச்சிட்டு சுத்தறா. இங்க வந்து அவளை சமாளி. நீ பொங்கலுக்கே வந்துடுவனு அவளிடம் பிராமிஸ் பண்ணினியாம்.” என்றார்.

அதன்பின்னே தனது தங்கைக்கு கொடுத்த வாக்கை மறந்தவனாக “அம்மா பக்கத்துல துளிர் இருக்காளா?” என்று தவிப்பாய் கேட்டான் ஆர்யன்.

“இருக்கா… ஆனா உன்னிடம் பேச மாட்டானு போன் போடறப்பவே சொல்லிட்டா.” என்றதும் ஆர்யன் நெற்றியை கீறியபடி இருக்க, “சரி ஐயாவிடம் கொடுங்க” என்றுரைத்தான்.

“உங்க ஐயாவுக்கு நீ தனியா அவர் போன்ல போடு. சும்மா என்னிடம் ஒரு வார்த்தை கேட்காம அவரா முடிவெடுத்தா இதான் தண்டனை. அதையும் சொல்லிடு.” என்று ஆதிரா முனங்க, “டீச்சரம்மா தண்டிக்கறது தப்பு. மன்னிக்கறது மாண்பு.” என்ற தந்தை நிபுணன் குரல் கேட்டதும் ஆர்யன் மறுபுறம் உதடு விரிய சிரித்தான்.

“மிஸ்டர் நிபுணன் உங்களை மன்னிச்சு விடறேன். முதல்ல நான் எடுத்த முடிவுக்கு பதில் சொல்லுங்க அப்பறம் இருக்கு.” என்றவள் மகனிடம் “ஆர்யன் பொங்கல் முடியவும் வந்துடுவ தானே?” என்று ஆர்வமாய் கேட்க “கண்டிப்பா அம்மா மாதவன் தாத்தா தங்கம் ஆச்சி பெட்டி படுக்கை எல்லாம் கட்டியாச்சு. விடுமுறை முடியவும் தூத்துகுடி பிளைட் ஏறி உங்க கண் முன்ன நிற்பான் இந்த ஆர்யன்.” என்று கூறவும் “இந்த ஹீரோ டயலாக் எல்லாம் இங்க வந்து பேசச்சொல்லும்மா அவனை.” என்று துளிர் குரல் கேட்டதும் தன் தங்கை குரல் கேட்ட திருப்தியில் போனை அணைத்தான்.

மருத்துவ படிப்பு முடித்து இங்கே பகுதி நேர டாக்டராக, டியூட்டி டாக்டராக பெயர் பெற்று வலம் வந்துவிட்டதால் இனி சொந்த ஊரில் சொந்த மண்ணில் மொத்தமாய் காலடியெடுத்து வைத்திடும் பேராவலோடு போனிலிருந்த தன் குடும்ப உறுப்பினர்களை பார்த்தான்.

தங்கை துளிர் மட்டும் புகைப்படத்திலும் உற்றென்று நின்றிருந்தாள். புகைப்படம் எடுக்கும் நேரம் குட்டிக்கத்திரிக்கா என்று விளித்திட நொடியில் அப்பட்டமாய் காட்டிய சினம் அதிலிருந்தது.

ஆர்யன் மருத்துவனாக இங்கே தாய் வழி தாத்தா-ஆச்சி வீட்டில் தங்கி படித்தவன். தாத்தா மாதவன் படிப்பில் எந்த குறையுமின்றி வசதி செய்து தந்தாரெனில், பாட்டி தங்கமோ வயிற்றுக்கு வஞ்சனையின்றி பார்த்துக்கொண்டார். அதனால் தான் என்னவோ தாய் ஆதிரா, தந்தை நிபுணன், தம்பி சர்வேஷ், தன் அன்பு தங்கை துளிர் என்று பிரிந்து வந்தாலும் இங்கே தாக்கு பிடிக்க இயன்றது.

இனி திருநெல்வேலி சொந்த மண்ணில் தான் மருத்துவ சேவையும் தன் வாழ்வும் என முடிவுக்கொண்டான்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

52 thoughts on “என் நேச அதிபதியே… அத்தியாயம்-1”

 1. Avatar

  Wow….enga chellakutty nibu oda paiyan Aryan ah idhu surprise ah irukku ka….new story nyabagathulae padichen aprm neenga title sonnadhae nyabagam vandhudhu….. super ka…ini Aryan ah parkura saakula nibu va sight adichitu irupen😂😂….. super super ka…. waiting for next ud…..

 2. Avatar

  Teacher amma innum punishment ah vidaliya innum fight um oru pakkam nadakuthu love life oda aari ne sister nu solli andha nurse oda manasu ah odachitiyam doctor sir nalla than pesuriga

 3. Avatar

  Wowwww…. Aryan doctor ah…… Vera level…. Inum teacheramma sanda punishment la vidaliya…. Vayasanalum nibu voda gethuuu korayave matenguthu…. Hmmm…. 😍😍😍😍😍seriously sis na ipola endha novel kum padikra interest la comment podama poiruva…. But idhu inoru part varadha nu yengi padichitruka…. Definitely inime endha writer oda work padichalum kandipa comment panuva… Romba eagerahhh wait pana… Aryan pakradhukaga… Analum nibu voda mass Aryan ku varadhu🤩🤩🤩🤩…. Seekrama pratilipi vanga sis…. Indha tym eager ah wait panitruka… 👍👍👍👍🙏🙏🙏✨✨✨✨✨have a great year✨✨💐💐💥💥💥🌹🌹

 4. Avatar

  Wow….superb. sis…👏👏👏
  ஆதிரா பசங்க ஆர்யன், சர்வேஷ், துளிர் superb போங்க…👌😜
  Sis..starting படிக்கும் போது என்னடா நமக்கு நடந்த மாதிரியே 🤔🤔🤔இருக்கேன்னு பாத்தேன்…ஆனா வேற மாதிரி போய்டுச்சு…🙆‍♀️😄😄😄
  Nice moving sis….❤️❤️❤️💐💐💐🥰

 5. Avatar

  ஆஹா, ஆரம்பமே அட்டகாசம். நிபு, ஆதிராவே இன்னும் மனசை விட்டு நீங்கலை…அதற்குள் அடுத்த தலைமுறை செம்ம தோழி.

  பிரசவ அறையில் ஆண்மகனாக பார்க்காமல் டாக்டராக பாருங்க என்று சொன்ன ஆர்யன் வேற லெவல்.

  அதே கெத்து காண்பிக்கும் ஆதிரா மற்றும் நிபு சூப்பருங்க.

 6. Avatar

  அருமை அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ஆதி நிபு உங்கள திரும்ப பாக்க அவ்வளவு சந்தோஷம் எனக்கு ❤️❤️❤️❤️❤️❤️
  ஆர்யன் ஹீரோ எண்ட்ரி 🫂🫂🫂 எல்லா பெண்களுக்கும் முதல் பிரசவத்துல இருக்குற பயம் அத அவன் இழகுவா கையாண்டதுன்னு எல்லாம் சிறப்பு 🥰❤️

 7. Avatar

  ஆதிரா நிபுணன் ஃபேமிலி படிக்க கசக்குமா என்ன? கரும்பு தின்ன கூலியா எங்க போஸ்ட் செய்தாலும் ஆஜர் ஆகிடுவோம் இல்லை

 8. Avatar

  சூப்பர். … செல்லக்குட்டி நிபு பசங்க கதை செம…. ஆரம்பமே பிரசவம் சூப்பர் ஆர்யன்….

 9. Avatar

  ஆர்யன் டாக்டர் ஆகிட்டான்🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️வந்ததும் ஒரு நல்ல ஆண் மகனாக முதல் பிரவத்துக்காக வந்த பெண்ணையும் சமாளிச்சி ஒரு உயிரை உலகத்துக்குக் கொண்டு வந்துட்டான்😍😍😍😍😍😍ஆராவைப் போல உயிரைக் காப்பாத்திட்டாரு டாக்டர். ஆர்யன்🤩🤩🤩🤩🤩🤩ஐயாவைப் போலவும் இருப்பானா😉😉😉😉😉தங்கச்சி மேல அவ்வளவு பாசம்😊😊😊😊

  ஆரா நிபு இப்பவும் அதே சண்டைக் கோழிங்களாகவே இருந்தாலும் விட்டுக் கொடுக்காம இருந்து ரசிக்க வைக்குறாங்களே🥰🥰🥰🥰🥰🥰

 10. CRVS2797

  வாவ்…! அப்படியே நிபுணனை டிட்டோவா பார்த்த மாதிரி இருக்குது. அப்பன் எட்டடின்னா…
  புள்ளை பதினாறடியாவது பாயணுமில்லை….பாயுவானா..?
  இவனுக்கேத்த உலகழகி இங்கே
  இருக்காளா…? இல்லை தூத்துக்குடியிலயா…???

 11. Avatar

  Wow super super semma sis enga padikka mudiyathonu feel pannan semma Happy 😍😍😍😍😍😍😍Doctor aryan sister nu kopdu ennum enthana ponnuga manasa udaikka porano 😘😘

 12. Avatar
  கௌசல்யா முத்துவேல்

  வாவ்!!.. வாவ்!!.. டாக்டர் சார் அசத்துறாரே!!… மிஸ்டர். நிபுணன், டீச்சரம்மா கேட்டு எத்தனை நாள் ஆச்சு!!.. இப்ப திரும்ப கேட்டதுல செம ஹாப்பி கா😍😍

 13. Avatar

  அருமையான கதை ஆரம்பம் அக்கா….👌👌👌👌👌…. நிபுணன் – ஆதிரா குடும்பத்தை மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி ஆக உள்ளது அக்கா….☺️☺️☺️☺️☺️…. ஆர்யன் அவனோட அறிமுகம் அருமை அக்கா….👌👌👌👌

 14. Avatar

  Super super super super super super super super semma semma semma semma semma semma semma……….. kaadhal kalvettil story padichutudhan indha story padikkanumnu wait panni padichen sister really very very happy 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 first episode semma mass padikkurappavae Aaryan manasula padhinjutan👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌All the best ❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *