Skip to content
Home » என் நேச அதிபதியே -10

என் நேச அதிபதியே -10

அத்தியாயம்-10

   ஆர்யன் விட்டால் போதுமென்ற நோக்கில் வாகனத்தை இயக்க அன்னையின் முனங்கல் கேட்டு வண்டியை அணைத்துவிட்டு இறங்கினான்.

   “என்னாச்சும்மா?” என்று வாய் திறக்கும் நேரம் சிற்பிகா குரல் கொடுத்து வந்துவிட்டாள்.

   “அம்மா” என்று ஆர்யன் மண்டியிட்டதும் அவள் அப்படியே எட்டி நின்றுக்கொண்டாள்.

  “முள்ளு குத்திடுச்சு ஆர்யன்” என்று தள்ளாடியவர் மகனின் மண்டியிட்டுயிருக்க தோளில் கையூன்றவும், பாதத்தை தாங்கி மடியில் வைத்து செருப்பிலிருந்து முள்ளை எடுத்தான்.
 
   “ஆச்சியை தூக்கிட்டு போறப்ப வேலி சின்னதா இருக்குன்னு எடுத்தாங்க. அந்த முள்வேலியிலயிருந்து இங்க வந்துடுச்சு போல அம்மா” என்று கூறவும், “பரவாயில்லைமா நான் தான் இருட்டுல பார்க்கலை” என்று ஆதிரா உரைக்க ஆர்யனோ “அம்மா நடக்க முடியுமா? நம்ம வீட்டுக்கு வேண்ணா போகலாமா?” என்று கேட்டதும் ஆதிரா மைந்தனின் நேக்கு புரிய கண்டிக்கும் பார்வை பார்க்க, “நீ வீட்டை பார்த்து போ” என்று அனுப்பினார்.

   இரண்டெட்டு எடுத்ததும் கால் ஊன்றியதும் வலியெடுக்க, “ஆஹ்’ முள்ளு எடுத்தும் வலிக்குது” என்று ஆதிரா முனங்க, ஆர்யனுக்கு அன்னையை அப்படியே விட மனமில்லை. அதனால் அன்னை ஆதிராவை தூக்கிக்கொண்டான்.

    “டேய் வீட்ல திட்டியதுக்கு கீழே போட்டுடாத” என்று விளையாட்டாக பேச ஆர்யனோ, “அம்மா” என்று லேசாய் சிரித்து, சிற்பிகா வீட்டுக்குள் தலை குனிந்து அன்னையை தூக்கியே வந்தான்.
  
   பேச்சு சுவாரசியத்தில் தலைவாசலில் இடித்துக் கொள்வானோ என “கொஞ்சம் குனிஞ்சு” என்றவள் அவனாக குனிந்து வரவும் வாயை மூடிக்கொண்டாள்.

    அவள் பேசவும் அவளை தீப்பார்வை பார்த்தவனிடம், “அன்னைக்கு தலைவாசல்ல இடிச்சிட்டுக்கிட்டிங்க” என்றதும் ஆர்யனோ அங்கொருத்தி பேசுவதை காட்சி பிழையாக கருதி அன்னையை அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தான்.

    வெளிச்சத்தில் அன்னை பாதத்தை மீண்டும் மடியில் தாங்கி ஆராய, பாதி முள் உடைந்திருந்து.

   “அம்மா முள்ளு உடைந்திருக்கு” என்றவன் “சேப்டி பின் கொடும்மா” என்று வாங்கி காலை நன்றாக பிடித்து அழுத்தி, மருத்துவ உபகரணத்தை போல சேப்டி பின்னை வைத்தே முள்ளை பதமாக நீக்க முயன்றான்.

   ஆதிராவோ ‘அச்சோ வலிக்குது ஆர்யா” என்று கத்த, “டூ செகண்ட்ம்மா என்னை பிடிச்சிக்கோங்க” என்ற கணம் சிற்பிகா ஆதிராவுக்கு கையை கொடுக்க, அவளை முறைத்தபடி அன்னைக்கு முள்ளை எடுக்க உதவினான்.

   இரண்டு நிமிடத்தில் முள்ளை நீக்கியவன் அதனை போட குப்பைத்தொட்டியை தேட வீட்டை அலசினான்.

     ஒரு ஹால், கிச்சன், கிச்சன் பக்கம் கொஞ்சம் பால்கனி, ஹாலை ஒட்டிய அறையில் அட்டாச் பாத்ரூம் கொண்ட படுக்கையறை.
 
   வீட்டில் பெரும்பாலும் சிற்பிகா கைவண்ணத்தில் உருவான பொருட்களே அலங்கார பொருட்களாக ஷெல்பில் இருந்தது. அது ஓரளவு மனம் கவரும் விதங்களில் வடிவமைத்திருந்தாள்.

   “நான் குப்பைத்தொட்டில போட்டுக்கறேன்.” என்ற சிற்பிகா குரலில், இவள் வீட்டை அதிகப்படியாக அளவிட்டது உணர்ந்து அவள் கையில் தன் கைகள் படாமல், உரசாமல் கொடுத்தான்.

  அவளோ ஒரு பேப்பரில் மடித்து முள்ளை குப்பைத்தொட்டியில் போடவும், அவளை மெச்சியபடி மனதில் பாராட்டினான்.

   அடுத்த நிமிடம் சிற்பிகா ‘நீ இன்னும் போகலையா?’ என்ற ரீதியில் முகம் தூக்க, “அம்மா உங்க உடம்பை பார்த்துக்கோங்க. நான் வீட்டுக்கு போய் கால் பண்ணறேன்” என்று கூறவும், “அச்சோ போன் அங்கயே பேசிட்டு வச்சிட்டேன்டா.” என்றதும் ஆர்யனோ முறைத்தான்.

    “நாம பேசிய டாபிக் சூடாயிருந்ததா. மறந்துப்போய் வச்சிட்டேன் தூங்க தானே போறேன். நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்து எடுத்துக்கப்போறேன். ஏதாவது அவசரம்னா சிற்பிகா நம்பர்ல கால் பண்ணு. உன்கிட்ட அவ நம்பர் இல்லையா? நோட் பண்ணிக்கோ” என்றதும் ஆர்யன் “தேவையில்லைம்மா ஒரு நாள்ல எந்த அவசரமோ வந்துடாது” என்று புறப்பட்டான். அவன் சிற்பிகா நம்பரை வாங்க மறுப்பது புரியதவளா ஆதிரா.
  
   சிற்பிகா அதுவரை வாய் திறக்காது அம்மா மகன் உரையாடலில் மூக்கை நுழைக்கவில்லல.

ஆர்யன் அன்னையிடம் விடைப்பெற்று வாசலுக்கு செல்ல, வாசலில் “பாப்பா பாப்பா பந்தல் போட்டதுக்கு காசு” என்ற குரல், சிற்பிகாவோ “காலையில வாங்கிக்கோங்கன்னு சொன்னா அப்பறம் வந்து வாங்கிக்கறேன்னு சொன்னாங்க. வர்ற நேரம் பாருங்கம்மா. இருங்க நான் பணத்தை கொடுத்துட்டு வர்றேன்” என்று சிற்பிகா ஆதிராவை விட்டு சென்றாள்.

   “நீங்க என்ன தம்பி இங்க? அந்த பொண்ணு கூட தனியாவா இருக்கிங்க” என்று பந்தல்காரனோடு கூடவந்த ஒருவன் விகற்பமாக கேட்டான்.

   பந்தல்காரனோ தனியாக இருக்கும் பெண் சிற்பிகாவோடு ஒரு எட்டு பார்க்க வந்தவன் என்றாலும் இப்படி நிபுணன் ஐயா பையன் ஆர்யனிடம் பேச தயங்கி நிற்க, மது அருந்தி  தள்ளாட்டத்திலிருந்த மற்றொரு குடிமகனோ இப்படி பேசவும் பந்தல்காரன் “மன்னிச்சிடு தம்பி குடிச்சிருக்கான் ஏதாவது உளறுறான்.” என்று கூறவும் ஆர்யன் இப்படியொரு குடிக்காரன் இருக்க பைக்கை எடுத்து செல்லாமல் அதில் சாய்ந்தான்.

   குடிகாரனாக இருந்தாலும் கேட்ட வினா அபத்தமாய் சென்று மற்றவரிடம் சேர்ந்திடக்கூடாதென்று அவசரமாய் “எங்க அம்மாவை விட வந்தேன். உள்ள தான் இருக்காங்க கூப்பிடணுமா?” என்று கேட்டான்.

  “அய்யோ தம்பி இருக்கட்டும். அம்மா வந்தா குடிச்சதுக்கும் இவனை கூட்டிட்டு வந்ததுக்கும் ஐயாவிடம் போட்டு கொடுத்துடுவாங்க.” என்று பம்மினான்.

  சிற்பிகாவோ பணத்தை எடுத்து வெளியே வரும் நேரம் ஆர்யன் இன்னும் செல்லாமல் இவர்களிடம் பேசுவதை கண்டு, “பேசுன காசை விட ஐநூறு ரூபாய் அதிகமா தான் கொடுத்திருக்கேன் அண்ணா. குடிச்சிட்டு வேஸ்ட் பண்ணாதிங்க. உங்க தங்கச்சி ஏதோ புக்ஸ் கேட்டுச்சு வாங்கி தாங்க” என்று நீட்டினாள்.

   பணத்தை வாங்கியவனோ “நல்லதும்மா” என்று நகர்ந்தான்.
  
   ஆர்யனும் சிற்பிகாவும் தனியாக நின்றார்கள்.

   ஆர்யனோ குடிக்காரன் இருக்க கூடுதலாக நின்றேன் என்பது போல விளக்கம் கொடுக்காமல் அவர்களை பார்த்து தவிப்பாய் தன்னை தவறாக நினைக்க விடாது விழியாலே குடிகாரர்களை தான் பார்த்து அவளை பார்த்து வண்டியில் ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்தான்.

   சிற்பிகாவோ நானும் தவறாக எண்ணவில்லை என்ற பார்வையோடு நின்றாள்.
 
   ஆர்யனோ வண்டியை கிளம்பி சற்று நகர, சிற்பிகா வீட்டுக்குள் சென்று கதவை அடைத்தாள்.

   ஜன்னல் கதவை அடைக்க முயலும் போது ஆர்யன் இன்னமும் தங்கள் தெருவை தாண்டாமல் இருக்க, அவனையே கவனித்தாள். அவனோ அந்த குடிகாரனும், பந்தல்காரனும் கண் மறையும் வரை இருந்து பார்த்துவிட்டு சிற்பிகா வீட்டை கவனிக்க, ஜன்னல் வழியாக தன்னை காணும் சிற்பிகாவை எண்ணி நெற்றி சுருங்கியது.

    பின்னங்கழுத்தை கோதியவாறு வண்டியை மீண்டும் இருசக்கரவாகனத்தை இயக்க நிலையில் உதைக்க, சிற்பிகாவோ எட்டி பார்த்து ஜன்னலை அடைத்து தன் மீதி பணியை தொடர்ந்தாள்.

    “இப்ப பரவாயில்லைங்களா அம்மா?” என்று ஆதிராவிடம் கேட்க, “பரவாயில்லைடா” என்று பையிலிருந்த பொட்டுகடலை சிற்றுண்டியை எடுத்து கொடு, அது சற்று ஈரபதமாக மாறியிருந்தது.

  “அச்சோ லேசா பச்சை வெங்காயத்தால ஈரமாகி பொரி நமத்துடுச்சு. சட்டுனு வரப்போறோம்னு ஈவினிங் எல்லாத்தையும் ஒன்னா கலந்துட்டேன். ஆர்யனோட வாக்குவாதம் பண்ணவும் லேசா இருட்டிட்டு லேட்டாகிடுச்சு. நீ அதை தூரப்போட்டுட்டு தோசை ஊத்தி சாப்பிடு” என்றதும் தனக்காக கொண்டுவந்ததை வேஸ்டாக்காமல் உண்டாள். அப்படியே தோசை வார்த்து ஆதிராவுக்கும் நீட்டினாள்.

     காலையிலிருந்து அழுது ஓய்ந்து மற்றவர்கள் தேற்றி ஓரளவு தேறியிருந்தாள். அப்படியில்லைறென்றாலும் தனக்காக மற்றவர்கள் பாவம் பார்க்க அதனை தவிர்க்கவே தேறியவளாக நடித்துக்கொண்டாள்.

     அதனால் இழுத்துப்போட்டு வேலையை செய்தாள்.
   ஆதிரா இருக்கும் வரை மடியில் அருகேயிருந்து கொண்ட சிற்பிகாவுக்கு அவர் சென்றதும் ஆச்சியில்லாத வெறுமை சூழ அப்பொழுதே வேலியை ஒழுங்குப்படுத்தினாள். அப்படியிருந்தாலும் அந்த முட்கள் ஆதிரா பாதத்தை பதம் பார்த்தில் லேசான கவலையுண்டு.

  ஆர்யன் வேறு வந்துவிட்டான் அவன் அன்னையை இப்படி முள் தைக்க பார்த்துக்கொண்டோமே என்ற பயம் வேறு வாட்டியது. இன்று இல்லாமல் என்றாவது பேசி கொல்வான். இவள் விஷயத்தில் செய்பவனே.

   ஆதிரா தோசை ஊற்றி தந்ததை விழுங்க தனக்கு போதுமென்று கூற சிற்பிகா தனக்கு இரண்டு சுட்டுவிட்டு அப்படியே விழுங்கி பாத்திரத்தை கழுவவும், “நான் ஏதாவது உதவவா?” என்று ஆதிரா கேட்க, “வேண்டாம்மா நீங்க இன்னிக்கு வந்ததே எனக்கு போதும். முதல் நாளே ஆச்சியில்லாத வீட்ல இருக்கறதுக்கு ரொம்ப மிரண்டேன்.  அவர் வேற கோபமா இருப்பார். முதல் நாள் சொந்தவூர்ல டூயூட்டிக்கு போகறப்ப நீங்க அவரை வழியனுப்பி வச்சாலும் காலையிலயே இங்க வந்துயிருப்பிங்க. என்னால அதுக்கு வேற சண்டை வந்துடுமோனு பயந்தேன்” என்றாள்.

   ஆதிராவோ  அவளையும் அவள் எண்ணத்தையும் கண்டு வியந்தாள். தன் மைந்தனை கண்டு சரியாக கணித்துவிட்டாளேயென்ற ஆச்சரியம்.

      மைந்தன் நினைவு தாக்கவும், “அவன் வீட்டுக்கு போயிட்டானானு தெரியலை. வர்றப்ப வேற முட்டிக்கிட்டு தான் வந்தான். அவரா எப்ப போன் போடுவாரோ? சிற்பிகா உன் போன் கொடு. நானே கேட்டுக்கறேன்” என்று கூறவும் நிபுணன் ஐயாவுக்கு தான் போன் பேச போவதால் கொடுத்துவிட்டாள்.

  ஆனால் ஆதிராவோ ஆர்யனுக்கு அழைத்தாள்.

  “ஆர்யன் வீட்டுக்கு போயிட்டியா கண்ணா?” என்றதும் புது எண் என்றதும் அம்மா பேசுவதால் சிற்பிகா எண் என்று நொடியில் புரிந்துக்கொண்டவன், “இப்ப தான் வீட்டு வாசல்ல நுழையறேன் அம்மா.” என்றான்.

  “சரிடா துளிர் தோசை சுட்டா சமத்தா சாப்பிட்டுடு. சாப்பிடாம தூங்கி அம்மா மனசை உடைக்காத. நான் உங்க ஐயாவிடம் நீ சாப்பிட்டியா இல்லையானு கேட்பேன்.” என்றதும், “கண்டிப்பா சாப்பிடுவேன் அம்மா. நீங்க சாப்பிட்டாச்சா?” என்றான்.

   சிற்பிகாவை பார்த்து “இப்ப தான் சிற்பிகா சுட்டு கொடுத்தா சாப்பிட்டாச்சுப்பா” என்றதும் “சரிம்மா வேற?” என்று முடித்திடும் வேகம். அவள் பெயரை உச்சரித்து பேசவும் வந்த மாற்றம்.

  “வேற ஒன்னுமில்லைப்பா வச்சிடறேன்” என்று முடித்து கொண்டார் ஆதிரா.

      சிற்பிகாவோ அச்சோ நிபுணன் ஐயாவுக்கு போன் போடலையா. என் நம்பர் இப்ப அவருக்கு தெரிந்திருக்கும். ஏதாவது திட்டணும்னா போன் பண்ணி திட்டுவாரோ? சர்வேஷுக்கு கால் பண்ணிருக்கலாம். ஆதிராம்மா அவனுக்கு கால் பண்ணிட்டாங்களே என்று வருந்தினாள்.

    நம்பரை டெலிட் செய்ய கைகள் வேகமாய் பரபரத்தது. ஆனால் ஆதிரா அம்மா எதிரில் செய்தால் அது நன்றாக இருக்காதென்று தவிர்த்தாள்.
  இங்கு ஆர்யனுமே அவள் நம்பர் நமக்கெதுக்கு என்று டெலிட் செய்ய போனவன், கைகள் அன்னை இன்று அங்கே அவள் வீட்டில் தான் தங்கியிருப்பதால் நம்பர் அழிக்க வேண்டாமென்று அவசரத்திற்கு தேவைப்படலாமென்று அவனும் தவிர்த்தான். அதனால் என்ன பெயரில் பதிய வைக்க என்று விழித்தான். சிற்பிகா என்ற பெயரை அவன் தட்டச்சு செய்ய பிடிக்கவில்லை.

   அதே நேரம் சர்வேஷ் தங்கை சுட்ட தோசைக்கு இரண்டு நட்சத்திரம் கொண்ட தகுதி உள்ளதென விளையாட, வேகமாய் துளிர் கத்தியை கொண்டு சென்று “ரொம்ப பேசனிங்க மாவை எடுத்து டம்ளரில் ஊற்றி கொடுத்துடுவேன். நான் சுடறது தான் தோசை. அதுவும் அம்மா சுட்டதை விட துளிர் சுட்டது தான் டெலிசியஸா இருக்குன்னு சொல்லணும் என்ன புரியுதா?” என்று சின்ன அண்ணன் சர்வேஷை மிரட்டினாள்.
அக்கணம் ஆர்யன் புன்னகை சிந்தி ‘knife’ என்று பெயரில் சிற்பிகா எண்ணை பதியவைத்து முடித்தான்.

    இதென்ன ‘knife’ என்று பதியவைக்கின்றாய் அன்னை பார்த்தால் இதற்கு வேறு தன்னை சாடுவார் என்று மனம் எடுத்துரைத்தாலும், வேற பெயர் தோன்றலை. இதுவே அவளுக்கு போதும்’ என்றது அவன் மனம்
 
அதன் பின் துளிரின் உபயத்தில் தோசையை விழுங்கினான் ஆர்யன்.

      நிபுணனோ ஓரளவு சமாதானம் அடைந்தவனை சீண்ட மனமின்றி, அவர் அவரது அறைக்கு சென்றிட, ஆர்யனும் இன்றைய பொழுது களைத்துப்போய் உறங்க சென்றான்.

   விதியின் எண்ணமோ ‘knife’ ‘wife’ என்ற மாற்றத்தை உண்டாக்கும் விதமாக ஆதிரா பார்வைக்கு ஆர்யனின் மனையாளாக சிற்பிகாவை தேர்ந்தெடுத்தால் என்ன? என்ற விபரீத எண்ணத்திற்கு சென்றது. சிற்பிகா அந்தளவு ஆதிரா மனதில் நல்லயிடத்தை பிடித்திருந்தாள். யார் யாரையோ போட்டோவில் மருமகளை தேடுவதற்கு பதிலாக தன் நிழலாய் தன்னோடு அன்பை பொழியும் பெண்ணவளை மகனுக்கு பார்த்தால்? என்ற கோணத்தோடு சிற்பிகாவை ஏறிட்டார்.

    ஆர்யனுக்கு வெகு பிரமாதமாக பாந்தமாய் பொருந்தி காட்சி தரவும் மனம் மகிழ்ந்தது. ஆனால் இந்த எண்ணத்தை கணவர் நிபுணனிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டுமே.

   ஆர்யனுக்கு சிற்பிகா என்றாலே வேப்பங்காயாக தான் பார்வையிடுகின்றான்.
  இதில் வன்மம் விரோதி என்ற மனதில் திரிபவனுக்கு இவளையே மணந்தால்? ஆதிராவுக்குள் சுவாரசியம் கூடியது. இந்த விபரீத எண்ணத்தை நிகழ்த்தினால் தான் என்ன? என்ற எண்ணம் இரவெல்லாம் ஆட்சி செய்தது.

-தொடரும்.
  -பிரவீணா தங்கராஜ்
 
   

33 thoughts on “என் நேச அதிபதியே -10”

 1. Avatar

  Super sis wow next move is very interesting sis 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 waiting for next episode sis

 2. Avatar

  ஆரா உனக்கு ஆராய்ச்சி பண்ண வேற எதுவுமே கிடைக்கலையா😂😂😂😂😂ஏற்கனவே இவங்களோட பிரட்சனை என்னனு தெரியாம மண்டை குழம்பிப் போய் இருக்கேன்…..இதுல நீயும் தேரை இழுத்துத் தெருவுல விட பிளான் பண்ணுறியா😏😏😏😏😏😏

 3. Kalidevi

  Ungala mariye irukanga but konjam extra kovam iruku athula understanding um iruku so mrg panna nalla tha irukum . Sollamale rendu perum purinjikiranga . Cut ah irukuma intha couple 💑 🤔😉

 4. Avatar

  ஆஹா சூப்பருங்க
  அது எப்படிங்க knife wife ryming
  செம்ம தூளுங்க..

  செம்ம செம்ம interesting

 5. Avatar

  Athira entertainment ku pancham illama iruku ah nalla idea ah va choose panna ra pola inga phone number ku yae rendu perum avolo yosikira ga save panna ithula life sharing ku ellam rombavae kastam polayae

 6. CRVS2797

  அதாவது நிபுணனனோட ஆதிரா என்டெர்டையின்மென்ட் பண்ண மாதிரி, தன் பையன் ஆர்யன் & சிற்பிகாவை சேர்த்து வைச்சு நிதைக்கும் ஒரு குஜால் படம் பார்க்கலாம்ன்னு முடிவெடுத்துட்டாங்களோ..???
  ரைட்டு…!

 7. Avatar

  ஆதிராவின் ஆட்டம் ஆரம்பம் சகி ரொம்ப ரொம்ப எதிர்பார்க்க வைக்கிறிங்க சகி ஆர்யன் சிற்பி மோதலை காதலை காண ரொம்ப ரொம்ப ஆர்வமா உள்ளது சகி வாழ்த்துகள்

 8. Avatar

  Apti thaan korthuvidanum athu thanaiya ulaga valakkam 😉😉😉😉🤩🤩🤩🤩🤩 yantha rendu opposite opposite aa irruko athu thaan sayrum 🤗🤗🤗🤗🤗
  Ana intha society evlo mosamanathunu oru sec la antha kudikara varthai namakku katiruchu 😏😏😏😏 oru irantha vittuku athuvum antha vittula ponna thavira eni atharava yarum ilainu thayrinja poothum oru Al uthavikku vanthalum athu thappana kannottathula thaana pakka paduthu 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

 9. Avatar

  Wow super idea Aadhira teacher ku bore adikkudhu pola adhan Aryana vachu seiyya mudivu pannitanga😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞❤️❤️💕💓💖💗💗💗💖💕❤️❤️💞💞💕💓💖💗💗💖💓

 10. Avatar

  என்னமா இப்படி யோசிக்குறீங்க!!.. ஆனால் அதுவும் நல்லாதானே இருக்கும்!!… பார்ப்போம் என்ன நடக்குதுன்னு!!..

 11. Avatar

  இவங்க ரெண்டு பேரோட சண்டையும் பார்க்கும்போது சின்ன பிள்ளைங்க ரெண்டும் ஒரே பொம்மை க்கு அடிச்சுக்குவாங்களே அந்த மாதிரி தான் இருக்கு.
  ஆனாலும் ஆதிராவுக்கு செம்ம தில்லு தான் இந்த எலியையும் பூனையையும் ஒன்று சேர்த்து வைக்க நினைக்கிறார்களே பல நேரங்களில் அவங்க நிபுணனோட மனைவின்னு நிரூபிக்கிறாங்க.

 12. Avatar

  இந்த ஆர்யன் சிற்பிகா அவளை விரோதி ஆக பார்க்கிறான்…. இதில் இவனுக்கு அவளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆதிரா நினைப்பது விபரீதம் தான்….

 13. Avatar

  Adhiraku nibu seyadha pudikala nu sonnaley senjitu enna nu kepa… Idhula aryan venamna vitruvala…. Nangalum wait panrom aadhira ena fun panaporinga nu😅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *