Skip to content
Home » என் நேச அதிபதியே -12

என் நேச அதிபதியே -12

அத்தியாயம்-12

   தங்கலட்சுமியும் மாதவனும் சென்னைக்கு திரும்ப பெட்டியை தயார்படுத்தியிருந்தார்கள்.

   “ஆர்யனை எதுக்கெடுத்தாலும் திட்டாத. கண்ணுக்குள்ளயே பார்த்துக்கிட்டோம். இங்கவந்து நீ மாப்பிள்ளை திட்டவும் எங்களுக்கு கஷ்டமாயிருந்தது. எதுனாலும் பொறுமையா எடுத்து சொல்லு கேட்டுப்பான்.” என்று தங்கலட்சுமி எடுத்துரைத்தபடி, பேரனை வாஞ்சையாய் தடவினார்.

    இத்தனை நாட்கள் படிப்பு காரணம் காட்டி தங்களோடு இருந்தவன் அதனால் அவனை விட்டு பிரிய மனம் கொஞ்சம் கலங்கியது.

  மாதவனோ “ஆர்யன் உங்க ஐயாவை கோபப்படுத்தாத” என்று பேரனுக்கு புத்தி கூற, “அப்படி சொல்லுங்கப்பா” என்று ஆதிரா கூறவும், “தாத்தா உண்டியல்ல போட காசு?” என்று துளிர் தாத்தாவிடம் கேட்க, இந்தாடா” என்று ஐநூறு ரூபாய் நோட்டு இரண்டை நீட்டினார். அதன் பின் பேச்சு திசைமாறியது.

   “சர்வேஷ் கண்ணா படிப்பு ரொம்ப முக்கியம்டா. அண்ணனை மாதிரி வரணும்” என்று தங்கலட்சுமி இரண்டாவது பேரனை பார்த்திட, திருநிறையகம் குடும்பத்தை விட்டு கிளம்ப மனமின்றி நின்றனர்.
 
   நிபுணனோ “மாமா அத்தை கூடிய சீக்கிரம் ஆர்யன் கல்யாணத்துக்கு முன்னாடியே வரணும். அவனுக்கு அவம்மா பொண்ணு பார்த்துட்டா.” என்று போகும் போது நிபுணன் கொளுத்தி போடவும் ஆச்சி தாத்தா ஆனந்தமாய் பேரனை அளவிட்டனர்.

     “இன்னும் மேற்படி எதுவும் பேசலை மாமா. ஆர்யன் ஐயாவோட அபிப்ராயம் கேட்டுட்டு, பொண்ணு வீட்லயும் கேட்டுட்டு மத்த நாள் கிழமை எல்லாம் முடிவெடுக்கணும். நேரமெடுக்கும். உங்க பேரன் சம்மதிச்சா மத்த ஏற்பாடு வேகமாக முடியும்.” என்று நாசுக்காய் கூறவும், ஆர்யனோ தன் ஐயா அம்மாவை ஏறிட்டான்.
   
  சர்வேஷோ “அண்ணாவுக்கு அண்ணி வரப்போறாங்க” என்று துள்ள, துளிரோ “அய் அண்ணன் கல்யாணத்துக்கு நான் ஒரு வாரம் லீவு போடுவேன்.” என்று குதித்தாள்.

    ஆர்யனோ யாருக்கு கல்யாணம் என்ற ரீதியில் கல்லூளிமங்கனாக நின்றான்.

   “அப்படியா மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப சந்தோஷம். பேரனிடம் முடிவெடுத்துட்டு பேச்சு முடிவானதும் போட்டோ அனுப்புங்க.” என்று மாதவன் பேசவும், “தாத்தா வண்டிக்கு நேரமாகுது” என்று விரட்ட தயாரானான் ஆர்யன்.

    தாத்தா ஆச்சியை கொண்டு போய் ஏற்றி விடும் பொறுப்பு, அவனிடமிருந்தாலும் தற்போது இங்கிருந்து நழுவும் திட்டமும் இருந்தது.

     திருமணம் என்றாலே ஒவ்வாமை கூடியது. சிற்பிகா என்றவளால் தன் பெற்றோர் அருகாமையை இழந்த காரணத்தால் மற்ற பெண்களை அவன் ஏறெடுத்தும் பார்க்கும் ஆசை முற்றிலும் ஒழிந்தது.

   அதோடு திருமணம் அன்னைக்கு பிடித்தமானதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் என்றுமுண்டு.

    “சரிம்மா கிளம்பறோம். விட்டா பேசிட்டே இருப்பேன்.” என்று தங்கலட்சுமி காரில் ஏற, மாதவன் ஆர்யனுக்கு பக்கத்தில் அமர்ந்தார்.

     பின்னிருக்கையில் தங்கலட்சுமி ஏறியப்பின் “ஆர்யனுக்கு பார்த்த பொண்ணு பெயர் என்ன ஆதிரா?” என்றதும் ஆதிரா கணவரை ஏறிட்டு தயங்கி, “நீங்க சென்னை போனதும் போன்ல சொல்லறேன் அம்மா.” என்று முடித்துக் கொண்டார்.

   ஆர்யன் எதற்கும் பெரிதாக எதிர்வினை ஆற்றாமல் காரினை கிளம்பினான்.

     “அம்மா அண்ணி பெயர் என்ன?” என்று துளிர் துள்ளி குதிக்காத குறையாக கேட்க, சர்வேஷும் ஆர்வமாய் பார்க்க, “முதல்ல ஆர்யனிடம் பேசிட்டு சொல்லறோம்.” என்று இருவர் கன்னத்தை தட்டிவிட்டு ஆதிரா சென்றாள்.

     நிபுணனோ ‘ஆர்யன் வீட்டுக்கு வரவும் ஒரு அக்கப்போர் இருக்கு.” என்று நடையை கட்டினார்.

     ஆர்யன் இருக்க, பேரன் திருமண கனவுகளை வரிசையாக வழிநெடுக காரில் பேசினார்.

  ஆர்யனோ சாலையை தான் தீவிரமாய் கவனித்தான். மாதவனோ பேரன் அமைதியில் லேசாய் துணுக்குற்றார்.

      திருநெல்வேலி சந்திப்பு வந்ததும், பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி லக்கேஜை இழுத்து வந்தான்.

   இரயில் பெட்டியில் லக்கேஜை ஏற்றியதும், மாதவன் பேரனின் கையை பிடித்தார்.

   “உங்கம்மா யாரை உனக்கு ஜோடியா பார்த்திருக்கானு தெரியலை. ஆனா உன் கல்யாணத்தை பார்க்க இங்க நாங்க ஆவலாயிருக்கோம்.

      “உன்னோட ஐயப்பா ஐயம்மைக்கு நீ வளர்ந்து டாக்டரா நிற்கற அழகை பார்க்கற கொடுப்பினை இல்லை. விரசா விண்ணுலகம் போயிட்டாங்க. ஆனா நாங்க உயிரோட இருக்கறது உன் கல்யாணத்தை பார்க்க தான் ஆர்யன்.” என்றதும் தங்கலட்சுமி பேரனின் திண்ம தோளில் கைவைக்க, மாதவன் பேச்சை முடிக்காது தொடர்ந்தார்.

  “நீ படிக்க வந்தப்ப ஆதிரா அடிக்கடி போன் பண்ணி, ‘ஒரு சாரி கேட்டா என் கூடவே இருந்திருப்பான் அப்பா. ஆனா சாரி கேட்க பிடிக்காம எங்களோட இருக்க முடியாதுனு அங்க வந்துட்டான். நல்லா பார்த்துக்கோங்க அப்பா. அவனுக்கு கொஞ்சம் பொறுமையை கற்றுக்கொடுங்க. என்ன நடக்குதுனு தெரியாம யார் மனசையும் சட்டுனு காயப்படுத்த விடாதிங்க’ன்னு அழுதுட்டே சொன்னா.
   அதுக்கு பிறகு கொஞ்ச நாள் உங்க அம்மா முகத்துல துளிகூட சந்தோஷம் இல்லை. உனக்கு ஸ்டெதஸ்கோப் வாங்கி கொடுத்துட்டு, நீ அதை கழுத்துல போடறதை பார்த்தப்பிறகு தான் அவ பூரிச்சி பழைய நிலைக்கு வந்தா.

    இப்ப இங்க வந்தப்ப திரும்ப அதே பொண்ணால சண்டை என்றதும் மனசுக்கு பகீர்னு ஆகிடுச்சு. உங்கம்மா இந்தமுறை நாசுக்கா பேச நீயும் புரிஞ்சிக்கிட்ட.
  
   உன்னோட பாதையை தான் சர்வேஷ் அப்படியே கடைப்பிடிக்கிறான். உன் ஒத்த சொல்லுக்கு துளிர் கட்டுப்படறா.
   அதெல்லாம் எப்பவும் மாறாம பார்த்துக்கோ. நீயே அம்மா ஐயாவை எதிர்த்து பேசினா பிறவு எல்லாம் மாறிடும்.” என்று அறிவுரையை அள்ளி வழங்க, பொறுமையாக செவியில் ஏற்றினான் ஆர்யன்.

     இரயில் வண்டி கிளம்பும் சத்தம் கொடுக்கவும், ஆர்யன் எழுந்தான்.
   “ஐயா… பொண்ணு யாரு என்னனு உங்கம்மா சொல்லலை. உனக்கு பிடிச்சி ஓகே சொல்லிட்டா என் பேத்தி போட்டோ அனுப்பு.” என்று கூறவும் லேசான முறுவலோடு தலையாட்டினான்.

  “நேரத்துக்கு சாப்பிட்டு தூங்குங்க ஆச்சி. தாத்தா சென்னை ரீச் ஆனதும் ஒரு போன் பண்ணுங்க.” என்று வாய் திறந்தான்.

  மெதுவாக இரயில் நகர ஆரம்பிக்க இறங்கினான்.

  “ஐயா பார்த்து” என்றதும் கையசைத்து வழியனுப்பினார் மாதவன்..

    ரயில் கண்ணிலிருந்து மறையவும், இழுத்து பிடித்த பெருமூச்சை ஊதி தன்னை நிதானம் செய்துக்கொண்டான்.

   பின்னங்கழுத்தை நீவியபடி, ‘பொண்ணு எந்தவூரோ யாரோ? வந்ததும் ஆரம்பிக்கறாங்க. பச் நோ சொன்னா அதுவேற மனசஞ்சலம் அடைவாங்க. மேரேஜ் இன்ட்ரஸ்ட் வரலையே. எந்த பொண்ணும் என்னோட மிங்கில் ஆக என்னால அக்சப்ட் பண்ண முடியலை. எவளை பார்த்து வச்சிருக்காங்களோ?’ என்று வீடு வந்தடைந்தவனுக்கு, காரை தரிப்பிடத்தில் நிறுத்தும் போதே, “ஐயா வந்துட்டார்” என்று நிபுணன் ஆதிராவின் சிந்தனையை கலைத்தார்.

  ‘இன்னிக்கு ஒரு முடிவோட இருக்காங்களோ’ தாத்தா ஆச்சியிருக்கறப்ப போட்டோவோ, பெயரையோ சொல்லலை. என்ன மிஸ்ட்ரி இருக்கும்’ என்று நடந்தான்.

   “ஐயா உங்கம்மை உன்னிடம் பேசணுமாம்” என்று நிபுணன் அழைக்க, அன்னை ஆதிராவின் அருகே வந்தவனை, “வாக் பண்ணிட்டே பேசலாமா?” என்று ஆதிரா கூப்பிட, மெதுவாக தலையாட்டினான்.

   ஆதிரா ஆர்யனை முன்னே விடுத்து, நிபுணன் பின் தொடர, கணவரை திரும்பி பார்த்து நடக்க, நிபுணன் இமை மூடி பேச ஊக்கம் தந்தார்.

   ஆதிராவோ தன் அத்தை மாமா சமாதியருகே இருந்த பூக்களின் அருகே அமர்ந்தார்.
   ஆர்யனையும் அமர கூற, சிமெண்ட் கொண்ட வரப்பில், பூக்களை பூத்து சிதறியிருக்க அதனை தள்ளிவிட்டு அமர்ந்தான்.

   நிபுணனோ அவனது அன்னை சமாதியில் வீற்றார்.

   “அம்மா உனக்கு பொண்ணு பார்த்துயிருக்கேன். யாரு என்னனு கேட்க ஆசையில்லையா ஆர்யன்” என்றதும், “ட்ரூவா ஒன்னு ஷேர் பண்ணணும்னா எனக்கு உங்களை துளிரை, பாட்டியை தவிர்த்து எந்த பெண்களையும் பிடிக்கலைம்மா.

   அதனால கூட திருமணத்துல ஆர்வம் வரலை. ஆனா நீங்களா ஒருத்தியை கட்டிவச்சா நிச்சயம் நல்லா பார்த்துப்பேன்.” என்று சுருக்கமாய் பேசினான்.
  
    ஆதிராவுக்கு இதற்கே விழியில் ராட்டினம் சுற்றியது.

   “இப்ப இப்படி பேசறவன் அம்மா தேர்ந்தெடுத்த பொண்ணை காட்டியதும் மறுத்துடுவியோனு பயமாயிருக்கு ஆர்யன்” என்று ஆதிரா பேசிவிட்டு மகனின் முகத்தை பார்க்க, இந்நேரம் வரை எதிரேயிருந்த பூவை கண்டவன், மெதுவாக அன்னை பக்கம் திரும்பி, “நீங்க அந்த போட்டோவுல இருக்கற எந்த பொண்ணையும் செலக்ட் பண்ணலை அப்படி தானேம்மா?” என்று எதிர் வினா கேட்டான்.

   ஆதிராவோ “அந்த போட்டோவுல இருக்கற எந்த பொண்ணும் உன் லைப்ல சுவாரஸ்யமா கொண்டு போவானு தோணலை ஆர்யன்.
    அதோட நம்ம தரகர் கொடுத்தது. உன் லைப்பை யாரோ ஒரு தரகர் கொண்டு வந்த போட்டோவை வச்சி முடிவெடுக்க மனசுவரலை.” என்றதும், ஆர்யனோ “அதுக்கு என் லைப்பை திருப்பி போட அந்த பொண்ணோட  கோர்த்துவிடறிங்களா?” என்றான்.

    ஆதிராவுக்கு நிபுணனை போலவே பேச்சில் தயக்கமிருந்தால், மனதில் இருப்பதை படிப்பதும், பார்வையின் மாற்றங்கள் இதையெல்லாம் வைத்தே மகனும் புரிந்து பேசுவதில் மலைத்தாரெனில், அடுத்தக்கணம் பெயருக்கு கூட சிற்பிகாவா என்று கூறதவனை எண்ணி ஆச்சரியப்பட்டாள்.

   “எந்தப்பொண்ணுடா?” என்று ஆதிரா கேட்டதும் தற்போது ஆர்யன் தன் வாயால் அவள் பெயரை உச்சரிக்க வைக்கின்றாரென எண்ணி, “என்னை உங்களிடம் இருந்து பிரிச்சு சென்னைக்கு துரத்தினவ. இப்பவரை உங்களோட இரக்க குணத்தை வச்சி உங்க காலடியிலயே சுத்திட்டு இருக்கறவ. சுருக்கமா சொன்னா உங்க எடுபிடி” என்று லேசான கோபத்தோடு ஆரம்பித்தான்.

    “சிற்பிகா. அவ பேரு சிற்பிகா. என் எடுபிடியில்லை. இப்படி ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ஆர்யன். அடிப்படை மரியாதை யாருக்காயிருந்தாலும் தரணும். இப்படியா இழிவா பேசுவ?” என்று காலடியில் சுத்திக்கொண்டிருக்கும் என்ற வார்த்தையை உதிர்த்ததால் சற்று ஆதிராவும் குரலுயர்த்தினார்.

   ‘எடுபிடியாமா எடுபிடி’ என்று முகம் தூக்க, “பார்த்திங்களா” என்று ஆதிரா நிபுணனை பார்த்து வைத்தாள்.

   “இங்க பாரு ஐயா. உங்கம்மாவுக்கு போட்டோவுல பார்த்த எந்த பொண்ணும் பிடிக்கலை. உனக்கும் பிடிக்கலை. ஒருவேளை உனக்கு அந்த போட்டோவுலயிருக்கற  யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு  சிற்பிகா பேச்சையே நாங்க எடுக்கமாட்டும்.

   இங்க வந்தப்ப ‘அம்மா அப்பா நீங்க எனக்குன்னு ஒருத்தியை  பாருங்க. நீங்க கைகாட்டற பொண்ணை கட்டிக்கறேன்’னு சொன்ன. உங்கம்மா உன் வாக்கை நம்பி அவளுக்கு பிடிச்ச பொண்ணை பார்த்திருக்கா. உனக்கு உங்கம்மா தேர்வு பிடிக்கலைனா சொல்லிடு. நீங்க பார்க்கற எவளையும் நான் கட்டிக்க மாட்டேன்னு. ஆனா அப்ப ஒரு பேச்சு இப்பவொரு பேச்சுனு வாக்கு தவறது நம்ம வீட்டு ஆட்களுக்கு அழகில்ல.” என்று நிபுணன் பேசவும் ஆர்யன் அன்னையை ஏறிட்டான்.

  ஆதிராவின் கலங்கிய விழிகள் ஆர்யன் மனதை சுட்டது. முன்பும் அன்னை இதே போல தான் கண்ணீர் மல்க அந்த பெண்ணிடம் ‘மன்னிப்பு’ கேட்க வற்புருத்தினார். ஏனோ அள்பொழுது இருந்ந இளரத்தம் கோபத்தோடு தாத்தா பாட்டி வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான். இனியும் அப்படி சிந்திக்க நெருடியது.
  
    நிபுணனோ மனைவிக்கா தொண்டையை செருமி, “முன்ன தான் மன்னிப்பு என்றதை கேட்காம என் மனைவி கண்ணீரை நிறுத்தலை. இப்ப தேர்ந்தெடுத்த பொண்ணை வேண்டாம்னு சொல்லி திரும்ப கலங்க வைக்கிற. சரி உன் இஷ்டம்.

நான்  உங்கம்மாவை கட்டிக்க கேட்டப்ப, மாதவன் மாமா ரொம்ப யோசித்தார்.

   உங்கம்மாவும் ரொம்ப யோசிச்சா. நான் என்னைக்கும் கல்யாணத்தை கட்டாயப்படுத்த கூடாதுனு இரண்டு மாசம் தவணை கொடுத்தேன். முடிவெடுக்குற சுதந்திரம் கல்யாணம் பண்ணற இரண்டு பேருக்கும் இருக்கணும் இல்லையா.

   உங்கம்மா இரண்டு மாசம் முடியறப்ப தான் பதிலை சொன்னா. எனக்கு சாதகமா.

   இப்ப நாங்க உனக்கு இரண்டு மாதம் தவணை தர்றோம். உன்னிடம் தரகரை நிறுத்தறோம். அவர் கொண்டாற பொண்ணுங்க பிடிச்சிருந்தாலும் சொல்லு. இல்லை நம்ம சொந்தம் பந்தம் யாராவது பிடிச்சிருந்தாலும் சொல்லு.

    அம்மா பார்த்த பொண்ணே சிற்பிகாவை கட்டிக்க சம்மதம்னாலும் சொல்லு. ஆக கல்யாணம் இப்ப பண்ணினா தான் சரியா வரும். இல்லை நீங்க பெரிய டாக்டர் என் லைப் என் இஷ்டபடி என்று சொல்லிட்டாலும் அது உங்க சௌவுகரியம்.

  எதுனாலும் உங்க விருப்பம் தான்.” என்று எழுந்து மனைவியை கையை பிடித்து நடந்தார் நிபுணன்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

38 thoughts on “என் நேச அதிபதியே -12”

 1. Avatar

  இப்படி சஸ்பென்ஸோட முடிச்சிட்டா எப்புடி🙄🙄🙄🙄🙄🙄அவங்கம்மா மாதிரி ஆமானு சொல்லுவானா இல்லைனு சொல்லுவானா🤔🤔🤔🤔🤔🤔ஆனாலும் நிபு அப்பவும் இப்பவும் ஆராவுக்காக நிற்குதுனு👌👌👌👌👌

 2. Kalidevi

  Acho aaryan ena pathil solla pora ipo amma mukiyam ache unaku avangaluku sathagama irukuma nee yosichi solla nalla una yarum compul panla un virupatha sollu

 3. Avatar

  Aariyan ah enna than nibunan oda replica nu sonnalum original original than nibu proof panran aariyan ippo varaikum misunderstanding la than Sirpika ah va blame panran nu puriyuthu andha oru vishyatha mattumae vachikitu pesurathu seri illa yae aval ah identify panrathu kooda ipadi oru per ah vachi solluran eppo vum pola enga nibu mass than ippo vum avan yae yosichi thelivu agatum time kuduthutu poran

 4. CRVS2797

  அட…என்ன இப்படி வம்படியா சொல்லிப்புட்டு பொசுக்குன்னு எழுந்து போயிட்டாங்க…? ஆனாலும், இவன் இந்த தடவை தன் தாயை விட்டுத் தரமாட்டான்னு தான் தோணுது.

  1. Avatar

   ரொம்ப ரொம்ப அழகாக போகுது கதையின் பயணம் ஆதிரா புள்ளி தான் வைத்தாள் ஆனா ஆரியன் கோலமே போட்டுவிட்டான் ரொம்ப எதிர்பார்க்க வைக்கிறீங்க சதி ஆதிரா நிபுணன் காதல் புரிதல் மனைவியே விட்டு கொடுக்காத அன்பு ரொம்ப அருமையாக இருந்தது சகி வாழ்த்துகள்

  2. Avatar

   ரொம்ப ரொம்ப அழகாக போகுது கதையின் பயணம் ஆதிரா புள்ளி தான் வைத்தாள் ஆனா ஆரியன் கோலமே போட்டுவிட்டான் ரொம்ப எதிர்பார்க்க வைக்கிறீங்க சகிஆதிரா நிபுணன் காதல் புரிதல் மனைவியே விட்டு கொடுக்காத அன்பு ரொம்ப அருமையாக இருந்தது சகி வாழ்த்துகள்

 5. Avatar

  என்ன அழகாக அம்மாவின் மனசை படிச்சிட்டான்.

  ஆஹா நிபுணன் அவர்கள் ஆதிரா மேல வைத்திருக்கும் காதல் செம்ம தூள்.

  ஆதர்ச தம்பதிகளாக இருக்கின்றனர்…

  சூப்பருங்க

 6. Avatar

  Illa enaku puriala… Ariyan hero va… Ninu herova🥰🥰…. Ipdi solitomnu nibu scene korachiradinga pa😁..
  Nibu adira❤
  Ariyan 2 months ena ellam pana porano… Few epi dan anda pillai (ariyan) sandosama irundadu… Adumaprm ellam polamba vitute irukingale ji

  1. PraveenaThangaraj

   😜😜 ஆர்யன் சந்தோஷம் முக்கியமா கதை முக்கியமா. நமக்கு கதை முக்கியம் அதனால பொறுமையா லவ் பண்ணட்டும்

 7. Avatar

  ரொம்ப ரொம்ப எதிர் பராக்க வைக்குது உங்கள் கதை ஆதிரா புள்ளி வைத்தால் ஆர்யன் அழகாக கோலத்தையை போட்டு விடுறான் எவ்வளவு அழகான புரிதல் சதி ஆதிரா நிபுணன் பாசம் காதல் புரிதல் பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுக்காத அன்பு சூப்பரோ சூப்பர் சகி வாழ்த்துகள்

 8. Avatar

  Dei Aryan romba yosikadha da….unaku sirpika tan nu mudivu panniyachu da….ne tan avala kalyanam pannikanum..Vera option ila….enga nibu chlm eppavum mass tan….

 9. Avatar

  Payr kuda sollama Amma ninachathu iva thanu sonnathu ellam nipu paiyanu kattitan intha paiyan 👏👏👏 ana Amma solium oru ponna manikavoo avala pathi thayrinjukkavoo Yan thonala 🤨🤔🙄

 10. Avatar

  I really love nibhu evlo understanding,evlo love,care etc….nibu polave elarumkum husband irundha life romba nalla irukum sister

 11. Avatar

  இவன் என்ன நிபுணன், ஆதிராவுக்கே தண்ணீ காட்டுவான் போலயே கா!!!.. திரும்ப அதே ரெண்டு மாசம்😍!!… என்னலாம் நடக்க போகுதோ???

 12. Avatar

  Name solamale aryan kandu pidichutan rmba interest ah pokuthu story. Ethuku sirpika adhirava thali vita nu engalukum terianum aryan kum terianum athuku dan waiting

 13. Avatar

  வார்த்தையாலே மத்தவங்கள பணிய வைக்கிற ஜாலம் எங்க நிபுணனுக்கு மட்டுமே சொந்தமானது 🫰🫰🫰🫰👌👌👌

 14. Avatar

  Very understanding between mom and son. As Ashwin Ninunan is always mass. What a love towards Athira. Never let her down in any situation and also not allow others to do so. Mass mass episode

 15. Avatar

  Wow super super super super super super super super super super super super super super super super 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 waiting for Aryan weds Sirpika 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍

 16. Avatar

  நிபுணன் ஆதிரா இருவரும் சிற்பிகா அவளை ஆர்யன் அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவனிடம் கூறிவிட்டு அவனுக்கு இரண்டு மாத காலமும் தந்து இருக்கிறார்கள்…. இனி என்ன ஆகுமோ

 17. Avatar

  Thangalaksmi paati… Crctuhhh pesranga… Nibu always gethuuu nibu… Epovum pechula vettu onnu… Thundu rendudha… Aryan apdi enna pannan… But avanum pavam ba… Ball is in your court… Aara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *