Skip to content
Home » என் நேச அதிபதியே -13

என் நேச அதிபதியே -13

அத்தியாயம்-13

   ஐயாவும் அம்மாவும் ஜோடிப் போட்டு போகவும், செய்வதறியாது திகைத்த ஆர்யன், தொண்டையை செருமி “ஐயா நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்” என்றான்.

  பெற்றவர்கள் இருவரும் ஒரு சேர நின்று நிதானமாக திரும்பினார்கள்.

   நிபுணனோ ”ஏதேது உன்ற மகன் உன்னை மாதிரி இரண்டு மாசம் முடியற அப்ப தான் பதில் சொல்வாப்ளனு இருந்தா படக்குனு ஒத்துக்கிட்டாரு.” என்று ஆதிரா காதை கடிக்கும் விதமாக மெதுவாக பேச, ஆதிராவோ கணவர் நிபுணனை ஒரு பார்வையால் அதட்டி மைந்தன் முன் வந்தார்.

   “அம்மாவுக்காக உடனே சொல்லணும்னு அவசியமில்லை. யாரை கல்யாணம் பண்ணிட்டாலும் மனப்பூர்வமா தாலி கட்டணும்” என்று விதியை இயற்றினார்.

    “நான் யாரோயோ கட்டிக்க ஒத்துக்கலைம்மா. தரகர் பார்த்து கொடுத்த பொண்ணு போட்டோ எதுவும் வேண்டாம். என் அம்மா பார்த்த பொண்ணு போதும்.

உன் பிள்ளைம்மா, முன்கோபத்துல முன்ன கோபமா போனாலும், உங்களுக்காக ஐயாவுக்காக தான் மெடிஸன் படிச்சது. எதையும் மனசார ஏத்துக்கிட்டு செய்யறவன்ம்மா நான்.

   நீங்க பயப்படாம ஆகவேண்டியதை பாருங்க.

  ஐயா அம்மா உங்களை கட்டிக்க, நிதானமா சொன்னதுக்கு காரணம் இருந்திருக்கும். நான் சட்டுனு சம்மதிக்க ஒரே காரணம். எனக்கு நீங்க கெட்டது பண்ண மாட்டிங்க” என்றவன் பேசிவிட்டு நிற்காமல் பெற்றோரை கடந்து நடந்தான்.

   நிபுணனோ மீசையை முறுக்கியபடி, “பார்த்தியா, புள்ளனா இது புள்ள. அந்த பொண்ணு மேல எம்புட்டு கோபமா இருந்தாலும், நம்ம முடிவு சொன்னப்பிறகு கடைசில பொறுப்பை நம்ம கையில கொடுத்துட்டான்.

      எங்க மறுத்துட்டு ஆளுக்கு ஒருபக்கம் முகம் திருப்பிட்டு இருப்போம்னு நினைச்சேன்.

   பரவாயில்லை.” என்றவர் மனைவியின் ஆனந்த அதிர்ச்சியிலிருந்து உலுக்கி, “பிறவு பொண்ணுக்கிட்ட பேசணும். அவங்களும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசற மகராசி. வர்றிங்களா இப்பவே கேட்டுடுவோம்” என்று மனையாளை கூப்பிட்டார்.

   “இல்லைங்க… இரண்டு நாள் போகட்டும்.” என்று வீட்டுக்கு பையனை தேடி நடந்தார் ஆதிரா.

  நிபுணனோ என்னவோ பண்ணு’ என்று நிதானமாக வந்தார்.

   ஆர்யனோ மாலை நேரம் துளிரோடு அமர்ந்து டிவியை பார்க்க முயன்றான். பார்வை என்னவோ டிவியின் மீது, உள்ளமோ ‘அம்மா என் திருமண லைப்பை அவளோட வாழ எப்படி திங்க் பண்ணினாங்க? நான் மன்னிப்பு கேட்கலை, நான் பிரிஞ்சி போனப்பின்னும் அவளை அரவணைச்சிக்கிட்டாங்களே தவிர விலகலை.
   அவளை எனக்கு பிடிக்காது. அதை மீறி எப்படி என்னை அவளோட கனெக்ட் பண்ணறாங்கன்னா காரணம் இருக்கும். மேபீ முன்ன கோபத்துல என்ன காரணமாயிருந்தா என்னனு வீம்பு இருந்தது. இப்ப அம்மாவுக்காக யோசினு மனசு சொல்லுது.

   என் அம்மா கண்ணுல என்னால வேதனை வரக்கூடாது.
   சோ முடிவா அந்த பொண்ணு தான்னு ஏத்துக்கணும்’ என்று சிந்தனையில் தானாக கைகள் புலனத்தில் அவன் சேமித்து வைத்த நம்பருக்கு சென்றது. ‘Knife’ என்ற வார்த்தை அவன் கண்களுக்கு ‘wife’ என்று காட்ட கண்ணை கசக்கி பெயரை படித்தான்.

   ‘Knife’ என்று காட்டவும் தான் தெளிந்தான்.

   கடவுள் இப்படி தான் ரோடு போடணும் அன்னைக்கே கோடு போட்டுட்டார் போல’ என்ற இளக்காரம் வழிய அந்த எண்ணை பார்த்தான்.

இம்முறையும் சிற்பிகா என்ற மாற்றம் பெறாது அப்படியே போனை வைத்துவிட்டு தம்பி தங்கையை கவனித்தான்.

   அவனை போலவே துளிரும் எதிரே டிவி ஓடுகிறது அவ்வளவே என்ற ரீதியில் இருந்தாள்.

  அவள் கதை தனியாக ஓடுகிறது. அதில் இன்னமும் முக்கிய நிகழ்வுகளை கடவுள் வரிசைக் கட்டவில்லை. தற்போது அவளது திமிர் அரசன் விதார்த் முகம் தூக்கி திரிகின்றான். துளிராக அவனை தேடி செல்லும் வரை காத்திருக்கின்றானோ என்று துளிருக்கு ஒரு யூகம். துளிருக்கு தானாக காதல் கீதலென்று செல்ல பயம்.

   அதனால் டிவி அலலவரிசையை மாற்றியபடி வீற்றிருந்தவள், சட்டென சர்வேஷ் ரிமோட்டை பிடுங்க சுயம் உணர்ந்தாள்.

   “நல்லப்படம் திருப்பிட்டே இருக்க” என்று பிடுங்கவும் ஆர்யனை கண்டு உதடு பிதுங்கினாள்.
  
   “அண்ணா அதை வாங்கி கொடு” என்ற அர்த்தமே அந்த உதடு பிதுக்கலுக்கு காரணம்.

   “நீ தான் டிவி பார்க்கலையே விடு அவனாவது பார்க்கட்டும்” என்றதும் மனமோ நீ தான் யாரையும் காதலிக்கலையே அப்பறம் என்ன அம்மா காட்டும் பெண்ணை மணக்கலாம்’ என்றது போல காதில் அசரிரீ.

அவன் மனசாட்சியின் குரல் தலையை உலுக்கியபடி எழுந்தான்.
 
   நிபுணனுக்கு மைந்தனை காணும் போது சிரிப்பு வந்தது. ‘எப்படி சிக்கியிருக்கான் பார்த்தியா?” என்று மனைவியிடம் கிசுகிசுக்க, எல்லாரோர் எதிரில் இப்படியா? என்ற பார்வையை பார்த்து கடந்தார்.

   இரவு உணவு உண்ணும் சமயம் குடும்பமாக பேசியபடி சாப்பிட்டார்கள்.

   சிற்பிகாவிடம் கலந்து பேசாமல் சர்வேஷ் துளிரிடம் பகிரவில்லை ஆதிரா. ஆனால் ஆர்யனுக்கு அம்மா ஏன் நான் சம்மதம் சொன்னப்பிறகும் தம்பி தங்கச்சிக்கிட்ட சொல்லலை என்றதாக விழுங்கினான்.
 
   எப்பொழுதும் ஆர்யன் நிபுணன்  வேகமாய் சாப்பிடும் ஆட்கள். ஆனால் தற்போது மெதுவாக கோலமிட, சர்வேஷோ போதுமென்று சென்றான்.

   துளிரோ, “அப்பா என்னால சாப்பிட முடியலை. மீதி வச்சிடவா?” என்று பாவமாய் கேட்டாள். ஆர்யனுக்கு மட்டும் தான் ஐயா. மத்தபடி சர்வேஷ் துளிருக்கு அப்பா என்ற அழைப்பு தான்.

   “உதைப்படப்போற, எப்ப பாரு இதே வேலை. கொஞ்சம் கொஞ்சமா வச்சி சாப்பிடுன்னா எலி கொறிக்கற மாதிரி சாப்பிட்டு ஓடிடற. கொஞ்சம் அதிகமா வச்சா மிச்சம் வைக்கிறது. இன்னும் சின்ன பிள்ளையா துளிர்.” என்று அதட்டினாள் ஆதிரா.

  அம்மா அதட்டவும் எழாமல் அமர்ந்தவள் சர்வேஷ் சிரித்து கடக்க, கோபம் உச்சமடைந்தது.

  “வீட்ல மாடுயிருக்கு, நாய் இருக்கு காலையில கோழி காக்காவுக்கு கூட சாப்பாடு போடலாம். நாம ஒன்னும் வேஸ்ட் பண்ணலை.” என்று உதடு பிதுக்கி அழுவதாக பாவித்தாள்.

  “என்ன குழந்தையை அதட்டற. நீ அப்பா தட்டுல வைடா குட்டி. என் மக சாப்பாடு எனக்கு தேவமிர்தம்.” என்றதும் துளிர் தந்தையின் தட்டு பக்கம் தன் தட்டை நகர்த்திவிட்டு ஓடினாள்.

  “கழுதை எப்பவும் சொல் பேச்சு கேட்கறதுயில்லை. நீங்க ரொம்ப செல்லம் கொடுக்கறிங்க” என்று நிபுணனை வேறு கண்டித்தார் ஆதிரா.

  “நீ ஆர்யனை வளத்துக்கோ. நான் சர்வேஷ் துளிரை வளர்க்கறேன்னு தான் பேச்சு. நீ ஒருத்தரை வளர்க்கற சின்ன டென்ஷன் குட்டி பிரிவு  கவலை இருந்தது. நான் இரண்டு பிள்ளையை வளர்த்துட்டு இருக்கேன் ஜாலியா. கண்ணுக்குட்டி எப்படி துள்ளி ஓடுது பாரு.” என்று கூறி துளிர் வைத்த உணவை உண்டார்.

   ஆதிராவோ மூவர் மட்டும் இருக்க, “ஆர்யன் சிற்பிகாவிடம் உன்னை கல்யாணம் பண்ண சம்மதமானு நாங்க இன்னும் கேட்கலை. அதனால தம்பி தங்கச்சியிடம் சிற்பிகா பத்தி எதுவும் பகிரலை. ஆச்சி தாத்தாகிட்ட கூட அதனால தான் எதுவும் சொல்லாம இருந்தோம்.” என்றதும் ஆர்யன் தட்டில் உணவை வைத்தபடி அன்னையை ஏறிட்டான்.

   ஆர்யனுக்கு இது அதிர்ச்சிகரமானதே. ‘அவ என்ன ஓகே பண்ணணுமா?’ என்ற ரீதியில் நெஞ்சு பொறுமியது.
   
    “உன்னை போல தான் அவளும் நீ இங்க வர்றேன்னு தெரிந்தாலே அவங்க அப்பா ஊருக்கு ஓடிடறா. நான் கூட அவ அப்பாவை பார்க்க நல்ல நாள்ல ஆசையோட போறானு தப்பு கணக்கு போட்டுட்டேன். உங்க ஐயா தான் அந்த பிள்ளை நம்ம பிள்ளை வர்றதை தெரிந்துட்டு வீட்ல ஒளிஞ்சிக்குதுனு சொன்னார்.

அவளுக்கும் இந்த முடிவு அதிர்ச்சி தான். ஆனா நான் அவளை கன்வின்ஸ் பண்ணிடுவேன்.” என்றதும் ஆர்யனோ கையை உதறினான்.

   “அவ என்னை வேண்டாம்னு சொன்னா என்னம்மா பண்ணுவிங்க. அந்த இடத்துல நான் அசிங்கப்படணுமா?” என்று கேட்டதும், அன்னை நிபுணனை கண்டு தலைகவிழவும், ஆர்யன் மனம் அடங்கியது.

   கொஞ்ச நேரத்திற்கு முன் தான் நீ ஒரு பையனை வளர்க்கற, கண்ணீர் டென்ஷன் தவிக்கற. நான் இரண்டு பிள்ளையை வளர்த்தாலும் ஜாலியா இருக்கேன் என்றார். அதை கேட்டதும் இப்பொழுது அன்னையை மேலும் சங்கடத்துக்குள் ஆளாக்க வேண்டாமென்று, “உங்க இஷ்டம்னு கல்யாணத்தை ஒப்படைச்சிட்டேன் அம்மா. வாக்கு தவற மாட்டான் உங்க பையன். நீங்க என்ன வேண்டுமின்னாலும் முடிவு பண்ணுங்க” என்று சாப்பிட்டு முடித்து கையை அலம்பி அன்னையிடம் “குட்நைட்மா” என்றான்.

  ஆதிராவுக்கே தற்போது கலக்கம் பிறந்தது. ஒரு வேளை சிற்பிகா தன் மகனை வேண்டாமென்றால் அது மனகாயத்தை தந்திடாதா?

   ஆர்யன் அவன் பாட்டிற்கு டாக்டராக தன் கடமையாற்ற கிளம்பிடுவான். நிச்சயம் சிற்பிகா என்றவளை திரும்பியும் பார்க்க மாட்டான். ஆனால் தனக்கும் சிற்பிகாவுக்கும் இருக்கும் நேசம் உடைந்திடுமா? இத்தனை காலம் மனதில் எதையும் நினைத்து அவளை ஆளாக்கவில்லை. ஆனால் நொடியில் தரைமட்டமாக மாறினாள்.

   நெஞ்சடைத்தது ஆதிராவுக்கு தனக்கேன் இப்படி யோசனே உதித்தது என்று தன்னையே மடத்தனமாக உணர்ந்தாள்.
   கணவரை ஏறிட்டு தன்னிலையை விளக்க முடியாமல் தவிக்க, நிபுணனோ, “எதுக்கு தவிக்கற ஆதிரா? சிற்பிகா பையனை வேண்டாம்ன்னா? முதல்ல அந்த பிள்ளைகிட்ட கேட்கறதுக்கு முன்ன நெகட்டிவா யோசிக்காத. நான் எல்லாம் எந்த நிலையில நின்று உங்கப்பாவிடம் பொண்ணு கேட்டேன்? ஆஹ்.. என்னை விட என் பையன் குணத்துல குறைச்சல் இல்லை.

   நீங்க என்ன செய்தாலும் சரிம்மான்னு சொல்லிட்டு போறான். இந்த குணத்துக்கே அவனுக்கு நல்லது நடக்கும். அந்த பிள்ளையிடம் நீ கேட்க வேண்டாம். நான் நாசூக்கா கேட்கறேன். பருத்தி மில்லுக்கு வரும்ல பார்த்துக்கறேன்.
    நீ எதையும் யோசித்து கலங்காத.

  சப்போஸ் வேண்டாம்னா கூட பெரிசா எடுத்துக்காம விட்டுடு ஏன்னா நம்ம  பையன், நான் உன்னை விரும்பற மாதிரி அவன் சிற்பிகாவை ஆசைப்படலை விரும்பலை” என்று ஆதிராவின் இருகைகளை பிடித்து முத்தமிட்டார்.

     ஆதிராவின் முகம் தெளிவாக “சுத்தி ஒரெட்டு பார்த்துட்டு வாசல்கதவை சாத்திட்டு, ராயலை(நாயை) அவிழ்த்துட்டு வர்றேன். சஞ்சலமில்லாம போ” என்றதும் ஆதிரா சம்மதமாய் எழுந்தார்.

   ஓரளவு தட்டை கிச்சனில் போட்டுவிட்டு, உறங்க தோதுவாக எடுத்து வைத்து இரவாடையை அணிந்தாள் ஆதிரா.

   தாய் தந்தை பேசியதை கேட்ட ஆர்யனோ நகம் கடித்தபடி அவனது அறையில் அங்கும் இங்கும் உலாத்தினான்.

   உண்மை தான் நான் என்ன அந்த knife பிடிக்கும்னு சொல்லலை. ஆனா அவ என் அம்மா மனசை நோகடிச்சா அவ மனசை நான் நோகடிப்பேன்’ என்று மனதில் அவன் அன்னைக்கு பேச்சுகாகு சிற்பிகா சம்மதிக்க வேண்டுமென்றும் நினைத்தான்.

   இது தான் அன்பின் மாற்றமா என்று அந்த இறைவனே குறுநகை புரிந்தார்.

   அன்பின் மாற்றம் இவனுக்கு மட்டுமா அல்லது சிற்பிகாவும் உண்டா? என்று அடுத்த நாள் விடியல் மலர காத்தருக்க வேண்டும்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
  

41 thoughts on “என் நேச அதிபதியே -13”

 1. Avatar

  Dei Arya ne kalyanam Pannu ila pannama po ana enga adheera va kastapadudhadha….imbuttu prachanai nadandhalum enga nibu va site adikartha naan nirutha poradhillai🙈…adhanala skrm sattuputu nu pesi oru mudivuku vangappa…indha sirpi pulla Vera enna solla pogudho therila….

 2. Avatar

  நம்ம அஸ்வினை விட நிபுணனை ஓவரா லவ் பண்ணிட்டீங்களோ சும்மா அள்ளுது எல்லா dialogues…

  1. PraveenaThangaraj

   என் உயிரை உடைக்கறிங்களே.🤧🤧🤧
   அஸ்வின் பேரண்ட்ஸ் கூட இருந்தவன். அவன் சிடடுவேஷன் வேற இவன் ஜெயிலுக்கு போனதால வார்த்தையில் பக்குவமா முதிர்வு தேடி வைக்கிறேன். இருந்தாலும் அஸ்வின் விதுரன் நிபுணன் ஸ்பெஷல் ❤️❤️❤️❤️

  2. CRVS2797

   ஆமா நாங்களும் ஆவலா காத்திட்டிருக்கிறோம். சிற்பிகா எஸ் சொல்லுவாளா?
   நோ சொல்லுவாளா?ன்னு.

 3. Avatar

  Super sis nice epi 👍👌😍 endha aaryan enna dhan nenaikiran therilaiye pa Ava vendam nu solla koodadhu nu nenaikiran hmm parpom ammavukaga kalyanam pannitu enna dhan panna poranga nu🤔

 4. Avatar

  செமையா போகுதே!!… இன்னும் அவள் என்ன சொல்லுவான்னு பக்குன்னு இருக்கு!!… அவளோட முடிவுக்கு வெயிட்டிங்!!!…

 5. Avatar

  Super sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ waiting sirpiga 🤩🤩🤩👍

 6. Avatar

  ரொம்ப அழகாக போகுது கதை ஆர்யன் சம்மதித்து விட்டான் சிற்பி என்ன சொல்வாளோ ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கு சகி வாழ்த்துகள்

 7. Avatar

  Appa irrunthum iva Yan thaniya Inga yarum illanu irruka 🤔🤔🤔🤔🤔 apti enna thaan iva SDT murugasha ( pravee ka)🤪
  Anbu kku kattupattu nikkara enna(ariyan)seendiratha sirpi 🤪😂😂😂
  Nalla muttalum mothaluma irruka pooguthunu matttum nalla thayrithu …..

  Ama intha bharathan & family, nila Viki family, Gayathri and nilavan ellam enga irrukanga avala ellamintha kadhai kuilla guest roll ku varuvangala ? Suman mari 🤷

 8. Avatar

  Super super super super super super super super 💖💗💗💕❤️❤️💓💓💞💞💞💞💓❤️❤️💕💗💗💖💖💗💕❤️💞💞❤️💕💗💗💗💖 Sirpika enna Panna poralo………waiting for next ud sis

 9. Avatar

  இன்னைக்கு இப்படி சண்ட கோழியா சிலுத்துக்கிட்டு நிக்கிறவங்க தான் நாளைக்கு எல்லாரும் கண்ணு போடற மாதிரி வாழ்வாங்க

 10. Avatar

  Vara vara intha adhira va enaku pidikala…. Nibu peschu vakula aryanuku check vekara Mari iruku….. Nibu avar wife panraru nu paiyana hurt pana kudathu….

 11. Avatar

  இன்னும் திருமணம் பற்றி சிற்பிகா கிட்ட பேசவில்லை… அவள் என்ன சொல்ல போகிறாளோ….

 12. Avatar

  Aara imbutu nallavana nee…. 🤧😊😊😊….Hero Aryan dha but enga crush nibu dha 😁😁😁😁😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰vayasanalum loveum gethum konjakuda korayala😅😅😅😅…. But ava ena solaporalo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *