Skip to content
Home » என் நேச அதிபதியே -2

என் நேச அதிபதியே -2

அத்தியாயம்-2

  ஆர்யன் இல்லாத போகிப்பண்டிகை துளிருக்கு புகைமண்டலமாக தான் காட்சியளித்தது.

  மற்ற நாட்களில் அண்ணன் ஆர்யன் சர்வேஷ் இருவரும் நெருப்பை பற்ற வைக்க, தாய் தந்தையரோடு கும்பலாய் நெருப்பில் கைகளை காட்டி சூடுபடுத்தி முகத்தில் ஒற்றி எடுப்பாள்.

   ஆர்யன் நெருப்பில் அடிக்கும் மேளத்திலேயே(குறும்பர் தப்பட்டை)  தான் பகுதி நேரம் கற்ற வித்தையை நுழைத்து கிராமத்து இசைக்கேற்ப தப்பட்டை சத்தமிட்டு காட்டுவான்.

  அதென்னவோ துளிருக்கு ஆர்யனின் தப்பட்டை சத்தம் கூட மனதில் இதத்தை கொடுக்கும். 
    பழைய தீயயெண்ணங்களை களைந்து மனதிலிருக்கும் அழுக்கை விரட்ட தான் போகி. அதென்னவோ ஆர்யனின் இசையில் தன் மனதில் எவ்வித எண்ணங்களுக்கும் தடைதான். முழுமையும் அண்ணனின் தப்பட்டை ஓசையில் மனம் அமைதியுற்றுவிடும்.
  
   தாய் ஆதிரா தான் ‘குளிக்க போங்க’  என்று விரட்ட ஆரம்பிப்பார்.

  அதுவரை இசையில் லயித்து இருப்பாள். இன்று அப்படியில்லாத தருணமாக அமையவும் துளிருக்கு ஏகப்பட்ட வருத்தம்.
  என்ன தான் சர்வேஷ் கூடவேயிருந்து நெருப்பை பற்ற வைத்து தாய் தந்தையரோடு, கரும்பை கடித்து ருசித்து பேசினாலும் அவனுமே ஆர்யனின் வருகையில்லாததால் குடும்பமே ஏமாற்றம் கொண்டனர்.

   துளிரை போல சர்வேஷ் முகம் தூக்கி திரியவில்லை. ‘அண்ணனுக்கு என்ன வேலையோ? அவரே வரவில்லை என்றால் ஏதேனும் காரணமாக இருக்கும்’ என்ற முதிர்ச்சியுண்டு.

துளிருக்கும் அந்த முதிர்ச்சியுண்டுயென்று, அறிவு ஆயிரம் தெளிவாக எடுத்துரைத்தாலும், பாசத்தில் அண்ணன் வரவில்லை என்ற ஒன்றே மனதை சுணக்கமடைய வைத்திடும். நமக்குள் இருக்கும் மனமும் மூளையுமே எதிரெதிர் கட்சியாளர்கள் தானே?!

   ஒரு கையில் ஐந்து விரல்கள் எப்படியோ அப்படி தான் எந்த பண்டிகையிலும் ஐவரும் ஒன்று சேர்ந்துக்கொள்வது.

   ”இப்படியே இருந்தா என்னடி அர்த்தம்? அடுத்தடுத்து ஆகவேண்டியதை பாரு.” என்று ஆதிரா துளிரை விரட்டவும், “தங்கலட்சுமி தாயே சீக்கிரம் வந்து என்னை காப்பாத்து” என்று அங்கலாய்த்தபடி எழுந்தாள்.

   “அடிப்பாவி என்ன வாய் பார்த்திங்களா?” என்று கணவனை துணைக்கு இழுத்தாள் ஆதிரா.

    “சொப்புவாய் ரொம்ப அழகாயிருக்கு” என்றார் நிபுணன்.

   ஆதிராவோ “இந்த ரசனைக்கு ஒன்னும் குறைச்சலில்லை.
  பையன் வரலைனு முன்னவே சொல்ல என்னவாம்?” என்று எரிந்து விழுந்து செல்ல நிபுணனும் பின்னாடியே சென்றார்.

    “இந்தா… இப்ப அம்மையும் மகளும் நல்ல நாள் அதுவுமா முகம் தூக்கி வைக்கிறிங்க. இதை முன்னயே சொன்னா, என் பையனுக்கு தினமும் போனை போட்டு உசுரை எடுத்திருப்பிங்க.

  ஒரு விஷயம் அவனா வரலைனு சொன்னா விட்டுடணும். அதை விட்டுட்டு நல்ல நாள் அதுவுமா வரலைனு நீ ஐந்து மதிப்பெண் வினாவுக்கு விடை எழுதற மாதிரி பேசுவ. உன் பொண்ணு பத்து வரி மதிப்பெண்ணுக்கு விடையளிக்கற மாதிரி பேசுவா. என்னத்துக்கு?

  எனக்கு என் பையன் வர்றப்ப தான் பொங்கல் தீபாவளி.
   பண்டிகை வச்சி நல்ல நாள் கிடையாதுங்க அம்மினி.

   ஆகற வேலையை பாருங்க. காலையில சாப்பிட்ட இனிப்பு பொங்கல்ல வெல்லம் இன்னமும் கூட்டியிருக்கணும்.” என்றுரைத்து நழுவி செல்லவும், உண்மை தானே மகன் வரும் நாட்களே பெற்றவர்களுக்கு விழா நாட்கள் என்ற மனம் சாந்தமடைய, இனிப்பு பொங்கலில் வெல்லம் போதவில்லை என்ற குறையை சொல்லி சென்ற கணவரை தேடி முறைக்க நிபுணனோ வாசலை தாண்டி அவனின் தாய் தந்தையர் சமாதியிருக்கும் இடத்திற்கு சிறு நமுட்டு புன்னகையோடு சென்றடைந்தார்.

  ஆதிராவோ ‘வீட்டுக்குள்ள வருவிங்கள்ல அப்பயிருக்கு’ என்று நொடித்துக் கொண்டவர் அங்கே காலையில் ஏற்றி வழிபட்ட பொங்கல் உணவுகளை எடுத்து வர பின்னாலே சென்றார்.

  சர்வேஷ் நண்பர்களோடு புது படத்திற்கு சென்றிருக்க, துளிர் தன்னந்தனியாக ஹாலில் சோபாவில் சாய்ந்து, அவளுக்கு வந்த வாழ்த்து குறுஞ்செய்தியை அளவிட்டுக் கொண்டிருந்தாள்.

   “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கொழுந்து.
     நல்லா ஸ்வீட் பொங்கலல திண்ணுட்டு, கட்டிலில் காலாட்டி படுத்துட்டு இருக்காத. உங்க பெரியண்ணா வாங்கி தந்த லெகங்காவை போடுவியோ, இல்லை கொஞ்ச நேரத்துல நான் அனுப்பற கொரியர்ல வர்ற சுடிதாரை போட்டுப்பியோ, எதுனாலும் நல்லா அழகா ஜம்முனு அசத்தலா அலங்காரம் பண்ணிட்டு, அப்படியே  டவுன் பக்கம் வர்றது. கண்குளிர பார்த்துப்பேன். சரியா கொழுந்து” என்று வாசிக்க யாரோ தீண்டவும் விசுக்கென போனை பின்னால் மறைத்தாள் துளிர்.

   “என்னாச்சு துளிர்? இந்தா பிரசாதம் எடுத்துக்கோ. நம்மூர் அம்மன் பிரசாதம்” என்ற சிற்பிகாவின் குரலில், துளிர் நெஞ்சை பிடித்தபடி, அக்கம் பக்கம் வேறுயாரேனும் உள்ளனறாயென நோட்டமிட்டாள்.

   யாரும் பக்கத்தில் இல்லையென்றதும் தான் சீரான மூச்சு வந்தது.

    “என்ன?” என்றதும் “ஒ..ஒன்னமில்லை அக்கா” என்று சிற்பிகா கொடுத்த பொங்கலை ருசித்தாள்.

     “அம்மா இருக்காங்களா?” என்று உள்ளார அங்கும் இங்கும் தலையை திருப்பி அலசினாள் சிற்பிகா.

    “ஐயாவும் அம்மாவும் ஐயப்பா ஐயம்மாவோட சமாதிக்கு போனாங்க.” என்று சுட்டிக்காட்டினாள்.

   முன்பு இங்கிருந்து பார்த்தாலே சமாதி வெளிச்சமாய் தென்படும். தற்போது ஒரு குடிலை போல மாற்றியதால் யார் அதற்குள் இருக்கின்றனர் என அறியாது விட்டாள் சிற்பிகா.

      “தேங்க்ஸ் துளிர் தொந்தரவு பண்ணியதுக்கு மன்னிச்சிடு” என்று ஒட்டமெடுத்தாள்.

   துளிர் போனை எடுத்து ‘வரவர இவனுக்கு பயம் விட்டுப்போச்சு. அண்ணன் வரட்டும். இவனுக்கு முதல் வேலையா போகி போட்டுடுறேன்.’ என்றவள் மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தியை வாசித்தது தான் ஆச்சரியம். அதுவும் உதட்டில் சிறுமுறுவல் கூடியது.

   சிற்பிகாவோ “அம்மா.. ஐயா” என்று துளிர் அழைப்பது போலவே  அழைத்து நிபுணன் ஆதிராவை நெருங்கியிருந்தாள்.

     “வாம்மா, எப்பவும் தீபாவளி பொங்கல் அப்ப கூப்பிட்டா வீட்டுக்கே வரமாட்ட. இன்னிக்கு என்ன அதிசயமா?” என்று பேசியபடி சிற்பிகா கொடுத்த விபூதி குங்குமம் எடுத்து நெற்றியில் வைத்தாள் ஆதிரா.

     கூடுதலாக இனிப்பு பொங்கலை நீட்டவும் அதனை வாங்கிய நிபுணனோ சுவைக்க ஆரம்பித்தார். “எப்பவும் வரணும்னு ஆசைப்படுவேன் அம்மா. ஆனா சூழ்நிலை வேலை அதிகமா இருக்கும் வரமுடியாது. இப்ப தான் எந்த தடையும் வரலை. உங்களை நல்ல நாள் அதுவுமா பார்த்துட்டேன்.” என்று பணிந்து வணங்கினாள்.

   “சரிம்மா நான் கிளம்பறேன்” என்று செல்பவளை தடுத்தார்.

  “மதியம் சாப்பிட்டு போ சிற்பிகா.” என்று நிபுணன் கூறவும், “இல்லிங்க ஐயா நான் கிளம்பறேன்” என்று செல்வதிலேயே குறியாக இருந்தாள்.

   “அட ஒரு நாள் எங்களோட சாப்பிடும்மா.” என்று நிபுணன் தொன்னையோடு எடுத்து செல்ல, “இல்லைங்கம்மா, அதுவந்து ஐயா நான் கிளம்பணும் வேலையிருக்கு” என்று கூறியவளை ஆதிரா கைப்பிடித்து அழைத்து சென்றார்.
  
    தயக்கத்தோடு வேறு வழியின்றி வந்தாள். இதற்கு முன் ஹாலில் வந்து தலைகாட்டிவிட்டு அப்படியே ஓடிடுவாள் சிற்பிகா. இன்று சமையல் பக்கமிருக்கும் உணவு மேஜையருகே வரும் நிர்ப்பந்தம், இடமே அந்நியமாய் வரவேற்றது.

   வரும் போது சர்வேஷ் இல்லை. தற்போது துளிரோடு சர்வேஷ் ஹாலில் வீற்றிருந்தான். போதாத குறைக்கு கை முழுவதும் பெண்கள் புகைப்படம்.

   “இவங்க நல்லாயிருக்காங்க பாரு.” என்று சுட்டிகாட்டி ஒரு புகைப்படத்தை காட்டினான்.

  “சீ.. நல்லாவேயில்லை. கண்ணு குட்டி கண்ணா இருக்கு.” என்று தள்ளி வைத்தாள்.

   “அதுவும் அழகு தெரியுமா?” என்று சர்வேஷ் வாதிட, “அப்ப நீ கல்யாணம் பண்ணிக்கோ.” என்று அவன் காட்டிய புகைப்படத்தை அவனிடமே திருப்பி கொடுத்தாள்.

   சர்வேஷ் புகைப்படத்தை தூர வைத்துவிட்டு பெற்றோர் வரவும் எழுந்தான்.

   மொத்த புகைப்படமும் கவரிலிலிருக்க வாய் பிளந்து  சரிந்து விழுத்தது.

   “எதுவும் தேறலை. அம்மா அழகா ஷோகேஸ் பொம்மை மாதிரி பொண்ணா இருக்கு. கண்ணுல ஒரு திமிரே இல்லை.” என்று வாதிட்டாள்.

   நிபுணன் நகைக்க, ஆதிராவோ “சிரிக்காதிங்க ஆர்யனுக்கு பிடிக்குதோ இல்லையோ, நீ ஏகப்பட்டதை தவிர்க்கற. அதெல்லாம் வச்சிட்டு சாப்பிட வா” என்று அழைத்தார்.

   உணவு மேஜையில் வரவும் “அய் இன்னிக்கு சிற்பிகா அக்கா நம்மளோட சாப்பிட வர்றாங்களா? ஜாலி தான்” என்று கூறவும் சர்வேஷ் அமைதியாக மாறியிருந்தான்.

    பொதுவாக பெண்கள் என்றாலே சர்வேஷ் வாய் திறக்க யோசிப்பான்.

    ஆதிரா பரிமாறவும் சிற்பிகா நெளிந்தவளாக தயக்கம் காண்பிக்க, “கூச்சப்படாம சாப்பிடு.” என்று பரிமாற அய்யோ அம்மா நீங்க உட்காருங்க. நானே வச்சிக்கறேன்.” என்று மறுத்து பார்த்தாள்.

  ஆதிரா கேட்டால் தானே, பரிமாறவும், மடமடவென உணவருந்தினாள். இங்கிருந்த

    “ஆர்யன் அண்ணா வந்திருக்க வேண்டியது. இப்படி மோசம் பண்ணிட்டார்.” என்ற துளிரின் புலம்பலில் சிற்பிகா கை அலம்பி எழுந்துவிட்டாள்.

   “சாரி அம்மா அவசரமா போகணும். இரண்டு பேருக்கு பொங்கல் டிரஸ் எடுத்து தரணும். மன்னிச்சிடுங்க” என்று செல்லத்துடித்தவளை ஆதிரா நிற்க வைக்க விரும்பவில்லை. இரண்டு வாய் அள்ளி விழுங்கவே சிற்பிகா படாத பாடுபட்டுவிட்டாளென்று அறிந்து புன்னகையோடு வழியனுப்பிவிட்டாள்.

  நிபுணனும் அப்படியொன்றும் சிற்பிகாவை நிறுத்தி சங்கடப்பட வைக்கவில்லை.

    சர்வேஷ் தான், இந்த துளிர் இருக்கே வாயை வச்சிட்டு சும்மாயில்லாம’ என்று முனங்கியவன், அதன்பின் சிற்பிகா போனால் என்ன? என்ற ரீதியில் உணவை விழுங்க ஆரம்பித்தான்.

     துளிருக்கு சிற்பிகா ஓட்டமும் நடையும் தெரியவில்லை. மேலும் அவளுக்கு சிலது எதுவும் தெரியாததால் நன்மை தான்.

   ஆதிராவோ ஓட்டமெடுத்த சிற்பிகாவை கண்டு, மெதுவாய் நிபுணனை காண, ‘காலம் மாறலாம் காட்சி மாறுமா?’ என்று உச்சரித்து கை அலம்பி எழுந்தான்.

   ஆதிரா மற்றதை புறம் தள்ளிவிட்டு “எங்க ஓடறிங்க. அங்கிருக்கற போட்டோ எல்லாம் பார்த்து சொல்லுங்க” என்று இம்சை கூட்டவும், “எனக்கு இன்னொரு கல்யாணம் வேணாம்டி. நீயே போதும் டீச்சரம்மா” என்று பெற்றெடுத்த குழந்தைகள் கிச்சனில் இருக்க சரசமாய் பேசினான்.

    “ஆசைய பாரு. விட்டா கல்யாணம் கட்டிப்பிங்க” என்றவள் புகைப்படத்தை கையில் திணித்தாள்.

   “இங்கப்பாரு கட்டிக்கப்போறவன் அவன். அவன் வந்ததும் இந்த போட்டோ எல்லாம் அவன் கையில கொடு. என்னிடம் நீட்டினா நான் எனக்கு கல்யாணம் பண்ணிக்க  மேட்சானு தான் பார்ப்பேன். உனக்கு ஓகே வா?” என்று சண்டைக்கு துபாம் போட சீண்டினான்.

  “உங்கப்புள்ள எதுக்கு சண்டை என்ன காரணம்னு கேட்கறான். போன்ல நீங்க பேசற பேச்சை எல்லாம் சொல்ல முடியலையேனு தைரியம். சும்மா என் வாயை கிண்டறது.

   இந்த உலகமே என்னவோ இந்த ஆதிரா தான் நிபுணனிடம் சண்டையிழுக்கறதா பேசும்.
   மிஸ்டர் நிபுணன் என்ன செய்வார்னு உலகத்துக்கு தெரியலை. கொடுங்க போட்டோவை என் மகளிடமே கொடுத்துக்கறேன். அவ செலக்ட் பண்ணினா ஆர்யனுக்கு பிடிக்கும்.” என்று சிலிர்த்துக் கொண்டாள்.

    ‘பையன் வர்றதுக்குள்ள இவளுக்கு என்ன அவசரம். இப்ப என்ன வயசாயிடுச்சு? எனக்கு மாமனார் பட்டம் தர்ற ரொம்ப குறியா இருக்கா’ என்று அலுத்தபடி மீதியிருந்த இனிப்பு பொங்கலை மாட்டிற்கு வழங்க சென்றார் நிபுணன்.

    “அன்னம்மா சக்கர பொங்கல் சாப்பிடறியா? கொஞ்சமா இனிப்பு கம்மியா இருக்கு” என்று அன்னம் என்ற மாட்டிற்கு கையில் அள்ளி கொடுக்க, அன்னமோ தன் சுறசுறப்பான நாவால் நிபுணன் கையிலிருந்த பொங்கலை ருசித்தது.

   அதே நேரம் “துளிர் பாப்பா கொரியர் வந்திருக்கு” என்று அவ்வூரில் இருக்கும் கொரியர் ஆபிசில் வேலை செய்யும் நடுத்தர வயோதிகர் உரைத்தார்.

   நிபுணன் கையை அலம்பியபடி துளிருக்கா?” என்று வர, அவசரக்கதியில் பாதி ஐஸ்கிரீம் விழுங்கி சட்டையில் பாதி கொட்டி ஓடிவந்த மகளை நிபுணன் ஏறிட, “பிரெண்ட் பிரெண்ட் ஏதோ அனுப்பறதா சொன்னாப்பா” என்று மூச்சு வாங்கினாள்.

   “கையெழுத்து போட்டு வாங்கு” என்று கூறிவிட்டு கொரியர் எடுத்து வந்தவருக்கு பொங்கல் காசாக பணத்தை வழங்கினான் நிபுணன்.

   -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

42 thoughts on “என் நேச அதிபதியே -2”

 1. Avatar

  Ama indha thulir pullaiku yaaru msg panradhunu therila…indha sirpika yen vandha udanae odididura….ivalukku enna tan pirachanai nu therila…enga Aryan epo varan nu therila….skrma vada Arya enga nibu ku second Marg pannanuma aasaiya paarthiya…..sarvesh thulir sirpika moonum oru dhinusavae suthitu irukanga….enga veena akka enna enna twist vachirukanganu therila….romba interesting ah super ah iruku ka…… waiting for next epi…..

 2. CRVS2797

  ஆஹா…! யாரு யாருக்கு நூல் விடறாங்க, தூண்டில் போடறாங்க, மீன் புடிக்க போறாங்கன்னு ஒண்ணும் தெரியலைப்பா. ஆனா, இந்த துளிர் குட்டியை மட்டும்
  எவனோ செமையா ரூட் விடறான்னு தெரியுது.
  அது யாருன்னு பொறுத்திருந்தே தெரிஞ்சிக்கலாம்.

 3. Avatar

  Superb🎊🥰💞🎊💚💙🤩💗😘😘🤩🤩🤩… Nibunan mass 💚💕💙💙💗🧡👏🧡💜… interesting 👌👍👍💯💯💯💯👌💯👌💯👌👌💖

 4. Kalidevi

  Cute couples aathira nibuna epovume. Inum antha azhagu apdiye koduthinga thanks sisy. Intha story starting superb going good ithulaum nalla kathai azhaga vara pothu 💕😍

 5. Avatar

  Wonderful narration sis. Nibu always lovable hero. Who is sirpiga? Super name. And very peculiar name sis. Thulir interesting girl. Aadhira nibu romance cute.intresting sis.

 6. Avatar

  துளிரு யாரந்த கொழுந்துனு சொல்லிட்டு பார்சலை வாங்கு😊😊😊😊😊நானும் தெரிஞ்சிக்குவேன் உனக்கு நூல் விடுற அந்தப் பய யாருனு….ஆர்யா கிட்டச் சொல்லுவனா அவனோட நண்பனா இல்லை சொந்தத்துல முறைப் பையனானு தெரியலையே🤩🤩🤩🤩🤩

  யாரிந்த சிற்பி😍😍😍😍அம்மானு சொல்லுறா ஆனா ஆர்யா பேரைக் கேட்டதும் தெறிச்சி ஓடுறாளே ஏனோ🤔🤔🤔🤔🤔நிபு சொல்லுறதைப் பார்த்தா முறைப் பொண்ணா இருப்பாளோ🙄🙄🙄🙄சர்வா கூட பேசலையே….

  ஆரா கரெக்ட்….இந்த சேட்டைக்கார நிபுணனைச் சமாளிக்குற உன்னைத் தான் உலகமே கெட்டவனு சொல்லுது😂😂😂😂😂ஆனாலும் இந்த வயசுலயும் அழகாகக் காதலிக்குற உங்களோட நேசம் அழகாகத் தான் இருக்கு🥰🥰🥰🥰🥰

 7. Avatar

  Hyyyaaaaa oruvaliya second epi padichiten… Sis daily ud kudunga…. Timing edhachum solunga sis…. Sirpika yaru,,,, sarvesh indha thulir elam oru type ah ve suthurangaley yen…🧐🧐. Nibu aanalum over dha di… 😅😅😅.. Yar mataporangalo… Ana indha thulir yarkitayo vasama matikita😄😄🤣🤣🤣🤣Aryan bby seekrama vandhuru.. . Unnavera indha sis olichu vachutanga😅😅😅adutha epi la papom varataaaa…

 8. Avatar

  துளிர்ரோட கொழுந்து யாருப்பா அது😉🥰
  இந்த சிற்பி புள்ள ஏன் இப்படி தயங்குது? இந்த சர்வேஷ்யும் சரி இல்லை 🤔 என்னமோ இருக்கு, இருங்கடி இரண்டு பேரும் சீக்கிரம் மாட்டுவீங்க 🤩
  அடேய் ஆர்யா உனக்கு இங்க பெண்ணு பார்க்க வேலைய ஆரம்பிச்சுட்டாங்க உன் ஐடியா என்ன ? இல்ல நீயும் துளிர், சர்வேஷ் மாதிரி ஏதும் நினைச்சுகிட்டு இருக்கீயா 🫣😉🥰
  எவ்வளவு காலம் ஆனா என்ன வயசு ஆனாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் குறையலங்கற மாதிரி இருக்கு ஆதி ❤️நிபு 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

 9. Avatar

  யார் இந்த சிற்பிகா?? எதுக்கு ஆர்யனோட பெயரை சொன்ன உடனே அந்த பிள்ளை சாப்பிடாம கூட ஓடிப் போச்சு.

 10. Avatar

  Super sis nice epi 👍👌😍 nibunan um adhira vum eppovum semma pair pa romba interesting ah pogudhu story 👍👌😍

 11. Avatar
  கௌசல்யா முத்துவேல்

  துளிர் மேடம் பன்றது சரியில்லையே!!… அது யாரா இருக்கும்???… சிற்பிகா ஏன் இப்படி சங்கடப்படனும்???… இன்ட்ரஸ்டிங் கா!!..

 12. Avatar

  அருமையான கதை நகர்வு அக்கா….👌👌👌👌👌…. நிபுணன் – ஆதிரா ஜோடி என்றுமே அழகு தான்…😍😍😍😍….. இந்த சிற்பி யாராக இருக்கும்….🤔🤔🤔🤔

 13. Avatar

  Wow Aadhira Nibunan eppavumae semma dhan 😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘indha sirpika yaara irukkum🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *