Skip to content
Home » என் நேச அதிபதியே -21

என் நேச அதிபதியே -21

அத்தியாயம்-21

   எதற்கு ஓடி வந்தால்? ஏன் நிற்காமல் அறைக்குள் பதுங்கிவிட்டாளென்ற எண்ணத்தோடு மீண்டும் தங்கள் அறைக்குள் வந்தான்.

    “என்னாச்சு ஏன் ஓடி வந்த?” என்றதும் மீண்டும் பின்னடைந்தாள். கையில் அவள் சிகையிலிருந்து விழுந்த துண்டை நீட்டினான்.‌

‌‌ “உங்களை பேலன்ஸுக்கு தோளை பிடிச்சதும் நீங்க தப்பா எடுத்துக்கிட்டிங்களோனு பயம். அதனால ஓடிவந்துட்டேன்” என்று பாதி உண்மையை கூறினாள்.

    ஆர்யனோ அவளை தொட்ட வெற்றிடையை கவனித்தான். சேலையால் இடையை மறைத்திருந்தாள். அவள் சொல்லாத மீதி உண்மை அவனறிந்தான்‌.

‌ அவ இடுப்பை ஆர்யன் தீண்டியிருக்க, பயந்து ஓடிவந்திருக்கின்றாள்’ என்றது புரியவும் எதற்கும் விளக்கமளிக்காமல் நடையை கட்டினான்.‌ மிச்ச மீதி மருதாணி ஓவியத்தை காணாதது புத்திக்கு உரைக்க, நின்றான்.‌

   சிற்பிகாவோ அவனிருக்கவும் துண்டால் முடியை உலர்த்தி இயல்பாக முயன்றாள்.‌

  தன்‌ சிகையை முதுகினிலிருந்து முன்பக்கம் போட்டு உலர்த்த துவங்க, ஆர்யன்‌ கண்கள் அவளது முதுகில் ஊர்ந்தது.

  அவன் பார்த்ததும் சிந்தித்ததும், அவளாக ப்ளவுஸ் தைய்த்து இருப்பதை தான். சின்னதாய் சாதாரண பார்டர் கொண்ட பூனம்  சேலை. ஓரத்தில் மட்டும் பார்டருக்கு சில சரிகையை ஒட்டியிருந்தது. பூனம் சேலை என்றாலே மேனியை தழுவியிருக்கும்.‌

   குண்டாக இருக்கும் பெண்ணிற்கு பூனம் சேலை உடல்வாகுவை மெலிதாக காட்டும். ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு காட்டன் கலந்த சேலைகள் சற்று உடல் பூசியது போல கிட்டும்.

இங்கு சிற்பிகாவின்‌ தோற்றம் சிக்கென காட்டியது‌ அளவான அழகு.

     அதுவும் இந்த பிளவுஸ் சின்ன சின்ன ப்ளீட்ஸ் வைத்து நுணுக்கமாய் தைத்திருந்தாள்.‌

   அவளது சந்தன நிற தேகத்தில் முதுகு பக்கம் ஆர்யன் கண்கள் செல்லவும்,உள்ளுணர்வில் விழித்த சிற்பிகா திரும்பினாள்.

‌ தொண்டையை செருமி, “எதுக்கு அப்படி ஓடிவந்த?” என்றான்.‌

    அதானே எதுக்கு ஓடிவந்தோம்’ என்று விழித்தவள் சிந்தனைக்குள் படையெடுக்க, “ஆங்.. நீங்க நாளைக்கு டூயூட்டி போறதா ஐயா அம்மாவிடம் சொன்னிங்க. நான் வேலைக்கு எப்ப போகறதுனு கேட்டேன்.‌ ஐயா என்ன சொன்னார்னா ஆதிராம்மாவிடமும் உங்களிடமும் கேட்டுக்க சொன்னாங்க.
   ஆதிராம்மா தாராளமா போன்னு‌ சொல்லிட்டாங்க. உங்களிடமும் பர்மிஷன் கேட்கணும் இல்லையா?” என்று‌ துண்டை காயப்போட்டு சிகையை அள்ளி முடித்தாள்.‌

‌ “நம்ம மில்லுல தானே வேலைக்கு, தாராளமா போ. என்னிடம் எதுக்கு கேட்கணும்” என்று கூறிவிட்டு அங்கேயே இருந்தான்‌.

   தங்கள் பேச்சு முடிந்ததா நீள்கின்றதா என விழித்தவள், “நீங்க எதுக்கோ கீழே வேகமா போனிங்க” என்று அவனை கீழே அனுப்ப பேச்சை வீசினாள்.

‌   “ம்ம்.. மறந்துட்டேன்” என்றவன் நெற்றியை தேய்த்து மெத்தையில் சாவகாசமாய் அமர்ந்தான்.‌

   ஆர்யனுக்கு அவள் எதற்கு சீர்த்திருத்த பள்ளியில் இருந்தாளென்று கேட்க எண்ணம் உதித்தது. ஆனால் நேரிடையாக கேட்க தயக்கம் பெற்றவனாக, ”கையில மருதாணி டிசைன் நல்லாயிருக்கு.‌ நீயா போட்டுக்கிட்டதா  அம்மா சொன்னாங்க. இடது கையில போட முடியும் வலது கையில எப்படிப்போட்ட? அதோட இது மருதாணியை மெஹந்தியா?” என்று இயல்பான வசனத்தை பேச ஆரம்பித்தான். அவள் தன் தோளில் கையை பற்றிய போது மருதாணி வாசம் வீசியது.

    சிற்பிகாவோ, மருதாணியை பார்த்து, “இது வீட்ல இருக்கற மருதாணி தான். செடியிலயிருந்து கொழுந்தா எடுத்து நல்லா பேஸ்டா அரைச்சிட்டு பால்கவர்ல கோன் ஷேப்ல வச்சி இரப்பர் பேண்ட் போட்டு, மெஹந்தி கோன் மாடல்ல தயாராவச்சிக்கிட்டேன்.‌

   முதல்ல இடது கையில உள்ளங்கையில போட்டுட்டேன்.‌ அப்பறம் முழங்கை வரைக்கும் மருதாணி போட்டேன்.‌ நைட் முழுக்க காய்ந்ததும் அடுத்த நாள் வலது கைக்கு இடது கையால போட்டுகிட்டேன்.‌ ஆக்சுவலி எனக்கு சின்ன வயசுல இரண்டு கையாலையும் எழுத வரும். அதனால மெஹந்தி போடவும் முடிஞ்சது.‌

‌‌ஒரு வாரம் ஐயா அம்மா மில்லுல வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதனால டைம் பாஸ் பண்ணினேன்.‌” என்று கூறி முடித்தாள்.‌

  “நைஸ் நான் மருதாணியை பார்க்கலாமா?” என்றதும், கையை நீட்டினாள்.

    “எப்பவும் புள்ளி வச்சி அதை சுத்தி ஆறு புள்ளி வச்சிடுவேன். அதோட தொப்பி வைப்பேன். இந்த முறை கல்யாணம். அதுவும் உங்களோட கல்யாணம்.‌

   உங்களை சார்ந்தவங்க நிறைய பேர் என்னை பார்த்து உங்களை எடைப்போடலாம்.‌ அந்த நேரம் சிம்பிளா போட்டிருக்க முடியாதுனு, பல்லாக்குல கல்யாண பொண்ணு, யானை, மத்தளம் மேளதாளம்னு மாப்பிள்ளை குதிரையில உட்கார்ந்திருக்கற மாதிரினு போட்டேன்.” என்றாள்.‌

‌   கைகளில் அவள் வரைந்த ஓவியங்கள் அவனை ஈர்த்தது.

    “ரொம்ப அழகா வரைந்திருக்க, மெஹந்தி பேக் இல்லாம மருதாணில பண்ணிருக்கன்னா ரியலி ஆவ்சம்” என்று மனதார பாராட்டினான்.‌

   கணவனிடமிருந்து வரும் முதல் பாராட்டு எந்த மனைவிக்கு தான் பிடிக்காது.‌

   சிறு முறுவலும் வெட்கமும் உதிர்த்து, “தேங்க்ஸ்” என்றாள்.

   “ஆ…” என்றவன் அவள் பெயரை கூப்பிட தவிர்த்து நின்றான்.‌

   “ஏதாவது சொல்லனும்மா” என்று சிற்பிகாவே கேட்கவும், “மெட்டி போடறச்ச கால்லயும் மெஹந்தியிருந்தது.

   அதையும் நான் பார்க்கலாமா?” என்றதும் திடுக்கிட்டாள்.‌

   “என்னாச்சு?’ என்று‌ கேட்க, முழிக்கவும், “பார்க்கலாமா?” என்றதும் தலையாட்டி தன் சேலையை முழங்கால் வரை தூக்க, இரு கால்களிலும் தஞ்சாவூர் தலையாட்டி நாட்டியபொம்மைகள் இருந்தது.

   “தஞ்சாவூர் பெயிண்டிங்ஸ், தஞ்சாவூர் பொம்மைனா பிடிக்கும். அதனால் இப்படி வரைஞ்சேன். அடிக்கடி என்னோட நோட்ல வரைந்து பழக்கம் அதனால் ஒழுங்கா வந்திடும்.” என்று சேலையை இறக்கிடும் அவசரம் அவள் பேச்சில் இருந்தது.

    ஆர்யனோ “உனக்குள்ள நல்ல திறமையிருக்கு. மருதாணிலயே இத்தனை அழகா வரைந்திருக்க? ஓவியம் வரைவன்னா கோலமும் வரும் இல்லையா? இந்த மாதிரி கலைகளுக்கு பொறுமை ரொம்ப முக்கியமாச்சே.” என்றவன் பார்வை அவன் அணிவித்த மெட்டியிலிருந்தது‌.

   அவளது மருதாணி கால் விரலில் அழகாய் வெள்ளி முத்து பளிச்சிட்டது.
 
   வெள்ளி கொலுசும் அவன் கவனத்தை ஈர்க்க, ‘அதிர்ஷ்டசாலி தான்’ என்ற எண்ணவோட்டத்தில் அவளது மருதாணியை மீறி கண்கள் மேலெழும்ப, சட்டென சேலையை கீழிறக்கினாள்.

   ஆர்யனோ “சாரி நான்‌ சர்வேஷிடம் பேசணும்னு கீழே இறங்கினேன்.‌ தம்பியை பார்த்து பேசிட்டு வந்திடறேன்” என்று எழுந்தான்.‌

   சிற்பிகாவோ முதல்ல கிளம்புங்க என்றது போல தலையாட்டி அனுப்பினாள்.

   அவன்‌ சென்றதும் சேலையை சரியாக மீண்டும் கட்டிக் கொண்டாள்.

    இடையே தெரியாமல், கட்டி கொண்டு, தலைவாற முடிக்க, “அண்ணி… அண்ணி” என்று துளிரின் குரலில் “வா துளிர்” என்றதும், கை நிறைய மல்லிகைப்பூவை தொடுத்து எடுத்து வந்தவளாக, “நீங்க தலைவாறிட்டா அம்மா உங்களுக்கு இதை வச்சிட சொன்னாங்க” என்று‌ சூடிவிட்டாள்.

    சிற்பிகாவோ முகமலர்ந்து துளிரை பார்க்க, “இத்தனை நாள் இங்க தான் இருந்திங்க.‌ அடிக்கடி பார்த்தும் உங்களை அண்ணாவுக்கு பொருத்தமாயிருப்பிங்கன்னு எனக்கு தோணவேயில்லை பாருங்க. நல்ல வேளை உங்களை அம்மா மிஸ் பண்ணலை” என்று கட்டிக்கொண்டாள்.

‌  சிற்பிகாவோ எதுவும் பேசாமல் துளிரை பார்த்து, ரசிக்க, “அண்ணி நீங்க அழகாயிருக்கிங்க” என்றவள் அம்மா உங்களை சாப்பிட கூநபிட்டாங்க வாங்க” என்று உரிமையாக அழைத்து சென்றாள்.‌

‌ கீழே ஆர்யன் சர்வேஷ் பக்கத்தில் பக்கத்தில் இருந்தார்கள்.
சரவணவேலனும் இருந்தான், முத்து-சாரு தம்பதிகளும் இருந்தார்கள்.‌

தாத்தா ஆச்சி எல்லாம் சின்ன தாத்தா வீட்டிலிருந்து வந்திருக்க ஹாலே நிரம்பியிருந்தனர்.

ஆதிராவோ ஆர்யன் அருகே மருமகளை அமர்த்தி சாப்பாடு பரிமாற, எழுந்தாள்.‌

”தம்பதிகளா சாப்பிடுங்க” என்றதும் உட்கார்ந்து விட்டாள்.

‌‌எல்லோரும் இருக்க, பேசவும் தயங்கி அமைதியாக உண்டாள்.‌

கலகலவென அனைவரும் பேசி சிரிக்க, தானும் இப்படியொரு குடும்பத்தில் உறுப்பினர் என்றதில் ஆனந்த கண்ணீர் துளிர்த்தது.

ஆர்யனோ பேச்சும் செய்கையும் வேறிடம் இருந்தாலும், ஒரு பார்வை அருகேயிருப்பவளையும் கவனித்தது.

‌‌ முனுக்கென்ற கண்ணீரை கண்டதும், ‘இப்ப என்ன கஷ்டம்னு அழுவற?’ என்று சத்தமில்லாமல் கிசுகிசுத்தான்.

‘நான் ஒன்னும் கஷ்டம்னு அழலை. இது ஆனந்த கண்ணீர். ஆதிராம்மா வீட்ல நான் ஒருத்தி என்ற சந்தோஷம்.’ என்று மூக்குறிந்து சாப்பிட்டாள்.

ஆர்யனோ தட்டிலிருந்த உணவை துழாவி சிற்பிகாவை ஏறிட்டான்.‌

தன்‌தாயை கீழே தள்ளிவிட்டு காட்டு கத்தலாய் கத்தியவள், ஒரறை அறைந்து அடக்கவும் தமிராய் நின்றவள், இன்று ஆதிராம்மா என்று மூச்சுக்கு முன்னூறு முறை அன்னையை தூக்கி வைத்து பேசுகின்றாள்‌. இவள் மாற்றம் எதனால் உண்டாயிருக்கும்? ஏன் சீர்த்திருத்த பள்ளியில் இருந்தாள்?

இவளை பற்றி அறியும் தாகத்தை என்னுள் விதைக்கின்றாளே என்று பார்க்க, “ப்ப்ப்பா அண்ணா ஒரு பொண்ணை சைட் அடிக்கிறதை இப்ப தான் பார்க்கறேன்.‌ ஆர்யண் அண்ணா வழியுது.

அண்ணி இந்த டம்ளரில் பக்கத்துல வச்சிக்கோங்க‌ அண்ணா விடற ஜொள்ளு பிடிச்சி வச்சிடுங்க” என்று துளிர் பேசவும் பார்வையை உலுக்கி யாரையும் ஏறிட முடியாத அவஸ்தையோடு ஆர்யன் கை அலம்பினான்.

சிற்பிகாவோ அவர் என்னையவா பார்த்திருந்தார்? என்று நினைத்தவள் ஆர்யனை ஏறிட தயங்கினாள்.

‌‌ நிபுணனோ ‘பார்வை அம்புகள் எல்லாம் இவன் இந்தளவு வீசறதை பார்த்தா இந்த விக்கெட் சீக்கிரம் புத்திசாலியா குடும்பஸ்தனா மாறிடும் போலயே’ என்று சிரித்து கொண்டார்.‌

துளிரோடு சிற்பிகா கூடவே சுற்ற, “நீ வேண்டுமின்னா ரெஸ்ட் எடு’ என்று வலுக்கட்டாயமாக தங்கலட்சுமி அனுப்ப, ஆர்யன் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

 போனில் தலையை விட்டிருந்தவன் பார்வை மேலெழும்ப, துரத்தி விட்டுட்டாங்களா? அம்மாவா ஆச்சியா?" என்றான்.‌

"ஆச்சி" என்றாள்.

“உட்காரு” என்று சுட்டி காட்டிவிட்டு, பார்வை அவளை ஒரு நொடி ஆராய, அதை கண்டுவிட்டாள்.

“சாரி… பிளவுஸும் நீயா ஸ்டிரிச் பண்ணியதா அம்மா சொன்னாங்க.‌ குட்டி குட்டி ப்ளீட்ஸ் அடிக்கடி பார்வை அங்க போகுது‌. காலையிலயே சொல்லணும்னு நினைச்சேன்.‌ எங்க தப்பா எடுத்துப்பியோனு சர்வேஷ் கூட பேச போயிட்டேன்.

 உன்னோட ஹாபிஸ் சொல்லு தெரிஞ்சுக்கறேன்" என்று தலையணையை முதுகுக்கு கொடுத்துவிட்டு காலை நீட்டியிருந்தான்.‌

சிற்பிகாவோ திணறியவளாக இருக்க, ”ஏதாவது பேசு. இல்லைனா என் தங்கை இங்கயே நோட்டம் விட்டுட்டு இருக்கா.” என்றதும் தான் சிற்பிகா கழுத்தை திருப்ப முயல, “திரும்பாத, துளிரும் ஆச்சியும் இதுக்கு மேலயிருக்கற மொட்டை மாடிக்கு போயிருக்காங்க.” என்றதும் சிற்பிகாவோ கையை பிசைந்தாள்.

“ரொம்ப யோசிக்க வேண்டாம். நீ உன் ஹாபீஸை சொல்லு.‌” என்றதும், தங்களை இருவர் காணும் நேரம் எப்படி பேசுவதென்ற எண்ணத்தில் திணற, “நான் ஓவியம் வரைவேன். அது ஸ்கூல்ல கத்துக்கிட்டேன். கோலம் போடறதால மேபீ வரையறதும் வந்துச்சு.‌ வரையறது சம்மந்தமா ஆதிரா அம்மா தான் மத்த‌து வாங்கி தருவாங்க. சுமன் அங்கிள் ஓய்ப் நதியா ஆன்ட்டி அறிமுகப்படுத்தி மத்த கலையில் வரைய பழகியது. அதோட கிளாசுக்கு போய் ஓவிய கண்காட்சிக்கு வரையற அளவுக்கு தேற்றிவிட்டாங்க. அதனால் வரையறதால மருதாணி வரும்.

அதோட பீட்ஸ் வச்சி ஹாண்ட் கிராப்ட் செய்வேன். தையலும் அந்த ஸ்கூல்ல கத்துக்கிட்டேன். வெளியே ஆதிரா அம்மா தான்‌ கத்துக்க ஏற்பாடு செய்தது.” என்றதும் ஆர்யன் பார்வை துளிர் ஆச்சி கீழே செல்வதை கவனித்தான். சிற்பிகாவை போதும் நிறுத்து என்று கூறவும் மனமின்றி, “பார்த்தேன் பிளவுஸ் டிசைனிங் நல்லாயிருக்கு” என்றதும் அவளாகவே நாணினாள்.

சிற்பிகா மௌவுனம் காக்கும் பொழுது ஆர்யன் வாய் திறப்பானா?

அவனுமே போனை எடுக்க, சிற்பிகா அவளும் தன்‌போனை தேடினாள்.

”என்ன தேடற?” என்றதும், போன் எங்கயோ வச்சிட்டேன்.” என்றதும் அவனது போனை நீட்டி கால் பண்ணி பாரு. ரிங் போகும் என்றான்.‌

‌‌அவளும் வாங்கி விட்டு எண்ணை அழுத்த, ‘knife’ என்று முன்னால் வரவும் ஆர்யனை கத்தி போலவே கூர்மையாய் பார்க்க ஆர்யனோ போனை பிடுங்க மெத்தைக்கு அருகே இருந்த ஷெல்பில் சிற்பிகா போன் அலறியது.

-தொடரும்

 • பிரவீணா தங்கராஜ்

39 thoughts on “என் நேச அதிபதியே -21”

 1. Kalidevi

  Matniya aaryan first wife nu mathu. Keka varatha sikram kelupa apo thana ethuku ava anga iruntha Yen aathira I thalli vitta nu therium. First atha therinjiko. Apram tha unga appa ninacha mari sikram family man aga mudium

 2. Avatar

  Nibu kanakku padi vicket சீக்கிரம் vilunthirum pola.❤️❤️
  இன்னுமா wife nnu மாற்றவில்லை 😀😀😀

  1. CRVS2797

   அச்சோ..! மாட்டிக்கிட்டானா .. மச்சான் ? வசமா மாட்டிக்கிட்டானா…???

 3. Avatar

  Super sis nice epi 👌👍😍 nalla poitu erundhuchu neeye keduthitiye da eppo Ava marubadium murunga maram yerama erundha sari🙄

 4. Avatar

  அருமையான எபி கா!!.. பேச ஆரம்பிச்சுட்டாங்க!!… இனிமே புள்ளை புழைச்சுப்பான்!!…

 5. Avatar

  ஆஹா சீக்கிரமாக சிற்பிகா பக்கம் விழுந்திருவார் போலையே டாக்டர்.

  கடைசில knife ல மாட்டிடானே பயபுள்ள..

  அருமை

 6. Avatar

  Unmai thayrinju gunam purinja kandipa intha Jodi sikkaram onnu saynthurum 🤗🤩🥰
  Nalla rasigan thaan inthan ariyan niriya aangal ithu ellam yatho than nu pathuttu a nalla irruku nu summa payrukku solittu poiruvanga but Ivan unmaiya rasichu soldran 😍❤️

 7. Avatar

  ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குமா கதை ஆர்யன் சிற்பியைபற்றி அறிந்து கொள்வதே விட ஏன் சிற்பி சீர்திருத்த பள்ளிக்கு சென்றார் என்பதை அறிந்து கொள்ள எனக்கு ஆவலாக உள்ளது சகி ஆர்யன் சீக்கிரம் சிற்பியிடம் கேட்பாய் என்று பார்த்தால் கத்தியை காட்டிவிட்டாயா ஆர்யா வாழ்த்துகள்

 8. Avatar

  நிபந்தனுக்கு மட்டும் நல்லா தெரிஞ்சிருக்கு தான் பையன் சீக்கிரமே சிற்பிகா கிட்ட விழுந்துருவான்னு😂😂😂😂.
  ஆர்யன் இந்த அளவுக்கு கலா ரசிகனா நம்பவே முடியலையே

 9. Avatar

  Enga scenario ipo vadiveluvoda match aguthu sis… Aa@aa nnu pathutrundha kadaisiya bussunu Poirchey 🤣🤣🤣🤣nibu u caught my voice😍😍😍🤣🤣🤣🤣….. Knife ehhh dha inum konjanerathula paru maatniya😅😅😅😅😅…. But ava yen andha scl pona

 10. Avatar

  சிற்பிகா ஏன் சீர்திருத்த பள்ளியில் இருந்தாள் என்ற உண்மையை ஆர்யன் போல நாங்களும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் அக்கா…. கண்டிப்பாக ஆர்யன் சிற்பிகா அவளை மனைவியாக ஏற்றுக் கொள்வான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *