Skip to content
Home » என் நேச அதிபதியே -23

என் நேச அதிபதியே -23

அத்தியாயம்-23

மருத்துவனாக ஆராய்ந்தவனின் பார்வை 'என்னாச்சு இவளுக்கு ஏன் மயங்கியிருப்பா?' என்றவன் சிந்திக்க, பட்டென அவனது கையை தட்டி விட்டு சிற்பிகா எழுந்தாள். 

மயக்கத்தில் இருந்தவளோ எழுந்தாள். உடைகளை சரிப்படுத்தி உள்ளதா என தன்னை கவனித்தாள்.

அவளது பயம் அவளுக்கு, ஆர்யனோ அவளின் செய்கையை கண்டு, “ஹலோ ஏன் அடிக்கடி தப்பா யோசிக்கற? நான் ஒரு டாக்டர்.
ஒரு பெண்ணை எந்த எந்த சமயத்தில் பயமுறுத்த கூடாதுனு நல்லாவே தெரியும்.‌

நீ கல்யாணம் என்றதும் 'தாம்பத்தியம் கட்டாயம் நடக்கும், அதை தவிர்க்க முடியாது. ஆனாலும் நான் எதிர்பார்ப்பேன் நாம மறுக்க கூடாது'னு இரண்டு விதமா மனசுல போட்டு குழப்பிட்டு இருக்க.

 அதனால் தான் நான் கிட்ட வந்து பேசினாலோ, பார்த்தாலோ இரண்டடி தள்ளி ஓடற. முதல்ல பேசு, பேசினா பிரச்சனைக்குரிய பாதி விஷயம் குறையும்.

நமக்கு நேரம் தேவைப்படுது. அது இல்லைனு சொல்ல முடியாது.‌‌ முன்ன எனக்கு உன்னை பிடிக்காது. உனக்கு என்னை‌ பிடிக்காது. 

அப்படியிருக்க கல்யாணம் நடந்துடுச்சு. எனக்கு உன்னை பழி வாங்கவோ சீப்பா நடத்தவ எண்ணமில்லை. எங்க ஐயா அம்மா வளர்ப்பு அப்படி.

என்னோட சரிபாதியை எப்படி மதிக்கணும்னு எனக்கு தெரியும்‌.
படிச்சிருக்கேன் ஓரளவு நல்ல அனுபவம் இருக்கு, இந்தளவு கூட யோசிக்காம பழசை நினைச்சி உன்னை காயப்படுத்தற முட்டாள்தனமான வேலையை செய்யமாட்டேன்.

நான் ஏதோ உன் நம்பரை 'knife'சேவ் பண்ணிட்டேன்.‌ நீ அது கூட பண்ணலை. மேபீ பயம் போனதும் என் பெயரை பதிவு பண்ணு. உனக்கு 'knife' என்ற பெயரே நல்லாயிருக்கு நான் மாத்தப்போறதில்லை.

ஒரு மருத்துவனா முதல்ல உன்னை கவனிச்சிக்கறேன். பிறகு மீதி வாழ்க்கை அதுவா அமையும்.” என்றவன் மனம் திறந்து பேசிவிட்டு கீழே சென்றான்.‌

இந்நேரம் இதம் உணர்ந்து, ஒரு புன்னகை சுடர் விட்டிருக்க வேண்டும்.
ஆனால் ‘ஒரு மருத்துவனா முதல்ல உன்னை கவனிச்சிக்கறேன்.’ என்ற வார்த்தை சிற்பிகாவுக்குள் தலையை சுற்றி வைத்தது.

‘ இவ்ளோ பேசியிருக்கேன் பதிலுக்கு சாதகமா ஒரு வார்த்தை கூட பேசாம நிற்கறா? இவளும் படிச்சி எல்லாம் புரிஞ்சவ தானே. அவ பக்கமும் கொஞ்சம் பேசி பழக முயற்சிக்கலாம்.‌ ஏன் ஒரடிக் கூட முன்ன எடுத்து வைக்க தயங்குறா?’ என்றவன் வீட்டின் செல்ல பிராணிகளை பார்வையிட சென்றான்.

இரவு மதியம் செய்த பிரியாணியை ஓவனில் சூடுப்படுத்தி சுவைக்க, சிற்பிகா மூச்சு கூட விடாமல் பரிமாறி அவளும் சாப்பிட்டாள்.‌

அவளது உடல் விறைப்பாக நடமாடுவதை ஒரு‌ மருத்துவனாய் ஆர்யனால் எளிதாக உணர முடிந்தது. 

அவளிடம் இப்பொழுதே எல்லாம் கேட்டுவிட முடியும். நீ ஏன் சீர்த்திருத்த பள்ளியில அன்னிக்கு இருந்த, எங்கம்மாவை ஏன் தள்ளிவிட்ட? உன்னோட கடந்த கால வாழ்க்கை முறை என்ன? இன்னமும் என்‌மேல கோபமா? நான் மன்னிப்பு கேட்டே ஆகணுமா? உங்கப்பாவை உனக்கு பிடிக்காதா? அம்மாவிடம் இத்தனை நெருக்கம் காட்டுபவள் அவர்களோடு சர்வீஸில் இணைந்திடாமல் ஐயாவின் மில்லில் ஏன் வேலையை தேர்ந்தடுத்தாள்? வருமானத்திற்காகவா?’ இப்படி நிறைய பேச இருந்தது.

ஆனால் வார்த்தைக்கு பஞ்சமாக அவளை ஏறிட தான் இயன்றது.

மௌவுனத்தை ஆர்யனே கலைத்தான். ”ஐயா அம்மா, தங்கச்சி, தம்பி எல்லாம் அத்தை-மாமா வீட்ல தங்கிடுவாங்களோனு நினைச்சேன். என்‌ யூகத்தை பொய்யாக்காம அங்கேயே தங்கிட்டாங்க. நீயென் உம்முனு இருக்க?

டாக்டரிடமும் வழக்கிலிடமும் யாரும் எதையும் மறைக்க மாட்டாங்க. அதுலயும் நீ என் சரிபாதி. இயல்பாக மத்த விஷயங்களை தைரியமா பேசலாம்” என்றான்.

சிற்பிகாவோ ”ப்ளீஸ் நீங்க டாக்டர் எனக்கு நல்லாவே தெரியும். அதுக்காக அடிக்கடி அதையே மென்ஷன் பண்ணணும்னு எந்த அவசியமும் இல்லை. நீங்க என்னை அடிச்சது எல்லாம் நல்லாவே நினைவிருக்கு. எனக்கு‌ இன்னும் மறக்கலை. சொல்லப்போனா சாகற வரை மறக்காது.‌ ஆனா உங்க மேல கோபமோ வெறுப்போ நிச்சயமா இல்லை.

‌‌ உங்க பெயரை ‘Aryan’னு சேவ் பண்ணிட்டேன்‌.

ஐயா‌அம்மா இல்லாம போனது முதல்ல பயமாயிருந்தது. ஆனா நீங்க நேரம் கொடுத்ததால நிம்மதியிருக்கு. எதற்கும் பயப்பட தேவையிருக்காதுனு நான் தைரியமா தான் நடமாடறேன்.” என்றவள் தட்டை கழுவ சென்றுவிட்டாள்.

ஆர்யனுக்கு இந்தளவு இறங்கி போகணுமா? என்ற எண்ணம் உதித்தது. 

‌அதை மீறி வாழ்வில் சுவாரசியம் கூடியது.‌ தன்னவளின் வாழ்வியல் ரகசியம் தான் என்ன? என்ற ஆர்வம் சிற்பிகா நடமாடும் இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்தன ஆர்யன் விழிகள்.

சிற்பிகாவோ ஆர்யனின் பார்வை தீண்டலை உணர்ந்தாலும், அவளது தேகமோ இறுக்கத்தை பூசியது.‌

ஆர்யனே அவளுக்கு தன் பார்வை எரிச்சலை தரவும் எழுந்து மாடிக்கு சென்று நீட்டி நிமிர்ந்து விட்டான்.

தலைக்கு மேலாக ஒரு கையை மடக்கி நெற்றியில் படர், இமை மூடி உறங்குவதாக சீரான மூச்சிவிட்டிருந்தான்.

மாடிக்கு நேரம் கழித்து வந்த சிற்பிகாவோ நெஞ்சில் கைவைத்து நிம்மதியாக ஒருகளித்து படுத்து கொண்டாள்.

ஆர்யனோ இமை தான் மூடியிருந்தது. அவளுக்காக உறங்குவதாக நடித்தவன், வெகு நேர சிந்தனையில் தானாய் துயில் கொண்டான்.‌

அடுத்த நாள் குளித்து முடித்து சேலை அணிந்து நீண்ட கூந்தலை பின்னிக் கொண்டிருந்த சிற்பிகாவோ ரப்பர் பேண்டை போட்டு தனது பின்னலை முன்னேயிருந்து பின்னுக்கு தள்ளினாள்.

அவளது நீண்ட சிகை இடைக்கு கீழே வரை நீண்டிருக்க, சந்தன நிற முதுகு பக்கம் அவன் விழிக்கு விருந்து படைத்தது. 

''குட் மார்னிங்'' என்றவன் குரல் கொடுக்க, குங்குமம் அணிய சென்றவள், அவன் குரலில் திடுக்கிட, கையிலிருந்த குங்குமம் விழுந்தது. 

நல்ல வேளை அவள் குங்கும சிமிழை கையிலெடுக்காததால் குங்குமம் தப்பித்தது.

ஆர்யனோ மெத்தையிலிருந்து எழுந்து சிற்பிகா அருகே வந்து, குங்கும சிமிழிலிருந்து குங்குமம் எடுத்து சிற்பிகாவின் பிறை நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் இருந்த சிவப்பு சாந்து பொட்டுவுக்கு மேலாக சின்ன கோடு போட்டவன், நெற்றி வகிட்டிலும் வைத்து விட்டு, மானை போல மிரண்டவளின் விழிகளை கண்டு‌ கடந்தான.‌

‘குட் மார்னிங் தான் சொன்னேன். மார்னிங் கிஸ் பண்ணினது போல முழிக்கறா?’ என்றவன் திரும்பி பார்க்க, நெற்றியை தொட்டு பார்த்து கண்ணாடியில் குழப்பாமாய்‌ இருந்தவளை பார்த்தான்.‌

 ஆனால் கால் அனிச்சையாக பாத்ரும் சென்று பல்விளக்கி முகம் அலம்பி வெளியே வந்த கணம் சிற்பிகா அவ்விடத்தில் இல்லை. கீழே வந்த நேரம் மிக்ஸி சத்தம் கேட்டது. 

"இட்லி சட்னி அரைச்சிட்டேன். இந்தாங்க காபி. வேறயேதாவது செய்யணுமா? தோசை?" என்றாள். 

“வேண்டாம்” என்றவன் சாப்பிட்டு எழவும், தோட்டத்து வேலைக்கு ஆட்கள் வரவும் நேரம் சரியானது.

 ஆர்யன் டூயூட்டிக்கு கிளம்பி வந்த பொழுது, டிபன் பாக்ஸில் புலாவ் ரைஸ் இருந்தது. 

“அடிக்கடி அதை தான் செய்வியா?” என்றதும் ‘நான் இப்ப தானே செய்தேன். இரண்டு நாள் முன் தானே கல்யாணமாச்சு?’ என்ற‌ ரீதியில் விழித்தாள்.

தான் கூறுவது அவளுக்கு புரியவில்லை என்றதும், ‘நான் மில்லிக்கு வந்தப்ப நீ ஓடிட்டியே அன்னைக்கு உன் டிபன் பாக்ஸில புலாவ் ரைஸ் இருந்தது. அதை வச்சி கேட்டேன்” என்றதும், “தனியா காய்கறி வச்சி குழம்பு பொரியல் வைக்க பிடிக்காது. அதனால காய்கறி சாதம் புலாவ் ரைஸ், வெரைட்டி ரைஸா செய்வேன்.‌ டைம் மிச்சமாகும் உடலுக்கு ஒரளவு சத்தானதா சாப்பிட்ட திருப்தி.‌” என்றவள் தனக்கும் ஒரு பாக்ஸை வைத்துக் கொண்டாள்.

தானாக செல்வாளா? இல்லை கணவன் என்று அழைத்து சென்று விட வேண்டுமா? என்ற குழப்பத்தில் ஆர்யன் இருக்க, ‘நான் என் ஸ்கூட்டில போயிட்டு வந்துடுவேன். உங்களுக்கு எந்த பிரச்சனையும் தரமாட்டேன்” என்றவள் இதற்கு மட்டும் வாய் திறந்தாள்.

ஆர்யனோ இதற்கு மேல் இறங்கி செல்ல இயலாத எண்ணத்தோடு அவனுமே தன் வேலையை காண சென்றான்.‌

புதுப்பெண் திருமணமான மூன்றாம் நாளே மில்லிக்கு வந்து பணியை கவனிக்க, மற்றவர்கள் பார்வை முழுவதும் சிற்பிகா மீது தான் பதிந்தது.

அவரை மாதிரி நானும் உடனே வேலைக்கு என்று வந்தது தப்பா? நம்மளையே குறுகுறுன்னு பார்க்கறாங்க? என்று நினைத்து தன் கேபீனில் வந்து அமர்ந்தாள்.‌

நிபுணன் ஐயா வந்ததும் நாம வேண்டுமின்னா கிளம்பிடுவோம். ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு வரலாம். என்று கணக்கிட்டு காத்திருந்தாள். ஆனால் நிபுணன் வரவில்லை.‌ பதினொன்று பத்திற்கு, கால் செய்ய வீட்டில் இல்லை பருத்தி மில்லிக்கு வந்ததாக கூற, ஆர்யனை கேட்டதிற்கு, “அவர் டூயூட்டிக்கு போயிருக்கார் ஐயா” என்றாள்‌.‌

‌‌’சரிம்மா‌ இன்னிக்கு இருந்து பார்த்துக்கோ” என்று அணைத்துவிட்டார் நிபுணன்.

‌‌ “பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கு” என்றதும் முத்துவேலன் அர்த்தம் புரிந்து சிரிக்க, ஆதிராவோ, ‘ஆங்’ என்று முழிக்க, ‘நீ கட்டி வச்ச புதுமண கல்யாண தம்பதிகள் அவரவர் டூயூட்டிக்கும் வேலைக்கும் ஓடிடுச்சுங்க.” என்று விவரிக்க ஆதிரா முகம் சோர்ந்தது.

துளிர் சர்வேஷ் சரவணவேலன் என்று அவரவர் கல்லூரிக்கு புறப்பட்டிருந்தனர்.

ஆதிரா முகம் வெதும்பி அதை சமாளித்து, “நீங்க‌ கூட கல்யாணமான மறுநாளே மில்லுக்கு ஓடிட்டிங்க.‌ உங்க பையன்‌ உங்களை மாதிரி தான் இருப்பான்” என்று லேசான வருத்தம் சூழ்ந்தது‌.

“என்‌‌ பையன்‌ என்னை மாதிரி இருந்தா நல்லது தான்.‌” என்றவர் மார்க்கமாய் பதில் தர, முத்துவேலன் சாருலதா இருக்க, ‘என்ன பேச்சு இது?’ என்று பார்வையால் கண்டித்தார் டீச்சர்ம்மா.

''மிஸ்டர் நிபுணன்' உங்க பையனுக்கு போனை போடுங்க" என்றதும் அவளது அலைப்பேசியை எடுத்து கொடுத்து, 'தங்கமகன்' அப்படின்னு இருக்கு நீங்களே போடுங்க' என்று கடந்தார்.‌

ஆதிரா திட்டுவதற்கு தயாராக, போனில் ஆர்யனுக்கு அழைக்க ஏதோவொரு செவிலியர் தான் போனே எடுத்தது.

நர்ஸ் போனை எடுத்ததும் ‘டாக்டர்‌ ஆப்ரேஷன் தியேட்டர்ல இருக்கார் மேம். டாக்டர் வரவும் நீங்க கூப்பிட்டதா சொல்லறேன். ஆல்ரெடி அம்மா போன் பண்ணினா நான் ஏற்கனவே ஆப்ரேஷனுக்கு வருவதாக டேட் ஒதுக்கப்பட்டதால வந்தாச்சுனு சொல்ல சொன்னார் மேம்” என்று கூறவும் ஆதிரா ஏமாற்றமாய் இருந்தாலும்‌ மகனுக்கு தெரியாதது இல்லையென புரிய சரியென்றார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

32 thoughts on “என் நேச அதிபதியே -23”

 1. Kalidevi

  Intha sirpika yen pesa matra avane vanthu konjam manasu mari pesuran atha purinjikama iva ethuku bayapadura therilaye . Ena tha iruku problem nu papom

 2. Avatar

  ஆர்யனின் மாற்றம் சூப்பர் சிற்பியின் கடந்தகாலம்தான் எண்ண சகிமா நிபுணன் ஆதிரா முயற்சி ரொம்ப அழகா இருந்தது ஆர்யன் தாயே புரிந்தது போல் தாரத்தை புரிவானா வாழ்த்துகள்

 3. Avatar

  Ivanga rendu perum indha alavaadhu pesunangalae adhuvae podhum…yenma adheera un paiyan unna maadhri tan irupan enga nibu evlo sweet theriyuma….enga nibu unna kalyanam panna 2 maasam maatum tan time kuduthan adhuku aprm Avan unaku ellamah maari ponan…ana inga Aryan kalyanam agi 2 maasam analum idhunga oruthar oruthar ipaditan Tom and Jerry maadhri sanda potutu irukum Pola…

  Ivangalavadhu paaravala angana oruthan irukan thaadikaaran Avan kalyanam agi sandaiyum podamatran romance um pannamatran…Saabah mudila ka…

 4. Avatar

  என்னடா இது? ரெண்டு பேரும் விட்டுக்கொடுத்து வாழ்வாங்கன்னு பார்த்தா ஆர்யன் இறங்கி போன சிற்பிகா கோவப்படுறா. அவ இறங்கி போன இவன் கோபப்படுறான் இந்த பிரச்சன தீரனும்னா சிற்பிக்காவ பத்தி ஆர்யன் முழுசா தெரிஞ்சுக்கணும்.

 5. Avatar

  Sirpika avan doctor nu sonnathu avaluku something inconvenience kuduthu andha varthai kum iva past kum samandham iruku ah illaya iyal va vae avaluku nadantha sambavathula ipadi react panrala aana aariyan indha alavuku aval ah purinchika try panran aana Sirpika than konjam.kooda next step eduthu vaika rombavae yosikira

 6. Avatar

  ஆர்யன் அவள்ட்ட பேசி சீக்கிரமே புரிஞ்சுப்பான் போலயே!!… ஏன் இறுகி போகனும்???? Mr.நிபுணன்🤭

 7. Avatar

  நான் நினைச்சேன் அதான் பருத்தி மூட்டை குடவுனுலா இருக்கு 😂😂😂 நீங்கலே இந்த டயலாக் போட்டுடீங்க ..

  ஏன்டா ஆர்யா சகிய கடுப்பேத்துற..

  inthama sirpika romba தானே பண்ணுற பார்த்து அது எங்க ஹீரோ ஆர்யாமா

 8. CRVS 2797

  ஆனாலும், சிற்பிகா ஆர்யனை ரொம்பத் தான் சுத்தல்ல விடறா..!
  அவன் இன்னும் எவ்வளவு தான் கீழறங்கி போகறது..??

 9. Avatar

  Oruthavanga nama cls aa pakkum poothu bayam varathu normal ana Yan irugi pooganum 🤔
  Apo yatho pathippu irruku 😌😌😌😌😌😌
  Doctor doctor ta unmaiya sollanum ariyan paysarathu old memories la yathiyoo nabagam paduthuthu pola ?
  Sirpi ku yarathu counciling kudutha sari aagiruvanu ninaikkaran athu ariyan aa irruntha innum better. Nama irangi poonalum iva ipti pooraleynu ninaikkama apti enna Ivan maraikkara , enna nadanthurukumnu oru aarvathoda Ava pinnadi suthuna problem sikkarAm mudinjurum 🤗

 10. Avatar

  சிற்பிகாக்கு ஏதோ கஷ்டமான பிளாஷ்பேக் இருக்கு அதான் அவளால நார்மலா இருக்க முடியல

 11. Avatar

  Nibu…. Epovum top tucker dha na nenachadha apdiye solitan….. Paruthimoota godown le irukundradha…. 🤣🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰🥰…. Oruthar nammalaye kurukurunu patha uneasy ah irukadha… Idha yen thappa eduthukanum… But avaluku Dr. nu mention panna pidikala something ho gaya🧐🧐🧐🧐…. Aara nee dvlp ayita da…. 🤣🤣🤣kumkum vachividra….. Supereyyyyy….. Indha teacharamma un pulla unamaridha irupan…. Unaku matum rendu masam tym kedachudhula adhemari avanum avan wife sryyy “knife” Ku tym tharan😅😅😅😅juzzz make it simple😍😍😍😍

 12. Karthika R

  Superb epi interesting.. Aryan எறங்கி varan sirpi ku enna prblm irukum🤔🤔🤔🤔 பருத்தி மூட்டை godown la ye irunthirukalam🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

 13. Avatar

  சிற்பிகா இந்த அளவு நடந்து கொள்ள கண்டிப்பாக கடந்த காலத்தில் கசப்பான சம்பவங்கள் தான் அவளின் வாழ்க்கையில் நடந்து இருக்க வேண்டும்….. அதை ஆர்யன் தெரிந்து கொள்வானா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *