Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை-26

கால் கிலோ காதல் என்ன விலை-26

அத்தியாயம்-26

   தேவராஜன் சந்திரிகா இருவரும் ஊருக்கு திரும்பவும், “கையை தண்ணி படாம பார்த்துக்கோங்க மாப்பிள்ளை” என்று கூறி தனியாக அர்ஜுனிடம் “பொண்ணு படிச்சதுன்னு மனசுல அதை ஏசிடாதிங்க. அகம்பாவம் எல்லாம் இல்லை. பொய் சொல்லணும்னு நினைக்கலை. உங்க ஜாதகம் பொருந்தியதும் உங்க விருப்பம் படிக்காத பொண்ணுன்னு தெரியவும் அப்படி சொல்லிட்டோம்.” என்று கூறி மன்னிப்பும் வணக்கம் வைத்து புறப்பட்டார்.

    அர்ஜுனும் பதில் வணக்கம் வைத்தான். அவ்வளவே. மற்றபடி எதுவும் சமாதானப்படுத்தவில்லை. அவரும் மெதுவாக நகர்ந்து கொண்டார்.

   கடையை விரிவுப்படுத்திய பின்னரும், வியாபாரந்தில் சேமிக்கும் அளவிற்கு பணமழை பொழிய வில்லை. அதே கணக்கில் சீராக இருந்தது. கொஞ்சம் கூடுதலாக பணம் வந்தது போல தோன்றியது.

  ஆனால் அக்கா ரஞ்சிதத்திற்கே வளைகாப்பு விழா நடத்த, சத்திர வாடகை, சமையல் செலவு, வந்தவர்களுக்கு தாம்பூல பை, தேங்காய் என்று செலவு தயாராக இருந்தது. வளைகாப்பு‌ விழா விமர்சனமாக கொண்டாடப்பட்டது.
 
   அர்ஜுன் அம்முவின் அக்கா குடும்பத்திற்கும், அப்பா அம்மா வீட்டிற்கும் கூட நேரில் வந்து கூறவில்லை. இளவழகி நேரில் சென்று அழைப்போம் என்றதற்கு, “இப்ப தான் கடை ஓடுது. லீவு போட சொல்லறிங்க. யாராயிருந்தாலும் போன்ல சொல்லிக்கோங்க வர்றவங்க வரட்டும்.” என்றான்.‌

   இளவழகிக்கு சங்கடமாய் தோன்றியது‌. அம்மு தான் “போன்லயே சொல்லுங்க அத்தை. அப்பா அம்மா கோவிச்சுக்க மாட்டாங்க. அக்காவிடம் நான் வரமுடியாத சூழலை சொல்லிக்கறேன்” என்றாள்.

   அஞ்சனா சரவணனுக்கு போனில் அழைத்து வளைகிப்பு விழாவை கூறினார்கள். சரவணன் “சரி பங்காளி வந்துடறேன்” என்றார்.
  அஞ்சனாவும் வருவதாக சொன்னாள். ஆனால் அவள் மாமனார் மாமியார் வளைகாப்புக்கு வரவில்லை.

  அம்மு பட்டுயுடுத்தி அங்கும் இங்கும் வளையல் தாம்பூல பை என்று வந்தவர்களை வரவேற்று உபசரித்தாள்‌.

   கர்ணன் கூட, “மச்சான் உனக்கு கிடைச்ச பொண்டாட்டி தங்கம். பாரு நாத்தனாருக்கு விழுந்து விழுந்து வேலை செய்யுது.” என்று புகழ, அர்ஜுன் பார்வை அம்முவிடம் பதிந்தது.

  ரஞ்சிதத்திற்கு அடிக்கடி திருநீற்றை அளவாய் இருக்க வைத்து துடைத்தாள் அம்மு.
  
  இளவழகி போர்வாய் அமரவும் வந்தவர்களுக்கு வரவேற்பு பானமாக கொடுத்த சர்பத் எடுத்து வந்து நீட்டினாள்‌.

  இளவழகி வாங்கி பருகவும், அடுத்து அவள் அக்கா அஞ்சனா அருகே சென்றாள்.

   தலையில் பூ கீழே விழுவதாக அஞ்சனா கூற அதனை எடுத்து மீண்டும் சீராக வைத்து பூவை குத்தினாள்.

    சந்திரிகா “நீங்க எப்படி நல்ல செய்தி சொல்ல போறீங்க” என்று அக்கா தங்கையை பார்த்து கேட்க, அஞ்சனாவோ, “நீ வேறம்மா… வீட்ல தான் எங்கத்தைன்னா நீயுமா?” என்று சலிப்படைந்தாள்.

   “நீ என்னடி உம்முன்னு இருக்க?” என்றாள்.

   “ம்ம் அக்காவே சொல்லட்டும் அடுத்து சொல்லறேன்.” என்றாள்.

   “ஏன்டி உனக்கும் கல்யாணம் முடிச்சி ஒரு வருஷம் ஆகப்போகுது.” என்றார்.

  “ஒரு வருஷம் தானே ஆகப்போகுது. ஓராயிரம் வருஷம் ஆகலையே.” என்றாள்.

   “என்னவோ… நல்ல செய்தியை சொல்லுங்கடி. இவங்க அத்தை சுலோச்சனா எல்லாம் கல்யாணமாகி மூனு வருஷமாகப்போகுது உங்க பொண்ணு அஞ்சனா உண்டாகலைன்னு பேசறாங்க. நீயாவது நல்லது சொல்வேன்னு பார்த்தா.” என்றதும், அஞ்சனா இடியை போல “கல்யாணமான மூனாவது மாசம் உண்டானேன். அவங்க செய்த கலாட்டால அவங்க பையன் என்னை எட்டி உதைக்க கரு கலைந்ததை சொல்லவேண்டியது தானே. சும்மா மூனு வருஷமாகுது நாலு வருஷமாகுதுன்னு. எப்ப பாரு ஏதாவது சொல்லிட்டு இருக்க வேண்டியது. நாளு கிழமை அதுயிதுன்னு சொல்லி சுத்தம் பத்தமா இருங்கன்னு சொல்லிடறது. நம்ம தலை மறையவும் எங்க குழந்தையே தங்கலைனு பாடறது. இவரும் அப்படியே கடையை, பிரெண்ட் கூட பார்ட்னரா பண்ணறேன்னு மாறி மாறி வர்ற லாபத்துல ஊர் சுத்தி ஒப்பேத்தறாங்க. சேமிக்கறதும் இல்லை. மாசத்துக்கு ஒரு வாரம் பிரெண்ட் கூட சுத்த போயிவடுவார். இதுல குழந்தை.” என்று அஞ்சனா கோபமாய் மொழிந்து நகர்ந்தாள்.

   “ஏம்மா இப்படி பேசற அக்கா பாரு பீல் பண்ணுது” என்றாள் அமிழ்தினி.

  “ஆமா நான் இதை சொன்னா மட்டும் ஓடிடுவா. காலத்துக்கு ஒன்னு வேணும்னு நாம தான் முப்பது வயசுக்குள்ள பெத்துக்கணும். இவ பழைய சண்டையை நினைப்புல வச்சிட்டு கிடக்கா, மாப்பிள்ளையும் வேண்டுமின்னே தள்ளி போடுறாங்களோனு சந்தேகம். ” என்று கலங்கினார்.

  அமிழ்தினியோ ‘ஆமா இங்க மட்டும் என்ன வாழுது’ என்று எண்ணினாலும் அர்ஜுன் இப்ப குழந்தை வேண்டாம்னு சொல்லியிருகார். நாளைக்கே உண்டானா என்ன பண்ணுவார்’ என்று யோசனைக்குள் மூழ்கினாள்.

அதன் பின் வந்தவர்கள் செல்லவும், விழாவும் முடிய வந்தவர்கள் கிளம்பினார்கள். 

ரஞ்சிதா அன்றிலிருந்து அர்ஜுன் வீட்டில் தான் வாசம் செய்தாள்.

எந்நேரமும் அதை வாங்கு இதை வாங்கு என்று இளவழகி ஏவிவிட, அர்ஜுன் சலிப்பாய் நடந்தான்.

இந்த பெண்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் அலங்காரமும் தேவையும் கூடுமோ? என்பான்.

அர்ஜுன் அமிழ்தினியிடம் அளவாய் பேசினான்.‌


ரஞ்சிதா வந்த அடுத்த நாளே, என் தம்பி இந்தளவு மாறிட்டானா என்று ஆச்சரியம் அடைந்தார். அதற்காகவே அர்ஜுன் அமிழ்தினியிடம் விலகினான்.‌

சில நேரம் தனது நேசத்தை பூட்டி வைக்க எண்ணினான்.‌

சரியாக இரண்டு வாரம் கடந்து ரஞ்சிதாவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

 நார்மல் டெலிவெரி முடியாமல் போக, சிசேரியன் முறையில் பெண் மகவை ஈன்றெடுத்தாள். 

 அர்ஜுனுக்கு இது கூடுதல் செலவு. அவன் நார்மல் டெலிவெரி என்று கணக்கு போட்டு வைக்க இரட்டிப்பு செலவு என்றாலும் அக்காவையும் அக்கா மகளையும் கண்டு கணக்கு வழக்கை ஒத்திவைத்தான். 

இளவழகி மருத்துவமனையில் இரண்டு மூன்று நாட்கள் தங்க வேண்டிய சூழல் உண்டாக, அமிழ்தினி தான் வீட்டில் அனைத்தும் கவனித்தாள். இளவழகிக்கு உணவு எடுத்து சென்று தினமும் கவனிப்பாள்.

குட்டி குழந்தையை தூக்கி தர இளவழகி பழக்கப்படுத்த, முதலில் தயங்கி பின்னர் நன்றாக தூக்க கற்று தேர்ந்தாள்.

குழந்தை ஆசை இல்லாதவர்கள் கூட கையில் பச்சிளம் குழந்தையை தூக்கினால் ஆசை பிறக்கும். இங்கு அமிழ்தினிக்கு அப்படி தான் ஆசைப்பிறந்தது.

அர்ஜுன் தள்ளி போட சொன்ன விஷயம் மறந்தவளாக மாறினாள்.

தினமும் மாதவிடாய் ஆரம்பிக்கும் பத்து நாளுக்கு முன் எள்ளுருண்டையை சாப்பிட கூறினான்.‌ இது மாத்திரையை விட உடலுக்கு கெடுதியின்றி அதே நேரம் இயற்கையான முறையில் கருத்தரிக்க தவிர்க்க முயன்றான்.

கருவுண்டாகி அதை அழிப்பதோ, தவிர்ப்பதோ செய்வதற்கு கரு தங்காமல் பார்த்துக் கொண்டான்.

பப்பாளி பழம் என்றால் இளவழகியிடம் மாட்டிக் கொள்வார்கள். அதனால் எள்ளுருண்டை எளிதாக அறைக்குள் தின்பதற்கு ஒரு‌ டப்பாவில் எடுத்து வைப்பான்.

  இந்த முறை இதை சாப்பிட வேண்டுமா? என்று தவிர்த்தாள்.

தினமும் நாத்தனார் குழந்தையை தூக்கி கொஞ்சுவதும், குளிப்பாட்டும் போது கூடயிருப்பதும், பவுடர் பொட்டு என்று அலங்காரம் செய்வதும், என்று அமோகமாக நேரம் பிடித்துவிடும்.

 அர்ஜுனுக்கு கூட சாப்பாடு பரிமாறாமல் குழந்தையை கொஞ்சுவாள். 

இளவழகியோ “ஆசையா இருக்குன்னா பெத்துக்குங்க. இந்த வயசுன்னா பிரசவம் சுளுவா இருக்கும். ரஞ்சிதம் எல்லாம் பிரசவ வயசை தாண்டி தான் பெத்துயிருக்கா. அதனால் கூட சிசேரியன் ஆகியிருக்கும்.” என்றுரைத்தார்.

அம்மு எல்லாம் கேட்டு கொள்வாள். ஆனால் பதில் தராமல் சிரித்து மழுப்புவாள்‌.

ஒரு மாதம் ரஞ்சிதத்தின் குழந்தை இருந்த நேரம் கணநிமிடமாக கழிய, கர்ணா வளைகாப்பு நடந்த இடத்திலேயே கயிறு கட்டி பெயர் சூட்டு விழாவும் நடத்தினார்.

வளைகாப்பு கூட்டம் போலவே இதற்கும் கூட்டம் குவிந்தது.

இதுக்கு நம்ம செலவு இல்லையென்று அர்ஜுன் நினைக்க, தாய்மாமா பதவி கொடுத்து அழகு பார்த்து தங்க சங்கிலியை வாங்க கூறினார்.

“அம்மா.. இப்ப அந்த குழந்தை வந்து உன்கிட்ட கேட்டுச்சா” என்றான்.

“இவன் எவன்டா. இதெல்லாம் செய்யணும். முறைன்னு ஒன்னுயிருக்குல்ல? அப்பா இருந்தா அவரே செய்வார். உன்னிடம் ஒன்னை சொல்லி புரிய வச்சி வாங்கறதுக்குள்ள என் உசுரு போகுது” என்பார் இளவழகி.

அமிழ்தினி கணவர் மாமியார் பேசுவதை கேட்டு நகைப்பாள்.

“ஏய்.. இப்ப எதுக்கு சிரிக்கிற? காசு நான் தான் தரணும். நீயா தருவ? ஆயிரம் கேள்வியென்ன, ஐயாயிரம் கேள்வி கேடாபேன்.” என்றான்‌.

சீரியஸாக தலையாட்டி சரி’ என்பாள்‌. அர்ஜுன் நகரவும் இளவழகி அமிழ்தினி இருவரும் பார்த்து பார்த்து சிரிக்க, தாடிக்காரன்‌ அதற்கெல்லாம் தண்டனையாக இரவில் “என்னடி சிரிப்பு… இப்ப சிரி பார்க்கலாம். ஊரே அமைதியா இருக்கு. இப்ப சிரி கத்து” என்று கிச்சுகிச்சு மூட்டி, அங்க வளைவில் கடித்து, இதழை சுவைத்து என்று சுகமூட்டி இன்பம் பெற்றான்.

அதன் பிரதிபலன் அமிழ்தினி வயிற்றில் அர்ஜுன் உயிர் வளர ஆரம்பித்தது.

 இளவழகிக்கு அன்று உடல் சுகவீனமாக இருக்க தடுப்பூசி போட அமிழ்தினியை ரஞ்சிதம் அழைத்து சென்றாள்.‌


அங்கே மாத்திரை ஊசி இன் மருந்து நெடி, பினாயில் வாடை, அங்கு வந்த கர்ப்பவதியின் ரத்த மாதிரி எடுக்க, இரத்தம் என்று அதெல்லாம் பார்த்து, வாந்தி வந்து மயங்கினாள்.

அவளை அங்கிருந்த டாக்டர் பரிசோதிக்க, “உங்க தம்பி பொண்டாட்டி பிள்ளை உண்டாயிருக்கா” என்று வாழ்ந்திருந்தார்.

ரஞ்சிதமோ, “அம்மா அடிக்கடி சொல்வாங்க. குழந்தை யார் மடில உச்சா போறாங்களோ அவங்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும்னு. உண்மையாகிடுச்சு. என் குழந்தைக்கு விளையாட என் தம்பி குழந்தை கிடைக்கும்” என்று வாழ்த்தினாள்.

அமிழ்தினிக்கு மகிழ்ச்சி வரவில்லை... மாறாக அர்ஜுன் எப்படி 

இந்த விஷயத்தை ஏற்றுப்பானென்று சிந்தனை ஓடியது.

அவன் ஒவ்வொரு மாதமும் நாள் தவறாமல் மாதவிடாய் வந்துவிட்டதா என்று கூட கேட்டறிந்து கொள்பவன்.

மாதவிடாய் ரெகுலர் பீரியட்ஸில் வந்து தொலைவதில் நிம்மதியடைவான். 

இன்று எப்படியோ? அதை மீறி பணம் காசு என்று பேசமாட்டானென நம்பினால்…

அவள் நம்பிக்கை..‌

-தொடரும்.

18 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை-26”

 1. Kalidevi

  Ava aasa pattathu nadanthuduchi aana thadi karan santhosapaduvana therilaye . Illana ava ninaikira mari kaau panam selavu agum ninaipananu

 2. Avatar

  Wow super sis nice epi 👍👌😍 vazthukkal ammu 🥳 aana edha Arjun eppdi yeduthupan nu therilaiye parpom 🤔 seekirama next epi podunga sis 🙏

 3. Avatar

  Kasu PanAm saymippu nu pathu thaan pilla paythukanum na Inga yarum paythukka mudiyathu 🤦🤦🤦🤦🤦🤦🤦
  Evvalavu vanthalum athukku yatha selavu , illa sothu saykkanungara aasaium thaan varum thavira piliya paythukka mudiyathu …….
  Illathavangalukkum antha varam namakku kidaikkathanu yangaravangalukum thaan athoda vali thayrium 💔
  Evlo kuthal paychu , evlo avamariyathai , evlo vaynduthal normal irrukura husband and wife intimacy kuda pilikkaga nu kadamaikku marirum intha doctor tritment nu poogum poothu ……
  💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

 4. Avatar

  Adei arjun payalae yenda ipadi iruka…. Ipo indha vishayatha sonna enna pannuvano therilayae…

  Super❤️ka…. Waiting for next ud….

 5. M. Sarathi Rio

  அச்சோ…! இதுக்கு வேற பரதநாட்டியம் ஆடுவானோ, இல்லை குச்சிப்புடி ஆடுவானோ தெரியலையே.
  இல்லை, நம்ம குழந்தை தானேன்னு ஆசையா எதிர்பார்ப்பானோ… தெரியலையே..????
  😝😝😝

 6. Avatar

  குழந்தை என்றால் யாவர்க்கும் சந்தோசம் தான்

 7. Avatar

  குழந்தை னா..எல்லாருக்குமே மகிழ்ச்சி தான்..அதுவும் தான் குழந்தை நா…சொல்ல அளவே இல்ல…ஆனா இந்த அர்ஜுன் என்ன அளப்பாரோ..தெரியலையே…🤔😨🥴😅😆

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *