Skip to content
Home » என் நேச அதிபதியே -26

என் நேச அதிபதியே -26

அத்தியாயம்-26

   இரவு உணவை முடித்து விட்டு மாடிக்கு வந்தப்போது சிற்பிகா மெத்தையில் குழப்பமாய் வீற்றிருந்தாள்.‌ சேலை நுனியை இறுக்கமாய் பிடித்து வேர்வையில் குளித்திருந்தாள்.

   ஒழுங்காக சாப்பிடாமல் மேலே வந்துவிட்டாள்.‌ யாரும் வற்புறுத்தவில்லை.‌ சிற்பிகாவை பொறுத்தவரை அவளாக நேரம் எடுத்துக் கொண்டு தெளிவடையும் புத்திசாலி. அதனால் ஆதிராவும் விட்டுவிட்டார்.

     ஆர்யன் கற்பாறையை சமாளிக்க வேண்டுமென்று நிதானமாக தான் சுவைத்து முடித்து வந்தான்.
‌‌
‌‌அறைக்கு வந்ததும் மின்விசிறியை கூட்டிவிட்டு ஏசியை வேறு ஆன் செய்தான். எப்படியும் ஏசி காற்று வருவதற்குள் அவளது வேர்வை துளியை களைக்கும் முயற்சி.‌

   அவனுக்கே தன்னிலை எண்ணி முறுவல் கூடியது.

  ‘ இவளால தானடா ஐயா அம்மாவை விட்டுட்டு தாத்தா ஆச்சி வீட்ல படிக்க போன. இவளிடம் மன்னிப்பு கேட்டிருந்தா நீயும் இங்கயே இருந்திருப்ப. மேபீ இவளோட முழு விவரம் யாரும் சொல்லாம, இவளிடம் கேட்காம கூட தெரிந்திருக்கும். இப்ப பாரு இவ முன்ன கல்யாணம் செய்து கையை கட்டிட்டு நிற்கறேன்.’ என்றவன் பார்வை அவளது கையில் பதிந்தது.

   மருதாணி கைகள் எடுத்து முகத்தில் வைத்து கொள்ள ஆசையுண்டானது. நெருக்கம் காட்டுவதெல்லாம் இப்பொழுது சாத்தியம் இல்லையென்ற நிதர்சனம் புரிய, உறங்க முயன்றான்.

   சிற்பிகாவோ அவன் படுக்கவும், தொண்டையில் அடைத்த உணர்வோடு படுத்தாள்.

   மெத்தையில் முதுகு காட்டி படுத்தவள் சற்று நேரம் நகர, வாய் பொத்தி குலுங்கி அழுவும், அவளது செய்கையை உணர்ந்தவன், அவளது தோளை திருப்பி முகத்தை கையில் ஏந்தினான்.

    அவனை இம்சிக்கும் அதே கண்ணீர், கட்டை விரலால் இருபக்கமும் வழிந்தவையை துடைத்தான்.

    ‘உனக்கென நான் இருப்பேன்‌’ என்ற வாய் மொழி வார்த்தை அவளிடம் தோற்றுப்போக, இதழ் முத்தம் அளித்தான்.

   கண்ணீர் தானாக நின்றது, கூடுதலாக முட்டை கண்கள் விரிந்தது.
  
  இரண்டு நிமிடத்திற்கும் குறைவாக விடுவித்தவன், “நான் அடிச்சது சாகற வரை மறக்காதுனு நீ சொன்ன. இந்த கல்யாணம் ஐயா அம்மாவுக்காக‌ பண்ணிட்டேன்னு நாம சொன்னது. இந்த இரண்டு விஷயத்துல உனக்கு என்னிடம் எதையும் பகிர பிடிக்காம இருக்கலாம்.

நீ என்னோட பாதி. அதனால தான் உன் காலை பிடிச்சி மெட்டி போட்டது.
   எனக்கு உன்‌மேல இப்ப எந்த கோபமும் இல்லை. ஆக்சுவலி இங்கிருந்து போகறப்ப உன் மேல கோபம் மட்டும் இருந்துச்சு. காலத்தோட மாற்றம், படிக்கிற படிப்பு, மெடிக்கல் பீல்டுல பார்க்கற பிறப்பு இறப்பு, இதெல்லாம் தாண்டி என் அப்பாவோட அம்மாவோட இயற்கையான குணங்கள், இதெல்லாம் என்னை பக்குவப்படுத்தி யிருக்கலாம்.

    என்னடா இவன் பேசமாட்டேங்கறான். நம்ம பக்கம் எதையும் சொல்ல மாட்டேங்கறோம்னு திட்டறான் நீ நினைச்சியிருக்கலாம். அதுக்கு தான்… அதுக்கு தான்…” முத்தம் என்றவொன்றை வழங்கியதாக கூறயியலாது, மென்று விழுங்கினான்.
    ஆனால் ஒரு காரியத்தை முழுமையாக முடிக்க முடியாது திணறும் ரத்தமா அவன் நிபுணன் மகனாயிற்றே.‌

   ”அதுக்கு தான் இப்ப உன்‌ கண்ணீரை துடைச்சி பேசிட்டு இருக்கேன்” என்றான்.‌

    விசும்பல் குறைந்து ஆர்யனின் முத்தத்தையும், பேச்சையும் உள்வாங்கியவள் மௌவுனமாய் இருந்தாள்.

   மௌவுனமாய் இருந்தவளின் விழிகள் நீரை வழியவிட்டது.

   “படுத்துக்கணும்னா படுத்துக்கோ முடிஞ்சா தூங்கு. எதுக்கும் அழாத” என்று அவ்வறையை பிரகாசமாக்கி ஒளியை உமிழ்ந்த விளக்கை அணைத்தான்.

   “அம்மா நான் பிறந்தப்பவே இறந்துட்டாங்க. அப்பா கூட தான் வளர்ந்தேன். அப்பா அப்போ கல்யாணம் பண்ணிக்கலை” என்றதும் ‘இதை தானே முதல்ல சொன்னா?’ என்ற கடுப்பில் இருக்க, அப்ப எங்க வீட்டுக்கு பக்கத்துல பிரபு வீடு இருந்தது.‌

‌‌  பிரபு… கொஞ்ச நாள் முன்ன என்னோட ஆச்சி ரங்கநாயகி இறந்தாங்களே. அவங்க என்‌ ஆச்சியில்லை.‌ பிரபுவோட ஆச்சி.

   நான், பிரபு இரண்டு பேருமே சின்னதுலயிருந்து ஒரே ஸ்கூல். பெரியவளா ஆனதுக்கு பிறகும் பிரபு கூட தான் இருப்பேன். பக்கத்து பக்கத்து வீடு. பிரபுவோட ஆச்சி ரங்கநாயகி என்னோட நல்லா பழகுவாங்க. அம்மா இல்லாத பொண்ணுனு என் மேல ஒரு பச்சாதாபம்.

   பிரபு என்னை விட ஐந்து மாசம் சின்னவன். அப்பாவுக்கும் ரங்கநாயகி ஆச்சி பக்கத்துல இருப்பதால் என்னை நிம்மதியா விட்டுட்டு போவார்‌.

   நாங்க சேர்ந்து தான்‌‌ படிப்போம் எழுதுவோம். என்ன தான் சேர்ந்து படிச்சி எழுதினாலும் பிரபு சரியா மார்க் வாங்க மாட்டான். அதனால் ஸ்கூல் டீச்சர் ஆச்சிக்கிட்ட, அவனை அவங்க சொல்லித்தர டியூஷனுக்கு அனுப்ப சொன்னாங்க.

  எனக்கு சாப்பாடு ஆக்கவும், சாயந்திரம் வீடு கூட்டி கோலம் போடவுமே நேரம் சரியா இருக்கும். அதனால் நான் டியூஷன் போகமாட்டேன். அதுவுமில்லாம நான் நல்லாதானே படிக்கறேன், டியூஷனுக்கு வேற செலவு எதுக்குன்னு அப்பா போக வேண்டாம்னு சொல்லிட்டார்.‌

   பிரபு மட்டும் டியூஷனுக்கு போவான் வருவான். ஆனாலும் படிப்புல அப்படியொன்னும் தேறலை. இதுல‌ கொஞ்ச நாள்ல அவன் மூஞ்சு வேற ரொம்ப வாட்டமா இருந்தது.

       நான் முன்ன மாதிரி போய் பேசினாலும், ஒதுங்கி போனான்.

   ஏன்டா என்னாச்சுனு கேட்டா பதில் வராது.

   ஒரு நாள் சோளம் வேக வச்சிட்டு சாப்பிட கொடுக்க போனேன்.
   அன்னைக்கு ரொம்ப அழுதான். ஆச்சி வேற வீட்ல இல்லை. ஏன்டா அழறனு கேட்டேன். என்னை பார்த்து பயந்துட்டு அழுதானே தவிர உடனே காரணத்தை சொல்லலை.

   அப்பறம் இப்ப நீ சொல்லலை ஆச்சியிடம் சொல்லவானு கேட்டதும், ‘எதுவும் சொல்லிடாத, எனக்கு டியூஷன் போக பிடிக்கலை’னு சொன்னான்.

‌ ஏன் பிடிக்கலைனு கேட்டா ‘பிடிக்கலை விடு’ன்னு கத்தினான்.

   அதுக்கு பிறகு ஆச்சியிடம் சொல்லி ‘டியூஷன் பிடிக்கலையாம் ஆச்சி. அவன் என்ன படிக்கறானோ விடுங்கன்னு’ சொல்லி பார்த்தேன்.

   அவங்க தான் ஆம்பள பசங்க படிச்சி வேலைக்கு போகணும் அதுயிதுனு சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க.

   அப்பறமும் பிரபு ஒருமாதிரி சோர்வா தான் இருந்தான்.
   நானும் விட்டுட்டேன் பத்தாவது படிக்கட்டும் மார்க் வாங்கணும்னு இருந்தேன்.

    அப்ப ஒரு பரீட்சையும் வந்தது‌. ஒரு நாள் தேம்பி தேம்பி பிரபு அழுதான். அரளி செடியை பார்த்து ‘இதை சாப்பிட்டா செத்துடுவாங்களா சிற்பிகா’னு கேட்டான்.

   ‘லூசு மாதிரி பேசாதடா’னு திட்டினேன்.

   திட்டு வாங்கினாலும், ஏனோதானோனு சுத்தினான்.
பரீட்சை முடியவும் ஒரு மாதிரி கொஞ்சம் நிம்மதியா இருந்தான். மார்க் கூட பெட்டரா இருந்துச்சு. இந்த மார்க் முழு ஆண்டு பரீட்சையில எடுத்தாக் கூட போதும்னு ரங்கநாயகி ஆச்சி சொல்லி பெருமைப்பட்டாங்க.

    ஆனா அடுத்த மிட்டெர்ம்ல மறுபடியும் மார்க் குறைஞ்சிடுச்சு. எனக்கு அவனை அப்படியே விட மனசில்லை‌. அதனால் என்ன ஏதுனு ஒரு நாள் கார்னர் பண்ணி கேட்டேன்.

   அப்ப தான்…..” என்று மௌவுனமானாள்.

   இவ கதையை கேட்டா எவனோ பிரபு அவனை பத்தி சொல்லிட்டுயிருக்கா என்று ஆர்யன் அப்பொழுதும் அமைதியாக கேட்டு நின்றான்.

    ஆர்யனின் உருவம் சிறு மின் விளக்கில் தெரிய முகம் காணாத திடம் அவளை பேச வைத்தது.

   “ராதிகா டீச்சர்‌ பிரபுவுக்கு டியூஷன் சொல்லி கொடுக்கலை. அவங்க அவங்க… அவங்க அவனிடம் தப்பா நடந்துக்கிட்டாங்க‌. அவங்க ஹஸ்பெண்ட் அடிக்கடி வெளியூருக்கு போறதால அவங்களோட, மத்த பீலிங்கை பிரபுவிடம் எதிர்பார்த்துட்டாங்க.
  
  பிரபு முதல்ல அவங்க தீண்டலை தொடுதலை முதல்ல உணரலை. ஆனா அவனுக்கு ராதிகா டீச்சரோட கேரக்டர் பிடிக்கலை.
   ஒருகட்டத்துல அவங்க பிரபுவை அவங்க சொல்லற மாதிரி கேட்க சொல்லி பிளாக்மெயில் பண்ணியிருக்காங்க. அவன் அப்படி கேட்கலைனா மார்க்ல கைவச்சிடுவேன்னு சொல்லிருக்காங்க. இவனும் அவங்க சொன்னதை கேட்டிருக்கான். அதனால் பரீட்சைல குவெஸ்டின் பேப்பர்ல முக்கியமான பதிலை மட்டும் படிக்க வச்சி மார்க் எடுக்க வச்சிட்டாங்க. ஆனா அடுத்த பரீட்சையில அப்படி நடக்கலை.’ என்றவள் மூக்குறியவும் தண்ணீர் செம்பை அவள் கைப்பற்றி, ஆர்யன் கொடுக்க இருட்டில் அதனை வாங்கி பருகினாள். ஆர்யனுக்கு தன் அன்னை ஒரு டீச்சர் என்றதால் தள்ளி விட்டிருப்பாளோ? என யூகம் சென்றது.
  அடுத்த கணமே சீர்திருத்த பள்ளிக்கு எப்படி வந்தா? என்று அவளே கூறிவிடட்டும் என காத்திருந்தான்.

   நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாமல் நீரை பருகி “எனக்கு தெரிந்ததும் ஆச்சியிடம் சொல்லறேன்னு கிளம்பினேன். ஆனா அவன் என் கையை பிடிச்சி வேண்டாம் சிற்பிகா‌னு அழுதான்.
   எனக்கு என்ன செய்யறதுனு தெரியலை. நானும் சின்ன பிள்ளையில்லையா?! இனி நான் உன் கூடவேயிருக்கேன்டானு வாக்கு தந்தேன். அவனும் சரினு கொஞ்சம் போல சகஜமானான்.

   ஸ்கூல்ல நான் அவன் கூட தான் போவேன் வருவேன். ராதிகா டீச்சர் எதிர்ல வந்தா மரியாதைக்கு குட்மார்னிங் கூட சொல்ல மாட்டேன். திமிரா நீயெல்லாம் டீச்சரானு காறி துப்பாத குறையா பார்ப்பேன்.
அவங்க என்னையும் பிரபுவையும் பார்த்து அவனை தனியா கூட்டிட்டு போய் விசாரிச்சிருக்காங்க‌. என்னிடம் பிரபு அவங்களை பத்தி சொன்னதை தெரிந்துக்கிட்டதும் அவனை அறைஞ்சிட்டாங்க.   

    சிலபேர் பார்க்க, படிக்கலை, சேர்க்கை சரியில்லை, பொண்ணுங்களோட சுத்தறான்னு கத்தினாங்க.

   ரங்கநாயகி ஆச்சியிடம் தனியா கூப்பிட்டு, அந்த பொண்ணு சிற்பிகாவும் பிரபுவும் லவ் பண்றாங்க. கொஞ்சம் ஒழுங்கா பார்த்துக்கோங்க. தொட்டு தொட்டு பேசறாங்க. முத்தம் கொடுக்கறாங்கன்னு. அதட்டி கேட்டா என்னையே தப்பா பேசறாங்கன்னு முன்கூட்டியே சொல்லி வச்சிட்டாங்க.” என்றதும்‌ ஆர்யன் “அச்சோ பிறகு என்னாச்சு?” என்றான்.

   சிற்பிகா முகம் பொத்தி அழுதாள். ஆர்யனோ “சிற்பி… என்னாச்சு?” என்று தோளைத் தீண்டினான்‌.

    “அவன் செத்துட்டான். பிரபு… பிரபு சூசைட் பண்ணி இறந்துட்டான். அவனால மனஅழுத்தம் தாங்க முடியலை. இதுல அந்த டீச்சர் அவங்க கர்ப்பமா இருப்பதா சொல்லி அவனை மறுபடியும் மிரட்டி செ..+க்-ஸ் வச்சிக்கவும் அவனுக்கு இப்படி பத்து மாசமா மென்டல் டார்ச்சர் நடக்கவும் செத்துட்டான். கிணத்துல குதிச்சி செத்துட்டான்.” என்று விடாமல் அழுதாள்.

   “சிற்பிகா… சிற்பிகா… லுக் அட் மீ… அழாத… நீ அழறது கீழே கேட்டா, நமக்குள் ஏதோ சண்டைனு மேல வந்துடுவாங்க.” என்று கூறவும், கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியானாள்.

    “நான் அந்த டீச்சரை ஸ்கூல் பிரேயர்ல, நிற்க வச்சி ‘பிரபு உன்னால் தான் செத்துட்டான். நீ தான் அவனை நாசம் ஆக்கினனு டியூஷன் படிக்க வந்தா அவனிடம் வரம்பு மீறியிருக்கனு கத்தினேன்.

   ஆனா என்னை பிடிச்சி தனியா உட்கார வச்சி, நானும் அவனும் விரும்பியதால, அது அவன் வீட்ல தெரிந்துடுச்சுனு பயந்து செத்துட்டான்னு பிரின்சிப்பால் ரூம்ல ரங்கநாயகி ஆச்சி, அப்பா எதிர்ல என் மேல பழிப்போட்டா. இதுல நான் அவனோட தப்பா பழகி தப்பு பண்ணிட்டோம்னு பேசினாங்க.

  எனக்கு இருந்த கோபத்துக்கு அங்கிருந்த பெண் ஸ்டாண்ட்ல இருந்த பேனாவை எடுத்து, ராதிகா டீச்சர் தொண்டையில குத்திட்டேன். 

   அதுக்கு தான் சீர்த்திருத்த பள்ளியில என்னை கொஞ்ச நாள் சேர்த்துட்டாங்க. அந்த மூதேவி ராதிகா உயிரோட தான் இருந்தா. ஆனா தொண்டை போயிடுச்சு. கொலைப்பண்ண முயன்றதா கொஞ்ச காலம் இருந்தேன்.

அதோட மெடிக்கல் கவுன்சீலிங் கொடுக்க சொன்னாங்க.

   அங்க ஒரு மனதத்துவ டாக்டர், ‘உன் பிரெண்ட்காக அப்படி குத்திட்டியா? நீயும் அவனும் விரும்பினிங்களா? தப்பு பண்ணினிங்களா? நான் ஒரு டாக்டர் என்னிடம் மறைக்காம சொல்லு’ அப்படியிப்படி அருவருப்பான கேள்வியா கேட்டார். என்னை பார்வையால கற்பழிக்கற ரேஞ்சுக்கு பார்த்தார். எனக்கு இருந்த கோபத்துக்கு, மரியாதையா என்னை விடு இல்லைனா உன்னையும் குத்திட்டு ஜெயிலுக்கு போகவும் அஞ்சமாட்டேன்டானு சொன்னேன்.

  அந்த டாக்டர் அவருக்கு சாதகமாக ஒத்துழைக்கலை, அதோட மரியாதையில்லாமா பேசினேன்னு எனக்கு சீர்த்திருத்த பள்ளி அவசியம்னு சர்டிபிகேட் கொடுத்துட்டார்.

   அப்ப தான் சீர்த்திருத்த பள்ளிக்கு வந்த இரண்டாவது நாள்‌. ஆதிராம்மாவை அங்க சந்திச்சது. எனக்கு ஆதிராம்மாவை பத்தி எதுவும் தெரியாது. என் கண்ணுக்கு தெரிந்ததெல்லாம் அவங்க டீச்சர் அது மட்டும் தான்.

   ஆண்டு விழாவுக்குன்னு வந்து மத்தவங்களோட கலகலன்னு பேசினாங்க. ஆனா எனக்கு எரிச்சலா இருந்தது. அதனால் தான் என்னிடம் பேச வந்தவங்களை அவாய்ட் செய்தேன். ஆனா அவங்க என்னை அரவணைக்க பார்த்தாங்க தள்ளிவிட்டேன்.

   ஆனா சர்வேஷ் ஆண்டு விழாவுக்கு கூடயிருக்க, அதை பார்த்தார். அவரும் சின்ன பிள்ளையில்லையா? உங்களை கூட்டிட்டு வரவும், நீங்க வந்து என்னை அறைஞ்சிட்டிங்க. அப்பவும் திமிரா பேசினேன். உங்களோட ஆக்ரோஷம் அங்கிருந்தவங்க பேசி சமாதானம் செய்து உங்களை அனுப்பிட்டாங்க,
   அன்னைக்கு நைட்டே என்னிடம் எனக்கு வாதாடின, லாயர் அங்கிள் ஒருத்தர் ஆதிராம்மாவை பத்தி சொன்னாங்க. இப்ப அந்த லாயர் கூட நீதிபதியாக நம்ம கல்யாணத்துக்கு வந்தார்.

அப்ப அவர் நிபுணன் ஐயாவை பத்தியும் நிறைய சொன்னாங்க. அங்க ஒரு போலீஸ் தயாளன் சாரும் ‘என்னம்மா இப்படி பண்ணிட்டனு சொல்லவும் கில்டியா இருந்தது.

   ஆதிராம்மா ஒரு வாரம் பிறகு  என்னிடம் பேசினாங்க. நடந்ததை நானும் சொன்னேன். என் பையன் என்‌மேல இருந்த பாசத்துல அப்படி பண்ணிட்டான்னு கைப்பிடிச்சி பேசினாங்க. அதோட நான் வெளிய வர்றதுக்கு உதவினாங்க.

    வெளிய வந்ததும் அப்பாவிடம் போனேன். ஆனா அவர் பிரபுவோட தப்பாயிருந்ததா மத்தவங்க சொன்னதை நம்பினார். என்னை நம்பலை.

  ரங்கநாயகி ஆச்சி பிரபு போனதும் அவங்க அவனோட பையை எடுத்தப்ப அவன் ஒரு நோட்ல டீச்சர் தப்பா நடக்கறாங்க. நான் செத்துடலாமா தோணுதுனு நாலு பக்கத்துக்கு எழுதியதை வச்சி என்னை நம்பினாங்க.

   அப்ப இருந்து தனியா இருக்கற அவங்களுக்கு நான் பேத்தியா மாறினேன். அவங்க எனக்கு ஆச்சியா இருந்தாங்க.

    இங்க வேலைக்கு வந்தப் புதுசுல என்னால் நீங்க ஊருக்கு படிக்க போனதா கேள்விப்பட்டேன். ஆதிராம்மாவிடம் ‘ஏன்மா இப்படி செய்திங்க? அவர் உங்க மேல எவ்ளோ அன்பு வச்சிருந்தா உங்களுக்காக என்னை அடிச்சிருப்பார்’னு கேட்டேன்.

   அதுக்கு அவங்க, ‘உனக்காக அனுப்பலைடா.
   இந்த சீர்திருத்த பள்ளில எத்தனையோ பேர் பாடம் நடத்தி போதிச்சு இருக்கேன். சிலர் என் சொல்லை கேட்டு நடக்கறாங்க. அப்படியிருக்க அந்த இடத்துல என் பையனே என் பேச்சை கேட்கலைனு எனக்கு கஷ்டமாயிடுச்சு. அவங்க அப்பா நிபுணன் நடந்ததை கேட்டு, என் பொண்டாட்டிகிட்ட மன்னிப்பு கேட்கலைனா அவனை போகச்சொல்லு’னு விரட்டினார்.
 
  அவனுமே போறேன்னு சொல்லிட்டான். தப்புக்கு தண்டனையா நீங்க நினைச்சிக்கோங்க‌. இப்ப பேசுங்கம்மானு என் புள்ள என் மடில தலைசாய, நானும் பேசிட்டேன். சொல்லப்போனா சந்தோஷமா தான் நாங்க அவனை படிக்க வழியனுப்பினோம். அவனுமே அப்படி தான்.

அவன் எங்க போறான் அவங்க தாத்தா ஆச்சி வீட்க்குக்கு தானே. ஒரு நாள் அவன் புரிந்துப்பான்னு சமாதானம் செய்தாங்க.

எனக்கும் ஆதிரா அம்மா ஐயா கிடைச்ச சந்தோஷத்துல நீங்க இந்த ஊர் பக்கம் வராம இருந்தா கூட நல்லதுனு வேண்டினேன்.

   ஆனா பண்டிகைன்னா டான்னு வந்துடுவிங்க. அதான்‌ அன்னைக்கு மட்டும் அப்பாவை பார்க்க ஊருக்கு போறதா சொல்லிட்டு வீட்டுக்குள்ளயே இருந்துப்பேன். புக் வச்சி படிப்பேன். போன்ல ஹெட்செட்ல பாட்டு கேட்பேன். ஆச்சியும் என்னை புரிஞ்சதால எதுவும் சொல்ல மாட்டாங்க.

  இப்ப கூட நீங்க வந்ததும் தலைதெறிக்க ஓடிவந்துட்டேன். ஆனா பாருங்க ஆதிராம்மாவும் ஐயாவும் உங்களை பிடிச்சு எனக்கு கட்டி வச்சிட்டாங்க. ஆக்சுவலி என் அப்பாவை விட நான் ஐயா ஆதிராம்மாவை மதிக்கறேன். மனசுல உசந்த இடத்துல வச்சிருக்கேன். அன்னைக்கு ‘நன்றி கடன்’ அதுயிதுனு தப்பா பேசிட்டேன்‌.

   எனக்கு என்னோட நினைப்புக்குள்ள நீங்க பழசை பேசி குடையுற மாதிரி இருந்தது. நானா சொல்ல என்னால் முடியலை.

  நீங்களே சொல்லுங்க உங்களுக்கு என்னை பிடிக்காது. அப்படியிருக்க பிரபு பத்தி நான் ஏதாவது பேசி, நீங்க ஏதாவது நினைச்சிட்டு என்னை தப்பா எடுத்துக்கிட்டா.  எங்க அப்பாவே நீயென்ன உத்தமியா? பக்கத்து வீட்ல பழகினவனோட தப்பு பண்ணிட்டனு பேசினார்.” என்று கூறியவளுக்கு இருட்டில் ஆர்யன் முகம் தெரியவில்லை. லேசான பயத்தோடு, நீங்க தப்பா எடுத்துக்கிட்டிங்களா?” என்று கேட்டாள்.

   அவள் அருகே முகத்தை கொண்டு சென்றவன், “இல்லை.” என்றவன் தடமாய் பளபளத்த விழி நீரை துடைத்தான்.

அதிலே அன்பும் நேசமும் கலந்திருக்க, “தூக்கம் வந்தா தூங்கு. நிம்மதியா தூங்கு” என்று பிறை நெற்றியில் முத்தம் வைத்தான்.

  அவன் அகலவும் “அப்பறம் நான் பிரபுவை விரும்பினேன். என்னை விட ஐந்து மாசம் சின்னவன்னு நான் அதை அவனிடம் சொல்லலை. ஆனா நான் அப்ப அவனை விரும்பினேன்” என்று பெரிய பாறையாக ஆர்யன் இதயத்தில் வைத்து விட்டாள்.

   ஆர்யனோ திடுக்கிட்டவனாக அவள் உறங்கவும், அவ மனசுல பிரபு இருந்தான். இப்பவும் இருக்கானா? என்று ஸ்தம்பித்தான். இறந்துப்போனவனால் தன் வாழ்க்கை மாறிடாது. ஆனால் அவன் மேல் காதல் என்றாலும் ஆர்யனுக்கு லேசான அதிர்ச்சி. அவளிடம் காட்டிக்கொள்ளாமல் அவனும் தன் தேகத்தை மெத்தையில் சாய்த்து கொண்டான். மனமோ உறங்க மறுத்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 

34 thoughts on “என் நேச அதிபதியே -26”

 1. CRVS 2797

  எனக்கென்னவோ சிற்பிகா வேற அர்த்தத்துல சொன்னதை, ஆர்யன் வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டானோன்னு தோணுது.

 2. Avatar

  Flashback ok than athuku Aryan ku yen ipadi twist vakiringa enga Aryan pavam ila sirpika vera full ah sollala virumpinen sonna ipo epadi nu sollanum ila

 3. Avatar

  Teacher nu solli ipadi tan sila peinga suthitu irukunga….idhula paathika padura andha students nelamai innum mosam ka….
  Inum indha sirpi ponnu manasula enna irukunu therila….
  Super super ka…

 4. Avatar

  சிற்பிகா சின்ன வயசுலயே நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருந்திருக்கா, இனி எல்லாம் சரியாகுன்னு பார்த்தா இந்த நேரத்தில் பிரபுவ பத்தி சொல்லி அவன் டென்ஷன் ஆக்கிட்டாளே

 5. Avatar

  Good sirpu.ariyan give some time for her. Becz she has faced lot of problems in her life. Awesome narration sis. Interesting sis.

 6. Kalidevi

  Oru valiya manasula irukuratha Kittitas sirpika ipovum aaryan avaluku ena help panuvan therila but athulaum oru shock koduthuta . Mudhal kadhal manasula irukum thane atha sollita avanum ipo uyiroda illa . So avaluku ena thevaiyo atha aaryan panuvan .

 7. Avatar

  There is no need to express her love feelings on prabu to Aryan because it has no meaning now

  Prabu already died
  She didn’t express her love to him

  It is kind of crush feelings

  So in my opinion this time it should be avoided

  It will make unwanted complication between them

  1. Avatar

   நல்லாதானபோய்கிட்டு இருந்தது சிற்பி ஏன் இப்படி ஒரு குண்டை துக்கி ஆர்யனின் தலையில் போட்டாள்ஆசிரியர் சிலரின் தவறால் எல்லா பெற்றோருக்கும் இந்த பயம் இருக்குமா நானே என் பெண்ணிடம் தினமும் கேட்பேன் அவளுக்கு இதே போல் பிரச்சனை உள்ளதா என்று பெற்றோருக்கு அடுத்தபடியான ஆசிரியர்கள் தவறுகளை களையே வேவேண்டும் அவர்களே தவறானவர்களாக மாற கூடாது மா கதை ரொம்ப அருமையாக உள்ளது வாழ்த்துகள் மா

 8. Avatar

  Yen sis yen indha kolaveri flashback ellam seri than ethuku last ah aariyan ku oppu vachi ga oru vela sirpika crush ah than apadi solli irupa nu thonuthu sirpika sonna lawyer vidhyuth than ah ippo puriyuthu iva yen doctor nu annaikku aariyan sonnathukum sirpika athira kita apadi behave pannathuku.enna karanam nu nallavae theriyuthu atha oda sethu shock ah yum kuduthu irukala yae

  1. PraveenaThangaraj

   🙈🙈🙈🙈🙈 மனசுல யாரும் இல்லைனு தெம்பா சுத்தினான்.‌இனி கொஞ்சம் கொஞ்சமே பாடட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்‌

 9. Avatar

  Payapula flashback matum solumnu patha ex lover yaru nu soludhu ,,porapokula oru atombomb potutu poita ..iva thoongita …Avan thoonganumla …already water tank open pani konjam thookatha kedutha ipo micham thookamum poiruchu

 10. Avatar

  சிற்பிகா நினைத்து வருத்தமாக இருக்கிறது அக்கா…. ராதிகா என்ற ஒரு கேடு கெட்டவளால் பிரபு உயிர் பிரிந்ததும், அதை நிரூபிக்க சிற்பிகா முயற்சி செய்த போது ராதிகா பொய் சொன்னதால் தான் அவள் தொண்டையில் குத்தியது….. இந்த காலத்தில் ஆண், பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் மற்றும் தற்காப்பு பயிற்சி கற்று தர வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்…. இனி என்ன ஆகுமோ….

 11. Avatar

  அய்யோ 😆நல்ல திருப்பம் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு……. 😍👌❤

 12. Avatar

  Deii yarachum Avala niruthungalenda epoparu aaravoda hearth break panitey iruka…. Elam OK… Adhenna last la posukunu prabhu va virumburengra… Ennadhidhu…. Idhula indha thulir Vera ena panna kathirukalo…. Sarvesh silent killer 😕😕😕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *