Skip to content
Home » என் நேச அதிபதியே -28

என் நேச அதிபதியே -28

அத்தியாயம்-28

நேற்று சரியாக உறங்காததால் இன்று லேசாக இமை மூடியவனுக்கு நித்திராதேவி அணைத்து கொண்டாள்.‌

ஆர்யன்‌ வந்த விஷயமும், அதோடு சிற்பிகாவை‌ தேடியதும் ராணி ஆச்சி நிபுணனுக்கு அலைப்பேசி வழியாக கூறவும், மருமகளை பார்த்தபடி, போனில் "சரிங்க அக்கா‌ மருமகளிடம் சொல்லிடறேன்" என்று சிற்பிகா அருகே வந்தாள். 

“சிற்பிகா” என்றதும், “என்னங்க ஐயா?” என்று எழுந்தாள்.

‌எப்பொழுதும் நிபுணன் வந்தால் மரியாதைக்கு எழுவது தான்.‌

“இங்க எதுவும் அவசர வேலையில்லை இல்லைனா. நீ வீட்டுக்கு போம்மா” என்றார் நிபுணன்.

“இரண்டு மூன்று மெயில் அனுப்பணும் ஐயா. இந்த தேனீ மாவட்டத்துல கான்ட்ரேக்ட் போட்டவங்க பணத்தை இரண்டு தவணையா தருவதாக” என்றவளிடம், “ஆர்யன் வீட்டுக்கு வந்திருப்பதா ராணிக்கா சொன்னாங்க. ஆதிராவும் இல்லை. இந்த நேரம் வந்திருக்கான். நீ ஓரெட்டு பார்த்துடும்மா” என்றதும், ஆர்யன் என்ற பெயரிலேயே வாயை மூடியிருந்தாள்.‌

நிபுணன் கூறிவிட்டு சென்றதில் உடனடியாக கணிப்பொறியை அணைத்தாள்.

கையில் டிபன் பாக்ஸை எடுத்து ஸ்கூட்டியில் பறந்தாள்.

நிபுணனுக்கு லேசான மகிழ்ச்சி. சிற்பிகா ‘நான் எதுக்கு ஐயா. அவர் டாக்டர், வயசுல பெரியவர் அவரை அவர் பார்த்துப்பார்’ என்று வாதிட வில்லை.

அந்த நிம்மதி வரவும், பணியாட்களை கவனித்தார்.‌

சிற்பிகா பதினைந்து இருபது நிமிடத்தில் வீட்டுக்கு வந்து சேர, “காலையில சாம்பார் வடையெல்லாம் என் பேரன் கேட்டான். ஆனா சாப்பிடவேயில்லை. இப்படியெல்லாம் வீட்டுக்கு வந்ததில்லை.‌” என்று கூறி ராணி ஆச்சி நிலவரத்தை உரைத்தார்.

 ''என்னனு கேட்கறேன் ஆச்சி'' என்று படியேறினாள். 

‌அறை‌ திறந்தேயிருந்தது. சிற்பிகா வந்த பார்வையிட, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

பனியன் ஷார்ட்ஸ் என்று இருக்க, ஆர்யனை எழுப்பாமல் கட்டிலில் மறுபக்கம் திரும்பி வந்தாள். 

அவளது கொலுசு சத்தமும் மெட்டி சத்தமும், அறைக்குள் பெண்ணவள் சூடிய மல்லிப்பூ வாசமும், அவனை தூகாகத்திலும் இம்சித்திருக்க வேண்டும். யாரோ இருப்பதை கிட்டி விட, இமை திறந்தான்.‌

பூனை நடையிட்டு ஜன்னல் கதவை சாற்ற போனாள். 

வெளியே மாம்பழத்தை கொத்த வந்த கிளி கீச்கீச்சென்று சத்தம் எழுப்பியது. அதற்கு ஜன்னலை சாற்ற முயன்றாள்.

“ஜன்னல் லாக் பண்ண வேண்டாம்.” என்றதும் திடுக்கென கேட்ட குரலில் திரும்பினாள்.

அவளது ஜிமிக்கி ஊஞ்சலாக அவளது செவிமடலில் ஆடியது.

கண்களோ இவனது பேச்சால் மருளுவது புரியவும் லேசாய் புன்னகைத்தான்.

“கொண்டு போன சாம்பார் வடையை சாப்பிடலையாமே. என்னாச்சு? நீங்க இப்படியெல்லாம் வரமாட்டிங்களாம். ராணி ஆச்சி தவிச்சுட்டு இருக்காங்க” என்று ராணி ஆச்சியின் உணர்வை கடத்தி கேட்டாள்.

அவனோ அவளையே இமை மூடாமல், உன்னோட பீலிங் என்னவோ என்று பார்வையிட “உங்களுக்கு என்னோட பாஸ்ட் உருத்துதா?” என்றதும் கனவுலகில் கலைந்தவன், “என்ன‌ பாஸ்ட்? அதுல உன்‌ தப்பு எதுவுமில்லையே.” என்றான்.‌

“பிறகு ஏன் ஒரு மாதிரி அப்நார்மலா இருக்கிங்க?” என்றாள்.‌

‌நின்று கொண்டே பேசவும் அவளை அமர கூறினான்.

அவளும் அமர, “நான் நார்மலா எப்படியிருப்பேன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.‌

சிற்பிகா “தெரியும்… நீங்க நேர்ல வந்தா அவாய்ட் பண்ணி லீவு எடுந்துப்பேனே தவிர, ஆதிரா அம்மா உங்களை பத்தி பேசினா காதை முடிக்க மாட்டேன்.

அவங்க அடிக்கடி உங்களை பத்தி பேசுவாங்க. நீ ராகிங்ல மாட்டி‌னப்ப, முதலமைச்சர் ரெகமெண்ட்ல வந்தவருனு மத்த சீனியர் உங்களை ப்ரீயா விட்டதால் இருந்து, நீங்க சீனியரா இருந்தப்ப ஒரு பொண்ணு பிணத்தை பார்த்து உங்க மேலயே மயங்கியது, உங்களுக்கு வந்த லவ் க்ரீட்டிங் கார்ட், நீங்க வாங்கின மார்க்ஸ், தங்கலட்சுமி ஆச்சியோட வானவில் மால்ல அவங்களை சுடிதார் போட வச்சி அழைச்சிட்டு போனது, இப்படி நிறைய விஷயம் ஆதிராம்மா என்னிடமும்‌ நிபுணன் ஐயாவோட பகிர்வாங்க. அப்ப தெரியும். 

நீங்க‌ அங்க டூயூட்டிக்கு போகறப்ப எல்லாம் உடம்பு சரியில்லைனா மட்டும் தான்‌லீவு போடுவீங்க. மத்தபடி மருத்துவமனையில தான் பழியா இருப்பிங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்." என்றவள் உடல்நிலை சரியில்லாமல் வந்துவிட்டாரா? என்று அவசரமாய் அவனது நெற்றியில் கை வைத்து பார்த்தாள். 

அவள் தீண்டவும் ஹார்மோன் சுரப்பிகள் காதல் அம்பை உள்ளே விதைத்தது.

விழிகள் காதல் மயக்கத்தோடு அவளை காண, ‘உடம்பு எதுவும்‌ சுடலை’ என்றவள் அவன் மயங்கிய பார்வையில் சதாரித்தாள்.

கையை விடுக்கென எடுக்கும் நேரம், அவளது வளையல் கலை பிடித்தான்.

“உனக்கு என்னை பத்தி பக்கத்துல பேசி‌ அம்மா சொல்லி தெரிந்திருக்கலாம்‌. பட் எனக்கு உன்னை பத்தி எதுவும் தெரியாது‌.

சீர்த்திருத்த பள்ளியில ஆண்டு விழாவுக்கு எங்க வீட்ல எல்லாரும் வந்திருந்தோம்.

ஐயா அங்கிருந்தவங்களுக்கு கிப்டா ஓவியம்‌ வரையிற செட் பாக்ஸ் வாங்கி பேக் பணணியது மினி டெம்போல இறக்கிட்டு இருந்தாங்க.
துளிரை ஐயா தூக்கிட்டு வேடிக்கை காட்டிட்டு நின்றான். நான் ஐயா பக்கத்துல இருந்தேன்.‌

சர்வேஷ் திபதிபுனு ஓடிவந்தான்.‌

நான் தான் நிற்க வச்சி என்னடானு கேட்டது. மூச்சு வாங்க, ‘ஒரு அக்கா அம்மாவை நீ எல்லாம் டீச்சரா இருந்து என்னத்த கத்து கொடுக்கப்போற போடினு, என்கிட்ட வந்த கொன்றுடுவேன் கத்தினாங்க. அம்மா கூட சண்டை போடறாங்க’ அப்படின்னு சொன்னான்.‌

எனக்கு சுள்ளுனு கோபம் வந்தது.‌ அவனை இழுத்துட்டு வந்து பார்த்தா, நீ எங்கம்மாவை தள்ளி விட்டிருந்த, கையில லேசான சிராய்ப்பு அம்மா அடிப்பட்ட இடத்துலயும் உந்த காயத்துல ஊதினாங்க. என் கண்ணுல தெரிந்தது அம்மாவோட ரத்தம், வந்ததும் சப்புன்னு அறைஞ்சிட்டேன். 

‌ நீ சின்ன பொண்ணு அறைந்தப்ப எனக்கு தப்பா தோணலை. அம்மா தான் இளவயசு பிள்ளையை நீ எப்படி அடிக்கலாம். இங்க இருக்கற பிள்ளையை அடிக்கிற உரிமை யார்‌ கொடுத்தது. அப்படின்னு சாரி கேட்க சொன்னாங்க.

‘நல்லவ மாதிரி நடக்காதிங்கடி’ அப்படின்னு நீ சொன்ன. ‘டி’ போட்டு என் அம்மாவை பேசறப்ப எனக்கு உன்னிடம் மன்னிப்பு கேட்க இஷ்டமில்லை.

நான் சிலையாட்டும் கோபமா இருந்தேன். அம்மாவுக்கு சீர்த்திருத்த பள்ளியில அவங்க பேச்சை மத்த ஸ்டூடண்ஸ் கேட்க, நான் ஒரு சாரி கேட்காதது அவமானமா போயிருக்கும். பெத்த பிள்ளையே சொல்பேச்சை கேட்கலை என்ற கோபம். அதுவும் நான்.

என்னால அங்க இருக்க பிடிக்காம போக, அம்மா உன்னை தான் சமாதானம் செய்தாங்க. நான் ஐயா பக்கத்துல போனேன். அம்மா பின்னாடியே வந்து 'சாரி கேளு'னு மொட்டையா சொல்ல நான் 'இங்க இருக்கறவங்களுக்கு நீங்க ஒன்னும் பாடம் சொல்லி தர வேண்டாம். கொலை திருட்டுனு செய்துட்டு வந்த நாய்ங்க இருக்கற இடத்துல நீங்க இருக்காதிங்கனு சொன்னேன் அம்மா என்னை அடிச்சிட்டாங்க. என்னை அடிக்கவும் துளிர் அழ ஆரம்பிச்சிட்டா தேம்பி தேம்பி அழுது அவளோட வீட்டுக்கு வந்துட்டேன். 

அப்பறம் அம்மா இந்த சர்வீஸை ஏன் செய்யறாங்கன்னு காரணம் சொன்னாங்க.(என் காதல் கல்வெட்டில… கதை‌வாசிக்கவும்)

அப்பறமும் ஐயா மன்னிப்பு கேட்க சொன்னார்.
என்னால முடியலை. அதான்‌ கொஞ்ச நாள் படிப்பு வெளியூர்ல இருக்கட்டும்னு சென்னை போனது.

கொஞ்ச நாள் ஒரு பொண்ணால இப்படி வந்துட்டோமேனு கோபம் இருந்தது. ஆனா இறப்பு பிறப்பை எப்ப நேர்ல பார்க்க ஆரமபகச்சேனோ மனுஷ வாழ்க்கை இருக்கற வரை ஸ்மூத்தா வாழ்ந்திடணும்னு புரிந்தது. 

நீ மில்லுல வேலை செய்யறது கூட தெரியாது.‌ ஆனா நீ பொண்ணு அம்மா கூட டச்ல இருப்பனு ஒரு‌யூகம் இருந்தது.‌

‌ எனக்கு மனைவியா அம்மா உன்னை சூஸ் பண்ணினப்ப தான். கொஞ்சம் கன்பியூஸ். அம்மா பிடிக்காததை திணிக்க மாட்டாங்க. என் மீதி வாழ்க்கையையே திணிக்கறாங்களேனு யோசனை.‌

சப்போஸ் அரை மனசா கட்டிக்கிட்டு இந்த மீதி வாழ்க்கையை கேள்விக்குரியாக்கிக்க மாட்டேன்.

நீ பிரபுவை விரும்பியிருக்க, அதை நான்‌ க்ரஷ்னு என்று எடுத்துக்கிட்டோ, காதலா என்றோ நினைச்சாலும் இப்ப அவன் இல்லை.

இல்லாத ஒருத்தனால நான்‌ குழம்பப் போறதில்லை. என் முன்னாடி இருக்கற உன்னால தான் குழப்பிட்டு இருக்கேன்.‌

உனக்கு என்னை பிடிக்குமா? நீ என்னை விரும்புவியா? நமக்குள்ள நடந்த சண்டை மிச்ச மீதி எச்சம் இருக்கா? இதான் என் மனசுல உருளுது.

நான் ஒரு டாக்டர். சாரி… ஹர்ட் பண்ணாலும் சில வார்த்தையை தவிர்க்க முடியாது.

என்னால இதுக்கான பதில் தெரியாம நடமாட முடியலை. இந்த உணர்வு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. இது காதலா இருக்கும்னு சொல்ல வரலை. காதலா மாறிட்டு வருது” என்றவன் நெற்றியில் அவள் தொட்டு பார்க்க, இவன் அவள் கையை பற்றியிருக்க, அதனை கண்டு விடுவித்தான்.

சிற்பிகா நிலை எப்பொழுதும் போல சிற்ப நிலை.

ஆர்யனோ டீ-ஷர்ட் தலை வழியாக அணிந்து அவளுக்கும் நேரம் தந்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

சிற்பிகாவுங்கு ‘ஆதிராம்மாவோட பையன் ஆர்யன் என்னை விரும்பறார்? என்னை… என்னை விரும்பறார்?’ என்றவளுக்கு எச்சி கூட்டி விழுங்கினாள்.

பிரபுவை நான் க்ரஷ்ஷா நினைச்சாலும் காதலிச்சாலும் அவருக்கு அதுவ எந்த கருத்தும் இல்லையா?’ என்று கேட்டு அவனை தேடினாள்.‌

“இந்தா ஒரு நிமிஷத்துல ஓவன்ல வச்சி எடுக்கேன் நெய் ஊத்தி சாப்பிடுய்யா” என்று ராணி ஆச்சி குரலில் சாம்பார் வடை சாப்பிட சென்றிருப்பது தெரிந்தது.

‘இவரை சரியான சாப்பாட்டு ராமனா மாத்திடுவாங்க இந்த ராணி ஆச்சி.’ என்றவள் சேலையை இடையில் சொருகி நடந்தாள்.

“ஏன் ஆச்சி இப்படி என்னை ஏதாவது சாப்பிட வச்சி‌ குண்டோதரனா மாத்த ட்ரை பண்ணறிங்க, சர்வேஷ் ஏன் என் வயசுல இருக்கான் இப்ப தெரியுது.” என்று குறைப்பட்டான்.‌

“ஆஹ்… சர்வேஷ் எல்லாம் அந்த வயசுக்கு கேத்து காலேஜ் படிக்கிற தோரணையில இருக்கான். நீங்க தான் ராசா இன்னமும் காலேஜ் பிள்ளையைக் கணக்கா இருக்கிங்க” என்று புகழ்ந்தார்.‌

‘அப்படியென்ன வயசு இருபத்தியெட்டு தானே.‌ சர்வேஷுக்கு இந்த இயர் காலேஜ் பி.இ படிப்பு முடியும்‌. அவர் தங்கைக்கு முடியும்’ என்று தன் முன்பக்கம் நீண்ட சிகையின் பின்னலில் இடது கையால் தீண்டி நினைக்க, விக்கலோடு ஆர்யன் சிற்பிகாவை காண தன் நீண்ட ஜடையை பின்னுக்கு தள்ளி, தண்ணீரை ஊற்றி தந்தாள்.

கையோடு வந்த சிறு முடிக்கற்றை அவன் பார்வையில் படவும், ”முடியிருந்த… உறவு நீடிக்கும்..” என்று விக்கி விக்கி கூறிவிட செம்பில் கீழ் பக்கம் ஒட்டியிருந்த முடியை எடுத்தாள்.

“சாரி” என்றாள்.

“சாரி… இது உன்னை முதல் முதல்லா கன்னத்துல அறைஞ்சதுக்கு” என்று கூறிவிட்டு “ராணி ஆச்சி சாம்பார் வடை காலி. இப்ப திருப்தியா?” என்றவன் மனைவியிடம் ஓகேவா’ என்று தலையாட்டி முடித்தான்.‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

42 thoughts on “என் நேச அதிபதியே -28”

 1. Kalidevi

  Aarya nee unga mari tha but inum athigama kamipa pola pasathaì sirpika mela . Paravala taknu manasula irukuratha sollitu ava kitta kekatha sorry ah ipo ketutan

 2. Avatar

  Super super da Arya oru vazhiya un manasula irundha confusion aprm pudhusa udhicha kaadhal semaiya sonna da…Avan sirpi kita manasula irukardha sonna vidham azhaga ezhudhirundhinga akka…. super

 3. CRVS 2797

  ஆஹா…ஓஹோ…! இப்படி எதுக்கெடுததாலும் தலையாட்டி பொம்மையா இருந்தா தானே
  சிற்பிகாவுக்கு ஆர்யனை பிடிக்கும், எங்களுக்கும் பிடிக்கும்.

  1. PraveenaThangaraj

   தலையாட்டி பொம்மையாக எந்த பெண்ணும் ஆணை ஆட்டி படைக்க நினைக்க மாட்டா. இந்த சாரி அவ எதிர்பார்க்கலை.
   ஆர்யனுக்கு நிபுணன் குணம் அதனால் மன்னிப்பை மனசார கேட்கிறான்.‌ யாரோ ஒருத்தரை செப்பல்ல தெரியாம மிதிச்சாலும் நாம் மன்னிப்பு கேட்பது தான்‌ அப்படியிருக்க கட்டியவளின் அன்றைய நிலை தெரியாம அடிச்சது தவறில்லை. அன்னை கூறியும் மன்னிப்பு கேளாதது தவறுனு இப்ப பீல் பண்ணறான்.‌ நான் இந்த நோக்கத்தில் எழுதியது.
   மன்னிப்பு கேட்டா தலையாட்டி அல்ல.

   1. Avatar

    உண்மை தான் யாரும் யாரையும் தலையாட்டி பொம்மையாக ஆட்டி வைக்க நினைப்பதில்லை …..உறவை பொருத்து உரிமையை தான் எதிர்பார்ப்பார்கள்….. வருடங்கள் கடந்தாலும் தவறென்று தெரியும் போது மன்னிப்பை கேட்பது தவறான செயல் அல்ல …..அந்த இடத்தில் ஆர்யனும் சரி சிற்பிகாவும் சரி தான் அவர்கள் கோணத்தில்….சிற்பிகாவிற்கு ஆசிரியையால் அனுபவம் ஆர்யனுக்கு அன்னை பாசம்……இப்போது சிற்பிகா பக்கம் அதிக நியாயம் இருப்பதாக புரிந்து கொண்டான் மன்னிப்பு கேட்கிறான் இவன் தந்தை தவறே இல்லாவிட்டாலும் தன் இணையிடம் முதலில் மன்னிப்பு கேட்க தயங்காதவராயிற்றே…… ஆர்யன் மனதை குழப்பி தெளிவாகிட்டான் காதலா மாறிட்டு வருதுன்னு….ஆனா சிற்பம் ஆதிராம்மா பையன் காதலிக்கறதா நினைக்கிறாளே இன்னும் கணவன்ங்கற நினைப்பு வரலியே……அதேசமயம் காதலிச்சாலும் கிரஷ்ஷா இருந்தாலும் பரவாயில்லையா அப்படின்னு நினைக்கிறப்ப என்ன எதிர்பார்க்கிறான்னு அவளுக்கே புரியல போல…..ராணி அக்கா நிபுணன் வீட்டு அன்னபூரணி பேரன் சாப்பிடலன்னு எவ்வளவு வருத்தம் இவங்கள மாதிரி ஆட்களுக்கு அடுத்தவங்க வயிறு நிறைந்தா இவங்க மனது நிறைவாகிடும்……

    சர்வேஷ் அண்ணன் திருமணத்த திணிக்கபட்டதா யோசிக்கற இடத்தில் நினைச்சேன் என்னடா இது இவனை வைத்து பெத்தவங்கள எதுவும் தவறா முடிவு பண்ணிட கூடாதே…. குடும்ப உறவுகள் சங்கிலி தொடர் போலவாச்சேன்னு …..ஆனா சரியாகிடிச்சி ஆர்யன் சொல்லாம சர்வேஷ் அண்ணிங்கற வார்த்தைய சொல்ல போறதில்லங்கற மாதிரி தோணுது ஆர்யன் தம்பி கிட்ட எப்ப அண்ணிங்கற உறவ சொல்றான்னு பார்க்கலாம்……

 4. Avatar

  👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

 5. Avatar

  ஆரியன் நிபுணன் ரத்தம், நியாத்தின் பக்கம், அதுவும் தன்ளவளின் காதலை பெற, மற்றும் அவளின் அன்றைய சூழ்நிலை உணர்ந்து மன்னிப்பு கேட்டது சூப்பர். அய்யோ இதை பார்க்க அதிரா இல்லையே அது தான் கொஞ்சம் கவலை. சிற்பிகா சிலை கொஞ்சம் டாக்டர்யும் புரிஞ்சு நடந்துக்கனும்.

 6. Avatar

  அருமை. .. நிபுணன் மகன் தவறு புரிந்ததும் சாரி கேட்டுட்டான் …. சூப்பர். .. சீக்கிரம் இரண்டு பேருடைய. ரொமான்ஸ் எதிர் பாக்கலாம்

 7. Avatar

  ரொம்ப நல்லா இருக்குமாகதையின் பயணம் ஆர்யன் மன்னிப்பு .கேட்டதுஆண் என்ற கர்வம் இல்லாமல் தன்னில் சரி பாதியாக நடந்துகொண்டதுபோல்தான் இருந்தது வாழ்த்துகள்

 8. Avatar

  Aara love sonavidham nalarku….. Evlo azhaga solitan…. Avan confusion…. Opinionelathaiyum…. Adhukumela sorry unarndhu sonnadhu Vera level😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍

 9. Avatar

  அருமையான கதை நகர்வு அக்கா….👌👌👌👌👌…. ஆர்யன் தன் மனதில் உள்ள காதலையும் குழப்பத்தையும் தெளிவாக கூறி விட்டான்…. இனி முடிவு எடுக்க வேண்டியது சிற்பிகா தான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *