Skip to content
Home » என் நேச அதிபதியே -29

என் நேச அதிபதியே -29

  அத்தியாயம்-29

    ஆர்யன் சிற்பிகாவிடம் பேசிவிட்டு திண்ணைக்கு வெளியே திருநிறையக தோட்டத்தில் பூத்த மலர்களை ரசிக்க ஆரம்பித்தான்.‌

   அக்கணம் தெருவில் ஒரே கூட்டமும் சத்தமுமாக, மாட்டு வண்டியில் யாரையோ ஏற்றி செல்வதை காண முடிந்தது. ஆர்யன் என்னவென அங்கிருந்த பணியாளிடம் கேட்க, அதே நேரம் ‘அய்யா டாக்டர் இங்க இருக்கார்.‌
   இவரிடம் காட்டுங்க.” என்று ஒரு குரல் வந்தது.

   வண்டியோ அப்படியே நின்றது.

   ஆர்யனோ “என்னாச்சு‌ ஒரே கூட்டம்.” என்று கேட்க “ரவிக்கு பாம்பு கடிச்சிடுச்சுங்கயா. எந்த பாம்புனு தெரியலை. வாயில நுரை தள்ளுது. டாக்டரிடம் போக எப்படியும் இன்னும் அரை‌மணி நேரமாகும்.” என்று கூறவும், அவரை இங்க கூட்டிட்டு வாங்க” என்று ஆர்யன் கூற, “தம்பி அந்த பைய ரவி. ஐயாவுக்கு பிடிக்காது” என்று ராணி ஆச்சி கிசுகிசுத்தார்.‌

‌‌ “அதெல்லாம் எதிராளியா இருந்தாலும் நம்ம ஐயா இந்த நேரம் பகையை முன்ன வச்சி முடிவெடுக்க மாட்டாருங்க ஆச்சி” என்றவன் ரவி என்பவனுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தான்.

ரவியின் மனைவி வாயிலும் வயிற்றிலும் அடிக்காத குறையாக ஒப்பாரி வைத்தார்.

   பாம்பின் கடிதடமும், நுரையும் வழிய, கூடுதலாக மதுவின் வாசம் வேறு. மதுக்குடித்ததை பறைச்சாற்றியது. மதிய நேரத்தில் மதுவா? என்று நெற்றி தேய்த்தான்.

நுரையை தொட்டு பார்த்தவன், கடித்த இடத்தை அழுத்தவும், கருமையான இரத்தமாக இருக்க, மடமடவென மருந்தை எழுதி, பக்கத்துல இருக்கற மெடிக்கல் ஷாப்ல இந்த மருந்தை மட்டும் வாங்கிட்டு வாங்க” என்று‌‌ அனுப்பிவிட்டு அவன் காலை எடுத்து திண்டில் வைக்க, “ராசா நீயேன் அவன் காலை பிடிக்க. இவன்‌ யாருனு தெரியாம பண்ணாத” என்று‌ ராணி ஆச்சி தடுத்தார்.

   “ஆச்சி இது என்‌ கடமை. நீங்க தள்ளி நில்லுங்க” என்றவன்‌ தன் வீட்டு தோட்டத்தில் கண்களை படரவிட்டு ஒரு தழையை வைத்து கசக்கி ரவி வாயில் அதக்க வைத்தான்.

   நுரையெல்லாம் பச்சையாக மாறியது. ஒரு துண்டால் நுரையை துடைத்தவன், கால் பகுதியில் தன்னிடமிருந்த மருத்துவ கத்தியால் அங்கிருந்த பகுதியை கீறி முடித்தான்.

‌ ஆர்யனுக்கு எவனோ ஒரு குடிக்காரன் காலை தொட்டு மருத்துவம் பார்க்கும் நிலை அல்ல. ஆனாலும் செய்திருந்தான் கடமை என்ற வரையறைக்குள்.
   கருப்பான திரவமாய்‌ ரத்தம் சொட்டியது. அதற்குள் மெடிக்கல் ஷாப் போயிருந்தவன் ஊசியும் மருந்துமாய் நீட்டவும் அதனை இடுப்புபகுதியில் போட்டுவிட்டான்.

‌ நிபுணனோ சிற்பிகாவை அனுப்பியதால், மைந்தனும் இருக்க மதிய உணவை சாப்பிட வீட்டுக்கே வந்தார்.
‌ ஆதிராவுமே ஆர்யன் மருத்துவமனையில் இருந்து வந்ததால் அவளுமே என்னவோ ஏதென ஓடிவந்திருந்தாள்.‌

  வீட்டில் கூட்டம் என்றதும் ஆதிரா ஓடிவர, நிபுணன் தடுத்து “ஐயா டூயூட்டி பார்க்கறார்” என்று தடுத்தான்.

நிபுணன் ஆதிரா என்றதும் வழிவிட்டு முடிக்க தனித்து பார்வையிட்டனர்.

‌‌    “கொத்தியதும் சாகற அளவுக்கு விஷப்பாம்பு இல்லை. ஆனா இப்படியே விட்டா இவர் கொஞ்சம் கொஞ்சமா மயங்கி அன்கான்சகயஸாகி சாக வாய்ப்புண்டு.
இப்ப குடிச்சிருக்கார். அதோட பாம்பு கொத்தவும் அதோடது சேர்ந்து ரசவாதம் நிகழ்ந்து‌ வாயில நுரை தள்ளி வைச்சிடுச்சு. பாம்பு கடிச்சதால அவர் பதட்டத்துல பிபி ஏறி மயக்கத்துல போறார். இப்ப போட்டிருக்குற இன்ஞெக்ஷன் பாம்பு கொத்தின இடத்தை அதோட விஷமோ மிச்ச மீதியோ இருந்தா மாத்திடும். உயிர் பிழைச்சிடுவார் பயப்படவேண்டாம்.

   கொஞ்ச நாளைக்கு குடிக்காம இருக்க சொல்லுங்க. நாளைக்கு காலையில ஒரு ஊசி போடறேன்‌. மொத்தம் ஐந்து ஊசி ரெகுலரா போட்டுடணும். சாப்பாட்டு முறையும் மாத்திடறேன். நாலு நாள் ரசம் மட்டும் எடுத்துக்கோங்க” என்றதும் ரவியோ உயிர் போய் உயிர் பிழைத்தது போல நன்றியை பார்வையால் உரைத்தான். அவனால் பேச்சு வராமல் இமைகள் சொருகியது.

   “இப்ப கொஞ்ச நேரத்துல கண் விழிப்பார். அதுவரை இங்க இருக்கட்டும். ராணி ஆச்சி மோர்ல உப்பு கலந்து கொண்டாங்க” என்றதும் ராணி ஆச்சி இடத்திலிருந்து அசையாது நின்றார்.

  தனக்கென்றால் ஓடியோடி செய்யும் குணம் இந்த ஆளால் ஓரடி கூட எடுத்து வைக்காமல் இருக்க, பக்கத்தில் இருந்த தன் பத்தினியிடம் கண் காட்ட, அவனையே இமைக்க மறந்து இருந்தவளோ அவன் கண்காட்ட அடுப்படிக்கு சென்றான்.

  நிபுணனுக்கு கண்கள் கலங்கியது. ஆதிராவுக்கு மகன் சிற்பிகாவிடம் பேசாமல் செயல்பட வைத்தது எல்லாம் ஆச்சரியம் தந்தது.

   அதற்குள் கூட்டத்தை ஒதுக்கி மத்தவங்களை வேலையை பார்க்க கூறவும் சிலர் அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

‌‌ ரவியோ நிபுணன் வந்ததும் எழ போராடினான். ஆனால் முடியவில்லை.

ஆர்யன்‌‌ “பெரியவரே இன்னும் மூன்று மணி நேரத்துக்கு உங்களால எழுந்துக்க முடியாது.” என்றதும் இமை சொருகி நிதானித்தான் ரவி.

‌ “என்ன ஐயா… அம்மாவும் வந்துட்டிங்க” என்று கேட்டான்.‌

  “நீ வீட்லயிருப்பதா ராணி அக்கா போன்‌ போட்டாங்க வந்துட்டேன்.

   ஏதும் பிரச்சனையில்லையே ஆர்யா” என்று‌ ஆதிரா கேட்க, “இல்லைங்கம்மா” என்றவன் “ராணி ஆச்சி ரொம்ப கெட்டவங்க நீங்க” என்று கைகாலை சோப்பு போட்டு அலம்பி வீட்டுக்குள் சென்றான்.

ராயல் தான் வீட்டில் கூட்டமென்று குலைத்து கொண்டேயிருந்தது.

அதனை தோட்டத்து பக்கம் கட்டி வைத்திட சத்தம் குறைத்து கொண்டது.

     ரவியுடன் அவன் தாலி கட்டிய மனைவி கூடவேயிருந்தாள்.

   நிபுணனோ ஆர்யன் அருகே வந்து, “ராணி ஆச்சி பழைய கதையெல்லாம்   மறக்காததால அப்படி சொல்லிருப்பாங்க.” என்றவர் “மனசு குளிர்ந்திடுச்சு ஐயா‌. நான் ஆசைப்பட்டதை எல்லாம் நீங்க படிச்சது பெரிசில்லைங்க ஐயா. ஆனா உசுருக்கு ஆபத்துன்னு எதிராளி வந்தாலும் உங்க கடமையை‌ செய்திங்க பாருங்க. எனக்கு மனசு குளிர்ந்திடுச்சு.” என்று ஆர்யனை கட்டிக்கொண்டார்.

   நிபுணன் ஆர்யனை பால்ய வயதில் பைக்கில் சுற்றி திரியும் நேரம் பரதன் ரவியை கண்டால் நிபுணனிடம் முனங்குவதை கண்டு, அது யாரு சித்தப்பா, அவங்களை எங்க பார்த்தாலும் திட்டற?” என்று கேட்க, பரதன் எப்பவும் போல ஓட்டவாயால் ஒப்பித்திருந்தான்.

   நிபுணன் ஐயாவுக்கு யாரெல்லாம் பகையாளி என்று விளக்கியிருந்தார்.

  அந்த வயதில் ஆர்யனுக்கு எங்க ஐயாவுக்கு இப்படியெல்லாம் குடைச்சல் தந்தானா? என்று கோபம் கொப்பளிக்க, ‘ஏலேய் சின்ன பிள்ளைக்கிட்ட என்ன பேசறே? கூறுகெட்டவனே.
    அவன் தான் இப்ப நம்ம பக்கம் வம்பு வச்சிக்கறதுயில்லை. அப்படியிருக்க‌ பழைய பகையை பிஞ்சு மனசுல விதைக்காத. எங்கய்யா ஆர்யனுக்கு எந்த பகையும் இந்த மண்ணுல இருக்க கூடாது.” என்றார் நிபுணன்.

  அப்பொழுதே பரதன், “எங்கண்ணனா உங்களை மாதிரியே பொசுக்குன்னு ஆர்யன் மன்னிச்சிடறாப்ள. இப்படியே வளர்ந்தா நம்ம ஆர்யன் தம்பி சாமியார் மடத்துக்கு தலைமை தாங்கலாம். அந்தளவு நிதானம். என்றதும் “என்ற மகன் எதுல பெயர் எடுக்கறானோ இல்லையோ இந்த மன்னிக்கறதுல என்னைய மிஞ்சிடணும்” என்று புகழ்ந்தார்.

அன்றிலிருந்து ஆர்யன் மன்னிப்பை வழங்கிடுவான். என்ன மன்னிப்பு கேட்க தான் ஒரு பஞ்சாயத்தையே கூட்டிவிட்டான். 

   அதில் சில அதிருப்தி அடைந்தாலும் இன்று பெருமை கொண்டார் நிபுணன்.‌

‌‌ மற்ற  “சிற்பிகா அவன் பார்வைக்கு புரிந்து மோர் கொண்டாந்தா.” என்று கூறவும், “டீச்சரம்மா நம்ம பையன் அவன் திருமணம் அன்னைக்கே மருமக காலுல விழுந்துட்டான்.

   மெட்டி போட்டு நீயின்றி நானில்லைனு புரிய வச்சவரு. இந்த அதிசயம் சீக்கிரம் அமையும்னு எனக்கு தெரியும். நீங்க தான் பயந்துட்டு கிடந்திங்க. எப்பவும் போல” என்று வாறினான்.

ரவியோ தான் குடித்ததும், மனைவியை அடித்ததும், மகள் ஒருத்தனோடு ஓடிப் போனது என்று வாழ்க்கை சரித்திரம் தன் மனதின் எண்ணத்திற்கு ஏற்ப கொடுத்திட, நிபுணனை போல மனைவி மக்களை பெறாத மனிதனாக தோற்றான்.

    மதியம் குடும்பமாய் சாப்பிட, ராணி ஆச்சி பேரன் தன்னை கடிந்திட்டதால் அவரே தட்டில் சோற்றை போட்டு ரவியின் மனைவிக்கு கொடுக்க, ரச சோற்றை ஒரு சொம்பில் ஊற்றியிருந்தாள். எப்படியும் விழித்ததும் குடித்தபடி செல்வானென பசியாற்றி விட்டார்.

    சாப்பிட்டதும் இரண்டு மணியளவில் ரவி ஓரளவு கண் திறக்க, கும்பிட்டு நன்றி கூறி நகர்ந்தான்.
  
  மாடிக்கு சிற்பிகா ஆர்யன் சென்றதும், “என் லைப்ல இப்படியொரு கேரக்டர் பார்த்ததில்லை. உங்க பேரண்ட்ஸை பகையா நினைச்சி வாழ்ந்தவளுக்கு கூட உயிர் பிழைக்க வைக்கிறிங்க.

இதே வேறொருத்தரா இருந்தா கையை கட்டி வேடிக்கை பார்த்து இருப்பாங்க.” என்று புகழவும், ஆர்யனோ அவள் கையை பிடித்து, “தேங்க்யூ நான் அந்த நேரம் பார்த்ததும் நீ போய் மோர் கொண்டு வந்தததுக்கு. எங்க ஐயா பார்வைக்கு ஆதிராம்மா புரிந்து நடக்குறப்ப, இந்த மாதிரி நிச்சயம் நமக்கு அமையாமாட்டாங்கனு நினைச்சேன்.‌

பரவாயில்லை மாமியாருக்கு ஏத்த மருமக தான்” என்றதும், சிற்பிகா தலைகுனிந்து நாணினாள்.

ஆர்யனோ வெட்கத்தோடு தலைக்குனிந்தவளின் தாடை நிமிர்த்தி, இதழோடு இதழ் பேச, சிற்பிகா கைகள் ஆர்யனின் தோளில் பிடிமானத்திற்கு சென்றது.

இமை மூடி அதரம் ருசிக்க, இதயத்துடிப்பு பலமான சத்தம் கேட்க ஆர்யன் விடுவித்தான். 

என்னாச்சு?’ என்று திடுக்கிட்ட சிற்பிகா செவியில் ஸ்டெதஸ்கோப் சொருகி, அவளது இதயமிருக்கும் பகுதியில் வைத்தான்.

இதயம் பலமடங்கு ஓசேயெழுப்பி துடிக்க, சிற்பிகா தன்‌இதயத்துடிப்பா என்று வாயை பிளக்க, சட்டென்று தன் நெஞ்சில் அக்கருவியை வைத்தான். ஆர்யனின் இதயதுடிப்பு செவி வழியில் கேட்டதும், அவளுக்கு இணையாக துடித்தாலும் அவளது விழியில் காதலை நுழைத்திட, “ஆதிராம்மா கூப்பிடற மாதிரி இருக்கு” என்று ஸ்டெதஸ்கோப்பை கழட்டி கொடுத்து ஓடினாள்.

ஆர்யனோ தலையை ஆட்டிக் உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்

ஹாய் பிரெண்ட்ஸ் சாரி இரண்டு நாள் கதை போடலை.

ஒன்னு லிட்டில் ஹர்ட்டிங். நம்ம கதை குறிப்பிட தகுந்த படைப்புல கூட வரலையா? அந்தளவு மோசமா இருக்கான்னு.‌
அப்பறம் பணத்தை பிரதானமாக யோசிக்கறாங்க‌. இங்க எதையும் எதிர்பார்க்க கூடாதுனு மனதை தேற்றிக்கிட்டேன்.

இரண்டு ஒரு வருஷத்தகற்கும் மேலாக எழுதி முடிச்ச கதை மேகராகமே மேளதாளமே கிண்டல்ல போடலை. அதை போடலாம்னு என்‌மனதை திசை திருப்பிட்டேன்‌ . அந்த கதைக்கு ப்ரூஃப் ரீடிங் பார்க்க போயிட்டேன்.
‌ இனி அந்த ஆப்ல கதை போடுவது சாத்தியக்குறைவு.

முடிஞ்சா இங்க ரெஜிஸ்டர் பண்ணி பாலோவ் பண்ணி‌ படிங்க.
இல்லைனா வாட்சப் சேனல் லிங்க்ல சேர்ந்து கதையின் திரியை பெற்று வாசிங்க.

Follow the Praveena Thangaraj Novels channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaLzctl8qIzyMR16cq0m

எனக்கு செயலியில் கொஞ்சம் அதிருப்தி. அந்த ஆப்பை திருத்தவோ வழிநடத்தவோ என் தலையெழுத்து இல்லை.
நான் கதையே இல்லாம எழுதி பரிசு வாங்க விரும்பாதவள். நல்ல கதையை கொடுக்க தான் என் விருப்பம்.
நன்றி ஆதரவு தரும் அன்பு நெஞ்சங்களுக்கு.

  ‌

34 thoughts on “என் நேச அதிபதியே -29”

 1. Avatar

  Don’t..feel sister……தாமதம் ஆனாலும் நிபுணனுக்கு நிச்சயம் விதுரனை போல வெற்றிஉண்டு

 2. Avatar

  எதை குறித்தும் கவலைபடாதீங்க சகிமா உங்கள் மீது நம்பிக்கைை வைவையுங்க உங்கள் கதைகள் எல்லாமே படித்திருக்கிறேன் எல்லாமே ரொம்ப அருமையாக இருக்கும் மற்றவர்கள் துற்றுகிறார்கள் என்றால் நாம் வளருகிறோம் வெற்றி அடைகிறோம் என்று அர்த்தம்மா உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் மா

 3. Avatar

  Super sis nice epi 👍👌😍 aryan sirpika endha alavuku muneriyadhu super pa 😍 feel pannadheenga sis nalladhukey kaalam Ella nu summava sonanga ignore negativity sis 😔

 4. Kalidevi

  Kathai arumaiya poitu iruku sisy . Unga kadhaiya follow panra nanga irukom engalukaga podunga nanga atharavu tharuvom epovum . Unga kathai avlo alaga nalla msg family friends nu ellaraium vachi thiruthama nalla iruku . Nalla kathai eluthuravangaluku oru black vaika ninaikiravangala pathi yosikama neenga Unga style follow panunga sisy . Regret that. We all are here for support u. 🙌👏👏

 5. Avatar

  ஆர்யன் சூப்பர் சூப்பர் கா!!… இனி ஆதிராம்மா பயப்படாம இருப்பாங்க!!..

  They don’t deserve ur story kaa!!… neenga worry pannikathinga!!…

 6. Avatar

  Unga thought puriyuthu sis nega site la yo illa app la yo enga story potalum definite ah support pannuvaen it’s sure
  Aariyan innaikku ne than hero ravi unnoda ennam pola unnaku vazhkkai enga nibu avan oda ennam than innaikku athira mathiri oru wife aariyan oda seyal la yum innaikku therinchi thu aari ne anniya thuku.doctor ah iruku ah ippo kooda ah va heart beat ah stethoscope ah vachi check panni love ah express pannuviga

 7. Avatar

  Don’t feel sister unga kadhaya enga post panalum na padipen super ah iruku seekrama kadhaya post panunga wereagerly waiting for aryn nd sirpi love. App or site enganaalum na support panuven

 8. Avatar

  நிபுணன் மகன் ஆர்யன் சூப்பர் ….

  நீங்க எங்க கதை எழுதினாலும் நான் படிப்பேன் அக்கா 💜💜💜
  எதுக்கும் கவலை இல்லாம நீங்க எழுதுங்க

 9. Avatar

  Episode super
  Enaku work la iruka tension ku relaxation unka stories Ellam than feel pannathinga mathavangala vidunga engala pola ullavangaluku eluthunga

 10. Avatar

  super sis waiting for next episode ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 11. CRVS 2797

  மனசுக்குள்ளே காதல்
  வந்துச்சா.. வந்துச்சா.. .!
  மனசுக்குள்ளே காதல்
  வந்தல்லோ…. வந்தல்லோ…..!

  அப்பாடா…! ரெண்டுபேரும் கூடிய சீக்கிரமே சேர்ந்துடுவாங்கன்னு
  சொல்லுங்க.

 12. Avatar

  காதல் கல்வெட்டு அருமையான கதை மேம். இன்டர்னல் பாலிடிக்ஸ் எங்கேயும் உண்டு. அதையெல்லாம் மனசு வரை கொண்டு செல்ல வேண்டாம்.

 13. Avatar

  தயவுசெய்து அப்செட் ஆகாதீங்க. எல்லாம் ஒரு நாள் மாறும்.
  சமீப காலமா பிரதிலிபி ல உங்கள போல இருக்குற சில நல்ல ரைட்டர்ஸ் இப்படித்தான் சொல்றாங்க. நீங்க எல்லாரும் சேர்ந்து ஏன் ஒரு புதிய ஆப் உருவாக்ககூடாது.
  நிபுணனின் மகன் என்பதை நிரூபித்து விட்டான் ஆர்யன்.

 14. Avatar

  நிபுணன் வளர்ப்பு சோடை போகாது…. ஆர்யன் இன்று செய்த செயல் சூப்பர் அக்கா….👌👌👌👌👌👌👌….

  பிரதிலிபி செயலியில் உங்களை போன்ற பல எழுத்தாளர்கள் நீங்கள் கூறுவதை போல தான் கூறுகின்றனர்…. உங்கள் கதைக்கு கண்டிப்பாக என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும்…. கவலை வேண்டாம்…. உங்கள் கதைகள் எல்லாம் வாசகர் மனதில் வென்ற கதைகள்…. கவலை வேண்டாம்…..

 15. Avatar

  Nibunan story is very good story which has everything in it

  விதுரன் and நிபுணன் both stories are unique Stories

  I read 7 out of 10 stories from their selection few stories are not that much worth in those top ten

  Your story must be in those top ten

  You created this website for writing novels of yours as well as you are giving chance to the new writers to establish and explore them. which is the main reason they didn’t like it so they ignore this nubunan story .

  But the fact is that this nubunan story should deserves to be in top two

  Keep writing this kind of stories sister

 16. Avatar

  Nibunan Aathira sooperrrr story..i used to read again &again but neenga eduthuteenga.seekiramaga vetrigal kidaikum..Aariyan siri sooperrrrrrr .intrestingggg

 17. Avatar

  Nalla padaipugalukku ipo Kalam illa Praveen ka athukkaga unga padaippa ne kuraiva ninachuttangalye nu feel pannathinga 🫂 avanga yaru solla padichu , atha feel pani nipu athira ku fan aagirukura nanga ellam evlo payr irrukom 💪

  Oru idathula namala purakanikkum poothu thaan nam thaniya alamarama varala start aaguvom ❤️ yanakku nambikai irruku praveena novels yantha app oda thunai illam books mulam lac kanna vasagargalai adaium . Irrukvye irruku matha social media platforms. Don’t feel pravee ka 🫂❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *