Skip to content
Home » என் நேச அதிபதியே -3

என் நேச அதிபதியே -3

அத்தியாயம்-3

    பதட்டமாய் கையெழுத்து போட்டு பார்சலை வாங்கும் நேரம், நிபுணனோ அவன் வளர்க்கும் ‘ராயல்’ என்ற நாயை தடவிக்கொடுத்தபடி “பொங்கல் அதுவுமா கொரியர் ஆபீஸ் லீவு தானே. என் மகளுக்கு மட்டும் ஸ்பெஷலா வருதோ?” என்று கேட்டதும் துளிர் ‘போச்சு போச்சு போச்சு’ என்று திரும்பி பாராது நடுங்க ஆரம்பித்தாள்.

   “கொரியர் ஆபீஸ் லீவுங்க ஐயா. நம்ம துளிருக்கு தெரிந்த பிள்ளை என்னிடம் காசு கொடுத்து அனுப்பி வச்சது. நானும் நம்ம வீட்டு பிள்ளை என்பதால கொண்டாந்து கொடுத்தேன்.” என்றார் கொரியரை சுமந்து வந்த அனுமானாக.

  “அதுயாரு அண்ண?” என்று நிபுணன் கேட்டதும் “நம்ம பருப்பு மில் ஓனர் பொண்ணு தனுஜா.” என்றதும் நிபுணனோ “ஓஹ் ஓ” என்று நிபுணன் உரைக்க, “வர்றேன் தம்பி. வர்றேன் பாப்பா” என்று துளிரிடமும் விடைப்பெற்றார்.

   எப்படியோ தனுஜா என்ற பெயரால் தப்பிக்க, நிம்மதியுற்ற துளிரோ, கவரை பிரிக்க ஆரம்பித்தவள், தந்தை வினோதமாக காணவும், “இது கிறிஸ்மா விளையாட்டு மாதிரி ஐயா.

    கிறிஸ்மஸ் அப்போ மாறி மாறி கிப்ட் கொடுத்துப்போம்ல. அதுபோல பொங்கலுக்கு நான் அவளுக்கு அனுப்பினேன். அவ எனக்கு அனுப்பியிருக்கா” என்று கூறியதும் நிபுணன் கூர்பார்வை சமனிலையடைந்தது.

   துளிர் வீட்டுக்குள் வந்து ஹாலில் பிரிக்கும் நேரம் சர்வேஷ் “என்னதுயிது?” என்று ஆராய, “என் பிரெண்ட் கொடுத்தா. நீ எல்லாம் உன் பிரெண்ட்ஸ் கூட பஸ்ட் ஷோ படம் பார்த்துட்டு வந்திருக்க. இது என் டர்ன். என் பிரெண்ட்” என்று முறுக்கி கொண்டு தனியறைக்கு நேராக சென்றாள்.

    அவள் பிரிக்க போனில் வந்த குறுஞ்செய்தி போல லெஹங்கா ஆடை இருந்தது.

   “அவனுக்கு என்ன திமிரு, தெனாவட்டு’ என்று உடையை ஆராய்ந்தாள்.

   புத்தாடை வேண்டுமென்றால் நொடியில் சொடக்கிடும் முன் வரிசை கட்டி வீட்டுக்கே வந்திறங்கும். ஆனாலும் உடையை எடுத்து கொடுப்பவர் யாரென்றதில் சிறப்புண்டு.
  
   உடையை எடுத்து கண்ணாடி முன் தனக்கு வைத்து பார்த்தாள்.

   லைட் பிங்க் மெஜந்தா என்று பிரித்தறியா வண்ணம். நாளை காலை இதையே அணிந்திட முடிவெடுத்தாள்
  
   எப்பொழுதும் ஆர்யன் அண்ணா வாங்கி தரும் உடை தான் அணிவாள். இன்று ஆர்யன் அண்ணா வேறு இல்லை. அதனால் இதை அணிந்திடும் உத்வேகம் உதித்தது.

  சர்வேஷ் அண்ணாவோடு பைக்கில் அமர்ந்து திருநெல்வேலி டவுன் பக்கம் தன் அத்தை-மாமாவான சாருலதா-முத்துவேலன் வீடு இருக்க அங்கே வீதியில் உலாவர முடிவெடுத்தாள்.

  நிச்சயம் உடையை பரிசளித்த திமிரெடுத்தவன் அங்கு தான் உலாத்தலாம்.

  நாளைப்பின் அவன் அனுப்பிய ஆடையை அணிந்ததாக அவனே கேட்டாலும், ‘தனுஜா கொடுத்த கிப்ட் என்று கொரியர்காரர் சொன்னார். அதனால அம்மா அப்பா போட்டு பார்க்க சொல்ல, அழகாயிருக்கு என்றதும் கழட்டவேண்டாமென்றதாக அவர்கள் கூறியதாக மழுப்பி கூறிடலாம். அவர்களை  பொருத்தவரை தனுஜா அனுப்பிய ஆடை. திமிரரசனை பொருத்தவரை அம்மா அப்பாவை மழுப்ப அணிந்ததாக காரணம் உரைத்திடும் திட்டத்தோடு கணக்கிட்டாள்.

  துளிரின் போனில் குறுஞ்செய்தி வந்ததாக ஒலியெழுப்பியது.
   உடையை கட்டிலில் வைத்து போனை எடுக்க, “கொழுந்து, டிரஸ் பிடிச்சிருக்கா? பிடிச்சிருந்தா ஒரு ஸ்மைலி ஸ்டிக்கரை தட்டிவிடறது” என்று அனுப்பினான்.

   துளிரோ பல்லை கடிக்கும் ஸ்மைலி ஸ்டிக்கரை அனுப்ப, “பல்லை கடிச்சிக்கிட்டு சிரிச்சா என்ன அர்த்தம் கொழுந்து. லிமிட்டா சிரி. சரி கனவுல உன்னோட ஒரு டூயட்டை முடிச்சிட்டு வர்றேன்.” என்று அனுப்பினான்.

     ‘கனவுல டூயட்டாம். இவனை எல்லாம் என்ன ரகத்துல சேர்க்கறது? என்று முனங்கியவள் உடையை தொட்டு தடவி பார்த்தாள்.

  அடுத்த நாள் பொங்கல் காலையிலேயே குளித்து முடித்து, வயிறு நிறைய சாப்பிட்டு அது ஜீரணிக்க, கரும்பை கடித்துக்கொண்டிருந்தாள்.

   ஆர்யன் எடுத்து கொடுத்த உடையை அணிந்தவள் சர்வேஷிடம் மாட்டுபொங்கல் அப்போ தானே அத்தை மாமா வர்றாங்க அதுக்குள்ள நாம இன்னிக்கு போயி பார்ப்போமா? என்று பீடிகை போட்டாள்.

    சர்வேஷும் அங்கே செல்ல ப்ரியப்படுவான். அதனால் கிளம்பலாமென்று தலையசைத்தான்.
   துளிரோ அண்ணன் கொடுத்த உடையை மாற்றி கொரியரில் வந்த உடையை அணிந்தாள்.
லெஹங்காவிற்கு தோதாக மயில் தோகை போன்று தலையை விரித்து பூவை சூடிக்கொண்டாள்.

   கையில் ஆதிரா செய்த பலகாரங்களை எடுத்து கொண்டு துள்ளியோடி வர, எதிரே ஆர்யன் முதுகுப்பையை சுமந்துபடி வந்தான்.

   “ஏய் கத்திரிக்கா? எங்க கிளம்பிட்ட?” என்று ஆர்யன் கூலிங் கிளாஸை கழட்டினான்.

     “ஆர்யன் அண்ணா” என்றதும் கால்கள் ஆணி அடித்ததை போல ஸ்தம்பிக்க வைத்தது.

   “சர்பிரைஸ்” என்றான் ஆர்யன் மனதை வருடும் புன்னகையோடு.

     “போகி பண்டிகைக்கு மட்டும் தான் வரமுடியலை. பொங்கலுக்கு வந்துட்டேன் பார்த்தியா. ஆர்யன் சொன்ன சொல் காப்பாத்துவான் ஐயாவை மாதிரியே” என்று பேசினான்.

    துளிரோ வெளியே செல்லும் எண்ணத்தை மறந்தவளாக, தன் அண்ணனிடம் முகம் திருப்பி கோபமாக இருப்பதாய் நடித்தாள்.

   ஆர்யன் பின்னால் தாத்தா மாதவனும், ஆச்சி தங்கலட்சுமியும் வந்து சேர, சர்வேஷ் ஓடிவந்தவன், “ஆச்சி தாத்தா” என்று கட்டிக்கொண்டான்.

  ஆதிராவும் மகனை காண ஓடிவர, நிபுணனோ மனையாளிடம், “வீட்டுக்கு தானே வரப்போறான். வாசலுக்கே போகணுமா” என்று கேட்டார்.

    “இன்னிக்கு வந்துடுவான்னு சொல்ல என்னவாம்” என்று நிபுணனை கடிந்தவாறு சென்றார்‌ ஆதிரா.

   “ஆமா இது நான் வாங்கிய டிரஸ் இல்லையே. இது யார் வாங்கி தந்தது கத்திரிக்கா?” என்று முதுகுப்பையை கழட்டி திண்ணையில் வைத்தான்.

   ஆதிரா வரவும் “அம்மா முழுசா வந்துட்டேன்ம்மா” என்று அணைத்தான்.

   அதற்குள் துளிரோ “நீ நேத்தே வரலைலே. அதனால நீ வர்றப்ப நீ வாங்கி தந்த டிரஸை போடக்கூடாதுனு உன்னை பழிவாங்கறேன்.” என்று சட்டமாய் அண்ணன் ஆர்யனிடம் சண்டைக்கு நின்றாள் தங்கை.

   “ஓ.. நல்லது” என்றவன் சர்வேஷிடம் நீரை வாங்கி குடித்து “படிப்பு எப்படி போகுதுடா” என்றான்.

   “சூப்பரா போகுதுண்ணா.” என்று கட்டியணைத்து விடுவித்தான்.

   “ஆச்சி தாத்தா இந்த தடவை உடனே போகக்கூடாது சொல்லிட்டேன்” என்று சர்வேஷ் மிரட்டலாய் கோரிக்கை வைத்தான்.

    “ஆகட்டும்யா” என்று தங்கலட்சுமி துளிர் பக்கம் வந்து, “அழகு ரதம் எங்க கிளம்பிட்டிங்க?” என்று தங்கலட்சுமி கேட்க ஆர்யனோ முகம் அலம்பி கைகால் அலம்பியவன் தங்கையை தான் இமைக்காமல் ரசித்தான்.
  
   “ஆஹ்… ஆஹ்.. சாரு அத்தை வீட்டுக்கு.” என்று கூறவே நொடிகள் தேவைப்பட்டது.

   “சர்வேஷ் கூடவா?” என்று மாதவன் தாத்தா கேட்க, “ஆமா தாத்தா. உங்க டாக்டர் பேரன் தான் ரொம்ப பிஸியாச்சே” என்று அங்கலாய்த்து கிண்டலாய் மொழிந்தாள்.

    “அட பிளைட் ஏறியதுலயிருந்து உன்னை பத்தி தான் பேசினான். தங்கச்சி திட்டிட்டே இருப்பா தாத்தானு. சரியா தான் இருக்கு” என்றார் மாதவன்.
  
     ஆர்யன் வருகையால் அனைவரும் வீட்டுக்குள் ஆஜராகினார்கள். சாருலதா வீட்டுக்கு செல்வது தற்காலிகமாக தடையானது.

   “பிரயாணமெல்லாம் சௌவுக்கியமா ஐயா?” என்று நிபுணன் கேட்க, “அதெல்லாம் பிளைட்ல ஒரு அசௌவுகரியமும் இல்லைங்க ஐயா. கொஞ்சம் அம்மாவோட சாப்பாட்டை ருசித்திட்டா களைப்பு எல்லாம் ஓடிடும்” என்றான் ஆர்யன்.

   உடனடியாக உணவு மேஜையில் உணவு பரிமாற ஆரம்பித்தார்கள்.

   ஆர்யன் சாப்பிட்டுக்கொண்டே தாய் தந்தையரை கண்டான்.
  70 inch டிவிக்கு அருகே பெண்கள் புகைப்படமாக இருக்கும் கவரையும் கவனித்துவிட்டான்.

    இந்த முறை நச்சரித்துவிடுவார்கள் என்று புரிய துவங்கியது. ஆதிரா நிபுணனை அளவிட்டான்.

  ‘நீங்க சொல்லுங்க’என்று ஆதிரா சமிக்ஜையில் மொழிய, ‘சாப்பிடட்டும் டி வந்ததும் வராததும் நொய்நொய்னு’ என்று ஐயாவின் நிதானமான பதிலையும் கவனித்தான்.

  சர்வேஷ் கரும்பை கடித்து ருசித்தவனாய் நின்றான்.

   ஆச்சி தாத்தா மெதுவாய் ஆர அமர உணவை எடுத்து சுவைக்க, தங்கை மட்டும் ஒரிடத்தில் நிற்காத பாதசுவடாய் பரிதவித்தாள்.

    ஆர்யன் நிதானமாக நீரை அருந்தி, ‘எப்பவும் ஐயா அம்மா வாங்கற டிரஸை கூட போடமாட்டா, இது என்ன புதுசா?’ என்பதாக எண்ணி தங்கையிடம் கேட்டுவிட்டான்.

     “ஆல்ரெடி சொன்னேனே” என்று முகம் தூக்க, “குட்டிகத்திரிக்கா நான் வர்றதே தெரியாது. இதுல பழி வாங்கறியா? ஆமா அண்ணன் இருந்தா தான் அவன் வாங்கி தந்த டிரஸை போடுவிங்களா? தலை மறைஞ்சிட்டா பிரெண்ட் கொடுத்த டிரஸ் முக்கியத்துவமாயிடுச்சு” என்று பேசவும் கையை பிசைந்து நின்றாள் துளிர்.

   சர்வேஷ் இதே கேள்வியை கேட்டிருந்தால் “அப்படியே வச்சிக்கோ” என்று பதிலுரைத்து இருப்பாள்.
   அங்கே தன் எதிரே இருப்பது ஆர்யனாயிற்றே. வாய் திறந்து பேச முடியவில்லை.

     தங்கையின் திருட்டு முழியில் அவளை தவிக்க வைக்க விடாமல், “அத்தை வீட்டுக்கா போற?” என்றான்.

   ஆமென்ற தலையாட்டலில் “அத்தை நம்மளை பார்க்க வர்றாங்க. நீ போக வேண்டாம்” என்று கூறவும் துளிருக்கு ஆசைஆசையாக கிளம்பியது வருத்தத்தை தந்தது.

   இதற்கு மேல் எப்படி வீட்டை தாண்டுவது?

    ஆர்யன் அண்ணாவிடம் பிறகு யார் மல்லுக்கு நிற்பது? என்று அமைதியாக சர்வேஷை இடித்தபடி கரும்பை கடித்து தன்னை சமநிலைக்கு தள்ள முயன்றாள்.

      சென்னையிலிருந்து தூத்துகுடி வந்த விமான பயணமும், தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் வந்த பயணமும் அசதியை தர, மாதவன் தங்கலட்சுமி உடலை மெத்தையில் சரித்தார்கள்.

    ஆர்யனோ அன்னையின் காலை பிடித்துவிட்டபடி சர்வேஷிடம் கலந்து ஊர் நடப்பை விவாதித்தான். துளிரோ திமிர் அரசனை காணாத வருத்தத்தில் கரும்பை கடித்து முடித்து அப்படியே தந்தை நிபுணன் மீது சாய உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டென உறங்கி வழிந்தாள்.

     நிபுணனோ மகளை மடியில் தாங்கிக்கொண்டு மகன்கள் இருவரும் பேசுவதை ரசித்தாரெனில், ஆதிராவோ ஆர்யனின் தலை கேசத்தை கலைத்து கோதி, நிபுணனை ஒரக்கண்ணால் பார்த்தாள்.

    அதற்குள் வருடங்கள் ஓடியதா? தங்கள் வாழ்வில் இத்தனை இனிமையா? என்று நிறைவாய் காண, “நேத்து அந்த பொண்ணு சிற்பிகா வீட்டுக்கு வந்துச்சு அண்ண” என்று ஊர் நடப்பில் வீட்டு நடப்பை சர்வேஷ் கலந்ததும், ஆர்யனோ, இருந்த இடத்திலிருந்து எழுந்து, “கொண்டு வந்த டிரஸை அடுக்கி வச்சிட்டு வர்றேன் சர்வேஷ்” என்று தம்பியின் பதிலை கூட கேளாமல் எழுந்துவிட்டான்.

  சர்வேஷிற்கோ நிஜமாவே அண்ண வேலையிருக்குனு போகுதா? இல்லை காரணத்தோட நழுவுதா? என்று புரியாமல் திண்டாடினான்.
  
   ஆர்யன் எழவும் தான் நிபுணன் ஆதிரா இருவரும், “என்னாச்சு? தூக்கம் வருதா ஆர்யன்” என்று ஆதிரா நிஜவுலகிற்கே கால் பதித்தாள்.
   இத்தனை நேரம் கணவர் நிபுணனின் வசிய பார்வையில் கட்டுண்டு கனவுலகில் மூழ்கியிருந்தார்.

   “தூக்கம் வருதும்மா கண் அசந்துட்டு வந்துடறேன்” என்று கூற ஆதிராவுக்கே ஆச்சரியம். எத்தனை முறை இரவு பகலென்று டூயூட்டி மாறி உறக்கம் தொலைத்திருந்தாலும் அசதி, சோர்வு என்ற வார்த்தையே ஆர்யன் அகராதியில் கிடையாது. இதென்ன புதிதாக என்பது போல ஆதிரா விழிக்க, நிபுணனோ, “ஐயா இந்த போட்டோ எல்லாம் எடுத்துட்டு போ. உனக்குதான் உங்கம்மா பார்த்திருக்கா. ஏதாவது ஒன்னை தேர்ந்தெடுப்பியாக்கும். நீ யாரையாவது டாக்டர் பிள்ளையை, நர்ஸ் பிள்ளையை விரும்பினாலும் சொல்லு. சேர்த்து வைக்கிறோம்” என்று நிபுணன் புகைப்பட கவரை நீட்டினார்.

   கவரை வாங்கி திறக்காமல் முன்னும் பின்னும் பார்த்து, “என் மனசுல யாருமில்லை ஐயா. டாக்டரோ நர்ஸோ யாராயிருந்தாலும் என் கூடபிறந்தவங்களா தான் நான் பார்ப்பேன்.

  அதனால காதல் என்ற பகுதி இதுவரை என் வாழ்வில் முன்னுரை கூட போடலை. எனக்கு யாரு பொருத்தமோ அதை நீங்களும் அம்மாவும் பாருங்க. அது போதும்” என்று கவரை நிபுணனிடமே ஒப்படைத்தான் ஆர்யன்.

      நிபுணனுக்கு ஆச்சரியம் பெருகியது. திருமணம் என்பதெல்லாம் இப்பொழுது கட்டிக்க போகும் ஆண் மற்றும் பெண்ணின்  முடிவாக இருக்கும் காலத்தில் தாய் தந்தையர் கூட மூன்றாம் மனிதராக தான் பிள்ளைகள் திருமணத்தில் நிற்கும் நிலைமை.
    படித்து முடித்து டாக்டரான பின்னும்  அவன் திருமணத்தை தங்கள் முடிவில் விட்டு செல்ல ஆர்யனை புகழ வார்த்தையே இல்லை நிபுணனுக்கு.

  ஆதிராவோ ‘பாருங்க நான் தான் சொன்னேன்ல  அவன் நம்மளை தான் செலக்ட் பண்ண சொல்வான்னு.’ என்று கவரை பிரித்து மீண்டும் கொட்டினார் ஆதிரா.

  கவரில் இருக்கும் பெண்கள் யாவருமே அழகான பெண்கள் தான். என்ன கண்களில் உயிர்ப்பியில்லை. மகனின் வாழ்வினை சுவாரசியம் கூட்டும் பெண்ணாக யாரும் தெரியாததால் தான் இந்த குழப்பம். அதற்கு தான் நிபுணனிடமும் துளிரிடமும் ஆர்யனின் துணைவியாரென தேர்வுக்கு பரிந்துரைக்க கூறினாள்.

   இப்படி ஆறுமாத காலமாக யாரையும் ஆர்யனோடு பொருந்தாத உணர்வில் தள்ள, நல்ல நாளில் முதலில் மைந்தனின் வரவை கொண்டாட முடிவெடுத்து புகைப்படத்தை அப்படியே 70 இன்ச் டிவி பக்கம் வைத்து விட்டார் ஆதிரா.

   -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

40 thoughts on “என் நேச அதிபதியே -3”

 1. CRVS2797

  ஆங்… புரிஞ்சிப்போச்சு..! ஆர்யனோட தேவதை சிற்பிகா தானே..? எப்படி கண்டுபிடிச்சோம் பார்த்திங்களா..?

 2. Avatar

  செம்ம செம்ம
  அதே காதல் பார்வை நிபு ,ஆதிரா..

  அச்சச்சோ அத்தை போல வருகிறாளா துளிர்..

 3. Avatar

  Sirpi kum Aryan kum enna pblm nu therila….indha ma thulir pulla neeyae ipotan thulir vidramaadhri iruka adhukulla andha thimirasan unna love panrana…..annan edutha dress ah vitutu Avan kudutha dress ah potukita….ennamo pannunga….adhukulla enga nibu adheera ku vayasahiduchu nu nenaikumbodhu en manasu yethukavaemaatengudhu💔💔.,….

 4. Avatar

  அண்ணனைப் பார்த்ததும் மாட்டிக்கிட்டியேனு மனசுல சொல்லிடுச்சா துளிரு😉😉😉😉😉ஆமா அந்த திமிரரசன் யாரோ…..அத்தை மகனா மாமன் மகனா இல்லை மறுபடியும் ஒரு போராட்டமானு தெரியலையே🤔🤔🤔🤔🤔ஆனாலும் தைரியமா ஐயா….அண்ணன்னு எல்லார் கிட்டயும் கதை விடுற பிழைச்சிக்குவ😏😏😏😏😏ஆரா ஏன் எந்தக் கேள்வியும் கேட்கலை🧐🧐🧐🧐🧐🧐

  சிற்பி பத்தி பேசுனதும் இவன் விலகிப் போறதை எப்படியும் நிபு கவனிச்சிருப்பானே😊😊😊😊என்ன தான் வயசானாலும் உங்களோட கண்ணாலயே காதல் பேசுறதைப் பார்க்கும் போது🥰🥰🥰🥰🥰🥰ஆச்சி,தாத்தா வயசாகிடுச்சு….இல்லேனா நம்ம தங்கமான லெட்சு ஆராவை டிசைன் டிசைனா கேள்வி கேட்டிருப்பாங்க😂😂😂😂😂😂

  யாருக்கு யாரோனு தெரியலையே🤩🤩🤩🤩🤩🤩

 5. Avatar

  சூப்பர் nice…. total make up waste ya. So sad . If he is not interested in love then y escaping when speaking about சிற்பி.. Nice interesting good moving.

 6. Avatar

  Aariyan um sirpika pecha edutha udanae anga irundhu kelamburan apadi enna ivanga rendu perukum idaiyila oduthu ivanuku love um illa nu sollitan enna da unga appan ku yae tough kudu pa polayae avan railway station ah athira ponnu keta thu pola ne busstand ah illa airport ah
  Thulir andha thimirarasan yaru ma aaluku oru secret ah vachi irukaga sarvesh unnaku ethachum iruku pa ah
  Athira anga pillai ah gavanikama ne yum nibunan thaniya oru track otitu irukiga

 7. Avatar

  அருமை. குள்ளகத்திரிக்கா என்ன பிரச்சினையை இழுத்து வைக்காதீங்க அண்ணன்கள் இரண்டு பேரும் சமர்த்து. துளிர் வாலு.நிபு ஆதிரா as usual romantic couple.

 8. Avatar

  அருமை. குள்ளகத்திரிக்கா என்ன பிரச்சினையை இழுத்து வைக்க போகுதோ? அண்ணன்கள் இரண்டு பேரும் சமர்த்து. துளிர் வாலு.நிபு ஆதிரா as usual romantic couple.

 9. Avatar

  எதுக்கு இந்த திருட்டு தனம் துளிர் ? 😉😏
  அடேய் என்ன சிற்பி பேர் சொன்னதும் இடத்தை காலி பண்ற 🧐🧐🧐🧐🧐 அப்ப ஏதோ இருக்கு 🤩🤩🤩🤩🤩

 10. Avatar

  சூப்பர். … இந்த திமிர் பிடித்தவன் யாரா இருக்கும்…. சிற்பி ஆர்யன் ஜோடியா ….

 11. Kalidevi

  Nalla paiyan appa amma kitta porupa vitutam aaryan. But sirpika pathi pesina es agurane avalum ivan per ketta odura ena iruku ivangalukulla papom

 12. Avatar
  கௌசல்யா முத்துவேல்

  ஆர்யன் மனசுல என்னவோ இருக்கு போலயே!!??… யார் அந்த திமுரரசன்???… சூப்பரா கொண்டு போறீங்க கா!!..

 13. Avatar

  , அருமையான கதை நகர்வு அக்கா….👌👌👌👌👌…. துளிர் கிட்ட லெகங்கா ஆடையை தந்த அந்த திமிர் அரசன் யாராக இருக்கும்….🤔🤔🤔🤔🤔….. சிற்பிகா பெயரை கேட்டதும் ஆர்யன் ஒதுங்குவது ஏன்….🤔🤔🤔🤔🤔

 14. Avatar

  அந்தப் பொண்ணு சிற்பிகாக்கும் ஆரியனுக்கும் நடுவுல என்ன பிரச்சனை ரெண்டு பேரும் எதற்காக ஒருத்தர் இருக்கிற பக்கத்துல வரமாட்டேங்குறாங்க

 15. Avatar

  Sorry for late comment sis…. Yamma thuliruuu…. Enga nibu evlo periya terror piece uhhh… Avankitaye nee reels suthuriye nalla varuva ma nee🤣🤣🤣… Indha aara yen sirpiya pathi pesna esc aguran😉😉😉😉something wrong…. Andha dress party yarnu therlaye🧐🧐🧐🧐🧐ipovum unga looku marliye Nibu-adhira 😍😍😍😍

 16. Avatar

  Semma interesting ah story pogudhu sis……yaarukku yaar jodinu romba aarvama irukku.😍😍😍😍😍😍😍😍😍😍😍…….Thulir ennamo sambavam panna kaathirukka ……..andha thimirarasan yaara irukkum🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *