Skip to content
Home » என் நேச அதிபதியே -31

என் நேச அதிபதியே -31

அத்தியாயம்-31

தன் நெஞ்சில் சாய்ந்தவளை பஞ்சணையில் இழுத்து போட்டு கூடவே அருகே படுத்து, ஆள்காட்டி விரலால் முகத்தில் கோலம் போடவும், நேற்று போலவே நெளிந்தாள்.

"எல்லாரும் சீர்திருத்த பள்ளிக்கு போயிருக்காங்க. ராணி ஆச்சி கூட கலை நிகழ்ச்சி‌ நடக்குதுன்னு கிளம்பியாச்சு. 

நீ மில்லுக்கு போகணுமா? நான் ஆஃப் டே லீவு எடுத்திருக்கேன்.” என்றான்.‌

"பேசிட்டிருக்கலாமா?" என்றதும் 'பேசினது போதாதா?" என்று தாடையை அவன் புறம் திருப்பினான்.

“பயம் போகலையே” என்று கூறவும், “எப்ப ஆரம்பிச்சாலும் பயம் இருந்தா?” என்றதும் அவள் மிரண்ட விழியை ரசிக்கும் நேரம், ராயல் குலைக்கும் சத்தம் எட்டியது.

"இவனுக்கு என்னவாம்?" என்று சலிக்க, ராயல் மீண்டும் மீண்டும் குலைத்தது. 

 "ஐயாரு இல்லையா?" என்றதும் ஆர்யன் "ஐயாவை தேடி வந்திருக்காங்க. யாருனு பார்க்கறேன்." என்று எழுந்துவிட்டான்‌. 

சிற்பிகாவும் அப்பாடி என்று எழ, ஆர்யனோ அதிரடியாய் ஒரு அழுத்த முத்தம் கன்னத்தில் கொடுத்து செல்லவும், மீசையால் கிளர்ச்சியுண்டாக, உடல் மயிர்குச்சம் பெற்று வெட்கம் கொள்ள ஆர்யன் கீழே சென்றிருந்தான்.‌

‘ராயல் வந்துட்டேன் டா. குலைச்சிட்டே இருக்கானே’ என்று வர, கேட்டில் ஒரு பக்கம் ஒரு‌முதியவர் நின்றிருந்தார்.

 "வணக்கம் தம்பி நிபுணன் ஐயா இல்லிங்களா?" என்று கேட்க, "அப்பா வெளியே ஒரு விழாவுக்கு போயிருக்கார்.‌ நீங்க?" என்று உள்ளே அழைக்க, "ஐயாவிடம் பேசணும்னு வந்தேன் தம்பி. இது என்‌மகன் சம்பாரிச்ச முதல் மாச சம்பளம். இதை ஐயாவிடம் கொடுக்கணும்னு அவன் விரும்பினான்.‌" என்றதும் ஆர்யன் குழப்பமாய் பார்வையிட அதற்கு அந்த முதியவரோ, "ஐயாவால தான்‌படிச்சி முடிச்சி நல்ல உத்யோகத்துல இருக்கான்.‌ வேலை சேர்ந்த முதல் மாச சம்பளம் அவருக்கு தான் கொடுக்கணும் அது தான் நியாயமும்." என்றதும் ஆலீவேரா மோரும் கலந்த பானத்தை சிற்பிகா பெரியவருக்கு நீட்டவும், வணக்கம் வைத்து வாங்கி கொண்டார். 

அதற்குள் ஆர்யன்‌ தந்தையிடம் விவரத்தை‌ கூற, “வேண்டாம்னு சொன்னா விட மாட்டாங்க. வாங்கி வையுங்க ஐயா. பிறகு நல்லதுக்கு உபயோகப்படுத்திடலாம். பதிலுக்கு வெறும் கையோட அனுப்பாதிங்க வீட்ல உங்க கல்யாணத்துக்கு மத்தவங்களுக்குன்னு எடுத்து டிரஸ்ஸு இன்னமும் இருக்கு. வந்தவங்களுக்கு கொடுத்துவிடுங்க.” என்றதும் ஆர்யனும் வாங்கிக் கொண்டான்.
பதிலுக்கு பட்டாடை கொடுத்தனுப்ப, மறுக்க முயன்றவருக்கு, “ஐயா தான் வெறுங்கையோட அனுப்ப வழக்கமில்லைனு சொன்னாருங்க” என்றதும் பெற்றுக்கொண்டார்.

அந்த முதியவரிடம் ஊர் பெயர் என்று கேட்டறிந்து வழியனுப்ப, மணி பத்தை நெருங்கியது.

காலை உணவு தாமதமாக முடித்து பாம்பு கடித்த ரவிக்கு ஊசி செலுத்த போவதாக உரைத்தான்.‌

“நா…நான் என்ன செய்யறது?” என்று மருண்டு விழித்தாள்.

ஆர்யன் ஆசை அறகந்தப்பின் மில்லிற்கு போகவும் தயக்கம். 

“முழு நாள் லீவா கேட்கணும்.‌ நீ இரு வந்துடறேன்.” என்றான்.

“நீங்க போற வழியில தான் என் வீடு இருக்கு. அங்க இறக்கி விடறிங்களா? ஓரெட்டு பார்த்துப்பேன். போட்டது போட்டப்படியா இருக்கும்” என்றதும் “கூட்டிட்டு போறேன்.‌ ஆனா இனி இதான் உன் வீடு.” என்று திருத்த, கிளம்பினாள்.

தன் பின்ன்லிட்ட சிகையை முன்னே இருக்க பின்னுக்கு தள்ளினாள்.

“நேத்து கட்டிய மல்லிப்பூ இல்லை. அது வைக்கலையா?” என்றதும் ஃப்ரிட்ஜில் இருக்கு என்று எடுத்து அலங்கரித்து கொண்டாள்.‌

ஆர்யனோ உச்சி முதல் பாதம் வரை அளவிட்டு, இடது கையால் அருமை என்பதாக செய்கையில் பேச நாணம் கொண்டவளோ அவனோடு இருசக்கர வாகனத்தில் ஏறினாள்.

அவர்களது முதல் பயணம் அவனது தோளில் கையை பதிக்க, புல்லட் பறந்தது.

அவளது வீட்டில் இறக்கி விட்டவன் கூடவே நடந்தான்.

நீங்க போங்க” என்று‌ அனுப்பியளை, ‘போன்‌ பேசணும்’ என்று காட்டினான்.

எண்களை அழுத்திவிட்டு “டாக்டர் இன்னிக்கு ஆப்டே லீவ் கேட்டிருந்தேன். ஃபுல் டே லீவா மென்ஷன் பண்ணிடுங்களேன்” என்றவனிடம் , “ஏன் தம்பி கல்யாணமாகி முதல்ல ஹனிமூன் லீவ் எடுங்க. இப்படி விட்டு விட்டு அரை நாள் ஓடறது, அரை நாள் லீவு கேட்கறது நல்லாவாயிருக்கு.

பதினைந்து நாள் லீவு மென்ஷன் பண்ணிடறேன். நமக்கு லீவு கிடைக்கறதே அபூர்வம். நேரத்துக்கு எடுத்தாதான் உண்டு. 

சரிங்களா?” என்றதும் ஆர்யனோ “சரி பண்ணிடுங்க” என்று வைத்தான்.‌

”என்ன சிரிக்கறிங்க?” என்று கேட்ட சிற்பிகாவிடம், “பதினைந்து நாள் லீவு போட சொல்லி கூட வேலை பார்க்கற டாக்டர் கிண்டல் பண்ணுறாங்க. இப்ப கிடைக்கிற லீவை வேஸ்ட் பண்ணாதிங்க. அடிக்கடி லீவு கிடைக்காதுனு அட்வைஸ் வேற.” என்றதும் சிற்பிகா சிரிக்க, “என் பொழப்பு சிரிப்பா இருக்கா?

நானே இந்த பொண்ணை அடிச்சியிருக்கோம். இவளால் தான் ஊரை விட்டு போய் படிக்கிற நிலைமை.

போதாதுக்கு உங்க அப்பாவை வேற அடிச்சிருக்கேன்.‌ இதெல்லாம் பேச்சு வார்த்தையில சமாதானமாகி நமக்குள்ள ஒரு நெருக்கம் வரவே தாமதாகும்னு தான் லீவே போடலை.
என்னவோ…” என்றவன் மல்லிகை மணத்தின் வாசம் பிடிக்க, “ஊசிப்போட்டு வர்றதா சொன்னிங்க” என்று கடமையை முன்னிருத்தினாள்.

 "கிளம்பறேன் கிளம்பறேன். மதியம் இங்க தான் இருக்க போறோம். சாப்பாடு இங்க வந்திடும்‌. வாங்கி வை. வந்து சாப்பிட்டு... அப்பறம் மத்த வேலையை இருக்கு" என்றதும் சிற்பிகா பார்வை தாழ்த்தினாள். 

‌‌அவளின் வெட்கம் மனதில் நிறைத்து ரவி இருக்கும் ஊர் பக்கம் கிளம்பினான்.‌

இங்கிருந்து நான்கு தெரு சென்றால் வரும். நேத்து பாம்பு கடிச்சதே அவர் வீடெங்கே?” என்று கேட்டு வந்துவிட்டான்.‌

ரவி அவன் வீட்டில்‌‌ படுத்திருந்தான். மனைவி ரசமும் முட்டையும் வதக்கியிருக்க, ஆர்யனை வரவேற்றார்.

“நாங்களே வரலாமானு கேட்க நினைச்சேன் தம்பி.‌ பக்கத்துல நம்பர் வாங்க‌போகலாம்னு இருந்தேன்‌. நீங்களே வந்துட்டிங்க. ரொம்பவே நன்றி தம்பி” என்று கூறவும், “இதுக்கு எதுக்கும்மா நன்றி. இது என்‌ கடமை.” என்றவன் ஊசியை செலுத்தினான்.

ரவிக்கோ ஒழுங்காய் ஒழுக்கமாய் இருந்தால் இந்த நிலை அமையுமா? என வருந்தினார்.‌

அந்த வலியில் ஊசி போட்ட வலி உணரவில்லை.

“நாளைக்கு ஒரு ஊசி அவ்ளோ தான். இது விஷமிருந்தாலும் மொத்தமா முறிக்க தான்.

அப்பறம் குடிக்கிறது மொத்தமா நிறுத்திடுங்க.” என்றதும் “எங்க சாமி பொட்டப்பிள்ளை வீட்டை விட்டு போயிடுச்சுன்னு ஒரே குடி.

எத்தினி வாட்டி சொல்லி களைச்சிட்டேன்.” என்று அழுதார் அப்பெண்மணி.

“பெரியவரே லவ் மேரேஜ் பெரிய குத்தமில்லை. சரியானவனா மட்டும் யோசிங்க‌. உங்களை நீங்க குடியால அழிச்சிக்கிட்டா என்ன கிடைக்க போகுது. கூடவே குடிக்காரன் பட்டம் தான் கிடைக்கும்.

இதே குடிக்காம நின்றா.‌ மாப்பிள்ளையிடம் மரியாதை கிடைக்கும். நாளைப்பின்ன காதலிச்சவன் சண்டைனு உங்க பொண்ணு‌ வந்தாலும் நீங்க மரியாதையா அவன்‌ முன்ன நின்று கேள்வி கேட்கலாம். இல்லைனா கேள்விக் கேட்கற தகுதி நீங்க இழக்க நேரும்.” என்று கூறி “வர்றேங்க” என்றவன் புறப்பட்டான்.

ரவியோ மனிதன் ரத்தமிருக்கும் வரை நன்றாக தான் வாழ முடிகிறது. ஆனால் ரத்தம் சுண்டும் நேரம் இந்த மதிப்பு மரியாதை சிறியவரிடம் இருந்து பெற முடியாது. அது நல்லபடியாக வாழும் நாட்களில் நாம் பெற வேண்டுமென்று‌ என தாமதமாய் புரிந்தது.

ஆர்யன் வீட்டுக்கு வரும் நேரம், சிற்பிகா எலுமிச்சை பழத்தை பிடுங்கி கொண்டிருந்தாள்.

“என்ன பண்ணற?” என்றவரிடம், “ராணி ஆச்சிக்கு எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும். நமக்காக தினமும் சமைக்கறாங்க. ஊறுகாய் போட்டு கொண்டு போகலாம்னு பறிக்கறேன். அதுக்குள்ள வந்துட்டிங்க” என்றாள்.

“ம்ம். வந்தாச்சு” என்றவன்‌ யாரோ வரும் அரவமென்றதும் திரும்பினான்.

“நிபுணன் ஐயா சாப்பாடு கொடுத்துட்டு வரச்சொன்னாங்க” என்று அறுசுவை கேட்டரிங் ஆட்களில் ஒருவன் வந்தான்.‌

எப்படியும் விழாவுக்கு இதே உணவு தான்.‌ மகன்‌ மருமகளுக்கு இங்கே அனுப்பி வைக்கவும், உள்ள வைத்திட சென்றார்.‌

அவர் செல்லும் வரை அமைதிகாத்த ஆர்யனோ, சிற்பிகாவின் வீட்டை அளவிட்டான்.

‌‌”உங்க பாட்டி இறந்தப்பிறகு நிறைய சேஞ்ச் பண்ணிட்டியா என்ன? அன்னைக்கு இங்க இந்த பிளவர் வாஷ் இல்லை. இந்த இன்டோர் செடி அங்கிருந்தது.” என்று கேட்க சிற்பிகாவோ, “பாட்டி இறந்தப்பிறகு ரொம்ப தனிமையா இருந்ததுச்சு. எங்க திரும்பினாலும் பாட்டி நினைவு.

தனியா இருக்க பைத்தியம் பிடிக்கவும் தினமும் இடத்தை மாத்துவேன்.

உங்களோட கல்யாணம் என்று நிபுணன் ஐயா பேச்சை ஆரம்பிக்கவும், அவங்களுக்காக தான் தலையாட்டினேன். வாழ்நாள் முழுக்க நீங்க நான் எப்படி? என்ற பயம் இருந்தது. ஆனா யோசிக்கவே முடியாத சூழ்நிலை.” என்றதும் ஆர்யனோ “அதானே நான் கூட செல்லமா ‘knife’ சேவ் பண்ணிருக்கேன். ஆனா நீ என்னனு சேவ் பட்டிருக்க?” என்று சலிப்பு காட்டினான்.‌

“உங்க நம்பரை சேவ் பண்ணிருக்கேனே” என்றதும் ஏது ‘ஆர்யன்’ என்று திரும்பியவன் மூளையோ அவள் போனை வாங்கி நம்பரை அழுத்த, ‘N Aryan’ என்றிருந்தது.

“என்ன ஒரு சேஞ்ச். ஐயா இன்சியல் போட்டிருக்க” என்றான்.‌ Nibhunan என்பதால் N போட்டதாக எண்ணகயிருக்க,

"டாக்டருக்கு இன்சியல்னு மட்டும் தான் கண்ணு தெரியுதா?" என்று முனங்கவும், ஆர்யனோ 'N Aryan இதுல என்ன? என்றவன் மனமோ அவள் ஆர்யன் என்று குதுகலிக்க, அவளை வம்பு செய்யும் நோக்கத்தோடு, "உன் ஆர்யனா?" என்று தாடை நிமிர்த்தி கேட்டதும், "எனக்குன்னு எல்லாமே இனி நீங்க தானே" என்றவளை அள்ளி கொண்டான்.‌

இல்லறம் நல்லறமாக தன் வாழ்வை முத்தங்களால் முன்னுரை இயற்ற ஆரம்பித்து தொடர்கதை எழுதியவனின் ஆசைகளுக்கு அணையிடாமல் பெண்ணவளின் கைகள் அவன் கரங்களுக்குள் வலு சேர்த்திருக்க இனிய கூடல் நிகழ்த்தியிருந்தான். 

மறுபக்கம் துளிரிடம், “இதே இடத்துல தான் உங்கண்ணாவை உங்க ஐயா அடிச்சிட்டார்னு நீ அதுக்கு ஓன்னு அழுத. நினைவிருக்கா? உனக்கு உங்கண்ணா சிற்பிகா அக்காவை அடிப்பதை நீ பார்க்கலை‌. அது தெரியாம நீ தேம்பி தேம்பி அழுத.
அப்ப நான் இங்க தான் இருந்தேன்.” என்று கூற, துளிரோ “நினைவிருக்கு நல்லா நினைவிருக்கு. ஆனா அண்ணா சிற்பிகா அண்ணியை அடிச்சது எனக்கு நினைவில்லை‌. எங்கப்பாவுக்கு உங்கப்பா அட்வைஸ் என்ற பெயர்ல பேசியதும் நினைவிருக்கு.
அதனால் தான் உன்னிடம் பேசவே பிடிக்கலை.” என்று விதார்த்திடம் கோபத்தை காட்டி நகன்றாள்.

“அடிப்பாவி அதுக்கு தான் மூஞ்சியை திருப்பிட்டு இருந்தியா?” என்றவன் பின்னாலே செல்ல சர்வேஷோ தங்கையை‌யும் விதார்த்தையும் பார்த்து “ஐயா உன்னை காணோம்னு தேடறார். இங்க என்ன‌ பண்ணற?” என்று இழுத்து சென்றான்.‌

விதார்த்தோ அச்சோ‌அவளோட பெரியண்ணாவிடம் மாட்டுவான்னு பார்த்தா, சின்ன‌ அண்ணனிடம் மாட்டியிருக்கா.

இதுக்கு தான் அண்ணன் இல்லாத பொண்ணா‌ விரும்பணும்.’ என எதுவென்றாலும் பார்ப்போமென நடந்தான்.

 • தொடரும்.
  -பிரவீணா தங்கராஜ்

33 thoughts on “என் நேச அதிபதியே -31”

 1. Avatar

  Super sis nice epi 👌👍😍 eppdiyo renduperum onnu serndhachu🥰 chinna Anna kita maatiyachu enna nadakumo parpom 🤔

 2. Avatar

  அடப்பாவி மக்கா..! அண்ணன் இல்லாத பொண்ணை ரூட் வி விடணுமா…?

 3. Kalidevi

  Paar da romba sikram rendu perum serthutanga Yen sisy romba wait pana vaika venamnu serthutingla .ithuvum alaga iruku aarya . Enga nibuna tha unga romance vida super . Neengalum avarku korai illa nirupinga

 4. Priyarajan

  Appakal epti irunthangalo atha vida double madangu irukangale…. Waiting for nxt ud… 😍😍😍😍😍💕💕💕💕💕💕💕💕

 5. Avatar

  ஆரியனுக்கு கிண்டலாலாம் பேச தெரியுமான்னு இன்னைக்கு தான் தெரியுது

 6. Avatar

  அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

 7. Avatar

  Vidharth itha ne love panra thuku munnadi yosichi irukanum it’s too late vidhyuth ne panna advice unra pillai.love ku enemy ah vandhu iruku apadi enna advice sonnan ivan

 8. Avatar

  சூப்பர். .. என் ஆர்யன் அருமை. … விதார்த் பாவம் ஆர்யன் விட இந்த சர்வேஷ் கோவக்காரன் போலயே

 9. Avatar

  N.ஆர்யன் நல்லாருக்கே!!… இதுக்கு தான் அவளுக்கு கோவமா???… சூப்பர் சூப்பர் கா!!..

 10. Avatar

  Super. எப்படியோ Knife 🔪 N Aryan Aryanum ஒண்ணு சேர்ந்த ஆச்சு . Ayyo பாவம் துளிர் chinna அண்ணனிடம் மாட்டிகிட்டா.
  Eppadi escape aagiraanu பார்க்கலாம்

 11. Avatar

  Super super super super super sis Aaryan sirpi nallabadiya vaazha aarambichutanga indha Thulir ennamo sambavam panna kaathirukku pola🙄🙄🙄🙄🙄🙄🙄

 12. Avatar

  Happada oruvaliya indha jodi okyagirchu… Thulir poyum poyum sarvesh kita matikita… 😂😂😂😂Vidharth née pavam dha di

 13. Avatar

  அருமையான கதை நகர்வு அக்கா….👌👌👌👌👌👌…. ஆர்யன் – சிற்பிகா ஜோடி தங்கள் வாழ்க்கையை இனிதாக வாழ ஆரம்பித்தது மகிழ்ச்சி ஆக உள்ளது அக்கா….😍😍😍😍😍😍… சர்வேஷ் கிட்ட தளிர் மாட்டி கொண்டாள்…. இனி என்ன ஆகுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *