Skip to content
Home » என் நேச அதிபதியே -38

என் நேச அதிபதியே -38

அத்தியாயம்-38

     நகம் கடித்தபடி, ‘இன்னிக்கு இவனோட எப்படியாவது தனியா வெளியே போகணும்.’ என்று அதற்கான நேரங்காலம் பார்த்து நின்றாள். இன்று விடுமுறையென்று துளிர் வீட்டிலிருக்க, சனி ஞாயிறு என்றால் ஆதிராவும் வீட்டிலிருப்பார்.

   நிபுணன் மட்டும் எப்பொழுதும் போல மில்லிற்கும், சென்றிருக்க ஆதிராவிடம் “ஆன்ட்டி எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். சர்வேஷை பைக்ல கூட்டிட்டு போக சொல்லறிங்களா.” என்று கொஞ்சி பேசி நின்றவளை கண்டு ராணி ஆச்சி ஒரு பார்வை வெறித்து திரும்பி கொண்டார்கள்.

‘இந்த வீட்ல வேலைக்காரங்க கூட ஓவரா தான் ரியாக்ஷன் தர்றாங்க’ என்று ஆதிராவிடம் பார்வையை மாற்றி நின்றாள்.

”நம்ம வீட்ல மூன்று நாள் கார் இருக்கு, டிரைவர் கூட இருக்காங்க. எங்க போகணுமோ அழைச்சிட்டு போம்மா.” என்று சாமர்த்தியமாக கேட்டார் அவரும்‌.

‘பச் எங்க கார் இருக்கு. டிரைவர் இருக்கார் எனக்கு தெரியாதா?’ என்று சலித்தவள், “ஏன் ஆன்ட்டி கார் என்றால் எங்க கார் இருக்கே. நான் பைக்ல போக விரும்பி கேட்டேன்‌. அங்க முதலமைச்சர் பொண்ணுன்னு நடக்கவே விடமாட்டாங்க‌. அட்லீஸ்ட் சர்வேஷ் கூட ஜாக்கிரதையா இங்கயாவது ப்ரீயா சுத்தி பார்க்க நினைச்சேன்” என்றாள்.

ஆதிரா சிந்தனையில் மூழ்க, “சரிவிடுங்க உங்க பையன் என் அழகுல மயங்கி விழுந்துடுவார்னு உங்க பையன் மேல அவ்ளோ பயமிருந்தா இட்ஸ் ஓகே” என்று தோளை குலுக்கி திரும்பி நடந்தாள்.

“சர்வேஷ்” என்று ஆதிரா குரல் கொடுத்திருக்க, தூரத்திலிருந்தவன் ஓடிவந்தான்‌.

“அம்மா” என்று வரவும், “தமிழுக்கு எங்கயோ போகணுமாம். அதுவும் பைக்ல தான் அழைச்சிட்டு போகணுமாம். கூட்டிட்டு போயிட்டு வா” என்றார் கட்டளையிடும் விதமாக.

“அம்மா‌ கார்ல” என்று அவன் வாய் திறக்கும் நேரம்.

“என் பையன் எங்கயும் மதி மயங்க மாட்டான். உன்னை பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வருவான்‌.” என்று கூற, சர்வேஷ் மௌவுனமாய் மாறினான்‌.

சாவியை எடுத்து கொண்டு சென்றவன் ஹாலில் துளிரோடு ஆல்பம் பார்த்திருந்தவளை ‘இவ வரலையா?” என்று கேட்க, “அவளுக்கு ப்ரீயட்ஸ் வெளியே வர மாட்டா.” என்று கூறவும் முகத்திருப்புதலோடு சர்வேஷ் அகன்றான். மின்மினியோ “அக்கா” என்று பல்லை கடித்தாள்.

துளிரோ அப்பாடி சர்வேஷ் அண்ணா இல்லை நிம்மதி. தமிழ் அக்கா அப்படியே எங்கண்ணாவை லவ்ஸ் விட்டு காதல் எல்லாம் பண்ணலாம்னு டீச் பண்ணி காதலிக்க வச்சிடுங்க.
அவன் காதலிச்சா என்னை மாட்டிவிட மாட்டான்.’ என்று தமிழையும் சர்வேஷையும் பார்த்து சிரித்தாள்.

இருசக்கர வாகனத்தில் இரண்டு பக்கம் கால் போட்டு தோளை பிடித்திடவும், சர்வேஷ் தோளை லேசாக சிலுப்பினான். தமிழ்‌ கையை எடுப்பதாக இல்லையென்றதும் முனங்கியபடி திருநிறையகத்திலிருந்து கிளம்பினான்.

பாதி வழியில் “எங்க போகணும்” என்று உரைக்க, “எங்கயாவது பால்ஸுக்கு போ. உன்கிட்ட பேசணும்” என்றாள்.

‌ ‘காரியமாய் தான் தன்னை அழைத்து வந்திருப்பது புரிய, பேசாமல் அழைத்து சென்றான்.

ஒரு பக்கம் எரிச்சலாய் இருந்தது.

அருவிக்கு எல்லாம் அழைத்து செல்லாமல் சற்று ஆள்நடமாட்டம் இல்லாத இடமாக வண்டியை நிறுத்தினான்.

“இங்க பாரு பால்ஸ் எல்லாம் அழைச்சிட்டு போகற மூட் இல்லை. நீ கடைக்கு பொருள் வாங்க வந்த மாதிரியும் தெரியலை. உன் தங்கச்சி டொக்கு கண்ணை வச்சிட்டு ‘பேபே’னு முழிச்சா‌. அதனால் பொய் மூட்டையை அள்ளி விடாத.

ஏதோ எங்கம்மா கூட்டிட்டு போக சொன்னதால் கூட்டிட்டு வந்தேன்.

இந்த தோள்ல கைப்போட்டு சீண்டாத‌‌. எங்க அண்ணா ஆர்யன், சிற்பிகா அண்ணியை கை ஓங்கியதால, அப்பா அம்மா ரொம்ப திட்டி படிக்க சென்னைக்கு அனுப்பினாங்க‌.

அப்பவே பொட்டப்பிள்ளையை அடிக்க கூடாதுனு சொல்லி வளர்த்திருக்காங்க. அதனால் நீ என்ன பண்ணினாலும் அமைதியா இருக்கேன். அதையே சாதகமா எடுத்துக்காத.

என்ன பேசணும்? எதுக்கு இங்க வந்திருக்க? ஊர்ல நீ சுத்தி பார்க்க நாடேயில்லையா? எங்கவாது பிளைட் ஏறி பறக்க வேண்டியது தானே. என் உசுரை ஏன் வாங்கற?" என்று கரித்து கொட்டினான். 

தமிழோ, “என்ன செய்ய நானும் உன்னை தலைமுழுக நினைச்சேன். எங்கப்பா உங்கப்பாவிடம் உனக்கு கல்யாணம் செய்ய யோசிக்கறாரே. இப்ப கூட உங்கப்பாவை அரசியல்ல நிறுத்தி இந்த ஊர்ல கட்டி கொடுத்தா கூடுதலா பெயர் பெற ஐடியா‌ எல்லாம் போட்டார்.” என்று தமிழ் கூறவும், “எனக்கு உன்னை பிடிக்கலை‌. தேவையில்லாத வேலையை பார்க்காத. உங்க அப்பா இந்த விஷயத்துல படுத்தோல்வி அடையணும்.” என்று உரைத்தான்.

தமிழோ, “அது முடியாது.” என்றவள் ரயில் வண்டி கணக்கில் பேசி முடிக்க, சர்வேஷ் தலையை தாங்கி பைக்கில் சாய்ந்தான்.

அவன் நேரமோ என்னவோ, எதிரே விதார்த் அவன் கார் அருகே நின்று நிதானமாக, போனில் பேசினான்.

சர்வேஷிற்கோ, நம்ம தங்கச்சிகிட்ட தான் போன்ல கடலை வறுக்கறானோ? என்று சந்தேகம் கொண்டு தமிழ் பேச்சை புறம் தள்ளி
துளிருக்கு அழைத்தான்.

கால் பிஸி பிஸி என்றதும், ‘குட்டச்சி என்‌தலை மறையவும் போன் பேசுது‌. கேட்டா காதலிக்கலைனு கத்துவா. பெரிய அண்ணா வரட்டும்’ என்று கோபமானான்.

விதார்த்தோ, “பங்காளி சின்ன மச்சான் சர்வேஷ் வந்திருக்கார் டா., முதலமைச்சர் பொண்ணு கூட பேசிட்டு இருக்காப்ள, நீ வந்த காலி. அதனால் கரும்பு ஜுஸ் எடுத்துட்டு அப்படியே தலைமறைவாகிடு” என்று கூறினான்.

அருகே இயற்கை எழிலை புகைப்படம் எடுக்க இருந்த போட்டோகிராப்பர் விதார்த் பேச்சால், முதலமைச்சர் மகளா?’ என்று குகூளில் தேட தற்போது முதலமைச்சர் அரவிந்தின் மகன் ப்ருத்வி திருமண விழாவில் அரவிந்த் குடும்ப புகைப்படமாக இருந்து கண்ணில் சிக்கியது. உடனடியாக கழுத்திலிருந்த கருவியால் சர்வேஷை தமிழை போட்டோ எடுத்தான் அசோக் என்பவன்.

  சர்வேஷோ தமிழை ஏறச்சொல்லி பைக்கில் பயணிக்கும் விதமாக இருந்த போட்டோ எடுத்ததும் அவன் மாயமாய் செல்ல, தமிழோ, "சர்வேஷ் நான் எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன். இதை மீறி என்னை எங்கப்பா உனக்கு கட்டி கொடுக்க முடிவு பண்ணி உன்னிடம் அபிப்ராயம் கேட்டா ஏற்றுப்பியா?" என்று கேட்டதும், சர்வேஷோ தனக்கு திருமணம் முடிந்தால் துளிருக்கு வரன் பார்ப்பார்கள் என்ற ரீதியில், "ஏற்றுக்கறேன் போதுமா" என்று கூறினான். 

”தேங்க்யூ சர்வேஷ்” என்று கட்டி பிடிக்க, பின்னாலே வந்த புகைப்படக்காரன் இன்னும் இரண்டு விதமாக எடுத்தான்.

‘செல்லும் வழியில் “ஏதாவது வாங்கணும்னா வாங்கு.” என்றான்.

“ஒன்னும் வேண்டாம். நீ இப்ப பேசற மாதிரி தன்மையா பேசு. எனக்கு அது போதும்.” என்று கொஞ்சினாள்.

சர்வேஷோ தங்கையை காணும் வேகத்தோடு வண்டியில் கவனமாய் செல்ல, தமிழோ ‘அப்பாடி ஒரு பிட்டு போட்டு இவனை கவுத்தியாச்சு. இது போதும்.” என்று தமிழ் நினைத்து மகிழ்ந்தாள்.

சர்வேஷ் வந்ததும் வராததும் துளிரின் போனை பிடுங்கி, தங்கையை அறைக்கு இழுத்து சென்று கால் பதிவு நம்பரை கண்டான்.

ஒரு பத்து இலக்க எண்‌ மட்டும் இருக்க, சர்வேஷோ “அவன் தானே? திமிர் பிடிச்சவன். என்ன தைரியம் அவனுக்கு என் எதிர்ல உனக்கு போன் போடுறான். நீயும் அவனும் போன்ல பேசிட்டு இருக்கிங்களா? என்கிட்ட காதலிக்கவில்லை என்று சொல்லிட்டு, அவனிடம் இப்பவும் பேசுற, நான் அண்ணனிடம் கூறி விடுவேன் என்று சொல்லியும் நீ திமிரா தான் இருக்க, அப்ப உனக்கு பயம் போச்சு அப்படித்தானே? நல்லா எழுதி வச்சுக்கோ, அண்ணா வந்ததும் முதல் வேலையா உன்ன பத்தி சொல்றேனா, இல்லையா பாரு” என்று மிரட்டினான்.

வெளியே இருந்த மின்மினிக்கு 'என்ன இவர் அவரா வேகமா வந்தாரு, அவர் தங்கச்சியை அறைக்கு கூட்டிகிட்டு போனாரு, கதவு அடைச்சுக்கிட்டு ஏதோ கிசுகிசுன்னு பேசுறாங்க, இவருக்கு என்னதான் ஆச்சு?

இந்த லட்சத்துல அக்கா வேற இவரை கூட்டிட்டு பைக்ல போயிருக்கா. அக்காவிடம் என்ன பேசி இருப்பாரு? அக்காவை கண்டாலே இவருக்கு பிடிக்காது. இன்னிக்கு என்னன்னா அவராவே ஆன்ட்டி சொன்னதற்காக, பைக்ல கூட்டிட்டு போயிருக்காரு.

‌ என்னவோ நடக்குது எனக்கு தேவையில்லாத விஷயம்’ என்று எண்ணியபடி அக்காவை ஏறிட்டாள்.

அறைக்குள் துளிரோ “இங்க பாருங்க அண்ணா, நான் யாருக்கும் கால் பண்ணல. நீங்களா எதுவும் முடிவு பண்ணாதீங்க. இந்த நம்பர் மின்மினி அக்காவுடன் அம்மா சந்தோஷி நம்பர். அவங்க போன்ல சார்ஜர் போட மறந்துட்டாங்க, எப்பவும் இந்த டைம்ல அவங்க அம்மா கூட பேசுவாங்கன்னு சொல்லி, ஏன் போன வாங்கி நம்பர் போட்டு பேசினாங்க. இது தப்பா?

நான் யார் கூடவும் பேசல, என்ன நம்பு அண்ணா. வேணும்னா உனக்கு சந்தேகம் இருந்தா இந்த நம்பர் அவங்களுடையது தான் அப்படின்னு கேட்டுக்கோ. இரு நான் மின்மினி அக்காவை கூப்பிடுறேன். அக்கா” என்று அழைக்க சர்வேஷ் “நிறுத்து” என்றான்.

“நான் இந்த மாதிரி கேட்டா நீங்க இப்படி சொல்லணும்னு அந்த பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கியா? அப்படித்தானே?” என்று அதட்டினான்.

"அய்யோ அண்ணா ஏன் இப்படி நம்ப மாட்டேங்குற? உனக்கு ஆறியன் அண்ணாவே பரவால்ல. அவராவது தீர விசாரிப்பார் நீ முடிவே கட்டிட்ட, இந்த நம்பர் விதார்த் உடைய நம்பர் கிடையாது. 

நீ வேணும்னா ட்ரூ காலர்ல செக் பண்ணிக்கோ” என்றதும் வேகமாய் ட்ரூ காலரை ஏறிட்டு பார்த்தான் அதில் சந்தோஷி என்ற பெயர் பதிவாகி இருக்க, வேகமாய் விதார்த் என்ற ஆங்கிலத்தில் தட்டிப் பார்த்தான். அப்படி எந்த பெயரும் பதிவு செய்து இல்லை என காட்டியது‌.

” இப்ப போதுமா நான் யாரிடமும் பேசல, இன்னும் டவுட்டா இருந்தா நீங்க மின்மினி அக்காகிட்ட கேளுங்க எனக்கு தெரியாதா? அந்த வயசுல அவரோட அப்பா, நம்ம அண்ணனை பத்தி தப்பா பேசி கண்டித்து வைக்க சொன்னாரு.

ஒரு பொண்ண கைநீட்டி அடிக்க கூடாதுன்னு அட்வைஸ் பண்ணாரு.‌ அப்பா அதனால் காயப்பட்டார். ஆனா எனக்கு அந்த பொண்ணு சிற்பிகா அண்ணிறு தெரியாது.

எங்க அண்ணாவை சொன்ன மாதிரி நாளைக்கு, பொண்ணையும் சரியா வளக்க தெரியல, காதலிச்சு வச்சிருக்கா அப்படின்னு பேசிடுவாங்கன்னு எனக்கு தெரியாதா? நான் அவரை காதலிக்கலை‌” என்று கண்ணீர் மல்க விளக்கினாள்.

சர்வேஷிற்கு தங்கையின் கண்ணீர் வலியை கொடுத்தது. ஆனாலும் நம்பவும் மறுத்து போனை அவளிடம் கொடுத்து சென்றான்.

வெளியே வந்தவன் மின்மினியை பார்த்து அவனது அறைக்கு சென்றான். மின்மினியும் ‘இப்ப எதுக்கு இவர் என்ன குறுகுறுன்னு பாத்துட்டு இருக்காரு’ என்று நிலவரம் புரியாமல் குழம்பினாள்.

தமிழோ சர்வேஷின் பின்னால் உரிமையை அறைக்குள் சென்றாள்.

ராணி ஆச்சிக்கு பகிரென்ற உணர்வு ஏற்பட்டது. இத்தனை நாளாய் சர்வேஷ் தமிழை பார்க்கும் பார்வை சலிப்பாக கடப்பான்.
இன்று அழைத்துச் சென்று வரும்போது அப்படிப்பட்ட சலிப்பு அவனிடம் இல்லை அதனால் அவனது சிறு மாற்றம் பற்றி வேகமாய் ஆதிராவிடம் அதனை பகிர சென்றார்.

துளிரோ “நல்லவேளை விதார்த்னு சர்ச் பண்ணாரு. திமிர் பிடித்தவன் சர்ச் பண்ணி இருந்தா மாட்டியிருப்பேன் என்று பயந்தால்

-தொடரும்
-பிரவீனா தங்கராஜ்

29 thoughts on “என் நேச அதிபதியே -38”

  1. CRVS 2797

   தான் கேடி, பிறரை நம்பாள்’ங்கிற மாதிரியே ஆக்ட் கொடுக்க வேண்டியது.

 1. Kalidevi

  Intha tamil etho plan panni vanthu iruka photo vera eduthutan oruthan atha vachi ena panuvangalo ithula iva avanga appa mrg panika ketathuku avanum othukuren solran nibuna konjam kavani pa aale kanum ungala

 2. Avatar

  Dei sarvesh ne romba panra da dei ne panra alaparai ku rendu pondatti kattina mamanar kita sikkanum nu asaiya iruku da….yemma thulir ne apadi pesinadhum nambiten 😂 ana ne thimirpudichavan save panna nenaichu sathamavae sirichiten 😂….idhellam veena akka training nalla theriyum avanga tan thimirpudichavan nu sonnanga nalladha pochu…. super super ka 😍😍😍

 3. Avatar

  அப்படி என்னத்த தான் பேசினா அந்த பொண்ணு தமிழ் , சர்வேஷ் இவ்வள அமைதியா இருக்கான் ஏதோ பெருசா விபரீதம் நடக்க போகுதுன்னு தோணுது.

 4. Avatar

  Very interesting.
  Sarvesuuuu , Tamil venam da…..
  Min Mini enna sarveshai parthu குழம்பி போய் இருக்கா,
  விதார்த், ( திமிர் பிடிச்சவன்) துளிர் இன்னக்கி தப்பிச்சு ஆச்சு.
  அய்யோ photo வால என்ன ஆக போகுதோ????

 5. Avatar

  Very interesting.
  Sarvesuuuu , Tamil venam da…..
  Min Mini enna sarveshai parthu குழம்பி போய் இருக்கா,
  விதார்த், ( திமிர் பிடிச்சவன்) துளிர் இன்னக்கி தப்பிச்சு ஆச்சு.
  அய்யோ photo வால என்ன ஆக போகுதோ????

 6. Avatar

  Sarvesh ku indha tamizh venam sis ithu shamira mathiri yae araloose ah irupa ah pola thulir.vidharth love pannala nu ava sollura karanatha enna nu.sollurathu love panna avanga appa ah va vidhyuthu asinga paduthuvan nu sollura romba kastam ivaloda

 7. Avatar

  Unga Aariyan Annan ta maata porae Thulir pappa.apuram intha Tamil venam sarvesh ku. Athu oru korangu.Goa pona jodi enga ma

 8. Avatar

  தமிழ் போட்ட திட்டத்தின் படி சர்வேஷ் அவளின் வலையில் விழுவானா இல்லை சுதாரித்து தப்பித்து விடுவானா…‌🤔🤔🤔🤔🤔🤔🤔….

 9. Avatar

  Intha Tamil apti enna paysiruppa 🤔 Ivan vidhuva kavanikkarathula Ava sonnathu mandaila yarala 🤦 iva vayra over aa seen poodara 😏😤
  Minmini sarve Jodi potrunga pravee ma plz 🙏🏻 intha Tamil intha vittuku vayndam , enna thimir irruntha Rani akkava vaylai karanganu ninaippa 😤😤😤😤😤😤😤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *