Skip to content
Home » என் நேச அதிபதியே -41

என் நேச அதிபதியே -41

அத்தியாயம்- 41

தமிழ் தன்னிடம் கூறிய நிகழ்வுகளை தொடர்ச்சியாக அண்ணனிடம் தெரிவிக்க நினைத்த சர்வேஷிற்கு நேரங்கள் போதாமல் கதவு தட்டப்பட்டது. ஆர்யன் அறையின் வாசல் கதவை பார்த்தபடி “உனக்கு தெரியுமா தெரியாதா? அதை மட்டும் எனக்கு சொல்லு?” என்று உறுமினான்.

“தெரியும் அண்ணா” என்ற சர்வேஷ் கதவை திறக்க அங்கே துளிர் நின்றிருந்தாள்.

  ” அண்ணா அப்பா உங்களை கூப்பிடுறாங்க. அரவிந்த அங்கிள் வந்திருக்கார். உங்களோட பேசணும்னு சொன்னாங்க” என்று உரைத்து விட்டு அவள் சென்றாள்.
ஆர்யனும் சர்வேஷம் பார்த்துக் கொண்டு வெளி வந்தார்கள்.

ஆர்யனோ ‘தெரியும் அண்ணா’ என்று தம்பி கூறியதில் இருந்து சற்று நிதானமடைந்திருந்தான்.  இதில் தந்தை அழைக்க வெளியே செல்பவனை தடுத்து நிறுத்தி, “அந்த குழந்தைக்கு நீ அப்பாவா?” என்று மட்டும் கேட்டான்.

  சர்வேஷ் அண்ணனை பார்த்து “என் மேல அவ்ளோதானா அண்ணா நம்பிக்கை” என்று மட்டும் கேட்டான்.

ஆர்யனுக்கோ தம்பி இப்படி கேட்க பேசி விட்டோமோ என்று வருந்தினான்.

    இருவரும் ஹாலுக்கு வர அங்கே வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் என்று வீற்றிருந்தார் முதலமைச்சர் அரவிந்த்.
   அவர் அருகே மின்மினி இருந்தாள். மறுபக்கம் தந்தை வரவேற்று நலம் விசாரிப்பதை பார்த்தார்கள் சர்வேஷ் ஆர்யன்.

    தமிழோ சர்வேஷை தான் நம்பிக்கொண்டிருந்தாள்.

‌‌ “அப்ப தேர்தல்ல நீ நிற்க முடியாதா நிபுணன்.” என்று அரவிந்த் தாடையை தேய்த்தார்.

நிபுணனோ “இல்லைடா அந்த தகுதி எனக்கில்லை‌” என்றுரைக்க, தன் தந்தை இவரிடம் விட்டுக்கொடுக்க மனமின்றியவனாக “ஐயா அரசியல்ல நிற்க எந்த தகுதியும் தேவையில்லை. எவன் வேண்டுமின்னாலும் நிற்கலாம். முதலமைச்சர் ஆகலாம் ஏன் பிரைம் மினிஸ்டர் ஆகலாம்.” என்று ஆர்யன் தந்தையிடம் அறிவுறுத்தினான்.

   அரவிந்தோ ‘இந்த திமிரும் பேச்சும் தான் எனக்கு மாப்பிள்ளையா வரணும்னு ஆசைப்பட்டேன். என்ன செய்ய பெத்ததுக்கு அவ அம்மா மாதிரி அனுசரணையா இருக்க தெரியலை. இவனுக்கும் நான்‌ மாப்பிள்ளைனு பேசினாலே பிடிக்காது. ‘பத்து வயசுலயே என்னை மாப்பிள்ளைனு கூப்பிடாதிங்க அங்கிள்னு சொல்லிட்டான்’ என்று ஆர்யனை அளவிட்டார் முதலமைச்சர் அரவிந்த்.

     “ஐயா முதல்ல அவங்க பொண்ணை அவங்க அப்பா கூட அனுப்பி விடுங்க. தேவையில்லாத சர்ச்சையில நாமளா தலைக் கொடுக்க வேண்டாம்.” என்று ஆர்யன் பேசவும் அரவிந்த் கனவில் கலைந்து நிபுணனிடம் திரும்பினார்.

   அரவிந்தோ தன் நண்பனிடம் திரும்பி, “பிரச்சனை ஃபோட்டோ கிடையாது டா மச்சான். ஆயிரெத்தெட்டு ஆட்கள் இப்படி தான் அலைவாங்க. அதுக்காக ஆசைப்படற இடத்துக்கு போகாம இருக்க முடியுமா?” என்று பேசவும்.

  ஆர்யனோ பொறுமையிழந்தவனாக “ஆங்கிள் தமிழ் மாடர்ன் பொண்ணு எங்கவூரு இந்த இடம் அவளுக்கு செட்டாகாது. அவ இங்க வர ஆசைப்பட மாட்டா. அதுவும் துளிருக்கும் அவளுக்கு அந்தளவு பேச்சு வார்த்தை குறைவு தான். நாங்களும் ஆம்பள பசங்க. அவளுக்கு இங்க இருக்கறது உங்க கட்டாயத்தால் மட்டும் தான்.” என்றான்.

    இவனை வைத்துக் கொண்டு ஒளிவுமறைவு பேச்சு எடுப்படாதென்று புரிந்தது. மேலும் தன் எண்ணத்தை வெளியிடும் முயற்சியில் பின் நகராமல், “கட்டாயத்தால தான் ஆர்யன் இங்க விட்டது. இந்த தொகுதியில என் கட்சி ஆளு, மகளிர் அணியிடம் சில்மிஷம் செய்து பெயர் கெட்டு போச்சு.
   என் கட்சி இங்க படுத்தோல்வி அடையும்‌. அது தெரியும். அதுக்கு தான் நிபுணனை அரசியல்ல நிற்க வச்சிடணும்னு முயன்றேன்‌.‌

   உங்க ஐயாவுக்கு சில காரியம் ஆகவேண்டியது இருக்கு‌. ஆனா அரசாங்க உதவியோட செய்ய முடியாதுன்னு தான் நிபுணனும் மனு கொடுக்க போனது.  

  என்ன செய்யறது இரண்டு பொண்டாட்டி வச்சியிருக்கற என்னை மாதிரி கேடுக்கெட்டவன் எல்லாம் அரசியல்ல நிற்கறேன். ஆனா நிபுணனால நிற்க முடியாது. சட்டத்துக்கு நல்லதுக்கு கெட்டதுக்குன்னு பிரித்து நீதி வழங்கலையே.

   சரி அரசியலை விடு. என் மக விஷயத்துக்கு வர்றேன்.” என்றவர் தொண்டையை செரும தமிழ் கழுத்து வெடுக்கென சர்வேஷ் பக்கம் திரும்பியது.

   “மச்சான் உனக்கே தெரியும். ஆர்யனை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு. அவருக்கு தமிழை கட்டிக்கொடுக்க ஆசைப்பட்டேன்.‌ அவருக்கு சிற்பிகா தான் துணையா வரணும்னு கடவுள் அனுக்கிரகம்.

   அதுக்காக நம்ம வீட்ல பொண்ணு கொடுக்கணும்னு ஆசை அகலுமா? அதான் இளையவருக்கு தமிழை கட்டிக்கொடுக்க விரும்பி உன்னிடம் பேசணும்னு இங்க அனுப்பிவச்சேன்.‌
 
   என் நண்பன் நிபுணன் வீடு. அன்புக்கும், பாதுகாப்புக்கும் வசதிக்கும் குறைச்சல் இருக்காது.” என்று ஆர்யன் அடுத்து பேச வருவதை யூகித்து தடையிட்டு விட்டார் அமைச்சர்.

   ஆதிராவோ சர்வேஷிற்கு தமிழ் ஜோடியா? என்று இருவரையும் ஏறிட்டார்.

  தமிழுக்கு அழகும் அறிவும் குறைச்சலில்லை. பழகவும் நல்ல பிள்ளையே. என்ன உறவுகளை தவிர்த்து யாரிடமும் மரியாதை தரமாட்டாள். இங்கே ராணி ஆச்சியிடம் சிறுவயதிலேயே ‘அந்த ஆயாவிடம் கொடுத்துவிடுங்க’ என்பாள்.

  ‘ஆயா அல்ல ஆச்சி’ என்று திருத்தினாலும் ‘இவங்க ஆயா தான்’ என்று மறுப்பாள். ஏன் இப்பொழுது கூட வேலைக்காரர்கள் என எட்டி நிறுத்துவாள்.  

   அதே போல தான் என்ற அகங்காரம் உண்டு. அவள் அன்னை ஷமிராவின் சுபாவம் மாறாதல்லவா?!

   கணவர் வாய் திறக்கட்டும். அவர் அறியாததா? என்று நின்றார்.

  நிபுணனோ “நண்பர்கள் சம்பந்தி ஆகறது கொடுப்பினை டா. நீ இந்தளவு இறங்கி வந்து இந்த ஊர்ல மகளை கொடுக்கறது சந்தோஷம் தான். ஆனா பாரு தமிழ் வெளிநாட்ல படிச்ச பிள்ளை. சர்வேஷிடம் வாழ விரும்பாது.

  சர்வேஷுமே அவங்க அண்ணன் மாதிரி விருப்பம் இருக்கறவன். விருப்பு வெறுப்பு மாறுறப்ப சம்பந்தம் தேவையா?

  முதல்ல தமிழுக்கு பிடிக்காது.” என்று மறுப்பதை நாசூக்காய் கூறினார்.

   அரவிந்தோ அரசியலில் தேர்ந்தெடுத்து பேசும் வல்லமை பெற்றவனாக “பிடிக்காமலையா இங்க வந்தா. சர்வேஷிடம் கேட்டுட்டு முடிவு சொல்லறேன்னு சொன்னா. பேசினாளா தெரியலை.” என்று தன்‌ மகளை காண, அவளோ “பேசிட்டேன்பா அவர் முடிவு சொல்லலை.” என்று கையை பிசைந்தாள். அவளுக்கு சர்வேஷ் தன்னிலை கூறியும் ஆதரவாய் நிற்பானா என்பது இப்பொழுது ஐயம் முளைத்தது. ஆர்யன் வந்ததால் பிறந்த சந்தேகம்.

    ஆதிராவோ இதுக்கு தான் நேத்து கூட்டிட்டு போனாளா? இப்படின்னு தெரிந்தா அனுப்பாம இருந்திருப்பேன்.

   “சர்வேஷுக்கு என் மகளை பிடிக்குமா?” என்று ஆராய்ந்தார்.

   ஆர்யனின் மிடுக்கு கொஞ்சமும் குறையாதவன். என்ன அண்ணனின் சொல் கேட்கும் லட்சுமணன் குணம்‌. எல்லாம்‌ ஆதிரா-நிபுணனின் வளர்ப்பு.

   “அப்பறம் டா. என் பொண்ணு சொல்லிட்டா. உன் மகனிடம் அபிப்ராயம் கேளு. இப்ப தான் என் மகன் ப்ருத்வி கல்யாணம் முடிஞ்சது. இங்க உன் மகன் ஆர்யன் கல்யாணம் முடிஞ்சது. நம்ம இரண்டாவது வாரிசுக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கலாம்‌.” என்றதும், ஆர்யன் குறுக்கே வந்து, “என் தம்பி உங்க பொண்ணை கட்டிக்க மாட்டான்.” என்றான்.

  “அதை உன் தம்பி சொல்லட்டும் ஆர்யன். நீ வேண்டாம்னு சொல்ல உனக்கு உரிமையிருக்கு. ஆனா உன் தம்பிக்கு வர்ற வாழ்க்கையை நீ தடுக்க கூடாது” என்று பேசவும் மகனும் நண்பனும் முட்டிக் கொள்வதை வேடிக்கை கண்ட நிபுணனோ, “ஐயா… தம்பியே முடிவெடுக்கட்டும் அவருக்கு தெரியாததா” என்று சர்வேஷே நண்பனுக்கு பதில் தரட்டுமென சர்வேஷிடம் பந்தை தள்ளினார்.

   சர்வேஷோ தந்தை அண்ணனை கண்டு, “நான் தமிழை கல்யாணம் பண்ணிக்கறேன்.” என்றதும் ஆர்யனுக்கு அடங்காத கோபம் உண்டானது.

   அரவிந்திற்கு பரவாயில்லை மகளுக்கு அவ அம்மா புத்தி கொஞ்சமிருக்கு. பிழைச்சிப்பா’ என்பது போல பாராட்டும் விதமாக  பார்த்துவிட்டு நிபுணரிடம், “சந்தோஷமாயிருக்கு டா மச்சான். சர்வேஷ் மாப்பிள்ளையாக வர்றது திருப்தி.

    தேர்தல்ல கூட நீ நிற்க முடியலைனா என்ன? சின்ன மாப்பிள்ளையை நிற்க வையுங்க” என்று பேசவும் ஆர்யனோ தம்பியை பார்த்து ருத்ரமூர்த்தி அவதாரத்தில் நின்றான்.

  “ஹலோ ஆங்கிள். மேரேஜிக்கு ஓகேனு சொன்னேன். ஆனா தேர்தல்ல நிற்பேன்னு வாக்கு தரலை.
  
   அதே போல கல்யாணத்துக்கு கூட இப்பவே என்னால் தலையாட்ட முடியாது. அடுத்த மாசம் தான் எனக்கு படிப்பு முடியுது. அதோட நான் கன்ஸ்ட்ரக்ஷன் ஓபன் பண்ணணும். வேண்டுமின்னா தமிழை அவ ஆசைப்பட்டபடி படிப்பை கன்ட்டினியூ பண்ண சொல்லுங்க. ஆறு மாசம் முடியவும் மேற்கொண்டதை பேசலாம்.” என்று முடித்தான்.

  ஆர்யனின் திருமணம் நிபுணன் ஆதிரா தான் ஆதியும் அந்தமும் பேசி முடிவெடுத்தது. இங்கே சர்வேஷ் திருமணம் அவனாக முடிவெடுக்க நிபுணனுக்கு லேசான வருத்தம் எழுந்தது.

   அதுவும் ஆர்யனை கூட தலையீடல் செய்யாத விதம் இடரியது.

   அரவிந்தோ “இப்படி சொல்லிட்டிங்க. அடுத்து தேர்தல் வருதே. இந்த இடத்துல நம்ம சார்புல யாரு நிற்பா.” என்று வருந்தினார்.

   நிபுணனோ “என் மகன் அவன்  திருமணத்தை பத்தி உனக்கு சாதகமா பதில் சொல்லிட்டான்.

    தேர்தல்ல யாரு நிற்கறா என்றது நீ முடிவெடு. ஆனா தனிப்பட்டு எங்க சார்பில் ஒருத்தர் சுயட்சையா நிற்பாங்க அரவிந்த். ஏன்னா அரசாங்கத்தோட எங்கவூர்ல நிறைய தலையீடல் இருக்கு. இந்த பக்கம் இரண்டு மூன்று தொழிற்சாலை காலி மணையில் விலை பேசியிருக்காங்க.
   தொழிற்சாலை வரக்கூடாதுன்னு முடிவா இருக்கேன். நான் நிற்கலைனாலும் என் சார்பில் யாராவது நிற்பாங்க” என்று நண்பனிடம் உனக்கு எதிராக எப்படியும் அரசியலில் நிற்க போவதை தெரிவித்தார்.

  அரவிந்தோ “நல்லது டா. யாரிடமாவது தோற்றத்தை விட நண்பனிடம் தோற்பது சந்தோஷமான விஷயம்‌” என்று தன் பி.ஏ விடம் கண்ணை காட்ட, தட்டை எடுத்து வரவும், “சின்னதா தட்டை மாத்திப்போம் நிபுணா” என்று கொடுக்க, நிபுணனோ சர்வேஷை பார்வையிட, அவனோ தலை குனிந்தான்.‌

   “ஆதிரா நீயும் வாம்மா” என்று மனையாளை அழைத்து சேர்ந்து வாங்கினார்.‌

   ஆர்யனோ சிற்பிகாவை அழைத்து மாடிக்கு படியேறினான்.

    ராணி ஆச்சியோ அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை மாடிக்கு எடுத்து செல்ல மற்றொரு பணியாளரை ஏவினார்.

   “சரிடா மதியம் இங்க தான் சாப்பாடு. நான் என் கட்சி ஆளை வரச்சொல்லியிருக்கேன். கட்சி ஆபிஸ் இங்க பேச உனக்கு  பிடிக்காதே. வேலை முடிச்சி வர்றேன்.” என்று முதலமைச்சர் அரவிந்த் சென்றார்.

    தமிழோ சர்வேஷிடம் நன்றியோடு ஒரு பார்வை பார்க்க, சர்வேஷிடம் முகம் தகரீப்பி நிபுணன் ஆதிரா சென்றார்கள்.

   “அப்பா அம்மா” என்று அவன் குரலுடைந்தது.

  துளிரோ அண்ணனை தமிழை மாறி மாறி பார்த்து கடந்தாள். மென்பனியோ இரண்டு நாள் முன்ன ஏறுமுகமா காட்டினார். நேத்தும் இன்னிக்கும் அக்காவுக்கு பார்த்து செய்யறார்.’ என குழப்பமாய் திரித்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

31 thoughts on “என் நேச அதிபதியே -41”

 1. Avatar

  சர்வேசா என்னடா பண்ணிட்டு இருக்க,
  அம்மா அப்பா, அண்ணன் யாருடனும் பேசாமல் நீயா ஒரு முடிவு எடுத்து இருக்க,
  அப்படி தமிழ் என்ன சொன்னா,,,
  Sema interesting ..
  இப்போ நேச அதிபதி யாரு
  ஆர்யன் or sarvesh…..
  எப்பவும் நம்ம நிபு தான் Mass

 2. Avatar

  Sarvesh yen kalyanam panna othukittan nu therila…thamizh oda kuzhandhai ku yaar kaaranam Ivan yen avala kalyanam panran…. eppavumae nibu nithanama iruparu sarvesh kita edhuku indha mugam thiruppal….romba varusham kazhichu aravind chellakutty ah pakkuren…. super…. Veena akka skrma indha twist ellam reveal Pannunga ka …. Ilana mandaiyae vedichidum Pola …..

 3. Avatar

  Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 sarvesh en eppdi panninan nibunan paavam romba varutha padraru😢

 4. Kalidevi

  Sarvesh nee Yen tamil ku support panra ava una use pana vanthu iruka therinjum anna sol pechi kekama nee sari nu sollita ava ninacha mari . Ippadi poi matikittiye da

 5. Avatar

  Sema twist. What happened to sarvesh? Ariyan anger is correct. But how can sarvesh favour Tamil? Something wrong. Intresting sis. Pls give daily updates sis.

 6. Avatar

  Yanakku ennavoo Tamil lukku help panna thaan sarva ipti paysiruppanonu thonuthu 🧐🧐🧐
  6 month time athukka kuda irrukalam 🤔
  Ana antha oru nimisam nalum appa Anna yathirparpa odachathu sangadam thaan 💔 💔
  Unmaiya solittu ellam paysirukkalam sarva 😤😮‍💨

 7. Avatar

  அட… இவை ஏன் இப்படி பண்ணிட்டான்….? இவனும் தமிழும் அப்படி எதை மறைக்கிறாங்கன்னு தெரியலையே…???
  😤😤😤

 8. Avatar

  தமிழ் a அப்படி பேசுனது….??!!!😳😳
  Something , தமிழ் என்னமோ சொல்லி இருக்கா….,🤔🤔
  ஆனா..அண்ணனும், தம்பியும் முறைச்சிப்பாங்களே…

 9. Avatar

  Dei sarvesh loosu payale unakku paithiyamdhan da puduchurukku😡😡😡😡😡😡😡😡😡idhula ivanmela nambikkai illanu Aaryana vera kelvi kekura 👊👊👊👊👊👊👊👊

 10. Avatar

  இந்த சர்வேஷ் அவனுக்கு மூளை எங்கே போச்சு…இவனே இப்படி தமிழ் அவளை திருமணம் செய்ய போகிறேன் என்று வாயை விட்டானே…‌‌இனி என்ன ஆகுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *