Skip to content
Home » என் நேச அதிபதியே -44

என் நேச அதிபதியே -44

அத்தியாயம்-44

‌ அரவகந்தின் கார் சென்ற அடுத்த கணமே தந்தையிடம் நெடுஞ்சாணாக விழுந்தான் சர்வேஷ்.
  
   “அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை. அதை மீறி உங்களிடம் கலந்தாலோசிக்காம அரவிந்த் அங்கிளிடம் பேசினேன். அதுக்கு காரணம்” என்று வாய் திறக்க வந்தவன் துளிர் அவனையே குறுகுறுவென பார்த்தாள்.

   ஏற்கனவே துளிர்  காதலிக்கின்றாளா இல்லையா என்ற பெரும் குழப்பத்தில் இருக்கும் சர்வேஷிக்கு தமிழின் கர்ப்பம் காதல் தெரிய வேண்டாம் என்று எண்ணினான்.
அதோடு தானே தமிழின் காதலுக்கு உதவுவதாக இருந்தால், துளிரின் மனம் தன் காதலுக்கு மட்டும் அண்ணன் எதிர்ப்பது ஏனோ என்ற கோபம் உருவாகலாம்.

தமிழுக்கு உதவுவது அவள் தனியாக அழைத்துச் சென்று, நிலவரத்தை உரைத்ததால் கர்ப்பம் என தெரிந்த பின்னும் உதவாமல் இருக்க, தான் கல்நெஞ்சகாரனாகி விடுவோமோ என்ற எண்ணமே.

  “துளிர் உள்ளாற போ” என்றான். உதடு கோணித்து சென்றவளை ஆர்யன் ரசிக்க, ஏற்கனவே ஆர்யன் தன் மனைவியிடம் தமிழை பற்றி கூறியிருக்க, நிற்கவா போகவா என்பதாக இருந்தாள்.

   துளிர் போனதும், சிற்பிகா துளிர்  அறைக்குள் பதுங்க பார்க்க, ஆர்யனோ ‘நீங்களும் தெரிந்துக்கலாம்’ என்று கைப்பற்றி நிற்க வைத்தான்.

    தமிழ் சிராப்’ என்ற பையனை விரும்ப தற்போது கருவுண்டாகி இருப்பதை கூறி, தன்னிடம் தமிழ் உதவி கேட்டு நின்றது வரை விளக்கினான்.‌

    “அப்பா…. சாதாரணமா கேட்டா உதவியிருக்க மாட்டேனப்பா. அவ அழுதுட்டே ‘அரசியல்வாதி மகள் என்ற பெயர். வசதி, அதை தவிர என்னிடம் எங்க பேசியே பல நாளாகுது சர்வேஷ்.
   ஏற்கனவே சகுனியா வாழ்ந்தவர். அரசியல் நுணுக்கம் கற்றுக்கொண்டதும் அரசியல் புகழில் ஒரு போதையா பார்க்கறார்.

   நான் மட்டும் கர்ப்பமா இருப்பது தெரிந்தா அழிச்சிடுவார். சிராப்புக்கு தமிழ் தெரியாது. ப்ருத்வி அண்ணாவும் தாரா பெரியம்மா சொல் கேட்டு பிஸினஸ் பண்றார். என் கணவராவது அரசியல்ல நிற்கணும்னு வெறியா மாறுது.‌

  நிச்சயம் வேற நாட்டை சார்ந்தவரை அப்பா ஒரு நாளும் ஏத்துக்க மாட்டார். ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணு.’ சொன்னா அப்பா.

   ஒரு நிமிஷம் உன் பிராப்ளம் எனக்கெதுக்குன்னு தலையிடாம இருக்க நினைச்சேன்.‌

   ஆனா கர்ப்பத்தை கலைக்க தெரியாதவளா தமிழ். அவ அந்த குழந்தையை வளர்க்க ஆசைப்படறாப்பா. தப்போ சரியோ உதவி கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன்.

   இப்ப கல்யாணத்துக்கு தலையாட்டிட்டா அரவிந்த் அங்கிள் சும்மா இருப்பாரு நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு மறுத்தால் அவர் எனக்கு பதிலா வேற யாரையாவது தமிழுக்கு மாப்பிள்ளை தேடுவாரு. தமிழுக்கு பிரச்சனையை இக்கட்டில் தள்ளற மாதிரி ஆகிடும். அதுக்காக தான் உதவினேன் இப்ப சொல்லுங்கப்பா நான் செஞ்சது தப்பா? உங்கள கலந்தாலோசிக்காம அரவிந்த் அங்கிள்கிட்ட பேசினேன். எனக்கு தெரியும் உங்களுக்கு மன வருத்தம்னு. ஆனா அரவிந்த் அங்கிள்  எங்களை சேர்ந்து எடுத்த போட்டோவை பார்த்துவிட்டு, உடனே வருவார் என்று நான் நினைக்கல.

மீடியாக்கு பதில் சொல்லவா? இல்ல நீங்க என்ன நினைப்பீங்க? அப்படின்னு பயம். ஒரு சின்ன தடுமாற்றம் அதனால அப்ப அந்த நேரம் சொல்ல முடியல.

அரவிந்த அங்கிள் நேரில் வந்து பதில் கேட்டு நிற்கும் போது, உங்களைக் கேட்காமல் பேசிட்டேன்.
  மத்தபடி தமிழை நான் நேசிக்கலப்பா. கல்யாணமும் பண்ண மாட்டேன் எனக்கு கல்யாணம் என்று நடந்தால், அது நீங்களும் அம்மாவும் பார்த்து வைக்கிற பொண்ணு கூட தான் நடக்கும்.
   நானுமே ஆர்யன் அண்ணாவுடைய எச்சி பாலில் வளர்ந்தவன்ப்பா. அவர் வழியில் தானே அப்பா வருவேன். அப்படி இருக்கும்போது நானா எனக்குன்னு ஒருத்திய தேடிப்பேனா?” என்றான்.

   மின்மினி போல கதவில் காது வைத்து கேட்ட துளிருக்கு அழுகை உடைப்பெடுத்தது.

    இந்த வீட்ல பெரிய அண்ணன், சின்ன அண்ணன் இருவருமே தாய் தந்தையரின் கை காட்டும் பெண்ணை மணக்க விரும்புகின்றார்கள்

  ஆர்யன் அண்ணாவோ அம்மா காட்டிய பெண்ணான சிற்பிகாவே மணந்தார்.
சின்ன அண்ணனும் அப்பா அம்மா காட்டும் பெண்ணை மணப்பதாக அறிவிக்கின்றார். தனக்கு மட்டும் ஏன் இந்த காதல் நெஞ்சில் குடிப்புகுந்தது?

  அரவிந்த் அங்கிள் தந்தை இருவரும் நல்ல சிநேகிதர்கள்‌. அப்பியிருக்க அவர்கள் மகளையே ஏற்க யோசித்தனர் அன்னையும், தந்தையும்.

  வித்யு அங்கிள் எல்லாம் அப்பாவிடம் மேலோட்டமான நண்பர்களாக இருந்தவர்கள் அவர்களை  சம்மந்தியாக ஏற்பார்களா?

‌‌முன்பு ஆர்யன் அண்ணாவையே எப்படி பேசினார். என்னவோ அப்பாவின் வளர்ப்பில் குறைக் கண்டுபிடித்தவர்கள். தற்போது ஆர்யன் அண்ணன் திருமணத்திற்கு வந்தாலும் நண்பர்கள் போலவே இருக்கிறார்களா? நண்பர்களாகவே இருந்தாலும் தந்தை தன் காதலை ஏற்பாரா என்று குழப்பத்திலும் துடித்தாள்.
ஹாலில் நிபுணனோ “அப்பவே ஒரு சந்தேகம் இருந்துச்சு நம்ம பையன் நம்மகிட்ட கேட்காம எந்த முடிவும் சொல்ல மாட்டானே அவனா அவன்  கல்யாணத்தை பத்தி பேசுறான் என்று ஒரு டவுட் இருந்துச்சு. ஆனா இந்த பெத்தவனுக்கு வருத்தத்தை தாண்டி என் பையன் ஏதாவது காரணத்தோடு சொல்லுவான் அப்படிங்கற அளவுக்கு யோசனை போகலை. அந்த அளவுக்கு மனம்  திகைப்பிலிருந்தேன்.” என்று கூறினார்.

  “ஹாஆஹாஹான் இப்ப சொல்லுங்க என் பையன் அப்படி இப்படி என்று நினைத்து என்னென்னமோ நெனச்சு மனசு வேதனைப்பட்டிங்க.

இப்ப புரியுதா உங்க வளர்ப்பும் சோடா போகாதுன்னு. நான் வளர்த்தாலும் நீங்க வளர்த்தாலும் இவங்க உடம்புல ஓடுற ரத்தம் நம்ம ரெண்டு பேருடையது. அவ்வளவு சுலபத்துல பெத்தவங்கள மதிக்காம போக மாட்டாங்க.

   எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அது பெத்தவங்க எடுத்த முடிவா இருக்கணும்னு, கட்டுப்படுவாங்க. அவங்களோட ஆசைகளை நிறைவேத்துற நமக்கு தெரியாதா?!” என்றார் ஆதிரா.

துளிருக்கு மேலும் குற்ற உணர்வு நெஞ்சை அறுத்தது.

பெற்றவர்களின் நம்பிக்கை அவர்கள் வாயால் கேட்ட பின் விதார்த் என்பவனை எட்டி நிறுத்தும் எண்ணம் அதிகமானது.

ராணி ஆச்சியோ “போதும் போதும் எங்கண்ணே பட்டுவிட போகுது. எல்லாம் ஒன்னு சேர்ந்து நில்லுங்க திருஷ்டி சுத்தி போடுவோம்.” என்றார் ராணியாச்சி.

குடும்பமாய் நிற்க சிற்பிகாவோ “இருங்க நான் என் நாத்தனார் கூட்டிட்டு வரேன்” என்று ஓடினாள்.

ஆரியனோ “நீ இரு நான் கூப்பிடுறேன் குட்டிமா ஏ குட்ட கத்திரி வெளியே வா” என்றான்.

துளிர் அவசரமாக கண்ணீர் துடைத்தபடி வெளியே வந்தால் வரிசையாய் நிற்க வைத்து எலுமிச்சை பழத்தை வைத்து சுத்தி போட ஆரம்பித்தார்.
சிற்பிகாவோ ராணி ஆட்சியை நிற்க வைத்தாள்.

“ஆச்சி இன்னிக்கி உங்களுடைய சமையலைதான் அந்த முதலமைச்சர் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தார். அதனால உங்களுக்கு தான் முதல்ல சுத்தி போடணும். உங்கள மாதிரி ஒரு சமையல் கை பக்குவம் இருக்கிற ஆள எங்கேயுமே பார்க்க முடியாது. அதோட அன்பா இருக்கிங்க பாத்திங்களா இந்த மாதிரி அன்பான உள்ளமோ யாருக்கும் கிடைக்காது” என்று புகழ்ந்தாள்.

ராணி ஆச்சியோ ஆர்யனுக்கு ஏற்ற ஒரு சிற்பம் என்று மெச்சிக்கொண்டார் இதேபோல இளையவன் சர்வேஷுக்கும்  நல்ல வாழ்க்கை துணையை அமைய வேண்டும் என்று வேண்டினார்.

ஒரு வீட்டில் தாய் தந்தையரின் வேண்டுதல் என்பது பொதுப்படையானது. ஆனால் வீட்டில் பணிபுரியும் உள்ளம் கூட அவ்வீட்டில் வாழ்பவர் நலனுக்காக வேண்டுவதெல்லாம் வரம்.

   அன்றைய நாள் சங்கடங்கள் தீர்ந்து இனிமையாக கழியந்தது.

அடுத்த நாள் மருத்துவமனைக்கு செல்லும் பொருட்டு, ஆர்யன் உடையணிந்திட, கண்ணாடியில் மனையாளை பார்த்து, “அரசியல்ல உன்னை கேட்காம ஐயாவிடம் பெயர் கொடுக்க பேசினேன். உனக்கு ஏதாவது அப்ஜக்ஷன் இருக்கா?” என்று கேட்டான்.

    சிற்பிகாவோ சேலை முந்தானையால் முடிச்சிட்டபடி அருகே வந்து, “முதல்ல என்ன இவரு இப்படி ஐடியா கொடுக்கறார். நாம அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோமேனு பயந்தேன். ஆனா நிபுணன் ஐயா ஆதிரா அம்மாவிடம், ‘மருமக நிற்கறது எனக்கும் சரியா வரும்னு தோணுது. படிச்ச பிள்ளை, நம்ம மில்லுல வரவு செலவு கணக்கெல்லாம் பார்க்குது.
   ஊருக்கு ஒன்னுனா பார்ப்பான்னு பேசவும் சின்ன கான்பிடன்ஸ் வந்தது.
  
   அதோட வம்புகிம்பு வந்தாலும் ஐயாவை மீறி வராதுன்னு தைரியம் வந்துடுச்சு‌.

   நீங்களா எனக்காக முடிவெடுத்து பேசியது. மறுக்க வேண்டாம்னு நானும் பெயர் கொடுக்கலாம்னு நிபுணன் ஐயாவிடம் தலையாட்டினேன்.” என்று பேசவும் அவளது இடையை பற்றி தன் பக்கம் திருப்பிய ஆர்யனோ “knife’ நீ நிற்கப் போற இடமும் knife தான் ஜாக்கிரதை. எதுனாலும் உனக்கு தப்பா பட்டா உடனே ஐயாவிடமோ, என்னிடமோ ஷேர் பண்ணிடு” என்றான்.

    “ம்ம்ம்” என்றவள்‌ அவனது அழுத்தமான பிடிமானத்தில் சொக்கிக் கொண்டிருந்தாள்.

   “ஏய் பொண்டாட்டி… ஹாஸ்பிடலுக்கு போகணுமான்னு இருக்கு. பேசாம மறுபடியும் லீவு போட்டுட்டு ஹனிமூன் போலாமா” என்று கேட்டான்.‌

‌‌ விடுக்கென இமை திறந்த சிற்பிகாவோ “அச்சோ ஷர்ட் கசங்கிடும்? முதல்ல கிளம்புங்க.” என்று தள்ளி நிறுத்தினாள்.

   “Knife இதயத்தை வதைக்கிற பார்த்தியா?” என்றவன் பார்வை தாபமாகவே இருந்தது.

    “என் நேச அதிபதியே, நீங்க ஒரு டாக்டர். முதல்ல கடமையை பாருங்க.” என்று சிரித்தாள்.

   “உன் நேசத்தோட அதிபதியா? அது சரி அதிபதினா ஆளா வேண்டியது தான்.” என நெருங்கினான்.‌

     “ரியன் போதும் நைட்ல வச்சிக்கோங்க உங்க கச்சேரியை” என்று தள்ளினாள்.

   ஆர்யனும் அவனது பணிக்கான நேரம் என்று புறப்பட்டான். துளிரும் சர்வேஷும் கல்லூரிக்கு தயாராகினர்கள்.

அதென்னவோ அறிந்தவர் தெரிந்தவர் என்று சர்வேஷ் புகைப்படம் முதல்வர் மகளோடு வந்திருக்க, குசலம் விசாரித்தார்கள்.

    ஒவ்வொருத்தரிடம் சிநேகிதி என்று விளக்கி கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கவே நாக்கு தள்ளியது. இதில் கல்லூரியில் அவனை விரும்பிய பெண்கள் ஓவென அழத்துவங்கினார்கள்.

‘நெஞ்சில் கைவைத்து ஆண்டவா காப்பாத்து. எவளை பார்த்தும் சிம்பத்தி வந்துடக்கூடாது.’ என்று நழுவினான்.

இதில் துளிரின் கல்லூரியில் விதார்த் சும்மாயில்லாமல் “பொண்ணுங்களை மட்டும் காதலிக்க கூடாதுன்னு கட்டு பாட்டோட வளர்ப்பாங்க. ஆனா ஆம்பள பசங்க ஊர் மேய்ந்தால் தப்பில்லை‌. ஏன்னா தமிழ்நாட்டு சி.எம்.

நாங்களும் பசையுள்ள பார்ட்டி தானே. நீதிபதி வீட்டு மருமகளென்றால் கசக்குதா?” என்று கடுப்பில் பொரிந்தான். துளிர் இவனால் அல்லவா நிம்மதியாக வீட்டில் நடமாட முடியவில்லையென்ற கவலையிலும், பணத்தை பார்த்து பழகும் கூட்டமாய் பேசுவதாலும் விதார்த்தை தள்ளி விட்டு, “யாரை பார்த்து பணத்தை வச்சி பழகற கூட்டம்னு முடிவு செய்த? முதல்வர் ஒன்னும் எங்க அப்பாவுக்கு இப்ப கிடைச்ச பிரெண்ட் இல்லை. எப்பயிருந்தோ நண்பர்.

எங்கண்ணா காதலிக்கலை. அவர் பிரெண்ட்லியா தான் பழகினார். நீயா இஷ்டத்துக்கு பேசாத.” என்று கத்தினாள்.

இரண்டடி பின்னுக்கு வந்து தள்ளாடி நிலையாக நின்றான் விதார்த்.

டேய் பங்காளி” என்று சரவணவேலன் அங்கு தான் கைப்பிடித்து நின்றான்.

“ஒன்னும் ஆகலைடா.” என்று நண்பனிடம் தெரிவித்து துளிரிடம் வந்தான் விதார்த்.

“ஓகே கொழுந்து. தப்பு தான். ஆனா நீ என்னை விரும்பற தானே?” என்றான்.

"ஆமா.. விரும்பினேன். ஆனா நீ பண்ணற டார்ச்சர்ல காதலிச்சிருக்கவே கூடாதுன்னு தோணவைக்கிற. இனிமேலும் காதல் வருமா. உன் காதலும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்" என்றதும் விதார்த் சந்தோஷம் கொண்டான்.  

சரவணவேலனோ “துளிரு டாப் கியர்ல பேசுது. ஆனா டோன் சரியில்லையே” என்று நினைக்கும் நேரம், “உன்னை கண்டாலே எரிச்சலாகுது” என்று வகுப்பறை சென்றிருந்தாள்.

“சரவணா கேட்டியா? உன் மாமன் மகள் விரும்பறதை. டேய் அவ விரும்பிட்டா. அவ வாயால சொல்லிட்டா.” என்று குதுகலித்தான்.

“போதும் டா. என்ற மாமன் பொண்ணு கோபமா போகுது.” என்று சுட்டி காட்டினான்.‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

28 thoughts on “என் நேச அதிபதியே -44”

 1. Avatar

  Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩😍🥰🥰🤩

  1. Avatar

   கதை ரொம்ப சூப்பரா போகுது மா சர்வேஷ் தன்னை பற்றி சொன்ன விதம் ரொம்ப நன்றாக இருந்தது விதார்த் துளிர் சண்டையென்று தான் தீரும் ஆர்யன் சிற்பிகா நிபுணன் ஆதிராவின் மாதிரிகள் ரொம்ப நல்லா இருந்தது மா வாழ்த்துகள்

 2. Avatar

  Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 sarvesh nallavelaiya unmaiya sollitan🙏 kandipa endha family ku suthi dhan podanum enga kannum patruchu pa🤧

 3. Avatar

  Sarvesh பெத்தவங்க மனசுல நிம்மதி கொடுத்து பெருமை பட வச்சிட்டியே 👌👌👌
  Kolunthu பாவம் kolambi கிடக்கு.
  ராணி ஆச்சி சூப்பர்
  சிற்பம் திரு நிறையகத்துக்கு என்ற மகாலட்சுமி
  Veru interesting.
  Next UD soon. Waiting sis.

 4. Avatar

  Super sarvesh. Good. Ariyan romance super. Nibu you are always good father too. Thulir. Take good decision. Fantastic narration sis.

 5. Avatar

  எந்த சிக்கலும் இல்லாமல் சர்வேஷ் இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வரனும்.

 6. CRVS2797

  அய்யய்யோ..! இப்படி ஆளாளுக்கு வேறவேற ரூட்ல போனா.. எங்கே கொண்டு போய் நிப்பாட்டப் போகுதோன்னு திகிலா இருக்குது.

 7. Avatar

  சர்வேஷ் எல்லா உண்மைகளையும் குடும்பத்திடம் கூறி விட்டான்…. எந்த வில்லங்கம் இல்லாமல் அவன் இதில் இருந்து தப்பிக்க வேண்டும்…. இந்த துளிர் வேறு இப்படி பேசிவிட்டு போகிறாள்…. இனி என்ன ஆகுமோ

 8. Kalidevi

  Super epi. Athu eppadi namma sarvesh nibu paiyanache soda poguma avan ethukaga pananu sollitan. Thulir vaila irunthu unmaiya vara vachitan next thulir ah inum ena pana porano intha vitharth

 9. Avatar

  Sarvesh oda ennam Nibu kum athira kum nimathi ah kuduthuduchi aana thulir ku athu innum kozhapa tha than athigam ah kuduthu iruku adei vidhu ne appuram santhosham.padu anga kozhundhu kobam ah pora

 10. Avatar

  சர்வேஷ் சூப்பர். ..விதார்த் ரொம்ப ஓவரா போற அவ வெறுத்து ஓதுக்கிற போக போறா

 11. Avatar

  Enga oru nimisham nipu manasa odachuttanonu yosicikka vacha sarva , nalla vayla ellam nallathukkunu pani atha appa Ammatium solitta 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 manasula uilla paramaye koranju poiruchu 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
  Intha thulir oru panjayatha vachu mudichu vidunga ma 😮‍💨😤

 12. Avatar

  Wow story semmaya poitirukku sis👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍💞💗💗💕💕💓💖❤️♥️♥️♥️❤️💖💓💕💗💞 Thulir nenacha konjam kashtama dhan irukku adhuvum Aryan apram Adhira & Nibunan nenacha ipove thala suthudhu🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *