Skip to content
Home » என் நேச அதிபதியே -49

என் நேச அதிபதியே -49

அத்தியாயம்-49

     “என்ன பேச்சு?” என்று நிபுணன் கேட்க, ”விதார்த் வந்த விஷயத்தை முதல்ல பேசுவோம்” என்று அடக்கினார்.

   “ஒன்னுமில்லை நிபுணா. எங்க வீட்ல அப்பா அம்மா இரண்டு பேரும் விதார்த் மேரேஜ் நடத்தணும்னு ரொம்ப ஆர்வமா இருக்காங்க. இவன் என் அம்மா அப்பாவிடம் காதலிப்பதா ஏற்கனவே சொல்லி வச்சியிருப்பான் போல. துளிர் என்ற பெயரை தவிர, யாரோ ஒரு பொண்ணை விரும்பறதா மட்டும் அப்பாவுக்கு தெரிந்ததால், என் தம்பி ஆத்விக்கோட பையனுக்கு மட்டும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சார்.

   அப்பாவோட பிரெண்ட் கார்த்திக் அங்கிள்-ரதி ஆன்ட்டியோட பேத்தி மதுரா சென்னையில் இருக்காங்க. விதார்த் திருமணம் முடிஞ்சா அடுத்து தம்பி பையனுக்கு கல்யாணம் செய்ய ஆர்வமாயிருக்காங்க.

   என்ன ஆர்கலி தங்கை ஆருத்ராவோட பொண்ணு ஆதினிக்கு முடிச்சுப் பிறகு கல்யாணம் பண்ணணும்னு நான் விருப்பப்பட்டேன். பட் என் பையன் உங்க வீட்டு சுவரை தாண்டி எப்ப இங்க வந்தானோ இனி திருமணத்தை தள்ளிப்போட வேண்டாம்னு மனசுக்கு பட்டுச்சு.” என்று வித்யுத் பேசிமுடிக்க, ஆர்யனோ “அங்கிள் உங்களுக்கு அந்த கவலையிருந்தா அந்த மேரேஜ் முடிந்தப்பின்னே இந்த கல்யாண விவகாரம் பேசலாம். பிகாஸ் தங்கையிருக்க நானே மேரேஜ் பண்ண மாட்டேன்னு ஐயாவிடம் மறுத்தேன். அவர் தான் எனக்கும் துளிருக்கும் வயசு இடைவெளி சொல்லி நீ சிற்பிகாவை கல்யாணம் பண்ணுனு மாட்டிவிட்டார்.
துளிருக்கு வயசு இருக்குன்னு சொன்னாங்க.

    உங்களுக்கு விதார்த் வந்ததால கஷ்டம்னா தட்டு மட்டும் மாத்துவோம். அவர் எப்ப வேண்டுமென்றாலும் வாசல் வழில வரட்டும். எங்க ஐயா வாக்கு தவற மாட்டார்.” என்றுரைத்தான்.

   “சேச்சே நிபு வாக்கு தவற மாட்டான் எனக்கும்‌ தெரியும். ஆதினிக்கு உடனடியா மாப்பிள்ளை அமையாதே. ஆதினி அப்பா சரணும் முடிவெடுக்கணும். ஏற்கனவே பெரிய பையன் அருணுக்கு ஐந்து வருஷம் முன்ன கல்யாண மாயிடுச்சு. இரண்டாவது பொண்ணு அஞ்சலிக்கு இரண்டு வருஷம் முன்ன இங்க ஊட்டில கட்டி கொடுத்திருக்கான்.
இரண்டு மேரேஜ் முடிச்சிருக்கான். ஆதினி கடைக்குட்டி அதனால விமர்சனையா எதிர்பார்ப்பான்‌.‌” என்று சர்வேஷை பார்த்தபடி கூறவும், நிபுணன் சர்வேஷை ஏறிட்டார்.

   வித்யுத் பேசவரும் முறை புரிய, நாகரிகமாய் தவிர்த்து “துளிர் காலேஜ்லயிருந்து வந்து உடை கூட மாத்தலை. சம்பிரதாயத்துக்கு மாத்தட்டுமா?” என்றதும் வேண்டாம் என்று வித்யுத் கூற, “முதல்ல மாத்த சொல்லுங்க அங்கிள்” என்று விதார்த் கடுகடுக்க, வித்யுத் மைந்தனை பார்த்து ‘என்னடா சத்தம் அதிகமாயிருக்கு?’ என்ற பார்வையிட, அவனோ நழுவி சரவணனிடம் “சரவணா நான் வாங்கி கொடுத்த லெகங்கா போட சொல்லுடா” என்று உதட்டு அசைவில் பக்கம் இழுத்து கூற, சரவணவேலனோ சிற்பிகாவிடம் “சிற்பிகா அக்கா அவன் வாங்கி கொடுத்த டிரஸை போட்டுட்டு வரச்சொல்லறான். துளிரிடம் சொல்லுங்க” என்று காதை கடிக்க, சிற்பிகாவோ இதுவேற இருக்கா என்று தலையாட்டி துளிரை அழைத்து சென்றாள்.

   துளிரோ “இப்ப எதுக்கு அண்ணி டிரஸ் மாத்தணும். உங்களை எல்லாம் நாங்க பொண்ணு பார்க்கவே வரலை. அப்பா அம்மா சொன்னாங்க. அண்ணன் தலையாட்டிடுச்சு. கல்யாணம் வச்சோம்ல. இவங்க சைட்ல தான் வந்தவங்க என்னை பார்த்தாச்சே. எப்படியும் என்னை கட்டிக்க அவனும் சம்மதம் வாங்கிட்டான். இப்ப என்ன டிரஸ் போட்டா அவனுக்கு என்ன?” என்று கேட்டாள்.

   ”என்னை பொண்ணு பார்க்க வரலைனா அதுக்கு காரணம் எங்க வீட்டு சூழல். பாட்டி இறந்து முப்பது கழிக்கவும் திருமணத்தை நடத்திட்டாங்க. உனக்கு அப்படியா? பாரு இப்பவே மாமனார், மாமியார், சின்ன மாமியார் நாத்தனார், உன் ஆளுனு ஐந்து பேர், போதாத குறைக்கு ராயலோட ஜோடி ரோஸ்லின் வந்துயிருக்கு” என்று சுட்டிக்காட்ட, “பச் என்னவோ ஆர்வமே வரலை அண்ணி. அப்பாவை அண்ணாவை விட்டுட்டு போறதா நினைச்சாலே அழுகை அழுகையா வருது” என்றவள் விதார்த் வாங்கிய உடையை எடுத்து மடியில் வைத்தாள்.

   ‘முதல்ல டிரஸை மாத்து” என்று அதற்குண்டான கலரில் வளையல் நகையென சிற்பிகா தன் அத்தை ஆதிராவிடம் கேட்டு எடுத்துவரவும் உடை மாற்றினாள்.

“ஆமா நீயேன் அவரை முறைச்சிட்டே சுத்தற” என்று சிற்பிகா கேட்க, “தெரியலை அண்ணி. முதல்ல யாருன்னு தெரியாதப்ப ஆசைப்பட்டேன். ஜட்ஜ் பையன் என்று தெரிந்ததும், ஜட்ஜ் அங்கிள் முன்ன பேசியதில் அவரை பிடிக்கலை. இதுல இவன் வேற ஆர்யன் அண்ணா உங்களை அடிச்ச கதையெல்லாம் சொல்லவும், நம்ம வீட்டு நிலவரத்தை இவன் தெரிந்து வச்சியிருக்கான் என்ற கோபம். இதுல ஆர்யன் அண்ணாவை ஏதாவது சொல்லிடுவானோனு விதார்த் வந்தாலே கோபம் வருது. விதார்த் பேசற ஆளு தான். என்னைக்காவது உங்கண்ணா அவசரத்துல பொட்டப்பிள்ளையை அடிச்சார். உங்கப்பா சிறைச்சாலைக்கு போனவர்னு பேசிட்டா விதார்த் மேல வச்சகயிருக்கற காதல் மொத்தமா போயிடும்.” என்று கூறி தேம்பவும், கண்ணீரை துடைத்துவிட்டாள் சிற்பிகா.

“நானும் உங்கண்ணாவும் எலியும் பூனையுமா திரிந்தவங்க. உங்கண்ணா வடக்கு நான் தெற்கு பக்கம் ஓடினவ. நாங்களே அன்னியோன்யமா மாறிட்டோம்.

நீயும் விதார்த் காதலிச்சவங்க மா. விதார்த் அப்படி பேசமாட்டார்.
வித்யுத் அங்கிள் நேத்து ராயல் பக்கத்துல விதார்த் இருந்தாலும் இன்னிக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கார்னா ஒரே காரணம். நம்ம நிபுணன் அப்பா குணத்துக்காக.

யாரும் யாரையும் ஏசிடமாட்டாங்க. மனசுல கண்டதும் யோசிக்காத. தைரியமா வந்து வணக்கம் வச்சி சந்தோஷமா சிரி" என்று தெம்பூட்டினாள்‌.

லேசான தெம்பு பெற்றவளாக துளிர் ஹாலில் மற்றவர் பார்வைக்கு முன்னே வர, “அண்ணா.. இதே டிரஸ் இதே கலர்ல எனக்கு வாங்கி கொடுத்த தானே?” என்று ஆதினி கேட்க, அசடு வழிந்தவனாய் “ஒன் பிளஸ் ஒன் ஆஃபர்டா ஆது” என்று தங்கையிடம் சமாளிக்க, ‘ஏதே ஆஃபர்ல வாங்கியதா’ என்று முட்டை கண்ணை உருட்டினாள் துளிர்.

‌ விதார்த்தோ தான் வாங்கி கொடுத்ததை அணிந்து இருக்க, அவளை அனுஅனுவாய் ரசிக்க ஆரம்பித்தான்.

‌‌ “நிச்சயம் எப்ப வைக்கலாம் நிபுணா” என்றதும், “மனைவியிடமும் வீட்ல பெரியவங்களிடமும் கலந்து பேசி சொல்லறேன் வித்யுத். நீ வர்றேன்னு சொல்லவும் மறுக்க தோணாமல் வரச்சொல்லிட்டேன்.

மாப்பிள்ளை விதார்த் என்று முடிவாயிடுச்சு. அட்லீஸ்ட் நிச்சயம் கல்யாண தேதியாவது வீட்ல பேசறேன். அதுக்கு பிறகு சொல்லட்டுமா?" என்று கூறவும், வித்யுத்தும் "ஓகே டா. நானும் அப்பாவிடம் சிலதை கலந்து பேசணும்." என்றவர் சர்வேஷை காண தவிர்த்து ஆதினியை பார்த்து வைத்தார். 

 ஆர்கலியோ "டேய் விதார்த் பேசறதா இருந்தா பேசிட்டு வா" என்று பூவை எடுத்து துளிருக்கு சூடி இனிப்பை விதார்த் கையால் ஊட்ட கூறினார்கள். 

திருநெல்வேலி அல்வா துளிரின் தொண்டை குழியில் வழுக்கி செல்ல, விதார்த்தோ திக்குமுக்காடி நின்றான்.

 பேண்ட் பேக்கெட்டில் இருந்து ரூபி மோதிரம் எடுக்க, "எல்லாம் தயாரா தான் வந்தியாடா" என்று தந்தை வித்யுத் கேட்க "ஏதாவது கிப்ட் கொடுத்தா வாங்க மாட்டா அப்பா. டிரஸே அதுக்கு தான் கொரியர் அனுப்பியது. 

இரண்டு நிமிஷத்துக்கு நிற்கவும் மாட்டா. அப்படியே நின்றா என்னை திட்டறதுக்கு நிற்பா. அதனால நேத்து சொன்னதும் சரவணனை கூட்டிட்டு நகை வாங்க போனேன்." என்று விளக்கமளித்தான். 

சர்வேஷை தங்கையை அதிகம் திட்டிவிட்டோமோ என்று ஏறிட, துளிரோ கையை இழுத்துக் கொண்டாள்.

“பேசறதா இருந்தா பேசிட்டு வாங்க” என்று ஆர்யன் கூறவும் ‘தெய்வமே’ என்பது போல பார்த்தான்.‌

“துளிர் வீட்டை சுத்திக் காட்டி பேசு” என்று அண்ணன் கூற தலையாட்டினாள்.

முத்துவேலன் நிபுணன் வித்யுத் மூவரும் ஹாலில் இருந்து பேச, சாரு ஆதிரா, ஆர்கலி ஆருத்ரா வீட்டை சுற்றி பார்த்தபடி பேசினார்கள். ராணி ஆச்சி தான் வீட்டின் வரலாற்றை புட்டு புட்டு வைத்தார்கள்.

ஆதினியோ “சரவணன் அண்ணா என் டேட்டா முடிஞ்சிடுச்சு. உங்க ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணுங்க. தாத்தா ஆச்சிக்கு போட்டோ செண்ட் பண்ணுறேன்.” என்றுரைத்தாள்.

“இஷ்டத்துக்கு புது படமா டவுண்லோட் செய்தா டேட்டா காலியாக தான் செய்யும்” என்று திட்டியபடி ஹாட் ஸ்பாட் ஆன் செய்ய, “Thiruniraiyagam போடுங்க வீட்டு ஓய்ப்பை பாஸ்வோர்ட்” என்று சர்வேஷ் உரைக்க, ஆதினி சர்வேஷை கண்டு சரவணனை ஏறிட்டாள்.

“அட பயப்படாம யூஸ் பண்ணு.” என்று சரவணன் கூற மடமடவென போட்டோவை தன் சின்ன அண்ணன்(ஆத்விக் பையன் பெயரு என்னவோ வச்சேன். மறந்துட்டேன். சொல்லுங்கப்பா நோட் பண்ணிக்கறேன். இப்படியொரு ரைட்டரு🫣🏃‍♀️ இருக்கேனே) , அருண் அண்ணா, அஞ்சலி அக்கா என்று அனுப்பினாள்.

அதன் பின் புலனத்தில் பிஸியாக இருக்க, தலை நிமிரவில்லை. போனில் நுழைந்து கொண்டாள்.

வித்யுத்திற்கோ ‘நேரங்காலம் இல்லாம போன்ல மூழ்கிட்டா. இவளை சர்வேஷுக்கு கேட்டா, நிபுணன் எப்படி எடுத்துப்பானோ? வர்றப்ப விதார்த்திடம் லைட்டா ஆதினியிடம் சொல்லி கூட்டிட்டு வந்திருக்கணுமோ?’ என்று எண்ணினார் வித்யுத்.

துளிரின் லெகங்கா முந்தானையை பின் தொடர்ந்தவனாக, விதார்த் வந்தான்.

“ஏன் இப்படி நீங்க வாங்கி தந்த டிரஸ்னு ஏலம் போட்டிங்க?” என்று துளிர் கடுகடுக்க,

“ஏய் நான் தான் காலையில பொண்ணு பார்க்க வர்றதா சொன்னேன்ல. அப்பறம் அதே சுடிதார்ல இருந்தா என்ன அர்த்தம்?

நான் ஒன்னும் ஏலம் போடலை. ஆதினிக்கும் இதே மாடல் கலர் வேற வாங்கினேன் சபையில மாட்டிகிட்டேன்.” என்றான்.

“ஓ… ஒன் பிளஸ் ஒன் ஆஃபர்ல வாங்கி, இதுல உங்க தங்கச்சி சொன்னாளா? பச்சை பொய் சரவணன் மச்சான் காதுல நீங்க வாங்கியதை போட்டு அழைச்சிட்டு வர சொன்னிங்க. எனக்கு நல்லா காது கேட்கும்‌” என்று பொரிந்தாள்.

“இப்ப என்ன பிரச்சனை? உங்கப்பாரு உங்கண்ணா ஆர்யன் சர்வேஷ் அம்மா அண்ணி எல்லாம் சம்மதிச்சு சம்பந்தம் பேசியாச்சுல, இப்படி வெடுக்குன்னு பேசினா என்ன அர்த்தம்?” என்று இயல்பாய் வெற்றிடையில் கைவைக்க, “இங்க பாருங்க பேசிட்டே இப்படி பண்ணாதிங்க” என்று நழுவ, விதார்த் அவளை சுவரோரம் நிறுத்தி, “உனக்கு எப்படியோ எனக்கு த்ரி இயர்ஸ் லவ். இப்ப திருமணத்துல கொண்டு வந்திருக்கேன். நேத்தே தாலி கொடுந்திருந்தா கூட கட்டியிருப்பேன்‌. நீயா விரும்பறன்னு சொன்னது அதுவும் உங்கண்ணா முன்ன சொன்னது, எனக்காக அழுதது, அதான் அவசரமா உன்னை என் நெஞ்சுல சுமக்க ஆசைப்பட்டு கல்யாணம் பேச வந்தாச்சு.” என்று பேச,‌ துளிரோ கோபங்கள் குறைந்து, விதார்த் நேசம் உணர்ந்தவளாய் புன்னகைத்தாள்.

-தொடரும்‌.

29 thoughts on “என் நேச அதிபதியே -49”

 1. Avatar

  ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது இன்றைய பகுதி எல்லா சுவையும் கலந்து இருந்தது நம்ம சர்வேஷ்க்கும் ஜோடி கிடைச்சிடுச்சி சூப்பரா போகுது மா வாழ்த்துகள்

 2. Priyarajan

  😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😘😘😘😘😘

 3. Avatar

  💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🧡💛💛💛💛💛💛💛💓💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

 4. Avatar

  மிக அருமையாக உள்ளது.
  ஒருவழியாக துளிர் ப்ராப்ளம் ஓவர் ஜோடி சேர்ந்தது. அதுவும் வீட்டில் அனைவரின் சம்மதத்துடன்.
  அண்ணாவுக்கும் அப்பாவுக்கும் ஆக துளிர் எவ்ளோ யோசிக்கறால் …
  Sarvesh jodi வந்திருச்சு அவன் எப்படி அரவிந்த் தமிழ் கிட்டே இருந்து தப்பி வருவது…..
  Sema interesting…
  Next UD சிக்கிரம் குடுங்க

 5. Kalidevi

  Superb epi today love ❤ tha eni rendu perkum paar da ithula sarvesh Kum jodi kondu vanthutinga polaye apo tamil poiduvala avaluku pesi sammantham pani irukingle papom athuku oru mudivu irukum

 6. Avatar

  Super sis nice epi 👌👍😍 semmaiya pogudhu story mudiya pogudhu nu nenacha dhan konjam kashtama eruku pa🤧

 7. Avatar

  Ipavathu manasu vittu paysikitta sari thaan 🥰🤗
  Enna thaan love pani kalyanam pandravara irrunthalum enga avanga oru varathai than Annan appava pathi yathum paysitta ngara bayam irrukuilla athu ….oru payriya mana baram athu epo thayriuma poogum enaikkum avar apti paysamatrarunu nambikkai aprom avera athigama love pani innum niriya purinjukka poothum thaan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 8. Avatar

  விதார்த் – துளிர் ஜோடியின் பெண் பார்க்கும் படலம் இனிதே சிறப்பாக நடைபெற்றது சூப்பர் அக்கா….💐💐💐💐💐…. விதார்த் – துளிர் சமாதானம் ஆகி விட்டார்கள்…. இனி என்ன ஆகுமோ

 9. Avatar

  துளிர் எதுக்காக விதார்த்த கிட்ட வெடுக்கு வெடுக்குன்னு பேசுறா. விடுங்க ரைட்டர் மேடம் ஞாபக மறதி இந்தியாவோட தேசிய நோய்.

 10. Avatar

  💖💞💞💞♥️❤️❤️💕💓💗💗💗💗💓💕💕❤️♥️♥️💞💖💖💞💞♥️❤️💕💕💓💗💗💗💓💓💕❤️❤️♥️💞💞💖

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *