Skip to content
Home » என் நேச அதிபதியே-14

என் நேச அதிபதியே-14

அத்தியாயம்-14

    பருத்தி மில்லில் வந்ததிலிருந்து சிற்பிகாவை பார்த்து நிபுணனுக்கே ஒரு கலக்கம் பிறந்தது. பாட்டி இறந்ததை கூட தேற்றிக்கொண்டு முகத்தில் கவலை ரேகை பதியவிடாமல், வேலைக்குள் தன்னை ஈடுபடுத்தி கொண்ட மங்கையை ஆச்சரியமாக பார்த்தார்.

   அதோடு திருமண பேச்சை எடுத்தால் இந்த முகம் நிச்சயம் பல உணர்வுக்கு ஆட்பட்டு மனவுளலச்சலில் சிக்கி தவிக்கலாம்.

   எப்படி தான் கேட்டு என்ன முடிவு கடவுள் எடுத்திட வைப்பாரோயென எண்ணம்.

    ஆதிராவுக்காக கேட்க வேண்டிய அவசியமாயிற்றே.  மைந்தனிடம் திருமண விஷயம் வேறு பேசிவிட்டாயிற்று.

  தேவையின்றி ஒவ்வொரு மனதிலும் ஒரு எண்ணம் தறிக்கெட்டு திரியும். எதற்கு அந்த குடைச்சல், அதற்கு இந்த பெண்ணிடம் கேட்டு விட்டால் பதில் அறிந்தால் போதுமென்று தோன்ற, “சிற்பிகா கொஞ்சம் இங்க வாம்மா” என்று கூப்பிட்டுவிட்டார் நிபுணன்.

   “இரண்டு நிமிஷமுங்க ஐயா.” என்று கணினியில் பருத்தி ஏற்றுமதி குறித்து வந்தடைந்துவிட்டதாக குறுஞ்செய்திக்கு பதில் கேட்டு ரிப்ளே வரவும் நன்றியுரை அளித்து முடித்து வந்தாள்.

  “என்னங்கயா?” என்று நிபுணனிடம் கேட்டதும் உட்காரும்மா” என்றதும் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

     சிற்பிகாவை பார்த்து “பாட்டி இறந்ததுக்கு உங்க அப்பா வந்தாராம்மா? நான் ஆர்யன் செய்த கோளறுபடில கவனிக்கலை. அப்பாவிடம் பேசணும். அதான் கேட்டேன்” என்று பேசவும் சிற்பிகா நிபுணனை கண்டு தயங்கி கையை பிசைந்தாள்.

  “மன்னிச்சிடுங்க ஐயா. நான் அவருக்கு பாட்டி இறந்ததை சொல்லலை.” என்றாள்.

  நிபுணனோ சாய்விருக்கையில் இருந்து முன்னே வந்து “என்னம்மா சொல்லற?” என்று அதிர்ந்தார். நிஜமாகவே மற்ற ஏற்பாடு செய்ததாலும், ஆர்யன் சிற்பிகா வெவ்வேறு விதத்தில் வீம்பாய் நின்ற விதமும் சிற்பிகா தந்தை வந்தாரா இல்லையா என்றதை அறிந்திடவில்லை.

    “ஏம்மா சொல்லலை?” என்று கேட்டதும் சிற்பிகாவோ “அங்கங்க பெத்த அம்மா அப்பா இறந்தாலே இப்பெல்லாம் பணத்தை மட்டும் கொடுத்து அனாதை பிணமா எரிச்சிடறாங்க. அப்படியிருக்க என் ஆச்சி என் அப்பாவோட அம்மை இல்லையே. எப்படி ஐயா அப்பா வருவாரு. அதான் நான் எதுவும் சொல்லலை.” என்று முடித்து கொண்டாள்.

   ஆம் சிற்பிகா கூடயிருந்தது அவளது தந்தை வழி பாட்டியில்லை. ஆச்சி என்றதால் தாய் வழி பாட்டியுமில்லை. அவர் சிற்பிகாவுக்கு ஆச்சி அவ்வளவே. ஆச்சியாக கூடவைத்து பார்த்துக்கொண்டதற்கு காரணம் சிற்பிகா தான் கூறவேண்டும். ஏற்கனவே நிபுணனுக்கு அந்த காரணம் தெரியுமென்றதால் வேறெந்த விஷயமும் பாட்டியை பற்றி கேட்கவில்லை.

     “சரிம்மா ஆச்சி இறந்ததுக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆனா இத்தனை நாளா ஒரு கிழவி உன் கூடயிருந்ததுனு உங்க அப்பா உன்னை இங்கயே விட்டிருக்கலாம். இப்ப நீ தனிமரமா இருக்க பதபதப்பு வருமில்லையா? அதனால நீ தனியா இருப்பதை சொல்லணுமே. என்னயிருந்தாலும் உன்னை பெத்தவரு. நாளைப்பின்ன என் மக தனியாவா இருந்தனு எங்களை ஒரு வார்த்தை சொல்லிட்டா. உனக்கு நல்லது பொல்லதுன்னு அவர் தானே முன்ன இருக்கணும்” என்று அக்கறையாக சொன்னார் நிபுணன்.
  
  “பெத்துட்டா அப்பன் இல்லை ஐயா. நான் தனியா இருப்பது எல்லாம் அந்தாளுக்கு கவலையிருக்காது. என்னோட வாழ்க்கையை அந்தாளு எதுவும் முடிவு பண்ண முடியாது. என் நல்லது பொல்லதுக்கு அவர் முடிவு பண்ண நான் எந்த அதிகாரமும் கொடுக்க மாட்டேன்.

   என் வாழ்க்கையில் எனக்கு நல்லது பண்ணற சாமின்னா அது ஆதிரா அம்மாவும் நீங்களும் தான் ஐயா.” என்று கூறவும் லேசான தெம்பு வந்தது நிபுணனுக்கு.
  
   கோடு போட்டால் ரோடு போடும் குணமல்லவா நிபுணனுக்கு.  

   “சந்தோஷம்மா. என்னையும் என் வீட்டுக்காரியும் நீ உயர்ந்த இடத்துல வச்சதுக்கு. இந்த தைரியத்துல தான் எம் பொண்டாட்டி அந்த முடிவு எடுத்திருப்பா போல.

  ஆமாம்மா, ஆதிரா உன் வாழ்க்கையில முக்கியமான விஷயத்தை எடுத்திருக்கா. என்னதான் நீ எங்களை கோபுரத்துல வச்சி பார்த்தாலும், உன் வாழ்க்கையில சில விஷயம் நீயா தான் முடிவெடுக்கணும். அது தான் சரியும். அதனால ஆதிரா ஆசைப்பட்ட விஷயத்தை, உன்னிடம் கேட்கற பொறுப்பை, என்னிடம் தந்திருக்கா.” என்றதும் சிற்பிகா லேசான அதிர்ச்சியோடு, என்னது என்பது போல நிபுணன் ஐயாவையே பார்வையிட்டாள்.

  “உனக்கு ஒரு வரன் பார்த்திருக்கா” என்றதும், சிற்பிகா தடுமாறி கையை பிசைந்து இரண்டு நொடி பேச்சற்று சிந்தித்தாள்.

  நிபுணனும் தொடராது எதிரே இருக்கும் சிற்பிகாவின் முகவோட்டத்தை கவனித்தார்.

   பலவித உணர்வை பிரதிபலித்து முடிவில் “அம்மா முடிவெடுத்தா சரியா இருக்கும் ஐயா. யாரை என்றாலும் கட்டிக்கறேன்.” என்று கூறினாள். ஏனோ வார்த்தையில் ஒட்டுதல் இல்லை.

    “யாரை பார்த்திருக்கானு தெரிஞ்சுக்கறியா?” என்று கேட்டதும், “எப்படியும் அம்மா என்னை படிச்சவருக்கு பண்பானவருக்கு நல்லவருக்கு தான் கட்டி கொடுப்பாங்க. இதுல தெரிஞ்சுக்க என்னயிருக்கு ஐயா. அம்மாவை பத்தி எனக்கு தெரியாதா” என்றாள்.

   நிபுணன் சிரித்து “உண்மை தான் படிச்சவன், ஆனா பண்பானவன் நல்லவன்னு எங்களுக்கு தெரியும். உனக்கும் மனசுல தோணுமானு தெரியலை. ஏன்னா அவ பார்த்திருக்கறது எங்க பையன் ஆர்யனை” என்றதும் சிற்பிகா சிலையாகவே உறைந்தாள்.

   அவள் முகமே ஆதிரா அம்மா அவர்கள் பையனையே தனக்கு துணையாக தேர்ந்தெடுப்பார்கள் என்ற ஆச்சரியம் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது.

   நிபுணன் இருமுறை “சிற்பிகா சிற்பிகா” என்றதும் “ஆங் ஐயா” என்றாள்.

   இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலை அவளுக்கு.

   ஆதிராவே உன்னிடம் பேசி சம்மதம் வாங்கி கல்யாணத்தை நடத்த விரும்பினா. ஆனா அவ கேட்டு நீ மறுத்துட்டா என்ற பயம் ஆர்யனை பெத்தவளுக்கு இருக்கு.

   ஏன்னா அவளுக்கு ஆர்யன் என்றால் உயிரு. தன் பையன் ஒர் பொண்ணிடம் நல்ல பெயர் வாங்காம ரிஜெக்ட் ஆகிடுவானோனு  நினைப்பு. இதுல நீ வேற நன்றி கடன் என்று எடுத்துப்பியோனு வேதனை.

   அதனால என் மனைவிக்கு கஷ்டம் தராம நானா கேட்டு சொல்லறதா உன்னிடம் வந்துட்டேன்.

  உடனே சொல்ல வேண்டாம்மா. நேரம் எடுத்துக்கோ. நன்றி கடன் அதுயிதுனு தலையாட்டாத. அது வேற இதுவேற.
 
    என் பையனிடமும் இதை தான் சொன்னேன்.” என்றதும் சிற்பிகா தலைநிமிர்ந்து அவர் என்ன சொன்னார் என்பது போல பார்க்க, “போன தடவை மன்னிப்பு கேட்காம அம்மாவை அழவச்சவரு. இந்த முறை என் வாழ்க்கையை நீங்களே முடிவெடுங்கம்மா. யாருக்கானாலும் மனதார தாலி கட்டறேன்னு வாக்கு தந்துயிருக்கார்.

   அதனால ஆர்யன் சம்மதிச்சிட்டார். நீ ஆர்யனை கட்டிக்க சம்மதிச்சா சொல்லும்மா. இரண்டு நாள் நேரம்  எடுத்துக்கோ.” என்று கூற சிற்பிகாவுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை.

   “அவ்ளோ தான்ம்மா உன் வேலையை பாரு. எந்த டென்ஷனும் வேண்டாம். பதட்டம் தேவையேயில்லை. கல்யாணம் பண்ணலாம் வேண்டாமானு மட்டும் முடிவெடுத்து என்னிடமோ ஆதிராவிடமோ சொல்லு.

சம்மதம்னா அடுத்து உங்க பாட்டிக்கு முப்பது கழிச்சு அதக்கு அடுத்த மாசம் முகூர்த்தம் பார்க்கலாம். இல்லைனா ஆதிராவை தேற்றிட வசதியா இருக்கும்” என்று கூறவும் சிற்பிகாவுக்கு லேசான கவலையுண்டானது.
  
   ஆதிரா அம்மாவை தேற்ற வேண்டுமென்றால் அவர்களுக்கு என் மறுப்பு இதயத்தை காயப்படுத்தும் என்னு அர்த்தமா? என்று எழுந்தாள்.

   “இரண்டு நாள்ல சொல்லிடறேன் ஐயா.” என்று அவளது இடத்திற்கு வந்தாள்.

    ஆர்யனை மருத்துவம் படித்தவன், நல்லவன் பண்பானவன். ஆனால் தன்னை அடித்து தன்னை அசிங்கமாக பேசியவன்.
 
   அன்றைய நாட்களை நினைத்து பார்க்க பிடிக்காமல் கணினியை மூடினாள்.

   பருத்தி மில்லில் மேற்பார்வையிட நடந்தாள்.

  நிபுணனோ போச்சு பொண்ணு மனசை குழப்பிட்டேன். இனி அது சங்கடம் களைந்து எப்ப சரியாகுமோ?
   
   பாட்டி செத்தப்ப கூட நிம்மதியா நடமாடின பொண்ணு. நம்ம பையனை பத்தி பேசியதும் பேயறைந்தது போல மாறிட்டா.

  நல்ல வேளை எம் பொண்டாட்டி ஆதிராவுக்கு இரண்டு மாதம் தவணை தந்தேன். சிற்பிகாவுக்கு இரண்டு நாள் தான். புத்திசாலி பிள்ளைனா கல்யாணத்தை நடத்திடும்.

    இப்படி தான் ஆதிராவும் என்னை கட்டிக்க அப்படி யோசித்திருப்பாளோ?!
   என்னடா இது எம் பரம்பரைக்கு வந்த சோதனை. வீட்டுக்கு குத்துவிளக்கு ஏத்த வர்ற மருமகளுங்க எல்லாம் ஒன்னு போல கல்யாணத்துக்கு சட்டுனு தலையாட்ட மாட்டேங்குதுங்க. இத்தனைக்கும் அழகு படிப்பு வசதி நல்ல பெயரு, பதவி அம்புட்டு இருந்தும் என்ன பிரோஜனம்.

   என்னயிருந்தாலும்  தன்மானத்தோட நிதானமா ஆராய்ந்து வர்றதும் தனி அழகு தான். என் ஆதிரா மாதிரி இந்த சிற்பிகா என் பையன் ஆர்யனுக்கு சரியா வருவா. இருதுருவமும் முட்டலும் மோதலுமா ஆரம்பிச்சு எப்படியாவது வாழ்வாங்க. ஆர்யன் லைப் என் லைப்பை விட சுவாரசியமா இருக்குமா?’ என்று பலவித எண்ணத்தோடு ஆதிராவிடம் ஆர்யன்-சிற்பிகா திருமணத்தை பற்றி பேசி இரண்டு நாட்கள் தவணை கொடுத்ததாக கூறிட ஆதிராவோ சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் பாடம் எடுத்திடும் ஆசிரியராக ‘நல்லதுங்க இரண்டு நாள் ஆகட்டும்’ என்று சுருங்க பேசி கத்தரித்தார்.

   சீர்திருத்த பள்ளியில் பாடம் எடுக்கைம் போது பெரும்பாலும் போன் அணைக்கப்பட்டு தான் வருவாள். இன்று மைந்தனின் வாழ்வு மலர முக்கிய விஷயமாக சிற்பிகாவோடு பேசிவிட்டு கணவர் நிபுணன் அழைப்பாரென்று காத்திருந்தார் ஆதிரா.

  பேசிமுடித்ததும் கணக்கு பாடம் எடுத்ததை அழிக்க ஆரம்பித்தார்.

   அல்ஜிப்ரா போட்டு பாடம் எடுத்ததை அழிக்கவும் சில பழைய நினைவு ஆதிராவையும் வாட்ட, “ஸ்டூடண்ட் நீங்க மேத்ஸ்ல இருக்கற பார்முலாவை மட்டும் படிங்க. இன்னிக்கு அவ்ளோ தான்” என்று எழுந்துக் கொண்டார்.

  இங்கு தன் வாழ்வின் முக்கிய முடிவுகளை இருபெண்களிடம் கொடுத்துவிட்டு முகத்தில் மாஸ்கை அணிந்து விபத்து பிரிவில் ரத்தம் சொட்ட வந்த பேஷண்டிற்கு கடவுளாக அவதாரம் அளித்து உயிர் பிழைக்க வைத்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.

   ரத்தம் ஆறாகவும் சதை கிழிந்து பிணமாகவும் வந்தவனின் உயிரை எமனிடம் கொண்டு போக அவகாசம் தராமல் உயிர் மீட்டி ஆப்ரேஷன் முடித்து தனிவார்டிற்கு அனுப்பியப்பின்னே மூச்சுவிட்டான்.
 
  சிலபலநேரம் கழித்து மீண்டும் பேஷண்டை காண வாசலில் வரும் நேரம், தாலியை பிடித்து கொண்டு, “என் வாழ்க்கையை காப்பாத்தி கொடுத்திருக்கிங்க சாமி. நீங்க நல்லாயிருக்கணும். உங்களை கட்டிக்க போற பொண்ணு கொடுத்துவச்சப்புள்ளையா இருக்கும்” என்று வாழ்த்தினாள் அந்த மங்கை.

   அடிபட்டு வந்து சேர்த்த கணம் சின்ன பையன் பார்க்க செல்கின்றாரே. பெரிய டாக்டர் இல்லையா என்ற மனதாங்கல் இருந்தது. தற்போது திருமணமாக டாக்டர் தன் கணவன் உயிரை மீட்டெடுத்ததாக அறிந்து வரப்போகும் பெண் கொடுத்து வச்சபிள்ளை என்ற பாராட்டை ஆசிர்வாதமாக அளித்தார்.

  எப்பவும் உயிருக்கு போராடும் பேஷண்ட் நிலை சரிப்படுத்தினால் இப்படியான வாழ்த்தும் நன்றிகாட்டுதலும் காணாதவன் அல்ல. நீங்க தான் என் கடவுள் குலசாமி. கடவுள் மாதிரி மருத்துவ உதவி செய்திங்க” என்ற வாசடம் எல்லாம் அதிகம் கேட்டவனே. 
   இக்கணம் ஆர்யனுக்கு அந்த பெண்ணின் வாழ்த்து சிற்பிகாவை நினைவுப்படுத்தியது.

  ஸ்டெதஸ்கோப்பை கழட்டி மேஜையில் வைத்தவன், ‘இந்த கல்யாணத்தை எல்லாம் எவன் கண்டுபிடிச்சானோ’ என்று முனங்கினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
  

38 thoughts on “என் நேச அதிபதியே-14”

 1. Avatar

  Sorry aariyan kalyanathuku evan um pattern rights vangi vaikala athu na la evan kandupidichan nu theriyala aana onnu unkooda kalyanam nu sona udanae andha ponnu Sirpika pei arancha mathiri poru ah oru vela already pei kita vanguna arai marupadiyum vanganum nu yosichi irupalo

 2. Avatar

  Aiyo nibu chlm kuthuvilaku 1 rs vathikuchi vachi yethidalam ana idhu kalyanam yosichu tan mudivu panna mudiyum….unga pulla vazhkai ungala vida swarasiyama tan iruka pogudhu ipo Tom and Jerry maadhri irukuravanaga aprm parunga epadi irukanga nu…
  Unmaitan Arya indha kalyanam purushan idhellam yaaru tan kandupudichangalo therila ana life oru thrill venum na kalyanam lan panna tan varum ….

 3. Avatar

  கதை ரொம்ப சுவாரஸ்யமா போகுது சகி ஆர்யனின் கேள்வி எல்லோருக்கும் தோன்றது தான் சகி ஆனாலும் விடையறியா கேள்வி அது நிபுணன் ஆதிராவிடம் அவகாசம் கேட்டார் இப்போது மருமகளிடம் பாவம் நிபுணன் ஐயா ரொம்ப நல்லா இருக்குமா வாழ்த்துகள்

 4. Avatar

  Yaru enna nu thayriyama Amma sonna sari thanu mandaiya aattittu ipo polamba kudathu pa 🤪 athukku antha piliya nayrla pathu paysirukkalam la ne enna yathunu oru thaylivu kidaikkum 🤷
  Intha visiyam lam nipu thaan crt avanthan Chennai poi poi ninan aadhi Yoda nature enna Ava enna main set la sutharanu thayrinjukka …ne enna da na 🤦🤷

 5. CRVS2797

  அட.. இன்னும் ஒரு கல்யாணத்தையே பண்ணிக்கலை… அதுக்குள்ள சலிப்பை பார்றா….!

 6. Kalidevi

  Nibu ketutaru taknu sirka kitta ava vera ena yosikira therila but nalla mudiva sollu. Yosikurathu thappu illa iyya yosikatum ivanga life summa super ah iruka poguthu ipo ippadi yosikuravanga tha nalaiku avlo lovable ah irupanga

 7. Avatar

  சிற்பிகா கிட்ட திருமண செய்தியை நிபுணன் உடைத்து கூறிவிட்டான்…. இனி அவளின் முடிவு என்னவாக இருக்கும்….🤔🤔🤔🤔🤔

 8. Avatar

  சூப்பர். .. சிற்பிகா அருமை. .. ஆர்யன் சிற்பிகா ஜோடி டாம் & ஜெர்ரி மாதிரி இருக்கும் போலயே

 9. Avatar

  Wow super super super super super super semma semma semma semma semma semma semma semma semma 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 wow Pravee sis really superb unga karpanaila varra characters ellam amazing 😍😍😍😍😍😍😍 romba azhaga story write panrenga 💕💕💖💓❤️💞💗💗💗💞❤️💖💕💕💖❤️💞💗💗❤️💖💕

 10. Avatar

  Wow wow Pravee sis really superb unga karpanaila varra characters ellam amazing 😍😍😍😍😍😍😍 romba azhaga story write panrenga 💕💕💖💓❤️💞💗💗💗💞❤️💖💕💕💖❤️💞💗💗❤️💖💕

 11. Avatar

  Ayyo epdi irundha ponnu ipdiagiduchu…. But one thing nibu-aadhira ku mela ivangaloda atrocities irukum poliye😆😆😆😆mrg pechuke pei aranja mari suthurana… Apo mrg aana ena panuva… Aara andha mrg ah kandupidicha pisasa dha nanum theditruka… But mrg panniparu everyday thrill ah irukum…. Task ah design kuda panavena thana varum😅😅😅😅😅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *