Skip to content
Home » என் நேச அதிபதியே-51

என் நேச அதிபதியே-51

அத்தியாயம்-51

   சிற்பிகா வீட்டிற்கு வந்ததிலிருந்து குழப்பமாய் இருந்தாள்.

   நிபுணனோ மருமகளின் முகவாட்டம் கண்டு, “என்னாச்சு சிற்பிகா? இன்னிக்கு கை கால் எல்லாம் உதறுது, அரசியல்னா சும்மா இல்லடா ஒரு வீட்டை எப்படி நீ நிர்வாகம் பண்றியோ அதை விட கஷ்டம் ஒரு கிராமத்தை நிர்வாகம் பண்றது. ஆனா அது சரியானவங்க கையில் போனா திறமையா நிர்வாகம் செய்வாங்க.” என்றதும்  ஆதிரா மோர் குடிக்க எடுத்து வந்து புன்னகை பூத்திட பதிலுக்கு முத்தாப்பாக உதடு மலர்ந்தாள்.

   “வாழ்த்துகள் அண்ணி” என்று சர்வேஷ் கைகுலுக்க, “ஏய் சர்வேஷ் அண்ணா. அண்ணிக்கு நான் தான்‌ முதல் வாழ்த்து சொல்லனும்னு இருந்த நீங்க சொல்லிட்டீங்களா?”  என்று துளிர் துள்ளி குதித்தபடி வந்தாள்.‌

  சிற்பிகாவுக்கு தானாக சிறு சந்தோஷம் உதயமானது.
  இதுவரை சர்வேஷ் சிற்பிகாவிடம் அண்ணி என்று வாய் நிறைய அழைத்து, வாழ்த்து சொன்னதெல்லாம் இல்லை. எட்டி நின்றே பார்ப்பான் கமுக்கமாக திரும்பிக் கொண்டு சென்று விடுவான்.
இன்று கைகுலுக்கி மனம் நிறைய வாழ்த்து சொல்வதில் உற்சாகம் எடுக்காமல் இருக்குமா?

  தன் திருமண வாழ்வில் இப்படிப்பட்ட உறவுகள் எல்லாம் கிடைக்கவே கிடைக்காது என்று எண்ணியிருந்தாள்.‌
பெயருக்கு கணவன் என்று ஒருவன் இருப்பான், வாழ்க்கையில் இதுபோன்ற அன்பும், உறவுகள் தன்னை முன்னிறுத்தி பேசி மகிழ சந்தோஷம் வராமலா?!

  அதை மீறி ஞானவேல் பேசிய பேச்சு ஒரு வகையாக உறுத்தியது.

       கணவனுக்காக காத்திருந்திலும் இந்த அன்பில் மிதந்தாள்.

    ஆர்யன் வீட்டுக்கு வரும் பொழுதே, “சிற்பி உங்க சித்தி டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்க. உன்னிடம் உங்கப்பா சொல்ல சொன்னார். உன்கிட்ட போன்ல பேசவே தமக்கமாயிருக்காம்‌.” என்ற கூற, “மெதுவா கால் பண்ணறேன்ங்க” என்றாள்.

   ஆர்யன் இரண்டெட்டு படியில் ஏறும் கணம், நின்றவன் “கேட்க மறந்துட்டேன் நாமினேஷன் கொடுத்திட்டியா? எப்படி போச்சு?’ என்று கேட்க, நிபுணன் மருமகள் பக்கம் திரும்பாமல் அவளது பதிலை கேட்டிட இருந்தார்.

   “கொடுத்தாச்சிங்க. ஏதோ ஸ்கூல்ல டான்ஸ் தெரியாம பெயர் டான்ஸ் போட்டிக்கு பெயர் கொடுத்த மாதிரி இருக்கு” என்றுரைத்தாள்.

  ஆர்யனோ மயக்கும் புன்னகை வீசி “அதெல்லாம் நீ ஒரே நாள்ல டான்ஸ் பழகிடுவ” என்று மாடிக்கு தயதடவென வேகமாய் சென்றிருந்தான்.

   ராணி ஆச்சியோ கையில் சூடான சத்துமாவு கஞ்சியை நீராக குடிக்கும் பதத்தில் சிற்பிகாவிடம் நீட்டி “தம்பிக்கு கொடுத்துட்டு நிதானமா உன் அனுபவத்தையும் அப்பா சித்தி நலனை கேட்டுக்கோ” என்று அனுப்ப, வாங்கிக் கொண்டு நடந்தாள்.

  “ராணிக்கா இந்த வீட்ல நீங்க தான் மெயின் ரோல். நீங்க குழந்தைகளை வீட்டை கவனிக்கறதால தான் நான் இன்னமும் என் சர்வீஸை விடாம செய்ய முடியுது. அதோட குடும்பத்துல யும் நிம்மதியா இருக்காங்கன்னு திருப்தி வருது.” என்று ஆதிரா கூறவும், ராணியாச்சியோ “அட பொதுவா பசங்க சின்ன தப்பு செய்தாலே நமக்கு என்னம்மா கோபம் வரும். நம்ம அறிவுரை கேட்கவும் மாட்டிங்க. நீ எப்பேர்பட்ட ஜெயில் பசங்களுக்கும் அறிவுரை சொல்லி படிப்பு தந்து திருத்த பார்க்கற.

   ஒரு வீட்ல பொம்பளைங்க முன்னேற்றம் அடைந்து சாதிக்கறாங்கன்னா அதுக்கு அந்த வீட்டு ஆண்களும், வீட்டு ஆட்களும் முக்கியமா ஆதரவு தந்தா தானே.

     எங்க நிபுணன் உங்களுக்காக நீங்க போற பாதை சரியானது என்றதும் பாதை போட்டு தந்தார்.

  இப்ப எங்க நிபுணன் பிள்ளை ஆர்யன் மட்டும் சும்மாவா? எத்தனை நாளைக்கு பருத்தி மில்லோட வரவு செலவை கணினில ஏத்தறது. இன்னொரு பாதையில அரசியல் மேடையில் ஏத்தியிருக்கு. அந்த பிள்ளை நிறைய பட்டு வந்தது. கூடுதலா கத்துக்கணும். மாமியாரை விட மிஞ்சின மருமகளா பெயரெடாக்க வேண்டாம்‌” என்று புகழவும் ஆதிராவோ ராணியக்காவை கட்டிக்கொண்டார்‌.

   கீழே இவ்வாறான பேச்சு செல்ல, மெலே அறைக்கு வந்தவளிடம் ஆர்யனோ தன் கைவளைவில் நிறுத்தி, அவள் கொண்டு வந்த சத்து கஞ்சியை பருகி, “எப்படி போச்சு? பெயர் கொடுத்து வந்ததும், சரவெடி வெடிச்சு, ஆர்பாட்டமா, இருந்ததா?” என்று கேட்க சிற்பிகா பதில் அளிக்கவில்லை.

   அவள் முகம் வாட்டம் கொண்டு கண்ணாடியில் பிரதிபலிக்க, “நைஃப்(knife)” என்று திருப்ப, கண்கள் லேசாக கலங்கியிருந்தது.

   தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி அவனை காண வைக்க, “நான் அரசியல்ல நிற்கணுமா? என்னால‌ முடியும்னு தோணலை.
    இப்பவே நேம் நாமினேஷன் பண்ணறப்பவே அசிங்க அசிங்கமா பேசுறாங்க. என்னை ஒரு மாதிரி பார்க்கறாங்க.

    நிபுணன் அப்பா என் கூட வந்ததுக்கு உறவு முறையை கொச்சைப்படுத்தறாங்க. இப்பவே நெஞ்சடைக்கு. நிம்மதியா வீட்ல இருந்தேன் வேலைக்கு போனேன். உங்களை கல்யாணம் செய்தப்பிறகு என் வாழ்க்கையே சந்தோஷம் மட்டும் இருக்கு. இப்ப இதெல்லாம் இருக்கறப்ப நாமாளா நம்ம வாழ்க்கையில பிரச்சனையை தூக்கி தலையில் போட்டுக்கற மாதிரி இருக்குங்க.” என்று கூறவும் ஆர்யனோ அவளை மெத்தையில் அமர வைத்து, சாக்கடையை க்ளீன் பண்ணணும்னா அதோட துர்நாற்றத்தை தாங்கிட்டு தான் இறங்கணும் சிற்பி.
  
    சந்தன வாசமா வீசணும் அப்ப தான் இங்குவேன்னா என்ன அர்த்தம்.
    சந்தன வாசம் வீசினா நான் ஏன் உன்னை நிறுத்த சஞ்சஷன் செய்திருக்கணும்?

     பஞ்ச பூதத்துல நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம் இருக்கு.

அதுல தண்ணி, நிலம், காத்து மூன்றுத்துக்கும் பாதிப்புன்னு தான் வருகின்ற தொழிற்சாலையை தடை செய்தோம். ஆனா வர்ற எலக்ஷ்ல ஆளுங்கட்சி திரும்ப ஜெயித்தா இந்த மூன்றும் பாழாகறது ஆண்டவனே நினைச்சாலும் தடுக்க முடியாது‌. அரசாங்க ஆர்டர் என்று கமுக்கமா இருக்கணும்.
    நமக்கான சாதகம் கையிலயிருக்கறப்ப அத விட்டுட்டு முடிஞ்சு போனதுக்கு பிறகு எங்க ஐமா யோசிக்க மாட்டார்.

   எதுனாலும் இப்பவே தடுக்கணும். உனக்கென்ன அந்த ஞானவேல் அசிங்கமா பேசிட்டான் அதானே. ஐயா பார்த்துப்பார். திரும்பறதுக்குள் நின்று நிதானமா ஒரு வார்னிங் தந்திருப்பாரே. அதை மீறி என்றால் சொல்லு. நான் பார்த்துக்கறேன்.‌ நீ சொல்ல வேண்டியது இல்லை. பரதன் சித்தப்பா எனக்கு அப்டேட் தருவார்.

ஆனா எக்காரணம் கொண்டு நீ அரசியல்ல இருந்து விலகக்கூடாது. ஐயாவை மீறி எதுவும் நடக்காது. நீ முதல்ல நம்பணும் தைரியமா இருக்கணும்‌.

 இந்த பிரச்சாரம் வோட் கேட்டு அலைவது மட்டும் நீ பேசு. மனசுல நம்ம ஜில்லாவுக்கு என்ன பண்ணணும்னு தோணுதோ அதை பேசு‌. இந்த நாட்டுக்கு என்ன தேவையோ அதை பேசு. 

அரவிந்த் எல்லாம் என்ன தான் அப்பாடக்கறா இருந்தாலும் நம்ம ஐயாவிடம் வச்சிக்க மாட்டார்.

பணம் பெரிசா நட்பு பெரிசானு யோசித்தா அந்த முதல்வர் ஐயாவோட நட்பு போதும்னு வாய் திறந்து சொல்லற ஆளு தான்.

என்ன அவங்க ஆட்சி இங்க தோற்றுடும்னு புரியவும் அவர் சார்புல நம்மளை கைக்குள்ள வச்சிக்க முயற்சி செய்தார்.

அதென்னவோ கடவுள் அனுகிரகத்துல அந்த தமிழும் இங்கிருந்து போயிட்டா.

அநேகமா இந்தியா வந்தா அவங்க அப்பாவிடம் மாட்டிப்பான்னு அங்க தான் இருப்பா. இப்ப அரசியல் பிஸில பெத்த பொண்ணை கவனிக்க மாட்டார்.

நீ அரசியல்ல எதுவும் தடுமாற வேண்டாம்‌. சூரியன் வந்தா பனி உடனடியா காணாம போயிடும். 
நீ போட்டியில நின்றதும்... மத்தது தள்ளி மறைந்திடும்‌." என்று ஆதுரமாய் அணைத்திட கணவன் பேச்சில் தெம்படைந்தாள்‌.

ஆர்யனோ “சிற்பி கீழே போயிட்டு தங்கச்சியை பார்க்கணும். உன் முகம் பார்த்து பேசினேன். அவளிடம் மாப்பிள்ளை பத்தி விசாரிக்கலை‌.” என்று குளியலறை புகுந்தான்.

கீழே வரும் போது சர்வேஷும் துளிரும் கிசுகிசுக்க ஆர்யன் வந்ததும், “மாப்பிள்ளை என்ன சொன்னார் துளிர்.” என்று அருகே அமர, “உங்கண்ணா என்னை நாய் பக்கத்துல உட்கார வச்சிட்டார். நீ வீட்டுக்கு வா உன்னையும் ரோஸ்லின் வச்சி மிரட்டறேன்னு சொல்லியுள்ளார்” என்று கூறி முகம் திருப்ப, “துளிர் மா மாப்பிள்ளை அப்படி கிண்டலுக்கு சொல்லியிருக்கலாம். அவர் உன்னை நல்லா பார்த்துப்பார். அவர் கண்ணுல அது நல்லாவே தெரிந்தது.” என்று மொழிந்தான்.

 "ஆமா ஆமா கண்ணுலயே தெரியும்." என்று துளிர் முகம் திரும்பினாள்‌.

“அண்ணனுக்கு உன் கண்ணுல என்ன தெரகயுதுன்னு கூட நல்லாவே தெரியுது‌. அண்ணன் வரவர நம்மளை கண்டுக்கலையேனு தானே.

அண்ணன் கண்டும் கவனிக்காத மாதிரி காட்டிக்கிட்டேன். சரி விதார்த் என்ன சொன்னார்.” என்று கேட்டதும் சர்வேஷ் அண்ணனை ஏறிட்டாள்.

சர்வேஷோ “ஏதும் நான் தப்பா நடந்துட்டதா சொன்னார்னா நான் சாரி கேட்டுக்கறேன்” என்று கூற, ஆர்யனுக்கோ சிரிப்பு வந்தது.

துளிரோ விதார்த் பேசியதை சர்வேஷ் அண்ணனிடம் கூற தயங்கி, நின்றாள்.

விதார்த் பேசியது இது தான்.
துளிர் கையை பிடித்தவன், “ஏய் உங்க அண்ணன் சர்வேஷுக்கு பொண்ணு பார்த்திருக்கிங்களா? அந்த சி.எம் தம்பி பொண்ணு? என்று கேட்டதற்கு “அச்சோ அந்த அக்காவை எங்க அண்ணா கட்டிக்காது‌. அண்ணா அந்த அக்காவுக்கு உதவறார்” என்று விலாவரியாக தனக்கு தெரிந்தவரை உரைத்தாள்.

துளிர் பேசி முடிக்கவும், “அப்ப உங்க சின்ன அண்ணன் சிங்கள். என் சித்தி பொண்ணு ஆதினியை கல்யாணம் பேசி வச்சா கட்டிப்பானா?” என்று கேட்டதும் துளிர் திகைத்தாள்.

முட்டைக்கண்ணுல முழிக்காதடி பதில் சொல்லு." என்றதும் தெரியலை டா" என்றதற்கு நங்கென்று தலையில் கொட்ட, "திமிர் பிடிச்சவனே அடிக்காத. வரவர கை நீளுது‌." என்று அதட்ட கை நீள்வதாக அவனும் அவள் வெண்டக்காய் விரலை தீண்ட, கையை உதறிவிட்டு "நான் சர்வேஷ் அண்ணாவிடம் ஆர்யன் அண்ணாவிடம் வேற மாதிரி காதுல போட்டு வைக்கிறேன்.‌ நீ அப்பா அம்மாவிடம் மாமா அத்தையை சொல்ல வச்சி டிஸ்கஸ் பண்ணு. பை பை" என்று ஓட்டமெடுத்திருந்து வந்தாள். 

சர்வேஷ் அண்ணனிடம் ஆர்யன் அண்ணா எங்கே என்று கேட்க வந்ததும் மேல போயிருக்கார் என்றதும் எப்பவும் என்னை பார்த்ததுண்டு போவார் என்று அண்ணனை உந்து பார்த்திட, ஆர்யன் தங்கையின் மனதை கண்டு கொண்டு விளையாடினான். 

இதமாக சென்ற தருணத்தில் அந்த போன் கால் மின்மினியிடமிருந்து வந்தது. “சர்வேஷ் சார் தமிழ் விரும்பறது அப்பாவுக்கு தெரிந்துடுச்சு. அவ பிரகனென்ட் என்பது மட்டும் தெரியாது. அக்காவை இந்தியா வான்னு தொல்லைப்படுத்தறார்.
பிரெண்ட் என்று சொன்னா நம்பலை. அக்கா இங்க வந்தா மாட்டிப்பா‌.” என்று கூற, சர்வேஷோ “லுக் அது எதுக்கு என்னிடம் சொல்லற?” என்று கேட்டான்.‌

-தொடரும்‌

25 thoughts on “என் நேச அதிபதியே-51”

 1. Avatar

  Yemma sirpi unaku edhuku ivlo kozhapam adhalan onnum agadhu enga nibu and Aryan irukumbodhu edhuku kavalapadra….ellam sirapa senjidulam vidu…

  Yemma minmini thamizh prachanai veetla therincha adhuku neenga tan samalikanum….adha vitutu sarvesh ku ph panni sonna Avan enna panna mudiyum…
  Veena akka skrma Ivan prachanai ku mudivu kattunga ka…andha thamizh panradhu kaandu agudhu ka….

  1. Avatar

   ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது ஆர்யனின் காதல் சிற்பிக்கு துணையாக நிற்கிறது சூப்பர் எல்லோருடைய மனதிலும் எதிர்பார்க்கும் குடும்பம் நிபுணன் குடும்பம் அன்பு அரவணைப்பு கண்டிப்பு என்று எல்லாம் கலந்த அழகான குடும்பம் வாழ்த்துகள்

 2. Kalidevi

  Pochi tamil matitu ipo sarvesh kitta thrupi varuvangla. Epovum nibunan oru vitham atha vida aaryan ellam therinji athuku etha mari thembu kodukiran sirpi ku good. Ipo tha sirpi theliva aeiruka unaku thunai ellarum irukanga sirpi thairiyama nee election ninnu jeikanum

 3. Avatar

  Super sis semma epi romba interesting ah pogudhu story 👌👍😍 endha tamizh prechanai oru mudivuku varanum pa paavam sarvesh 🙄

 4. CRVS2797

  அட.. இந்த சர்வேஷ் இப்ப என்ன செய்யப் போறான்னு தெரியலைய ??

 5. Avatar

  Athanaye atha Yan ma Inga phone pani soldra avala vayliya anupura varaikum thaan Inga deal athukku aprom thayrinja atha samalikkarathu ellam Ava padu 😌😌😌😌😌
  Nalla anna , anni, kolunthan, thangachi nu poittu irruntha seen la unwanted aa vanthumari irruku intha mini call 😤 irrunthalum Tamil seen ku oru end vaynum la athukkaga othukaran 😌😌😌😌😌

 6. Avatar

  சிற்பி எதுக்காகவும் பயப்பட வேண்டாம் ஆர்யன் பாத்துகிடுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *